போருக்குப் பிந்தைய ஒழுங்குமுறையின் நெருக்கடி
19.
அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்தினை சவால் செய்யக்கூடிய வேறு ஒரு
முதலாளித்துவ அரசோ அல்லது முதலாளித்துவ அரசுகளின் கூட்டோ
இல்லாதிருந்தாலும்,
சோவியத் யூனியனுடன் மோதிக்கொள்ளும் நிலையில் சர்வதேச முதலாளித்துவம்
அமெரிக்க இராணுவ பலத்தில் தங்கியிருந்ததாலும்,
போருக்குப் பிந்திய தீர்வுகளின் அடிப்படையில் உலக முதலாளித்துவம் அதன்
சமநிலையைப் பராமரித்துக்கொள்ள முடிந்தது. எவ்வாறெனினும் உலக
வர்த்தகத்திற்கு புத்துயிரளிப்பதிலும் ஐரோப்பிய,
ஜப்பானிய முதலாளித்துவத்தை திரும்பக்கட்டி எழுப்புவதிலும் அது கண்ட
வெற்றிகளே,
உலக அமைப்பின் உறுதிப்பாடு தங்கியிருந்த சமநிலையைக் கீழறுத்தது.
அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கத்தில் ஏற்பட்ட படிப்படியான வீழ்ச்சி
1950களின்
கடைப்பகுதியில் செலாவணி,
வர்த்தகப் பற்றாக்குறைகளின் அதிகரிப்பாக பதிவாகியது.
1971-ல்
அமெரிக்கா,
போருக்குப் பிந்தைய பொருளாதார முறையின் இணைப்பு ஆணியாக விளங்கிய டாலர்
- தங்க மாற்றீடு முறையை கைவிடும்படி நெருக்கப்பட்டது,
ஒன்றன்பின் ஒன்றாக தொழில் துறையில் அமெரிக்க மேலாதிக்கம் தாக்குதலுக்கு
ஆளாகியது.
1979களிலும்
1980களிலும்
அமெரிக்காவின் வருடாந்தர வர்த்தகப் பற்றாக்குறை - குறிப்பாக ஜப்பான்
தொடர்பான அதன் வர்த்தகப் பற்றாக்குறை கோணல்மானலாக வடிவமெடுக்கத்
தொடங்கியது.
முதலாம் உலக யுத்தத்துக்குப்பின்
1985-ல்
முதன் முறையாக அமெரிக்கா ஒரு கடனாளி நாடாக ஆகியது. அமெரிக்காவின் உலக
அந்தஸ்தில் ஏற்பட்ட வீழ்ச்சியானது,
பிந்தைய சமநிலையின் தாக்குப்பிடிக்கும் தன்மையை தவிர்க்க முடியாத
வகையில் பிரச்சனைக்குள்ளாக்கியது. மோசமடைந்து வந்த வர்த்தகத்
தகராறுகளும் பகைமையுள்ள பிராந்தியக் கூட்டுக்களுக்கிடையே (வடஅமெரிக்கா,
ஐரோப்பா,
ஆசியா) உலகச்சந்தை பங்கீடு செய்யப்பட்டமையும்,
இரண்டாம் உலக யுத்தத்துக்கு முந்தைய வருடங்களின் வர்த்தக யுத்தத்தின்
பண்பினை ஒத்திருக்கின்றன.
20.
மேலும் விஞ்ஞானத்திலும் தொழில் நுட்பத்திலும் ஏற்பட்ட அபிவிருத்திகள்
உலக முதலாளித்துவத்தின் ஸ்திரமின்மைக்கு தீர்க்கமான மூலகமாயின.
பொருளாதார சமபல நிலையின் மாற்றங்கள் முதலாளித்துவ அரசுகளுக்கிடையேயான
மோதலை உக்கிரமாக்குவதோடு மேலும் அவற்றை தள்ளிவிடுகின்றன. உற்பத்திச்
சாதனங்களிலும் அவற்றின் செயல்முறைகளிலும்,
வரைவு,
திட்டமிடல்,
போக்குவரத்து,
செய்தித் தொடர்பு ஆகியவற்றில்
'நுண்
சில்லுகள்'
(மைக்ரோசிப்)
புரட்சியானது,
உலகப் பொருளாதாரத்தினை முன்னொரு போதும் இல்லாத முறையில்
ஒன்றிணைத்துள்ளது. பொருளாதார நிலைப்பாட்டில் இருந்து பார்ப்போமாயின்
நவீன டிரான்ஸ் நாஷனல் கூட்டுத்தாபனமானது,
தேசிய அரசின் பழையதும் அற்பமானதுமான திட்ட அளவுகோலைத் தாண்டி
வளர்ந்துவிட்டன. இதனுடைய இயக்குநர்கள் உலக உற்பத்தி,
உலகச்சந்தை,
உலகநிதி,
உலக வளங்கள் என்ற அடிப்படையில் சிந்தித்துச் செயற்படுமாறு
நெருக்கப்பட்டிருக்கிறார்கள். உள்நாட்டுச் சந்தைக்கும் உலகச்
சந்தைக்கும் இடையேயான பழைய வேறுபாடுகள் இத்தொடரில் இருந்து,
மறைந்து வருகின்றன. நவீன
'டிரான்ஸ்
நாஷனல்'
கூட்டுத்தாபனங்கள் அதன் சொந்த உள்நாட்டு தளத்தின் புவியியல்
இருப்பிடத்தைப் பாராமல்,
உலகச் சந்தையில் மேலாதிக்கம் செய்வதற்கான வாழ்வுக்கும் சாவுக்கும்
இடையிலான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் தேசிய அரசு என்ற வகையில்
அதன் புறநிலைப் பொருளாதார முக்கியத்துவத்தினை அது இழந்து கொண்டு
வருகையிலும்,
போட்டி தேசிய முதலாளித்துவக் கும்பல்களின் அரசியல் - இராணுவ கருவி என்ற
வகையில்,
உலக மேலாளுமைக்கான போராட்டம் பேரளவில் வளர்ச்சி காண்கின்றது. இந்த
உண்மையானது,
ஒரு புதிய உலகக் கிளர்ச்சிக்காக முடுக்கி விடப்பட்டுள்ள தயாரிப்புகளில்
நன்கு பலம் வாய்ந்த முறையில் வெளிப்பாடாகின்றது.
[ஏகாதிபத்தியங்களுக்கு
இடையேயான குரோதங்களின் வளர்ச்சி] |