World Socialist Web Site www.wsws.org


நிரந்தரப் புரட்சி
லியோன் ட்ரொட்ஸ்கி

அத்தியாயம் 1

இந்த வேலையின் நிர்ப்பந்தத் தன்மையும் அதன் இலக்கும்!

Back to screen version

கட்சிக்குள்ளே ஏற்பட்ட தத்துவத் தேவையை வலதுசாரி மதத்தியவாத கூட்டின் தலைமை தொடர்ந்து ஆறு வருடமாக ட்ரொட்ஸ்கிச விரோதத்தால் ஈடுசெய்தார்கள். இச்சரக்கு மாத்திரமே எந்த எல்லையற்ற அளவிலும் கிடைக்க கூடியதாகவும் வினியோகிக்கக் கூடியதாயும் இருந்தது. ஸ்ராலின், முதன் முதலாக 1924-ல் நிரந்தரப் புரட்சிக்கு எதிரான தனது சிரஞ்சீவிக் கட்டுரையின் மூலம் தத்துவ விசாரணையில் (வேலையில்) ஈடுபடத் தொடங்கினார். மொலோரோவ் கூட இப்புனிதத் தடாகத்திலே "தலைவராக" ஞானஸ்தானம் பெற்றுள்ளார். பொய்மைப்படுத்தல் அதீத வேகத்தை அடைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர், 1917-ல் லெனின் ஜேர்மன் மொழியில் எழுதியதை மீண்டும் பிரசுரிக்கும் அறிவித்தலை கேள்விப்பட்டிருகின்றேன். இது ஜேர்மன் முன்ன்னேறிய தொழிலாள வர்க்கத்துக்கு ஓர் விலைமதிக்க முடியாத பரிசாகும். அது பற்றி ஒருவர் முன்கூட்டியே எதிர்பார்க்கலாம். அதிலே எண்ணற்ற பொய்மைப்படுத்தல் நடந்திருக்கும் என்றும் அதிலே அதன் பொருளடக்கத்திலே நியூயோர்க்கிலுள்ள கொளந்தாய்க்கு லெனின் எழுதிய கடிதங்கள் போடப்பட்டிருப்பதை குறிப்பிடலாம். ஏன்? அக்கடிதத்திலே கொளந்தாயிடமிருந்து வந்த முற்றிலும் தவறான தகவல்களின் அடிப்படையில் என்னைப் பற்றிய காரசாரமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. அவர் தனது அமைப்பியல் சார்ந்த (சேதன) மென்சவிசமான ஒரு விசர் பிடித்த அதீத இடதுசாரி ஊசியை அந்நாட்களில் கொடுத்துள்ளார். ரஷ்ய பதிப்பிலே, இழிபாசாங்கினர் லெனினுக்கு பிழையான தகவல்கள் கிடைத்தன என்று எழுத நிர்ப்பந்திக்கப்பட்டாலும், அதையும் சிலேடையாகவே எழுதியுள்ளார்கள். ஆனால் ஜேர்மன் பிரசுரிப்பிலே, இத்தட்டிக்கழிக்கும் ஒதுக்கீட்டு செய்திகூட வரமாட்டாது என்பதை ஊகிக்க முடியும். நாம் லெனின், கொளந்தாய்க்கு எழுதிய அதே கடிதத்திலே புக்காரினுக்கு விழுந்த சாட்டையடியையும் சேர்க்க முடியும். அந்நாட்களில் புக்காரின், கொளந்தாயோடு ஐக்கியப்பட்டிருந்தார். கடிதத்தின் அப்பகுதியை நசுக்கி வைத்திருந்தார்கள். ஆனால் அது ஒரு குறிப்பிட்ட தற்காலிக காலத்திற்கு மட்டுமேயாகும். பகிரங்கப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும்போது இக்கடிதத்தை பிரசித்தமாக்குவோம். இதற்காக நாம் நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை[1] மறுபக்கத்தில் லெனினது மிக விலைமதிப்புள்ள ஆவணங்கள், கட்டுரைகள், பேச்சுக்கள், கூட்டக்குறிப்புகள், கடிதங்கள், போன்றவையும் அந்தரங்கமாக வைக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அவை முழுவதுமே ஸ்ராலினுக்கும், அவரது சகபாடிகளுக்கும் எதிராக இருப்பதனாலும் அவை "ட்ரொட்ஸ்கிசம்" பற்றிய கட்டுக்கதையை நிர்மூலமாக்குவதனாலுமே, ரஷ்யாவில் ஏற்பட்ட 3 புரட்சிகளின் வரலாறுகளும், கட்சியின் வரலாறு போன்ற எந்த சின்ன விடையத்தையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. அதாவது தத்துவம், தரவுகள், சம்பிரதாயம், லெனினது பாரம்பரியம் போன்ற எல்லாமே "ட்ரொட்ஸ்கிசத்திற்கு" எதிரான போராட்டத்திற்காக தியாகம் செய்து தீர்க்கப்பட்டன. ட்ரொட்ஸ்கிசம் என்ற சொல், லெனின் நோய்வாய்ப்பட்ட பின்பே கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கெதிரான அணிவகுப்புகள் நடந்தன. ஆரம்பத்தில் இது ட்ரொட்ஸ்கிக்கு எதிரான தனிப்பட்ட போராட்டமாக ஆரம்பிக்கப்பட்டு, ஈற்றில் மார்க்சிசத்திற்கு எதிரான போராட்டமாக அபிவிருத்தி செய்யப்பட்டது.

எப்போதோ மறைந்தொழிந்த பழைய முட்டிமோதல்களின் குப்பை கூழங்களை இன்று வாரி அள்ளிக் கொணருதல், இன்றைய நாளின் நனவற்ற சமூகத்தேவைக்கு, தேவைக்குப் புறம்பான சிலவற்றை பூர்த்தி செய்யலாம். ஆனால் இந்த இன்றைய தேவைகள் பழைய முட்டி மோதல்களின் போக்கில் போகவில்லை. "பழைய ட்ரொட்ஸ்கிசத்திற்கு" எதிரான பிரச்சாரமானது உண்மையிலேயே அக்டோபர் பாரம்பரியங்களுக்கு எதிரான பிரச்சாரமாகும். இது மேலும் புதிய அதிகாரத்துவத்திற்கு சிக்கல்களையும் ஆற்றாமையையுமே ஏற்படுத்தும். எவற்றை அவர்கள் விட்டொழிக்க விரும்பினார்களோ அவற்றை "ட்ரொட்ஸ்கிசம்" என்று பண்பிடத் தொடங்கினார்கள். ட்ரொஸ்கிசத்திற்கு எதிரான போராட்டம் என்பது, பாட்டாளி வர்க்கமல்லாத பரந்த வட்டாரங்களிடையேயும் பகுதியளவு பாட்டாளி வர்க்க வட்டாரங்களினுள்ளேயும் படிப்படியாக தத்துவார்த்த மற்றும் அரசியல் எதிர்வினையின் வெளிப்பாடாக ஆனது, மற்றும் இந்த எதிர்வினையானது கட்சிக்குள்ளேயும் பிரதிபலித்தது. குறிப்பாக நிரந்தரப்புரட்சி பற்றிய கேலிச்சித்திரமும், லெனினது நிலைப்பாடான 'விவசாயிகளோடான ஐக்கியம்' (muzhik ) என்பதை நிரந்தரப் புரட்சியோடு எதிர்மறுத்துக்காட்டும் வரலாற்று ரீதியாக திரித்துக் காட்டும் செயலானது, 1923-ல் உச்சக்கட்டத்தை அடைந்து, இது சமூக பிற்போக்குத்தனமும், அரசியல் பிற்போக்குத் தனமும், கட்சியின் பிற்போக்குத் தனமும், அதிகாரிகளதும், உடைமையாளர்களதும் உலகப்புரட்சிக்கு எதிரான பெரும் எதிர்ப்போடும், "நித்திய குழப்பம்" விளைவித்தலோடும் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினதும், காரியாளர்களதும் சமாதானம் மற்றும் ஒழுங்கிற்கான அவாவின் முணுமுணுத்தலோடும் சேர்ந்து அதீத ரூபத்தில் வெளிப்பட்டது. நிரந்தரப் புரட்சிக்கு எதிரான நயவஞ்சகமான சேறடிப்புகள் தனியொரு நாட்டில் சோசலிசத்திற்கான வழியைத் திறந்துவிட்டது. அதாவது இதுவே தேசிய சோசலிசத்தின் கடைசி வகையறாவாகும். "ட்ரொட்ஸ்கிசத்திற்கு" எதிரான போராட்டத்தின் புதிய சமூக வேரானது, நிரந்தரப்புரட்சி தத்துவத்தின் சரியானதன்மையை ஆதரிப்பதோ அன்றேல் நிராகரிப்பதோ போன்ற இவற்றில் ஒன்றைத்தன்னும் நிரூபணமாக செய்யவில்லை. எனினும், மறைந்திருக்கும் இவ்வேரை விளங்காமல் விடுவது தவிர்க்க முடியாதபடி முதிராத பாண்டித்திய பண்பைப் பெறும்.

பழைய பிரச்சினைகள், பிரதானமாக எனது கடந்தகாலத்துடன் தொடர்புடையதாக இருப்பதுடன் அதை இப்போது செயற்கையாக எனக்கெதிராக பிரயோகித்து வரும் வரை அண்மித்த வருடங்களில் புதிய பிரச்சினைகளில் இருந்து என்னை விடுவித்துக்கொண்டு, 1905 புரட்சியை சூழவுள்ள பழைய பிரச்சினைகளுக்கு போகமுடியவில்லை. எனது பழைய தவறுகளையும், அபிப்பிராய பேதங்களையும் ஆய்வு செய்வதென்பது அன்றைய சூழ்நிலைகளுக்கு ஏற்பவே அவை எழுந்தது என்பதை காட்டவேண்டும். எனது தவறுகள் பற்றியும், முரண்பாடுகள் பற்றியும் எந்த மட்டத்திற்கு ஆய்வு செய்து காட்டப்படுகிறதோ அந்த மட்டத்திற்கு அப்பிரச்சினைகள் இன்றைய இளம் சமுதாயத்திற்கு துலாம்பரமாக புரிவதற்கு உதவியாக இருக்கும். பழையவர்களைப் பற்றி பேசுவதல்ல அவர்கள் இப்போது அரசியலின் இரண்டாம் பிள்ளைப் பருவத்தை (முமையால் ஏற்படும் பலவீனத்தை) எய்திவிட்டார்கள். அது பற்றி எழுதுவதெனில் ஒரு முழு பாகத்தையே எழுதிவிடலாம். நாளும் பொழுதும் புதிய முக்கியமான பிரச்சினைகள் இருக்கையில், பழைய பிரச்சினைகளிலேயே எனது நேரத்தையும் மற்றவர்களின் நேரத்தையும் விரையம் செய்வது கொடூரமானது. ஜேர்மன் புரட்சியை பற்றிய பொறுப்பு, பிரித்தானியாவின் எதிர்காலத் தலைவிதி பற்றிய பிரச்சினை, அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையேயுள்ளான பரஸ்பர உறவு பற்றிய பிரச்சினை, பிரித்தானிய பாட்டாளி வர்க்கத்தின் வேலை நிறுத்தம் உண்டாக்கிய பிரச்சினை, சீனப்புரட்சியின் பணிகள், கடைசியாகவும் முக்கியமாகவும் எமது உள்நாட்டுப் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் முரண்பாடுகளும் அதன் பொறுப்புகளுமே நிரந்தரப்புரட்சி பற்றிய எனது வரலாற்று ரீதியான விவாதங்களை பின்போட்டதை பெரிதாக நியாயப்படுத்துவதற்கான காரணங்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் சமூக நனவானது ஒரு வெற்றிடத்தை நிராகரித்து நின்றது. அண்மைக்கால வருடங்களில் இத்தத்துவார்த்த வெற்றிடமானது நான் சொன்னது போன்று ட்ரொட்ஸ்கிச விரோதமென்ற குப்பை கூழத்தால் நிரப்பப்பட்டது. கட்சி பிற்போக்கின் இழிபாசாங்கினர், மெய்யிலாளர்கள் மற்றும் தரகர்கள் எப்போதும் மீளமுடியாத தாழ்நிலைக்குள் நழுவி விழுந்து, புத்திக்கூர்மையற்ற மென்ஷிவிக்கான மாட்டினோவின் பள்ளிக்குள் சென்று, லெனினை கீழே போட்டுக் காலால் மிதித்து சேற்றில் சிக்கி தட்டுத்தடுமாறி, இவையெல்லாம் ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான போராட்டம் என்று சொல்கிறார்கள். இந்த முழு வருடங்களிலும் அவர்கள் வெட்கமில்லாமல் உரத்து ஏதாவதொரு உருப்படியான மற்றும் முக்கியமான வேலையைச் செய்தார்கள் என்று சொல்ல முடியவில்லை. அவர்களால் தொடர்ந்து பொருந்தக்கூடிய விலைமதிப்புள்ள அரசியலை கொண்டுவர முடியவில்லை. அவர்களது எந்தவொரு சின்ன தீர்க்கதரிசனமும் சரியாகிவிடவில்லை. அவர்களது எந்தவொரு சின்ன சுலோகமானது எங்களை தத்துவார்த்த ரீதியில் முன்னேற்றிவிடவில்லை. எங்கு பார்த்தாலும் உதவாப் பொருள்களையும் அழிப்பு வேலைகளையும் தவிர வேறில்லை.

