WSWS :Tamil : Ëôè‹

MATERIALISM AND EMPIRIO-CRITICISM

Chapter One: The Theory of Knowledge of Empirio-Criticism and of Dialectical Materialism. 

êìõ£îº‹ ÜÂðõõ£î Mñ˜êùº‹

அத்தியாயம் 1: அனுபவவாத விமர்சனத்தின் அறிவு பற்றிய தத்துவமும் இயங்கியல் சடவாதமும்

Use this version to print | Send feedback

1. Sensations And Complexes Of Sensations
1. புலனுணர்ச்சிகளும் புலனுணர்ச்சித் தொகுதிகளும்

மாஹ் மற்றும் அவெனாரியுசின் அறிவு பற்றிய தத்துவத்தின் அடிப்படை வாத மூலக்கூறுகள் அவர்களுடைய ஆரம்பகால மெய்யியல் நூல்களில் ஒளிவு மறைவு இல்லாமலும் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கப்பட்டிருக்கின்றன. நாம் இப்பொழுது இந்த நூல்களை எடுத்துக்கொள்வோம். இந்த எழுத்தாளர்கள் பிற்காலத்தில் செய்த திருத்தங்களையும் செப்பங்களையும் பரிசோதிப்பதை பிறிதொரு சமயத்துக்கு தள்ளி வைப்போம்.

"விஞ்ஞானத்தின் பணியானது பின்வருவனவாகவே இருக்க முடியும்: 1. கருத்துக்களின் தொடர்பு பற்றிய விதிகளை தீர்மானித்தல் (உளவியல் Psychology). 2. புலனுணர்ச்சிகளின் தொடர்பு பற்றிய விதிகளைக் கண்டுபிடித்தல் (இயற்பியல் Physics). 3. புலனுணர்ச்சிகளுக்கும் கருத்துக்களுக்கும் இடையிலுள்ள தொடர்பின் விதிகளை விளக்குதல் (உளவியல் - இயற்பியல்)"[1] என்று ஏர்ன்ஸ்ட் மாஹ் (Ernst Mach) 1872ல் எழுதினார். இது மிகத் தெளிவாகவே இருக்கிறது.

இயற்பியலின் ஆய்வுப் பொருள் புலனுணர்ச்சிகளுக்கு (Sensations) இடையிலுள்ள தொடர்பே தவிர நமது புலனுணர்ச்சிகள் பிம்பமாக உள்ள பொருட்களுக்கு அல்லது உருவங்களுக்கு இடையிலான தொடர்பு அல்ல. 1883ல் மாஹ் இயந்திரவியல் என்ற நூலில் இதே கருத்தை மறுபடியும் எழுதுகிறார்: "புலனுணர்ச்சிகள்'' 'பொருட்களின் குறியீடுகள் அல்ல'. பொருள் எனப்படுவது ஒப்பீட்டளவிலான ஸ்திரத்தன்மையை கொண்டிருக்கும் ஒரு சிக்கலான புலனுணர்வுகளின் மனத்தளவிலான குறியீடு எனலாம். உலகின் உண்மையான மூலக்கூறுகள் பொருட்கள் (உருவங்கள்) அல்ல, மாறாக நாம் வழக்கமாக புலனுணர்ச்சிகள் எனக்கூறும் வண்ணங்கள், ஒலிகள், அழுத்தங்கள், வெளிகள், காலங்கள் ஆகும்."[2]

அவர் பன்னிரண்டு வருடங்களாக செய்த "ஆழ்ந்த சிந்தனையின்" பலனாகிய "மூலக்கூறுகள்" என்ற சொல்லைப் பற்றி நாம் பின்னர் எழுதுவோம். பொருட்கள் அல்லது உருவங்கள் புலனுணர்ச்சிகளின் தொகுதிகள் என்று மாஹ் தெளிவாகக் கூறுகிறார் என்பதையும் புலனுணர்ச்சிகள் பொருட்களின் "குறியீடுகள்" (பொருட்களின் பிம்பங்கள் அல்லது பிரதிபலிப்புகள் என்று கூறுவது அதிகத் துல்லியமாக இருக்கும்) எனக் கூறுகின்ற எதிரிடையான தத்துவத்துக்கு எதிராக தன்னுடைய சொந்த மெய்யியல் நோக்கை மிகத் தெளிவாக நிறுவுகிறார் என்பதையும் நாம் இங்கே குறித்துக் கொள்வோம். பின்னால் கூறப்படும் தத்துவம், மெய்யியல்வாத சடவாதம் (philosophical materialism) எனப்படும். உதாரணமாக, சடவாதியான பிரெடெரிக் ஏங்கெல்ஸ் மார்க்சுடன் ஒத்துழைத்தவர், அவருடன் மார்க்சிசத்தை நிறுவியவர் என்பது தெரியாத விஷயமல்ல- தன்னுடைய நூல்களில் பொருட்களையும் அவை மனதில் ஏற்படுத்தும் சித்திரங்கள் அல்லது பிம்பங்களை (Gedanken-abbilder) பற்றியும் தொடர்ச்சியாகவும் விதிவிலக்கில்லாமலும் எழுதுகிறார்" இந்த மனோ ரீதியான பிம்பங்கள் (Mental images) பிரத்தியேகமாய் புலனுணர்ச்சிகளில் இருந்தே தோன்றுகின்றன என்பது வெளிப்படையாகும். "மார்க்சிச மெய்யியலின்" இந்த அடிப்படையான கருத்துநிலை அதைப் பற்றிப் பேசுகின்ற ஒவ்வொருவருக்கும் குறிப்பாக, இந்த மெய்யியலின் பெயரால் புத்தகம் எழுதுகின்ற, வெளியிடுகின்ற எந்த நபருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் எமது மாஹியவாதிகளால் ஏற்பட்டிருக்கும் அசாதாரணமான குழப்பத்தின் காரணமாக பொதுவாக தெரிந்த விஷயங்களை திரும்பச் சொல்லுவது அவசியமாகிறது. டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலின் முதல் பகுதியில் "...பொருட்களும் அவற்றின் மன பிம்பங்களும்..." என்று படிக்கிறோம்; அல்லது மெய்யியல் பகுதியில் முதல் பத்தியில் பின்வரும் பகுதியைப் படிக்கிறோம்: "ஆனால் சிந்தனை இந்த அடிப்படைக்கோட்பாடுகளை" (அதாவது, அனைத்து அறிவின் அடிப்படைக் கோட்பாடுகளை) "எங்கேயிருந்து பெறுகிறது? அதற்குள்ளேயே இருந்தா? இல்லை...இந்த வடிவங்களைச் சிந்தனை ஒருபோதும் சுயமாக தன்னிடமிருந்து படைக்க முடியாது, பெற முடியாது ஆனால் வெளிப்புற உலகத்திலிருந்து மட்டுமே இயலும்... (சடவாதியாக இருக்கக் கூடிய, ஆனால் சடவாதத்தை முரணில்லாதபடி பின்பற்ற இயலாத டூரிங் கருதுகிறவாறு) இந்தக் கோட்பாடுகள் ஆராய்ச்சியின் தொடக்க நிலை அல்ல, அதன் இறுதி விளைவே; இயற்கைக்கும் மனித குல வரலாற்றுக்கும் அவை கையாளப்படுவதில்லை, அவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன; இந்தக் கோட்பாடுகளுடன் பொருந்துவது இயற்கையும் மனித சமுதாயத்தின் செயற்களமும் அல்ல, இயற்கை மற்றும் வரலாற்றோடு பொருந்துகின்ற அளவுக்கு மட்டுமே இந்தக் கோட்பாடுகள் சரியானவை. அது ஒன்று மட்டுமே விஷயத்தை பற்றிய சடவாத கருத்தோட்டமாகும். திருவாளர் டூரிங்கின் இதற்கு மாறான கருத்தோட்டம் கருத்துவாதமாகும்; அது பொருட்களை முற்றிலும் தலைகீழாக வைப்பதுடன், கருத்துக்களிலிருந்து மெய்யான உலகத்தை உருவாக்குகிறது" (அதே நூல், p.21). இந்த "ஒரேயொரு சடவாத கருத்துருவை" ஏங்கெல்ஸ் எல்லா இடங்களிலும், எந்த விதிவிலக்குமே இல்லாமலும் கையாளுகிறார்; டூரிங் சடவாதத்தில் இருந்து மிகச் சிறிதளவு விலகி கருத்துவாதத்துக்கு போனாலும், அவரை இரக்கமில்லாமல் தாக்குகிறார். டூரிங்குக்கு மறுப்பு மற்றும் லூத்விக் ஃபாயர்பாக் என்ற நூல்களை மிகச் சிறிதளவு கவனத்தோடு படிக்கின்ற எவருமே பொருட்களையும் மனித மூளையில், எமது நனவில், சிந்தனையில், இதரவற்றில் அவற்றின் பிரதிபலிப்புகளையும் பற்றி ஏங்கெல்ஸ் எழுதியிருப்பதற்கு ஏராளமான உதாரணங்களை காண முடியும். புலனுணர்ச்சிகள் அல்லது கருத்துக்கள் பொருட்களின் "குறியீடுகள்" என்று ஏங்கெல்ஸ் கூறவில்லை; ஏனென்றால் முரணில்லாத சடவாதத்தின்படி ''குறியீட்டுக்கு" பதிலாக "பிம்பம்", படங்கள் அல்லது பிரதிபலிப்பு என்று இங்கே கூறவேண்டும். உரிய இடத்தில் நாம் இதை விளக்கமாக எடுத்துக் காட்டுவோம். ஆனால் இங்கேயுள்ள பிரச்சினை சடவாதத்தை பற்றி இந்த அல்லது அந்த வரையறை அல்ல - ஆனால் சடவாதத்திற்கும் கருத்துவாதத்துக்கும் இடையே உள்ள எதிர்நிலை, மெய்யியலில் இரண்டு அடிப்படையான போக்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாடே பிரச்சனையாகும். நாம் பொருட்களில் இருந்து புலனுணர்ச்சிக்கும் சிந்தனைக்கும் போவதா? அல்லது நாம் சிந்தனை மற்றும் அறிந்துணர்ந்துகொள்ளலில் இருந்து புலனுணர்ச்சியிலிருந்து பொருட்களுக்கு போவதா? முதல் போக்கை, அதாவது சடவாத போக்கை ஏங்கெல்ஸ் பின்பற்றுகிறார். இரண்டாவது போக்கை, அதாவது கருத்துவாத போக்கை மாஹ் கடைப்பிடிக்கிறார். பொருட்கள் புலனுணர்ச்சிகளின் தொகுதிகள் என்ற ஏ. மாஹின் கோட்பாடு அகநிலைக் கருத்துவாதம் (Subjective Idealism) பேர்க்லிவாதத்தின் எளிமையான புத்துருவாக்கம் என்ற தெளிவான, மறுக்க முடியாத உண்மையை எந்தப் போலிச்சாக்கும், எந்த குதர்க்கமும் (அப்படி ஏராளமானவற்றை நாம் இனிமேல் சந்திக்க வேண்டியிருக்கும்) அகற்ற முடியாது. மாஹ் கூறியது போல பொருட்கள் புலனுணர்ச்சிகளின் தொகுதிகள் என்றால் அல்லது பேர்க்லி கூறியது போல "புலனுணர்ச்சிகளின் ஒன்றுசேர்த்தல்கள்" என்றால் இந்த மொத்த உலகமுமே என்னுடைய கருத்தே என்பதும் தவிர்க்க முடியாதபடி தொடர்கிறது. இத்தகைய வாதமூலக்கூறிலிருந்து தொடங்கினால், தன்னைத் தவிர மற்றவர்களும் இருக்கிறார்கள் என்பதை எட்டவே முடியாது. அது மிகவும் கலப்பற்ற ஒருவரின் சொந்த சிந்தனை மட்டுமே உள்ளது எனக்கூறும் ஆன்மீக நித்தியவாதம் (Solipsism) ஆகும். மாஹ், அவெனாரியுஸ், பெட்ஸோல்ட், குழுவினர் ஆன்மீக நித்தியவாதத்தை மறுப்பதற்கு எவ்வளவு முயன்றாலும் மிக மோசமான தர்க்க ரீதியான முட்டாள்த்தனங்களில் விழுந்து விடாமல் அவர்கள் அதிலிருந்து உண்மையாகவே தப்ப முடியாது. மாஹியவாத மெய்யியலின் இந்த அடிப்படையான மூலக்கருத்தை மேலும் நன்கு தெளிவுபடுத்துவதற்கு மாஹின் நூல்களிலிருந்து இன்னும் சில மேற்கோள்களை இங்கே நாம் தருகின்றோம். புலனுணர்ச்சிகளின் பகுப்பாய்வு (Analyse der Empfindungen)[4] என்ற நூலிலிருந்து ஒரு மாதிரியை இங்கே தருகிறோம் (1907ல் மாஸ்கோவில் ஸ்கிர்முண்ட் பதிப்பகம் வெளியிட்ட கொத்லியாரின் ரஷ்ய மொழிபெயர்ப்பிலிருந்து இந்த மேற்கோள்களை தந்திருக்கிறேன்):

"s என்ற முனையைக் கொண்ட ஒரு பொருளை நாம் பார்க்கிறோம். ஷி ஐ நாம் தொட்டால், அதாவது அதை நம் உடலோடு தொடர்புபடுத்தினால் நமக்குச் சுரீரென்று குத்துகிறது. குத்தல் இல்லாமல் நாம் அதன் முனையைப் பார்க்க முடியும். ஆனால் நாம் இந்தக் குத்தலை உணர்ந்தவுடனே முனை தோலில் ஒட்டிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். ஆகவே நம் கண்ணில் புலப்படுகின்ற முனை நிரந்தரமான மையக்கரு. அதன் மீது சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப - ஏதோ தற்செயலானது என்ற முறையில் - குத்தல் இணைக்கப்பட்டிருக்கிறது. ஒரே விதமான சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதைக் கொண்டு பொருட்களின் எல்லாத் தன்மைகளையும் நிரந்தரமான மையக்கருக்களிலிருந்து வெளிப்படுகின்ற 'விளைவுகள்' ஆக அவை நம் உடலின் மூலம் நமக்குத் தெரிவிக்கப்படுகின்றன என்று கருதுவதற்கு முடிவில் (நம்மை பழக்கப்படுத்திக் கொள்கிறோம். அந்த 'விளைவுகளையே' நாம் புலனுணர்ச்சிகள்) என்கிறோம்...' (p. 20).

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் சடவாத நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ள, அதாவது புலன் உறுப்புகள் மீதான பொருட்கள், உருவங்கள், இயற்கையின் தாக்கத்தின் விளைவே புலனுணர்ச்சிகள் என்று கருதுவதற்கு மக்கள் தம்மைப் "பழக்கப்படுத்திக் கொள்கிறார்கள்." மெய்யியற் கருத்துவாதிகளுக்கு (Philosophical Idealists) மிகவும் அருவருப்பான இந்தப் "பழக்கம்" (இந்தப் பழக்கத்தை அனைத்து மனித குலமும் அனைத்து இயற்கை விஞ்ஞானமும் கைக்கொண்டிருக்கின்றன!) மாஹீக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. எனவே அதை ஒழிப்பதற்கு அவர் கிளம்பிவிட்டார்.

"...அதனால் இந்த மையக்கருக்கள் அவற்றின் மொத்த புலன்களாலும் அறியக்கூடிய உள்ளடக்கத்திலிருந்து அகற்றப்படுவதுடன், அவை அப்பட்டமான அருவமான அடையாளங்களாக மாற்றப்படுகின்றன...."

தகுதிமிக்க பேராசிரியர் அவர்களே! இது பழைய பல்லவியே. இது சடப்பொருள் (Matter) என்பது எவ்வித உள்ளடக்கமுமில்லாத சூக்குமக் குறியீடு (Abstract symbol) என்று பேர்க்லி கூறியிருப்பதை சொல்லுக்குச் சொல் அப்படியே திரும்பக் கூறுவதாகும். ஆனால் உண்மையில் அம்பலப்பட்டு (உடலை மூடாமல்) போவது ஏர்னஸ்ட் மாஹ்தான். ஏனென்றால் "புலன்களால் உணரக்கூடிய உள்ளடக்கம்" நம்மிலிருந்து சுதந்திரமான முறையில் இருக்கின்ற புறநிலையான யதார்த்தம் என்பதை அவர் ஒத்துக் கொள்ளவில்லை என்றால், "எவ்வித உள்ளடக்கமுமில்லாத அருவம்'' நான் என்பது - அதுவும் பெரிய முதலெழுத்தோடு சாய்வெழுத்தில் பிழையின்றி எழுதப்பட்ட நான் என்பது - மட்டுமே மிஞ்சுகிறது; அது "இந்த உலகத்தில் இருக்கும் ஒரே பொருள் நான்தான் என்று கற்பனை செய்த பைத்தியக்கார பியானோ வாத்தியத்துக்கு" சமமானது. எமது புலனுணர்ச்சிகளின் "புலன்களால் உணரக்கூடிய உள்ளடக்கம்" புறநிலை உலகம் அல்ல என்றால், சூன்யமான "மெய்யில்வாதக்" கற்பனைகளில் ஈடுபட்டிருக்கின்ற இந்த அப்பட்டமான நானைத் தவிர வேறு எதுவுமே இருக்கவில்லை. மூட்டாள் தனமான, பலனில்லாத வேலை!

"...இந்த உலகம் எமது புலனுணர்ச்சிகளில் மட்டுமே அடங்கியிருக்கிறது எனக் கூறுவது சரியே. அப்படியானால் நாம் புலனுணர்ச்சிகளை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றோம். இந்த மையக் கருக்கள், அவற்றின் இடைத்தொடர்பு என்ற அனுமானம் அதிலிருந்து புலனுணர்ச்சிகள் மட்டுமே தோன்றுகின்றன - முற்றிலும் வீணாக, மிகையாகப் போகிறது. அத்தகைய கருத்தை அரை-மனதான யதார்த்தவாதம் அல்லது அரை-மனதான விமர்சனம் மட்டுமே அங்கீகரிக்கும்.

மாஹின் "மாறாநிலையியலுக்கு மாறுபட்ட அவதானங்களின்" ("Anti-metaphysical observations") ஆறாவது பத்தியை நாம் முழுமையாக மேற்கோள் தந்திருக்கிறோம். இது பேர்க்லி கூறியதை அப்படியே பிரதிபண்ணியதாகும். ஒரு கருத்து கூட, ஒரு சிந்தனை கூட இல்லை "எமது புலனுணர்ச்சிகளையே நாம் உணர்கின்றோம்" என்பதைத் தவிர, அதிலிருந்து ஒரே ஒரு முடிவு, அதாவது "உலகம் என்னுடைய புலனுணர்ச்சிகளில் மட்டுமே அடங்கியிருக்கிறது" என்பது மட்டுமே சாத்தியமாகும். "என்னுடைய" என்பதற்கு பதிலாக "நம்முடைய" என்று மாஹ் எழுதியிருப்பது காட்டிக்கொடுப்பாகும். மாஹ் மற்றவர்களை "அரை-மனதுடையவர்கள்" என்று குற்றம் சாட்டினாலும் அவரிடம் அதே குறைபாடு இருப்பதை இந்த ஒரு வார்த்தை அம்பலப்படுத்தி விடுகிறது. ஏனென்றால் புறநிலை உலகம் இருக்கிறது என்ற "அனுமானம்" "வீணானது" என்றால், என்னிடமிருந்து தனியான முறையில் ஊசி இருக்கிறது, என்னுடைய உடலுக்கும் அந்த ஊசி முனைக்கும் இடைத்தொடர்பு ஏற்படுகிறது என்ற அனுமானம் உண்மையிலேயே "வீணானது, மிகையானது" என்றால் அப்படியானால் மற்ற நபர்கள் இருக்கிறார்கள் என்ற அனுமானமும் பிரதானமாக வீணானது, மிகையானதே. நான் மட்டுமே இருக்கிறேன்; மற்ற நபர்கள் அனைவரும் புறநிலை உலகமும் வீணான "மையக்கருக்கள்" என்ற ரகத்தின் கீழ் வருகிறார்கள். இந்தக் கண்ணோட்டத்தை வைத்திருக்கின்றவர் "நமது" புலனுணர்ச்சிகளைப் பற்றிப் பேச முடியாது; மாஹ் அவற்றைப் பற்றிப் பேசுவது அவருடைய சொந்த, வெளிப்படையான அரை-மனதை அம்பலப்படுத்துவதாக மட்டுமே இருக்கும். அவருடைய மெய்யியல் வீணான, அர்த்தமில்லாத சொற்களின் குவியல், அதில் ஆசிரியருக்குமே நம்பிக்கை இல்லை என்பதை மட்டுமே அது நிரூபிக்கிறது.

மாஹின் அரை-மனதையும் குழப்பத்தையும் குறிப்பிடத்தக்க முறையில் எடுத்துக் காட்டுகின்ற ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். புலனுணர்ச்சிகளின் பகுப்பாய்வு என்ற நூலின் பதினொன்றாம் அத்தியாயத்தில் 6-வது பத்தியில் நாம் பின்வருமாறு படிக்கிறோம்: "நான் புலனுணர்ச்சிகளுக்கு உட்படுகின்ற சமயத்தில் சாத்தியமான எல்லா இயற்பியல் மற்றும் வேதியியல் சாதனங்களோடு நானோ அல்லது வேறு ஒருவரோ என் மூளையை அவதானிக்கமுடியுமென்றால், குறிப்பிட்ட புலனுணர்ச்சிகள் உடலின் எந்த நிகழ்வுப் போக்குகளோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதை கண்டு பிடிக்கக் கூடும்.."

மிகவும் நல்லது! அப்படியானால் நம்முடைய புலனுணர்ச்சிகள் பொதுவாக உடலிலும், குறிப்பாக எமது மூளையிலும் நடைபெறுகின்ற திட்டவட்டமான நிகழ்வுப் போக்குகளோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதுதானே இதன் பொருள்? ஆம், மாஹ் இந்த "அனுமானத்தை" மிகத் திட்டவட்டமாகவே செய்கிறார் - இயற்கை விஞ்ஞானத்தின் கருத்து நிலையிலிருந்து இதைச் செய்யாமலிருப்பது மிகக் கடினமான காரியமே! ஆனால் இது நமது மெய்யியல்வாதி வீணானது, மிகையானது என்று அறிவித்தாரே, அந்த "மையக்கருக்களையும் அவற்றின் இடைச்செயலையும்" பற்றிய அதே "அனுமானம்" அல்லவா? பொருட்கள் புலனுணர்ச்சிகளின் தொகுதிகள் என்று நம்மிடம் சொல்லப்படுகிறது. அதற்கும் அப்பால் சென்று, எமது புலனுறுப்புகளின் மீது பொருட்களின் செயற்பாட்டின் விளைவே புலனுணர்ச்சிகள் என்று கருதுவது மாறாநிலையியல் (Metaphysics), வீணான, மிகையான அனுமானம், இதரவை பேர்க்லி கூறியபடி என்று மாஹ் நமக்கு உறுதியளித்திருக்கிறார். ஆனால் மூளை ஒரு பொருள். ஆகவே மூளையும் கூட புலனுணர்ச்சிகளின் தொகுதி என்பதைக் காட்டிலும் கூடுதலானதல்ல. அப்படியானால் நான் (நான் என்பதும் புலனுணர்ச்சிகளின் தொகுதி என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை) புலனுணர்ச்சித் தொகுதிகளின் உதவியோடு புலனுணர்ச்சிகளின் தொகுதிகளை உணர்கிறேன் என தொடர்கிறது. வேடிக்கையான மெய்யியல்! முதலில் புலனுணர்ச்சிகளே "உலகத்தின் உண்மையான மூலக்கூறுகள்" என்று அறிவிக்கப்படுகிறது; இதன் மீது "அசலான" பேர்க்லிவாதம் நிறுத்தப்படுகிறது - பின்னர் அதற்கு எதிரிடையான கருத்து, அதாவது புலனுணர்ச்சிகள் உயிரியில் திட்டவட்டமான நிகழ்வுப் போக்குகளோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன என்ற கருத்து கள்ளத்தனமாக நுழைக்கப்படுகிறது. இந்த "நிகழ்வுப் போக்குகள்" "உயிரிக்கும்" புற உலகத்துக்குமிடையே நடைபெறுகின்ற இரசாயன மாற்றத்துடன் தொடர்புபட்டிருக்கவில்லையா? குறிப்பிட்ட உயிரியின் புலனுணர்ச்சிகள் இந்தப் புற உலகைப் பற்றிப் புறநிலைரீதியான சரியான கருத்தை அதற்குத் தரவில்லை என்றால் இந்த பொருளுடனான பரிமாற்றம் நடைபெற முடியுமா?

பேர்க்லிவாத துணுக்குகளை இயல்பாகவே அறிவு பற்றிய சடவாத தத்துவத்தை பின்பற்றும் இயற்கை விஞ்ஞானத்தின் கருத்துக்களோடு இயந்திரரீதியாக தாறுமாறாய்க் கலக்கும் பொழுது இப்படிப்பட்ட சிக்கலான கேள்விகளை மாஹ் தன்னிடம் கேட்டுக்கொள்வதில்லை... அதே பத்தியில் மாஹ் பின்வருமாறு எழுதுகிறார்: "உயிர் வளர்ச்சியற்ற பொருட்கள் (அசேதனப்பொருட்கள் (Inorganic)) புலனுணர்ச்சிக்கு உட்படுகிறதா என்று கூட சில சமயங்களில் கேட்கப்படுகிறது..." உயிர் வளர்ச்சிப்பொருள் (சேதனப்பொருள் (Organic)) புலனுணர்ச்சிக்கு உட்படுகிறது என்பதைப் பற்றி எத்தகைய சந்தேகமும் இல்லை என்பது இதன் அர்த்தமா? புலனுணர்ச்சி என்பது ஏதோ முதல்நிலையான ஒன்றல்ல, அது பருப்பொருளின் குணங்களில் ஒன்று என்பது இதன் அர்த்தமா? பேர்க்லிவாதத்தின் அனைத்து முட்டாள்தனங்களையும் மாஹ் தாவிக் குதித்து விடுகிறார்!... "பருப்பொருள் என்பது உடனடியான, மறுக்க முடியாத, கொடுக்கப்பட்ட யதார்த்தம், அதிலிருந்து ஒவ்வொன்றுமே - உயிர்வளர்ச்சியற்றவை மற்றும் உயிர் வளர்ச்சி உள்ளவை என்றவாறாக - கட்டமைக்கப்பட்டிருக்கின்றன என்ற விதத்தில் இன்று பரவலாக உள்ள இயற்பியற் கருத்துக்களிலிருந்து நாம் முன்னே செல்வதென்றால், இந்தக் கேள்வி இயற்கையானதே..." என்று அவர் எழுதுகிறார். இன்று பரவலாக உள்ள இயற்பியற் கருத்துக்கள் பருப்பொருளை உடனடியான யதார்த்தமாக கருதுகின்றன, அந்த யதார்த்தத்தில் ஒரே ஒரு ரகம் (உயிர் வளர்ச்சியுள்ள பருப்பொருள் organic matter) மட்டும் வரையறுக்கப்பட்ட புலனுணரும் தன்மையைக் கொண்டிருக்கிறது என்று மாஹ் கூறியிருக்கும் இந்த விலைமதிப்பற்ற ஒப்புதலை நாம் நினைவில் வைத்துக்கொள்வோம்... மாஹ் மேலும் தொடர்கிறார்: "அப்படியானால், உண்மையில், பருப்பொருளால் செய்யப்பட்ட இந்த கட்டமைப்பில் புலனுணர்ச்சி கட்டாயம் திடீரென்று எங்காவது தோன்ற வேண்டும் அல்லது முன்பே அந்த அமைப்பின் அடித்தளத்தில் அது இருந்திருக்க வேண்டும் என்பது உறுதி. எமது நோக்கில் இந்தக் கேள்வி தவறானதாகும். நம்மைப்பொறுத்தவரை பருப்பொருள் (விணீttமீக்ஷீ) முதல்நிலையாக கொடுக்கப்பட்டதல்ல. அதற்கு மாறாக, முதலில் கொடுக்கப்பட்டிருப்பவை மூலக்கூறுகளே (Matter) (அவை குறிப்பிட்ட பழக்கமான அர்த்தத்தில் புலனுணர்ச்சிகள் என்று பெயரிடப்பட்டுள்ளன...)"

அப்படியானால் முதல்நிலையாகக் கொடுக்கப்பட்டிருப்பது புலனுணர்ச்சிகளே, அவை உயிர் வளர்ச்சியுள்ள பருப்பொருளில் ஏற்படும் திட்டவட்டமான நிகழ்வுப் போக்குகளோடு மட்டுமே "தொடர்புபட்டிருக்கின்றன" என்ற போதிலும்! மாஹ் இவ்வாறு உளறுகின்ற பொழுது புலனுணர்ச்சி எங்கிருந்து "தோன்றுகிறது" என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் இருப்பதற்காக சடவாதத்தை ("இன்று பரவலாக உள்ள இயற்பியற் கருத்து") குறை கூறுவதற்கு விரும்புகிறார். நம்பிக்கைவாதிகளும் (Fideists) அவர்களுக்கு வால் பிடிப்பவர்களும் சடவாதத்தை எப்படி "மறுக்கிறார்கள்" என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். ஒரு பிரச்சினையின் தீர்வுக்கு அவசியமான விவரங்கள் போதுமான சேகரிக்கப்படாத நிலையில் வேறு எந்த மெய்யியலாவது அதைத் "தீர்த்திருகிறதா"? இதே பத்தியில் மாஹே பின்வருமாறு எழுதவில்லையா: "இந்தப் பிரச்சினை (உயிர் வளர்ச்சிப் பொருள் உலகத்தில் புலனுணர்ச்சி எந்த அளவுக்கு நீள்கிறது) விசேஷமான ஒரு விடயத்திலும் கூடத் தீர்க்கப்படாதிருக்கின்ற வரை, இந்தக் கேள்விக்கு பதிலளிப்பது சாத்தியமல்ல"?

இந்த குறிப்பிட்ட பிரச்சினையில் சடவாதத்துக்கும் மாஹியவாதத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு பின்வருவனவற்றில் அடங்கியிருக்கிறது: சடவாதம் இயற்கை விஞ்ஞானத்தின் முழு உடன்பாட்டுடன் பருப்பொருளை (Matter) முதன்மையானதாகவும் (Primary) நனவு, சிந்தனை, புலனுணர்ச்சியை துணைநிலையானதாகவும் (Secondary) கருதுகிறது; ஏனென்றால் புலனுணர்ச்சி அதன் நன்கு வரையறுக்கப்பட்ட வடிவத்தில், பருப்பொருளின் உயர் நிலையான வடிவங்களோடு (உயிர் வளர்ச்சியுள்ள பருப்பொருளோடு) மட்டுமே சம்பந்தமுடையது; "பருப்பொருளின் கட்டமைப்பின் அடித்தளத்தில்" புலனுணர்ச்சியை ஒத்த இயல்பு இருப்பதை ஒருவரால் ஊகிக்க மட்டுமே முடியும். உதாரணமாக, பிரபல ஜேர்மன் இயற்கை விஞ்ஞானியான ஏர்ன்ஸ்ட் ஹேக்கல், ஆங்கில உயிரியல் விஞ்ஞானியான லாயிட் மோர்கன் மற்றும் சிலர் இப்படியே கருதுகிறார்கள்; நாம் முன்பே எழுதிய Diderot வின் ஊகத்தைப் பற்றிச் சொல்வது அவசியமல்ல. மாஹிய வாதம் இதற்கு எதிரிடையான, கருத்துவாத கண்ணோட்டத்தை கொண்டிருக்கிறது. உடனே அபத்தத்தில் சிக்கிக்கொள்கிறது; ஏனென்றால், முதலாவதாக, திட்டவட்டமான வழியில் அமைக்கப்பட்ட பருப்பொருளின் திட்டவட்டமான நிகழ்வுப் போக்குகளோடு மட்டுமே புலனுணர்ச்சி சம்பந்தப்பட்டிருக்கிறது என்ற உண்மையை மீறி புலனுணர்ச்சியையே முதன்மையாகக் கருதுகிறது; ஏனென்றால், இரண்டாவதாக, பொருட்கள் ஒரு தொடர் புலனுணர்ச்சிகளின் தொகுதிகள் என்ற அடிப்படையான மூலக்கருத்து, உயிரோடிருக்கும் மற்றவையும் இருக்கின்றன, மற்றும் பொதுவாக - கொடுக்கப்பட்ட மாபெரும் நான் என்பதை தவிர மற்ற ''ஒரு தொடர்கள்'' ("தொகுதிகள்") இருக்கின்றன என்ற அனுமானத்தால் மறுக்கப்படுகிறது.

"மூலக்கூறு" என்ற சொல்லை பல வெகுளியான நபர்கள் (இதை நாம் விளக்குவோம்) ஏதோ ஒரு வகையான புதிய கண்டுபிடிப்பு என்று கருதுவது உண்மையில் அவர்கள் இந்தப் பிரச்சினையை புரிந்து கொள்ள முடியாதபடி செய்கிறது; ஏனென்றால் அது அர்த்தமில்லாத சொல்; ஒரு தீர்வு ஏற்பட்டிருப்பதாக அல்லது முன்னே ஓரடி வைத்திருப்பதாக ஒரு போலியான எண்ணத்தையே அது ஏற்படுத்துகிறது. இந்த எண்ணம் தவறானது; ஏனென்றால் முற்றிலும் புலனுணர்ச்சியே இல்லாததாக தோன்றும் பருப்பொருள் அதே அணுக்களால் (அல்லது எலெக்ட்ரான்களால்) அமைக்கப்பட்டிருந்தாலும் கூட நன்கு எடுத்துரைக்கப்பட்ட புலனுணர்ச்சி தன்மையை கொண்டிருந்தாலும் பருப்பொருளோடு எவ்விதமான உறவைக் கொண்டிருக்கிறது என்பது இன்னும் ஆராயப்பட்டு மறு ஆராய்ச்சி செய்யப்பட வேண்டி இருக்கிறது. இதுவரை தீர்க்கப்படாத பிரச்சனையை சடவாதம் தெளிவாக வகுத்துத் தருகிறது; அதன் மூலம் மேலும் பரிசோதனைகளை செய்வதற்கும் அதைத் தீர்க்க முயல்வதற்கும் ஊக்கமளிக்கிறது. குழம்பிப் போன கருத்துவாதத்தில் ஒரு வகையான மாஹியவாதம் பிரச்சினையை மூடி மறைக்கிறது; "மூலக்கூறு" என்ற செப்பிடுவித்தையின் மூலம் அதை ஒதுக்கி விடுகிறது.

மாஹ் எழுதியிருக்கின்ற மிகச் சமீபத்திய, விரிவான மற்றும் முடிவுரையான மெய்யியல் நூலிலிருந்து, இந்த கருத்துவாத தந்திரத்தின் போலித் தன்மையை தெளிவாக அம்பலப்படுத்துகின்ற ஒரு பகுதியை கீழே தருகிறோம். அவர் எழுதிய அறிவும் தவறும் என்ற நூலில் பின்வருமாறு எழுதப்பட்டிருக்கிறது: "ஒவ்வொரு இயற்பியல் நிகழ்வினையும் (மூலக்கூற்றையும்) புலனுணர்ச்சிகளிலிருந்து இருந்து, அதாவது உளவியல் மூலக்கூறுகளிலிருந்து கட்டமைப்பது (aufzubauen)) கடினமல்ல என்னும் பொழுது நவீன இயற்பியலில் உபயோகிக்கப்படுகின்ற மூலக்கூறுகளிலிருந்து, அதாவது திண்மமும் மற்றும் இயக்கத்திலிருந்து (அவற்றின் உறுதிப்பாடான நிலைமையில் இந்த விசேஷ விஞ்ஞானத்துக்கு மட்டுமே இது பயன்படக்கூடியது) எந்த உளவியல் அனுபவத்தையும் எப்படி வெளியிடுவது என்று கற்பனை செய்ய இயலாது (அதற்கான சாத்தியப்பாடும் காணமுடியாதுள்ளது).

பல நவீன இயற்கை விஞ்ஞானிகளுடைய உறுதிப்பாடான கருத்தோட்டங்களிலிருந்து அவர்களுடைய மாறாநிலையியல் (இந்தச் சொல்லின் மார்க்சிச அர்த்தத்தில், அதாவது இயங்கியலுக்கு எதிரான) கருத்துக்களையும் பற்றி ஏங்கெல்ஸ் அடிக்கடியும் துல்லியமாகவும் பேசியிருக்கிறார். குறிப்பாக இந்த இடத்தில்தான் மாஹ் வழி தவறிச் சென்றார் என்பதை நாம் பின்னர் காண்போம்; ஏனென்றால் சார்புநிலைவாதத்துக்கும் (Relativism) இயங்கியலுக்கும் இடையிலான உறவை அவர் புரிந்து கொள்ளவில்லை அல்லது அறியவில்லை. ஆனால் நாம் இங்கே எடுத்துக் கொண்டிருப்பது இதுவல்ல. மாஹின் கருத்துவாதம் குழப்பமான, வெளிவேடமான புதிய சொற்பிரயோகத்தையும் மீறி எவ்வளவு முனைப்பாக வெளிப்படுகிறது என்பதைக் குறித்துக் கொள்வது நமக்கு முக்கியமானதாகும். ஒவ்வொரு இயற்பியல் மூலக்கூற்றையும் புலனுணர்ச்சிகளிலிருந்து, அதாவது உளவியல் மூலக்கூறுகளிலிருந்து கட்டமைப்பது கடினமல்ல, பார்த்தீர்களா! ஆமாம், அத்தகைய கட்டமைப்புகள் கஷ்டமானவை அல்ல என்பது உண்மையே; ஏனென்றால் அவை முற்றிலும் வார்த்தைக் கட்டமைப்புகளே, நம்பிக்கைவாதம் தப்பித்துக்கொள்ள உதவுகின்ற வீணான பகட்டுப்புலமையே. மாஹ் தன்னுடைய நூல்களை இம்மனேண்டிஸ்டுகளுக்கு (எங்கும் நிலவியுள்ள கடவுள் என்ற நம்பிக்கையாளர்கள் - Immanentists) சமர்ப்பணம் செய்திருப்பது இதற்குப் பின்னர் நமக்கு வியப்பைத் தரவில்லை; மெய்யியல்வாத கருத்துவாதத்தில் மிகவும் பிற்போக்கான ரகத்தை ஆதரிக்கின்ற இம்மனேண்டிஸ்டுகள் மாஹை நீட்டிய கரங்களோடு வரவேற்பதும் வியப்பைத் தரவில்லை. ஏர்னெஸ்ட் மாஹின் "சமீபத்திய நேர்க்காட்சி வாதம்" (Recent positivism) இருநூறு வருடங்கள் மட்டுமே மிகத் தாமதமாக வந்திருக்கிறது. "புலனுணர்ச்சிகளிலிருந்து, அதாவது உளவியல் மூலக்கூறுகளிலிருந்து, ஒருவரின் சொந்த சிந்தனையை (ஆன்மிக நித்தியவாதத்தை solipsism) தவிர மற்றெதையும் "கட்டமைக்க" முடியாது என்பதை பேர்க்லி முன்பே போதுமான அளவுக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார். மாஹ் சடவாதத்துக்கு எதிராகத் தன்னுடைய சொந்தக் கருத்துக்களை திறந்த மனதின்றியும் "எதிரியை" வெளிப்படையாகக் குறிப்பிடாமலும் முன்வைக்கிறார். அதைப் பொறுத்தவரை; டிட்ரோவின் உதாரணத்தில் சடவாதிகளின் உண்மையான கருத்துக்கள் என்ன என்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். இக்கருத்துக்கள், பருப்பொருளின் இயக்கத்திலிருந்து புலனுணர்ச்சியை வருவிப்பதிலோ அல்லது புலனுணர்ச்சியை பருப்பொருளின் இயக்கமாக சுருக்குவதிலோ அடங்கியிருக்கவில்லை; ஆனால் புலனுணர்ச்சி இயக்கத்திலிருக்கும் பருப்பொருளின் தன்மைகளில் ஒன்று என்று அங்கீகரிப்பதில் அடங்கியிருக்கின்றன. இந்தப் பிரச்சினையில் ஏங்கெல்ஸ் டிட்ரோவின் கருத்தைப் பகிர்ந்து கொண்டார். "கொச்சையான" சடவாதிகளான ஃபோக்ட், புஹ்னர் மற்றும் மொலிஷோட்டிடமிருந்து மற்ற காரணங்களை தவிர, ஈரல் பித்தநீரைச் சுரக்கின்ற அதே முறையில் மூளை சிந்தனையை சுரக்கிறது என்று தவறாக நம்பினார்கள் என்பதற்காக ஏங்கெல்ஸ் அவர்களிடமிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டார். ஆனால் சடவாதத்துக்கு எதிராக தன்னுடைய கருத்துக்களை தொடர்ச்சியாக எதிர்நிலைப்படுத்துகின்ற மாஹ் உத்தியோகபூர்வமான மெய்யியலின் மற்ற எல்லா உத்தியோகபூர்வமான பேராசிரியர்களையும் போலவே டிட்ரோ, ஃபாயர்பாஹ், மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகிய எல்லா மாபெரும் சடவாதிகளையும் புறக்கணிக்கிறார்.

