World Socialist Web Site www.wsws.org


Year in Review: 1999

உலக சோசலிச வலைத் தளத்தின் இரண்டாம் ஆண்டு

Back to screen version

1999 ஆண்டில் பெரும் ஏகாதிபத்திய சக்திகள் ஒரு சிறிய நாட்டிற்கு எதிராக முன்கண்டிராதவொரு அளவில் பலதரப்பினரும் ஒன்றுகூடி  தாக்குதலுக்கு நிற்கக்கண்டோம். பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் பிற நேச நாடுகளின் படைகள் பங்குபற்றி இருந்த நேட்டோ அமெரிக்காவின் தலைமையில் முன்னாள் யூகோஸ்லாவியாவிலிருந்து உடைந்த பெரும் துண்டான சிறிய சேர்பியா மீது குண்டு மழை பொழிந்தது.

கொசொவோ மோதல்தான் போருக்கான பொதுவான போலிச்சாட்டாக காட்டப்பட்டது. கொசொவோ, அல்பானிய மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு சேர்பிய மாகாணமாகும். குண்டர்களுடனும் போதை மருந்து கடத்துபவர்களுடனும் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த ஒரு பிரிவினைவாத இயக்கம் அமெரிக்கா மற்றும் ஜேர்மனியிடம் இருந்து ஆதரவைப் பெற்றது என்பதோடு கொசொவோ விடுதலை இராணுவம் என்று போலியானதும் பொருத்தமற்றதுமான பெயரை தனக்குத் தானே சூட்டிக் கொண்டது.

ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தையும் வெகுஜனக் கருத்தையும் திரட்டும் தனது முயற்சிகளின் பகுதியாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உலக சோசலிச வலைத் தளத்தில் வழக்கமாய் வாரத்திற்கு ஐந்து நாட்கள் கட்டுரைகள் வெளியாகிக் கொண்டிருந்ததை 1999 மே முதல் வாரத்தில் இருந்து வாரத்திற்கு ஆறு நாட்களாய் விஸ்தரித்தது.

சிறிய நாடுகளை ஏகாதிபத்திய நாடுகள் அச்சுறுத்துவதை வியட்நாம் போரின் போதும், கியூபா மற்றும் நிகராகுவா மீதான அமெரிக்கத் தாக்குதல்களின் போதும், அல்ஜீரியாவில் பிரெஞ்சு காலனியாதிக்க போரின் போதும் எதிர்த்திருந்த நடுத்தர வர்க்க இடதுகுழுக்கள் எல்லாம், முன்னாள் யூகோஸ்லாவியா உடைந்த சமயத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜேர்மனியின் பின்னால் அணிதிரண்டன. இவை முதலில் பொஸ்னிய முஸ்லீம்களின் பக்கத்தின் நின்று அமெரிக்கத் தலையீட்டை ஆதரித்தன, பின் சேர்பியா மீது குண்டுவீசுவதை ஆதரித்தன.

இதே குழுக்கள் கிழக்கு தீமோரை ஆஸ்திரேலியா ஆக்கிரமித்து பழையவகையிலான காலனித்துவத்தை பிற்போக்குத்தனமான வகையில் வெளிக்காட்டிய சமயத்திலும் இந்தோனேசிய இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக தீமோரிய மக்களை பாதுகாப்பது என்ற பேரில் மனிதாபிமான போர்வையின் கீழ் அதையும் ஆதரித்தன.

சேர்பியாவில் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்களைக் கொன்று நாட்டின் உள்கட்டமைப்பின் பெரும்பகுதியை சின்னாபின்னமாக்கிய அமெரிக்க-நேட்டோ குண்டுவீச்சுக்கு உலக சோசலிச வலைத் தளம் ஒரு வலிமையானதும் கோட்பாடுமிக்கதுமான எதிர்ப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தியது.

அரசாங்க மற்றும் இராணுவ அதிகாரிகள் குள்ளத்தனமாக கூறிக் கொண்டதைப் போல, இந்த அழிவுமிக்க குண்டுவீச்சு பிரச்சாரத்திற்கும் மனிதாபிமானப் பேரழிவைத் தடுப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, மாறாக அதிகரித்தளவில் போர்விளைவுமிக்கதாக மாறி வரும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் விளைபொருளாகும் இது என்று WSWS விளக்கியது. சோவியத் ஒன்றியத்தின் உடைவை, சவாலற்ற மேலாதிக்க சக்தியாக அமெரிக்காவைக் கொண்ட ஒருமுனை உலக ஒழுங்கை உருவாக்குவதற்கான வாய்ப்பாக அமெரிக்கா கண்டது.