ஸ்ராலினது லெனினிசத்தின் பிரச்சினைகள், கருத்தியல் குப்பை கூழங்களின் திரட்டாகும். ஓர் உத்தியோகபூர்வ குறுமன பொதுப் பொருளடக்க திரட்டாகும் (நான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த மிதமான குறிப்பு இதுவாகும்) சினோவியேவ் எழுதிய லெனினிசம், சினோவேவிய லெனினிசமே அன்றி வேறு ஒன்றும் அல்ல. சினோவியேவ் லூதரது கொள்கைப்படியே செயற்படுகிறார். ஆனால் லூதர் சொன்னார் "நான் இங்கே நிற்பேன் இதைத்தவிர வேறொன்றை என்னால் செய்ய முடியாது." சினோவியேவ் சொல்கிறார் நான் இங்கே நிற்கிறேன். ஆனால் என்னால் வேறேதாவதும் செய்ய முடியும். இழிவுபடுத்தலின் தத்துவார்த்த விளைபொருள்களின் விஷயத்திலும் வித்தியாசமான நிலைப்பாட்டிலும் நிற்றல் சகிக்கவொண்ணாததாகும். இழிபாசாங்கின் இத் தத்துவார்த்த விளைபொருட்களுடன் ஒருவர் யாதேனும் ஒன்றுடன் ஈடுபடுத்திக்கொள்வது சமமான அளவு பொறுத்துக்கொள்ள முடியாததாகும். இதில் ஒரு வேறுபாடு உண்டு. சினோவியேவின் லெனினிசத்தை வாசிக்கும்பொழுது ஒருவருக்கு உதிரியாக உள்ள பஞ்சினால் மூச்சுத் திணறுவது போன்ற உணர்வைக் கொடுக்கும், அதே நேரத்தில் ஸ்ராலினுடைய பிரச்சினைகள் தூசிதுடைப்பானில் பயன்படுத்தப்படும் நன்கு சிறிதாக வெட்டப்பட்ட விறைப்பான முடி அல்லது இறகுகள் ஏற்படுத்தும் உணர்வை நினைவுக்கு கொண்டு வருகின்றது. இவ்விரண்டு புத்தகங்களுமே அவைகளின் தனிப்போக்கிலே கருத்தியற் பிற்போக்குத்தனம் நிறைந்த சகாப்தத்தின் பிம்பமும், மணிமுடியுமாகும்.

அனைத்துப் பிரச்சினைகளையும், அது வலதிலே இருந்து வந்தாலென்ன இடதிலிருந்து வந்தாலென்ன, அது மேலேயிருந்து வந்தாலென்ன கீழேயிருந்து வந்தாலென்ன, முன்னுக்கு வந்தாலென்ன பின்னுக்கு வந்தாலென்ன, அவற்றை ட்ரொட்ஸ்கிசத்திற்கே பொருந்திவிடும் மற்றும் எப்படியாவது சமாளித்து ட்ரொட்ஸ்கிசத்திற்குள் செருகிவிடவும், இழிபாசாங்கினர் உலகில் நடைபெறும் எல்லாச் சம்பவங்களையும் கடைசியாக 1905-ன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சியிலேயே நேரடியாகவோ மறைமுகமாகவோ தங்கி நிற்பதாக காட்டி விடுகிறார்கள். பொய்மையால் வார வழிய நிரப்பப்பட்ட ட்ரொட்ஸ்கிசம் பற்றிய புனைகதை தற்காலத்திய வரலாற்றில் ஓரளவு முக்கிய காரணியாகிவிட்டது. வலது மைய நிலைப்பாடு அண்மைக்காலத்தில் ஒவ்வொரு கண்டத்திலுமுள்ள வங்குரோத்துத்தனத்தோடு சமரசம் செய்யும் வரலாற்றுப் பரிமாணமாகி விட்டது. 1905-ல் ஆரம்பித்த பழைய முட்டிமோதல்களையும் முன்கணிப்புக்களையும் பற்றி ஒரு மதிப்பீடு எடுக்காமல் கம்யூனிச அகிலத்தினுள்ளே மையவாதத்திற்கு எதிரான போராட்டம் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அன்றேல் அது ஒரு மிகக் கஷ்டமான விடயமாகி விட்டது.

இழிபாசாங்கினரின் கிறுக்கல்களுக்கு பிராயச்சித்தம் தேடாமலும், குற்றம் சுமத்தும் தொழிலை செய்கின்ற கட்சி இயந்திரத்தினுள்ளோர் மீது இரக்கமற்ற தத்துவார்த்த குற்றங்களை சுமத்தாலும் மார்க்சிசத்துக்கும் அதனோடு லெனினிசத்திற்கும் புத்துயிர் அளிப்பதென்பது இயலாத காரியமாகும். உண்மையிலேயே அப்படியொரு புத்தகத்தை எழுதுவது கஷ்டமான காரியமல்ல. அதன் அனைத்து ஆக்ககூறுகளும் கையிலேயே இருக்கின்றன. இருந்தபோதும் அப்படியொரு புத்தகத்தை எழுதுவது கஷ்டமாகும். ஏனெனில் அப்படியொரு புத்தகத்தை எழுதும்போது, பெரிய வசைக் கவிஞனான சல்ரிக்கேவ் (Saltykove) கூறியவாறு, ஆளுமையின் அ,-வுக்கு இறங்க வேண்டும். அது மிகவும் களைப்பான வேலையாகும். அப்படிப் பிரயத்தனப்படும்போது மிகச் சொற்பமான நேரமே அமுதமான சூழலில் சஞ்சரிக்க முடியும். இருந்தபோதும் இவ்வேலையானது கட்டாயம் ஒத்திப்போட முடியாததாகும். நிரந்தரப் புரட்சிக்கு எதிரான போராட்டத்தினூடேயே மனித சமுதாயத்தின் அரைவாசிப் பங்கு மக்கள் வாழும் கீழைத்தேச மக்களின் பிரச்சினை சம்மந்தமான சந்தர்ப்பவாத நிலைப்பாட்டின் பாதுகாப்பு அமைக்கப்பட்டது

ரஷ்ய இலக்கியங்களை எனது பொழுதுபோக்கு நேரத்தில் வாசிப்பதற்கு வைத்துவிட்டு (சுழியோடுவோர் கூட இடையிடையே சுத்தக்காற்றை சுவாசிப்பதற்காக மேலுக்கு வருவார்கள்) அருமையாக இன்பந்தருகின்ற வேலையான சினோவியேவுக்கும், ஸ்ராலினுக்கும் எதிரான தத்துவார்த்த தர்க்கத்திலே நான் புகுந்து கொண்டிருந்தபோது, சற்றும் நான் எதிர்பாராதபடி றடெக் எழுதிய ஒரு கட்டுரை வெளியாகி அது பரவத் தொடங்கியது. அக்கட்டுரையானது, நிரந்தரப் புரட்சி பற்றிய லெனினது பார்வைக்கு ஆழமாய் எதிரான நிலைக்கு அர்ப்பணித்துக் கொண்டிருந்தது. முதலில் நான் றடெக்கினது எழுத்தை அப்புறம் வைக்கக்கூட விரும்பினேன். இலேசாகப் பின்னிய பஞ்சையும் இறுகப் பின்னிய கம்பளியையும் எனது தலைவிதியை நிர்ணயிக்கப் பாவித்தும் கூட, நான் திசைமாறவில்லை. அநேக நண்பர்களுடைய கடிதங்கள் என்னை றடெக்கினது எழுத்தை கூர்ந்து கவனிக்கும்படி தூண்டியது. நான் பின்வரும் முடிவுக்கு வந்தேன். றடெக்கினது எழுத்தானது, உத்தியோகபூர்வ இலக்கியங்களை விட மற்றவர்களது கட்டளைக்கு அடிபணியாமல் சுயாதீனமாக சிந்திக்கின்றதும் சரிசனையோடு மார்க்சியத்தை கற்பதுமான சின்ன வட்டத்தினருக்கு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதைக் கண்டு கொண்டேன். எந்த மட்டத்திற்கு சந்தர்ப்பவாதம் அரசியலிலே ஆபத்தை விளைவிக்குமோ அம்மட்டத்திற்கு உருமறைத்து நிற்பதும் தனிப்பட்டவர்களது செல்வாக்குக்கு அதை மறைத்திருப்பதும் பெரிய ஆபத்தை விளைவிக்கும். றடெக் எனது மிக நெருங்கிய அரசியல் நண்பன். கடைசிகாலச் சம்பவங்களின் போது இதைப் பெருமளவிற் காணலாம். அண்மைய மாதங்களில் பல தோழர்கள் றடெக் எதிர்ப்புக் குழுவின் அதீத இடது கன்னையிலிருந்து அதீத வலது கன்னைக்கு மாறியிருந்ததை அறியாமல் தொடர்ந்து றடெக்கை பின்பற்றினார்கள். றடெக்கினது மிக நெருங்கிய நண்பர்களை நாங்கள் அறிவோம். அரசியலும் இலக்கியமும் அவருக்கொரு கொடையாகும். இவைகளுடன் சேர்ந்தே அவரிடம் பிரத்தியேகமாக இயங்கும் வலுவும், பதியத்தக்க தன்மையும், கூட்டு வேலை நிலைகளின் கீழ் முன்முயற்சிக்கும் மற்றும் விமர்சிக்கும் மதிப்புமிக்க வளத்தைக் கொண்டிருக்கும், ஆனால் இவை அவரது தனிமைப்படல் நிலைமைகளினுள்ளே முற்றிலும் வித்தியாசமான பலாபலனையே கொடுத்தது. றடெக்கினது கடைசி எழுத்தானது. அவர் தனது திசைக்காட்டியை இழந்து விட்டாரென்று அல்லது அவரது திசைகாட்டி தொடர்ந்த காந்தப்புல இடையூறுகளின் செல்வாக்கின் கீழ் இருக்கிறது என்பது பல நடவடிக்கைகளினூடாக எங்களுக்கு காட்டுகிறது. றடெக்கினது எழுத்து கடந்த காலத்தினுள்ளே உலாவரும் கட்டம் கட்டமான சுற்றுலா அல்ல. தத்துவார்த்த புராணக் கதையிலும் கூட அவரது எழுத்தானது முழுமையாகச் சிந்தித்து எழுதப்படாததோடு, உத்தியோகபூர்வ போக்கிற்கு குறைந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதொன்றல்ல.

