Home

Print Version

 

The world capitalist crisis and the tasks of the 4th international.
நான்காம் அகிலத்தின் ஐம்பது ஆண்டுகள்

சர்வதேசியமும்,பாட்டாளிவர்க்கமும்

முதலாளித்துவ நெருக்கடியும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையும்

நான்காம் அகிலமும் சந்தர்ப்பவாதமும்

சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு வரலாற்று கணக்கெடுப்பு

ஸ்ராலினிசத்தின் பங்கு பற்றி பப்லோவாதம்

சோவியத் யூனியன் இன்று

நிரந்தரப்புரட்சித் தத்துவம் ஊர்ஜிதம்

ஐக்கிய அமெரிக்க அரசுகள், ஜப்பான்,ஐரோப்பாவும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான குரோதங்களின் வளர்ச்சியும்

ஏகாதிபத்தியமும் ஆசிய பசுபிக்கரையும்

பின்தங்கிய நாடுகளின் வறுமை

உலகக் கடனின் பெருக்கம்

ஏகாதிபத்திய யுத்தத்திற்கெதிரான போராட்டம்

அனைத்துலகக்குழுவும் மார்க்சிசத்துக்கான போராட்டமும்

 

 

The Growth of World Debt

உலகக் கடனின் பெருக்கம்

147. கடன் பெருக்கமானது, பின்தங்கிய நாடுகளின் ஏழ்மைநிலையில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகுத்திருப்பதோடு உலகப் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு முக்கிய மூலமாகவும் விளங்குகின்றது. 1973 - 75 உலகப் பொருளாதார பின்னடைவுக்கு பிந்திய ஒரு தசாப்த காலம், உலக நிதிக்கடனில் வியக்கத்தக்க பெருக்கத்தினால் குணாம்சப்படுத்தப்பட்டிருந்தது. அனைத்துலக மூலதனத்தின் அசாதாரமான நகர்வினால் இதற்கு மேலும் எண்ணெய் வார்த்தல் விரைவானது. பெரிய வகைப்பட்டதுமான ஆதாயத்தைத் தேடி பேரளவிலான தொகைகள் பூகோளத்தை ஊடறுத்துச் செல்கின்றன. மூலதனத்தின் இத்தகைய ஒரு வெறிபிடித்த இயக்கம், வரலாற்றில் முன்னொருபோதும் இருந்ததில்லை. சர்வதேச நாணயமாற்று வீதங்களில் ஏற்படும் நிமிட நேரமாற்றங்கள் பூகோளத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு பெருமளவு நிதிச் சொத்துக்களை மாற்றுவதற்கான காரணமாக அமைந்துள்ளன. 1969 ல் அமெரிக்க அரசுகளில் 100 கோடி டாலருக்கும் குறைவாக இருந்த நாளாந்த அந்நியச் செலவாணி மாற்று 1983 ல் 3400 கோடி டாலராக உயர்ந்துள்ளது. உலக ரீதியாக இது 1979 ல் 7500 கோடி டாலரிலிருந்து 1986இல் 2000 கோடி டாலருக்கு மேலாக உயர்ந்தது.

148. இந்த வெறிபிடித்த நடவடிக்கை மனித இனத்தின் உற்பத்திச் சக்திகளின் அபிவிருத்திக்கு எந்தவொரு பங்களிப்பையும் செய்யவில்லை. மாறாக லாபத்துக்கான ஓட்டமானது, அபரிதமான சந்தைகளையும், சர்வதேச தேசிய கடன்களின் பிரமாண்டமான மாளிகைகளையும் சிருஷ்டித்துள்ளது. உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தில் வெறிபிடித்த போட்டியானது, நிதி, அடிப்படைத் தொழில்துறை மற்றும் பண்டங்களில் சக்திக்கு மீறிய அளவை உருவாக்கியுள்ளது. 1970 களின் எண்ணெய்க்கான முதலீடு 1980 களின் பாரியளவில் அதிகரித்தது இந்த மாற்றத்தின் தொடர்ச்சிக்கான நல்லதோர் எடுத்துக்காட்டாகும். அளவுக்கு மீறிய விதத்தில் உற்பத்திசெய்த இந்த லாபத்துக்கான அராஜக ஓட்டமானது, இன்று ஆலைகள் மூடல் மற்றும் பேரளவிலான வேலைநீக்கங்கள் முதலான பாரம்பரிய முதலாளித்துவ தொழில்நுட்பங்கள் ஊடாக இதன் அழிவினை வேண்டி நிற்கிறது. இந்த நிகழ்வுப்போக்கானது, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் எஃகுத் தொழிலை ஏற்கனவே நாசமாக்கி விட்டது. மோட்டார் தொழிலிலும் தசாப்தம் முழுமையும் இப்போக்கு வளர்ந்து வருவதோடு 1990களுக்கும் தொடரும்.