WSWS வழங்கிய பகுப்பாய்வு கொசொவோ அல்பானியர்களின் தலைவிதி குறித்து கவலைப்படுவது போன்ற பாசாங்குகளை ஊடுருவிச் சென்று போரின் உண்மையான காரணங்களை வெளிப்படுத்தியது. இதில் மே 24 அன்று வெளியான அறிக்கை மிகக் குறிப்பிடத்தக்கதாகும். நேட்டோ ஏன் யூகோஸ்லாவியாவில் போரில் ஈடுபட்டிருக்கிறது? உலக சக்தி, எண்ணெய் மற்றும் தங்கத்திற்காக என்ற தலைப்பிலான அந்தக் கட்டுரை குண்டுவீச்சுப் பிரச்சாரத்தின் உலக-வரலாற்று உள்ளடக்கத்தை சுருங்கக் கூறியது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் ஐரோப்பாவிற்குள் வெடித்திருக்கும் முதல் ஆயுதரீதியான மோதலானது போட்டி சக்திகளுக்கு இடையே குரோதங்களை அதிகரித்து முன்னாள் யூகோஸ்லாவியாவின் எல்லைகளுக்கு அப்பாலும் செல்ல அச்சுறுத்தியது என WSWS எச்சரித்தது. இன்னும் விரிந்த மிக ஆபத்தான இராணுவ முனைப்புகளுக்கு அந்த மோதல் கட்டியம் கூறியது.

குண்டுவீச்சு ஆரம்பித்துவிட்ட பின்னர் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் பதட்ட நிலை தொற்றிக் கொண்டது. சேர்பியாவில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யத் துருப்புகளின் மீது தாக்குதல் தொடுப்பதற்கு ஒரு அமெரிக்க தளபதி ஆலோசனை கூறியதை அடுத்து இந்த இரண்டு அணு ஆயுத சக்திகளும் பகிரங்கமான இராணுவ மோதலின் விளிம்பில் நின்றன. அப்போது சேர்பியாவில் இன்னொரு பயங்கர சம்பவமும் நடந்தது. சேர்பிய ஆட்சியாளரான சுலோபோடான் மிலோசெவிக்கின் பக்கம் சீனா நிற்பதற்கு பதிலடி தரும் விதமாக CIA இன் உத்தரவின் பேரிலான வான்வழித் தாக்குதல் சீனத் தூதரகத்தை தாக்கியிருந்தது.

கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் ஸ்ராலினிச ஆட்சிகளின் மறைவிற்கு இட்டுச் சென்ற 1980களின் பிற்பகுதியில் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் மத்தியில் யூகோஸ்லாவியா உடைந்து சிதறியதற்கான தோற்றுவாய்களையும் WSWS பகுப்பாய்வு செய்தது. 1980களின் பிற்பகுதியில், அரசு நிறுவனங்கள் மூடப்பட்டு அரசு சேவைகள் வெட்டப்பட்டு மில்லியன்கணக்கான யூகோஸ்லாவியத் தொழிலாளர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கட்டளைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது திணித்த முன்னாள் ஸ்ராலினிச ஆட்சிகளை வேலைநிறுத்தங்களும் பெரும் தொழிலக நடவடிக்கைகளும் அச்சுறுத்தின. பரவலான கோபமும் சமூகத் துயரமும் புரட்சிகரமான பாதைகளுக்குள் திரும்பிவிடாமல் திசைதிருப்பும் முயற்சியில் பல்வேறு யூகோஸ்லாவியக் குடியரசுகளின் முன்னாள் ஸ்ராலினிசத் தலைவர்கள் இனவெறியூட்டும் வாய்வீச்சில் இறங்கினர்.

இது தான் சேர்பிய தேசியவாதத்திற்கு வக்காலத்து வாங்கி அதிகாரத்திற்கு வந்த முன்னாள் ஸ்ராலினிஸ்டான சுலோபோடன் மிலோசெவிக்கின் எழுச்சியின் கீழே அமைந்திருந்த நிகழ்போக்காகும். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மிலோசெவிக்கை ஒரு புதிய ஹிட்லராக ஊடகங்கள் சித்தரிக்கின்ற அதேவேளையில், உண்மையில் அவர் அமெரிக்காவின் முன்னாள் அபிமானியாக இருந்தவராவார். முதலாளித்துவச் சந்தையை ஆதரித்தவர் என்பதால் அமெரிக்கா அவரை ஆதரித்தது.

மேலும், மிலோசெவிக் தேசியவாத வார்த்தையாடலில் ஈடுபட்ட அதேநேரத்தில், அவரது வார்த்தைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு ஒத்ததையே யூகோஸ்லாவியாவின் உப குடியரசுகள் மற்றும் மாகாணங்களின் தேசியவாதத் தலைவர்களும் கொண்டிருந்தார்கள். இவர்களும் குரோஷியாவின் கிராஜினா பிராந்தியம் போன்ற பகுதிகளில் இருந்து சேர்பிய மக்களை விரட்டியக்கும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

சேர்பியாவை அடிபணியச் செய்யும் பொருட்டு அதன்மீது குண்டுவீசுவதற்கு கிளிண்டன் நிர்வாகம் எடுத்த முடிவு உலக  முதலாளித்துவத்தில் ஒரு முக்கியமான வரலாற்று நகர்வின் விளைபொருள் என்பதை WSWS விளக்கியது. ஒரு வறுமைப்பட்ட நாட்டின் மீது அமெரிக்க-நேட்டோ போர் விமானங்கள் 35,000 இலக்குகளைக் குறிவைத்து இயங்கியது பெரும் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் சிறு நாடுகளுக்கும் இடையிலிருந்த உண்மையான உறவுகளை அம்பலப்படுத்தியது.