மேற்சொன்ன 'ட்ரொட்ஸ்கிசத்திற்கு' எதிரான போராட்டமென்ற அரசியல் வேலையானது, எதிர்ப்புக் குழுவினுள்ளே ஒரு பொருட்டாக இருக்கவில்லை. அது தத்துவார்த்த மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்திற்கு எதிரான மாக்சிச உதைகால் வடிவத்தை எடுத்தது. உட்கட்சி விமர்சனம் அனுமதிக்கப்படாததாகி விட்டது. குறிப்பாக பழைய, எனக்கும் லெனினுக்கும் இடையே நிலவிய அபிப்பிராய பேதங்கள் சார்பான விமர்சனங்கள் அனுமதிக்கப்படாததாகி விட்டது. எதிர்மாறாக, தன் விளக்கத்திற்கான வேலைகளே பயனுள்ள விலைகளை தரவல்லன. இங்கே ஒவ்வொரு சம்பவங்களின்போதும் வரலாற்று ரீதியான முன்னோக்கை கவனமாகப் பாதுகாத்தல், ஒவ்வொரு சம்பவங்களின் தோற்றுவாய்களை கரிசனையோடு ஆராய்தல், அண்மைய போராட்ட வெளிச்சத்தினுள்ளே பழைய வித்தியாசங்களை ஒளிரச்செய்தல் என்பன மிக அத்தியாவசியமானதாகும். றடெக்கினது வேலையில் இவைகளின் சுவடுகளைக் கூட காணமுடியாது. அவர் தான் செய்வது என்னவென தனக்கே தெரியாமலே ட்ரொட்ஸ்கிசத்துக்கு எதிரான போராட்டத்திலே விழுந்து ஒரு பக்க சார்பான மேற்கோள்களை தேர்ந்தெடுத்து பாவித்தது மாத்திரமல்ல அவைகளின் உத்தியோகபூர்வ வியாக்கியானங்களை பிழையாக்கியும் பாவித்தார். அவர் தன்னை உத்தியோகபூர்வ பிரச்சாரத்தில் இருந்து பிரித்து, கட்சி கன்னை எடுக்காத நடு நிலைமை சாட்சி போன்று சிலேடையான விதத்தில் பிரச்சாரம் செய்கிறார். எப்போதும் நடப்பது போன்று தத்துவத்திலே பின்னழுவிச் செல்லும் கடைசிக்கால றடெக்கினது வேலைகளிலே அரசியல் நுண்ணறிவினதோ அன்றேல் இலக்கிய நுட்பத்தின் அடிச்சுவடுகளையோ காண முடியாது. இந்த எழுத்து முன்னோக்கில்லாத, ஆழமற்ற, முற்றிலும் மேற்கோள் என்ற தளத்திலே எழுதப்பட்டதால், ஆகும், இந்தக்காரணத்தால் சலிப்பை தருகின்ற ஒன்றாகும்.

இது எந்த அரசியல் தேவையில் பிறந்தது? சீனப்புரட்சி பற்றிய பிரச்சினையில், எதிர்ப்பின் பெரும்பான்மையோருக்கும் றடெக்குக்கும் இடையே ஏற்பட்ட அபிப்பிராய பேதத்திலே இது பிறந்தது. சில ஆட்சேபனைகளை அறிகிறேன். அவை உண்மையாகும். சீனா பற்றிய அபிப்பிராய பேதங்கள் 'இன்று பொருத்தமுடையவை அன்று' (Preobrazhensky ) இந்த ஆட்சேபனைகள் கரிசனைப்படும் அளவிற்கு தகுதி வாய்ந்தவைகளல்ல. போல்ஷிவிசம் முழுமையும் 1905 புரட்சியின் அனுபவத்தை உள்வாங்கி விமர்சனத்தில் திட்டவட்டமான வடிவெடுத்து, வளர்ந்தது, என்றாலும், இவ்வனுபவம் போல்ஷிவிக் பழைய பரம்பரைக்கு இன்றும் ஒரு உடனடி அனுபவமாகும். இதைத்தவிர அது வேறு என்னவாக இருக்க முடியும்? இன்று பசுமையானதாக இல்லாதெனின், இன்னும் இளகிக்கொண்டிருக்கின்ற, இரத்த வெடுக்கடிக்கின்ற சீன அனுபவத்திலிருந்து பாட்டாளி வர்க்கத்தின் புதிய புரட்சிகரப் பரம்பரை கற்றுக் கொள்ளாமல் வேறு என்னத்திலிருந்து கற்க முடியும்? உயிரற்ற கல்விச்செருக்கு கொண்ட ஒருவனே சீனப்புரட்சி பற்றிய பிரச்சினையை "அமைதியான" நேரத்தில் பின்னர் ஆற அமர இருந்து படிப்பதற்கு "ஒத்திப்போடுவான்". கீழைத்தேச நாடுகளின் பிரச்சினை, நாளின் முக்கிய பிரச்சினைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு பிரச்சினை அல்ல மற்றும் அந்த நாடுகளின் புரட்சி எந்த தேதியில் நடைபெறுமென்று ஒருவருக்கும் தெரியாததன் காரணமாக, அது போல்ஷிவிக் லெனினிசவாதிகளுக்கு எல்லாவற்றிலும் குறைந்த கால அளவினதாகும்

றடெக், சீனப்புரட்சி சம்மந்தமாக ஒரு பிழையான நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு, அந்நிலைப்பாட்டை நியாயப்படுத்த, கடந்த காலத்தை வருந்தி அழைத்து லெனினுக்கும் எனக்கும் இடையே நிலவிய பழைய அபிப்பிராய பேதங்களை ஒரு பக்கப் பார்வையாகவும், திரித்தும் காட்டி இந்நிலைப்பாட்டை நியாயப்படுத்தப் பார்க்கிறார். இதனாலேயே றடெக் மாற்றானது ஆயுதசாலையிலே ஆயுதங்களை கடன்வாங்கவும், வேறொருவரது வழித்தடத்தில் திசைகாட்டியில்லாமல் வழிகாட்டவும் நிர்ப்பந்திக்கப்பட்டார்.

றடெக் எனது நண்பர். அதைவிட உண்மை எனக்கு வாஞ்சையானது. றடெக்கை மறுதலிக்கும் பொருட்டு நான் புரட்சி பற்றிய பிரச்சினைகள் மீதான பரந்த வேலையை மற்றுமொரு தடவை ஒருபுறம் ஒதுக்கி வைக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன். எழுப்பப்பட்ட பிரச்சினையானது உதாசீனம் செய்ய முடியாத மட்டத்திற்கு அதிமுக்கியமானது. அவைகள் ஒளிவுமறைவின்றி கேட்கப்பட்டுள்ளன. இவைகளை எதிர்கொள்வது மூன்று மடங்கு கஷ்டமானது: றடெக்கினது எழுத்தில் உள்ள தவறுகளின் விதங்களும் அவற்றின் பன்முகத்தன்மையும், றடெக்கை நிராகரிப்பதற்கென 23 வருடமாக (1905-28) நிரம்பி வழிந்துள்ள இலக்கிய மற்றும் வரலாற்று உண்மைகளின் தங்குதடையற்றவளம், மூன்றாவதாக சோவியத் யூனியனின் பொருளாதாரப் பிரச்சினை முன்னணியில் நெரிக்கின்றதால் எனது சொற்ப நேரத்தையே அர்பணிக்க கூடியதாக இருப்பது.

இந்த அனைத்து நிலவரங்களும் இன்றைய வேலைகள் என்ன மாதிரி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கின்றன. இவ்வேலைப் பிரச்சினையை வெறுமையாக்காதுள்ளது. ஏராளமான விடையங்கள் எதுவும் கூறப்படாமல் அப்படியே இருக்கின்றன. சிலவற்றைப் பற்றி இடையிடையே சொற்பம் கூறப்பட்டுள்ளன. ஏனெனில் இவை மற்றைய வேலைகளை தொடர்வதற்கு தேவையானவை. குறிப்பாக கம்யூனிச அகிலத்தின் வரைவு வேலைத்திட்டம் பற்றிய விமர்சனத்திற்கு இது அவசியமாகும். நான் சேர்த்த உண்மை சான்றுகளெல்லாம் பயன்படுத்தப்பட்டால் மலை போல் குவிகின்றன. இழிபாசாங்கினரைப் பற்றி அதாவது, பிற்போக்கு சகாப்தத்தின் உத்தியோகபூர்வ கருத்தியலுக்கு எதிராக நான் எழுதவேண்டிய புத்தகம் இன்னும் எழுதப்படாமல் இருக்கிறது. நிரந்தரப் புரட்சி பற்றி றடெக்கினது எழுத்தானது இந்த முடிவிலேயே தங்கியுள்ளது.

கட்சியின் புதிய பகுதியானது (எதிர்ப்பு) பாட்டாளி வர்க்கப் புரட்சியை அதனது நேச அணியான விவசாயிகளிடமிருந்து பிரித்தெறியும் ஆபத்தான போக்கை நோக்கி மாறுவதாகப் பயமுறுத்துகிறது.

முதலாவது ஆச்சரியம் தரும் உண்மை என்னவெனில், கட்சியின் புதிய பகுதியின் முடிவு பற்றியதாகும். அதிலே புதிய பகுதியானது 1928 நடுப்பகுதியில் புதுமுடிவிற்கு வந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதுபற்றி தொடர்ச்சியாக 1923 இலையுதிர் காலத்திலிருந்து திரும்பத்திரும்ப சொன்னதை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் றடெக் எவ்வாறுதான் உத்தியோகபூர்வ ஆய்வுரை பக்கம் போனதை நியாயப்படுத்துவார்? மீண்டும் ஒரு புதிய வழியில்லை: அவர் நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கு புறமுதுகைக் காட்டிவிட்டார். 1924-25-களில் றடெக் நிரந்தரப் புரட்சித் தத்துவமும், லெனினினது சுலோகமான பாட்டாளிகள் விவசாயிகள் ஜனநாயக சர்வாதிகாரமும் வரலாற்று ரீதியாக கணிக்கும்போதும், எங்களது மூன்று புரட்சிகளின் அனுபவ ஒளியில் பார்க்கும் போதும், இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானதல்ல என்றும் மாறாக அவை இரண்டும் ஒன்றே என்று நிறுவுவதற்கு பலமுறை தன்னை அர்ப்பணித்தார். இப்போது இப்பிரச்சினையை புதிதாக ஐயந்திரிபற ஆராய்ந்துவிட்டு, பழைய தத்துவமான நிரந்தரப் புரட்சித் தத்துவம் கட்சியின் புதிய பகுதியை, விவசாயிகளிடமிருந்து பிரிக்கும் பயமுறுத்தலை செய்கின்றதென்ற முடிவுக்கு தான் வந்ததாக தனது நண்பர் ஒருவருக்கு எழுதுகிறார்.

எவ்வாறு றடெக் இப்பிரச்சினையை ஐயந்திரிபற ஆராய்ந்தார்? அவர் இது சம்மந்தமாக சில தகவல்களை எங்களுக்கு அறியத்தந்துள்ளார்: "மார்க்ஸ் எழுதிய பிரான்சில் உள்நாட்டு யுத்தம் என்ற புத்தகத்திற்கு 1904-ல் ட்ரொட்ஸ்கி எழுதிய மூன்று முன்னுரையும், 1905-ன் எங்களது புரட்சி என்ற புத்தகத்திலும் ட்ரொட்ஸ்கி வரைந்த சூத்திரங்கள் கைவசமில்லை."

