சோவியத் அதிகாரத்துவத்தினை தூக்கிவீசலும் அக்டோபர் வெற்றியின் நலன்களை
காத்தலும்
38.
பாரசீக வளைகுடாவில் சோவியத் அதிகாரத்துவம் வகித்த பாத்திரத்தின்
கொலைகாரப் பரிமாணத்தை தெரிவிக்க "துரோகம்",
"காட்டிக்
கொடுப்பு" என்ற வார்த்தைகளே போதாதிருக்கின்றன. ஈராக்கிய மக்களுக்கு
எதிராக ஏகாதிபத்தியம் இழைத்த அட்டூழியங்களுக்கு கொர்பச்சேவ் ஆட்சியே
முழுப் பொறுப்பாகும். ஐக்கிய நாடுகள் சபையில் இது முதலில் ஈராக்கிற்கு
எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்கவும்,
பின்னர் இராணுவ பலத்தை பயன்படுத்தவும் அளித்த வாக்குகள் ஏகாதிபத்தியம்
தனது தாக்குதலை தயார் செய்வதற்கு அவசியமான அரசியல் மூடுதிரையை
வழங்கியது. ஈராக்கிற்கு எதிரான ஏகாதிபத்திய யுத்தத்தில் கிரெம்ளினின்
ஒத்துழைப்பானது,
ஸ்ராலினிசம் சோவியத் யூனியனிலும் அனைத்துலகிலும் அரை நூற்றாண்டுக்கு
மேலாக வகித்த எதிர்ப்புரட்சிப் பாத்திரத்தின் வரலாற்று முடிவினைக்
காட்டுகின்றது.
39.
கொர்பச்சேவ் ஆட்சி உலக ஏகாதிபத்தியத்துடன் வெளிப்படையாகவும்
வெட்கங்கெட்ட முறையிலும் கூட்டுச்சேர்ந்தமையானது,
சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தினைப் புணருத்தாரணம் செய்யும்
சோவியத் அதிகாரத்துவத்தின் முயற்சியின் தர்க்க ரீதியான விளைவாகும்.
கடந்த காலத்தில்,
தனது சொந்த சடரீதியான (பொருளாயத) சலுகைகள் தேசியமயமாக்கப்பட்ட
சொத்துறவுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தவரை,
ஸ்ரானினிசம் அதனைக் காக்குமாறு தள்ளப்பட்டது. அது சோவியத் யூனியனை
ஏகாதிபத்திய ஆத்திரமூட்டல்களிலிருந்தும்,
நேரடி இராணுவத் தாக்குதல்களில் இருந்தும் பேணிக்காக்க முயன்றது.
எவ்வாறெனினும் ஏகாதிபத்தியத்தினை எதிர்க்க கிரெம்ளின் கையாண்ட
விதிமுறைகள்,
லெனின் கடைப்பிடித்த புரட்சிகர சர்வதேசியத்துக்கு முற்றிலும்
எதிரானதாகும். சோவியத் அதிகாரத்துவம் சோவியத் யூனியனின் அரசு
எல்லைகளுக்குள் தனது சடரீதியான சலுகைமிக்க நலன்களைக் காப்பதை பற்றி
மட்டுமே அக்கறை காட்டியது. ஏகாதிபத்தியத்துடன் ஒரு உடன்பாட்டுக்கு
வரும் பொருட்டு சர்வதேச தொழிலாளர் இயக்கத்தை காட்டிக் கொடுக்கவும் அது
ஒரு போதும் தயங்கியது கிடையாது, 1930களில்
ஸ்பெயின் புரட்சி வேண்டுமென்றே நாசமாக்கப்பட்டமையும்,
ஹிட்லருடனான ஆக்கிரமிப்பு தவிர்ப்பு உடன்படிக்கையில்
கையெழுத்திட்டமையும்,
கிரேக்க உள்நாட்டு யுத்தத்தின்போது கம்யூனிஸ்ட் கட்சியை கைவிட்டமையும்
ஏகாதிபத்தியத்துடனான தனது சொந்த பிற்போக்கு சந்தர்ப்பவாத உறவுகளுக்காக
கிரெம்ளின்,
சர்வதேச தொழிலாளர் போராட்டத்தினை கீழ்மைப்படுத்தியதற்கு மிகக் கேவலமான
உதாரணங்களாகும். "மூன்றாம் உலக" அரசுகளுக்கு வரையறுக்கப்பட்ட இராணுவ
நிதி உதவிகளை இது வழங்கியதுகூட,
சோவியத்யூனியன் மீதான ஏகாதிபத்திய அழுத்தத்தினை திசை
திருப்புவதற்காகத்தான்.
