நான்காம் அகிலமும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும்
45. 50
ஆண்டுகளுக்கு முன்னர்,
இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பமான அன்றும்,
ஒரு ஸ்ராலினிச ஏஜெண்டின் கைகளால் தாம் கொலை செய்யப்படுவதற்கு இரண்டு
மாதங்களுக்கு முன்னர்,
லியோன் ட்ரொட்ஸ்கி எழுதியதாவது:
"நீண்டதொரு
மரண ஓலத்தைத் தவிர முதலாளித்துவ உலகுக்கு வேறு வழியே கிடையாது.
தசாப்தங்கள் இல்லாது போகினும் நீண்ட கால யுத்தம்,
எழுச்சிகள்,
குறுகிய யுத்த நிறுத்தம்,
புதிய யுத்தங்கள்,
புதிய எழுச்சிகளுக்கு தயார்செய்வது அவசியம்,
ஒரு இளம் புரட்சிக்கட்சி இந்த முன்னோக்கினை அடிப்படையாகக் கொண்டாக
வேண்டும். அத்தகைய ஒரு கட்சி தன்னை பரீட்சித்துக் கொள்ளவும்,
அனுபவங்களைத் திரட்டவும்,
முதிர்ச்சி அடையவும்,
வரலாறு அதற்குப் போதிய வாய்ப்புக்களையும் சாத்தியங்களையும் வழங்கும்.
முன்னணிப்படையினர் எந்த அளவுக்கு மின் கடத்திபோன்று இருக்கிறார்களோ
அந்த அளவுக்கு இரத்தம் தோய்ந்த கலகங்களை குறுகியதாக்கலாம். எமது
பூகோளத்தின் அழிவுகளையும் குறைக்கலாம். ஆனால் பாட்டாளி வர்க்கத்திற்கு
தலைமையை புரட்சிக் கட்சி கொடுக்காதிருக்கும் வரை,
பெரும் வரலாற்றுப் பிரச்சினைகளை எவ்விதத்திலும் தீர்க்க முடியாது.
வளர்ச்சி வேகமும்,
கால இடைவெளியும் முக்கியத்துவம் பெறுகின்றன;
ஆனால் இது பொது வரலாற்று நோக்கினையோ,
அல்லது எமது கொள்கையின் திசையையோ மாற்றிவிடாது. முடிவு மிகவும் எளிதான
ஒன்றுதான்;
பாட்டாளி வர்க்க முன்னணிப் படையை பத்து மடங்கு சக்தியுடன் கல்வி
அறிவூட்டி,
அணிதிரட்டும் வேலையை நடைமுறைப்படுத்துவது அவசியம். நான்காம் அகிலத்தின்
பணி இதில்தான் தங்கி உள்ளது என்பது தெளிவு".
"ஏகாதிபத்திய
யுத்தமும் பாட்டாளி வர்க்கப் புரட்சியும் பற்றிய நான்காம் அகிலத்தின்
அரசியல் அறிக்கை" (-லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்கள்
1939-40).
46.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு,
உலகத் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் வர்க்கநனவு கொண்ட பிரதிநிதிகளை
எதிர்வரும் நவம்பரில் பேர்லினில் கூடும்படியும்,
ஏகாதிபத்திய யுத்தத்துக்கும் காலனி ஆதிக்கத்துக்கும் எதிரான சர்வதேச
தொழிலாளர் மாநாட்டில் பங்கு கொள்ளும்படியும்,
அழைப்புவிடுவதன் மூலம் புரட்சிகரத் தலைமை நெருக்கடியைத் தீர்ப்பதில்
தீர்க்கமான பணியைத் தயார்செய்கின்றது. எமது இலக்கு,
நான்காம் அகிலத்தின் முழு வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில்,
உலகத் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தினை உருவாக்கும்
போராட்டம் அடிப்படையாகக் கொள்ளவேண்டிய கொள்கைகளை உறுதியாக
நிலைநாட்டுவதே ஆகும்.
47.
சர்வதேச தொழிலாளர் இயக்கம் அதன் மாபெரும் நெருக்கடியினூடாக சென்று
கொண்டிருக்கிறது. இதில் விவாதத்திற்கு இடமில்லை. ஆனால் இந்த
நெருக்கடியினுள்,
இப்போதிருக்கின்ற காரியாளர்களைக் கொண்ட நான்காம் அகிலத்தினை - லியோன்
ட்ரொட்ஸ்கி எதிர்பார்த்த சோசலிசப் புரட்சியின் பரந்த உலகக் கட்சியாக
உருமாற்றம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளடங்கி இருக்கிறது. ஸ்ராலினிச
ஆட்சிகளின் வீழ்ச்சி மார்க்சிசத்தின் தோல்வியைப் பிரதிநிதித்துவப்
படுத்தவில்லை,
மாறாக அதனை மாபெரும் விதத்தில் ஊர்ஜிதம் செய்கின்றது. நான்காம்
அகிலத்தின் ஸ்தாபக பத்திரத்தில் ட்ரொட்ஸ்கி தீர்க்கதரிசனமாகக்
குறிப்பிட்ட,
வரலாற்றின் விதிகள் அதிகாரத்துவத்தின் எந்திரங்களைவிட அதிக சக்தி
வாய்ந்தவை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
1930களில்
இருந்து தொழிலாள வர்க்கம் அனுபவித்த அனைத்து தோல்விகளுக்கும் முக்கிய
காரணமாக விளங்கிய ஸ்ராலினிசம் ஒரு காலத்தில் சர்வதேச தொழிலாள
வர்க்கத்தின்மேல் கொண்டிருந்த செல்வாக்கு சிதறுண்டுபோய்விட்டது.
48.
ட்ரொட்ஸ்கிசத்திற்கும் (அதாவது உண்மையான மார்க்சிசத்திற்கும்),
ஸ்ராலினிசத்திற்கும் இடையே மாற்றம் அடைந்துள்ள உறவானது,
சோவியத் யூனியனுள் மிகவும் சக்தி வாய்ந்த முறையில்
வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சோவியத் யூனியனில் தொழிலாள வர்க்கம்,
அதிகாரத்துவத்தின் விலங்குகளை உடைத்துஎறிகிறாற்போல்,
முதல் தடவையாக தனது புரட்சிகர மரபியத்தின் உண்மையையும் கண்டு
கொண்டுள்ளது. லியோன் ட்ரொட்ஸ்கியின் நூல்கள் இன்று சோவியத் யூனியன்
முழுமையும் ஆயிரக்கணக்கானோரால் வாசிக்கப்பட்டு வருகின்றன. மொஸ்கோ,
லெனின்கிராட்,
கீவ்,
ல்வோவ்,
கார்க்கோவ் முதலிய இடங்களில் இருந்து கடிதத் தொடர்புகள்,
அனைத்துலகக் குழுவின் அலுவலகங்களுக்குள் பெருக்கெடுத்து வருகின்றன.
ட்ரொட்ஸ்கியின் இளையமகன் உட்பட நான்காம் அகிலத்தின் ஆதரவாளர்கள்
படுகொலை செய்யப்பட்ட,
முன்னர் ஸ்ராலினிச கடூழியச்சிறை ('லேபர்
காம்ப்')
ஆக விளங்கிய தூரப்பகுதியான வொர்க்குதாவில்கூட சோவியத் சுரங்கத்
தொழிலாளர்கள் அனைத்துலகக் குழுவின் பத்திரங்களை படித்தும்
விநியோகித்தும் வருகிறார்கள்.
49.
சமூக ஜனநாயக மற்றும் சீர்திருத்த அமைப்புக்களின் அரசியல் ஆளுமையின்
வீழ்ச்சி அதிகமாக கண்ணுக்குப் புலனாகாவிட்டாலும்,
அவை எந்த விதத்திலும் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தவை அன்று. எந்த
ஒரு முக்கிய அரசியல் விவகாரத்திலும்
'மத்திய
- வலதுசாரி கட்சிகளுக்கும் சமூக ஜனநாயகவாதிகளுக்கும் இடையே இனம்
காணக்கூடிய முதலாளித்துவ வேறுபாடு இல்லாத முறையில் இந்த அமைப்புக்கள்
முதலாளித்துவ அரசினுள் முழுமையாக இணைந்து கொண்டுள்ளன.
தொழிற்சங்கங்களைப் பொறுத்தமட்டில்,
முதலாளித்துவ சிக்கனக் கொள்கைகளை திணிப்பதே அவற்றின் முக்கியக் கடமையாக
உள்ளது.
50.
ஸ்ராலினிச,
சமூக ஜனநாயகக் கட்சிகளதும் தொழிற் சங்கங்களதும் வீழ்ச்சிக்கு
அடிப்படையானது,
தொழிலாள வர்க்க இயக்கத்தினுள் தேசிய வேலைத் திட்டத்தினை அடித்தளமாகக்
கொண்டிருக்கும் அந்த அமைப்புக்கள் எல்லாவற்றினதும் வரலாற்று திவால்
தன்மையேயாகும். முதலாளித்துவ தேசிய அரசின் அடிப்படையில் தொழிலாள
வர்க்கம் அடையக்கூடிய சிறிய நலன்களின் சாத்தியம் கூட முற்றிலும்
இல்லாமல் போய்விட்டது. கடந்த காலப்போராட்டங்கள் மூலம் தொழிலாள வர்க்கம்
வென்றெடுத்த வெற்றிகளை அதிகாரத்துவம் ஒன்றன்பின் ஒன்றாக முதலாளி
வர்க்கத்திடம் தாரை வார்த்து வருகின்றது. இறுதியில் சீர்திருத்தவாத
அதிகாரத்துவங்களின் தேசிய வேலைத் திட்டங்கள் தொழிலாள வர்க்கத்தினை
ஏகாதிபத்திய யுத்தத் தயாரிப்புகளுக்கு கீழ்ப்படுத்துகின்றது.
51.
நான்காம் அகிலத்தின் மாபெரும் வரலாற்று நிகழ்வின் உள்ளுறைந்த
சாத்தியப்பாடானது,
அதன் வேலைத்திட்டம் உலகப் பொருளாதார அபிவிருத்தியின் உள்ளார்ந்த
தர்க்கவியலுடன் ஒத்துப்போவதிலும் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் உலக
வரலாற்றுப் பாத்திரத்தினை நெறிப்படுத்துவதிலும் புறநிலையாக வேரூன்றி
உள்ளது. எவ்வாறெனினும் அதன் வேலைத்திட்டத்தின் வெற்றியை தன்னியல்பான
புறநிலை பொருளாதார செயல்முறைகளினாலோ அல்லது பழைய தலைமையுடன்
வெகுஜனங்கள் வெறுப்படைவதாலோ தானாகவே அடைந்துவிட முடியாது. புரட்சிகர
வேலைத்திட்டத்திற்காகப் போராடியாக வேண்டும். நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக்குழு,
தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப் படையை மார்க்சிசத்தின் பதாகையின் கீழ்
புரட்சிகரமான முறையில் மீள அணிதிரட்ட அனைத்தையும் செய்யும். இது
தொழிலாள வர்க்கத்தின் தினசரிப் போராட்டத்தில் நடைமுறைத் தலையீடுகளை
மட்டும் அல்லாமல்,
எல்லாவகையான சந்தர்ப்பவாதங்களுக்கு எதிரான விடாப்பிடியான
தத்துவார்த்தப் போராட்டத்தினையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது.
ஏகாதிபத்திய யுத்தத்துக்கும் காலனித்துவத்துக்கும் எதிரான பேர்லின்
தொழிலாளர் மாநாடு,
1953-ல்
அனைத்துலகக்குழு நிறுவப்பட்ட காலத்தில் இருந்து பப்லோவாத திரிபு
வாதத்திற்கு எதிராக அது தொடுத்துவந்த வளம்மிக்க மரபுகளை அடிப்படையாகக்
கொண்டிருக்கும். ஏகாதிபத்தியம்,
முதலாளித்துவ தேசியவாதம்,
ஸ்ராலினிசம் - இவற்றின் சகாக்கள் என்ற முறையில் பப்லோவாதத்தின்
நாசகரமான அரசியல் பாத்திரம் முழுமையாக அம்பலமாக்கப்பட வேண்டும்.
அனைத்துலகக் குழு பேர்லின் மாநாட்டினால் வழங்கப்படும் வாய்ப்புக்களை -
மண்டேல்,
சுலோட்டர்,
டோரன்ஸ் லோரா மற்றும் ரொபேட்சன் தலைமையிலான பல்வேறு வகையான
சந்தர்ப்பவாதங்களில் இருந்தும் தெளிவான எல்லைக்கோட்டினை வரைந்துகொள்ள
பயன்படுத்திக்கொள்ள எண்ணுகிறது. இந்தவிதத்தில் அனைத்துலகக் குழு
1915, 16-ல்
சிம்மர்வால்ட் மற்றும் கிந்தல் ஆகியவற்றின் மாபெரும் யுந்த எதிர்ப்பு
மாநாடுகளில் லெனினால் கடைப்பிடிக்கப்பட்ட உதாரணத்தினைப் பின்பற்றும்.
எல்லா வகையான சந்தர்ப்பவாதம்,
இடைநிலைவாதங்களுக்கு எதிரான போராட்டம்,
ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தொழிலாள வர்க்கத்தினை அணிதிரட்டவும்
புரட்சிகர அகிலத்தினைக் கட்டி எழுப்பவும் அத்தியாவசியமான
முன்நிபந்தனையாகும் என அம் மாநாடுகளில் லெனின்,
வலியுறுத்தினார்.
52.
பேர்லின் மாநாட்டுக்கான தயாரிப்பின்போது,
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரதிநிதிகள்,
உலகம் முழுமையும் உள்ள தொழிலாளர்களுடன் பரந்த அளவிலான கலந்துரையாடலில்
ஈடுபடுவர். அந்நிலைமைகளின் கீழ் லியோன் ட்ரொட்ஸ்கியின் கருத்துக்கள்
முன்னொருபோதும் இல்லாத அளவில் பரந்த அளவில் மக்களைச் சென்றடையும்,
ஏற்கனவே தம்மை நான்காம் அகிலத்தின் பங்காளர்கள் எனக் கருதும் குழுக்களை,
போக்கினரை,
அதன் வேலைத் திட்டத்தினைப் புரிந்து கொள்ளும் நிலையில் இருப்போரை நாம்
ஒரு கலந்துரையாடலுக்கு அழைக்கிறோம்.
53.
தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தினூடாக மட்டுமே ஏகாதிபத்தியம்,
காலனித்துவம்,
யுத்தத்தின் அவலம் ஆகியவை தோற்கடிக்கப்படுவதை உத்தரவாதம் செய்ய
முடியும். இந்த ஐக்கியத்தினை சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான
நான்காம் அகிலத்தைக் கட்டி எழுப்புவதன் மூலமே அடையமுடியும்.
ஏகாதிபத்திய யுத்தம்,
காலனி ஆதிக்கத்துக்கு எதிரான தொழிலாளர் மாநாட்டை நோக்கி முன்னேறு!. |