வருடங்கள் இங்கே சரியாகக் குறிப்பிடப்படவில்லை. இப்பிரச்சினையில் கருத்தூன்றிக் கவனிப்பது பயனுள்ளதாகாது. எனது அபிப்பிராயத்தை வரிசைக் கிரமமாக விளைவுகளும் வாய்ப்புவளங்களும் (எங்கள் புரட்சி, பீட்டர்ஸ்பேர்க், 1906-ல் பக்கம் 224-86) என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். ரோசா லுக்சம்பேர்க் இனதும், ரிஸ்கோ இனதும் போலிஷ் மொழிப் பத்திரிக்கையிலே (1909) வந்த கட்டுரை பற்றி றடெக் குறிப்பிட்டது, துரதிஷ்டவசமாக கமனேவ் போன்றே வியாக்கியானப்படுத்தப்பட்டுள்ளது. இது பூரணமாகவோ துலாம்பரமாகவோ அமையவில்லை. தத்துவார்த்த ரீதியாக இந்த எழுத்தானது "எங்கள் புரட்சி" என்ற புத்தகத்தின் அடித்தளத்திலேயே எழுதப்பட்டது. ஒருவரும் இப்புத்தகத்தை இப்போது வாசிக்க மாட்டார்கள். அப்பெரிய சம்பவம் நடந்த நேரந்தொடக்கம் அச்சம்பவத்திலிருந்து நாம் ஏராளமான விடையங்களை கற்றுக் கொண்டோம். உண்மைகளை சொல்ல கற்றுக் கொண்டோம். இழிபாசாங்கினரின் மேல் எனக்கு வெறுப்பு வருகிறது. ஏனெனில் அவர்கள் புதிய வரலாற்றுப் பிரச்சினைகளை எங்களால் செய்யப்பட்ட பழைய உயிரோட்டமுள்ள புரட்சியின் அனுபவ ஒளியில் பாராமல் முக்கியமாக மேற்கோள்களின் வெளிச்சத்தில் பார்க்கிறார்கள். மேற்கோள்கள் அப்பொழுது எதிர்கால புரட்சிகள் இருந்தது பற்றிய முன்கணிப்புக்களையே தொடர்புபடுத்துகின்றன. உண்மையிலேயே இதன் மூலம், நான் வரலாற்று இலக்கியங்களின் மூலம் இப்பிரச்சினையை அணுகும் றடெக்கினது உரிமையை தடுக்கவில்லை. அப்படியானால் அதைச் சரியாகச் செய்யவேண்டும். றடெக், நிரந்தரப் புரட்சி தத்துவத்தை ஒளிரச் செய்யும் பொறுப்பை எடுத்துவிட்டு, அந்த வேலையின் கால்நூற்றாண்டின் பின்னர் இரத்தினச் சுருக்கமாக அந்த தத்துவம் பற்றி நான் நிறுவிய அந்த ஆவணங்கள் 'கைவசமில்லை' என்று குறிப்பிடுகின்றார்.

நான் இச்சம்பவத்தில் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். நான் லெனினது பழைய கட்டுரைகளை இப்போது வாசித்தபோது அவர் எனது மேற்சொன்ன அடிப்படை வேலைகளை வாசிக்கவில்லை என்பதை கண்டுகொண்டேன். இதைத் துலாம்பரமாக விளங்கப்படுத்தலாம். எமது புரட்சி என்ற நூல் 1906-ல் வெளிவந்த மாத்திரமே அதன் பிரதிகளெல்லாம் பறிமுதல் செய்யப்பட்டது மாத்திரமல்ல, நாமெல்லோரும் உடனேயே தலைமறைவாகி விட்டோம் என்ற உண்மையோடு, அப்புத்தகத்தின் மூன்றில் இரண்டு பங்கு கட்டுரைகள் பழைய கட்டுரைகளின் மீள் பதிப்பாகும் என்பதும் உண்மையாகும். பல தோழர்கள் அப்புத்தகத்தை வாசிக்கவில்லை என்றும் ஏனெனில் அவர்கள் அப்புத்தகம், பழைய கட்டுரைகளின் மீள் பதிப்பென்று நினைத்திருந்தார்களென பிற்காலத்தில் நான் கேள்விப்பட்டேன. இருந்தபோதும் நிரந்தரப்புரட்சி பற்றி லெனின் கூறிய விமர்சனங்கள் ஏறத்தாழ முழுவதுமே அப்புத்தக தொகுப்பின் ஒரு பகுதியான ஜனவரி ஒன்பதிற்கு முன் என்ற சிறு நூலின் பார்வூஸ் எழுதிய முன்னுரையின் மேல்தான் இருந்தது. அம் முன்னுரையிலே பார்வூஸ், ஜார் தேவையில்லை! என்று பிரகடனப்படுத்தியிருந்தார். அது பூரணமாகவே எனக்குத் தெரியாது. அதனோடு புக்காரின் போன்றவர்களோடு லெனினுக்கு உட்கட்சி முரண்பாடு இருந்ததும் எனக்குத் தெரியாது. லெனின் எப்பொழுதாவது விளைவுகளும் வாய்ப்புவளங்களும் பற்றி ஆராய்ந்ததோ, மேற்கோள் காட்டியதோ கிடையாது. நிரந்தரப் புரட்சி பற்றிய லெனினது சில மறுப்புக்கள் எல்லாம் வெளிப்படையாகவே என்னை குறித்தல்ல என்பவைகள் லெனின் அப்புத்தகத்தை வாசிக்கவில்லை என்பதையே நிறுவுகின்றன.[2]

எப்படி என்றாலும் இதுவே லெனினது லெனினிசமாகும் என்று எண்ணுவது தவறு. ஆனால் இது றடெக்கினது அபிப்பிராயமாகும். றடெக்கினது கட்டுரையை நான் ஆராய்ந்தபோது, எனது அடிப்படை எழுத்துக்கள் அவரின் கைவசம் இல்லையென்றும், அவர் அதை ஒருபோதும் வாசிக்கவில்லை என்றும் தெரிகிறது. அவர் அப்படி வாசித்திருந்தாலும் அது பல காலங்களுக்கு முன்பு, அதுவும் அக்டோபர் புரட்சிக்கு முன்பாகும். இருந்தபோதும் அவற்றில் பலவற்றை அவர் நினைவில் வைத்திருக்கவில்லை.

ஆனால் இப்பிரச்சினை இங்கே முடியவில்லை. 1905-1909-ல் தனித்தனி நபர்களின் கட்டுரை தொடர்பாக ஒருவரையொருவர் விவாதத்தில் ஈடுபடலும், அதுவும் சிறப்பாக பிளவு நிலைமைகளின் கீழே தனித்த கட்டுரைகளிலே தனியொரு வாக்கியங்கள் விவாதப்பொருளாய் இருந்ததும், அக்காலங்களில் ஒப்புக் கொள்ளத்தக்கதும் தவிர்க்க முடியாததும்கூட ஆகும். இன்று ஒரு புரட்சிகர மார்க்சிசவாதி அவர் தன்னைப் பற்றி பின்வரும் கேள்விகளை கேட்காமல், அப்பயங்கர வரலாற்றுக் காலத்திய கட்டுரைகளை மீளாய்வு செய்வதை அனுமதிக்க முடியாது: கலந்துரையாடல்களின் கீழ் சூத்திரங்கள் எப்படி நடைமுறையில் பயன்படுத்தப்பட்டன? அவை எவ்வாறு வியாக்கியானப்படுத்தப்பட்டு செயற்பாட்டில் உய்த்துணரப்பட்டது? என்ன தந்திரோபாயங்கள் பிரயோகிக்கப்பட்டன? றடெக் "எங்களது முதலாவது புரட்சி" (பாகம் 2, எனது தேர்வுநூல் திரட்டு) என்ற இரண்டு புத்தகங்களையும் கஷ்டப்பட்டு வாசித்தார். அவருக்கு இன்றைய தன் நடவடிக்கைகளைப் பற்றி ஏன் எழுத துணிவு வரவில்லை. அனைத்து சம்பவங்களிலும் தொடர்ச்சியான வாக்குவாதங்களில் முட்டி மோதி நிற்பார். குறைந்தபட்சம் அதைச் செய்வாரென்று நான் நம்புகிறேன்.

இவ்விரு புத்தகங்களிலும் முதலாவது நிரந்தரப் புரட்சியானது எனது அரசியல் நடைமுறையில் எவ்விதத்திலும் ஜனநாயகப் புரட்சி கட்டத்தை பாய்ந்து செல்வதோ அல்லது வேறு பிரத்தியேக கட்டங்களை கடந்து செல்வதோ அல்ல என்பதை றடெக் கற்றிருக்கக் கூடும். 1905-ம் ஆண்டு நான் ரஷ்யாவிலே சட்டவிரோதமாக தலைமறைவாக தங்கியிருந்து, நாட்டைவிட்டு வெளியேறிய எவரோடும் தொடர்பின்றி எமது புரட்சியின் அடுத்தடுத்த படிகளைப் பற்றி வகுத்திருந்தேன். அது என்ன மாதிரி லெனின் வகுத்தாரோ அதனோடு அப்படியே பொருந்தியது. 1905-ல் லெனினை ஆசிரியராக கொண்ட போல்ஷிவிக் கட்சியின் மத்திய ஏடான புதுவாழ்வு (Novaya Zhizn) பத்திரிகையால் விவசாயிகளுக்கு அறைகூவிய அடிப்படைக் கோரிக்கையானது என்னால் எழுதப்பட்டதென்று அவர் கற்றிருக்கக்கூடும். தொடக்கம் (Nachalo) பத்திரிகையில் வெளியான நிரந்தரப் புரட்சி பற்றிய கட்டுரையை லெனின் தனது புதுவாழ்வு பத்திரிகையின் ஆசிரியர் கருத்தினோடு பாதுகாத்தார். சோவியத் பிரதிநிதிகளது அரசியல் முடிவுகள் பற்றி என்னால் எழுதப்பட்ட அறிக்கைகளுக்கு லெனின் பல தடவைகளில் தனிப்பட்ட ரீதியில் மாறுதலின்றி ஆதரவளித்ததோடு பாதுகாத்தார். அதன் நிருபராக பத்திற்கு ஒன்பதில் நானே கடமையாற்றினேன். டிசம்பர் தோல்விக்குப் பின், சிறையிலிருந்தபடி தந்திரரோபாயம் பற்றி நான் எழுதிய சிறு நூலில் குறிப்பிட்டிருந்தேன். பாட்டாளி வர்க்கத் தாக்குதல் நடவடிக்கையோடு, விவசாயிகளது விவசாயப் புரட்சியை இணைப்பது மத்திய மூலோபாயப் பிரச்சினையாகும். போல்ஷிவிக் வெளியீட்டகமான "புது அலைகள்" பிரசுரிக்கப்பட்ட இந்த துண்டுப் பிரசுரத்தை லெனின் வைத்திருந்ததோடு குனுயன்ந்த (Kauyant) ஊடாக எனக்கு உளமார்ந்த அங்கீகரிப்பையும் அனுப்பினார். 1907-ல் லண்டனில் நடைபெற்ற போல்ஷிவிக் காங்கிரசிலே போல்ஷிவிசத்தோடு எனது கருத்துக்களுக்குரிய ஐக்கியத்தை பற்றிப் பேசியதோடு, விவசாயிகள் பற்றியும் தாராண்மை முதலாளித்து வர்க்கம் பற்றியும் எனது கருத்தின் உடன்பாட்டை பற்றியும் பேசினார். றடெக்கைப் பொறுத்த மட்டில் இதொன்றும் இல்லை. ஏனெனில் அவரது "கைகளிலே" இவையொன்றும் இல்லை.