சேர்பியாவின் சரணடைவுக்குப் பின்னர் ஜூன் 14 அன்று வெளியான படுகொலைக்குப் பின்னர்: பால்கன் போரின் அரசியல் படிப்பினைகள் என்கிற கட்டுரையில் டேவிட் நோர்த் ஒரு பெரும் வரலாற்றுப் பின்சரிவு நடந்து கொண்டிருந்ததை குறிப்பிட்டுக் காட்டினார். 1940களின் பிற்பகுதியில், 1950களில் மற்றும் 1960களில் பழைய காலனித்துவ சாம்ராஜ்யங்கள் எல்லாம் சிதறியதெல்லாம், நடப்பு நிகழ்வுகளின் வெளிச்சத்தில் பார்த்தால், ஏகாதிபத்திய வரலாற்றில் ஒரு தற்காலிக காலகட்டமாகவே இருந்திருக்கிறது.

ஆயிரக்கணக்கான சேர்பியர்களை படுகொலை செய்வதற்கு  ஆதரவளிப்பதில் பல்தரப்பட்ட முன்னாள்-இடது குழுக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் ஆற்றிய பாத்திரம் தான் இந்த குண்டுவீச்சுப் பிரச்சாரம் முழுவதிலுமே மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருந்தது. உயர் நடுத்தர வர்க்கத்தின் சலுகை படைத்தவொரு தட்டு போருக்கு ஆதரவாளர்களாக மாறியிருந்த இந்த நிகழ்வின் சமூக வேர்களை நோர்த் விளக்கினார்:

முக்கியமான முதலாளித்துவ நாடுகள் அத்தனையின் சமூகக் கட்டமைப்பு மற்றும் வர்க்க உறவுகளும் 1980களின் ஆரம்பத்தில் தொடங்கிய பங்குச் சந்தை எழுச்சியால் பெரும் பாதிப்புக்குட்பட்டவையாக இருக்கின்றன. நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் பங்கு மதிப்புகளும், குறிப்பாக 1995க்குப் பின் சந்தை மதிப்பீடுகளில் ஏற்பட்டிருக்கும் அநாசய அதிகரிப்பும், நடுத்தர வர்க்கத்தின் கணிசமான பகுதிக்கு,  குறிப்பாக தொழில்நிபுணத்துவ பிரிவினர் இடையே அவர்களது வேலைவாழ்க்கையில் கற்பனைசெய்து பார்க்க முடியாத செல்வத்தின் ஒரு அளவினை அடைவதை உருவாக்கித் தந்திருக்கிறது.

முதன்முதலாக சமூக ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து ஒரு கூட்டணி அரசாங்கத்திற்குள் காலடி வைத்திருந்த ஜேர்மன் பசுமைக் கட்சி இந்த வாய்ப்பை பாய்ந்து பற்றிக்கொண்டு போருக்கான தம் ஆதரவை அறிவித்தது. இக்கட்சியின் தலைவரும் முன்னாள் அராஜகவாத வீதிப் போராளியுமான ஜொஸ்கா பிஷ்ஷர் அரசாங்கத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இக்குண்டுவீச்சுப் பிரச்சாரத்திற்கான பிரதான ஊக்குவிப்பாளராகவும் சேவையாற்றினார்.

 

மேலதிக தகவல்கள்

 14 June 1999  After the Slaughter: Political Lessons of the Balkan War

· 24 May 1999  Why is NATO at war with Yugoslavia? World power, oil and gold

· 31 March 1999  NATO attack on Serbia has repercussions for Europe as a whole

· 15 April 1999  The US and ethnic cleansing—the case of Croatia

· 17 April 1999    IMF shock therapy and the recolonisation of the Balkans

· 24 April 1999  The record of the Kosovo Liberation Army: ethnic politics in alliance with imperialism

· 30 April 1999 The German Green Party at war

· 30 April 1999   From peacekeeper to war hawk—Canada and NATO's war on Serbia

ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியமும் கிழக்கு தீமோரும்

செப்டம்பர் மாதத்தில் ஏகாதிபத்திய சக்திகளின் இன்னுமொரு நவ-காலனித்துவ நடவடிக்கையான கிழக்கு தீமோரில் ஆஸ்திரேலியா தலைமையிலும் அமெரிக்க ஆதரவுடனும் நடத்தப்பட்ட தலையீடு தொடங்கியது.

1997-1998 ஆசிய நிதிநெருக்கடியைத் தொடர்ந்தும் இந்தோனேசியாவில் சுகார்ட்டோ ஆட்சியின் உருக்குலைவை அடுத்தும், வாஷிடங்கனும் கன்பெராவும் கிழக்கு தீமோருக்கு அவை வழங்கி வந்த பல தசாப்தகால ஆதரவில் இருந்து விலக ஆரம்பித்தன. மூலவளங்கள் செறிந்த இந்த பிராந்தியத்திற்கு சுதந்திரம் அளிப்பதே தமது பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு உகந்ததாக இருக்கும் என்ற முடிவுக்கு அவை வந்தன.