அவெனாரியுசின் மிகவும் தொடக்க நிலையான, அடிப்படையான கருத்தை விவரிப்பதற்கு அவர் முதன் முதலாகச் சுதந்திரமாக எழுதிய மெய்யியல் நூலாகிய, குறைந்தபட்ச சக்தியை பயன்படுத்தும் கோட்பாட்டை அடிப்படையாக கொண்ட, உலகம் தொடர்பான மெய்யியற் கருத்து (தனி அனுபவத்தின் விமர்சனத்திற்கு ஒரு முன்னுரை) என்பதை நாம் எடுத்துக்கொள்வோம்; இது 1876ம் வருடத்தில் வெளியிடப்பட்டது. "மாஹின் கருத்துக்களின் வளர்ச்சியில் மெய்யியல்வாதக் கருத்துவாதம் தொடக்க நிலையாக இருந்தது, ஆனால் அவெனாரியுசிடம் மிகவும் ஆரம்ப காலத்திலிருந்தே யதார்த்தவாத சாயல் குறியடையாளமாக இருந்தது" என்று பக்தானவ் தன் அனுபவவாத ஒருமைவாதம் என்ற நூலில் குறிப்பிடுகிறார் (புத்தகம் 1, இரண்டாம் பதிப்பு, 1905, பக்கம் 9, குறிப்பு). மாஹ் கூறியதை பக்தானவ் நம்பியபடியால் இப்படி எழுதினார் புலனுணர்ச்சிகளின் பகுப்பாய்வு, ரஷ்ய மொழிபெயர்ப்பு, பக்கம் 228). ஆனால் பக்தானவ் மாஹை நம்பியிருக்கக் கூடாது; மாஹின் கூற்று உண்மைக்கு முற்றிலும் எதிரிடையானது. அதற்கு மாறாக, அவெனாரியுசின் கருத்துவாதம் 1876ம் வருடத்தில் வெளியிடப்பட்ட அவருடைய நூலிலேயே மிகவும் தெளிவாக வெளியிடப்படுகிறது; அவெனாரியுஸ் 1891ல் இதை ஒத்துக்கொண்டார். அவர் எழுதிய உலகத்தை பற்றிய மனிதக் கருத்து என்ற நூலின் அறிமுகத்தில் அவர் பின்வருமாறு கூறுகிறார்: "என்னுடைய முதலாவது முறையான நூலாகிய மெய்யியலை படித்தவர் கலப்பற்ற பரிசோதனை விமர்சனத்தில் பிரச்சினைகளை கருத்துவாத நோக்கிலிருந்து ஆராய்வதற்கு முயற்சி செய்திருப்பேன் என்று உடனடியாகக் கருதுவார்" ஆனால் "மெய்யியல்வாதக் கருத்துவாதத்தின் மலட்டுத் தன்மை" "என்னுடைய முந்திய பாதை சரியானதுதானா என்று சந்தேகிக்குமாறு" என்னை நிர்ப்பந்தித்தது. அவெனாரியுசின் இந்த கருத்துவாத தொடக்க நிலையை எல்லோருமே மெய்யியல் இலக்கியத்தில் அங்கீகரித்திருக்கிறார்கள். பிரெஞ்சு எழுத்தாளர்களில் Cauwelaert ஐ நான் குறிப்பிடுவேன்; பூர்வாங்கமான குறிப்புகளில் அவெனாரியுசின் மெய்யியல் நோக்கு "ஒருமைவாதக் கருத்துவாதம்" என்று அவர் கூறுகிறார். ஜேர்மானிய எழுத்தாளர்களில் அவெனாரியுசின் சீடரான ரூடோல்ஃப் வில்லியை நான் குறிப்பிடுவேன்: "அவெனாரியுஸ் தன்னுடைய இளமைப் பருவத்தில் மற்றும் குறிப்பாக அவர் 1876ல் வெளியிட்ட நூலில் அறிவு இயல் கருத்துவாதம் (Epistemological idealism) என்று சொல்லப்படுவதன் மந்திரசக்திக்கு முற்றிலும் உட்பட்டிருந்தார் என்று அவர் சொன்னார்.

அவெனாரியுசின் பூர்வாங்கமான குறிப்புகளிலுள்ள கருத்துவாதத்தை மறுப்பது நகைப்புக்குரியதாகவே இருக்கும் என்பது மெய்யே. அவற்றில் அவர் "புலனுணர்ச்சி மட்டுமே இருப்பதாக கருதப்பட முடியும்" (இரண்டாவது ஜேர்மன் பதிப்பு, பக்கம் 10 மற்றும் 65; மேற்கோள்களில் நான் அழுத்தம் கொடுத்திருக்கிறேன்) என்று வெளிப்படையாக எழுதியிருக்கிறார். தன்னுடைய நூலின் 116வது பத்தியின் உள்ளடக்கத்தை அவரே பின்வருமாறு எழுதியிருக்கிறார். அந்தப் பத்தியை முழுமையாக கீழே கொடுத்திருக்கிறோம்: "பொருள் புலணுணர்ச்சியோடு இயற்பண்பாய் (Endowed) அமைவது இருப்பு என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்; பொருள் (Substance) உதிர்ந்து விடுகிறது... ("பொருள்" இல்லை, புற உலகம் என்பதாக ஒன்று இல்லை என்று குறைந்தபட்ச சக்தியை பயன்படுத்தி சிந்தித்தால் "அதிக சிக்கனமானது" என்று உங்களுக்கு தெரியவில்லையா, "அதைக் காட்டிலும் குறைவான முயற்சியே தேவைப்படும்"!) ...புலனுணர்ச்சி மிஞ்சுகிறது, அப்படியானால் பின்னர் இருப்பையே புலணுணர்ச்சியாக கருதி ஆக வேண்டியதாகிறது, இந்த அடித்தளத்தில் புலனுணர்ச்சியை கொண்டிராத ஒன்றும் இல்லை என்றே சிந்திக்க தோன்றுகிறது".

அப்படியானால் புலனுணர்ச்சி "பொருள்" இல்லாமலேயே இருக்கிறது, அதாவது மூளை இல்லாமலேயே சிந்தனை இருக்கிறது! இந்த மூளையில்லாத மெய்யியலை ஆதரிக்கக் கூடிய தகுதி மிக்க தத்துவஞானிகளும் உண்மையிலேயே இருக்கிறார்களா? ஆம், இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் பேராசிரியர் ரிச்சார்ட் அவெனாரியுஸ். அதற்காதரவாக அவருடைய வாதத்தை சராசரி மனிதர் ஆழமான சிந்தனைக்குரியதாக எடுத்துக் கொள்வது கஷ்டமென்ற போதிலும் நாம் இங்கே சிறிது நேரம் செலவிடுவோம். இதே புத்தகத்தின் 89 மற்றும் 90ல் அவருடைய வாதம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

"... இயக்கம் புலனுணர்ச்சியை ஏற்படுத்துகிறது என்ற கருதுகோள் மேலெழுந்தவாரியான அனுபவத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கிறது. புலணுணர்வு காட்சி (Perception) நடவடிக்கையை உள்ளிட்ட இந்த அனுபவம், கடத்தப்படும் இயக்கத்தின் (தூண்டுதலின்) விளைவாகவும் மற்ற உடல்சார்ந்த நிலைமைகளின் (உதாரணம்: இரத்தம்) உதவியாலும் ஒரு வகையான பொருளில் (மூளையில்) புலனுணர்ச்சி தோற்றுவிக்கப்படுகின்றது என்ற மெய் விவரத்தில் அடங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. எனினும் - அத்தகைய உருவாக்கமானது ஒருபோதும் தானாக உணரப்படுவதில்லை என்பதைத் தவிர அனுபவம் என்பதாக கூறப்படுவதை அதன் எல்லாப் பகுதிகளிலும் உண்மையான அனுபவம் என்ற முறையில் வடிவமைப்பதற்கு, கடத்தப்பட்ட இயக்கத்தினால் பருப்பொருளில் ஏற்படுவதாக அனுமானிக்கப்படுகின்ற புலனுணர்ச்சி

அந்தப் பருப்பொருளில் ஏதாவதொரு விதத்தில் ஏற்கெனவே இருக்கவில்லை என்று எடுத்துக் காட்டுவதற்குக் குறைந்த பட்சம் பரிசோதனை நிரூபணம் தேவைப்படுகிறது; அப்பொழுது தான் புலனுணர்ச்சி தோன்றுவது, கடத்தப்பட்ட இயக்கத்தின் தரப்பில் நடைபெறுகின்ற படைப்புச் செயல் என்பதைத் தவிர வேறு எந்தவிதத்திலும் கருதப்பட முடியாததாக இருக்கும். ஆகவே இப்பொழுது புலனுணர்ச்சி ஏற்படுகின்ற இடத்தில் ஏற்கனவே எதுவுமே மிகவும் குறைவான அளவில் கூட இருக்கவில்லை என்று நிரூபிப்பதன் மூலமாகவே ஏதோ ஒரு படைப்புச் செயலைக் குறிக்கின்ற ஒரு மெய்விவரத்தை அது நமது மற்ற அனுபவம் அனைத்துக்கும் முரணாக இருப்பதோடு இயற்கையை பற்றிய நமது மற்ற கருத்தோட்டம் அனைத்தையும் (Naturanschauung) தீவிரமாக மாற்றியமைப்பதாகவும் இருக்கும் -நிறுவுவது சாத்தியமாகும். ஆனால் அத்தகைய நிரூபணத்தை எந்த அனுபவமும் கொடுப்பதில்லை; எந்த அனுபவத்தாலும் அதைக் கொடுக்க முடியாது. அதற்கு மாறாக புலனுணர்ச்சி முற்றிலும் இல்லாத சடப்பொருள் - அது பின்னர் புலனுணர்ச்சி அடையத் தொடங்குவது என்ற நிலையை பற்றிய எண்ணம் கருதுகோள் மட்டுமே. இந்தக் கருதுகோள் நாம் புரிந்து கொள்வதை எளிமைப்படுத்தித் தெளிவுபடுத்துவதற்கு பதிலாக அதைச் சிக்கலாக்கி இருண்டதாக்குவதை மட்டுமே செய்கிறது.

"அனுபவம் என்று சொல்லப்படுவது, அதாவது கடத்தப்பட்ட இயக்கத்தின் மூலம் ஒரு பொருளில் புலனுணர்ச்சி விளைவிக்கப்படுகிறது. அந்தப் பொருள் அந்த கணத்திலிருந்து புலனுணர்ச்சி பெறுகிறது என்பது நுணுக்கமாக பரிசீலிக்கும் பொழுது வெறும் தோற்றம் என்று மட்டுமே நிரூபிக்கப்படுமானால், இயக்கத்தின் நிலைமைகளிலிருந்து புலனுணர்ச்சி குறைந்த பட்சம் சார்பு நிலையான தோற்றத்தை கொண்டிருக்கிறது என்பதை குறிக்க, அதவாது அதிலிருக்கும் புலனுணர்ச்சி அது மறைவாக அல்லது குறைவாக அல்லது ஏதாவதொரு காரணத்தினால் உணர்வுக்கு வெளிப்படாமலிருந்த போதிலும் கடத்தப்பட்ட இயக்கத்தின் மூலமாக விடுவிக்கப்படுகிறது அல்லது அதிகரிக்கப்படுகிறது அல்லது நனவுக்கு வெளிப்படையாக்கப்படுகிறது என்பதைக் குறிக்க அனுபவத்தின் எஞ்சிய உள்ளடக்கத்தில் போதிய பொருள் இன்னும் இருக்கிறது. எனினும் அனுபவத்தின் எஞ்சிய உள்ளடக்கத்தின் இந்தத் துணுக்கும் கூட ஒரு தோற்றம் மட்டுமேயாகும். நகர்ந்து போய்க் கொண்டிருக்கும் A என்ற பருப்பொருளிலிருந்து புறப்படுகின்ற இயக்கம் புலனுணர்ச்சியை கொண்டிருக்கும் B என்ற பருப்பொருளை அடைக்கின்ற வரை இடைநிலையிலுள்ள தொடர்புச்சாதனங்கள் மூலமாக கடத்தப்படுதை நாம் ஏதாவதொரு குறையற்ற முறையில் தொடர்ந்து பார்க்க முடியுமென்றால், B என்ற பருப்பொருளில் புலனுணர்ச்சி வளர்ச்சி அடைந்திருக்கிறது அல்லது உள்வரும் இயக்கத்தை பெற்ற அதே சமயத்தில் அதிகரித்திருக்கிறது என்பதை மிகச் சிறப்பான நிலையில் நாம் காண முடியும். ஆனால் இயக்கத்தின் விளைவாக இது ஏற்பட்டது என்று கண்டு பிடிக்க முடியாது......"

"நவீன கால" அனுபவவாத விமர்சன மெய்யியல் உண்மையாகவே எவ்வளவு பரிதாபகரமான குதர்க்கங்களை கையாள்கிறது என்பதை வாசகர் அறிய வேண்டுமென்பதற்காக அவெனாரியுஸ் சடவாதத்தை மறுக்கின்ற இந்த மேற்கோளை நாம் வேண்டுமென்றே முழுமையாக கொடுத்திருக்கிறோம். கருத்துவாதியான அவெனாரியுசின் வாதத்தை Bogdanovஸ்வின் சடவாதத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்; பக்தானோவ் சடவாதத்துக்கு துரோகம் செய்த்ததற்காக அவரை தண்டிப்பதற்காக மட்டுமாகிலும் இதைச் செய்வோம்!

கழிந்து போன கடந்தகாலத்தில் - முழுமையாக ஒன்பது வருடங்களுக்கு முன்பு பக்தானோவ் "ஒரு அரை இயற்கை வரலாற்று சடவாதியாக" (அதாவது, நம் காலத்திய இயற்கை விஞ்ஞானிகளில் மிகப் பெரும்பான்மையினர் இயல்பாகவே கொண்டிருக்கின்ற அறிவு பற்றிய சடவாத தத்துவத்தை பின்பற்றுபவராக) இருந்த பொழுது, குழப்பவாதி ஓஸ்ட்வால்டினால் அவர் பாதி வழி தவறிச் சென்று கொண்டிருந்த காலத்தில், அவர் பின்வருமாறு எழுதினார்: "பழங்காலத்திலிருந்து இன்று வரை உளவியல் விளக்கம் நனவின் மெய்விவரங்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து வந்திருக்கிறது: புலனுணர்ச்சிகள் மற்றும் கருத்துக்களின் செயற்களம், உணர்ச்சிகளின் செயற்களம் மற்றும் தூண்டல் உணர்ச்சிகளின் செயற்களம்... முதல் பிரிவில் வெளிப்புற அல்லது அக உலகத்தின் நிகழ்வுகளின் பிம்பங்கள் - உணர்மையில் அவை தானாகவே வெளிப்பட்ட நிலையில் - அடங்கியன.... அதற்கு பொருத்தமான வெளிப்புற நிகழ்வுகள் வெளிப்புறப் புலனுறுப்புகளின் மூலம் நேரடியாக ஏற்படுமானால், அத்தகைய பிம்பம்' புலனுணர்ச்சி என்று சொல்லப்படுகிறது."* பக்தானோவ், இயற்கை பற்றிய வரலாற்று ரீதியான கருத்தின் அடிப்படையான கூறுகள், செயின்ட் பீட்டர்ஸ்பேர்க், 1899, பக்கம் 216. இன்னும் சற்றுத் தள்ளி அவர் பின்வருமாறு சொல்கிறார்: "வெளிப்புறப் புலனுறுப்புகள் புறச் சூழலிலிருந்து கடத்தப்படும் ஒரு குறிப்பிட்ட தூண்டுவிசையின் விளைவாக உணர்வில்... புலன் உணர்ச்சி தோன்றுகிறது" (222). இன்னும் சில பக்கங்களுக்கு பின்னர்: "புலனுணர்ச்சியே மன வாழ்க்கையின் அடிப்படை; புற உலகத்தோடு அதன் உடனடித் தொடர்பு அதுவே" (240). புலனுணர்ச்சி நிகழ்வுப் போக்கின் ஒவ்வொரு நிலையிலும் வெளிப்புறத் தூண்டுதல் ஆற்றலின் உணர்மை என்ற உருமாற்றம் நடைபெறுகிறது" (133). 1905ல் கூட, ஓஸ்ட்வால்ட் மற்றும் மாஹின் பெருந்தன்மையான உதவியோடு பக்தானவ் மெய்யியலில் கருத்துவாத நிலைக்காக சடவாத நிலையை ஏற்கெனவே கைவிட்டிருந்த பொழுது, அவர் அனுபவவாத ஒருமைவாதம் என்ற தன்னுடைய நூலில் பின்வருமாறு (மறதியினால்!) எழுதினார்: "வெளிப்புறத் துண்டுதலின் ஆற்றல் நரம்பு முனைகளில் நரம்பு மின்சாரசக்தியின் தந்திமுறையிலான வடிவமாக உருமாற்றமடைந்து (இது இன்னும் குறைவான அளவில், ஆனால் தெய்வீகமாகக் கருதப்படாமல் ஆராயப்பட்டிருக்கின்றது) முதலில் 'கீழ்' நிலைகள் என்று சொல்லப்படுகின்ற தகவல்தொடர்பு (Ganglial), நரம்பை சுற்றியுள்ள திராவகம் (Cerebro-spinal), உப-மூளை (sub-cortical) பகுதிகள் இதரவற்றில் இருக்கின்ற நியூரோன்களில் முதலில் போய்ச் சேருகிறது" (புத்தகம் 1, இரண்டாம் பதிப்பு, 1905, பக்கம் 118).

பேராசிரியர்களின் மெய்யியலால் வழி தவறிப்போகாத ஒவ்வொரு இயற்கை விஞ்ஞானிக்கும் - அதைப் போல ஒவ்வொரு சடவாதிக்குமே - உணர்வுக்கும் புறஉலகத்துக்கும் இடையில் நேரடியான தொடர்பு புலனுணர்ச்சிதான் என்பது உறுதி; வெளிப்புறத் தூண்டுதல் ஆற்றல் நனவாய் உருமாற்றமடைவதே அது. இந்த உருமாற்றத்தை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையும் பல மில்லியன் தடவைகள் உணர்ந்திருக்கிறோம், உணர்ந்து கொண்டிருக்கிறோம். புலனுணர்ச்சியை நனவுக்கும் புற உலகத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்று கருதாமல், நனவை புற உலகத்திலிருந்து பிரிக்கின்ற வேலியாக, சுவராகக் கருதுவதில், (புலனுணர்ச்சிக்கு பொருந்திய புற நிகழ்வின் பிம்பம் என்றில்லாமல் "ஒரே தனிப் பொருளாக" கருதுவதில் கருத்துவாத மெய்யியலின் குதர்க்கம் அடங்கியிருக்கிறது. பேர்க்லி பாதிரியாரினால் ஏற்கெனவே நைந்து போன இந்தப் பழைய போலிவாதத்திற்கு அவெனாரியுஸ் சற்று மாற்றமடைந்த வடிவத்தை மட்டுமே கொடுத்தார். புலனுணர்ச்சிக்கும் திட்டவட்டமான முறையில் அமைக்கப்பட்ட பருப்பொருளுக்கும் இடையில் நாம் தொடர்ச்சியாக பார்க்கின்ற தொடர்பின் எல்லா நிலைமைகளும் இன்னும் நமக்குத் தெரியாது என்பதால் நாம் புலனுணர்ச்சி மட்டுமே இருக்கிறது என்று ஒத்துக் கொள்வோம் - அவெனாரியுசின் குதர்க்கம் இதையே குறிக்கிறது.

அனுபவவாத விமர்சனத்தின் அடிப்படையான கருத்துவாத முற்கூற்றுகளை பற்றி நமது வர்ணனையை முடிப்பதற்கு முன்பு இந்த மெய்யியற் போக்கின் ஆங்கில மற்றும் பிரெஞ்சு பிரதிநிதிகளை பற்றி இங்கே சுருக்கமாக எழுதுவோம். மாஹ் ஆங்கிலேயரான கார்ல்பீர்ஸனை பற்றி எழுதும்போது "அவருடைய அறிவு இயல் முறையின் (erkenntniskritischen) கருத்துக்களோடு எல்லா ஆதாரமான அம்சங்களிலும் நான் உடன்படுகிறேன்" (இயந்திரவியல், முன்னர் கூறப்பட்ட பதிப்பு, பக்கம் IX) என்று மாஹ் தெளிவாகக் கூறுகிறார். கா. பீர்ஸனும் மாஹூடன் உடன்படுகிறார்.* Karl Pearson, The Grammar of Science, 2nd ed., London, 1900, p. 326. பீர்ஸனுக்கு "மெய்யான விஷயங்கள்" "உணர்ச்சிப் பதிவுகளே" (Sense Impressions). உணர்ச்சிப் பதிவுகள் என்ற எல்லைகளுக்கு வெளியில் எந்த விஷயத்தையும் அங்கீகரிப்பது மாறாநிலையியல் என்று அவர் அங்கீகரிக்கிறார். பீர்ஸன் (ஃபாயர்பாஹ் அல்லது மார்க்ஸ், ஏங்கெல்சை படிக்காமலேயே) மகத்தான மன உறுதியோடு சடவாதத்துக்கு எதிராக போராடுகிறார்; அவருடைய வாதங்கள் மேலே ஆராயப்பட்டவற்றிலிருந்து வேறாக இருக்கவில்லை. ஆனால் சடவாதியாக வேடம் போடுகின்ற விருப்பம் பீர்ஸனுக்கு மிகவும் அந்நியமானதாக இருப்பதால் (அது ரஷ்ய மாஹியவாதிகளுடைய விசேஷமான திறமை), பீர்ஸன் சிறிதும் முன்ஜாக்கிரதை இல்லாதவராக இருப்பதால், அவர் தன்னுடைய மெய்யியலுக்கு புதுமையான பெயர்களை சூட்டவில்லை; தன்னுடைய கருத்துக்களும் மாஹின் கருத்துக்களும் "கருத்துவாதம்" என்று சாதாரணமாக சொல்கிறார். (மேற்கூறிய புத்தகம், பக்கம் 326)! அவர் நேரடியாக பேர்க்லி மற்றும் ஹியூமிலிருந்து தன்னுடைய பரம்பரையை கண்டு கொள்கிறார். பீர்ஸனுடைய மெய்யியல் அதன் மிக அதிகமான முழுமையினாலும் முரணின்மையினாலும் மாஹிய மெய்யியலிலிருந்து தனித்து விளங்குகிறது; இதை நாம் திரும்பத் திரும்ப காண முடியும்.

மாஹ், பிரெஞ்சு இயற்பியல்வாதிகளான Pierre Duhem மற்றும் Henri Poincaré [10] தன்னுடைய ஒருமைப்பாட்டை அறிவிக்கிறார். இந்த எழுத்தாளர்களின் குறிப்பிடத்தக்க வகையில் குழப்பமான, முரணான மெய்யியல்வாதக் கருத்துக்களைப் பற்றி புதிய இயற்பியல் என்ற அத்தியாயத்தில் நாம் விவாதிப்போம். Poincaré ஐ பொறுத்தவரை பொருட்கள் "புலனுணர்ச்சிகளின் குழுக்கள்" [11] என்று கூறுவதை மட்டும் இங்கே குறித்துக்கொள்வோம். டுஹேம் இதே மாதிரியான கருத்தைப் போகிற போக்கில் சொல்கிறார்.

மாஹூம் அவெனாரியுசும் தங்களுடைய மூலக் கருத்துக்களின் கருத்துவாத தன்மையை ஒத்துக்கொண்ட பின்னர், பிந்திய நூல்களில் அவற்றை எப்படி திருத்தினார்கள் என்பதை இப்பொழுது ஆராய முற்படுவோம்.

Notes

[1] J. G. Fichte, Rezension des Aenesidemus [Review of Aenesidemus], 1794, Sämtliche Werke, Bd. I, S. 19. —Lenin

[2] Vierteljahrsschrift für wissenschaftliche Philosophie. Band XX. 1896. —Lenin

[3] R. Willy, Gegen die Schulweisheit [Against School Wisdom], 1905, S. 173-78. —Lenin

[4] We shall discuss this point with the Machians later. —Lenin

[5] L. Feuerbach, Sämtliche Werke [Collected Works], herausgegeben von Bolin und Jodl, Band VII, Stuttgart, 1903, S. 510; or Karl Grün, L. Feuerbach in seinem Briefwechsel und Nachlass, sowie in seiner philosophischen Charakterentwicklung [His Correspondence, Posthumous Works and Philosophical Development], I. Band, Leipzig, 1874, S. 423-35. —Lenin

[6] It can be seen from Lenin’s letter to A. I. Ulyanova-Yelizarova, dated December 6 (19), 1908, that the original phrase in the manuscript, viz., "Lunacharsky even ‘mentally projected’ for himself a god", was toned down because of the censorship. Lenin wrote in his letter: "\thinspace‘Mentally projected for himself a god’ should be altered to ‘mentally projected for himself’—well to use a mild expression—‘religious conceptions’, or something of that sort" (Collected Works, present edition, Vol. 37, p. 403).

 

சடவாதமும் அனுபவவாத விமர்சனமும்

Critical Comments on a Reactionary Philosophy
 (Chapter One: The Theory of Knowledge of Empirio-Criticism and of Dialectical   Materialism. I )

அத்தியாயம் 1: அனுபவவாத விமர்சனத்தின் அறிவு பற்றிய தத்துவமும் இயங்கியல் சடவாதமும்

5. Does Man Think With The Help of the Brain?
4. மனிதனுக்கு முன்பு இயற்கை இருந்ததா?

மாஹ், அவெனாரியுசின் மெய்யியலுக்கு இந்தக் கேள்வி குறிப்பிடத்தக்க விதத்தில் சங்கடமூட்டுவதாகும் என்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். மனிதனோ அல்லது வேறு எந்தப் பிராணியுமோ வாழ்ந்திராத, வாழ்ந்திருக்க முடியாத நிலையில் பூமி ஒரு காலத்தில் இருந்தது என்று இயற்கை விஞ்ஞானம் உறுதியாக கூறுகிறது. சேதன (உயிர்வளர்ச்சிப்) பருப்பொருள் என்பது பிந்திய நிகழ்வு, நீண்ட பரிணாமப்போக்கின் விளைவு. அப்பொழுது எவ்விதமான உணர்வுப் பருப்பொருளும் இருக்கவில்லை, "புலனுணர்ச்சிகளின் தொகுதிகளும்" இருக்கவில்லை, அவெனாரியுசின் கோட்பாட்டின்படி சுற்றுப்புறத்தோடு "பிரிக்க முடியாத வகையில்" தொடர்புபடுத்தப்பட்டிருப்பதாக கருதப்படுகின்ற நானும் இருக்கவில்லை, பருப்பொருள் முதன்மையானது; சிந்தனை, நனவு, புலனுணர்ச்சி ஆகியவை மிக உயர்ந்த வளர்ச்சியின் விளைவே. அது அறிவு பற்றிய சடவாத தத்துவம் ஆகும்; இயற்கை விஞ்ஞானம் இயல்பாகவே இதற்கு உடன்படுகிறது.

அனுபவவாத விமர்சனத்தின் அறிவில் சிறந்த பிரதிநிதிகள் தங்கள் தத்துவத்துக்கும் இயற்கை விஞ்ஞானத்துக்கும் இடையே உள்ள இந்த முரண்பாட்டை கவனித்தார்களா என்ற கேள்வி எழுகிறது. அவர்கள் அதைக் கவனித்திருக்கிறார்கள்; இந்த முரண்பாட்டை எந்த வாதங்களின் மூலம் அகற்ற முடியும் என்று அவர்கள் நிச்சயமாக தங்களை கேட்டுக் கொண்டார்கள். இந்தப் பிரச்சனைக்கு மூன்று அணுகுமுறைகள் சடவாத நோக்கிலிருந்து குறிப்பிடத்தக்க அக்கறையை கொண்டிருக்கின்றன: இவற்றில் அவெனாரியுசினுடையது ஒன்றாகும்; அவருடைய சீடர்களான பெட்ஸோல்ட் மற்றும் வில்லியின் அணுகுமுறைகள் மற்ற இரண்டுமாகும்.

ஒருங்கிணைப்பில் "உள்ளார்ந்த" பிரதான உறுப்பு தத்துவத்தின் மூலம் இயற்கை விஞ்ஞானத்துடன் ஏற்படும் முரண்பாட்டை அகற்றுவதற்கு அவெனாரியுஸ் முயற்சி செய்திருக்கிறார். இந்த ஒருங்கிணைப்பே நான் என்பதற்கும் சுற்றுப்புறத்துக்கும் இடையே "பிரிக்க முடியாத" தொடர்பு என்பது நமக்குத் தெரியும். இத்தத்துவத்தின் வெளிப்படையான முட்டாள் தனத்தை அகற்றுவதற்கு உள்ளார்ந்த" பிரதான உறுப்பு என்ற கருதுகோள் நுழைக்கப்படுகிறது. உதாரணமாக, கருவிலிருந்து மனிதனின் வளர்ச்சி எத்தகையது? பிரதான உறுப்பு கருவினால் பிரதிநிதித்துவப்படுமானால், சுற்றுச்சூழல் ("எதிர் - உறுப்பு") இருக்கின்றதா? கரு அமைப்பு சி - "எதிர்காலத் தனிப்பட்ட சுற்றுச்சூழலை பொறுத்தவரை உள்ளார்ந்த பிரதான உறுப்பு" (உளவியல் பொருளின் கருதுகோள் பற்றிய குறிப்புகள், பக்கம் 140) என்று அவெனாரியுஸ் பதிலளிக்கிறார். இன்னும் பெற்றோர்கள் இல்லாத பொழுதும் கூட உள்ளார்ந்த பிரதான உறுப்பு ஒருபோதும் பூஜ்யத்துக்கு சமமாக இருப்பதில்லை, ஆனால் சுற்றுச்சூழலின் இணைப்புப் பகுதிகள்' மட்டுமே பெற்றோர்களாக கூடிய தகுதியைக் கொண்டிருக்கும். (p.141).

அப்படியானால் ஒருங்கிணைப்பு பிரிக்க முடியாததாகும். அனுபவவாத விமர்சனவாதி புலனுணர்ச்சிகளும் அவற்றின் தொகுதிகளும் என்ற தன்னுடைய மெய்யியலின் அடிப்படைகளை காப்பாற்றுவதற்கு இதை வலியுறுத்துவது அவசியம். மனிதன் இந்த ஒருங்கிணைப்பில் மத்திய உறுப்பாகும். ஆனால் மனிதன் இல்லாத பொழுது, அவன் இன்னும் பிறக்காத பொழுது எனினும் பிரதான உறுப்பு பூச்சியத்துக்கு சமம் அல்ல; அது உள்ளார்ந்த பிரதான உறுப்பாக மட்டும் இருக்கிறது! இத்தகைய வாதங்களை முன்னெடுக்கின்ற மெய்யியலாளரை கூட ஆராய்ச்சிக்கு உரியவராக கருதுகின்ற நபர்களும் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமே! மாறாநிலைவாதத்தின் (அதாவது, நம்பிக்கைவாதத்தின்) ஒவ்வொரு வடிவத்துக்கும் நான் எதிரியல்ல என்று அழுத்திக் கூறுகின்ற வுன்ட் கூட, ஒருங்கிணைப்பை முற்றிலும் அழித்துவிடுகின்ற "உள்ளார்ந்த" என்ற சொல்லின் மூலம் "அனுபவம் என்ற கருத்து பற்றிய புதிரான தெளிவின்மையை ஒத்துக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். (மேற்கூறிய நூல், பக்கம் 379).

உண்மையில், ஒருங்கிணைப்பின் கலையாத்தன்மை அதன் உறுப்புக்களுள் ஒன்றில் உள்ளார்ந்ததாய் இருக்கும்பொழுது, எப்படி ஒருவர் ஒருங்கிணைப்பை பற்றி அக்கறையுடன் பேச முடியும்?

இது மூடுமந்திரவாதம் (அறிவுநிலை கடந்த ஆன்மீகம்) அல்லவா? நம்பிக்கைவாதத்தின் முன்படியல்லவா? எதிர்கால சுற்றுச்சூழலை பொறுத்தவரையிலும் மத்திய இழையின் (உறுப்பை) சாத்தியத்தை பற்றிச் சிந்திக்க முடியுமானால், கடந்த காலச் சுற்றுச்சூழல், அதாவது மனிதனின் மரணத்துக்கு பிந்திய சுற்றுச்சூழல் சம்பந்தமாக அதை ஏன் சிந்திக்கக் கூடாது? அவெனாரியுஸ் தன்னுடைய தத்துவத்திலிருந்து இந்த முடிவை பெறவில்லையே என்று நீங்கள் சொல்லுவீர்கள். ஒத்துக் கொள்கிறேன்; ஆனால் அந்த மூடத்தனமான, பிற்போக்குத் தத்துவம் அதனால் மேலும் பேடித்தனமாயிற்றே தவிர அது எவ்விதத்திலும் மேன்மை அடையவில்லை. அவெனாரியுஸ் 1894ல் இந்தத் தத்துவத்தை அதன் தர்க்க ரீதியான முடிவுக்குக் கொண்டுபோகவில்லை; அல்லது அவ்வாறு செய்வதற்கு அவர் அஞ்சியிருக்கலாம். ஆனால் ஹூபெர்ட்-ஸோல்டெர்ன், 1896ல் இறைஇயல் முடிவுகளை (Theological Conclusions) பெறுவதற்கு இதே தத்துவத்தை உபயோகித்தார் என்று நாம் பார்ப்போம்; இவை 1906ல் மாஹின் அங்கீகாரத்தை பெற்றன; ஷூபெர்ட்ஸோல்டெர்ன் (மாஹியவாதத்துக்கு) "மிகவும் நெருக்கமான பாதைகளைத்" தொடர்ந்து வருகிறார் என்று அவர் கூறினார் (புலனுணர்ச்சிகளின் பகுப்பாய்வு, பக்கம் 4). நாத்திகவாதி என்று பகிரங்கமாக தன்னை அறிவித்துக் கொண்ட டூரிங் தன்னுடைய மெய்யியலில் நம்பிக்கைவாதம் நுழைவதற்கு முரணான வகையில் ஓட்டைகளை விட்டுவைத்ததற்காக ஏங்கெல்ஸ் அவரைக் கண்டனம் செய்தது முற்றிலும் சரியே. சடவாதியான டூரிங் மீது ஏங்கெல்ஸ் பல தடவைகளில் மிகவும் நியாயமாகவே இந்தக் குற்றச்சாட்டைச் செய்தார். இத்தனைக்கும் டூரிங், குறைந்தபட்சம் எழுபதுகளில், இறைஇயல் முடிவுகளைப் பெறவில்லை. ஆனால் தாங்கள் மார்க்சிசவாதிகள் என்று கருதப்பட வேண்டும் என்று விரும்புபவர்கள் நமக்கிடையே இருக்கிறார்கள்; ஆனால் அவர்கள் நம்பிக்கைவாதத்துக்கு மிகவும் நெருங்கியுள்ள ஒரு தத்துவத்தை பெருந்திரளான மக்களிடம் கொண்டு வருகிறார்கள்.

"... இன்றைய சுற்றுச்சூழலில் மனிதன் வாழ்வதற்கு முற்காலத்தில் இருந்த காலப் பகுதிகளைப் பற்றி இயற்கை விஞ்ஞானம் ஆராய்வதற்கு தகுதி கொண்டிருக்கவில்லை என்று அனுபவவாத விமர்சன நிலையிலிருந்து தோன்றலாம்" என்று அவெனாரியுஸ் குறிப்புகளில் (p.144) எழுதினார். அவரே பதிலளிக்கிறார்: "விசாரிப்பவர் மானசிகமாக தன்னையே அந்தக் காலத்துக்குள் செலுத்திக் கொள்வதை தடுக்க முடியாது" (அதாவது தான் நேரில் இருப்பதாக கற்பனை செய்வது), "ஏனென்றால் சாராம்சத்தில் இயற்கை விஞ்ஞானி இதை மட்டுமே (இதை அவர் தெளிவாக உணராதிருந்தாலும்) விரும்புகிறார்: நாம் பூமியிலிருந்து கொண்டே சிறந்த கருவிகளின் உதவியால் மற்றொரு நட்சத்திரத்தின் அல்லது மற்றொரு சூரிய மண்டலமாக கூட இருக்கலாம் - வரலாற்றை பின்தொடர முடியும் என்று நினைக்க முடியுமானால் அதே முறையில், நான் மானசீகமாக ஒரு பார்வையாளனுடைய பாத்திரத்தில் என்னை செலுத்திக் கொண்டால், உயிரினங்கள் அல்லது மனிதன் தோன்றுவதற்கு முன்னாலிருந்த பூமியை வரையறுப்பது எப்படி?" என்று அவெனாரியுஸ் தொடர்கிறார்.

ஒரு பொருள் எமது உணர்விலிருந்து தனித்த முறையில் இருக்க முடியாது. "அந்தப் பொருளை புரிந்து கொள்ளும் பெருமுயற்சியாக நாம் நம்மையே புத்திஜீவிகளாக எப்பொழுதும் சிந்தித்துக்கொள்கிறோம்."

மனித மனத்தை ஒவ்வொரு பொருளுக்கும் மனிதனுக்கும் முந்திய இயற்கைக்கும் "மானசீகமாக புறத்தெறிவதன்" (Mentally projecting) அவசியத்தைப் பற்றிய இந்த தத்துவம் முதல் பத்தியில் "சமீப காலத்திய நேர்க்காட்சிவாதியாகிய" ரி. அவெனாரியுசினுடைய சொற்களிலும் இரண்டாவது பத்தியில் அகநிலைக் கருத்துவாதியான இ.கோ. ஃபிஹ்டேயின் சொற்களிலும் தரப்பட்டிருக்கிறது. இந்தத் தத்துவத்தின் குதர்க்கவாதம் மிகவும் வெளிப்படையாக தெரிவதால், அதை ஆராய்ந்து பார்ப்பது சங்கடமான விஷயமே. நாம் நம்மை "மானசீகமாக புறத்தெறிந்தால்" எமது இருப்பு கற்பனையானதாகவே இருக்கும்; ஆனால் மனிதனுக்கு முன்னால் பூமி இருந்தது மெய்யானதே. உதாரணமாக, பூமி பளபளப்பாக எரிந்து கொண்டிருந்த நிலையில் மனிதன் நடைமுறையில் ஒரு பார்வையாளனாக இருக்க முடியாது; அந்தக் காலத்தில் அவன் இருந்ததாக "கற்பனை செய்வது" அந்தக் காலத்தில் இருட்டுவாதமாகும்; நான் நகரத்துக்குள் ஒரு பார்வையாளனாக என்னை "மானசீகமாக சிந்திப்பதால்", நகரத்தைப் பார்க்க முடியும் என்ற வாதத்தைக் கொண்டு நகரம் இருக்கிறது என்று நிரூபிக்க முயற்சி செய்வதைப் போல இதுவும் துல்லியமாக அதே மாதிரியானதே. அனுபவவாத விமர்சனத்தையும் இயற்கை விஞ்ஞானத்தையும் "சமரசப்படுத்துவது" என்றால் இயற்கை விஞ்ஞானம் எதைச் சாத்தியமில்லை என்று ஒதுக்குகிறதோ, அதை "மானசீகமாக புறத்தெறிவதற்கு" அவெனாரியுஸ் பெருந்தன்மையோடு ஒத்துக்கொள்கிறார் என்பதாகவே இருக்கிறது. எவ்விதமான உயிரினமும் எவ்விதமான புலனுணர்ச்சியும் அல்லது எவ்விதமான "மத்திய உறுப்பும்" உயிரோடு வசிக்க முடியாத காலத்தில் பூமி இருந்தது என்பதை கல்வியறிவுடைய அல்லது சிந்தனைத் தெளிவுடைய எவருமே சந்தேகிப்பதில்லை. ஆகவே பூமி புலனுணர்ச்சிகளின் ஒரு தொகுதி ("பொருட்கள் புலனுணர்ச்சிகளின் தொகுதிகள்") அல்லது "மனோதத்துவ மற்றும் இயற்கைக்குரிய முற்றொருமை கொண்ட ஒரு தொடர் மூலக்கூறுகளின் தொகுதி" அல்லது "ஒரு எதிர் நிலை உறுப்பு - அதன் பிரதான உறுப்பு ஒருபோதும் பூஜ்யத்துக்கு சமமாக இருக்காது"- என்ற மாஹ் மற்றும் அவெனாரியுசின் மொத்தத் தத்துவமுமே மெய்யியல்வாத இருட்டுவாதமாகும்; அது அகநிலையான கருத்துவாதத்தை அறிவுக்கு ஒவ்வாத அளவுக்கு நீட்டிச் செல்வதாகும்.

அவெனாரியுஸ் எத்தகைய அபத்தமான நிலையில் விழுந்துவிட்டார் என்பதை பெட்ஸோல்ட் புரிந்து கொண்டு அதற்காக வெட்கப்பட்டார். அவர் எழுதிய கலப்பற்ற பரிசோதனையின் மெய்யியலுக்கு அறிமுகம் (இரண்டாம் தொகுதி) என்ற நூலில் "பூமியின் முந்திய காலகட்டங்களின் உண்மையான தன்மை பற்றிய பிரச்சினைக்கு" ஒரு பத்தி முழுவதையுமே ஒதுக்கியிருக்கிறார்.

"அவெனாரியுசின் போதனையில் நான் ஷூப்பேயிடம் வகிக்கின்ற பாத்திரத்துக்கு மாறான பாத்திரத்தை வகிக்கிறது" என்கிறார் பெட்ஸோல்ட் (எங்கள் மெய்யியல் அவெனாரியுஸ், மாஹ், ஷூப்பே ஆகிய மூன்று நபர்களால் நிறுவப்பட்டது என்று பெட்ஸோல்ட் பகிரங்கமாகவும் திரும்பத் திரும்பவும் அறிவிக்கிறார் என்பதை நாம் குறித்துக் கொள்வோம்); "ஆனால் ஒருவேளை அவருடைய தத்துவத்திற்கு மிக அதிகமான முக்கியத்துவத்தை கொண்டிருக்கின்ற பாத்திரம்" (அவெனாரியுசிடம் கூட எல்லாமே நானைச் சார்ந்திருக்கிறது என்று ஷூப்பே எடுத்துக்காட்டி அவரை அம்பலப்படுத்திய மெய்விவகாரம் பெட்ஸோல்ட்டின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது வெளிப்படையானதே; பெட்ஸோல்ட் ஒரு திருத்தத்தை செய்ய விரும்புகிறார்). "மனிதனுடைய பாதங்கள் படாத பிரதேசத்தை பற்றி நாம் சிந்திக்க முடியும், ஆனால் அத்தகைய சுற்றுச்சூழலை பற்றிச் சிந்திக்க (அழுத்தம் அவெனாரியுசினுடையது) நான் என்ற சொல்லின் மூலம் நாம் குறிப்பிடுவது அவசியமாக இருக்கிறது; அதன் (அழுத்தம் அவெனாரியுசினுடையது) சிந்தனையே அது என்று அவெனாரியுஸ் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்" என்று பெட்ஸோல்ட் மேலும் தொடர்கிறார்.

பெட்ஸோல்ட் பின்வருமாறு பதிலளிக்கிறார்:

"எனினும் அறிவு இயல் ரீதியான (Epistemologically) முக்கியமான கேள்வி அத்தகைய பிரதேசத்தை பற்றி எந்தவிதத்திலாவது நாம் சிந்திக்க முடியுமா என்பதல்ல, எந்தத் தனிப்பட்ட சிந்தனையிலிருந்தும் சுதந்திரமான முறையில் அது இருந்து கொண்டிருப்பதாக அல்லது இருந்ததாக சிந்திப்பதற்கும் நமக்கு உரிமையுண்டா என்பதே."

எது உண்மையோ, அது உண்மையாக இருக்கும். மக்கள் ஏதோ ஒரு விதமான நரகத்தையும் எல்லா விதமான பேய்களையும் பற்றிச் சிந்திக்க முடியும், தங்களுக்குள்ளேயே "மானசீகமாக புறத்தெறிந்து" (Mentally projected) கொள்ள முடியும்; லுனச்சார்ஸ்கி நயமாகச் சொல்வதென்றால் - மதக் கருதுகோள்களை கூடத் தமக்குள் "மானசீகமாக புறத்தெறிந்து" கொண்டார். ஆனால் இத்தகைய சிந்தித்தல்களின் பொய்யான, விசித்திரமான, பிற்போக்குத் தன்மையை எடுத்துக்காட்டுவதே அறிவுத்தத்துவத்தின் (Theory of knowledge) துல்லியமான நோக்கமாகும்.

"...ஏனென்றால் சிந்தனைக்கு C அமைப்பு (அதாவது, மூளை) அவசியம் என்பது அவெனாரியுஸ், மற்றும் இங்கே முன்வைக்கப்படுகின்ற மெய்யியல் ஆகிய இரண்டுக்குமே வெளிப்படையாகும்..."

இது உண்மையல்ல. அவெனாரியுசின் 1876ம் வருடத் தத்துவம் மூளை இல்லாத சிந்தனைத் தத்துவம். அவருடைய 1891-94ம் வருடங்களின் தத்துவத்திலும் இதே மாதிரியான கருத்துவாதப் பிதற்றல் இருக்கிறது என்பதை நாம் இப்போது காண்போம்.

"...ஆனால் C என்ற இந்த அமைப்பு உதாரணமாக பூமியின் Mesozoic காலத்தில் இருப்பதற்கான நிபந்தனையா?" (அழுத்தம் பெட்ஸோல்ட்டினுடையது.) இயற்கை விஞ்ஞானம் மெய்யாகவே எதை விரும்புகிறது, பார்வையாளனை எப்படி நாம் "மானசீகமாக புறத்தெறிய" முடியும் என்பதைப் பற்றிய அவெனாரியுசினுடைய வாதத்தை (நான் அதை ஏற்கெனவே மேற்கோள் காட்டியிருக்கிறேன்) எடுத்துக் கூறிய பின்னர் பெட்ஸோல்ட் அதை மறுக்கிறார்:

"பூமி நேற்று அல்லது ஒரு நிமிடத்துக்கு முன்பு எப்படி இருந்திருக்கும் என்று நான் நினைக்கின்ற அதே மாதிரியே நெடுங்காலத்துக்கு முந்திய அந்தச் சகாப்தத்தில் இருந்தது என்று நினைப்பதற்கு எமக்கு உரிமையுண்டா என்பதை நாம் அறிய விரும்புகிறோம். அல்லது (வில்லி கூறியதைப் போல) பூமி இருந்தது என்பதை அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் ஏதோ ஒரு c அமைப்பு ஆகக் கீழான வளர்ச்சி நிலையில் என்றாலும் இருந்தது என்ற குறைந்தபட்சமாக அனுமானிப்பதற்கான நமது உரிமையின் பேரில் அதனது இருப்பு நிபந்தனைக்குட்படுத்தப்படுவதா?" வில்லியின் இந்தக் கருத்தைப் பற்றி நாம் இப்பொழுது எழுதுவோம்.

"கேள்வியை கேட்கின்ற நபர் மானசீகமாக தன்னையே அகற்றிக்கொள்ள முடியாது (அதாவது தான் இல்லாமலிருப்பதாக சிந்திப்பது), அல்லது மானசீகமாக தன்னையே புறத்தெறிவதையும் (Projecting) தவிர்க்க முடியாது (உலகத்தைப் பற்றிய மனிதக் கருத்து, முதல் ஜேர்மன் பதிப்பு, பக்கம் 130ஐப் பார்க்க) என்ற வாதத்தின் மூலம் அவெனாரியுஸ் வில்லியின் விசித்திரமான முடிவிலிருந்து விலகிக் கொள்கிறார். ஆனால் வசிக்க முடியாத பூமியை பற்றிச் சிந்திக்கின்ற செயலுக்கு மட்டுமின்றி, அந்தச் சமயத்தில் பூமி இருந்தது என்ற நம்புகின்ற நியாயத்துக்கும் கேள்வி கேட்கின்ற நபரின் தனிப்பட்ட நானை அல்லது அத்தகைய நானைப் பற்றிய சிந்தனையை அவெனாரியுஸ் நிபந்தனையாக்குகிறார்.

"நாம் நான் என்பதற்கு இவ்வளவு அதிகமான தத்துவார்த்தரீதியான முக்கியத்துவத்தை கொடுக்காவிட்டால் இந்தத் தவறான பாதைகளை நாம் சுலபமாக தவிர்க்க முடியும். நீண்டகாலத்திற்கு முன் இருந்ததா அல்லது எப்போது இருந்தது என்பதைப்பற்றிய பல கருதுகோள்களும் (Conceptions) இருந்தபோதிலும் அறிவு பற்றிய தத்துவம் கூறுவது அதைப்பற்றி சிந்திக்கமுடியுமா என்பது பற்றியே தவிர எஞ்சிய அனைத்துமே விஷேசமான விஞ்ஞானங்களுக்கு உரியதாகும். (தொகுதி , பக்கம் 325).

பெட்ஸோல்ட் காரண காரிய விதிக்கு தனிமுறை நிர்ணயிப்பு விதி என்று மறுபெயரிட்டார்; இவ்விதி மன நிச்சயவாதத்தன்மை உடையது என்பதையும் தன்னுடைய தத்துவத்துக்குள் நுழைத்துக்கொண்டார்; இதை நாம் பின்னர் காண்போம். பெட்ஸோல்ட் கான்ட்டியவாத கருத்துக்களின் உதவியைக் கொண்டு அவெனாரியுசின் அகநிலைக் கருத்துவாதம் மற்றும் ஆன்மீக நித்தியவாதத்திலிருந்து) தன்னை பாதுகாத்துக் கொண்டார் ("அவர் நானுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறார்" என்ற பேராசிரியர்களுக்குரிய சொற்பிரயோகம்) என்பது இதன் அர்த்தமாகும். அவெனாரியுடின் கோட்பாட்டில் புறநிலைக் கூறு இல்லாமலிருப்பது, உயிரினங்கள் (அகப்பொருள்) தோன்றுவதற்கு நெடுங்காலத்துக்கு முன்னரே பூமி (புறப்பொருள்) இருந்து வந்திருக்கிறது என்ற அறிவிக்கின்ற இயற்கை விஞ்ஞானத்தின் கோரிக்கைகளோடு அதைச் சமரசப்படுத்த இயலாமை ஆகியவை காரண காரியத்தை (தனிமுறை நிர்ணயிப்பு) பின்பற்றும்படி பெட்ஸோல்ட்டை நிர்ப்பந்தித்தன. பூமி இருந்தது; ஏனென்றால் மனிதனுக்கு முன்பே அது இருந்ததென்பது பூமி இன்று இருப்பதோடு காரண காரியத்தொடர்பை கொண்டிருக்கிறது. முதலாவதாக, காரண காரியத் தொடர்பு எங்கேயிருந்து வருகிறது? மன நிச்சயவாதத்திலிருந்து என்கிறார் பெட்ஸோல்ட். இரண்டாவதாக, நரகத்தைப் பற்றிய கருத்துக்கள், பேய்கள், லுனச்சார்ஸ்கியின் "மானசீக செலுத்தல்களும்" கூட காரண காரியத்தொடர்பினால் இணைக்கப்படவில்லையா? மூன்றாவதாக, "ஒரு புலனுணர்ச்சிகளின் தொகுதிகள்" என்ற தத்துவம் பெட்ஸோல்ட்டினால் அழிக்கப்படுகிறது. அவெனாரியுசிடம் தான் கண்ட முரண்பாட்டை தீர்ப்பதற்கு பெட்ஸோல்ட் தவறினார்; அவர் மேலும் அதிகச் சிக்கலில் சிக்கிக் கொள்வதை மட்டுமே செய்தார். ஏனென்றால் எமது மனத்தால் பிரதிபலிக்கப்படுகின்ற புற உலகம் மனதிலிருந்து அந்நியமாக (தனித்த முறையில்) இருக்கிறது என்பதை அங்கீகரிப்பது என்ற ஒரே ஒரு தீர்வு மட்டுமே சாத்தியம். இந்த சடவாத தீர்வு மட்டுமே உண்மையில் இயற்கை விஞ்ஞானத்தோடு பொருந்துகிறது; காரணகாரிய பிரச்சினையை பற்றி பெட்ஸோல்ட், மாஹ் ஆகிய இருவருடைய கருத்துவாத தீர்வை அகற்றுகிறது. அதைப் பற்றித் தனியாக எழுதுவோம்.

மூன்றாவது அனுபவவாத விமர்சனவாதியான ரூ. வில்லி 1896ல் எழுதிய Der Empiriokritizismus als einzig wissenschaftlicher Standpunkt ("தனித்த விஞ்ஞான கருத்து என்ற முறையில் அனுபவவாத விமர்சனம்") என்ற கட்டுரையில் அவெனாரியுசின் மெய்யியலில் இருக்கின்ற இந்தச் சிக்கலை பற்றி முதல் தடவையாக பிரச்சினையை எழுப்பினார். மனிதனுக்கு முன்னால் உலகம் இருந்ததா? என்று இங்கே வில்லி கேட்கிறார்; முதலில் அவெனாரியுசிற்கு ஏற்றவாறு பதிலளிக்கிறார்: "நம்மை கடந்தகால சிந்தனைக்குள் மானசீகமாக இருத்திக்கொள்கிறோம்." ஆனால் அனுபவம் என்பதன் கீழ் மனித அனுபவமாகத்தான் நாம் கருத வேண்டும் என்று அவசியமில்லை என்றும் தொடர்ந்து கூறுகிறார். "பிராணி வாழ்க்கையை பொதுவான அனுபவத்தோடு மட்டுமே தொடர்புடையதாக நாம் கருதுவோமானால் பிராணிகளின் உலகத்தை அது மிகவும் அற்பமான புழுவாக இருந்தாலும் கூட பூர்வீக மனிதர்களாகக் கருத வேண்டும்" (73-74). ஆகவே மனிதனுக்கு முன்னால் ஒரு புழுவின் "அனுபவமாக" பூமி இருந்தது; அது அவெனாரியுசின் "ஒருங்கிணைப்பையும்" அவெனாரியுசினுடைய மெய்யியலையும் காப்பாற்றுவதற்காக "பிரதான உறுப்பின்" செயலை நிறைவேற்றியது! அந்த வாதம் முட்டாள்தனத்தின் சிகரமாக (பூமியை பற்றி புவியியலாளர்களின் தத்துவங்களுக்கு பொருந்திவரக் கூடிய கருத்துக்கள் ஒரு புழுவின் மீது சாற்றிக் கூறப்படுகின்றன) இருந்ததனால் மட்டுமல்ல, நம் மெய்யியலாளருக்கு அது எந்தவிதத்திலும் உதவி செய்யாததால் - ஏனென்றால் மனிதனுக்கு மட்டுமல்ல, எந்த உயிரினமும் தோன்றுவதற்கு முன்பே பூமி இருந்தது - பெட்ஸோல்ட் அதிலிருந்து தன்னை பிரித்துக் கொள்ள முயற்சி செய்தது வியப்பல்ல.

வில்லி இந்தப் பிரச்சினைக்கு 1905ல் மறுபடியும் திரும்பினார். புழுவை இப்பொழுது உதறி விட்டார். ஆனால் பெட்ஸோல்ட்டின் "தனிமுறை நிர்ணயிப்பு விதி" (law of unique determination) வில்லிக்கு திருப்தி அளிக்கவில்லை என்பது உண்மையே; அவர் அதைத் "தர்க்கரீதியான பொதுமை வாதம்" என்று மட்டுமே கருதினார். மனிதனுக்கு முந்திய உலகத்தை பற்றிய பிரச்சினை - பெட்ஸோல்ட் கேட்பதைப் போல - நம்மை "மறுபடியும் பொருட்களை பற்றி சிந்திக்கும் பொது அறிவிற்கு" (அதாவது, சடவாதத்துக்கு! என்ன பயங்கரம்!) "திரும்பவும் கொண்டு போகாதா?" என்று ஆசிரியர் எழுதுகிறார். உயிர் இல்லாமல் கோடிக் கணக்கான வருடங்கள் என்றால் அதன் அர்த்தம் என்ன? "காலம் என்பது ஒருவேளை தன்னிலைப் பொருளா? நிச்சயமாக இல்லை! மனிதனுக்கு வெளியே இருக்கின்ற வஸ்துக்கள் சிந்தனைப்பதிவுகள் மட்டுமே, நம்மைச் சுற்றிலும் நாம் பார்க்கின்ற சில துணுக்குகளின் உதவியினால் மனிதர்கள் கட்டமைத்துக் கொண்ட கனவுப்புனைவின் பகுதிகள் என்று அர்த்தம். ஏன் அப்படி இருக்கக் கூடாது? மெய்யியலாளர் வாழ்க்கை நீரோட்டத்தை கண்டு ஏன் அஞ்ச வேண்டும்?... ஆகவே நான் என்னிடமே சொல்லிக் கொள்கிறேன்: ஆழமான அமைப்புகளை உருவாக்குகின்ற அனைத்தையும் கைவிடு, நீ வாழ்ந்து கொண்டிருக்கின்ற விநாடியை, தான் மட்டுமே உனக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற விநாடியை, இந்த விநாடியை கைப்பிடி.

சரி, சரி, சடவாதம் அல்லது ஆன்மீக நித்தியவாதம்! எவ்வளவு ஆர்ப்பாட்டமாக வார்த்தைகளை கொட்டினாலும் மனிதனுக்கு முன்பிருந்த இயற்கையை பற்றிய பிரச்சினையை ஆராய்கின்ற பொழுது வில்லி இந்த முடிவுக்கே வருகிறார்.

பொழிப்புரையாக, அனுபவவாத விமர்சனத்தின் மூன்று ஆருடக்காரர்கள் நமக்கு முன்னால் தோன்றினார்கள்; தங்களுடைய மெய்யியலை இயற்கை விஞ்ஞானத்தோடு சமரசப்படுத்துவதற்காக, ஒருவரின் சொந்த சிந்தனை மட்டுமே உள்ளது என்ற கருத்தின் (ஆன்மீக நித்தியவாதத்தின்) ஓட்டைகளை அடைப்பதற்காக தங்களுடைய நெற்றிகளில் வியர்வை வடியப் பாடுபட்டார்கள். அவெனாரியுஸ் ஃபிஹ்டேயின் வாதத்தை திருப்பிச் சொல்லி மெய்யான உலகத்துக்கு பதிலாக ஒரு கற்பனை உலகத்தை ஏற்படுத்தினார். பெட்ஸோல்ட் ஃபிஹ்டேயின் கருத்துவாதத்தை நோக்கிச் சென்றார். வில்லியின் "புழு" விவகாரம் தோல்வியில் முடிவடைந்தபடியால் அதைக் கைவிட்ட பின்னர் தன்னையறியாமலே உண்மையை - சடவாதம் அல்லது ஆன்மீக நித்தியவாதம் அல்லது இந்த விநாடியை தவிர வேறு எதையும் அங்கீகரிப்பதில்லை என்பதை சொல்லிவிட்டார்.

எமது உள்நாட்டு மாஹியவாதிகள் எப்படி இந்தப் பிரச்சனையை புரிந்து கொண்டார்கள், கடைப்பிடித்தார்கள் என்பதை வாசகருக்கு எடுத்துக்காட்டுகின்ற வேலை மட்டுமே நமக்கு எஞ்சியிருக்கிறது. மார்க்சிச மெய்யியல் ''பற்றிய'' ஆராய்ச்சிகள் (பக்கம் 11) என்ற நூலில் பஸாரவ் பின்வருமாறு எழுதுகிறார்.