லெனினது எழுத்துக்களோடு றடெக் எம்மட்டத்திற்குப் பரிச்சயமாக இருக்கிறார்? திறமாக இல்லை அல்லது மிகத் திறமாக இல்லையென்றே சொல்லலாம். றடெக், லெனினது எனக்கெதிரான மேற்கோள்களுக்குள் அடைப்பட்டுக் கொண்டார், அம்மேற்கோள்கள் அதிகமாக மற்றவர்களுக்கெதிராகவே கூறப்பட்டது. (உதாரணமாக றடெக், புக்காரின் போன்றோருக்கு எதிராக இதை வெளிப்படையாக றடெக் தானே காட்டிய மேற்கோள்களிலேயே காணலாம்) றடெக்கால் எனக்கெதிரான ஒரு புதிய மேற்கோளை எடுத்துக்காட்ட முடியாது. அவர் ஏற்கெனவே தயார்நிலையில் இருக்கும் மேற்கோள்களையே காட்டுவார். அவைகள் இப்போது ரஷ்யாவின் ஒவ்வொரு பிரஜைகளின் கையிலும் உண்டு. லெனின், அராஜகவாதிகளுக்கும் சமூகப் புரட்சியாளர்களுக்கும், பூர்சுவா குடியரசுக்கும் சோசலிசத்திற்கும் இடையேயான வித்தியாசத்தின் சில அடிப்படை உண்மைகளை விபரித்து சில மேற்கோள்களையும் சேர்த்திருக்கிறார். றடெக், இம்மேற்கோள்களை எனக்கெதிராகப் பிரயோகிக்கப்பட்டதென்று தோண்ட முயற்சித்தார். இது நம்பமுடியாத ஒன்று. ஆனால் உண்மை!

புரட்சியின் அடிப்படைப் பிரச்சினைகள் சம்பந்தமாக போல்ஷிவிசத்தோடு எனக்கிருக்கும் ஐக்கியத்தை லெனின் மிகக் கவனமாகவும், விமர்சனத்தோடும் அங்கீகரித்த பழைய அறிக்கைகளை றடெக் முழுவதையுமே விலக்கியிருக்கிறார். லெனின் இதைச் சொல்லும்போது, நான் போல்ஷிவிக் கன்னையை சேர்ந்தவனல்ல என்பதை மறக்கக் கூடாது. இடையிடை மறுப்புக்களோடு தன்னையே கட்டிப்போட்டிருந்த, நிரந்தரப் புரட்சிக்காக அல்லாமல் மென்ஷிவிக்குள் இடது பக்கம் பரிணாமம் அடைவார்கள் என்ற எதிர்பார்ப்பையும் எனது சமரசவாதத்திற்காகவும் லெனின் ஈவிரக்கமற்று என்னைத்தாக்கினார் (அது மிகச்சரி). லெனின், "சமரசவாதி" ட்ரொட்ஸ்கியின் தனிப்பட்ட "நீதிக்கு" எதிராக காரசாரமாகப் போராடுவதிலும் பார்க்க, சமரசவாதத்திற்கு எதிராகப் போராடுவதிலேயே மிக அக்கறை கொண்டிருந்தார்.

எனக்கெதிராக 1917 அக்டோபர் புரட்சியிலே சினோவியேவினது நடத்தையை பார்க்க 1924ல் ஸ்ராலின் பின்வருமாறு எழுதினார்: "தோழர் ட்ரொட்ஸ்கி லெனினது கடிதத்தை (சினோவியேவிற்கு எழுதியது- லியோன் ட்ரொட்ஸ்கி) அதன் நோக்கத்தை, அதன் முக்கியத்துவத்தை விளங்கத் தவறிவிட்டார். லெனின், சில வேளைகளில் வேண்டுமென்றே முன்னுக்கு ஒடுவார். முன்னுக்குப் போய் சில தவறுகள் நடக்கக்கூடும் என்பதற்காக, அவர்களை எச்சரித்து கட்சியை பாதுகாக்க வேண்டுமென்பதற்காக முன்கூட்டியே விமர்சிப்பார். கற்பிக்கப்படவேண்டும் என்பதற்காக சில வேளைகளில் சிறு பிழைகளை மூன்று மடங்காக காட்டுவார் அல்லது மடுவை மலையாக ஆக்குவார். ஆனால் லெனினது வருத்தத்திற்குரிய அபிப்பிராய பேதமுடைய கடிதங்களிலிருந்து முடிவிற்கு வருபவர்களும் (லெனின் அப்படி ஏராளமான கடிதம் எழுதியிருக்கிறார்) அதைப் பெரிதாகச் சொல்பவர்களும் லெனினது கடிதங்களை விளங்கவில்லையென்பதல்ல, அவர்கள் லெனினையே விளங்கவில்லை என்பதாகும். (ஜோ. ஸ்ராலின், ட்ரொட்ஸ்கிசம் அல்லது லெனிசம், 1924).

இங்கே கருத்தானது பண்பற்ற முறையில் முறைப்படுத்திக்கூறப்பட்டது -'பாணியே மனிதன்'- ஆனால் அக்டோபர் காலங்களில் இந்த அபிப்பிராய பேதங்களை குறைந்த அளவிலேனும் "அற்பமானதுக்கு" பொருந்தப் பார்க்க முடியாதபோதும், கருத்தின் சாராம்சம் சரியாகும். ஆனால் இதை 'போதனாமுறையிலான' மிகைப்படுத்தல்களை தீர்வுகாண்பதற்கு லெனின் பயன்படுத்தியிருந்தால் மற்றும் தனது சொந்தக் கன்னையை சேர்ந்த நெருங்கிய தோழர்களிடையே வரவிருக்கும் அபிப்பிராய பேதங்களை தடுப்பதற்கு சொல்லியிருக்கக்கூடும், இதையே அவர் அன்று போல்ஷிவிக் கன்னைக்கு வெளியில் இருந்து கொண்டு சமரசவாதம் பற்றி போதித்துக் கொண்டிருந்த ஒரு தனிநபர் தொடர்பாகவும் பயன்படுத்தினார். ஆனால் பழைய மேற்கோள்களுக்கு இந்த தேவையான திருத்தம்செய்கிற ஒத்துழைப்பை அறிமுகம் செய்வதற்கு றடெக்கிற்கு ஒருபோதும் தோன்றவில்லை.
 

1922-ல் எனது 1905-ம் ஆண்டு என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதும்போது, ரஷ்யாவிலே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தொழிற்துறை முன்னேறிய நாடுகளையும் விட முன்னதாக வரும் வரக்கூடும் என்று பன்னிரண்டு வருடத்திற்கு முன்னர் எழுதிய தீர்க்கதரிசனம் நிரூபணமாகிவிட்டது என்று எழுதினேன். றடெக் நல்ல கவர்ச்சிகரமான உதாரணத்தைக் காட்டாமல் நான் இம் முன்கணிப்பை லெனினது மூலோபாயத்திற்கு எதிராக முன்வைத்தது போல காட்டுகிறார். இருந்தபோதும் நான் நிரந்தரப் புரட்சி தீர்க்கதரிசனத்தை போல்ஷிவிசத்தின் மூலோபாயத்தோடு பொருந்திய அடிப்படை ஆதாரங்களிலிருந்தே எழுதினேன் என்பதை புத்தகத்தின் முன்னுரையில் தெளிவாகக் காணலாம். 1917 தொடக்கத்தில் எமது கட்சியை "மீண்டும் ஆயுதபாணியாக்குவது" என்ற கட்டுரையின் அடிக்குறிப்பில் நான் கூறும்பொழுது, அந்நேரத்தில் லெனின் கட்சியின் முன்னைய பாதை 'தவறானது' என்று கண்டுகொண்டார் என்ற அர்த்தத்தில் நிச்சயமாக அல்ல. மாறாக லெனின், ரஷ்யாவுக்கு காலம் தாமதித்து வந்தபோதிலும் ஸ்ராலின், கமனேவ், நிக்கோவ், மொஸ்ரோல் மற்றும் பலரும் தொங்கிக் கொண்டிருந்த பழைய காலாவதியான சுலோகமான 'ஜனநாயக சர்வாதிகாரத்தை' நிராகரிக்கும்படி கட்சிக்கு படிப்பிப்பதற்கும் புரட்சியின் வெற்றிக்கும் அதிர்ஷ்டவசமாக போதுமானதாக இருந்தது. கட்சியை மீண்டும் ஆயுதபாணியாக்கலை பற்றிப் பேசும்போது கமனேவ் எரிச்சலைடைந்தார். ஏனெனில் இது அவர்களுக்கு எதிரான போராட்டமென்பது கிரகிக்கற்பாலது. ஆனால் றடெக்? அவருக்கு 1928-லே தான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை ஆயுதபாணியாக்குவதற்கு அவரே போராடும் போதுதான் வெறுப்பும் சீற்றமும் வளரத் தொடங்கியது.

இத்தோடு தொடர்புள்ள விடையத்தையும் றடெக் அனுமதிக்க முடியாத பாங்கில் துஷ்பிரயோகம் செய்கிறார். ட்ரொட்ஸ்கிக்கு எதிர்மாறாக லெனின் சரி என்பதை ட்ரொட்ஸ்கி ஏற்பாரா என்று கேட்கிறார். கட்டாயம் நான் அதை ஏற்றேன். இதை ஏற்பதிலே ஓர் இம்மியளவு இராஜதந்திரமும் இல்லை. லெனினது முழு வரலாற்றுப் பாதையையும், அவரது முழு தத்துவார்த்த நிலைப்பாடுகளையும், அவரது மூலோபாயத்தையும், அவர் எப்படிக் கட்சியை கட்டி வளர்த்தார் என்பதையும் நான் என் மனதில் பதித்துள்ளேன். இதை ஏற்றல் இன்று லெனினிசத்திற்கே எதிராகப் பாவிக்கும் ஒவ்வொரு தனித்தனி அபிப்பிராய பேதங்களும் பிரயோகிக்கற்பாலதாகி விடாது. 1926-ல் சினேவியேவோடு குழு சேர்ந்த காலத்தில் ட்ரொட்ஸ்கிக்கு எதிராக லெனின் சரி என்பதை நான் பிரகடனப்படுத்த வேண்டியது சினேவியேவுக்கு தேவையாக இருக்கிறது என்று றடெக் என்னை எச்சரித்தார். ஏனெனில் எனக்கெதிராக சினேவியேவ் தவறென்பதை மூடிமறைப்பதற்காக, கட்டாயமாக இதை நான் நல்ல முறையில் விளங்கியிருந்தேன். ஆதலாலேயே கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்று சபையின் 7-வது பிளீனத்தில் லெனினும், அவரது கட்சியும் வரலாற்று நோக்கில் சரி என்று கூறினேன். ஆனால் அதற்காக இன்றைய எனது விமர்சனங்களின் சரியானதன்மையை, லெனினிடமிருந்து மேற்கோள்களை பிடுங்கி மறைத்துக்கொள்வதன்மூலம் மூடிமறைக்க முடியாது. இன்று நான் துரதிர்ஷ்வசமாக இவ்வார்த்தையை றடெக்குக்கு சொல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன்.