40.
சோவியத் யூனியனில் முதலாளித்துவத்தினை மீளக்கொணரும் முயற்சியானது,
தவிர்க்கமுடியாத வகையில் தொழிலாள வர்க்கத்திடமிருந்து பிரம்மாண்டமான
எதிர்ப்பினைத் தோற்றுவிக்கும் என்பதை சோவியத் அதிகாரத்துவம் நன்கு
அறியும். இதே காரணத்துக்காகத்தான் அது உலக ஏகாதிபத்தியத்துடன் மிகவும்
நெருக்கமான கூட்டினை வேண்டி நிற்கிறது. எனவே,
கிரெம்ளினின் வெளிநாட்டுக் கொள்கையின் மைய இலக்கு,
சோவியத் யூனியன் மீதான ஏகாதிபத்திய அழுத்தத்தினை திசை திருப்புவதைவிட,
உக்கிரமாக்குவதாகவே இருக்கிறது. எனவேதான் சோவியத் அதிகாரத்துவம்
சோவியத் யூனியனின் தெற்கு எல்லையில் இருந்து சில நூறு மைல்களுக்கு
அப்பால் லட்சக்கணக்கான ஏகாதிபத்திய படைகளைக் குவிப்பதை வரவேற்றுள்ளது.
அமெரிக்க முதலாளித்துவத்தின் முன்னணி பத்திரிகையான டைம் தேசிய
குடியரசுகளினுள் கடும்தேசிய இன மோதல் இடம்பெறுமானால்,
சோவியத் யூனியனுக்குள் அமெரிக்கா இராணுவ நடவடிக்கைக்கு திட்டமிட்டு
வருவது பற்றி ஒரு விரிவான: அறிக்கையை வெளியிட்டது. கிரெம்ளின் இதுபற்றி
ஒரு பகிரங்க எதிர்ப்பு அறிக்கையைக்கூட இதுவரை வெளியிடவில்லை.
41.
கிரெம்ளினின் ரகசிய உடந்தையோடு ஏகாதிபத்தியம் சோவியத் யூனியனின் பரந்த
பிராந்தியத்தினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் தனது உரிமையை,
அதிகரித்த உறுதியோடு வலியுறுத்துகின்றது. சோவியத் யூனியனின்
மூலப்பொருட்கள்,
பரந்தளவிலான உற்பத்தித்திறன்,
பிரம்மாண்டமான சந்தை என்பவற்றின் பொருளாதார முக்கியத்துவத்தினை
ஏகாதிபத்தியவாதிகள் புறக்கணித்துவிட முடியாது சோவியத் யூனியனினதும்
கிழக்கு ஐரோப்பாவினதும் இறுதி முடிவு ஏற்கனவே ஏகாதிபத்திய அரசுகளின்
கணிப்பீடுகளிலும் போட்டிகளிலும் ஒரு முக்கிய இடத்தினைப்
பிடித்துக்கொண்டுள்ளது. அதிகாரத்துவங்களின் உள்ளும்,
தேசிய குடியரசுகளுக்கு இடையிலுமான உள்ளார்ந்த மோதல்களில்
ஏகாதிபத்தியவாதிகளின் போட்டி நலன்கள் மேலும் மேலும் வெளிப்படையாகவே
உறுதிப்படுகின்றன. ஜேர்மனியர்கள் கொர்பச்சேவினூடாக செயற்பட்டு
கிரெம்ளினில் அதிக செல்வாக்கை ஈட்டிக்கொண்டதைக்கண்டு பயந்த அமெரிக்கா,
ரஷ்யக் குடியரசுகளதும் ஜெல்ட்சினதும் பரிந்துரையாளனாகத்
தொடங்கியுள்ளது.
42.
ஏகாதிபத்தியம் சோவியத் யூனியனைத் துண்டாடவும்,
முதலாளித்துவத்தினை மீளக்கொணரவும்,
தேசியக் குடியரசுகளை அப்பட்டமாகப் பயன்படுத்துகின்றது என்ற உண்மை,
தேசியக் குழுக்களின் சுயநிர்ணயத்துக்கான உரிமையை
செல்லுபடியற்றதாக்கிவிடாது. அதிகாரத்துவத்தினுடைய போலீஸ் அரசு
ஆட்சியின் அடிப்படையில் சோவியத் ரஷ்யாவின் (USSR)
"பிராந்திய ஒருமைப்பாட்டை" காப்பதன் மூலமும்,
தேசிய உணர்வினை கர்வத்துடன் ஒடுக்குவதன் மூலமும்,
சோவியத் யூனியன் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்திற்கு சேவை செய்ய
முடியாது. ஆனால் சுயநிர்ணயம் ஏகாதிபத்தியத்தின் ஆட்சிக்குட்பட்ட
முதலாளித்துவத்தின் மீட்சிக்கும் சோவியத் யூனியனை மலட்டுத்தனமான அரச
துண்டுகளாகப் பிரிவினை செய்வதற்குமான ஒரு பெரும் மூடுதிரையாக
இல்லாதிருக்கவேண்டுமாயின்,
இப்போராட்டம் ஒரு சர்வதேச,
சோசலிச,
தொழிலாள வர்க்க வேலைத் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படல் வேண்டும்.
43.
சோவியத் யூனியன் உள்ளோ அல்லது அதன் துண்டாடலிருந்து எஞ்சிய பால்கன்
துண்டுதுணுக்குகளிலோ முதலாளித்துவம் புனருத்தாரணம் செய்யப்படுவதானது,
ரஷ்யன்,
உக்ரேனியன்,
ஜோர்ஜியன் மற்றும் சோவியத் யூனியனில் இன்று அடங்கியுள்ள அனைத்து தேசிய
இனங்களினதும் வரலாற்றில் ஒரு துக்கரமான அத்தியாயத்தின் தொடக்கத்தினைக்
குறிக்கும். போலந்தினதும்,
கிழக்கு ஜேர்மனியினதும் நிகழ்வுகள் ஏற்கனவே எடுத்துக்காட்டுவதுபோல்,
"சந்தைப்
பொருளாதாரத்தின்" விளைவுகள் சோவியத் மக்களின் சமூக,
கலாச்சார மட்டத்தில் ஒரு பயங்கர வீழ்ச்சியாக இருக்கும். எவ்வாறெனினும்
சோவியத் அதிகாரத்துவத்தின் இந்த புனருத்தாரணக் கொள்கைக்கும்,
பணவெறிகொண்ட தரகு முதலாளிகளின் வர்க்கத் தோற்றத்திற்குமான பதிலீட்டினை
(Alternative)
இன்றைய பேரழிவுகளுக்கு களம் சமைத்த "தேசிய சோசலிஸ்டுகளின்" கொள்கைகளைப்
புதுப்பிப்பதில் கண்டுவிட முடியாது.
1917
அக்டோபர் புரட்சியின் அடிப்படை வெற்றிகளை பாதுகாப்பதும் அவற்றிற்கு
சோசலிசப் பாதையில் புத்துயிரூட்டுவதும் போல்ஷிவிக் கட்சியின் மகத்தான
வருடங்களில் அதன் பணியை வழி நடத்த லெனினும் ட்ரொட்ஸ்கியும்
கடைப்பிடித்த உலகப் புரட்சிகர வேலைத் திட்டத்திற்கு
புத்துயிரூட்டுவதில்தான் தங்கி உள்ளது.
44.
சோவியத் யூனியனின் இறுதி முடிவு இன்னமும் தீர்மானிக்கப்பட்டு விடவில்லை;
உலகில் உள்ள வர்க்க நனவு கொண்ட ஒவ்வொரு தொழிலாளியினதும் பெரிதும்
அக்கறைக்குரிய விஷயமாக அதன் எதிர்காலம் விளங்குகின்றது சோவியத்
யூனியனில் முதலாளித்துவத்தை மீளக் கொணர்தலும் அதனை ஒரு அரைக்காலனி
மட்டத்திற்கு இறக்குவதும்,
சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பயங்கரத் தோல்வியையே
பிரதிநிதித்துவம் செய்யும். அதிகாரத்துவத்தின் முதலாளித்துவ மீட்சிக்
கொள்கைகளுக்கு எதிரான சோவியத் தொழிலாள வர்க்கத்தின் போராட்டமும்,
ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்திற்கெதிரான சர்வதேச தொழிலாள
வர்க்கத்தின் போராட்டமும்,
ஒரே உலகப் போராட்டத்தின் இணைந்த பாகங்களாகும். அவற்றின் இன்றியமையாத
ஐக்கியமானது,
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சோவியத் பகுதியின்
வளர்ச்சியினூடாகத்தான்,
நனவானமுறையில் நிறைவேற்றப்பட வேண்டும்.
[நான்காம்
அகிலமும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும்] |