அமெரிக்கா மற்றும் அதன் ஆஸ்திரேலிய துணைக்காவலாளியிடம் (இப்படித் தான் பிரதமர் ஜான் ஹோவார்ட் தனக்குத் தானே மதிப்பிழந்தவாறு காட்டிக்கொண்டார்) இருந்து அழுத்தத்தைப் பெற்றதன் கீழ், சுகார்ட்டோவின் அடுத்து பதவிக்கு வந்த பி.ஜே. ஹபிபி ஆகஸ்டு 30 அன்று ஒரு பொதுஜன வாக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்தார். தீமோர் மக்கள் சுதந்திரத்திற்கு ஆதரவாக வாக்களித்ததை அடுத்து, இந்தோனேசிய இராணுவமும் அதன் பினாமி ஆயுதக்குழுக்களும் நூற்றுக்கணக்கில் அப்பாவி மக்களைக் கொன்றும் நூறாயிரக்கணக்கிலான மக்களை இடம்பெயரச் செய்தும் பதிலடி கொடுத்தனர். இதன் மூலம் பெரும் சக்திகள் தமது நலன்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக மனிதாபிமானத்தை போலிச்சாட்டாக கூறி தலையீடு செய்வதற்கு இது வழிவகை ஏற்படுத்தப்பட்டது.

அதற்கு பிரதிபலிப்பாக உலக சோசலிச வலைத் தளம், ஏகாதிபத்தியத் தலையீட்டை எதிர்த்து தொடர்ச்சியான அறிக்கைகளை விடுத்தது. மேற்கூறிய நடவடிக்கைகளின் கொள்ளைக்கார நோக்கை அம்பலப்படுத்துகிற பொதுக் கூட்டங்களை சோசலிச சமத்துவக் கட்சி (ஆஸ்திரேலியா)  ஏற்பாடு செய்தது. தீமோர் கடலின் எண்ணெய் வளங்களின் மீது கட்டுப்பாட்டையும் பூகோள-மூலோபாயரீதியாக மிக முக்கியமான இந்தோனேசிய தீவுக்கூட்டங்களை கூடுதலான அணுகலையும் பெறுவதற்கு முக்கியமான சக்திகள் முனைந்து கொண்டிருந்தன என்பதை  WSWS விளக்கியது. ஏறக்குறைய 200,000 உயிர்களை பலிகொண்டு 1975 இல் கிழக்கு தீமோருக்குள் இந்தோனேசியா ஆக்கிரமித்தது உட்பட்ட சுகார்ட்டோ ஆட்சியின் குற்றங்களில் உடந்தையாக இருந்திருந்த அடுத்தடுத்த அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் இத்தீவில் நிகழ்த்திய ஏகாதிபத்திய சூழ்ச்சிகளின் ஒரு வரலாற்றையும் இது மீளாய்வு செய்தது.

இதில் குட்டி-முதலாளித்துவ இடதுகள் ஆற்றிய பாத்திரத்தை அம்பலப்படுத்தியமை WSWS ஆய்வின் மிக முக்கியமான அம்சமாக இருந்தது. இந்தக் குழுக்களில் ஏராளமானவை வலதுசாரி ஹோவார்டு அரசாங்கத்தைத் தலையீடு செய்ய அழைத்து துருப்புகள் நுழையட்டும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தன.  நடுத்தர வர்க்க இடது குழுக்கள் இடையே நிகழ்ந்த வலது நோக்கிய நகர்வில் கிழக்கு தீமோர் ஒரு மேலதிக கட்டமாக இருந்தது. இக்குழுக்கள் மனித உரிமைகள் என்கிற பதாகையின் கீழ் பகிரங்கமாக ஏகாதிபத்தியத்தைத் தழுவிக் கொண்டன.

ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் அடிப்படையில், தீமோர் மற்றும் இந்தோனேசிய மக்களுக்கான ஒரு சோசலிச முன்னோக்கினை WSWS வரையறுத்தது. இந்தோனேசிய ஆதரவுபெற்ற ஆயுதக்குழுக்களின் படுகொலைகளுக்கு எதிராக மக்களைப் பாதுகாத்து நிற்க மறுத்த கிழக்கு-தீமோரின் தேசியவாத குழுவான CNRT ஐ இது அம்பலப்படுத்தியது. CNRT தலைவர்கள், அதற்குப் பதிலாக, ஏகாதிபத்தியத் தலையீட்டைக் கோரி கிளர்ச்சி செய்வதற்கு அப்பாவி மக்களின் படுகொலைகளைப் பயன்படுத்தினர். அத்தலையீடு  ஒரு புதிய முதலாளித்துவ குட்டி நாட்டில் அவர்களை அதிகாரத்தில் அமர்த்தி, தீமோரின் முதலாளி வர்க்க அடுக்குகளுக்காகவும் பெரும் ஏகாதிபத்திய சக்திகளின் சார்பாகவும் சேவை செய்ய இயலுமானதாக்கும். 

 

மேலதிக தகவல்கள்

· 13 September 1999 East Timor and Kosovo: Indonesian atrocities expose US hypocrisy on human rights

· 17 September 1999 East Timor and protest politics

· 1 October 1999 The Western powers and East Timor—a history of manoeuvre and intrigue

· 17 November 1999 East Timor: the history and politics of the CNRT


மற்றைய முக்கியமான அரசியல் அபிவிருத்திகள்

அந்த ஆண்டில், WSWS இன்னும் பல முக்கியமான சர்வதேச அபிவிருத்திகள் குறித்து ஆராய்ந்தது. அமெரிக்க செனட்டில் ஒரு விசாரணைக்குப் பின் கிளின்டன் விடுவிக்கப்பட்டதில் அமெரிக்க பதவிவிலக்கல் தீர்மான நெருக்கடி உச்சம் பெற்றது உட்பட்ட விவகாரங்கள் இவற்றில் இடம்பிடித்தன. (கிளின்டன் நிர்வாகத்தை ஸ்திரம் குலைப்பதற்கு நடந்த வலது-சாரிப் பிரச்சாரத்தின் மீதான முழுமையான மதிப்பாய்வுக்கு 1998 ஒரு ஆய்வு பக்கத்தைக் காண்க.)

மயிரிழையில் கிளிண்டன் தப்பியதைத் தொடர்ந்து  ஜனநாயக கட்சி ஜனாதிபதி இன்னும் அதிகமான அடிமைத்தனத்துடன் வோல் ஸ்ட்ரீட்டின் கோரிக்கைகளுக்குத் தகவமைத்துக் கொண்டமை  நிகழ்ந்தது. 800 பில்லியன் டாலர் வரி வெட்டு மற்றும் வங்கிகள் தாராளமயமாக்க சட்டம் ஆகியவை இதில் அடங்கும். இவையே 2008 நிதி நெருக்கடியில் உச்சம் பெற்றதான ஊக வணிக வெறியாட்டத்திற்கு மேடையமைத்துத் தந்தது.

அமெரிக்காவில் ஆழமடைந்துவரும் சமூக நெருக்கடியின் அடித்தளமாகவுள்ள வர்க்க முரண்பாடுகளின் தீவிரத்தை விளங்கப்படுத்தும் விதமாக மிருகத்தனம் மற்றும் வன்முறையின் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்ததற்கு இடையே அது குறித்து WSWS தொடர்ந்து செய்திகள் வெளியிட்டதுடன், ஆய்வும் செய்தது. இதில் மிகப் பயங்கரமான சம்பவம் என்று குறிப்பிடுவதானால் கொலராடோ, டென்வரின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் கொலம்பிய உயர்நிலைப் பள்ளியில் நடந்த படுகொலைகளைக் கூறலாம். இச்சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரில் அநேகமானோர் உயர்நிலைப் பள்ளி மாணவர்களாவர். இது ஒரு உணர்ந்துகொள்ளமுடியாத துயரம், இதனை தீமையின் வெளிப்பாடாகவே புரிந்து கொள்ள முடியும் என்ற கூற்றை நாம் நிராகரித்தோம். அமெரிக்க அரசாங்கத்தாலும் ஊடகங்களாலும் ஊக்குவிக்கப்பட்ட வன்முறை மற்றும் பிற்போக்குத்தனத்தின் ஒரு சூழலுக்கு இந்த இரத்தச் சுவடுகள் அழைத்துச் செல்வதை நாம் கண்டோம்.

ஐரோப்பாவில், பிரிட்டன் மற்றும் ஜேர்மனியில் அதிகாரத்திற்கு வந்திருந்த சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கங்களின் கொள்கைகளை WSWS பகுப்பாய்வு செய்தது. டோனி பிளேயர் 1997 இல் பிரிட்டன் பிரதமராகியிருந்தார். ஜேர்மனியில் ஜேர்மன் மத்திய  தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றிருந்ததை அடுத்து பசுமைக் கட்சியினருடன் சேர்ந்து ஒரு கூட்டணி அரசாங்கம் உருவாக்கப்பட்டு 1998 செப்டம்பர் 27 அன்று ஹெகார்ட் ஷ்ரோடர் சான்சலராகி இருந்தார்.

முன்னர் அதிகாரத்தில் இருந்த பழைமைவாத அரசாங்கங்கள் மீது இருந்த பரவலான வெறுப்பின் காரணமாகவே ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருந்த சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கங்கள் வலதுசாரி பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளைப் பகிரங்கமாக மேற்கொண்டன. சீர்திருத்தவாதத்தையும் கூட கைவிட்டு முதலாளித்துவ பிற்போக்குத்தனத்தைப் பகிரங்கமாகத் தழுவிக் கொண்டதன் முக்கியத்துவத்தை உலக சோசலிச வலைத் தளம் விளக்கியது. தேசிய ஒழுங்கமைப்பு மற்றும் சீர்திருத்தங்களின் வேலைத்திட்டத்திற்கான பொருளாதாய அடித்தளத்தை உடைத்து, தொழிலாள வர்க்கத்திற்கும் அதன் அத்தனை பழைய கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளுக்கும் இடையிலான உறவையும் உருமாற்றி விட்டிருந்த உற்பத்தியின் பூகோளமயமாக்கத்தில் தான் அது வேரூன்றியிருந்தது.

மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவில், ஏகாதிபத்திய ஆதரவு ஒழுங்கைப் பராமரிப்பதில் முதன்மையானதொரு தூணாக நின்ற ஜோர்டான் மன்னர் கிங் ஹூசைன் மரணமடைந்ததை அடுத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலியக் கொள்கை நெருக்கடிக்குள்ளானதை WSWS ஆய்வு செய்தது. அத்துடன் குர்திஸ் பிரிவினைவாத இயக்கமான PKK இன் தலைவர் அப்துல்லா ஓசலான் பிடிக்கப்பட்டதற்குப் பின்னரான அதன் அரசியலையும் WSWS ஆய்வு செய்தது.

இப்பிராந்தியத்தில் நடந்த முக்கியமான உலக நிகழ்வு என்றால் பாகிஸ்தானில் அக்டோபர் 12 அன்று  நடந்த இராணுவக் ஆட்சிக்கவிழ்ப்பாகும். இது தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நவாஸ் ஷெரிபின் அரசாங்கத்தைத் தூக்கியெறிந்து விட்டு ஜெனரல் பர்வேஸ் முஷரப்பை அதிகாரத்திற்குக் கொண்டுவந்தது. இராணுவம் தற்காலிகமாக மட்டுமே அதிகாரத்தைக் கையில் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டதை ஒதுக்கித் தள்ளிய WSWS கட்டுரைகள் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களின் மீது மேலதிகத் தாக்குதல் நடத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் வைத்திருந்த கோரிக்கைகளுடன் இந்த நடவடிக்கையை இணைத்துக் காட்டியது.

கொரியாவில் நடந்த வேலைநிறுத்த அலையில் ஆரம்பித்து ஜூலையில் கியூபெக் செவிலியர் வேலைநிறுத்தங்கள், மற்றும் டெட்ராயிட்டில் ஊதிய வெட்டுகள் மற்றும் பொதுக் கல்வி மீதான தாக்குதல்களுக்கு எதிராக ஆசிரியர்களின் வெளிநடப்புப் போராட்டம் ஆகியவை வரை முக்கியமான தொழிலாளர் போராட்டங்கள் குறித்த கட்டுரைகளை WSWS வெளியிட்டது.

சியாட்டிலில் நடந்த உலக வர்த்தக அமைப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகள் மற்றும் ஆய்வையும் WSWS வெளியிட்டது. இந்த ஆர்ப்பாட்டங்கள் அந்நகரையே தற்காலிகமாக ஸ்தம்பிக்கச் செய்து விட்டது என்பதோடு கூடியிருந்த உலக முதலாளித்துவத் தலைவர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது. இந்த ஆர்ப்பாட்டங்களை மிருகத்தனமான போலிஸ் அடக்குமுறையைக் கொண்டு ஒடுக்கியதை WSWS கண்டனம் செய்தது. பூகோளமயமாக்கலுக்கான எதிர்ப்பு இயக்கத்தின் தேசியவாத மற்றும் சீர்திருத்தவாத அரசியல் அரசியல்ரீதியாக சர்வதேசத் தொழிலாள வர்க்கத்திற்கு எந்த முற்போக்கான பாதையையும் வழங்கவில்லை என்று அது விளக்கியது. அதே நேரத்தில் WTO உச்சிமாநாட்டின் தோல்வியின் புறநிலையான முக்கியத்துவத்தையும் நாம் ஆய்வு செய்தோம். அத்தோல்வி உலக முதலாளித்துவத்தின் பெருகும் முரண்பாடுகளை அடிக்கோடிட்டுக் காட்டியது.

அடிப்படை ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் சோசலிச சமத்துவக் கட்சி நடத்திய தொடர்ச்சியான பிரச்சாரங்களையும் WSWS எடுத்துக்காட்டியது. கட்சியின் கோடைப் பள்ளியில் கலந்து கொள்வதற்கு அழைக்கப்பட்டிருந்த தமிழ் சோசலிஸ்டான ராஜேந்திரம் சுதர்சனுக்கு விசா வழங்க வலது-சாரி ஹோவார்டு அரசாங்கம் மறுத்ததும் இதில் அடங்கும்.  கெரால்டின் ரவ்சன் என்கிற விக்டோரியா ஆசிரியை அரக்கத்தனமான இரகசியம் காப்பு ஷரத்து ஒன்றை மீறியதாகக் குற்றம்சாட்டப்பட்டு வேலைநீக்கம் செய்யப்பட்ட போது அவரைப் பாதுகாத்து ஒரு சக்திவாய்ந்த பிரச்சாரத்தை ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சி நடத்தியது.

ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியில் இருந்த அதன் முதல் பூர்வீககுடி இன உறுப்பினரான யாபு பில்யானா 1999 ஏப்ரலில் காலமானார்.  அப்போது அவரது வயது 54. பூர்வகுடியினர் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பகுதியாவர். அவர்கள் தொடர்ந்து முகம் கொடுத்து வந்திருக்கும் படுபயங்கரமான நிலைமைகளுக்கான தீர்வு என்பது இலாப அமைப்புமுறைக்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் தோல் நிறங்கள், இனங்கள் மற்றும் தேசியங்கள் கடந்து தமது வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுவதன் மூலம் மட்டுமே கிடைக்கும் என்று ட்ரொட்ஸ்கிய இயக்கம் அங்கீகரித்திருந்ததன் மீது ஈர்ப்பு கொண்டு யாபு இயக்கத்துள் வந்திருந்தார் என்பதை நினைவஞ்சலி பகுதியில் WSWS விளக்கியது.

 

மேலதிக தகவல்கள்

  27 April 1999        The Columbine High School massacre: American Pastoral ... American Berserk

· 17 June 1999     Britain’s Blair and Germany’s Schröder present a joint programme: The Third Way/Neue Mitte

· 1 November 1999  Clinton, Republicans agree to deregulation of US financial system

· 30 November 1999   Thousands protest at World Trade Organization meeting in Seattle
Political first principles for a movement against global capitalism

· 15 December 1999   Supreme Court declares government's gag clause invalidSacked Australian teacher wins significant victory

கலை, விஞ்ஞானம் மற்றும் வரலாறு

நமது சர்வதேச கலைச் செய்திகள் 1999 இல் பெருமளவில் விரிவு கண்டன. திரைப்பட விமர்சனங்களுடன் சேர்ந்து கலைக் கண்காட்சிகள், திரை, இசை, திரைப்பட விழாக்கள், புத்தகங்கள் மற்றும் புகைப்படக் காட்சிகள் ஆகியவை குறித்த செய்திகளும் இடம்பெற்றன. WSWS ஆய்வுகள் மேற்தளத்தில் இருந்து கீழே ஊடுருவிச் சென்று கலைஞர்களின் வரலாறுகள், தொடர்பான நடப்பு கால மற்றும் கடந்த கால அரசியல் மற்றும் சமூக நிலைமைகள், அமெரிக்க மற்றும் சர்வதேச கலைத் துறைப் போக்குகள் ஆகியவற்றையும் ஆராய்ந்தன.

Academy of Motion Pictures Arts and Sciences எலியா கசானுக்கு கவுரவ விருது ஒன்றினை அளிக்க முடிவு செய்ததை ஒட்டி, கலைப் பிரிவின் ஆசிரியர் டேவிட் வோல்ஷ் இந்த முடிவைக் கண்டனம் செய்து தொடர்ச்சியாக பல கட்டுரைகள் எழுதினார். 1950களின் கம்யூனிச விரோத மனித வேட்டையின் சமயத்தில் தகவல் வழங்குவராக ஆகிய புகழ்பெற்றவர்களில் ஒருவரான கசானின் வரலாறை அவர் எடுத்துரைத்தார். அமெரிக்க வழக்கமல்லாத நடவடிக்கைகளின் மீதான அவைக் குழு முன்பாக கசான் அளித்த சாட்சியத்தில் எட்டு பேர் பெயரைத் தெரிவித்திருந்தார். இவர்களின் பெயர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர்களது வாழ்க்கையையும் வேலைவாழ்வையும் கடுமையாகப் பாதித்தது.

தொடர்பான கட்டுரைகள் துண்டுப் பிரசுரமாக வெளியிடப்பட்டு மார்ச்சில் நடந்த Academy Awards நிகழ்ச்சியில் பரவலான விநியோகமும் செய்யப்பட்டது. இக்கட்டுரைகள் WSWS இல் ஒரு முக்கியமான விவாதத்திற்குத் தூண்டுதலளித்தன. பிப்ரவரிக்கும் ஜூலைக்கும் இடையில், இந்த விடயம் தொடர்பாக வலைத் தளம் ஒன்பது கட்டுரைகளை வெளியிட்டது. இதில் நேர்காணல்களும் தொடர்ச்சியாக பல வாசகர்களின் கடிதங்களும் இடம்பெற்றிருந்தன. அந்த கறுப்புப்பட்டியலில் இடம்பெற்று விட்டிருந்த இயக்குநர் ஆப்ரஹாம் போலன்ஸ்கி மற்றும் திரைக்கதையாசிரியர் வால்டர் பேர்ன்ஸ்டைன் ஆகிய இருவரும் மற்றும் திரைப்பட, தொலைக்காட்சி மற்றும் மேடை நாடக நடிகரான விக்டர் காண்ட்ரிராஸ் ஆகியோர் WSWS உடன் பேசினர். சிட்னி திரைப்பட விழாவில் திரைக்கதை ஆசிரியரும், இயக்குநரும் தயாரிப்பாளருமான பேர்ட்ராண்ட் தவேர்னியேரை ரிச்சர்ட் பிலிப்ஸ் நேர்காணல் செய்தபோது, அவரும் கசானின் பாத்திரம் குறித்துப் பேசினார்.

கலைத் திறனாய்வு பக்கத்தில் அதிக வாசிப்பைப் பெற்ற திரைப்பட விமர்சனங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் The Thin Red Line, Walls Within, Earth ஆகியவை தவிர திரைப்பட படைப்பாளியான ஸ்டான்லி குப்ரிக் இற்கான நினைவஞ்சலியும் இடம்பெற்றது. பிலிப் ரோத்  எழுதிய நான் ஒரு கம்யூனிஸ்டைத் திருமணம் செய்தேன் என்கிற புத்தகம், ஜாஸ் இசைக்கலைஞர் லூயிஸ் ஆர்ம்ஸ்ட்ராங் குறித்த ஒரு புதிய வாழ்க்கை வரலாறு, டபிள்யூ.எச். ஆடனின் பிற்கால கவிதைகளின் ஒரு தொகுதி, மற்றும் ஆல்பிரட் டோப்ளினின் அரங்குச் சித்திரம் பேர்லின் அலெக்ஸாண்டர்பிளாட்ஸ் ஆகியவற்றின் ஆய்வுகளும் அந்த ஆண்டில் இடம்பெற்றன.

இசைக்கு புதிய முக்கியத்துவம் வழங்கப்பட்டது. புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனின் இசைத் தொகுப்பு அடங்கிய மக்கள் இசை மீதான திறனாய்வுகள் மற்றும் மாபெரும் ஸ்பானியக் கலைஞரான ஆல்பிரடோ கிராஸ்க்கு நினைவஞ்சலி ஆகியவை இடம்பெற்றன.

மாட்ரிட் கண்காட்சியில் இடம்பெற்ற ரொபேர்ட் காபா எடுத்த ஸ்பெயினின் உள்நாட்டுப் போர் சமயத்திலான அபூர்வ புகைப்படங்களின் ஒரு கண்காட்சி குறிப்பான அரசியல் ஆர்வத்தைப் பெற்றதாக இருந்தது.

விஞ்ஞானத்தின் முக்கியமான பிரச்சினைகளுக்கும் WSWS கவனமளித்தது. சிக்கலான கணிதப் பிரச்சினைகளுக்கு கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவதில் ஆரம்பித்து மனிதகுலத்துக்கு முந்தைய வரலாற்றுக்கான படிவுகள் கண்டறிவின் தாக்கங்கள் வரை பல்தரப்பட்ட தலைப்புகள் மீதான கட்டுரைகள் வெளியாயின. ஜோன் ஹோர்கான் எழுதிய The End of Science என்ற புத்தகத்தின் மீதான ஒரு நீண்ட ஆய்வு, விஞ்ஞானத்தின் புற உண்மையை மறுக்க பின்நவீனத்துவ மெய்யியல் செய்கின்ற முனைப்புகளுக்கு ஒரு முக்கியமான மறுப்புக்கான சந்தர்ப்பமாக இருந்தது.

கலாச்சாரம் மற்றும் அறிவியலுக்கு மிகப் பெரும் கவனமளிப்பதென்பது வரலாற்றுத் துறையிலும் வெளிப்பாட்டைக் கண்டது. பிரபலமான வரலாற்றாசிரியரான ஜேம்ஸ் எம்.மெக்பெர்சன் உடன் பல-பகுதி நேர்காணல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 1998-1999 இன் கண்டனத் தீர்மான நெருக்கடியை அமெரிக்க உள்நாட்டு யுத்தத்திற்கு முன்வந்த அரசியல் எழுச்சியுடன் ஒப்பீடு செய்வது உள்ளிட்டவை இவ்விவாதத்தில் இடம்பெற்றிருந்தன.

WSWS  மாட்ரிட்டில் நடைபெற்ற ரொபேர்ட் காபா எடுத்த ஸ்பானிய உள்நாட்டு யுத்தம் தொடர்பாக அரிய படக்கண்காட்சியை ஆய்வு செய்திருந்தது

மேலதிக தகவல்கள்

20 February 1999   Hollywood honors Elia Kazan
 Filmmaker and informer

· 24 February 1999   Conversations with blacklisted screenwriter Walter Bernstein ...

· 24 February 1999    and director Abraham Polonsky

· 18 May 1999  A postmodernist attack on science 
The End of Science, Facing the Limits of Knowledge in the Twilight of the Scientific Age by John Horgan,   Little     Brown and Company, 1996

· 19 May 1999   An interview with historian James M. McPherson
The Civil War, impeachment then and now, and Lincoln's legacy—Part 1

· 20 May 1999  An interview with historian James M. McPherson
 The Civil War, impeachment then and now and Lincoln's legacy—Part 2

· 21 May 1999  An interview with historian James M. McPherson
The Civil War, impeachment then and now and Lincoln's legacy—Part 3

· 30 June 1999  "An artist must do only what he believes in" 
An interview with Sri Lankan film director Prasanna Vithanage

· 20 July 1999 The Moon landings in historical perspective