நான் நிரந்தரப் புரட்சி தத்துவத்தில் உள்ள குறைகளை பற்றிப் பேசினேன். இவை முன்கணித்தல் பற்றிய பிரச்சினையாக இருக்கும்வரைக்கும் இவைகள் தவிர்க்க முடியாதவை. நிறைவேற்று சபையின் 7-வது பிளீனத்தில் ஒட்டுமொத்த எண்ணக்கருவை ட்ரொட்ஸ்கி மறுக்கவில்லை என்று புக்காரின் சரியாகவே அடித்துக் கூறினார். இதிலுள்ள 'குறைகள்' பற்றி நான் இன்னொரு தடவை விவரமாகப் பேசுவேன். அதில் நான் மூன்று புரட்சிகளின் அனுபவங்களையும், அவைகளை எவ்வாறு கம்யூனிச அகிலத்தில் தொடர்ந்த தேவைகளுக்கு பிரயோகிப்பது என்பதையும், குறிப்பாக கீழைத்தேசத்திற்கு பிரயோகிப்பது எப்படி என்பதையும் முயற்சிப்பேன். ஆனால் தப்பான அபிப்பிராயங்கள் ஏற்படுவதை தடுக்குமுகமாக நான் இங்கே சிலவற்றை சுருக்கமாகக் கூறுகிறேன்: அதிலே எவ்வளவு பலவீனங்கள் இருந்தாலும்கூட, எனது முந்திய படைப்புக்களில், பிரதானமாக விளைவுகளும் வாய்ப்புவளமும் (1906) என்பதில் முன்வைக்கப்பட்ட நிரந்தரப் புரட்சி தத்துவமானது, எல்லையில்லாத அளவிற்கு மார்க்கிசத்த்தின் உணர்வுடன் ஊடுருவி, அது ஸ்ராலினினதும் புக்காரினினதும் பின்னோக்கிய அறிவாற்றலையும் மட்டுமல்லாது றடெக்கினது அண்மைய எழுத்தையும் காட்டிலும் லெனினதும் போல்ஷிவிக் கட்சியினதும் வரலாற்று நிலைப்பாடுகளோடு நன்றாக நெருங்கியுள்ளது.

இதனால் புரட்சி பற்றிய எனது எண்ணக்கரு, எனது அனைத்து எழுத்துக்களிலும் ஒரேமாதிரி ஒரேசீராக இருக்கின்றன என்று நான் சொல்ல விரும்பவில்லை. நான் பழைய மேற்கோள்களை தேடுவதில் என்னை அர்ப்பணிக்கவில்லை. ஆனால் இன்று கட்சியின் பிற்போக்கு மற்றும் இழி பாசாங்கின் காலகட்டத்தால் நான் அதை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன். ஆனால் உண்மையான வாழ்க்கையோட்டத்தினை, நல்லதற்கோ கெட்டதற்கோ ஆய்வு செய்ய முயற்சித்தேன். 12 வருடகால (1905-1917) எனது புரட்சிகர எழுத்து வேலையில் மிக அழிவு நிறைந்த சூழ்நிலைகளை பற்றிய கட்டுரைகளும் போராட்டத்திலே மூலோபாயங்களை முரண்படுத்தும் தவிர்க்க முடியாதபடி முன்னுக்குத் தள்ளி வந்திருக்கும் கிளைக்கதை சூழல்களும், கிளைக்கதை அரசியல் சர்ச்சைகளின் மிகைப்படுத்தலும் கூட இருக்கும் கட்டுரைகளும் கூட உண்டு. உதாரணமாக முழுமையாகவே விவசாயிகளது புரட்சிகர பாத்திரத்தை சந்தேகிக்கும் கட்டுரைகளும், ஏகாதிபத்திய யுத்தத்திலே எதிர்கால ரஷ்ய புரட்சியை, 'தேசிய' புரட்சியாக தீர்மானிப்பதை மறுக்கும் கட்டுரைகளும், நான் இச்சிறப்புப் பெயர் ஐயத்திற்கு இடம்தரக்கூடியது என்று உணர்ந்தபோதும் இடம் பெற்றன. விவசாயிகளிடத்தில் இடம்பெறும் நிகழ்ச்சிப்போக்குகள் உள்பட, எங்களுக்கு ஆவல்தரும் வரலாற்று நிகழ்வுப் போக்குகள் முன்னைய அபிவிருத்தி மட்டும் அடைந்து கொண்டிருந்த பொழுதுதான நாட்களைவிட இப்போது நிறைவேறிவிட்டது என்பது மிகவும் புரிந்துகொள்ளக்கூடியது என்பது கட்டாயம் மறக்கப்படக்கூடாது. என்னை குறிப்பிட அனுமதியுங்கள், லெனின் -ஒரு கணமாவது விவசாயிகளது பிரச்சினையை அவர்களது பிரமாண்டமான வரலாற்றுப் பரிமாணத்தோடு கூடவே பார்க்க மறக்கவில்லை என்பதை நாம் எல்லோரும் அவரிடமிருந்து கற்றுக்கொண்டோம்- பெப்ரவரி புரட்சிக்கு பின்புகூட விவசாயிகளை பூர்சுவாக்களிடமிருந்து பிரித்து, பாட்டாளி வர்க்கத்தை சூழ வெற்றிகரமாக அணி திரட்டுவதென்பது உறுதியற்றிருந்தது கவனமாய் எண்ணிப்பார்க்கப்பட்டது. என்மீதான கடும் விமர்சகர்களுக்கு பொதுவாகச் சொல்வேன்: கால்நூற்றாண்டுகாலமாய் இன்னொருவரது செய்தித்தாள் கட்டுரைகளின் சம்பிரதாயபூர்வ முரண்பாடுகளை ஒருமணிநேரத்தில் தோண்டி எடுப்பது, ஒருவர் ஒரு வருடத்திற்கு அடிப்படை நிலைப்பாடுகளில் ஐக்கியப்பட்டிருந்தார் என்று பேணுவதை காட்டிலும் மிக எளிதானது.

இந்த அறிமுக வரிகளிலே முற்றிலும் சடங்குமுறையாக எண்ணிப் பார்க்க வேண்டிய இன்னொன்று மிஞ்சியிருக்கிறது: "நிரந்தரப் புரட்சித் தத்துவம் சரியானதல்ல - அதன் அடிப்படையிலே ட்ரொட்ஸ்கி பெருமளவு ஆட்களை அணிதிரட்டியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. ஆகவே இத்தத்துவம் தவறு எனப் புரிகிறது என்று றடெக் கூறுகின்றார்.

றடெக்கினது விவாதத்தைப் பொதுவான கூற்று என எடுத்துக் கொண்டால், இயங்கியலின் தடத்தைக் கூட கொண்டிருக்கவில்லை. இந்நிலைப்பாட்டிலிருந்து ஒருவர் பார்த்தாரானால் சீனப்புரட்சி தொடர்பாக எதிர்ப்பு கன்னையின் நிலைப்பாடோ, பிரித்தானிய விவகாரங்கள் பற்றிய மார்க்சினது நிலைப்பாடோ தவறாகும். கம்யூனிச அகிலத்தின் அமெரிக்க ஆஸ்திரிய சீர்திருத்தவாதிகள் தொடர்பான கொமின்டேர்னின் நிலைப்பாடோ - நாங்கள் விரும்பினால் -அனைத்து நாடுகளிலுமுள்ள சீர்திருத்தவாதிகள் தொடர்பானநிலைப்பாடோ தவறாகும்.

றடெக்கினது விவாதத்தைப் பொதுவாக "வரலாற்றுத் தத்துவார்த்த" கோணத்தில் பாராது தற்போது கலந்துரையாடிக் கொண்டிருக்கும் விடையத்திற்கு மாத்திரம் பிரயோகித்தோமானால் அது திரும்பி றடெக்கையே தாக்கும். அவரது விவாதத்திலே விளக்கமின்மை இருக்கலாம் என்பதே எனது அபிப்பிராயம், இன்னும் முக்கியமானது நிரந்தரப் புரட்சியின் நிலைப்பாடுகள் போல்ஷ்விக் கட்சியின் மூலோபாயத்தை முரண்படுத்தியது, மோதலில் நின்றது அல்லது அது திசை திரும்பிற்று என்பது போன்றவையாகும். அப்படியானால் இரண்டு கன்னைகள் உருவாக வேண்டிய ஆதாரங்கள் உண்டு. அதையே றடெக் நிரூபிக்க முற்படுகின்றார். பிரச்சினை பற்றிய கன்னை சார்ந்த வாத மிகைப்படுத்தல்கள் மற்றும் ஊக வலியுறுத்தல்கள் இருப்பினும், மாறாக நான் கூறுகிறேன். அடிப்படை மூலோபாய நிலைப்பாடு ஒரேமாதிரியானதே. அப்படியெனில் இரண்டாவது கன்னை எங்கிருந்து வர முடியும்? நிதர்சனத்தில், நான் முதலாவது புரட்சியில் போல்ஷிவிக்குகளோடு கையோடு கை கோர்த்துப் போராடினேன். மேலும் பின்பு, மென்ஷிவிக் ஓடுகாலிகளின் விமர்சனத்திற்கெதிராக சர்வதேசப் பத்திரிகையிலே இணைந்து இவ்வேலையை பாதுகாத்தேன். 1917 புரட்சியில் நான் லெனினோடு சேர்ந்து 'பழைய போல்ஷிவிக்குகளது', ஜனநாயக சந்தர்ப்பவாதத்திற்கு எதிராகப் போராடினேன். இன்று இப்பழைய போல்ஷிவிக்குகள் பிற்போக்கு அலையால் உயர்த்தப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களின் ஆயுததளவாடங்கள் நிரந்தரப் புரட்சிபற்றிய தூண்டில் இரைகளைக் கொண்டிருக்கின்றன.

கடைசியாக நான் ஒருபோதும் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை அடித்தளமாகக் கொண்டு ஒரு குழுவை உருவாக்குவதற்கு பிரயத்தனம் எடுக்கவில்லை. எனது உட்கட்சி நிலைப்பாடானது சமரசமானது, சில தருணங்களில் குழுசேர்தலுக்கு நான் முயற்சித்தேன் எனில், இம்மியும் வழுவாமல் இந்த அடிப்படையிலேயாகும். எனது சமரசமானது ஒருவித சமூகப்புரட்சிகர அழிவு வாதத்திலிருந்து பாய்ந்தது. வர்க்கப் போராட்டத்தின் தர்க்கமானது இரண்டு கன்னையையும் ஒரு புரட்சிகர வழிக்கு இட்டுச்செல்லும் என்று நான் நம்பினேன். இந்நாள் வரைக்கும் லெனினது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை எனக்குத் தெளிவில்லாதிருந்தது. அவரது தத்துவார்த்த வரையறையில் சமரசத்திற்குப் போகாத தன்மையும், அவசியமெனில் உண்மையான புரட்சிக் கட்சியின் உட்கருவை காய்ச்சியடித்து உருக்கி ஒன்றாய் இணைப்பதற்காக மற்றும் கெட்டியாக்குவதற்காக பிளவுபடுவதையும் நான் விளங்கிக் கொள்ளவில்லை. 1911-ல் லெனின் இது பற்றி எழுதினார்:

"சமரசமவாதமானது 1908-1911 எதிர்ப்புரட்சிக் காலங்களின் ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியின் வரலாற்றுக் கடமையின் சாராம்சத்தோடு உறுதியாய் பிணைந்திருந்த மனோநிலை, முயற்சிகள், போக்குநிலை என்பவற்றின் கூட்டு மொத்தமாகும். இக்காலங்களில் எத்தனையோ சமூக ஜனநாயகவாதிகள் மிகவும்¢ வித்தியாசமான இலட்சியங்களோடு தொடங்கியவர்கள் சமரசத்தினுள்ளே விழுந்தார்கள். ட்ரொட்ஸ்கி மற்றெல்லோரையும் விட இச்சமரசத் தன்மையை வெளிப்படுத்தினார் அவர் மட்டுந்தான் இப்போக்குக்கு ஒரு தத்துவார்த்த அடிப்படையை கொடுக்க முற்பட்டார். (XI பக்கம் 2, பக்கம் 371) (பிற்குறிப்பு சமரசவாதிகள் அல்லது யோக்கியர்களின் புதிய கன்னை 4-வது பதிப்பு XVI, 227, தேர்ந்தெடுத்த படைப்பு ஆங்கிலப் பதிப்பு IV, 93)

எவ்விலை கொடுத்தாவது ஐக்கியத்திற்கு பாடுபடுதல், இதன் பிரகாரம் நான் என்னை அறியாமலும், தவிர்க்க முடியாமலும் மென்ஷிவிசத்தில் மத்திய வாதப்போக்கை எடுத்தேன். எனது மும்முறை திரும்பச்செய்யப்பட்ட முயற்சியிலும் கூட நான் மென்ஷிவிக்குகளோடு ஒரு பொது வேலைக்கு வர முடியாமற் போனேன். என்னால் அவர்களோடு ஒரு பொது முடிவிற்கு வர முடியவில்லை. இருந்தபோதும் அந்நேரத்தில் சமரசவாத நிலைப்பாடானது மேலும் போல்ஷிவிசத்தோடு கூரான முட்டி மோதுதலுக்கே கொண்டு வந்தது. மென்ஷிவிசத்தோடு ஒப்புநோக்குமிடத்து, லெனின் சமரசவாதத்தை ஈவிரக்கமின்றி நிராகரித்தார். நிராகரிப்பதை தவிர்த்து வேறொன்றையும் அவரால் செய்ய முடியவில்லை. சமரசவாத மேடையில் இருந்து கொண்டு எக்கன்னை போக்கையும் உருவாக்க முடியாதென்பது வெளிப்படையானது.