149. உலகப் பொருளாதாரத்தின் மேல் ஒரு இருண்ட நிழல் போன்ற இந்த கடன் வலைகளும் அவற்றின் தாக்கங்களும் பெரும் அழிவுகரமானவை என்பதை சகல முதலாளித்துவ பொருளியலாளர்களும் அங்கீகரித்துள்ளார்கள். அனைத்து நாடுகளும் கடன்மட்டங்களால் அடியோடு திவாலடைந்துள்ளன. அவை வெகுஜனங்களைப் பட்டினி போடுவதன் மூலம் ஏற்றுமதிகளைப் பெருமளவில் அதிகரிப்பதனூடாகவே அரைகுறையாகவாவது திருப்பிச் செலுத்தப்படமுடியும். 1982ல் வெளிநாட்டுக்கடன் ஏற்றுமதிகளின் (மீளக்கொடுப்பனவு) நூறுவீதத்தினை ஏற்கனவே எட்டியுள்ளது. ஆர்ஜெண்டீனாவில் 179% ஐயும் மெக்சிக்கோவில் 129% ஐயும் பிறேசிலில் 122% ஐயும் வெனிசுலாவில் 95% ஐயும் பிலிப்பைன்சில் 91% ஐயும் எட்டிற்று. அனைத்து கடன்பட்ட குறைவளர்ச்சி அடைந்த நாடுகளின் கடனுக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான விகிதாசாரம் 1987 ல் 132.2% ஆக இருந்து 1986 ல் 179.5% ஆக அதிகரித்தது. கடந்த தசாப்தத்தில் குறைவளர்ச்சியடைந்த கடனாளி நாடுகளில் கடனுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதாசாரம் 1978 ல் 25.6% ஆகவும் 1982-ல் 33.8% ஆகவும் இருந்து 1986 ல் 40% ஆக அதிகரித்தது. தலா அடிப்படையில் பார்க்குமிடத்து லத்தீன் அமெரிக்க நாடுகளின் கடன் மட்டம் ஈடாட்டம் கண்டு வருகிறது. இது ஆர்ஜென்டீனாவில் 1662 டாலர்கள், பொலிவியாவில் 622 டாலர்கள், பிறேசிலில் 791 டாலர்கள், சிலியில் 1740 டாலர்கள், கோஸ்டாரிகாவில் 1615 டாலர்கள், மெக்சிக்கோவில் 1,261 டாலர், மற்றும் வெனிசுலாவில் 2.00 டாலர்கள்.

150. அமெரிக்காவின் உள்ளே உள்ள கடன் புள்ளிவிபரங்கள் அமெரிக்க முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த அழுகிய நிலையை அம்பலப்படுத்துகிறது. 1970 ல் 91,400 கோடி டாலர்களாக இருந்த கூட்டாட்சிக் கடன் 1987 ல் 1,84,100 கோடி டாலர்களாக அல்லது மொத்த தேசிய உற்பத்தியில் 37% ஆக அதிகரித்துள்ளது. கடன்களின் மீதான வட்டி 1975 ன் 2,320 கோடி டாலர்களில் இருந்து 1979ல் 4,260 கோடி டாலர்களுக்கும் 1985 ல் 12,940 கோடி டாலர்களுக்கும் அல்லது வரவுசெலவுத் திட்டத்தில் 13.7% ஆகவும் உயர்ந்தது. 1980 ல் 1,60 000 கோடி டாலர்களாக இருந்த அரசாங்க, தனியார் கடன்கள் 1980 ல் 8,00,000 கோடி டாலர்களாக அதிகரித்தது. 'கார்ப்பரேட்' கடனின் பெருக்கமானது, அமெரிக்க வர்த்தகத்திற்கு முழு அடிப்படையினதும் நொறுங்கும் தன்மையை அம்பலப்படுத்துவதுடன், இது முதலாளித்துவத்தின் தொழிற்பாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டையும் பிரதிநிதித்துவம் செய்கின்றது. லாபத்துக்கான ஓட்டமானது, உற்பத்தியின் போக்கினையே கீழறுத்து பேராபத்தான அழிவு நெருக்கடிக்கு தளம் அமைக்கின்றது.

