அர்ப்பணம்
1905ம்
ஆண்டு லியோன் ட்ரொட்ஸ்கியால் எழுதப்பட்ட நிரந்தரப் புரட்சி
&
முடிவுகளும் வாய்ப்புக்களும் என்ற இந்நூலை,
அதன் நூற்றாண்டு தினத்தில்,
2005ல்
முதன் முறையாக தமிழில் வெளிக்கொண்டு வருவதில் உலக சோசலிச வலைத் தளம் பெருமை
அடைகின்றது.
20ம்
நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் சிக்கல்களை ஆய்வுசெய்வதற்கும்,
இந்
நூற்றாண்டு பூராவும் உலகத் தொழிலாள வர்க்கம் முகங்கொடுத்த பிரச்சனைகளை
உள்ளீர்த்துக் கொள்வதற்கும்,
21ம்
நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டத்தை தயார் செய்வதற்கும் தமிழ் பேசும்
தொழிலாளர்,
இளைஞர்கள்,
சோசலிச எண்ணம் கொண்ட புத்திஜீவிகளுக்கு இந்நூல் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த
படிப்பினைகளை வழங்கும்.
இந்நூலை தமிழில் வெளிக்கொணர அரசியல் ரீதியாகவும் நிதி ரீதியாகவும் பங்களிப்புச்
செய்த உலகத் தொழிலாள வர்க்கத்தின் தலைசிறந்த பிரதிநிதிகளுக்கும் ஆர்வம் கொண்ட
வாசகர்களுக்கும் எமது மேதின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்நூலின் படிப்பினைகளின் வழிநின்று உலக சோசலிசத்திற்கான போராட்டதில் தனது
வாழ்வை அர்ப்பணித்து,
14
ஏப்பிரல்
2005
அன்று தனது
56வது
வயதில் சுவாசப்பை கோளாறால் காலமான இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் நீண்டகால
உறுப்பினரான தோழர்
'பாப்பா'
என்று அழைக்கப்படும் வேலுப்பிள்ளை சரவணப்பெருமாளின் உயர்ந்த நினைவுக்கு இந்
நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை ஆழமான மரியாதையுடன் அர்ப்பணம் செய்கின்றோம்.
|