இதிலிருந்து பெறும் படிப்பினை: கேடுகெட்ட சமரசத்திற்காக ஓர் அரசியற் போக்கைப் பலவீனப்படுத்துவதோ, உடைப்பதோ அனுமதிக்க முடியாதது மாத்திரமல்ல, அழிவு நிறைந்ததுமாகும். இடம் வலமாய் வளைந்து நெளிந்து இடது ஓட்டத்தின் போது மையவாதத்தைப் பூசி மெழுகுவதும் அனுமதிக்க முடியாது. உண்மையான புரட்சிகர சிந்தனையுடைய சகதோழர்களைப் பற்றி இல்லாது பொல்லாது கூறுபவர்களும், அபிப்பிராய பேதங்களை பெரிதாக்கி கூறுபவர்களுமாகிய மத்தியவாதிகளை குய்யோ முறையோ என்று துரத்துவது அனுமதிக்கமுடியாது. ட்ரொட்ஸ்கியின் உண்மையான தவறுகளின் உண்மையான படிப்பினவுகள் இதுதான். இவை மிக முக்கியமானவை. அவர்கள் தங்களது முழுச் சக்தியையும் இப்போதும் பாதுகாக்கின்றார்கள். இரத்தினச் சுருக்கமாக றடெக் அவைபற்றி மீண்டும் யோசிக்க வேண்டும்.

ஸ்ராலின் தனக்கே சொந்தமான தத்துவார்த்த குரோதத்தினால், ட்ரொட்ஸ்கிக்கு தெரியாது, லெனின் தனது இறுதி நாட்களில் நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கு எதிராகப் போராடினார் என கூறினார். ஆனால் அது ட்ரொட்ஸ்கியை கவலைக்குள்ளாக்கவில்லை. (பிராவ்தா 262 நவம்பர் 12, 1926) (பின்குறிப்பு ஸ்ராலினது படைப்பு பாகம் 8 பாகம் 350) இது நேர்மையற்றதும் விசுவாசமற்றதுமாகும். இது ஸ்ராலினது யதார்த்தம் பற்றிய கேலிக்கூத்தாகும். லெனின் ஒரு தடவை கம்யூனிஸ்ட்டுகளுக்கு இடையேயுள்ள அபிப்பிராய பேதங்களானது சமூக ஜனநாயகவாதிகளோடு உள்ள பேதங்களிலும் வேறானதென்று விளங்கப்படுத்தினார். அக்கருத்து வேறுபாடுகளை பற்றி அவர் எழுதினார். கடந்த காலத்தில் போல்ஷிவிசமும் கூட துருவி ஆராய்ந்தது. ஆனால் "அது ஆட்சியைக் கைப்பற்றி சோவியத் குடியரசை படைத்தவுடன் போல்ஷிவிசத்திற்கு அண்மித்திருந்த சிறப்பான சோசலிச ஓட்டங்களின் சிறந்தவற்றை, தன்னைநோக்கி இழுத்துக் கொண்டதையும் , ஐக்கியப்பட்டதையும் நிரூபித்துக் காட்டியது (xvi p.. 333) (பின்குறிப்பு: இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மன் கம்யூனிஸ்ட்டுக்களுக்கு வாழ்த்துக்கள், 4-ம் பதிப்பு XXX 37)
 

லெனின் இவ்வரிகளை எழுதும்போது, அவரது உள்ளத்தில் சோசலிச சிந்தனையின் அண்மித்த ஓட்டம் என்பது என்னவாக இருந்தது? மாட்டினோவ் அல்லது கூசின்னென்னா அல்லது காசின், தெல்மன், சிமெனால் போன்றோரா? லெனினுக்கு, இவர்கள் அண்மித்த திறமான ஓட்டமாக தென்பட்டார்களா? எனது போக்கை தவிர்ந்த அல்லது நான் பிரதிநிதித்துவப்படுத்திய அடிப்படை பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை போன்றவை தவிர வேறென்ன போக்கு போல்ஷிவிசத்திற்கு அண்மித்திருந்தது? றோசா லுக்சம்பேர்க் கூட போல்ஷிவிக் அரசாங்கத்தின் விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக பின்வாங்கியிருந்தார். எப்படியிருந்தபோதும் இது தொடர்பாக எனக்கு ஒரு சிறிய சந்தேகமும் இருக்கவில்லை. விவசாயிகள் சட்டத்தை எழுதும்போது, நான் பென்சிலும் கையுமாக லெனினோடு மேசையில் இருந்தே அதை எழுதினோம். எம்மிருவரது கருத்துப் பரிமாறல்கள் ஒரு டஜனுக்கு மேலான சிறு குறிப்புரைகளோடு, அவற்றின் சாராம்சம் பின்வருமாறு: வைத்த அடி முரண்பாடான ஒன்றாகும். ஆனால் வரலாற்று ரீதியாக இவை தவிர்க்க முடியாதவை. பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசின் கீழும், உலகப் புரட்சியின் அளவிலும் இவைகளைச் சீர்ப்படுத்திக் கொள்ளலாம், அதற்குக் கால அவகாசம் தேவை. விவசாயிகள் பிரச்சினை சம்மந்தமாக நிரந்தரப் புரட்சித் தத்துவத்துக்கும் லெனினது இயங்கியலுக்கும் இடையில் அடிப்படை விரோதம் இருந்ததென்றால், றடெக் ஏன் புரட்சி அபிவிருத்தி அடையும் நாட்களில் என்னைக் கண்டிக்கவில்லை என்பதை எவ்வாறு விளங்கப்படுத்துவார். 1917-ல் விவசாயிகள் பிரச்சினை சம்மந்தமாக பெரும்பான்மையான போல்ஷிவிக் தலைமைகள் குழம்பியதுபோல நான் இம்மியளவும் குழம்பவில்லை. பெப்ரவரி புரட்சியின் பின்பு, இன்றைய ட்ரொட்ஸ்கிச விரோத தத்துவாசிரியர்களும், அரசியல்வாதிகளும் சினோவியேவ், கமனேவ், ஸ்ராலின், றிக்கோன் மொல்ரோவ், போன்றோர் கடைசியாள் வரைக்கும் கேவலமான ஜனநாயக நிலைப்பாட்டை வகித்தார்களே அன்றி பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை வகிக்கவில்லை என்ற நிதர்சன உண்மைக்கு எப்படி விளக்கமளிக்கப் போகிறார்? இன்னும் ஒரு தடவை: போல்ஷிவிசம் அதற்கு அருகாமையிலுள்ள மார்க்சிச ஓட்டத்தின் அருமையான மூலங்களென்று லெனின் குறிப்பிட்டது எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் ஆகும்? கடந்த கால கருத்து முரண்பாடுகள் பற்றி லெனின் வரைந்த ஐந்தொகையை கொண்ட இந்த மதிப்பீடு, எவ்வகையிலும் சமரசம் செய்ய முடியாத இரண்டு மூலோபாய நிலைப்பாடுகளாக அவர் பார்க்கவில்லை என்பதைக் காட்டவில்லை?

நவம்பர் 1917 (14) 1 பெட்ரோகிராட் காரிய சபையின்[3] கூட்டத்தின் போது, லெனினது பேச்சு இது சம்மந்தப்பட்ட வகையில் மிகப் பெறுமதியாகும். அங்கே மென்ஷிக்குகளோடும் சோசலிசப் புரட்சியாளர்களோடும் உடன்பாட்டுக்கு வரமுடியுமா என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது. கூட்டரசாங்கத்தின் ஆதரவாளர்கள் 'ட்ரொட்ஸ்கிசத்தின்' மேல் சாடையாக குறிப்பிடுவதற்கு மிகக் கோழைத்தனமாக, அங்கே கூட பெருமுயற்சிசெய்தார்கள். அப்போது லெனின் எவ்வாறு விடையிறுத்தார்?

"உடன்பாடா? நான் அது பற்றி கரிசினையாகப் பேசியதும் கிடையாது, ட்ரொட்ஸ்கி எப்போதோ ஐக்கியத்திற்கான சாத்தியமின்மை பற்றிக் கூறினார். ட்ரொட்ஸ்கி அதை விளங்கிவிட்டார். அதை அவர் விளங்கியபின் அவரிலும் சிறந்த போல்ஷிவிக் கிடையாது."

லெனினது அபிப்பிராயத்தின்படி, என்னை போல்ஷிவிசத்திலிருந்து பிரித்தது நிரந்தரப் புரட்சியல்ல மறா£க சமரசவாதமாகும். மென்ஷிவிசத்தோடு ஏன் ஐக்கியப்பட முடியாததென்பதற்கான விளக்கமே, நான் 'சிறந்த போல்ஷிவிக்' ஆவதற்கு தேவைப்பட்டது
 

றடெக்கின் எழுந்தமான குணாம்சம், எவ்வாறு நிரந்தரப் புரட்சி பற்றிய பிரச்சினையை விளங்க முற்பட்டது? விளக்கத்தின் ஒரு கூற்றைக் கொண்டிருக்கிறேன் என நம்புகிறேன். 1916 வாக்கில் நான் றடெக்கினது கட்டுரையை வாசித்தபோது, அவருக்கு நிரந்தரப் புரட்சியோடு உடன்பாடு இருப்பதைக் கண்டேன், ஆனால் அது புக்காரினது விளக்கத்தை ஒத்தது. அதன்படி அதாவது ரஷ்யாவில் பூர்சுவா புரட்சி முடிந்துவிட்டது. பூர்சுவாக்களின் புரட்சிகரப் பாத்திரம் முடிந்தது மாத்திரமல்ல, ஜனநாயக சர்வாதிகாரமென்ற சுலோகத்தின் வரலாற்றுப் பாத்திரமும் கூடவே முடிந்தது. ஆகவே பாட்டாளி வர்க்கம் தூய்மையான சோசலிச பதாகையோடு ஆட்சியைக் கைப்பற்ற முன்னேறலாம். றடெக் அந்நேரத்தில் புக்காரினிச பாணியில் எனது நிலைப்பாட்டை விளக்கிக்காட்டினார், அல்லாவிடில் அவர் புகாரினுடனும் என்னுடனும் ஒரே நேரத்தில் அவரது ஐக்கியத்தை அறிவித்திருக்க முடியாது. இதுவும் கூட லெனின் தான் சேர்ந்து வேலை செய்த றடெக்கிற்கும் புக்காரினுக்கும் எதிராக ஏன் வாதத்தில் ஈடுபட்டார் என்பதை விளக்கும். அவர்கள் ட்ரொட்ஸ்கியின் புனைப்பெயரின் கீழ் தோன்றுவதாகக் காணப்பட்டனர். (றடெக் தனது கட்டுரையில் இதனையும் ஒப்புக்கொள்கிறார்). இதனோடு இன்னொன்று எனக்கு ஞாபகம் வருகிறது. புக்காரினைப் போன்று யோசிப்பவரான, சளைப்பில்லாமல் வரலாற்று விடையங்களுக்கு கெட்டித்தனமாக மார்க்கிச முலாம் பூசுபவரான M. N. போக்ரோவ்ஸ்கி (M. N. Pokrovsky)-யோடு நான் பாரிசில் பேசியபோது அவரது "நிரந்தரப் புரட்சியோடான" வஞ்சனையான உடன்பாடு பற்றி என்னைக் கவனமாக இருக்கும்படி ஆக்கினார். அரசியலிலே போக்ரோவ்ஸ்கி ஒரு கடேற் விரோதியாக இருந்தார். இதுவே அவர் போல்ஷிவிசத்தில் நேர்மையாக நம்பிக்கை கொள்ள வைத்தது.