"நமது நம்பிக்கையான கைநூலின் (vademecum)" (அதாவது, பிளெஹானவின்) "வழிகாட்டுதலின் கீழ் ஒருவரின் சொந்த சிந்தனை மட்டுமே உள்ளது என்ற கருத்தின் (ஆன்மிக நித்தியவாத) நரகத்தின் கடைசி மற்றும் மிகவும் கோரமான வட்டத்துக்குள், மீன் இனங்களும் (இக்தியோசாரஸ்களும்) தொல்லிறகிகளும் (ஆர்க்கியோப்டெரிக்சஸ்களும்) உலகத்தை எப்படிக் கற்பனை செய்திருக்குமோ அப்படி கற்பனையில் பார்க்கின்ற அவசியம் ஒவ்வொரு அகநிலைக் கருத்துவாதியையும் துன்புறுத்தும் என்று பிளெஹானவ் நமக்கு உறுதியளிக்கிறாரே. அந்த வட்டத்துக்குள் இறங்குவது மட்டுமே இப்பொழுது நமக்கு எஞ்சியிருக்கிறது. 'மனிதனுக்கு மிகவும் நெடுங்காலத்துக்கு முந்திய மூதாதையர்கள் மட்டுமே பூமியில் வாழ்ந்த சகாப்தத்துக்கு, உதாரணமாக விமீsஷீக்ஷ்ஷீவீநீ காலத்துக்கு மனோரீதியாய் நாம் செல்வோம். அப்பொழுது வெளி, காலம் மற்றும் காரண காரியத் தொடர்பின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது. அப்பொழுது அவை எவற்றினுடைய அகநிலை வடிவங்களாக இருந்தன? அவை கடல்வாழ் உயிரினங்களின் (இக்தியோசாரஸ்களின்) அகநிலை வடிவங்களாக இருந்தனவா? எதன் அறிவு அதன் விதிகளை அப்பொழுது இயற்கையின் மேல் திணித்தது? பறவையினங்களின் (ஆர்க்கியோப்டெரிக்சசின்) அறிவா? கான்ட்டின் மெய்யியலால் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது. நவீன விஞ்ஞானத்துக்கு அது சிறிதும் பொருந்தாது என்ற முறையில் அதை நிராகரிக்க வேண்டும் என்று பிளெஹானவ் எழுதுகிறார். (L. Feuerbach, p. 117).

பிளெஹானவின் மேற்கோளில் மிகவும் முக்கியமான ஒரு பகுதிக்கு சிறிது முன்பாக பஸாரவ் நிறுத்தி விடுகிறார் என்பதை இங்கே எடுத்துக் காட்டுவோம், அதாவது: "அகப்பொருள் இல்லாமல் புறப்பொருள் இல்லை என்று கருத்துவாதம் கூறுகிறது. அகப்பொருள் தோன்றுவதற்கு மிகவும் நெடுங்காலத்துக்கு முன்பே, அதாவது உணரக்கூடிய அளவுக்கு உணர்வை கொண்ட உயிரினங்கள் தோன்றுவதற்கு நெடுங்காலத்துக்கு முன்பே புறப்பொருள் இருந்தது என்பதை பூமியின் வரலாறு எடுத்துக் காட்டுகிறது... வளர்ச்சியின் வரலாறு சடவாதத்தின் உண்மையை எடுத்துக் காட்டுகிறது".

நாம் பஸாரவின் மேற்கோளைத் தொடர்வோம்:

"...ஆனால் பிளெஹானவின் பொருள் விருப்பப்பட்ட தீர்வைத் தருகிறதா? பிளெஹானவ் கூட பொருட்கள் தம் நிலையில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள முடியாது, அவற்றின் வெளிப்பாடுகளை மட்டுமே, எமது புலன் உறுப்புகளின் மீது அவற்றின் செயலின் விளைவுகளை மட்டுமே நாம் அறிகிறோம் என்று கூறுகிறார் என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். 'இந்த நடவடிக்கையை தவிர அவற்றுக்கு வேறு அம்சம் கிடையாது (லு. ஃபாயர்பாஹ், பக்கம் 112). மீன் இனங்களின் காலத்தில் எந்தப் புலன் உறுப்புகள் இருந்தன? மீன் இனங்கள் மற்றும் அவை போன்றவற்றின் புலன் உறுப்புகள் மட்டுமே என்பது வெளிப்படை. அன்று மீன் இனங்களின் கருத்துக்கள் மட்டுமே தன்னிலைப் பொருட்களின் மெய்யான, உண்மையான வெளிப்பாடுகளாக இருந்தன. ஆகவே பிளெஹானவின் கூற்றின்படியே புதைபடிவ ஆராய்ச்சியாளர் 'மெய்யான' தளத்தின் மேல் நிற்க விரும்பினால், அவர் இக்தியோசாரஸ்களின் கருத்துக்களின் ஒளியில் Mesozoic காலத்தின் வரலாற்றை எழுத வேண்டும். ஆகவே இங்கு ஆன்மீக நித்தியவாதத்தோடு ஒப்பிடுகின்ற பொழுது ஒரு காலடி கூட முன்னே எடுத்து வைக்கப்படவில்லை."

இது ஒரு மாஹியவாதியின் முழுமையான வாதம் (நீண்ட மேற்கோளைக் கொடுத்திருப்பதற்காக வாசகர் மன்னிக்க வேண்டும் - நம்மால் அதைத் தவிர்க்க முடியவில்லை). குழப்பத்துக்கு முதல் தரமான உதாரணமாக இந்த வாதத்தை கருத முடியும்.

பிளெஹானவ் தன்னிடம் சிக்கி விட்டார் என்று பஸாரவ் கற்பனை செய்கிறார். சுயமான பொருட்களுக்கு எமது புலன் உறுப்புகளின் மேல் அவற்றின் தாக்கங்களை தவிர தமக்கு சொந்தமான எந்த தன்மையும் (Aspect-அம்சமும்) இல்லையென்றால்  Mesozoic சகாப்தத்தில் மீன்இனங்களின் (இக்தியோசாரஸ்களின்) புலன் உறுப்புகளில் ''தன்மை'' ("அம்சம்") என்பதை தவிர அவை இருக்கவில்லை. இது சடவாதியின் வாதமா?! ஒரு ''தன்மை" (அம்சம்") புலன் உறுப்புகளின் மீது "சுயபொருட்களின்" செயலின் விளைவு என்றால், ஏதாவதொரு வகையான புலன் உறுப்புகளிலிருந்து சுதந்திரமாக பொருட்கள் இருக்கவில்லை என்பது அதிலிருந்து தொடர்கிறதா?

பிளெஹானவின் வார்த்தைகளை பஸாரவ் உண்மையாகவே "தவறாகப் புரிந்து கொண்டதாக" (அத்தகைய அனுமானம் நடக்கமுடியாததாக இருந்த போதிலும்), அவை அவருக்குப் புரியவில்லை என்று நாம் ஒரு கண நேரம் அனுமானிப்போம். அப்படியே இருக்கட்டும். நாம் கேட்கின்றோம்: பஸாரவ் பிளெஹானவுடன் (சடவாதத்தின் ஒரே பிரதிநிதியாக அவரை உயர்த்துவது மாஹியவாதிகள் தானே!) வாள் சண்டை போடுகிறாரா அல்லது அவர் சடவாதத்தின் பிரச்சினையை விளக்குவதற்கு முயற்சிக்கிறார்? உமக்குப் பிளெஹானவ் புரியாமலோ அல்லது முரண்பாடாகவோ அல்லது மற்றும் இதரவையாகவோ தோன்றியிருந்தால், மற்ற சடவாதிகளிடம் நீங்கள் ஏன் போகவில்லை? அவர்களைப் பற்றி உங்களுக்கு தெரியாது என்பதனாலா? ஆனால் அறியாமை ஒரு வாதமல்லவே.

சடவாதத்தின் அடிப்படை முற்கூற்று புறஉலகத்தை, நம் மனதிற்கு அப்பாலும் அதிலிருந்து சுதந்திரமான முறையிலும் பொருட்கள் இருப்பதை அங்கீகரிப்பதே என்பது பஸாரவுக்குத் தெரியாவிட்டால், இது உண்மையாகவே வடிகட்டிய முட்டாள் தனத்துக்கு சிறந்த உதாரணமே, பேர்க்லி 1710ல், மனதிலிருந்து சுதந்திரமான முறையில் இருக்கின்ற, நம்முடைய மனதினால் பிரதிபலிக்கப்படுகின்ற "தன்னிலைப் பொருட்களை" (Objects in Themselves)) அங்கீகரிப்பதற்காக சடவாதிகளை கடிந்து கொண்டார் என்பதை நாம் வாசகருக்கு நினைவுபடுத்துகிறோம். சடவாதிகளுக்கு எதிராக பேர்க்லியுடனோ அல்லது வேறு எவருடனோ சேருவதற்கு ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உண்டு என்பது திண்ணம்; அது மறுக்கப்பட முடியாததே. ஆனால் சடவாதிகளை பற்றிப் பேசுவதும் அனைத்து சடவாதத்தின் அடிப்படையான முற்கூற்றை திரித்துக் கூறுவது அல்லது புறக்கணிப்பது இப்பிரச்சினையில் மன்னிக்க முடியாத குழப்பத்தை ஏற்படுத்துவதாகும் என்பதும் அதே அளவுக்கு மறுக்க முடியாததாகும்.

கருத்துவாதத்தில் அகப்பொருள் இல்லாமல் புறப்பொருள் இல்லை, ஆனால் சடவாதத்தில் அகப்பொருளிலிருந்து சுதந்திரமான முறையில் புறப்பொருள் இருக்கிறது, அது ஏறத்தாழ போதுமான அளவுக்கு அகப்பொருளின் மூளையில் பிரதிபலிக்கப்படுகிறது என்று பிளெஹானவ் கூறியது சரியானதா? இது தவறு என்றால், மார்க்சிசத்துக்கு சிறிதளவு மரியாதை காட்டுகின்ற எந்த நபரும் பிளெஹானவின் இந்தத் தவறை சுட்டிக் காட்டியிருக்க வேண்டும்; பின்னர் சடவாதம் மற்றும் மனிதனுக்கு முன்னால் இயற்கை இருந்ததை பற்றிய பிரச்சினையில் அவரை அல்ல, வேறு யாரையாவது, மார்க்ஸ், ஏங்கெல்ஸ் அல்லது ஃபாயர்பாஹை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இது சரி என்றால் அல்லது -குறைந்த பட்சம்- உங்களால் இங்கே ஒரு தவறைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் சீட்டுக்களை கலைத்துப் போட்டு கருத்துவாதத்தை பற்றி மிகவும் ஆரம்பக் கருத்தோட்டத்தை பற்றி வாசகருடைய மனதை குழப்புவதற்கு நீங்கள் முயற்சி செய்வது இலக்கியத்தை அசிங்கப்படுத்துவதாகும்.

பிளெஹானவ் உச்சரிக்கின்ற ஒவ்வொரு சிறிய வார்த்தையையும் ஆதாரமாக கொள்ளாமல் பிரச்சினையில் அக்கறை கொண்டிருக்கின்ற மார்க்சிசவாதிகளை பொறுத்தமட்டில், நாம் லு. ஃபாயர்பாஹின் கருத்தை இங்கே மேற்கோள் காட்டுவோம். அவர் சடவாதியாக இருந்தார் என்பது நன்கு தெரிந்ததே (ஒருவேளை பஸாரவுக்குத் தெரியாதிருக்கலாம்). மார்க்சும் ஏங்கெல்சும் ஹெகலின் கருத்துவாதத்திலிருந்து அவர் மூலமாகத்தான் தங்கள் சடவாத மெய்யியலுக்கு வந்தார்கள் என்பதும் மிகவும் நன்கு தெரிந்ததே. ரூ. ஹைமுக்குப் பதிலளித்த பொழுது ஃபாயர்பாஹ் பின்வருமாறு எழுதினார்.

"மனிதன் அல்லது மனதின் புறப்பொருளாக இல்லாத இயற்கை ஊகரீதியான மெய்யியலின் படியோ அல்லது குறைந்தபட்சம் கான்ட்டின் கருத்துவாதத்துக்கு தன்னிலைப்பொருளாக இருப்பது (நம்முடைய மாஹியவாதிகள் கான்ட்டின் தன்னிலைப் பொருளை சடவாத தன்னிலைப் பொருளோடு குழப்புவதை பற்றி நாம் பிறகு விரிவாக எழுதுவோம்), "யதார்த்தம் இல்லாத வெறுமையான கருத்தாக்கமாக இருக்கிறது; ஆனால் இயற்கையே கருத்துவாதத்துக்கு வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இயற்கை விஞ்ஞானம் (குறைந்த பட்சம் அதன் இன்றைய நிலையில்) மனித வாழ்க்கைக்குரிய நிலைமைகள் இன்னும் ஏற்படாமலிருந்த காலத்துக்கு, இயற்கை, அதாவது பூமி மனிதனுடைய கண் மற்றும் மனதின் புறப்பொருளாக இன்னும் ஆகாதிருந்த பொழுது, ஆகவே இயற்கை முற்றிலும் மனிதத்தன்மை அல்லாத பொருளாக (absolut unmenschliches Wesen இருந்த காலத்துக்கு நம்மை அவசியமாக பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. கருத்துவாதம் இப்படிப் பதில் கூறலாம்: இந்த இயற்கையும் கூட உங்களால் சிந்தனை செய்யப்பட்ட ஏதோ ஒன்றுதானே (von dir gedachte). நிச்சயமாக, ஆனால் இந்த இயற்கை ஒரு காலத்தில் உண்மையில் இருக்கவில்லை என்பது இதிலிருந்து தொடரவில்லை. ஸாக்ராட்டீசையும் பிளாட்டோவையும் பற்றி நான் நினைக்காவிட்டால் எனக்கு அவர்கள் இருக்கவில்லை என்பதனால் ஒரு காலத்தில் ஸாக்ராட்டீசும் பிளாட்டோவும் நான் இல்லாமல் இருக்கவில்லை என்று கூற முடியாததை போன்றதே இதுவும்."

மனிதன் தோன்றுவதற்கு முன்பே இயற்கை இருந்தது என்ற கருத்து நிலையிலிருந்து ஃபாயர்பாஹ் சடவாதத்தையும் கருத்துவாதத்தையும் இவ்விதமாகவே கருதினார். அவெனாரியுசின் குதர்க்கத்தை ("அவதானி மானசீகமாகச் சிந்திப்பது") ஃபாயர்பாஹ் மறுத்தார்; "நவீன காலத்திய நேர்க்காட்சிவாதம்" (positivism) அவருக்கு தெரியாது; ஆனால் பழைய கருத்துவாத குதர்க்கங்களை அவர் மிக முழுமையாக அறிவார். பஸாரவ் நமக்கு புதிதாக சொல்வது முற்றிலும் எதுவுமில்லை; ஆனால் அவர் கருத்துவாதிகளின் இந்தக் குதர்க்கத்தை மட்டுமே திருப்பிச் சொல்கிறார்: "நான் அங்கே (மனிதனுக்கு முன்னர் பூமியில்) இருந்திருந்தால், நான் இன்னின்ன உலகத்தை பார்த்திருப்பேன்" (மார்க்சிய மெய்யியல் ''பற்றிய'' ஆராய்ச்சிகள், பக்கம் 29). வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால்: வெளிப்படையாக முட்டாள்தனமான, இயற்கை விஞ்ஞானத்துக்கு புறம்பான அனுமானத்தை (அதாவது, மனிதன் வாழ்கின்ற காலத்துக்கு முந்திய சகாப்தத்தில் மனிதன் ஒரு அவதானியாகவே இருக்க முடியும்) நான் செய்தால், என்னுடைய மெய்யியலிலுள்ள ஓட்டையை நான் அடைக்க முடியும்!

பஸாரவ் எடுத்துக் கொண்டிருக்கும் பொருளைப் பற்றி அவருடைய அறிவின் அளவையும் அல்லது அவருடைய இலக்கிய முறைகளையும் பற்றி இது நமக்கு உணர்த்துகிறது. அவெனாரியுஸ், பெட்ஸோல்ட் மற்றும் வில்லி எந்தச் "சிக்கலோடு" போராடினார்களோ, அதைப் பற்றி பஸாரவ் சூசகமாகக் கூடக் குறிப்பிடவில்லை. மேலும், அவர் மொத்தப் பொருளை பற்றியுமே மிகவும் கதம்ப கூளமாக எழுதியிருப்பதால், வாசகருக்கு முன்னால் நம்பவே முடியாத அவியலை வைத்திருப்பதால் முடிவில் சடவாதத்துக்கும் ஆன்மீக நித்தியவாதத்துக்கும் இடையே எந்த வேறுபாடுமே இல்லை எனத் தோன்றுகிறது! கருத்துவாதம் "யதார்த்தவாதமாக" (Realism) பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது. சடவாதம் புலன் உறுப்புகளின் மீது தங்களுடைய தாக்கங்களுக்கு வெளியே பொருட்கள் இருப்பதை மறுப்பதாக சொல்லப்படுகிறது.! மெய்யாகவே, சடவாதத்துக்கும் கருத்துவாதத்துக்கும் இடையில் உள்ள ஆரம்ப வேறுபாடு கூட ஃபாயர்பாஹூக்குத் தெரியாது, அல்லது பஸாரவ் மற்றும் கூட்டினரின் மெய்யியலின் தொடக்க உண்மைகளை முழுமையாக மாற்றி விட்டார்கள்.

அல்லது நாம் வலென்தீனோவை எடுத்துக்கொள்வோம். இம்மெய்யியலாளர் பஸாரவை பற்றி பெருமகிழ்ச்சி அடைவது இயற்கையே: 1) "பேர்க்லி அகப்பொருள், புறப்பொருளின் சார்பு நிலையைப் பற்றிய பரஸ்பர பொருத்த தத்துவத்தை நிறுவினார்" (148). ஆனால் இது பேர்க்லியின் கருத்துவாதமல்ல, இல்லை! இது "ஆழமான பகுப்பாய்வு"! 2) "இத்தத்துவத்தின் அடிப்படையான முற்கூற்றுகளை அவற்றின் மிக யதார்த்தமான அம்சத்தில், அவற்றின் வழக்கமான கருத்துவாதப் பொருள்விளக்கத்தின் (பொருள் விளக்கம் மட்டும்தானா!) வடிவங்களுக்கு (!) சம்பந்தமற்ற முறையில் அவெனாரியுஸ் வகுத்தளிக்கிறார்" (148). குழந்தைகள்தான் மயங்கி விடுவார்கள். 3) "ஒவ்வொரு தனி நபரும் ஒரு திட்டவட்டமான சூழலில் இருக்கிறார், வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் தனி நபரும் சூழலும் ஒரு மற்றும் அதே மாதிரியான ஒருங்கிணைப்பின் இணைக்கப்பட்ட, பிரிக்கப்பட முடியாத (!) உறுப்புகளாக தரப்படுகின்றன என்பது அறிவின் ஆரம்ப நிலை பற்றிய அவெனாரியுசின் கருத்தோட்டம்" (148). பிரமாதம்! இது கருத்து வாதம் அல்ல - வலென்தீனோவும் பஸாரவும் சடவாதத்துக்கும் கருத்துவாதத்துக்கும் மேலே போய்விட்டார்கள்; அகப்பொருள் மற்றும் புறப்பொருளின் "பிரிக்க முடியாத தன்மை" எல்லாவற்றையும் காட்டிலும் மிகவும் "யதார்த்தமானது". 4) "இதற்கு எதிரான கூற்று, அதாவது தனி நபர் என்ற பிரதான உறுப்புக்குப் பொருத்தமாக இருக்கக் கூடிய எதிர் உறுப்பு இல்லை என்பது சரிதானா? அது சரியல்ல என்பது இயற்கையே(!)... ஆர்க்கிய சகாப்தத்தில் பசுமை மிக்க காடுகள் இருந்தன... ஆனால் மனிதன் இல்லை" (148). அப்படியானால் பிரிக்க முடியாதது பிரிக்கப்பட முடியும் என்று அர்த்தம்! இது "இயற்கையாக" இல்லையா? 5) "எனினும் அறிவுத் தத்துவத்தின் நிலையிலிருந்து பார்த்தால், புறப்பொருளை பற்றிய பிரச்சினையே முட்டாள்த்தனமானது" (148). உண்மைதான்! புலனறிவாற்றலுள்ள உயிரிகள் இல்லாத பொழுது பொருட்கள் புலனுணர்ச்சிகளோடு முழுதொத்த மூலக்கூறுகளின் தொகுதியாக" இருந்தன! 6) "ஷூபெர்ட்-ஸோல்டெர்ன், ஷூப்பே ஆகியோரை முன்னிறுத்திய இம்மனேண்டிஸ்டு மரபு இந்த (!) சிந்தனைகளை பொருத்தமற்ற வடிவத்தில் புனைந்தது; ஒருவரின் சொந்த சிந்தனை மட்டுமே உள்ளது என்ற (ஆன்மீக நித்திய) வாதத்தின் முட்டுச் சந்தில் விழுந்தது" (149). ஆனால் "இந்த சிந்தனைகள்" தாமே ஆன்மீக நித்தியவாதத்தை கொண்டிருக்கவில்லை, மற்றும் அனுபவவாத விமர்சனமுமில்லை; அவெனாரியுசுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் என்று பொய்யாக அறிவிக்கின்ற இம்மனேண்டிஸ்டுகளின் பிற்போக்குத் தத்துவங்களின் பொழிப்புரையுமல்ல !

மாஹியக் கனவான்களே! இது புரிந்து கொள்ள முடியாத வார்த்தைக் கூளமே தவிர மெய்யியல் அல்ல.

Notes

[1] J. G. Fichte, Rezension des Aenesidemus [Review of Aenesidemus], 1794, Sämtliche Werke, Bd. I, S. 19. —Lenin

[2] Vierteljahrsschrift für wissenschaftliche Philosophie. Band XX. 1896. —Lenin

[3] R. Willy, Gegen die Schulweisheit [Against School Wisdom], 1905, S. 173-78. —Lenin

[4] We shall discuss this point with the Machians later. —Lenin

[5] L. Feuerbach, Sämtliche Werke [Collected Works], herausgegeben von Bolin und Jodl, Band VII, Stuttgart, 1903, S. 510; or Karl Grün, L. Feuerbach in seinem Briefwechsel und Nachlass, sowie in seiner philosophischen Charakterentwicklung [His Correspondence, Posthumous Works and Philosophical Development], I. Band, Leipzig, 1874, S. 423-35. —Lenin

[6] It can be seen from Lenin’s letter to A. I. Ulyanova-Yelizarova, dated December 6 (19), 1908, that the original phrase in the manuscript, viz., "Lunacharsky even ‘mentally projected’ for himself a god", was toned down because of the censorship. Lenin wrote in his letter: "\thinspace‘Mentally projected for himself a god’ should be altered to ‘mentally projected for himself’—well to use a mild expression—‘religious conceptions’, or something of that sort" (Collected Works, present edition, Vol. 37, p. 403).

êìõ£îº‹ ÜÂðõõ£î Mñ˜êùº‹

Critical Comments on a Reactionary Philosophy
 (Chapter One: The Theory of Knowledge of Empirio-Criticism and of Dialectical Materialism. I )

5. Does Man Think With The Help of the Brain?

5. மனிதன் மூளையின் உதவியினால் சிந்திக்கிறானா?

பஸாரவ் இந்தக் கேள்விக்கு ஆமாம் என்று உறுதியான முறையில் பதிலளிக்கிறார். அவர் பின்வருமாறு எழுதுகிறார்: 'நனவு என்பது பருப்பொருளின் உள்ளார்ந்த நிலைமை' (? பஸாரவ்) என்ற பிளெஹானவின் கருத்துரைக்கு மேலும் திருப்தியான வடிவத்தை கொடுக்கலாமென்றால், உதாரணமாக 'ஒவ்வொரு மனோரீதியான செயற்பாடும் பெருமூளை செயற்பாட்டின் ஒரு தொழிற்பாடே' என்றால் மாஹ், அவெனாரியுஸ் இருவருமே அதை மறுக்க முடியாது..."

(மார்க்சிச மெய்யிய"லில்" ஆராய்ச்சிகள், பக்கம் 29)

சுண்டெலிக்கு பூனையைக் காட்டிலும் வலிமையான மிருகம் கிடையாது. ரஷ்ய மாஹியவாதிகளுக்கு பிளெஹானாவைக் காட்டிலும் சிறந்த சடவாதி கிடையாது. நனவு எனப்படுவது பருப்பொருளின் உள்ளார்ந்த நிலைமை என்ற சடவாத கருத்துரையை முன்வைத்த ஒரே நபர் அல்லது முதல் நபர் உண்மையிலேயே பிளெஹானவ் என்றால்? சடவாதத்தை பிளெஹானவ் வகுத்துரைத்தது பஸாரவுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவர் ஏங்கெல்சையோ அல்லது ஃபாயர்பாஹையோ எடுத்துக்கொள்ளாமல் பிளெஹானவை ஏன் எடுத்துக்கொண்டார்?

ஏனென்றால் மாஹியவாதிகள் உண்மையை ஒத்துக்கொள்வதற்கு அஞ்சுகிறார்கள். அவர்கள் சடவாதத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள். ஆனால் தாங்கள் பிளெஹானாவை மட்டுமே எதிர்த்துப் போராடுவதாக பாசாங்கு செய்கிறார்கள். இது பேடித்தனமான, கொள்கைகோட்பாடற்ற முறையாகும்.

ஆனால் நாம் அனுபவவாத விமர்சனத்துக்கு திரும்புவோம். சிந்தனை மூளையின் செயல்பாடு என்ற கருத்தை அவெனாரியுஸ் "மறுக்க முடியாது". பஸாரவினுடைய இந்த வார்த்தைகளில் நேரடியான பொய் இருக்கிறது. இந்த சடவாத கருத்துரையை பற்றி அவெனாரியுஸ் எதிர்ப்பது மட்டுமல்லாமல், அதை நிராகரிப்பதற்காக ஒரு முழு "தத்துவத்தையே" உருவாக்குகிறார். "நமது மூளை சிந்தனையின் இருப்பிடமோ, இருக்கையோ, அதைப் படைத்தவனோ அல்ல; அது சிந்தனையின் கருவி அல்லது உறுப்பு, ஆதரவு அல்லது அடித்தளமோ மற்றும் இதரவையும் அல்ல" என்று அவெனாரியுஸ் உலகத்தைப் பற்றிய மனிதக் கருத்து என்ற நூலில் கூறுகிறார் (பக்கம் 76 - மாஹ் தன்னுடைய புலனுணர்ச்சிகளின் பகுப்பாய்வு என்ற நூலில் இதை அங்கீகாரத்தோடு மேற்கோள் காட்டுகிறார், பக்கம் 32). "சிந்தனை வசிப்பவரோ அல்லது ஆணையிடுபவரோ அல்லது அதன் மறுபாதியோ அல்லது பக்கமோ, இதரவையோ அல்ல; அது உற்பத்தியல்ல, உடலியல் செயற்பாடு கூட அல்ல அல்லது மூளையின் பொது நிலைமையும் அல்ல" (அதே பக்கம்). இதற்குச் சிறிதும் குறையாத வன்மையோடு அவெனாரியுஸ் தன்னுடைய குறிப்புகளில் எழுதுகிறார்; 'சிந்திப்பவை (கருத்துக்கள்)" "மூளையின் (உடலியல், உளவியல் அல்லது உளவியல் பௌதிகவியல்) செயல்கள் அல்ல" (முன்னர் குறிப்பிட்ட நூல், பக்கம் 115, பக்கம் 419). புலனுணர்வு "மூளையின் உடலியல் செயற்பாடுகள்" அல்ல (பக்கம் 116).

ஆகவே மூளை சிந்தனையின் உறுப்பு அல்ல, சிந்தனை மூளையின் செயல் அல்ல என்று அவெனாரியுஸ் கூறுகிறார். ஏங்கெல்சை எடுத்துக்கொண்டால், நேரடியாக இதற்கு மாறான வெளிப்படையான சடவாத வகுத்துரைத்தல்களை நாம் உடனடியாக காண்கிறோம். "சிந்தனையும் நனவும் மனித மூளையின் உற்பத்திகள்" என்று ஏங்கெல்ஸ் டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலில் கூறுகிறார் (ஐந்தாவது ஜேர்மன் பதிப்பு, பக்கம் 22). அப்புத்தகத்தில் இக்கருத்து அடிக்கடி வலியுறுத்தப்படுகிறது. லுட்விக் ஃபாயர்பாஹில் ஃபாயர்பாஹ் மற்றும் ஏங்கெல்சினுடைய கருத்துக்களின் பின்வரும் விளக்கத்தை காண்கிறோம்: "...நாம் இருக்கின்ற பொருளாதாய (Stofflich), புலன் உறுப்புகளினால் அறியத்தக்க உலகமே ஒரே யதார்த்தமாகும்"; "நமது நனவும் சிந்தனையும் - அவை எவ்வளவுதான் புலனுணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவையாக தோன்றினாலும் - மூளை என்ற பொருளாதாய உடலுறுப்பின் (material, bodily) உற்பத்தியே(Erzeugnis). பருப்பொருள் சிந்தனையின் உற்பத்தி அல்ல; ஆனால் மனம் என்பது பருப்பொருளின் ஆக உயர்ந்த உற்பத்தியாகும்; இது கலப்பற்ற சடவாதம் என்பது திண்ணம்" (நான்காவது ஜேர்மன் பதிப்பு, பக்கம் 18). அல்லது நான்காம் பக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்: "சிந்திக்கின்ற மூளையில்" இயற்கையின் நிகழ்வுப் போக்குகளின் பிரதிபலிப்பைப் பற்றி அவர் அந்தப் பக்கத்தில் எழுதுகிறார்.[5] இதரவை, இதரவை.

இந்த சடவாதக் கருத்து நிலையை அவெனாரியுஸ் நிராகரிக்கிறார்: "சிந்தனை செய்கின்ற மூளை" என்பது "இயற்கை விஞ்ஞானத்தின் குருட்டு வழிபாடு" (உலகத்தை பற்றிய மனிதக் கருத்து, இரண்டாவது ஜேர்மன் பதிப்பு, பக்கம் 70). ஆகவே இந்த விஷயத்தில் இயற்கை விஞ்ஞானத்தோடு தாம் முழுமையாக வேறுபடுவதை பற்றி அவருக்கு எவ்விதமான பிரமைகளும் கிடையாது. இயற்கை விஞ்ஞானம் இயல்பான, சுய நனவற்ற சடவாத நிலையை கொண்டிருக்கிறது என்று - மாஹையும் மற்ற அனைத்து இம்மனேண்டிஸ்டுகளையும் போல - அவரும் ஒத்துக்கொள்கிறார். "இன்றைய உளவியலுடன்" நான் நிபந்தனையற்ற வகையில் வேறுபடுகிறேன் (குறிப்புகள், பக்கம் 150, இதரவை) என்று அவர் ஒத்துக் கொள்கிறார், வெளிப்படையாக அறிவிக்கிறார். இன்றைய உளவியல் ஒத்துக்கொள்ள முடியாத "உள்ளத்தமைத்தல்" (Introjection) -இது எமது மெய்யியலாளரால் உருவாக்கப்பட்ட புதிய சொல்- அதாவது, மூளைக்குள் சிந்தனையை செலுத்துவது அல்லது நமக்குள் புலனுணர்ச்சிகளை செலுத்துவது என்ற தவறை செய்கிறது. இந்த "இரண்டு சொற்களும்" (வீஸீtஷீ us—வீஸீ uஸீs- எம்முள் நுழைப்பது) அனுபவவாத விமர்சனம் நிராகரிக்கின்ற அனுமானத்தை கொண்டிருக்கின்றன என்று அவெனாரியுஸ் தொடர்கிறார். "கண்ணுக்குப் புலப்படுவது, இதரவற்றை மனிதனுக்குள் நுழைப்பதை நாங்கள் உள்ளத்தமைத்தல் (introjection) என்கிறோம்"

உள்ளத்தமைத்தல், "எனக்கு முன்னால்" என்பதற்கு பதிலாக "எனக்குள்" என்பதை உபயோகிப்பதன் மூலம் "(உண்மையான) சுற்றுச்சூழலின் ஒருபகுதியை (கருத்தியலான) சிந்தனையின் ஒருபகுதியாக மாற்றி" (அதே பக்கம்) "கொள்கையளவில்" "உலகத்தைப் பற்றிய இயற்கையான கருதுகோளிலிருந்து" விலகி விடுகிறது. "கொடுக்கப்பட்டதில் அல்லது நாம் காண்பதில், சுயேச்சையாகவும் தெளிவாகவும் தன்னை வெளிப்படுத்துகின்ற இயந்திரமயமற்ற" (மனோரீதியான என்பதற்கு பதிலாக ஒரு புதிய சொல்) "நிலையிலிருந்து மத்திய நரம்பு மண்டலத்தில் மர்மமாக தன்னை மறைத்துக் கொள்கின்ற (Latitierendes என்கிறார் அவெனாரியுஸ் - மற்றொரு புதிய சொல்) ஏதோ ஒன்றை ஏற்படுத்துகிறது" (அதே பக்கம்).

அனுபவவாத விமர்சனவாதிகளும் இம்மனேண்டிஸ்டுகளும் "வெகுளித்தனமான யதார்த்தவாதத்தை" சிறப்பாக ஆதரித்த பொழுது நாம் சந்தித்த அதே புதிராக்கம் இங்கே உள்ளது. இங்கே அவெனாரியுஸ் துர்கேனெவின் போலி அறிஞனின் அறிவுரையை பின்பற்றி நடக்கிறார்[6]: உன்னிடம் இருக்கின்ற குறைகளையே நீ மற்றவர்களிடம் மிகவும் அதிகமாக கண்டனம் செய்ய வேண்டும். அவெனாரியுஸ் கருத்துவாதத்துடன் போராடுவதை போல பாசாங்கு செய்ய முயற்சிக்கிறார்: மெய்யியல் கருத்துவாதம் வழக்கமாக உள்ளத்தமைத்தலில் இருந்து (Introjection) வருவிக்கப்படுகிறது, வெளிப்புற உலகம் புலனுணர்ச்சியாக, கருத்தாக மற்றும் இதரவையாக மாற்றப்படுகிறது, பார்த்தீர்களா? நானோ மனித மூளைக்குள் வெளிப்புற உலகத்தை செலுத்தாமல் கொடுக்கப்பட்ட எல்லாவற்றின் - "நான்", சுற்றுப்புறம் ஆகிய இரண்டின் - சம அளவான யதார்த்தத்தை, "வெகுளித்தனமான யதார்த்தவாதத்தை" ஆதரிக்கிறேன்.

இங்கேயுள்ள குதர்க்கம் பிரபலமான ஒருங்கிணைப்பு உதாரணத்தின் போது நாம் கவனித்த அதே மாதிரியானதே. கருத்துவாதத்தை தாக்குவதன் மூலம் வாசகரின் கவனத்தை திருப்புகின்ற பொழுது அவெனாரியுஸ் ஒரளவுக்கு வித்தியாசமான சொற்களில் என்றாலும் - உண்மையில் கருத்துவாதத்தை ஆதரிக்கவே செய்கிறார்: சிந்தனை மூளையின் செயல் அல்ல; மூளை சிந்தனையின் உறுப்பு அல்ல; புலனுணர்ச்சிகள் நரம்பு மண்டலத்தின் செயல் அல்ல; இல்லை, புலனுணர்ச்சிகள் - "மூலக்கூறுகள், ஒரு தொடர்பில் உளவியல் தன்மையானவை, மூலக்கூறுகள் இன்னொரு தொடர்பில் "ஒரே மாதிரியாக" இருந்த போதிலும்) அவை உடலியல் தன்மையானவை. அவருடைய புதிய, குழப்பமான சொற்பிரயோகத்தால், புதிய "தத்துவத்தை" கூறுவதாக கருதுகின்ற அவருடைய புதிய, படாடோபமான சொற்களால் அவெனாரியுஸ் சற்று மூச்சு வாங்கிக் கொள்கிறார்; பின்னர் தம்முடைய அடிப்படையான கருத்துவாத முதற்கூற்றுக்கு திரும்பி விடுகிறார்.

நமது ரஷ்ய மாஹியவாதிகள் (உதாரணமாக, பக்தானவ்) இந்தப் "புதிராக்கத்தை" பார்க்கத் தவறிவிட்டு அதன் "புதிய" ஆதரவில் கருத்துவாத மறுப்பை கண்டு பிடித்தார்கள் என்றால், அனுபவவாத விமர்சனத்தை பற்றி தொழில்முறை மெய்யியல்வாதிகளுடைய பகுப்பாய்வில் அவெனாரியுசினுடைய கருத்துக்களின் உண்மையான தன்மையை -அதன் படாடோபமான சொற்பிரயோகத்தை அகற்றிவிட்டால், தன்னுடைய சுய வடிவத்தை காட்டிவிடும்- நிதானமான மதீப்பீட்டை பார்க்கிறோம்.

1903ல் பக்தானவ் பின்வருமாறு எழுதினார் (சமுதாயத்தின் உளவியலிலிருந்து என்ற கட்டுரை கோவையில் நெறியாண்மையான சிந்தனை என்ற கட்டுரை, பக்கம் 119 மற்றும் இதரவை):

மனம் மற்றும் உடலின் இருமைவாத (Dualism) வளர்ச்சியைப் பற்றி மிக ஒத்திசைவான, முழுமையான மெய்யியல் சித்திரத்தை ரிச்சார்ட் அவெனாரியுஸ் முன்வைத்தார். 'உட்செலுத்துதல் கோட்பாட்டின்' சுருக்கம் பின்வருமாறு": (பௌதிகப் பொருட்களை மட்டுமே நாம் நேரடியாக பார்க்கிறோம், மற்றவர்களுடைய அனுபவங்களை, அதாவது மற்றொரு நபரின் அறிவை அனுமானத்தின் மூலமாக மட்டுமே உய்த்துணர்கிறோம்)... "அடுத்த நபரின் அனுபவங்கள் அவருடைய உடலில் இருக்கின்றன, அவருடைய உடலமைப்புக்குள் நுழைக்கப்படுவதாக (உள்ளத்தமைத்தல்) (Introjection) என்று அனுமானிக்கப்படுகின்ற மெய்விவரம் இந்த அனுமானத்தை சிக்கலாக்குகிறது. இது ஏற்கெனவே ஒரு மிகையான அனுமானம்; அது எண்ணற்ற முரண்பாடுகளுக்கும் கூட இடம் கொடுக்கிறது. இருமைவாதம் (Dualism) மற்றும் மெய்யியல் கருத்துவாதத்தின் வளர்ச்சியில் தொடர்வரிசையான அடுத்தடுத்து வரும் வரலாற்றுக் காரணிகளை விருத்துரைப்பதன் மூலம் அவெனாரியுஸ் இந்த முரண்பாடுகளை நோக்கி நம் கவனத்தை முறைப்படியாக திருப்புகிறார். ஆனால் இங்கே நாம் அவெனாரியுசைப் பின்பற்ற வேண்டியதில்லை"... "உள்ளத்தமைத்தல், (Introjection) மனம் மற்றும் உடலின் இருமைவாதத்துக்கு ஒரு விளக்கமாக இருக்கிறது."

"உள்ளத்தமைத்தல்" (Introjection) கருத்துவாதத்துக்கு எதிரானது என்று தொழில்ரீதியான மெய்யியல் வைத்த இரையை பக்தானவ் விழுங்கிவிட்டார். உள்ளத்தமைத்தலைப் பற்றி அவெனாரியுஸ் கொடுத்த மதிப்பீட்டின் பெருமதிப்பை பக்தானவ் ஏற்றுக் கொண்டார்; சடவாதத்துக்கு எதிராக திருப்பப்பட்டிருந்த முள்ளைக் கவனிக்க தவறினார். சிந்தனை மூளையின் செயல் என்பதை, புலனுணர்ச்சிகள் மனிதனுடைய மத்திய நரம்பு மண்டலத்தின் செயல் என்பதை உட்செலுத்துதல் மறுக்கிறது; அதாவது சடவாதத்தை நசுக்குவதற்காக உடலியலின் மிகவும் ஆரம்ப நிலையான உண்மையை அது மறுக்கிறது. "இருமைவாதம்" (Dualism) கருத்துவாத ரீதியில் மறுக்கப்படுகிறது (கருத்துவாதத்துக்கு எதிராக அவெனாரியுஸ் ராஜதந்திரமான ஆவேசத்தை அதிகமாகக் காட்டுவதனால் ஒரு பயனுமில்லை); ஏனென்றால் புலனுணர்ச்சியும் சிந்தனையும் இரண்டாம் நிலையாக இருக்கவில்லை, பருப்பொருளின் உற்பத்தியாக இருக்கவில்லை - ஆனால் முதன்மையாக இருக்கின்றன. அகப்பொருள் இல்லாமல் புறப்பொருள் இருப்பதை, சிந்தனை இல்லாமல் பருப்பொருள் இருப்பதை, புலனுணர்ச்சிகளிலிருந்து சுயேச்சையானதாக புற உலகம் இருப்பதை அவெனாரியுஸ் "மறுக்கின்ற" அளவில் மட்டுமே இருமைவாதம் இங்கே மறுக்கப்படுகிறது, அதாவது அது கருத்துவாத ரீதியில் மறுக்கப்படுகிறது: ஒரு மரத்தின் கட்புலக் காட்சி கண் விழியின் பின்புறத்திரை, நரம்புகள் மற்றும் மூளையின் செயல்பாடு என்ற உண்மையை அவெனாரியுஸ் முட்டாள்தனமாக மறுப்பது "முழுமையான" அனுபவத்தின் - அது "நானை" மட்டுமல்லாமல் மரத்தையும், அதாவது சுற்றுப் புறத்தையும் உள்ளடக்கியிருக்கிறது - "பிரிக்க முடியாத" தொடர்பைப் பற்றிய அவருடைய தத்துவத்தை தூக்கி நிறுத்துவதற்கு அவசியமாக இருந்தது.

உள்ளத்தமைத்தல் - Introjection) என்ற கோட்பாடு ஒரு குழப்பமாகும்; அது கருத்துவாத குப்பையை கள்ளத்தனமாக உள்ளே நுழைக்கிறது; சிந்தனை மூளையின் செயல், புலனுணர்ச்சிகள், அதாவது புற உலகத்தின் பிம்பங்கள் நமக்குள்ளாகவே இருக்கின்றன, அவை நம்முடைய புலன் உறுப்புகளின் மீது பொருட்களினுடைய செயலால் ஏற்படுகின்றன என்று உறுதியாக வலியுறுத்துகின்ற இயற்கை விஞ்ஞானத்துக்கு முரணானதாக இருக்கிறது. "மனம் மற்றும் உடலின் இருமைவாதத்தின்" சடவாத அகற்றல் (அதாவது, சடவாத ஒருமைவாதம்), சிந்தனை உடலிலிருந்து சுதந்திரமானதாக இருக்கவில்லை, மனம் இரண்டாம் நிலையானதே, அது மூளையின் செயல், புற உலகத்தின் பிரதிபலிப்பு என்ற வலியுறுத்தலில் அடங்கியிருக்கிறது. "மனம் மற்றும் உடலின் இருமைவாதத்தின்" சடவாத விலக்கல் (அதாவது, கருத்துவாத ஒருமைவாதம்), மனம் உடலின் செயல் அல்ல, ஆகவே சிந்தனையே (மனமே) முதன்மையானது, ஒரே மாதிரியான "மூலக்கூறுகளின் தொகுதிகளில்" ஒரு பிரிக்க முடியாத இணைப்பாக மட்டுமே "சுற்றுச்சூழலும்" "நானும்" இருக்கின்றன என்று வலியுறுத்துவதில் அடங்கியிருக்கிறது. "மனம் மற்றும் உடலின் இருமைவாதத்தை" அகற்றுவதற்கு நேர் எதிரான இந்த இரண்டு முறைகளையும் தவிர மூன்றாவது முறை இருக்க முடியாது; இங்கே சடவாதம் மற்றும் கருத்துவாதத்தின் அர்த்தமற்ற கூளமான கதம்பவாதத்தை சேர்க்கவில்லை. அவெனாரியுசின் இந்த கூளமே பக்தானவ் மற்றும் அவரின் கூட்டினருக்கு "சடவாதம் மற்றும் கருத்துவாதத்துக்கு அப்பாற்பட்ட உண்மையாக" தோன்றுகிறது.

ஆனால் தொழில்ரீதியான மெய்யியலாளர்கள் ரஷ்ய மாஹியவாதிகளை போல வெகுளிகளோ, ஏமாளிகளோ அல்ல. இந்தச் சாதாரண-நிலைப்-பேராசிரியர்கள் ஒவ்வொருவரும் சடவாதத்தை மறுப்பதற்கு அல்லது சடவாதத்தையும் கருத்துவாதத்தையும் "சமரசப்படுத்துவதற்காவது" தங்களுடைய "சொந்த" அமைப்புமுறைக்காகவே வாதாடுகிறார் என்பது உண்மைதான்; ஆனால் அவர்களுக்கு போட்டியாக யாரும் வந்தால், பல்வேறு "சமீபத்திய" மற்றும் "மூல" முறைகள் அனைத்திலும் தொடர்பில்லாத முறையில் இருக்கின்ற சடவாத மற்றும் கருத்துவாத துணுக்குகளை அவர்கள் சிறிதளவு சம்பிரதாயமுமின்றி அம்பலப்படுத்தி விடுகிறார்கள். அவெனாரியுஸ் வைத்த இரையை சில இளம் அறிவுஜீவிகள் விழுங்கினார்களென்றால், அந்தக் கிழட்டுப் புலியான வுண்ட் (Wundt) அவ்வளவு சுலபமாகக் கவரப்படவில்லை. கருத்துவாதியான வுன்ட் உட்செலுத்துதல் பற்றிய தத்துவத்தின் சடவாத எதிர்ப்புப் போக்குக்காக அவெனாரியுசைப் புகழ்ந்த பொழுது அந்தப் பகட்டுக்காரரின் முகத்திலிருந்த முகமூடியை எத்தகைய சம்பிரதாயமும் இன்றிப் பறித்தார்.

"கொச்சையான சடவாதம் மூளை சிந்தனையை 'கொண்டிருக்கிறது' அல்லது மூளை சிந்தனையை 'உற்பத்தி செய்கிறது' ஆகிய சொற்பிரயோகங்களின் மூலம் உண்மை விவரங்களை அவதானம் மற்றும் வர்ணணையினால் சிறிது கூட நிறுவப்பட முடியாத ஒரு உறவை" (ஒரு நபர் மூளையின் உதவியில்லாமல் சிந்திப்பது வுன்ட்டைப் பொறுத்தமட்டில் ஒரு "உண்மை" என்பது வெளிப்படை!) "எடுத்துரைப்பதற்காக அனுபவவாத விமர்சனம் அதைக் குறைசொல்கிறதென்றால்... அந்தக் கண்டனம் சரியானதே என்பது திண்ணம்" (அதே நூல், p. 47-48).

சரிதான்! சடவாதத்தை தாக்குவதில் அரை மனதுடைய அவெனாரியுஸ் மற்றும் மாஹூடன் கருத்துவாதிகளும் எப்பொழுதும் சேர்ந்து கொள்வார்கள்! இந்த உட்செலுத்துதல் பற்றிய தத்துவம் "சுயாதீனமான ஜீவாதாரமான தொடர்வரிசை கோட்பாட்டுடன் எவ்வகையிலும் உறவு கொண்டிருக்கவில்லை, அது பின்யுக்தி என்ற முறையில் சற்று செயற்கையான பாணியில் மட்டுமே அதன் மேல் ஒட்டி வைக்கப்பட்டிருக்கிறது" என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம் என்று வுன்ட் மேலும் எழுதுகிறார் (ஜீ.365).

உள்ளத்தமைத்தலை (Introjection) "அனுபவவாத விமர்சனத்தின் கற்பனை என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்பதாகவே கருத வேண்டும்; தன் சொந்தக் குறைகளை மறைத்துக் கொள்வதற்கு அனுபவவாத விமர்சனத்துக்கு அது தேவைப்பட்டது" (அதே நூல். 44) என்று O. Ewaldகூறுகிறார். "நாம் விசித்திரமான முரண்பாட்டை பார்க்கிறோம்: ஒரு பக்கத்தில், உள்ளத்தமைத்தலை அகற்றுவதும் உலகத்தைப் பற்றிய இயற்கையான கருதுகோளை மீட்டமைப்பதும் வாழும் யதார்த்தம் என்ற நிலைமையை உலகத்துக்கு மீட்டளிக்கும் என்று உத்தேசிக்கப்படுகிறது; மறு பக்கத்தில், தலையாய ஒருங்கிணைப்பில் அனுபவவாத விமர்சனம் எதிர்உறுப்பு மற்றும் மத்திய உறுப்பின் தனிமுதலான பரஸ்பரப் பொருத்தம் என்ற கலப்பற்ற கருத்துவாத தத்துவத்துக்கு இட்டுச் செல்கிறது. அவெனாரியுஸ் இப்படி சக்கரவட்டமாக போய்க் கொண்டிருக்கிறார். அவர் கருத்துவாதத்துக்கு எதிராக போர் புரியப் புறப்பட்டார்; ஆனால் அதனோடு பகிரங்கமான சண்டை ஏற்படுவதற்கு முன்பே அவர் ஆயுதங்களை போட்டுவிட்டார். அவர் புறப்பொருட்களின் உலகத்தை (world of objects) அகப்பொருட்களின் (subject) நுகத்தடியிலிருந்து விடுதலை செய்ய விரும்பினார்; ஆனால் அந்த உலகத்தை அகப்பொருளோடு சேர்த்து நன்றாகக் கட்டி விட்டார். அவர் தன்னுடைய விமர்சனத்தின் மூலம் உண்மையில் ஒழித்திருப்பது கருத்துவாதத்தின் கேலிச் சித்திரமே தவிர, அதன் உண்மையான அறிவாதார முறையியல் வெளிப்பாட்டை அல்ல" (அதே நூல், பக்கங்கள் 64-65).

"மூளை சிந்தனையின் இருப்பிடமோ, உறுப்போ அல்லது ஆதராரமோ அல்ல என்று அவெனாரியுஸ் கூறியிருப்பதை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்கள். ஆனால் அவற்றின் தொடர்பை வரையறுப்பதற்கு நம்மிடமிருக்கும் ஒரே சொற்களைத்தான் அவெனாரியுஸ் இப்படிச் சொல்வதன் மூலம் நிராகரிக்கிறார்" என்று நோர்மன் ஸ்மித் எழுதுகிறார் (அதே நூல், பக்கம் 30).

வுன்ட் அங்கீகரிக்கின்ற உள்ளத்தமைத்தல் பற்றிய தத்துவம் அதிதீவிர ஆன்மீகவாதியான ஜேம்ஸ் வார்டின்[1] ஆதரவை தூண்டுவதில் ஆச்சரியமில்லை. ஜேம்ஸ் வார்ட் "இயற்கைவாதம் மற்றும் அறியொணாவாதத்தின்" (Naturalism and Agnosticism) மீதும், குறிப்பாக தா. ஹக்ஸ்லியின் மீதும் (ஹக்ஸ்லி சடவாதத்தில் போதிய அளவுக்கு தீவிரமும் தீர்மானமும் இல்லாமலிருந்ததற்காக அல்ல - அதற்காக ஏங்கெல்ஸ் அவரை குறை கூறியதுண்டு), ஆனால் ஹக்ஸ்லியின் அறியொணாவாதம் உண்மையில் சடவாதத்தை மறைப்பதற்காக சேவைசெய்கின்றது.

ஆங்கில மாஹியவாதியான கார்ல் பீர்ஸன் அனைத்து மெய்யியல் தந்திரங்களையும் தவிர்ப்பவர்; அவர் உள்ளத்தமைத்தலையோ, ஒருங்கிணைப்பையோ அல்லது இன்னும் "உலக மூலக்கூறுகளின் (world-elements) கண்டுபிடித்தலையோ" அங்கீகரிக்காதவர்; இந்த "மறைக்கும் உடைகள்" இல்லாத மாஹியவாதத்தின் தவிர்க்க முடியாத விளைவுக்கு, அதாவது கலப்பற்ற அகநிலையான கருத்துவாதத்துக்கு அவர் வந்து சேருகிறார். பீர்ஸன் எந்த "மூலக்கூறுகளையும்" அறியாதவர். அவருடைய முதலும் முடிவும் "புலனுணர்ச்சிப் பதிவுகளே". மனிதன் மூளையின் உதவியினால் சிந்திக்கிறான் என்பதை அவர் ஒருபோதும் சந்தேகிக்கவில்லை. இந்த கருத்துரைக்கும் (இது மட்டுமே விஞ்ஞானத்தோடு பொருந்துகிறது) அவருடைய மெய்யியலின் அடிப்படைக்குமுள்ள முரண்பாடு மூடப்படாமல் வெளிப்படையாக தெரிகிறது. பருப்பொருள் என்பது எமது புலனுணர்ச்சி பதிவுகளிலிருந்து சுதந்திரமாக இருக்கின்ற ஒன்று என்ற கருத்தை எதிர்த்து போராடுவதில் அவர் முழு முயற்சியோடு ஈடுபடுகிறார் (விஞ்ஞானத்தின் இலக்கணம், அத்தியாயம் VII). பேர்க்லியின் அனைத்து வாதங்களையும் திரும்பச் சொல்லிவிட்டுப் பருப்பொருள் எதுவுமற்றது (nonentity) என்று பீர்ஸன் கூறுகிறார். ஆனால் மூளைக்கும் சிந்தனைக்கும் இடையிலுள்ள உறவைப் பற்றிப் பேச வருகின்றபொழுது அவர் பின்வருமாறு வலியுறுத்துகிறார்: "சடரீதியான எந்திரத்தோடு சம்பந்தப்பட்டிருக்கும் விருப்பு மற்றும் நனவிலிருந்து இந்த சடரீதியான எந்திரம் இல்லாமல் விருப்பு மற்றும் நனவு என்னவாக இருப்பினும், ஒன்றையும் அனுமானிக்க முடியாது." இந்தத் துறையில் தன்னுடைய ஆராய்ச்சிகளின் சுருக்கம் என்ற முறையில் அவர் பின்வரும் கருத்துரையை கூட முன்வைக்கிறார். "நம்முடைய நரம்பு மண்டல அமைப்புகளை ஒத்திருக்கின்ற அமைப்புகளுக்கு அப்பால் .நனவுக்கு எவ்வித அர்த்தமும் கிடையாது; எல்லாப் பருப்பொருளும் நனவை கொண்டிருக்கிறது என்று கூறுவது தர்க்க விரோதமாகும்" (ஆனால் எல்லாப் பருப்பொருளும் சாராம்சத்தில் புலனுணர்ச்சியை ஒத்த ஒரு குணாம்சத்தை, பிரதிபலிப்பு என்ற குணாம்சத்தை கொண்டிருக்கின்றது என்று கூறுவது தர்க்கரீதியானதாகும்); "நனவு அல்லது விருப்பு பருப்பொருளுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்க முடியும் என்று கூறுவது இன்னும் அதிகமான அளவுக்கு தர்க்க விரோதமானதாகும்" (அதே நூல், பக்கம் 75, இரண்டாவது கருத்துரை). பீர்ஸனுடைய குழப்பம் பட்டவர்த்தனமாக தெரிகிறது! பருப்பொருள் என்பது ஒரு தொடர் புலனுணர்ச்சிப் பதிவுகளே தவிர வேறு ஒன்றுமில்லை; அதுதான் அவருடைய மூலக் கருத்து; அதுதான் அவருடைய மெய்யியல். ஆகவே புலனுணர்ச்சியும் சிந்தனையும் முதன்மையானவை (Primary); பருப்பொருள் இரண்டாம் நிலையானது (Secondary). இல்லை, பருப்பொருள் இல்லாத உணர்வு இருக்கவில்லை, நரம்பு மண்டலம் இல்லாமலும் கூடக் கிடையாது என்பது வெளிப்படை! அதாவது, உணர்வும் புலனுணர்ச்சியும் இரண்டாம் நிலை. பூமியின் மேல் கடல் இருக்கிறது, பூமி திமிங்கலத்தின் மேல் இருக்கிறது, திமிங்கலம் கடலின் மேல் இருக்கிறது. மாஹின் "மூலக்கூறுகளும்" அவெனாரியுசின் ஒருங்கிணைப்பும் உள்ளத்தமைத்தலும் இந்த குழப்பத்தை தெளிவுபடுத்தவில்லை; பொருளை மேலும் புரியாமற் செய்வதற்கு, புலமைமிக்க மெய்யியல் பிதற்றலின் உதவியுடன் எல்லா தடயங்களையுமே மறைப்பதற்கு அவை எல்லாவற்றையுமே செய்கின்றன.

அவெனாரியுஸ் உருவாக்கிய "நோட்டால்", "செக்குரால்", "ஃபிடென்ஷியல்", ("notals," "securals," "fidentials,") இதரவை, இதரவை என்ற ஏராளமான வித்தியாசமான சொற்களை கொண்ட விசேடமான சொற்பிரயோகம் அதேபோன்ற பிதற்றலாகும்; இதைப் பற்றி ஒன்றிரண்டு சொற்களே போதும். நமது ரஷ்ய மாஹியவாதிகள் இந்தப் பேராசிரிய சுற்றிவளைத்தலை மிக அதிகமான வெட்கத்தோடு தவிர்க்கிறார்கள்; எப்பொழுதாவது ''இருத்தலியல்'' ("existential") மற்றும் அதைப் போன்ற சொல்லை (வாசகரை மிரட்டுவதற்காக) வாசகர் மீது எறிகிறார்கள். ஆனால் வெகுளியானவர்கள் இந்தச் சொற்களை உயிரிய- இயக்கெந்திரவியல் (bio-mechanics) இனத்தை சேர்ந்தவையாக கருதினாலும், "புலமைச்செறிவுடைய" சொற்களை மிகவும் விரும்புகின்ற ஜேர்மனிய மெய்யியலாளர்கள் அவெனாரியுசைப் பார்த்து சிரிக்கிறார்கள். "நோட்டால்" (notus = தெரிந்தது) என்று சொல்வதோ அல்லது இது அல்லது அது எனக்குத் தெரியும் என்று சொல்வதோ முழுமையும் ஒன்றுதான் என்று வுன்ட் "அனுபவவாத விமர்சன அமைப்பின் பகட்டுப் புலமைத் தன்மை" என்ற பகுதியில் எழுதுகிறார். அது ஆகக் கலப்பற்ற, ஆக வரட்சியான பகட்டுப் புலமைவாதம் என்பது உண்மையே. அதை மறைக்காமல் ஒத்துக் கொள்ளும் துணிவு அவெனாரியுடின் விசுவாசமிக்க சீடர்களில் ஒருவரான ரு.வில்லிக்கு இருந்தது. "அவெனாரியுஸ் உயிரிய- இயக்கெந்திரவியலைப் (bio-mechanics) பற்றிக் கனவு கண்டார்; ஆனால் மூளையின் வாழ்க்கையை பற்றி உண்மையான கண்டுபிடிப்புகளின் மூலமாக மட்டுமே புரிந்து கொள்ள முடியும் - அவெனாரியுஸ் அதை அடைவதற்கு முயற்சித்த வழியில் அதை அடைய முடியாது. அவெனாரியுசினுடைய உயிரிய- இயக்கெந்திரவியல் எவ்விதமான புதிய கண்டுபிடிப்புகளையும் அடிப்படையாக கொண்டிருக்கவில்லை; கருத்தோட்டங்களை முன்னரே நிச்சயிக்கப்பட்ட பகுப்பு முறையின்படி கட்டமைப்புச் செய்தல் அதன் குறியடையாளமாகும்; அதிலும் இக்கட்டமைப்புகள் புதிய வானங்களை திறந்து விடுகின்ற கருதுகோள்களின் தன்மையைக் கூடக் கொண்டிருக்கவில்லை; நெடுஞ்சுவரை போல நம்முடைய பார்வையை மறைக்கின்ற கூறியதையை திரும்பக் கூறும் வெறும் ஊகங்களாகவே அவை இருக்கின்றன".

வெகு சீக்கிரத்தில் ரஷ்ய மாஹியவாதிகள் ஐரோப்பிய பூர்ஷ்வா மெய்யியலாளர்களால் ஏற்கெனவே கைவிடப்பட்ட தொப்பியை பற்றி உணர்ச்சிப் பரவசமடைகின்ற அலங்காரப் பிரியர்கள் போல இருக்கப் போகிறார்கள்.

Notes

·  [1] James Ward, Naturalism and Agnosticism, 3rd ed., London, 1906, Vol. II, pp. 171-72. —Lenin

·  [2] The Grammar of Science, 2nd ed., London, 1900, p. 58. —Lenin

·  [3] R. Willy, Gegen die Schulweisheit, p. 169. Of course, the pedant Petzoldt will not make any such admissions. With the smug satisfaction of the philistine he chews the cud of Avenarius’ "biological" scholasticism (Vol. I, Chap. II). —Lenin

·  [4] See F. Engels, Anti-Dürhring, Moscow, 1959, p. 55.

·  [5] See Karl Marx and F. Engels, Selected Works, Vol. II, Moscow, 1958, pp. 363, 372.

·  [6] Lenin is referring to the literary portrait drawn by I. S. Turgenev in his prose poem "A Rule of Life".


Copyright 1998-2009
World Socialist Web Site
All rights reserved