151. அமெரிக்கத் தொழில்துறையின் புணரமைப்பினை முதலாளித்துவப் பத்திரிகைகள் உலகச் சந்தையில் அமெரிக்காவின் போட்டியிடும் தன்மையின் ஒரு மறு பிறப்பு எனக் கொண்டாடின. உண்மையில் அது வளங்களை உதவாக்கரையான விதத்தில் வீண் விரயம் செய்வதையே குறிக்கின்றது. 1980 களின் இணைப்புக்கள் தொழிலாளர் வர்க்கத்தை பலவீனப்படுத்துவதையும் சுரண்டலின் வீதத்தினைத் தீவிரமாக்கவும், லாபவீதத்தில் சரிவினை ஈடுகட்டுவதையும் மைய இலக்குகளாக கொண்டிருந்தன. வங்கிகளும் தரகர் இல்லங்களும் இந்த 'இணைப்பு வைத்தியம்' பிரமாண்டமான காகித லாபங்களை சிருஷ்டித்தன என்பதில் உண்மையில் அக்கறைகாட்டவில்லை. 1980 க்கு முன்னர் இணைப்புக்கு 100 கோடி டாலர்கள் செலவினை எடுத்த 12 இணைப்புகள் மட்டுமே இடம்பெற்றன. ஆனால் 1980- 1985 க்கு இடையில் அவை 45 ஆக இருந்தன. அத்தகைய பலகோடி டாலர்கள் மதிப்புடைய இணைப்புக்கள் 1985 ல் 25 ஆகவும் 1986 ல் 33 ஆகவும் இடம்பெற்றன. நாலாயிரம் நிறுவனங்கள் 1986 ல் புணரமைப்புக்காக 20,000 கோடி டாலர்கள் மதிப்புடைய 12,200 கம்பெனிகள் கைமாறின.

152. இந்த சொத்துக்களின் மறு ஒழுங்கமைப்பானது தவிர்க்க முடியாத விதத்தில் பிரமாண்டமான கடன்களை உள்ளடக்கிக் கொண்டது. உதாரணமாக கல்ப்பை (GULF) சுவீகரிக்கும் ஆர்கோவின் (ARCO) தோல்வியில் முடிந்த முயற்சிக்கு 1,200 கோடி டாலர்களும், டி. பூன்பிக்கன்சின் தமது இணைப்பை தடுக்கு கல்¢¢ஃப்பின் நிதியீட்டமான 1000 கோடி டாலர்களும், சோகல்(SOCAL) கல்ஃப்புடனான தமது இணைப்புக்கு 1,400 கோடி டாலர்கள் போன்றன. இந்த இணைப்பு வைத்தியத்'கார்ப்பரேட்' கடன் வானளவுக்கு உயர்ந்தது. 1950 ல் அமெரிக்க கூட்டுத்தாபனங்கள் அவை வட்டியாகச் செலுத்திய ஒவ்வொரு டாலருக்கும் 43 டாலர்களை வைத்திருந்தன. 1982 ல் இருந்து சொத்துக்களுக்கும், வட்டிக்கும் தின் வினை இடையிலான விகிதாசாரம் 4-க்கு ஒன்றாக வீழ்ச்சி கண்டது. 1983 ல் கடன் சுமார் 6,000 கோடி டாலர்களாலும் (Fquity) சாதாரண பங்கு 3,000 கோடி டாலர்களாலும் அதிகரித்தது. 1984-ல் புதிய கார்ப்பரேட் கடன்கள் 16,900 கோடி டாலர்களாக அதிகரித்த வேளையில் Euity 7,800 கோடி டாலர்களால் வீழ்ச்சி கண்டது. 1985-ல் கடன் மற்றுமோர் 1,45,000 கோடி டாலர்களால் அதிகரித்தது. பெரும்பாலான தொழிற்சாலைகளில் இலாபங்கள் நிலையான வட்டிகளையும், முன்னுரிமைப் பங்கு லாபக் கட்டணங்களையும் வழங்கப் போதுமானதாக இல்லை. கடனின் அளவு தொடர்ச்சியாக அதிகரித்து வந்த வேளையில் இதன் கால எல்லை தொடர்ந்து குறுகிக்கொண்டே வந்தது. 1976 ல் ஒரு வருடத்திற்கு குறைந்த குறுகிய காலக்கடன்கள் 4,000 கோடி டாலர்களில் இருந்து 1984 ல் சுமார் 1,000 கோடி டாலர்களாக அதிகரித்தன. 1985 அளவில் வரிவிதிப்புக்கு முன்னைய 47% ஆன லாபம் கடன் சேவைக்குச் சென்றது. கடனில் அரைப்பங்குக்கு மேல் குறுகிய காலக்கடன்களாக விளங்கியது. கடனின் தரத்தைப் பொறுத்த மட்டில் 1985 ல் சகல புதிய கார்ப்பரேட் விநியோகங்களிலும் 25%ஐ மதிப்பற்ற கடன் பத்திரங்கள் கொண்டிருந்தன.

153. நின்றுபிடிக்க முடியாத தன்மையுடைய கடனின் பிரமாண்டமான கட்டமைப்பு மிகத்தெளிவானதாகும். பெரிதும் அச்சத்திற்குரியதும் ஆனால் பொருளாதாரப் பின்னடைவின் தவிர்க்கமுடியாத தாக்கமானது முழு அமைப்பின் மீதும் தாங்கமுடியாத சுமையைத் திணிப்பதோடு, கார்ப்பரேட் திவால்களின் சங்கிலித் தொடர்வினைகளால் அச்சுறுத்துகின்றது. மேலும் 65 ஆண்டுகளுக்கு முன் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதைப் போல், போலி மூலதனத்தின் பெருக்கமானது, முதலாளித்துவப் பொருளாதாரத்தின் திவாலைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும். கோடானுகோடி கடன்களும் ஒன்றில் உயிர்வாழ்வுக்காக மறைந்துவிட்ட அல்லது இன்னமும் சிருஷ்டிக்கப்படவுள்ள மூலதனத்தின் மீதான கோரிக்கைகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. இன்னும் உயிரோடில்லாத மூலதனத்திலிருந்து எதனையும் கறந்தெடுக்க முடியாது. உயிர்வாழும் உழைப்பிலிருந்தே தொழிலாளர் வர்க்கத்திடமிருந்தே கடனைத் தாங்கிப் பிடிப்பதற்கான அந்த மூலதனம் பெறப்பட்டாக வேண்டும். அதனை வேலை செய்பவர்களை உக்கிரமாகச் சுரண்டுவதன் ஊடாகவும் அதேசமயத்தில் தேசிய வருமானத்தில் தொழிலாளர்களின் பங்கினைக் குறைப்பதன் மூலமே பூர்த்தி செய்ய முடியும்.

154. இக் கொள்கையை அமுல் செய்வதானது, தொழிலாளர் இயக்கத்தில் உள்ள முதலாளி வர்க்க ஏஜெண்டுகளின் ஒத்துழைப்பிலேயே முற்றிலும் தங்கியுள்ளது. ஆனால் இந்தத் துரோகிகள், தமது விருப்பங்கள் இருந்தபோதிலும் இப்பணிக்குச் சமமாக நிரூபிக்க முடியாதவர்களாவர். இலாப முறையின் முடிவுகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் கிளர்ச்சியானது, முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியின் தவிர்க்கமுடியாத ஒரு பின்விளைவாகும். அந்த கிளர்ச்சியைப் புரட்சிகர வழியில் வழிநடாத்துவது நான்காம் அகிலத்தின் வரலாற்றுப் பொறுப்பாக இருந்து வருகின்றது.