1924-1925 வரை றடெக், 1916 வாக்கில் புக்காரினது நிலைப்பாட்டின் கருத்தியல் நினைவூட்டல்களுடனேயே இருந்தார். அதில் அவர் என்னுடைய நிலைப்பாட்டுடன் தொடர்ந்து அடையாளம் காட்டிக் கொண்டார். சரியாக, அவர் தனது எதிர்காலமற்ற நிலைப்பாட்டால் ஏமாற்றமடைந்து, அவசரமாக லெனினை வாசிக்க முற்பட்டார். அப்போது றடெக்கினது எழுத்து என் நிலைப்பாட்டிலிருந்து 180 பாகையில் வேறுபட்டது. இது நடக்கக் கூடியது. ஏனெனில் இதுவே றடெக்குக்கு உரித்தான குணாம்சமாகும். 1923-25 வரையிலான காலங்களில் புக்காரின் தன்னைத்தானே தலைகீழாக மாற்றினார். அவர், தனது அதீத இடதுசாரித்தனத்திலிருந்து சந்தர்ப்பவாதியாக மாறியதோடு எனக்கு ஏதுவாக தந்த தனது கடந்த காலப் பங்களிப்பைக் கூட "ட்ரொட்ஸ்கிசம்" என்று சொல்லிக் கைகழுவி விட்டார். எனக்கெதிரான பிரச்சாரத்தின் முதற் காலகட்டத்தில் நான் அவரது கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்க நிர்ப்பந்திக்கப்பட்டேன். அப்போது, இவைகளை அவர் எங்கே பெற்றார்? என அடிக்கடி என்னை நானே கேட்பதுண்டு. அதை அவர், தனது கடந்த கால எழுத்துக்களிலிருந்து பெற்றார் என்பதை சீக்கிரமே ஊகித்தேன். இவ் உளவியல் அடிப்படையை, நேற்று நிரந்தரப் புரட்சியின் ஆதரவாளராக இருந்து, இன்று அதன் எதிர்ப்பாளராக மாறிய றடெக்கிலே காணமுடியவில்லை. இந்த கற்பிதங்களை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் வேறொரு காரணங்களையும் என்னால் கண்டுகொள்ள முடியவில்லை.

வைனை எடுத்தால் அதைக் கட்டாயம் குடிக்க வேண்டுமென்று ஒரு பிரெஞ்சு பழமொழியுண்டு. ஆதலால் நாம் பழைய சுலோகங்களை தேடிப்பிடிக்கும் நீண்ட பயணத்தினுள் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறோம். நான் அதன் எண்ணிக்கையை இயலுமானவரை குறைக்க முயற்சிக்கிறேன். இருந்தாலும் அவைகள் அதிகமானவைதான். இப்பழைய மேற்கோள்களிடையே கட்டாயப்படுத்தப்பட்ட எனது துருவித்தேடல்களில் அவற்றின் இழைகள் தற்போதைய கொளுந்துவிட்டெரியும் பிரச்சினைகளுடன் எவ்வாறு பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன என்பதுமே எனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தும்.

பிற்குறிப்பு:

1. This prediction has in the meantime been fulfilled.—L.T.[RETURN TO TEXT] ]

2. 1909-லே லெனின் ஒரு கட்டுரையிலே "விளைவுகளும் வாய்ப்புவளங்களும்" பற்றிய மேற்கோளை மாட்டோவுக்கு எதிராகக் குறிப்பிட்டுள்ளார். இம்மேற்கோளை லெனின் இரண்டாம் பேர்களிடமிருந்து எடுக்கவில்லை என்று நிறுவுவது இலகுவாகும். இதை அவர் மாட்டோவிடமிருந்தே பெற்றார். இவ்வழிகளில் மாத்திரமே அவரது சில விமர்சனங்கள் என்மேல் தொடுக்கப்பட்டன. இவையெல்லாம் தப்பபிப்பிராயங்களால் ஏற்பட்டன என்பதை இலகுவாகக் கூறலாம்.

1919-ன் அரசாங்க பிரசுராலயம் எனது "விளைவுகளும் வாய்ப்பு வளங்களும்" என்ற கட்டுரையை சிறு புத்தகமாக வெளியிட்டது. லெனினது முபப்படைப்புக்களின் வியாக்கியானத்தின்படி, "நிரந்தரப் புரட்சி" தத்துவமானது அக்டோபர் புரட்சியின் பின்பு இப்பொழுதே அது விலைமதிப்புள்ளதாகத் தெரிகிறது. நாம் சிறிது பின்னோக்கிப் பார்ப்போமானால் அது ஓரளவுக்குச் சரியாகவே தென்படும். ஏறத்தாழ இதே நாட்களில், லெனினது முழுப்படைப்புக்களின் வியாக்கியானமும் "நிரந்தரப் புரட்சித் தத்துவமும்" இப்பொழுது அது அக்டோபர் புரட்சியின் பின்பே விசேஷமாக விலைமதிப்புள்ளதாகும். லெனின் 1919-ல் எனது "விளைவும் வாய்ப்புவளமும்" என்ற புத்தகத்தை வாசித்தாரா? அல்லது மேலோட்டமாக தட்டிப்பாத்தாரா? இதைப்பற்றித் திட்டவட்டமாக என்னால் எதையும் கூற முடியாது. அந்நாட்களில் நான் தொடர்ச்சியாக பயணம் செய்து கொண்டிருப்பேன். மொஸ்கோவுக்கு வந்தால் சில நாட்களே தங்குவேன். லெனினை சந்திக்கும் நேரங்களில் உள்நாட்டு யுத்தத்தின் உச்சக்கட்டத்தில் தத்துவார்த்த பிளவுகளின் மிச்ச சொச்சங்கள் எனது மனதில் உதிப்பது கிடையாது. ஆனால் அந்நாட்களில் A. A. Joffe , லெனினோடு "நிரந்தரப் புரட்சித் தத்துவம்" பற்றிக் கலந்துரையாடியுள்ளார். யிஷீயீயீமீ இதைப்பற்றி தனது மரணத்தின்போது எனக்கு எழுதிய பிரியாவிடை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். (பார்க்க: எனது வாழ்க்கை) A. A. Joffe இன் கூற்றின்படி 1919-ல் லெனின், முதன் முதலாக எனது "விளைவும் வாய்ப்புவளமும்" என்ற புத்தகத்தை அறிந்திருக்கிறார் என்றும் அதன் வரலாற்று ரீதியான சரியான முன்கணிப்பை அங்கீகரித்திருக்கிறார் என்றும் கூறமுடியுமா? இங்கே நான் எனது உளவியல் அபிப்ராயத்தையே கூறமுடியும். அப்பிரச்சினைகளின் முட்டி மோதல்களின் சாராம்சத்தின் மதிப்பீட்டை பொறுத்தே நம்பும் தைரியம் இருக்கிறது. A. A. Joffe இன் கூற்றின்படி, எனது முன்கணிப்பு சரியென்பதை லெனின் உறுதிப்படுத்தியிருந்தார். லெனினின் பின் சகாப்தத்தில் எவரது தத்துவம் அதற்குப் பிரதியீடாகும் என்ற பிரச்சினையில் ஒருவனுக்கு அது மதிப்பிடமுடியாத ஒன்றாகவே தோன்றும். மற்றப்பக்கத்தில் பார்க்கும்போது, புரட்சியின் அபிவிருத்தி தொடர்பாக லெனினது சிந்தனையின் பரிணாம வளர்ச்சியை பிரதிபலிக்கும் யாராவது தாமே விளங்கிக் கொள்வார்கள். லெனின் 1919-ல் நிரந்தரப் புரட்சி தத்துவம் பற்றி ஒரு புதிய மதிப்பீடொன்றை கொண்டிருந்தார் அல்லது அப்படியொரு மதிப்பீட்டைக் கொண்டிருக்காமல் இருக்க முடியாதிருந்தார். அவர்கள், எனது நிலைப்பாடு பற்றி ஒரு தடவை பூரணமாக ஆராயாது அக்டோபர் புரட்சிக்கு முந்திய நாட்களில் அவர் கூறிய விடையங்களை தொடர்ச்சியற்ற முறையில் ஆங்காங்கே மேற்கோளின் அடிப்படையில் பார்ப்பார்களானால், லெனின் சில விடையங்களை நழுவவிட்டதாயும் அவர் தான் கூறிய விடையங்களை தானே முரண்படுத்தியதாயுமே காண்பார்கள்.

1919-ல் எனது முன்கணிப்புக்களை சரியென உறுதிப்படுத்தும் வகையில் லெனினுக்கு, எனக்கு முரணாக எதையும் கூற வேண்டியிருக்கவில்லை. இது வரலாற்று வளர்ச்சியில் இவரது நிலைப்பாடுகளும் கருத்திற் கொள்ளப்பட வேண்டியவை என்பதற்கு போதுமான சான்றுகளும், லெனின் எப்போதும் சொல்லும் சூத்திரமான "ஜனநாயக சர்வாதிகாரம்" என்பதன் திட்டவட்டமான உள்ளடக்கத்தை இங்கே மீண்டும் சொல்லத் தேவையில்லை. இது வெறுமனே உத்தேசிக்கும் சூத்திரமாக ஊற்றெடுக்கவில்லை. அது நிதர்சனமான வர்க்க உறவுகளின் மாற்றங்களின் ஆய்வில் இருந்து பிறந்தது. அது தந்திரோபாய, ஸ்தாபன உள்ளடக்கமாக வரலாற்று டாப்பிலே பதியப்பட்டு அடிப்படைப் புரட்சிகர யதார்த்தவாதத்தின் மாதிரி ஆனது. தந்திரோபாயங்கள் சம்பந்தமாகவும், ஸ்தாபனம் சம்பந்தமாகவும் லெனினுக்கு முரண்பட்ட நிலைப்பாடுகளில் அதிகமாக, லெனினது பக்கத்தில் சரி இருந்தது. அதனாலேயே எனது வரலாற்று ரீதியான சரியான தீர்க்க தரிசனங்களைப் பற்றி நான் பெரிதாக அக்கறை கொள்ளவில்லை. இவைகள் எவ்வளவு காலத்திற்குத் தோன்றுகிறதோ அன்று மட்டும் அவை வரலாற்றின் மிச்சசொச்சங்களே. நான் இப்பிரச்சினை பற்றி இந்நேரத்தில் ஏன் கூற நிர்ப்பந்திக்கப்பட்டேன்? இழிபாசாங்கினர்கள், நிரந்தரப் புரட்சித் தத்துவம் பற்றி விஷமத்தனமாக விமர்சிப்பதாலும் முழுச் சர்வதேசிய வாதத்திற்கெதிரான தடைகளை வளர்த்து வருவதாலும் அதன் நேரடிப் பலனாக சீனப்புரட்சியை கெடுத்ததானாலேயுமாம் -லியோன் ட்ரொட்ஸ்கி [RETURN TO TEXT ]

3. அறிந்தவாறு, இந்த வரலாற்றுத் தொடரின் பெரும்பகுதியைக் கொண்ட நிமிடங்கள் ஸ்ராலினின் சிறப்பு ஆணையின் பேரிலான விழாக்கால புத்தகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன மற்றும் இன்றோ கட்சிக்கு ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. [RETURN TO TEXT ]


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved