World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : ªêŒFèœ ÝŒ¾èœ

The workers Leaque and the Founding of the Socialist Equality Party

வேர்க்கஸ் லீக்கும் சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபிதமும்

The Historical Setting
வரலாற்றுத் தயாரிப்பு

Back to screen version

கீழ்வரும் அறிக்கையானது, தேசிய செயலாளர் டேவிட் நோர்த்தால் 25 ஜூன் 1995ல் வேர்க்கஸ் லீக்கின் அங்கத்தவர் குழு கூட்டத்தில் வழங்கப்பட்டதாகும். இது, 1996ல் வேர்க்கஸ் லீக் ஐ சோசலிச சமத்துவக் கட்சியாக ஸ்தாபிப்பதற்கு அடித்தளமாக இருந்த அரசியல் தத்துவார்த்த அடித்தளங்களை விவரிக்கின்றது.

அனைத்துலகக் குழுவின் உள்ளான உடைவிலிருந்து பத்து வருடங்கள்

Ten years since the split in the International Committee

நாங்கள் இவ்வார முடிவில் சந்தித்துக் கொண்டுள்ளபோது, ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு நிறைவொன்றை அணுகிக் கொண்டுள்ளோம்: தொழிலாளர் புரட்சிக் கட்சி (Workers Revolutionary Party) யின் சந்தர்ப்பவாதிகளுடன், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உடைவினது பத்தாவது ஆண்டு நிறைவாகும்.

நாங்கள் ஹீலி, பண்டா, சுலோட்டருக்கு எதிரான போராட்டத்தின் பாதையில், நான்காம் அகிலத்தின் உள்ளான எல்லா மகத்தான போராட்டங்களும், உலக அரசியல் நிலைமையிலான பிரமாண்டமான மாற்றங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை அடிக்கடி குறிப்பிட்டு வந்தோம். 1939-40ல் கன்னைப் போராட்டம், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னணியில் அபிவிருத்தி அடைந்தது. 1953ன் உடைவு, ஸ்ராலினின் மரணத்தின் இருமாதங்களின் பின்னரும், கிழக்கு ஜேர்மன் எழுச்சியின் பின்னரும், ஸ்ராலினிச ஆட்சிகளின் நீடித்த மரண ஓலத்தின் ஆரம்பத்துடனும் இடம்பெற்றது. கனனாலும், அனைத்துலகக் குழுவை ஸ்தாபித்த ஏனைய பாரம்பரிய ட்ரொட்ஸ்கிஸ்டுகளாலும் பாதுகாக்கப்பட்டு தத்துவார்த்த கோட்பாடுகள், பின்னர் ஹங்கேரியப் புரட்சியின் எழுச்சியுடன் நடைமுறை ரீதியில் நிரூபிக்கப்படுவதற்கு மூன்று வருடங்கள் மாத்திரமே இருந்தது.

1982க்கும் 1986க்கும் இடையே அனைத்துலகக் குழுவுக்குள்ளான போராட்டம், கடந்த தசாப்தத்தின்போது பூகோளத்தின் அரசியல் வரைபடத்தையே மாற்றியமைத்த வரலாற்று சம்பவங்களை எதிர்பார்த்திருந்தது. வேர்க்கஸ் லீக்கினால் மேற்கொள்ளப்பட்ட விமர்சனங்கள், உடைவினை விரைவாகத் தொடர்ந்த சம்பவங்களினால் நேரடியாக நிரூபிக்கப்பட இருந்தது.

தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான போராட்டத்தில், அடிப்படையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட மூன்று பிரச்சனைகள் எழுப்பப்பட்டன: 1) ஸ்ராலினிசத்தின் பாத்திரம்; 2) சமூக ஜனநாயகத்தின் பாத்திரம்; 3) முதலாளித்துவ தேசியவாதத்தின் பாத்திரம். உடைவுக்கு முந்திய சகாப்தத்தில் தொழிலாளர் புரட்சிக் கட்சி, தொழிலாளர் வர்க்கத்தின் உள்ளான இம்மூன்று பிரதான சக்திகளதும் அரசியல் பாத்திரம் பற்றிய அதனது மதிப்பீட்டில் பப்லோவாதத்தினை நோக்கி திரும்பியிருந்தது. இவ் ஒவ்வொரு சக்திகளுக்கும் அல்லது குறைந்தது அவற்றின் பகுதிகளுக்கு, தொழிலாளர் புரட்சிக் கட்சி ஒரு முற்போக்குப் பாத்திரத்தின் சாயத்தினை வழங்கியது. தொழிலாளர் புரட்சிக் கட்சி, இச் சக்திகளுக்கு அடிபணிவதை நியாயப்படுத்தும் விதத்தில் லெனினது தத்துவார்த்தப் பாரம்பரியம் திரிபு செய்யப்பட்டதுடன், தவறாக அர்த்தப்படுத்தவும் பட்டது. இப்போக்குகள், தொழிலாளர் இயக்கத்தினுள் ஏகாதிபத்தியத்தின் அரசியல் கருவிகளாக தொழிற்படுகின்றன என்ற விஞ்ஞானபூர்வமான ஆய்வின் அடிப்படையிலானதும், வரலாற்று அனுபவங்களால் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதுமான மதிப்பீட்டை செய்வது, அரசியல் ரீதியாக சட்டவிரோதமானது என தொழிலாளர் புரட்சிக் கட்சி பிரகடனப்படுத்தியது.

கடந்த தசாப்தத்தின் சம்பவங்கள், ஹீலியின் அரசியல் நிலைப்பாட்டின், அத்துடன் இதே விடயத்தில் முழுமையான டொச்சர்- பப்லோவாத முன்னோக்கான, அதிகாரத்துவத்தின் புரட்சிகர சக்தி என்பவற்றின் வங்குரோத்தை, தோற்கடிக்கமுடியாத விதத்தில் நிரூபித்துள்ளது. ஸ்ராலினிசத்தின் மாற்றமுடியாத எதிர்ப்புரட்சிகரத் தன்மையை அனைத்துலகக் குழு வலியுறுத்தியமை, சோவியத் அரசினது உடைவில் அதனது மறுக்க முடியாத நிரூபணத்தை கண்டு கொண்டது. ஏனெனில் சோவியத் அரசினது உடைவு, ஒரு வெளி சக்தியினால் அது தூக்கி எறியப்பட்டதன் பெறுபேறு அன்றி, அதிகாரத்துவத்தின் நனவுபூர்வமான நடவடிக்கையின் விளைவாகும். 60 வருடங்களின் முன்னர், ட்ரொட்ஸ்கி, "சோவியத் யூனியனில் முதலாளித்துவ உறவுகள் மீள ஸ்தாபிக்கப்படுமானால் ஒரு முதலாளித்துவ புனருத்தாரனம், ஒரு புரட்சிகரக் கட்சி துடைத்துக்கட்டப்பட வேண்டியதை விட குறைந்த எண்ணிக்கையிலான மக்களையே துடைத்துக்கட்ட வேண்டியிருக்கும்" என எச்சரித்தார். இவ் எதிர்வுகூறலின் நுணுக்கமான சரியான தன்மை, முன்னாள் சோவியத் யூனியனின் அரசியல் கட்டுமானத்தினால் (Physiognomy) நிரூபிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஆட்சியினதும் அதனது எல்லா தலைமை தாங்கும் கட்சிகளினதும் பிரதானமான நபர்கள், பெரும்பாலும் பழைய சோவியத் அதிகாரத்துவத்தினதும் அத்துடன் இணைந்த நோர்மன் குளோத்திரா (Nomenclature) வகைப்படுத்தப்பட்ட இந்த அல்லது அந்த பகுதியினுள் வசதிமிக்க பதவிகளை பொறுப்பேற்றிருந்த தனிநபர்களாகும்.

சமூக ஜனநாயகத்தை பொறுத்தவரையிலும் கூட ஒரு பேரழிவுமிக்க அரசியல் தோல்வியை அடைந்துள்ளது. இந்நிகழ்வுப்போக்கு ஸ்ராலினிசப் பேரழிவைப் போன்ற தோற்றத்தை சமூக ஜனநாயகம் எடுக்காததற்கு காரணம் அது ஏற்கனவே மதிப்பிழந்திருந்தாகும். 2ஆம் அகிலத்தினது கட்சிகள், ஒரு முதலாளித்துவ எதிர் பதிலீட்டினை பிரதிநிதித்துவப்படுத்துவதாக உரிமை கோரிக் கொள்ளவில்லை. மேலும் சமூக ஜனநாயகத்தின் தோல்விகள், விதிவிலக்கான இறுக்கமும், நெருக்கடியும் மிக்க சூழ்நிலையினால் ஒருபோதும் ஆதிக்கம் செய்யப்படாதிருந்ததுடன் அதன் சீரழிவு, ஒரு மிகவும் நீண்டகாலமாக நிகழ்ந்தது. அதனது மரண ஓலத்தில் கூட சமூக ஜனநாயகம் ஒரு செயலற்ற, மற்றும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் அணுகுமுறையையே கொண்டிருந்தது.

உலகம் பூராவும், ஒரு மனிதநேயம் கொண்ட முதலாளித்துவம் என்ற சீர்திருத்தவாத கற்பனாவாதம் பொய்யானது என நிரூபிக்கப்படுகின்றது. நாட்டுக்குப்பின் நாடாக சீர்திருத்தவாதக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் ஒரு தோல்வியிலிருந்து இன்னொரு தோல்விக்கு சென்று கொண்டுள்ளதுடன், அங்கத்தவர் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சியையும் அனுபவிக்கின்றன. ஆட்சியிலோ அல்லது ஆட்சிக்கு வெளியிலோ இக்கட்சிகளும் அமைப்புக்களும், தம்மை ஒரேயொரு பணிக்கே அர்ப்பணித்துக் கொண்டுள்ளன. அதாவது தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான மூலதனத்தின் தாக்குதலுக்கான எல்லா தொழிலாள வர்க்க எதிர்ப்புகளையும் அடக்குவதே. கனடாவின் NDP, பிரிட்டனின் தொழிற்கட்சி, பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி, இத்தாலியின் சோசலிஸ்ட் கட்சி, ஜேர்மனியின் சமூகஜனநாயகக் கட்சி, சுவீடனின் சமூக ஜனநாயகக் கட்சி, ஜப்பானின் சோசலிஸ்ட் கட்சி, அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி (மிகவும் பிரபல்யமானவற்றை மட்டுமே பெயர் குறிப்பிடுகின்றோம்) போன்ற எல்லாவற்றினதும் சாதனைகள் மீண்டும் ஒருமுறை ட்ரொட்ஸ்கியினால் 60 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட வார்த்தைகளையே ஞாபகத்துக்கு கொண்டுவருகின்றன. முதலாளித்துவத்தை ஸ்தம்பிதம் அடையச் செய்துள்ள இன்றைய நெருக்கடி, சமூக ஜனநாயகத்தை நீடித்த பொருளாதார, அரசியல் போராட்டங்களின் பின்னர் ஈட்டிக்கொண்ட பெறுபேறுகளை தியாகம் செய்யும்படியும், இவ்விதமாக ஜேர்மன் தொழிலாளர்களை அவர்களது தந்தையர்களதும், பாட்டனாரதும், பூட்டனாரதும் வாழ்க்கைநிலைக்கு கீழ்தாழ்த்துவதற்கும் கட்டாயப்படுத்துகின்றது.

இறுதியாக நாங்கள் முதலாளித்துவ தேசியவாதத்தின் பாத்திரத்துக்கு வருகின்றோம் 1960களின் ஆரம்பத்தில் அல்ஜீரியா பற்றியதும் கியூபா பற்றியதுமான அதனது எழுத்துக்களில் சோசலிசத் தொழிலாளர் கழகம் முதலாளித்துவ தேசியவாதத்தின் பாத்திரம் பற்றிய, பாரம்பரிய மார்க்சிச ட்ரொட்ஸ்கிச ஆய்வினை பாதுகாத்து அபிவிருத்தி செய்தது. அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த தத்துவங்களுக்கு எதிரான விதத்தில், தேசியவாத இயக்கங்கள் அவற்றின் தீவிரவாத ஏகாதிபத்திய எதிர்ப்பு நடிப்புகளுக்கு மத்தியிலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளின் நியாயமானதும் பிரதிநிதிகள் அல்லவென சோசலிசத் தொழிலாளர் கழகம் வலியுறுத்தியது. எப்படியிருந்தபோதும் 1970களில் சோசலிசத் தொழிலாளர் கழகம், அதனது கோட்பாடு சார்ந்த நிலைப்பாடுகளை கைவிட்டதுடன், ஆபிரிக்காவில் நுகோமோ, முகாபே, மண்டேலா தொடக்கம் மத்திய கிழக்கில் கடாபி, அரபாத் போன்ற குட்டிமுதலாளித்துவ தேசியவாதிகளின் ஆவல்மிக்க ஆதரவாளனாக மாறியது.

முதலாளித்துவ தேசியவாதத்தின் வரலாற்றுப் பாத்திரம் பற்றிய ஒரு மதிப்பீட்டுக்கு ஒருவர், தேசிய இயக்கங்களின் இன்றைய நடவடிக்கைகளை ஒரு தசாப்தத்திற்கு அண்மைவரையில், அவர்கள் பிரகடனப்படுத்தியவற்றுடன் ஒப்பீடு செய்வது மாத்திரமே போதுமானது. அரபாத், அவரது சொந்த வார்த்தைகளையே பாவிப்போமாயின், தனது அவமானம் மிக்க அரசியல் வேசித்தனத்தை தொடர்கின்றார். பாலஸ்தீனியர்களின் விடுதலையாளனாக வரவேண்டியவர், காசாவின் பிரதம பொலிஸ் அதிகாரியாக மாறியுள்ளார். நெல்சன் மண்டேலா, தென்னாபிரிக்காவில் முதலாளித்துவ நலன்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்றுக் கொண்டார். காட்டிக்கொடுப்பு என்ற பதம் உண்மையில் பொருத்தமற்றதாய் இருக்கின்றது என்பதைத் தவிர இத்தகைய காட்டிக்கொடுப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. இத்தலைவர்களின் இன்றைய கொள்கைகள், அவர்கள் தலைமை தாங்கிய தேசியவாத இயக்கங்களின் புறநிலையான இயல்பிலிருந்து சடத்துவரீதியாக அபிவிருத்தியடைவதுடன், அவர்களது கொள்கைகளின் பேரழிவு மிக்க தாக்கங்கள் முழுமையாக முன்கூட்டியே கூறக்கூடியதாக இருந்தன. ஒரு மிகவும் ஆழமான அர்த்தத்தில் ''காட்டிக்கொடுத்தல்'' என்ற பதம் மார்க்சிச வார்த்தை ஜாலங்களை பாவித்து, இம் முதலாளித்துவ தேசியவாதிகளுக்கு அரசியல் மூடுதிரையினை வழங்கிய சந்தர்ப்பவாதிகளுக்கே பொருந்துகின்றது.

யுத்தத்துக்கு பின்னைய காலகட்டத்தின் முடிவு

The end of the postwar era

ஒரு நீடித்த வரலாற்றுக் காலகட்டத்துக்கு, ஸ்ராலினிஸ்டுக்கள், சமூக ஜனநாயகவாதிகள் அல்லது முதலாளித்துவ தேசியவாதிகள் என வரையறுக்கக்கூடியதாக இருந்த கட்சிகளும், அமைப்புக்களும் இலட்சோபலட்சம் மக்களின் தலைமையாக இருந்தன. ஒரு வடிவத்திலோ அல்லது இன்னொரு வடிவத்திலோ வேறுபடும் மட்டத்திலான எதிர்ப்புடனும் வாயடிப்புடனும் இவ் இயக்கங்கள் உழைக்கும் பரந்துபட்ட மக்களின் அடிப்படையான சமூக அதிருப்தியுடனும் உரிமைகளுடனும் இனங்காட்டிக் கொண்டதுடன், அவற்றினை எதிர்க்க அழைப்பும் விட்டன. அவைகள் முதலாளித்துவ அமைப்பு முறையினை தூக்கி எறிவதற்கோ, தீவிரமாக மாற்றி அமைப்பதற்கோ அல்லது மிகவும் குறைந்ததாக படிப்படியான சீர்திருத்தத்திற்கோ போராடுவதாக பிரகடனப்படுத்திக் கொண்டன.

இத்தகைய பிரகடனங்கள் தற்போது மேற்கொள்ளப்படுவதேயில்லை. இச் சகல அமைப்புக்களும் முதலாளித்துவத்தின் வெற்றியை ஏற்றுக்கொள்வதுடன், நம்புகின்றன. யார் தாட்சரிடம் இறுதியாக வருகின்றாரோ அவர் கடுமையானவராகின்றார். இவ் அமைப்புக்களின் அரசியல் அட்டவணையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினை பொதுவாக பார்த்தால், இந்நிகழ்வுப் போக்கினை அவர்களின் தனிப்பட்ட பலவீனங்களின் அடிப்படையிலோ, இத்தலைவர்களின் உபயோகமற்ற இயல்பின் அடிப்படையிலோ விளக்குவது சாத்தியமில்லை. நாங்கள் இவ் அரசியல் உருமாற்றங்களுக்கான காரணங்களை அரசியல் பொருளாதாரத்திலும், உலக முதலாளித்துவத்தின் உற்பத்தி நிகழ்வுப் போக்கிலும் ஏற்பட்ட புறநிலையான மாற்றங்களில் தேடவேண்டும்.

நிச்சயமாய் ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், முதலாளித்துவ தேசியவாதம் ஆகிய ஒவ்வொன்றும் தங்களது சொந்த விசேடமான ஆரம்பத்தையும், வரலாற்றையும் கொண்டுள்ளன. மேலும் இவ் எந்தவொரு போக்கும் ஒரு ஒருங்கிணைந்த வடிவத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. எப்படியிருந்தபோதிலும் இவ் அமைப்புக்களின் செல்வாகிற்கு 2ம் உலக யுத்தத்தின் பின் எழுந்த திட்டவட்டமான அரசியல் உறவுகள் காரணமாக இருந்ததுடன், இவை 1945ன் பின்வந்த ஒரு முழு வரலாற்று சகாப்தத்தினதும் முதலாளித்துவ சமநிலையின் அவசியமான பாகமுமாகும்.

''யுத்தத்துக்குப் பிந்திய'' என்ற பதம், இம் முழு வரலாற்று சகாப்தத்தையும் விபரித்ததுடன் வரையறுக்கவும் செய்தது. இது ஒரு வரலாற்று காலகட்டத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி என்பதைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இப்பதம் 2ம் உலகயுத்தத்தின் வெளிப்பாட்டின் ஒரு நேரடி விளைவான சர்வதேச அரசியலினதும், பொருளாதாரத்தினதும் பிரமாண்டமானதும் சிக்கலானதுமான கட்டுமானம் என்பவற்றின் வெளிப்படையான உண்மையை குறித்து நிற்கின்றது.

ஒரு அடிப்படையான அர்த்தத்தில் உலக முதலாளித்துவம் 1945ல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. இப்புனர்நிர்மாணத்துக்கான நேரடிக்கருவி, ஐக்கிய அமெரிக்காவின் பிரமாண்டமான தொழிற்துறை, நிதித்துறை வளங்களாகும். இப் புனர்நிர்மாணத்துக்கான மறைமுகக்கருவி, சோவியத் யூனியனின் சடத்துவ வளங்களையும், மதிப்பையும் பயன்படுத்தி சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தை நிராயுதபாணியாக்கி காட்டிக்கொடுத்த ஸ்ராலினிசமாகும்.

ஒரு பரந்த வரலாற்றுப் பதங்களில் 1945ல் தனியே 2ம் உலக யுத்தம் மட்டும் முடிவுக்கு வரவில்லை. தன்னளவில் 2ம் உலகயுத்தம், உலக வரலாற்றிலேயே பிரமாண்டமான பொருளாதார, சமூக, அரசியல் உடைவின் உச்சப் புள்ளியாகும். ஆகஸ்ட் 1914ல் 1ம் உலக யுத்தம் வெடித்ததிலிருந்து முதலாளித்துவ உலகம், யுத்தங்களினாலும், புரட்சிகளினாலும் அத்தோடு முதலாளித்துவ உற்பத்தியின் முழு பொறிமுறைகளினதும் ஒரு உடைவினாலும் கொந்தளித்துக் கொண்டிருந்தது. 31 வருட கொந்தளிப்பின் பின்னர் இச் சமநிலையின் புனருத்தாரணம், இரண்டு உலக யுத்தங்களின் யுத்தக்களங்களிலும், குண்டுவீச்சு மழைகளுக்கு உட்பட்ட நகரங்களிலும் அத்துடன் நிட்சயமாய் நாசி மரண முகாம்களின் விசவாயு அறைகளினுள்ளும் 100 மில்லியனுக்கு மேற்பட்ட உயிர்கள் பலியிடப்பட்டதற்கு பின்பு மாத்திரமே இடம்பெற்றது.

2ம் உலகயுத்தம் ஒரு முடிவுக்கு வந்தபோது, உலகில் பொருளாதார ரீதியாக சக்திவாய்ந்ததாக இருந்த ஒரேயொரு முதலாளித்துவ வல்லரசு, ஐக்கிய அமெரிக்கா மாத்திரமே. இங்கிலாந்து உட்பட பழைய ஐரோப்பிய முதலாளித்துவ வல்லரசுகள் யாவும் முழுமையாக காலியாகி இருந்தன. யுத்தத்தின் இறுதி மாதங்களிலும் அதற்குப் பின்னும் உருவாகிய உலகம், அதிகளவு அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் சிருஷ்டிக்கப்பட்ட அரசியல் நிதி நிறுவனங்களது விளைவாகும். இந் நிறுவனங்கள் அடித்தளம் இடுவதற்கான சந்தர்ப்பமோ, ஒரு புதிய சமநிலை ஸ்தாபிக்கப்படுவதோ, சோவியத் யூனியனாலும், ஸ்ராலினிச கட்சிகளினாலும் வழங்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த உதவியின்றி ஒருபோதும் சாத்தியமாகியிராது என்பதை உடனடியாக இதனுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஜேர்மனியில் 3வது குடியரசின் வீழ்ச்சி, தொழிற்சாலைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்ட தொழிலாளர் குழுக்களின் ஸ்தாபிதத்துக்கு இட்டுச் சென்றது. சில இடங்களில் இக்குழுக்கள், தொழிற்சாலைகளை அழிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த SS (பாசிஸ்ட்) பிரிவுகளை விரட்டி அடித்தன. குறூப் (Krupp) தொழிற்சாலை தொழிலாளர்களினால் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது போன்ற இத்தகைய குழுக்கள், தொழிற்சாலைகள் நஷ்டஈடுகள் எதுவுமின்றி சுவீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அடிக்கடி முன்வைத்தன. அமெரிக்க இராணுவ பொறுப்பாளர்கள் இக்குழுக்களுக்கு வெறுப்பாக இருந்தனர். ஆனால் அரசியல் போர்க்குணத்தை சோர்வடையச் செய்வது KPD (ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி) யின் சேவையை வேண்டி நின்றது. இதனது வேலைத்திட்டம், பொருளாதார மறுசீரமைப்பு, ''தனிச்சொத்து அடிப்படையிலான சுதந்திர வர்த்தகத்திலும் தனியார் நிர்வாக முன்னெடுப்புக்களினதும் பூரணமான நிபந்தனையற்ற அபிவிருத்தி'' கோட்பாட்டின் ஊடாகவே இடம்பெற முடியுமெனக் கூறியது. ''பிரதான தொழிற்துறை ஏகபோகங்களை'' அப்போது தேசியமயமாக்க அழைப்பு விட்டதன் மூலம் சில தருணங்களில் CDU (கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி) ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை விட தீவிரமாக முன்சென்றது.

இதேமாதிரியில் ஐரோப்பா பூராவும் பின்பற்றப்பட்டது. ஜனவரி 1947ல் பல்மீறோ தொக்கிளியாற்றி (Palmiro Togliatti- இத்தாலிய கம்யூனிச கட்சிக்கு 40 வருடங்கள் தலைமை தாங்கியவர்.) பாராளுமன்றத்தில் மற்றைய அனைத்து ஐரோப்பிய நாடுகளையும் விட இத்தாலியில் மிகவும் குறைவான வேலைநிறுத்தங்களே இடம்பெறுவதாக வாயடித்துக் கொண்டார். ''கடந்த வருடங்களில் இத்தாலியில் எந்த அரசியல் வேலை நிறுத்தமும் இடம்பெறவில்லை- எங்கள் நாட்டில் மட்டுமே தொழிற்சங்கங்கள் ஒரு சம்பள உடன்பாட்டை செய்துள்ளன. இவ் உடன்பாடு தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றிலேயே தனித்துவமானது. ஏனெனில் இது குறைந்தபட்ச சம்பளத்தை அன்றி அதிக பட்ச சம்பளத்தை வரையறுக்கின்றது. நாங்கள் வாழுகின்ற பொருளாதார நிலைமையில், தொழிலாளர் வர்க்கமும், தொழிற்சங்கங்களும் சிறந்த உதாரணத்தை வழங்குவதுடன், உற்பத்தியில் கட்டுப்பாட்டினையும், ஒழுங்கையும், சமூக அமைதியையும் பேணுவதில் எல்லா அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதும் உண்மையில் கவனத்தை கவரக்கூடிய எதிர்காலமாக விளங்குகின்றது'' என கூறினார். (Capitalism Since 1945 [Black Well, 1984] p.55).

தொழிலாளர் வர்க்கத்தை அரசியல் ரீதியாக தவறாக வழிநடத்தியதில் (குழப்பநிலையை உருவாக்கியதில்) ஸ்ராலினிசம் மிகவும் அழிவுகரமான பங்கு வகித்தது. மிகைப்படுத்தல்களுக்கும், திரிப்புகளுக்கும், ஸ்ராலினிச பிரச்சாரத்தின் பொய்களுக்கும் அப்பால் சோவியத் யூனியனின் பொருளாதார சாதனைகளை துதிபாடி தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேசப் போராட்டங்களில் இருந்து அதனது அவசியமான அடித்தளங்களையும் பிரித்தது சோசலிசத்தை வெறுமனே ஒரு தேசிய அரசை கட்டும் பிரச்சனையாக கேவலப்படுத்திக் காட்டியது. இது விசேடமாக தனது சொந்த முதலாளித்துவ வேலைத்திட்டத்தை, ஒரு வகையான ''சோவியத் மாதிரி'' எனக்காட்டி நியாயப்படுத்த முயற்சித்தமை காலனித்துவ, பின்தங்கிய நாடுகளது தேசிய முதலாளிகளுக்கு அனுகூலமாகியது. அதேநேரத்தில் முன்னேறிய நாடுகளில் உள்ள தொழிலாளர்கள், இம்மாதிரியை பொலிஸ் அரச சர்வாதிகாரத்துடனும், பொருட்களுக்கான பாரிய பற்றாக்குறையும் மிக்க ஒரு அமைப்பாக இனங்கண்டதால் அவர்கள் சோசலிசத்தில் இருந்து அந்நியப்பட்டனர்.

சோவியத் யூனியன் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் ஏகாதிபத்தியத்துக்கு கீழ்ப்படுத்திக் கொண்டிருந்த அதேவேளையில், ஐக்கிய அமெரிக்காவின் மேலாதிக்கப் பாத்திரம் அடித்தளமாகக் கொண்ட அரசியல், பொருளாதார ஒழுங்கமைப்பிற்கு பிரதான நியாயப்படுத்தலையும் வழங்கியது. பரவலாக அழைக்கப்பட்ட சோவியத் பயமுறுத்தல் என்ற அபாயம், ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பொருளாதார மேலாதிக்கத்திற்கு ஆதரவை வழங்கியதுடன், இவ்விதமாக ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாட்டையும் அடக்கி வைத்தது.

யுத்தத்தின் பின்னைய அமைப்பும் வர்க்க உறவுகளும்

The postwar system and class relations

யுத்தத்திற்கு பின்னர் ஐக்கிய அமெரிக்கா, உலக முதலாளித்துவ விவகாரங்களில் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட எஜமானன் ஆகவும் சவாலுக்கு அப்பாற்பட்ட கைத்தொழில் தலைவனாகவும், அனைத்துலக ரீதியில் பணமாற்றத்தின் (International Liquidity) முக்கிய மூலமாகவும் தோன்றியது. இவ்விதமாக 1 அவுன்ஸ் தங்கம் 35 டொலராக மாற்றத்தகு தன்மை நிர்ணயிக்கப்பட்டதுடன், ஏனைய சகல நாணயங்களினதும் பெறுமதி டொலரின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டது. டொலர், 4 டொச் மார்க்குக்கும், 360 ஜென்னுக்கும், 4.32 சுவிஸ் பிராங்குக்கும் ''சமப்படுத்தப்பட்டது''. சகல சர்வதேச கொடுக்கல் வாங்கல்களும் டொலரில் கணிப்பிடப்பட்டு பூரணப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு கால் நூற்றாண்டாக உலக வர்த்தகமும், அனைத்துலக நிதி அமைப்பும் பிரிட்டன்வூட்ஸ் பொறிமுறையினாலேயே முழுமையாக ஒழுங்கு செய்யப்பட்டது.

ஆனால் முதலாளித்துவத்தை மீளக்கட்டியெழுப்புவதில் பிரிட்டன்வூட்ஸ் அடைந்த அதே வெற்றிகளே, படிப்படியாக அவ்வமைப்பு முறையை நெருக்கடிக்குள்ளாக்கியது. ஐரோப்பிய, ஜப்பானிய முதலாளித்துவத்தை மீளக்கட்டி எழுப்பும் அதே நிகழ்வுப்போக்கே, அமெரிக்காவின் மேலாதிக்கத்தை பலவீனமடையவும் செய்தது. வர்த்தக கொடுப்பனவுகளையும், வர்த்தக செலுத்துமதிகளையும் (Balance of trade) நகர்த்துவதானது டொலரின் பாத்திரத்தினை பிரச்சனைக்கு உள்ளாக்கியது. 1971 ஆகஸ்ட்டில் டொலர்- தங்கம் மாற்றத்தகு தன்மையின் முடிவானது, ஐக்கிய அமெரிக்காவின் மேலாதிக்கப் பாத்திரத்தினை அடிப்படையாகக் கொண்ட யுத்தத்திற்குப் பின்னைய பொருளாதார சமநிலையின் ஒரு நீடித்த உடைவின் ஆரம்பத்தை குறித்து நின்றது.

1973க்கும், 1982க்கும் இடையே அமெரிக்க, உலக முதலாளித்துவம் ஆழமான பொருளாதார நெருக்கடியினால் பற்றிப்பிடிக்கப்பட்டது. முதலில் 1973இனதும், 1979இனதும் ''எண்ணெய் அதிர்ச்சிகளினால்'' சமிக்ஞை செய்யப்பட்ட பணவீக்கத்தின் எழுச்சியும், அதனுடன் இணைந்த ''வேலையின்மையினதும், பொருளாதார மந்தநிலைமையினதும் (Stagflation)'' இறுதியாக ஆழமான பொருளாதார பின்னடைவுமாக இந்த நெருக்கடி விளங்கியது. இந்நெருக்கடியின் ஆழமும் அதிகரிப்பும் ஒரு சமரசக் கொள்கையில் இருந்து ஒரு அதிகரித்த ஈவிரக்கமற்ற மோதலான அடிப்படை மாற்றத்தை செய்ய, முதலாளித்துவ வாதிகளின் சமூகக் கொள்கையை நிர்ப்பந்தப்படுத்தியது.

அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும், அதிலும் குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் 1970களும், 1980களின் ஆரம்பமும் ஆழமான வர்க்கப் போராட்டங்களை குறித்து நின்றன. 20ம் நூற்றாண்டு பூராவும் அதனது விஞ்ஞான அடித்தளங்கள் அபிவிருத்தி அடைந்ததும், எல்லாவற்றிற்கும் மேலாக குவான்ரம் (Quantum Mechanic- பௌதீக கதிரியக்க பொறிமுறை) பொறிமுறையின் அபிவிருத்தியினால் அதனது உச்சக்கட்ட வெளிப்பாட்டைக் கண்டதுமான தொழில்நுட்ப புரட்சி ஒரு அடிப்படையான பொருளாதார தேவையினால் ஊக்குவிக்கப்பட்டது. அதாவது இலாபத்தின் மீதான அழுத்தத்தை தணிப்பதற்காகவாகும். இது தவிர்க்கமுடியாத விதத்தில் தொழிலாள வர்க்கத்தினை பலவீனமடையச் செய்யும் ஒரு நனவான சமூக அரசியல் நோக்குடன் பிரிக்கமுடியாத விதத்தில் இணைந்துகொண்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களதும் தொழில்நுட்பப் புரட்சி, சில பிரித்தெடுக்கப்பட்ட அர்த்தத்தில், தனியே தூய விஞ்ஞானபூர்வமான தோற்றப்பாடு மாத்திரம் அல்ல என்பதை வலியுறுத்துவதற்கே நான் இப்புள்ளியைக் குறிப்பிட்டேன். நிச்சயமாய் விஞ்ஞான முன்னேற்ற நிகழ்வுப்போக்கு சாதாரணமாக உடனடியான அரசியல் அல்லது பொருளாதாரத் தேவைகளினதும் நலன்களினதும் ஒரு பிரதிபலிப்பு அல்ல. ஆனால் விஞ்ஞான அபிவிருத்திகளையும், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளையும் அல்லது பொதுவில் பொருளாதார நிகழ்வுப் போக்குகளை சமூக வர்க்கங்களுக்கிடையிலான உயிர்வாழும் உட்தாக்கத்தில் இருந்து முழுமையாக பிரித்துபார்ப்பதும் கூட தவறானதாகும்.

உண்மையில் 1930களின் அனுபவங்கள், சனத்தொகை நெருக்கடி மிகுந்த நகர மையங்களின் பரந்த கைத்தொழில் தொகுதிகளினால் தோற்றுவிக்கப்பட்ட சமூக ஆபத்துக்களை இட்டு அமெரிக்க முதலாளி வர்க்கத்தை உசார் அடையச் செய்தது. கைத்தொழில்களை, நகர மையங்களிலிருந்து கிராமப்புறங்களுக்கு அகற்றியமையும் கைத்தொழில் போக்கின் தன்னியக்கம் (Automation of Industrial Processes) என்ற இரண்டும் 1950களில் கணிசமான அளவு பரந்துபட்டதோடு முதலாளி வர்க்கத்தின் சமூக நோக்கத்தையும் பிரதிபலித்தது.

1970களில் வளர்ச்சியடைந்த பொருளாதார அழுத்தங்கள், அதிகரித்த கசப்பான வர்க்க மோதுதல்களுடன் இணைந்து தொழில்நுட்ப பரிணாம நிகழ்வுப்போக்கினை விரைவுபடுத்தியது. பின்வரும் உண்மையை கருத்தில் கொள்ள வேண்டும். பிரித்தானியா, அமெரிக்கா இரண்டினுள்ளும் மூலதனத்தின் சக்திக்கு எதிரான முக்கிய தூணாக பல தசாப்தங்களாக நின்றுவந்த தொழிலாள வர்க்கப் பிரிவினர்- அதாவது சுரங்கத் தொழிலாளர்கள், 1970களின் கடைப்பகுதியில் இருந்து ஒரு முக்கிய கைத்தொழில் சக்தியாக விளங்குவது முழுமனே ஒழிந்து போயிற்று. பிரித்தானியாவில் 1972ல் டோரிகளை அவமானத்துக்குள்ளாக்கியதும் 1974ல் அவர்களை ஆட்சியில் இருந்து வெளியேற்றியதுமான தேசிய சுரங்கத் தொழிலாளர் சங்கம் (NUM) 1984ல் வேலைநிறுத்தத்தில் படுமோசமான முறையில் தோற்கடிக்கப்பட்டதோடு, அன்றிலிருந்து அங்கத்தவர் எண்ணிக்கையும் ஒரு சில ஆயிரங்களுக்கு வீழ்ச்சியடைந்தது. இங்கு ஐக்கிய அமெரிக்காவிலும் ஐக்கிய சுரங்கத் தொழிலாளர் (UMW) இதற்குச் சமமான ஒரு தலைவிதியையே சந்திக்க நேரிட்டது. பிரித்தானியாவினதும், ஐக்கிய அமெரிக்காவினதும் சுரங்கத் தொழிலாளர்களின் தலைவிதி, 1970களின் இறுதியில் மூலதனம், உழைப்புக்கு எதிராக தொடுத்த தாக்குதலின் மிகவும் துன்பகரமான விளைவுகளுள் ஒன்று மாத்திரமே. பெடரல் றிசேர்வின் தலைவராக போல் வோல்க்கர் (றிணீuறீ க்ஷிஷீறீநீளீமீக்ஷீ) நியமிக்கப்பட்ட போதும், அத்துடன் அவர் உடனடியாக வட்டிவீதங்களை முன்னறிந்திராத மட்டத்திற்கு உயர்த்திய போதும் இது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக முதலாளித்துவ வாதிகளினால் முன்னெடுக்கப்படும் ஒரு பொதுவான தாக்குதலின் ஆரம்பத்தைக் குறிக்கிறது என வேர்க்கஸ் லீக் உடனடியாக எச்சரிக்கை செய்தது. எமது நிலைப்பாடு சரியானதென நிரூபிக்கப்பட்டது. 1979-82 பொருளாதார பின்னடைவு, அனைத்துலக வர்க்க உறவுகளில் ஒரு திருப்புமுனையைக் குறித்து நின்றது.

மூலதனத்தின் எதிர்த்தாக்குதல்

The offensive of capital

எல்லாவற்றிற்கும் முதல் பிரித்தானிய, அமெரிக்க அரசாங்கங்களில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. தாட்சர் 1979 மேயில் ஆட்சிக்கு வந்தார். 1979 யூலையில் ஒரு தேர்தல் இல்லாமலே வோல்கர் ஆட்சிக்கு வந்ததுடன், 1980 நவம்பரில், காட்டரின் பேரளவிலான தோல்வியை உறுதிப்படுத்திய பொருளாதாரக் கொள்கைகளையும் அறிமுகம் செய்தார். இத் தேர்தலுக்கு முன்னரேயே, அந்த நேரத்தில் வேர்க்கஸ் லீக் எச்சரிக்கை செய்ததுபோல், வந்துகொண்டிருக்கின்ற மாற்றம் முன்னணி வர்த்தக சஞ்சிகைகளின் உச்சரிப்புகளினால் சுட்டிக்காட்டப்பட்டது. நாம் ''மீள் தொழில்மயமாக்கம்'' (Re-Industrialization) என்ற புதிய பதத்தின் அதிகரித்த பிரயோகத்தை சுட்டிக்காட்டியதுடன், 1980 யூனில் பிஸ்னஸ் வீக் சஞ்சிகையில் வெளியான ஒரு கட்டுரையின்பால் கவனத்தை ஈர்த்தோம்.

''மீள் தொழில்மயமாக்கல், பொருளாதாரக் கொள்கை உருவாக்கம் என்ற கட்டுமானத்திலும் பொருளாதார அரங்கின் பிரதான பங்காளிகள் -வர்த்தகம், உழைப்பு, அரசாங்கம், சிறுபான்மையினர்- அவர்கள் பொருளாதாரத்திற்கு எவ்வளவை சேர்க்கின்றார்கள், பொருளாதாரத்தில் இருந்து எவ்வளவை பெற்றுக் கொள்கின்றார்கள் என்பதைப்பற்றி சிந்திக்கின்ற முறையிலும் துடைத்துக்கட்டும் மாற்றங்களை அடிப்படை நிறுவனங்களில் வேண்டிநிற்கின்றது. இம்மாற்றங்களில் இருந்து இவ் ஒவ்வொரு குழுக்களுக்கும் இடையே, பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு ஒவ்வொருவரும் எவ்வளவை பங்களிப்புச் செய்ய வேண்டும் என்பதையும், ஒவ்வொருவரும் எவ்வளவை பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் ஒரு விசேடமான முறையில் அங்கீரிப்பதன் அடிப்படையிலான ஒரு புதிய சமூக ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும்.''

உள்நாட்டு சமூக உறவுகளிலான மாற்றம் அனைத்துலகக் கொள்கையிலான ஒரு நகர்வுடன் இணைந்து வந்தது. 1963ல் அணுவாயுதப் பரிசோதனை தடை ஒப்பந்தம் கைச்சாத்தானதில் இருந்து, அணு ஆயுதக்குறைப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் ஆரம்ப வெற்றிகள் வரை அமெரிக்கா, சோவியத் யூனியன் தொடர்பாக ''பதட்டத்தை குறைத்தல்'' (Detente) எனப் பெயர்பெற்ற கொள்கையை கடைப்பிடித்தது. இந்தக் கட்டம் கூட 1979ல் ஒரு முடிவுக்கு வந்தது. ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பு சோவியத் யூனியன் தொடர்பாக பெரிதும் குரோத அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்கான ஒரு சூழ்நிலையாக பயன்படுத்தப்பட்டது. இரண்டாவது அணு ஆயுதக்குறைப்பு உடன்படிக்கை ஒருபோதும் அமெரிக்க செனட் சபையால் அங்கீகரிக்கப்பட்டதில்லை. றேகன் தெரிவுசெய்யப்பட்டதுடன் அமெரிக்கா, சோவியத் யூனியன் தொடர்பாக ஒரு யுத்தத்தில் ஈடுபட்டுக்கொண்டுள்ளவர்களின் எதிர்ப்புக் கொள்கையை கடைப்பிடித்தது. சமீபத்தில் பிரசுரிக்கப்பட்ட பல நினைவுக் குறிப்புக்களை நம்பவேண்டுமானால் சோவியத் அதிகாரத்துவத்தின் உள்ளேயான போக்குகள் அமெரிக்கா, சோவியத் யூனியனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு திட்டமிட்டு வருவதையிட்டு பெரிதும் கவலை கொண்டிருந்தன. குறைந்தபட்சம் றேகன் நிர்வாகம் பிரமாண்டமான இராணுவச் செலவீனங்களில் இறங்கியமை, சோவியத் யூனியனின் வரையறுக்கப்பட்ட வரவு- செலவு திட்டத்தின் மீது அழுத்தத்தினை பெருமளவு கொணர்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தது.

அனைத்துலகக் கொள்கையிலான பெயர்ச்சி, மத்திய கிழக்கு, இலத்தீன் அமெரிக்கா தொடர்பாக ஏகாதிபத்தியம் கடைப்பிடித்த கொள்கைகளிலும் சுட்டிக்காட்டப்பட்டது. மல்வினாஸ் (Malvinas) யுத்தம், லெபனான் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு, பெய்ரூட்டிலிருந்து PLO வெளியேற்றப்பட்டமை, நிக்கரகுவா, எல்சல்வடோர், கௌதமாலாவில் அமெரிக்கா நடத்திய அசிங்கமான யுத்தங்கள்- கிரனடா ஆக்கிரமிப்பு பற்றி சொல்லத்தேவையில்லை- இச்சகல அபிவிருத்திகளும் சமரசத்தில் இருந்து மோதலுக்கான மாற்றத்தை பிரதிபலித்தன.

தத்தமக்கு உரிய விதத்தில் ஸ்ராலினிசமும், சமூக ஜனநாயகமும், முதலாளித்துவ தேசியவாதமும் புதிய நிலைமைக்கு தம்மை உடனடியாக ஒழுங்கமைத்துக்கொண்டன. ஜேர்மன் சமூக ஜனநாயகம் ஆட்சியை கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியிடம் (CDU) ஒப்படைத்தது. 1981ல் தீவிர சீர்திருத்தங்கள் வழங்குவதாக கூறி ஆட்சிக்கு வந்த மித்திரோன், பிரெஞ்சு பங்குமுதல் சந்தை அவருக்கு எதிராக ஒருசில வேட்டுக்கள் தீர்த்ததுதான் தாமதம் தனது வேலைத்திட்டத்தினை கைவிட்டார். அவுஸ்திரேலியாவில் ஹோக் அரசாங்கம், லிபரல்கள் முயற்சிக்க அஞ்சிய கொள்கைகளை நடைமுறைப்படுத்தினர். சோவியத் யூனியனினுள் ஸ்ராலினிச கிழட்டு ஆட்சியின் பலவீனமான அரசு, முழு ஆட்சிமுறையினதும் ஸ்தம்பிதத்துக்கும் ஒழுங்கீனத்துக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது.

முதலாளித்துவ தேசியவாதிகளை எடுப்பின் அவர்கள், ஸ்ராலினிசத்தின் நெருக்கடி, தமது முக்கிய பாதுகாவலன் தமக்கு இல்லாமல் செய்துவிட்டதை அறிந்ததுதான் தாமதம் தமது கோரிக்கைகளை பின்வாங்கிக்கொள்ளத் தொடங்கினர்.

ஏகாதிபத்திய நெருக்கடி

The crisis of imperialism

அனைத்துலக முதலாளி வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன் தாக்குதலில் பெரும் வெற்றி கண்டது. ஆனால் யுத்தத்தின் பின்னைய முதலாளித்துவ உறுதிப்பாட்டின் முழு பொருளாதார அடிப்படையும் பாதித்த பூகோளமயமாக்கல் போக்கினை அதனால் கட்டுப்படுத்த முடியவில்லை. 1989-90ல் அனைத்துலகக் குழு மட்டுமே ஸ்ராலினிச ஆட்சிகளின் வீழ்ச்சி, வரலாற்றுப் பரிமாணத்திலான உலக நெருக்கடியின் ஒரு முன்னோடி என தனித்து நின்று வலியுறுத்தியது. இன்று அனைத்துலக நிலைமை பற்றிய எந்தவொரு தீர்க்கமான அவதானியும், பழைய இரண்டாம் உலகயுத்தத்தின் பின்னைய பொதுச் சமநிலை பொறிந்து போய்விட்டது என்பதை மறுக்கமாட்டார். ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான இந்த மோதுதல்கள்- எல்லாவற்றுக்கும் முதல் அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையேயானது- சந்தைகளுக்கும் அரிதான மூலவளங்களுக்கும் மலிவுக்கூலி, உழைப்பு மூலங்களுக்குமான போராட்டங்கள் கூர்மையடைகையில் புதிய எழுச்சிகளை முன்னறிவிக்கிறது. கிளின்டன் நிர்வாகத்தின் கொள்கை அதன் தலைமை அந்தஸ்தினை பேணிக்கொள்ள என்னவிதமான அழுத்தங்கள் அவசியமென அது கருதுகின்றதோ அதைப் பயன்படுத்த அமெரிக்கா தயாராக வேண்டுமென முதலாளி வர்க்கத்தின் கணிசமான பகுதியினரிடையே இருந்துவரும் மனப்பான்மையை புலப்படுத்துகின்றது.

மிக சமீபத்தில் world Policy Journal என்ற சஞ்சிகையில், றொனால்ட் ஸ்ரீல் எழுதியதாவது; ''சோவியத் யூனியனின் உடைவு என்பது, அதிருப்தியுற்றோரையும், ஆவல்மிக்கோரையும் வழிநடத்தும் நம்பிக்கையாக கம்யூனிசத்தின் உடைவைக் குறித்தது. சந்தை முதலாளித்துவம் சகல இடங்களிலும் வெற்றிகரமானதாக விளங்குகின்றது. ஆனால் இதை கொண்டாடுவோர் கற்பனை செய்வதிலும் பார்க்க இது ஐக்கிய அமெரிக்காவுக்கு கிடைத்த ஒரு குறைவான வெற்றியே. முதலாளித்துவம் என்பது, ஒவ்வொரு தேசமும் விளையாடக்கூடிய விளையாட்டே. குளிர் யுத்தத்தைப் போன்றே இதுவும் ஒரு அதிகாரத்திற்கான விளையாட்டு. சில தேசங்கள் ஐக்கிய அமெரிக்காவைப் போல் அல்லது அதைவிட இன்னும் சிறப்பாக விளையாட்டை மேற்கொள்கின்றன. பொருளாதார தத்துவத்தை போலன்றி உண்மையான அரசியலின் சார்பு ரீதியான வெற்றியே கணக்கிடப்படுகின்றது. மொத்தப் பங்கு எவ்வளவு அதிகரிக்கின்றது என்பது முக்கியமல்ல யாருடைய பங்கு அதிகரிக்கின்றது என்பதே முக்கியம். அமெரிக்காவின் பங்கு அதிகரிக்கவில்லை; அதனது போட்டியாளர்களின் (''முன்னாள் குளிர்யுத்த கூட்டாளிகளின்'' என வாசிக்கவும்) பங்கே அதிகரிக்கின்றது. கம்யூனிசத்தை வெற்றி கண்டதன் பின்னர், முதலாளித்துவத்தின் வர்க்க யுத்தத்தில் ஐக்கிய அமெரிக்கா பின்தங்கி நிற்கின்றது.'' (50)

''சுதந்திர உலக அனைத்துலக வாதம் என்ற பெயரில் அமெரிக்க பொதுஜனங்கள் குளிர் யுத்தகால கூட்டுக்களான ஜப்பான், தென்கொரியாவை அல்லது சீனா போன்ற சோவியத் எதிர்ப்புப் பங்காளிகளை அமெரிக்காவின் சொந்த கைத்தொழில் தளத்தினை அழிக்கத் தொடர்ந்தும் அனுமதிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. திறந்த சந்தை, அனைத்துலகவாதம் போன்ற புத்திஜீவித்தன்மையான யதார்த்தமற்ற கருத்துகளுக்கு கட்டுப்பட்டுள்ளமையால், தனது சொந்த தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு இலாயக்கற்ற அல்லது ஆற்றல் அற்ற ஒரு தேசம் உள்ளார்ந்த சச்சரவிற்கும், இரண்டாம்தர அந்தஸ்த்துக்குள்ளான ஒரு தேசமாகும். ஒரு விழிப்படைந்த அமெரிக்க தேசியவாதம், மலிவான கூலி உழைப்பைத் தேடி வெளிநாடுகளுக்கு நகர்கின்ற கூட்டுத்தாபனங்களுக்கு உதவுவதைக் காட்டிலும், அமெரிக்க தொழில்களை காப்பதற்கே ஒரு உயர்ந்த முன்னுரிமை கொடுக்கவேண்டும். அத்தோடு இது அமெரிக்காவின் சுயபிரகடனம் செய்யப்பட்ட ''அதி உயர் வல்லரசு'' என்ற அந்தஸ்தை பேணுவதான பிரமையின் கீழ் அதனது பொருளாதாரப் போட்டியாளர்களுக்கு இலவச இராணுவ பாதுகாப்பை வழங்குவதையும் கூட நிறுத்தவேண்டும். உண்மையில் சம்பளமற்ற பாதுகாவலன் என்பதே இதற்கு மிகவும் பொருத்தமான பதமாகும்.

''சர்வதேசிய வாதம் தருமத்தைப் போன்ற நல்ல நோக்கங்களுக்கான ஒரு பதாகையாக நோக்கப்படக் கூடாது. அதற்குள் உள்ளார்ந்த பெறுமதியையும் கொண்டிருக்கவில்லை. இது தேசிய சமூகங்களில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள மக்களின் நலன்களை முன்னேற்றுவதற்கான ஒரு முறை மட்டுமே. எங்கே அது இதைச் செய்கின்றதோ அது அங்கே அங்கீகரிக்கப்படவேண்டும், அது அதை செய்யாதவிடத்தில் இது மிகவும் நியாயமான முறையில் நிராகரிக்கப்பட வேண்டும்''. (51)

யுத்தத்தின் பின்னைய அமைப்பு சிதறிப்போயுள்ளமை தெளிவாகியுள்ளது. இந்தச் சமநிலையின் உள்ளே அல்லது மிகவும் திட்டவட்டமாக அதனது மையத்தில், தொழிலாள வர்க்கத்தின் என்றுமில்லாத பரந்த பகுதியினரை உற்பத்தி நிகழ்வுப்போக்கில் இருந்து அகற்றுவதற்கான முதலாளித்துவ வாதிகளின் ஈவிரக்கமற்ற முயற்சிகளின் விளைவாய், சர்வதேச ரீதியாக வீழ்ச்சியடையும் உபரிமதிப்பில் தங்களது பங்கை பேணிக்கொள்வதற்கான பூகோள முதலீட்டாளர்களின் வெறிபிடித்த ஓட்டம் விளங்குகின்றது. இது உற்பத்திப்போக்கில் இருந்து பரந்த அளவிலான தொழிலாள வர்க்கப் பகுதியினரை வெளியேற்றும் முதலாளி வர்க்கத்தின் இடைவிடாத முயற்சியாகும். உலக நாணயம், பங்கு, சமத்துவம், வர்த்தகப் பண்ட சந்தைகளின் நாளாந்த கொந்தளிப்புகள் நிதித்தேட்ட அவஸ்தையினால் உபரி மதிப்பினை ஈவிரக்கமற்ற முறையில் தேடுவதில் உயர்ந்த மட்டத்தை அடைந்துள்ளது. இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் பிரமாண்டமானது. ஒரு நாளுக்கு உலகநாணய சந்தைகளின் வர்த்தகம் 1.1 ட்ரில்லியன் டொலருக்கு அதிகமாய் உள்ளது. ஒவ்வொரு வாரமும் அவை அமெரிக்கக மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) சமமான செல்வத்தை நகர்த்துகின்றன.

தொடரும்.......


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved