World Socialist Web Site www.wsws.org


Leon Trotsky - Culture and Socialism - 1927

லியோன் ட்ரொட்ஸ்கி - கலாச்சாரமும் சோசலிசமும் - 1927

Back to screen version

1920களில் சோவியத் ஒன்றியத்தில் தொழில்நுட்ப கலாச்சார வளர்ச்சிக்கும், பரந்தளவில் ஏற்று கொள்ளப்பட்ட கலை மற்றும் ஆன்மீக கலாச்சார வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பை விளக்கி, கலாச்சாரம் மற்றும் கலை மீதான ஒரு மார்க்சிச அணுகுமுறையின் அடிப்படைகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இப்படைப்பு விளக்குகிறது. கலாச்சாரத்தின் பல்வேறுபட்ட உள்ளடக்கங்களை, அதாவது தொழில்நுட்பம் மற்றும் பொருள்சார் கலாச்சாரம், மெய்யியல், இயற்கை விஞ்ஞானங்கள், கலைகள், மானுடவியல் ஆகியவற்றை விவாதிப்பதிலிருந்து ட்ரொட்ஸ்கி இதை ஆரம்பிக்கிறார். “பாட்டாளி வர்க்க கலாச்சாரம்” என்ற பெயரில், அப்பொழுது வளர்ச்சியடைந்து கொண்டிருந்த சோவியத் அதிகாரத்துவத்தால் ஊக்கப்படுத்தப்பட்ட கண்ணோட்டங்களுக்கு, அதாவது மனிதகுல வரலாற்றின் முந்தைய சகாப்தங்களில் கலையானது அவற்றின் மீதான ஆபத்தான வர்க்க ஆளுமைகளுக்காக புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களுக்கு எதிராக செயல்பட்ட பின்னர், ஆரம்ப சோவியத் ஒன்றியத்தின் பொருள்சார் யதார்த்தத்துடன், மார்க்சிச இயக்கம் மக்களின் கலாச்சார தரத்தை உயர்த்தும் நோக்கத்திற்காக செயற்பட வேண்டும் என்று ட்ரொட்ஸ்கி விளக்குகிறார். இந்த கட்டுரை 1962, இலையுதிர் காலத்தில் நியூ பார்க் பதிப்பகம் வெளியிட்ட Labour Review இல் முதன்முதலாக பிரியன் பியர்ஸ் செய்திருந்த மொழியாக்கத்தின் சற்றே திருத்த்பட்ட பதிப்பாகும்.