World Socialist Web Site www.wsws.org |
Year One of the World Socialist Web Siteஉலக சோசலிச வலைத் தளத்தின் முதலாம் ஆண்டு உலக சோசலிச வலைத் தளம் 1998 பிப்ரவரி 14 அன்று உலக முதலாளித்துவத்தின் இருதயத் தானமான அமெரிக்காவில் ஒரு அரசியல் நெருக்கடி பெருகிவந்த நிலைமைகளின் மத்தியில் ஆரம்பிக்கப்பட்டது. கிளின்டன் நிர்வாகத்தைக் கீழிறக்குவதற்கான வலதுசாரிப் பிரச்சாரம் ஊடக உந்துதலுடனான மொனிக்கா-லெவின்ஸ்கி விவகாரத்தின் வடிவில் வெடித்து, டிசம்பர் நடுவில் கிளின்டன் மீது பதவிவிலக்கத் தீர்மானம் கொண்டுவரப்படுவதில் உச்சம் பெற்றது. அதேசமயத்தில், உலகின் மறுமுனையில் இந்தோனேசியாவில் சுகார்டோவின் சர்வாதிகாரத்தின் மறைவுடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நீண்டகாலமாக இருந்த முட்டுத்தூண்களில் ஒன்று மறைந்தது.கிளின்டன் பதவிவிலக்கல் நெருக்கடி கிளின்டன் பதவிவிலக்கல் நெருக்கடியின் ஆரம்பத்தில் இருந்தே அதற்கு அடித்தளத்திலிருந்த வர்க்கப் பிரச்சினைகளின் மீதும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் தொடர்பாக கிளின்டன் நிர்வாகத்தை முடக்குவதற்கு அல்லது அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட வலது-சாரி முன்னெடுப்பின் மீதும் உலக சோசலிச வலைத் தளம் கவனத்தை ஈர்த்திருந்தது. அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அரசியலை ஒரு பிற்போக்குத்தனமான திசைக்கு திருப்பும் பொருட்டு பாலியல் விவகாரங்கள் திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படுவதை சுட்டிக் காட்டிய WSWS, முக்கிய விடயம் கிளின்டன் லெவின்ஸ்கி உடன் கொண்டிருந்த உறவோ அல்லது அவர் அது குறித்து பொய் கூறியதோ அல்ல, மாறாக அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள்ளான மோதலும் அந்த மோதல் வெளியில் கொண்டுவந்திருக்கக் கூடிய அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடி மற்றும் சிதைவுமே ஆகும். 1998 பிப்ரவரி 14 அன்று வலைத் தளம் உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டதன் பின்னர் வெளியிடப்பட்ட முதல் பெரும் வர்ணனைக் கட்டுரையின் தலைப்பே “கிளின்டன் நெருக்கடியின் சமூக வேர்கள்” என்பதாக இருந்தது. சமூகச் செலவினத்தில் முன்னெப்போதையும் விட அதிகமான வெட்டுகளை கேட்கின்றதும் நாடுகடந்த அமெரிக்க மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களின் விடயத்தில் அமெரிக்கா இன்னும் கூடுதல் தீவிரமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்து தங்களின் கவலைகளை தீர்ப்பதற்கு கிளின்டன் செய்த முயற்சிகள் போதுமானவையல்ல என்று கருதுகின்றதுமான ஒரு ஒட்டுண்ணித்தனமான நிதியியல் அடுக்கின் எழுச்சியில் தான் கிளின்டன் மீதான தாக்குதலின் வேர் அமைந்திருந்ததை இந்த ஆரம்ப அறிக்கை கண்டறிந்தது. இந்த ஆய்வின் அடிப்படையில் WSWS, கிளின்டன் நெருக்கடியில் ஒரு கோட்பாட்டு ரீதியான அணுகுமுறையை அபிவிருத்தி செய்தது. கிளின்டன் நிர்வாகத்திற்கோ அல்லது ஜனநாயகக் கட்சிக்கோ எந்த அரசியல் ஆதரவையும் வழங்காத அதே நேரத்தில் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனாதிபதிக்கு எதிரான ஒரு அரசியல் கவிழ்ப்பிற்காய் குவிக்கப்பட்ட வலது-சாரி பிரச்சாரத்தையும் எதிர்த்தது. ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள், கென்யா மற்றும் தான்சானியாவில் அமெரிக்க தூதரங்களின் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதல்களை அடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் போன்ற ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளின் ஊடாக தீவிர-வலதுக்கு அனுசரணையாக நடந்து கொள்வதற்கு கிளின்டனும் ஜனநாயகக் கட்சியும் செய்த முயற்சிகளை WSWS அம்பலப்படுத்தியது. நாளுக்கு நாள் கட்டவிழுந்து பரவும் இந்த அரசியல் நெருக்கடியை ஆய்வு செய்து பல டசின் கட்டுரைகள் மற்றும் வர்ணனைகளுடன் சேர்த்து, மிக முக்கியமான திருப்புமுனைகளின் சமயத்தில் முக்கிய அறிக்கைகளும் வெளியிடப்பட்டன. "ஜனாதிபதி கிளின்டன் மீதான பதவிவிலக்கல் தீர்மானம்: அமெரிக்கா உள்நாட்டு யுத்தத்தை நோக்கி நகர்கின்றதா?” என்ற கட்டுரையில், நவம்பர் நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்காளர்கள் புறக்கணித்தும் கூட கிளின்டன் மீது பதவிவிலக்கல் தீர்மானம் கொண்டுவருவதென்கிற குடியரசுக் கட்சியினரின் முடிவைக் குறித்த ஒரு அரசியல் எச்சரிக்கையைக் கூறியிருந்தது. வலதுசாரி கிளின்டன் நிர்வாகத்திற்கும் அதன் அதி-வலது எதிர்க்கட்சியினருக்கும் இடையில் முக்கியமான அரசியல் வித்தியாசம் அதிகமில்லை என்றபோதிலும், அமெரிக்காவில் அரசியல் மோதல் முன்கண்டிராத ஒரு மூர்க்கத்தனத்தை பெற்றிருந்ததை அது குறிப்பிட்டுக் காட்டியது. இந்த மோதலின் தீவிரம் என்பது, இறுதி ஆய்வில், அமெரிக்க சமூகத்திற்குள்ளமைந்த மிக ஆழமான பதட்டங்களை பிரதிபலிப்பதாக இருக்கிறது என்று அந்த அறிக்கை வாதிட்டது. ”வாஷிங்டனின் நெருக்கடி சிக்கலான அரசியல், சமூக மற்றும் பொருளாதார நிகழ்ச்சிப்போக்குகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவாறு எழுகிறது. ஒன்றுதிரண்ட மற்றும் மேலும் மேலும் தீர்க்க முடியாததாக ஆகிக் கொண்டிருக்கும் முரண்பாடுகளின் பாரத்தின் கீழ், முதலாளித்துவ ஜனநாயகம் உடைந்து நொருங்கிக் கொண்டிருக்கிறது. உலகப் பொருளாதாரம் பூகோளமயமானதுடன் தொடர்புபட்ட பொருளாதார மற்றும் தொழில்நுட்ப நிகழ்ச்சிப்போக்குகள், அமெரிக்காவின் அரசியல் ஸ்திரநிலை நீண்டகாலமாய் எதன்மீது தங்கியிருந்து வந்திருக்கிறதோ அந்த சமூக நிலைமைகளையும் வர்க்க உறவுகளையும் இல்லாதொழித்துள்ளது. அமெரிக்க சமூகத்தின் பரந்த அடுக்கு பாட்டாளி வர்க்க மயமானமை, பாரம்பரிய நடுத்தர வர்க்கங்களின் அளவும் பொருளாதார செல்வாக்கும் சிதைவு கண்டமை, சமூக ஏற்றத்தாழ்வு பெருகியமை (செல்வத்தின் விநியோகத்திலும் வருவாயின் விநியோகத்திலும் நிலவுகின்ற மலைப்பூட்டும் பேதங்களில் இது பிரதிபலிக்கிறது.) ஆகியவை இந்த செல்லரிப்பின் மிக முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன. முக்கியமான தொழிற்துறைமயப்பட்ட நாடுகளில் அமெரிக்காதான் அதிகமாய் ஏற்றத்தாழ்வு கொண்ட நாடாக இருக்கிறது, நிதி உயரடுக்கிற்கும் எஞ்சிய மக்களுக்கும் இடையிலான இடைவெளி 25 அல்லது 50 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விடவும் மிக அதிகமானதாக இருக்கிறது... முன்கண்டிராத அளவு சமூக ஏற்றத்தாழ்வு நிலை சமூகத்திற்கு மிக அதிகமான பதட்டங்களை கொண்டுவந்து சேர்க்கிறது. செல்வந்தர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையில் இருக்கும் மிக விரிந்த பிளவு ஒரு நடுத்தர வர்க்கத்தால் மத்தியஸ்துவப்படுத்த இயலாதபடி இருக்கிறது. ஒரு காலத்தில் ஒரு சமூக இடைத்தாங்கிகளாக இருந்ததும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கான பிரதான ஆதரவுத் தளத்தை வழங்கியதுமாக இருந்த இடைநடுவிலிருந்த தட்டுக்களால் இனியும் அந்த பாத்திரத்தை ஆற்றவியலவில்லை.” மக்கள் கருத்திற்கு கிஞ்சித்தும் மதிப்பளிக்காமல், கண்டனத் தீர்மானம் கொண்டு வரச் சென்ற குடியரசுக் கட்சி வலதின் மூர்க்கத்தனம், அத்துடன் நெடுங்காலத்திற்கு முன்பே தனது தாராளவாத சீர்திருத்த வேலைத்திட்டத்தை கைவிட்டு அரசியல் பிற்போக்குத்தனத்தின் பங்காளியாகி, வெள்ளை மாளிகை மீதான கட்டுப்பாடே சங்கடத்திற்குள்ளாகியிருக்கும் நிலையிலும் கூட வெகுஜன ஆதரவுக்கு எந்த கோரிக்கையும் விட மறுத்த ஜனநாயகக் கட்சியின் மண்டியிடல் இரண்டையுமே இந்த சமூக பேதம் விளக்கியது. கிளின்டன் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் கையாலாகாத்தனம் மற்றும் கோழைத்தனத்தையும் அதி வலதில் இருந்தான தாக்குதலில் இருந்து மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இந்த பெருவணிகக் கட்சிக்கு திறனும் விருப்பமும் இல்லாதிருப்பதையும் WSWS ஒவ்வொரு புள்ளியிலும் அம்பலப்படுத்திக் காட்டியது.
இந்த நெருக்கடி முழுவதிலுமே, இந்த போலி-இடது போக்குகளை WSWS விமர்சனம் செய்தது. இப்போக்குகள் வாஷிங்டன் அரசியல் நெருக்கடியை முக்கியத்துவமற்றது அல்லது சம்பந்தமில்லாதது என்று ஒதுக்கித் தள்ளியதோடு, அதன்காரணத்தால் ஜனநாயக உரிமைகளுக்கு ஆபத்து வளர்ந்து கொண்டிருந்த ஒரு தருணத்தில் தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்கின.
அதே நேரத்தில் உலகில் மிகவும் சக்திவாய்ந்த ஏகாதிபத்திய தேசத்திற்கு தலைமையில் இருக்கும் கிளின்டன் நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு WSWS இடைவிடாத எதிர்ப்பை பராமரித்தது. பதவிவிலக்கல் தீர்மான சமயத்தின் இடையில், 1998 டிசம்பர் 18 அன்று வெளியான ”ஈராக்கின் மீது குண்டுவீச்சு, அமெரிக்க வரலாற்றில் ஒரு அவமானகரமான அத்தியாயம்” என்ற தலைப்பிலான அறிக்கையில் கூறப்பட்டிருந்ததைப் போல, ஈராக் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களையும் வெள்ளை மாளிகையால் உத்தரவிடப்பட்ட பிற வலிந்து தாக்கும் நடவடிக்கைகளையும் நாம் கண்டனம் செய்தோம்.
மேலதிக தகவல்கள்· 14 February 1998 The social roots of the Clinton crisis · 5 June 1998 The Starr investigation: a creeping coup d'etat · 19 August 1998 Clinton speech signals intensification of Washington political warfare
· 13
September 1998
The
political meaning of the Starr report
· 11
November 1998
The US elections and
the fall of Newt Gingrich
· 19
December 1998
The
bombing of Iraq
· 22
December 1998
The
impeachment of President Clinton இந்தோனேசியாவில் சுகார்ட்டோ சர்வாதிகாரத்தின் நிலைகுலைவு 1998 இல் WSWS இல் பகுப்பாய்வு செய்யப்பட்ட இன்னொரு முக்கியமான அரசியல் அபிவிருத்தி இந்தோனேசியக் கிளர்ச்சியாகும். 1997 இல் ஆசியாவில் வெடித்த நிதி நெருக்கடியின் முதல் பெரும் அரசியல் பின்விளைவாக இது இருந்ததோடு, இப்பிராந்தியத்தில் மலேசியா, தென் கொரியா, தாய்லாந்து மற்றும் பிற நாடுகளிலும் இது அதிர்வுகளை உண்டாக்கியது. இந்தோனேசியாவில் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்த அந்த சமயத்தில், அந்த வெகுஜன இயக்கத்திற்கான ஒரு முன்னோக்கினை WSWS முன்வைத்தது. ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் போராடுவதற்கு இந்தோனேசிய பாட்டாளி வர்க்கத்தை அணிதிரட்டுவதன் அடிப்படையில் மட்டும் தான் ஜனநாயகத்திற்கு ஆதரவான மற்றும் இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட முடியும் என அந்த முன்னோக்கு விளக்கியது. “இந்தோனேசியாவில் ஜனநாயகத்திற்கான போராட்டத்தை எந்த சமூக வர்க்கங்கள் ஆதரிக்கின்றன” மற்றும் “இந்தோனேசியாவில் ஜனநாயகத்திற்கான போராட்டம், பரந்த மக்கள் முகம் கொடுக்கும் சமூக மற்றும் அரசியல் கடமைகள் எவை?” போன்ற கட்டுரைகள் லியோன் ட்ரொட்ஸ்கி அவரது நிரந்தரப் புரட்சித் தத்துவத்தில் முதன்முதலாக செய்திருந்த பகுப்பாய்வை முன்னுக்கு கொண்டு வந்தன. இந்தோனேசியா போன்ற ஒடுக்கப்பட்ட முன்னாள் காலனி நாடுகளில் தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதற்கோ அல்லது ஏகாதிபத்தியத்தில் இருந்து உண்மையான தேசிய சுதந்திரத்தை ஸ்தாபிப்பதற்கோ திறனற்றதாய் இருக்கிறது என்பதை ட்ரொட்ஸ்கி விளங்கப்படுத்தியிருந்தார். தனக்குப் பின்னால் கிராமப்புற ஏழை மக்களையும் ஒடுக்கப்பட்ட அத்தனை சமூக தட்டுக்களையும் அணிதிரட்டிக் கொள்கின்ற தொழிலாள வர்க்கம் மட்டுமே இந்தப் பணிகளை செய்து முடிக்க திறம்படைத்ததாகும். இந்தோனேசியாவின் நிகழ்வுகளுக்கும் முந்தைய ஆண்டில் தாய்லாந்தின் நாணயமான பாட் நொறுங்கியதில் தொடங்கி தென்கிழக்கு ஆசியா முழுக்கத் தொற்றி இறுதியில் சீனா, கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றையும் பாதித்த ஆசியப் பொருளாதாரங்களின் நெருக்கடிக்கும் உள்ள தொடர்பை WSWS விளக்கியது.
”செலாவணி
தளர்வு,
நாணயமதிப்புக்
குழப்பம்
மற்றும்
உற்பத்தி
வெட்டுகள்
:
எதிர்வரவிருக்கும்
விடயங்களுக்கான
ஒரு
சமிக்கை”
மற்றும்
“ஆசிய
பொறிவு
ஆரம்பித்து ஒரு
வருடம்
ஆகி
விட்டது:
உலக
மந்தநிலைக்கான
பெருகும்
அறிகுறிகள்”
போன்றவை உள்ளிட நிக் பீம்ஸ் எழுதிய பல கட்டுரைகள்
1997
ஜூலையில் தொடங்கிய நிதி நெருக்கடிக்கும்,
அப்பிராந்தியத்தில் நிகழும் அரசியல் குழப்பங்களுக்கும்,
மற்றும் உலக முதலாளித்துவத்திற்கும் உலக அரசியலுக்கும் அது
ஏற்படுத்திய பரந்த பாதிப்புகளுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்ந்தது.
ஆசியாவின்
“வளர்ந்து
வரும்”
பொருளாதாரங்களில் மட்டுமல்லாது உலக முதலாளித்துவத்தின்
பிரதான மையங்களிலும் கூட அரசியல் வெடிப்புகளை எதிர்பார்க்கலாம் என்பது
அக்கட்டுரைகளின் ஊடாக வந்திருந்த முடிவாக இருந்தது. மேலதிக தகவல்கள்
·
20 May 1998
Which social classes support the struggle
for democracy in Indonesia?
· 23
May 1998
The struggle for democracy in Indonesia
· 2
June 1998
Deflation,
production cuts and currency turmoil
· 30
June 1998
One year since the
start of the 'Asian meltdown' பினோசே கைதும் பிற முக்கிய உலக நிகழ்வுகளும் அந்த வருடத்தின் பின்பகுதியில் பிரிட்டனில் சிலியின் முன்னாள் இராணுவ ஆட்சியாளரான ஒகஸ்டோ பினோசே கைது செய்யப்பட்டார். இராணுவ ஆட்சிக் குழு 17 வருட காலம் நடத்திய பயங்கர ஆட்சிக் காலத்தின் சமயத்தில் நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்காக ஸ்பெயினின் ஒரு நீதிபதி அளித்திருந்த கைது ஆணையின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். “பினோசேயைப் பாதுகாத்துப் பேசுபவர்களுக்கு ஒரு பதில்” மற்றும் “பினோசேயின் கைதின் முக்கியத்துவமும் 1973 ஆட்சிசதியின் படிப்பினைகளும்” போன்ற கட்டுரைகள் சிலி நிகழ்வுகளில் எழுப்பப்பட்ட வரலற்றுப் பிரச்சினைகளை ஆராய்ந்ததுடன் இந்த பாரிய படுகொலையாளரைப் பாதுகாக்க மார்கரெட் தாட்சர் முதல் பிடெல் காஸ்ட்ரோ வரை முதலாளித்துவத் தலைவர்கள் ஓரணியில் திரண்டது ஏன் என்பதை விளக்கியது. இறுதியில், பிரிட்டிஷ் தொழிற்கட்சி அரசாங்கத்தின் பிரதமரான டோனி பிளேயர், பினோசே நாடுகடத்தப்படுவதை தடுத்து நிறுத்தி அவரை தாயகமான சிலிக்கு அனுப்பினார். அங்கு அவர் தண்டணைக்குள்ளாவதில் இருந்து பாதுகாப்பாக வாழ முடிந்தது. 1998 இல் WSWS இல் கவனம் செலுத்திய ஏனைய முக்கியமான உலக நிகழ்வுகளில் சில: * வடக்கு அயர்லாந்தில் சின் ஃபெயினுக்கும் வலதுசாரி புரொட்டஸ்டண்ட் கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம்: “பிரிட்டிஷ்-ஐரிஷ் ஒப்பந்தம் இனரீதியான பிரிவினைகளை புனிதப்படுத்துகிறது” * இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி போட்டு அணு ஆயுதச் சோதனைகள் நடத்தியது: “தெற்காசியாவில் போர் மேகங்கள் மூள்கின்றன” * ரஷ்யாவின் நிதி உருக்குலைவும் உலகச் சந்தைகளில் அதன் தாக்கமும்: “சர்வதேசச் சந்தைக் குழப்பம்: உலகப் பொருளாதாரத்தில் ஒரு மாபெரும் மாற்றம்” *ஜேர்மன் நாடாளுமன்றத் தேர்தலில் பசுமைக் கட்சியினர் முதன்முதலாக அரசாங்கத்திற்குள் காலடி வைக்கின்றனர்: “பொண்னில் ஒரு அதிகார மாற்றம்” *வெனிசூலா ஜனாதிபதியாக ஹியூகோ சாவேஸ் தேர்வு: “வெனிசூலாவும் வெளிநாட்டு மூலதனமும் முன்னாள் ஆட்சிசதியின் தலைவரை எடைபோட்டுப் பார்க்கிறது” சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் மிக முக்கியமான போராட்டங்களை WSWS வெளியிட்டது. மிச்சிகனில் ஜெனரல் மோட்டார்ஸ் ஆலையில் அடுத்தடுத்த வேலைநிறுத்தங்களின் அலை, ஏர் பிரான்ஸ் வேலைநிறுத்தம், ஆஸ்திரேலியாவில் பாட்ரிக் ஸ்டீவ்டோர்ஸ் கதவடைப்பு, அமெரிக்காவில் பெல் அட்லாண்டிக் மற்றும் பிற தொலைதொடர்புத் துறை தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தங்கள் ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை. எங்களது செய்திகளில் களத்தில் இருந்தான செய்திகளும், வேலைநிறுத்தம் செய்தவர்களுடன் எடுக்கப்பட்ட நேர்காணல்களும் அத்துடன் இந்தப் போராட்டங்களை கழுத்தை நெரிப்பதிலும் தொழிலாளர்களை முதலாளித்துவ ஆளும் உயரடுக்கிற்கு கீழ்ப்படியச் செய்வதிலும் தொழிற்சங்கங்கள் ஆற்றுகின்ற பாத்திரம் குறித்த கூர்மையான எச்சரிக்கைகளும் இடம்பெற்றிருந்தன. மேலதிக தகவல்கள்· 17 November 1998 An answer to Pinochet's defenders · 5 December 1998The significance of Pinochet's arrest and the lessons of the 1973 coup · 14 May 1998The Australian waterfront conflict: a political assessment
· 16
June 1998Flint
strikes force GM to idle more plants உலக கலாச்சார மற்றும் சமூக அபிவிருத்திகள் பற்றிய பரந்த மார்க்சிச ஆய்வு உலக சோசலிச வலைத் தளத்தின் முதல் வருடம் அத்தளம் வெளியிடப்படும் முடிவுக்கு உயிரூட்டிய ஒன்றுடன் ஒன்றிணைந்த கருத்தாக்கத்தை அதன் வெகு ஆரம்பத்தில் இருந்தே விளங்கப்படுத்தியது. தொழிலாள வர்க்க இயக்கம் பற்றி வெறுமனே குறுகலான வரையறைக்குள் (தொழிற்சங்கங்கள் மற்றும் அதன் சுற்றுவட்ட கருத்துகள்) கருத்துக் கூறாமல், அல்லது அதனை இன்னும் கொஞ்சம் விரிந்த அரசியல் அரங்கிற்குள் கொண்டு செல்வதுடன் கூட குறுக்காமல், ஒரு சோசலிச கலாச்சாரத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான முக்கியமான அரசியல், சமூக, மற்றும் கலாச்சார பிரச்சினைகள் அத்தனை குறித்துமான ஒரு மார்க்சிச ஆய்வை அபிவிருத்தி செய்வது மற்றும் விரிவாக்குவது என்னும் விடயமாக அது இருந்தது.
இது லெனின் மற்றும் போல்ஷிவிக் கட்சியால் உருவாக்கப்பட்ட பாரம்பரியத்தின் வழியும் அவரது என்ன செய்ய வேண்டும் என்ற மகத்தான படைப்பில் விளக்கப்பட்டதன் வழியாகவும் இருந்தது. அதில் அவர் பரந்த சமூக சம்பந்தப்பட்ட அத்தனை விடயங்களிலும் அத்தனை வர்க்கங்களிடையும் சென்று ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்க முன்னோக்கினை முன்வைப்பது தொழிலாள வர்க்கத்தின் மார்க்சிச தலைமையின் கடமை என்று அவர் அறிவித்திருந்தார்.
இந்நோக்கில் உலக சோசலிச வலைத் தளம், ஒரு சில உதாரணங்களை காட்டலாம் என்றால், “மிச்சிகனில் ஒரு 12 வயது பையன் ஒரு வயதுமுதிர்ந்தவரைப் போல கருதி தண்டனைக்குட்படுத்தப்படுகிறான்” என்ற கட்டுரையில் ஆரம்பித்து, டெக்சாஸில் ஜேம்ஸ் பைர்ட் என்ற ஏழை கறுப்பன மனிதர், வியோமாங்கில் மத்தேயூ ஷெப்பார்ட் என்ற ஒரு இளம் ஓரினச்சேர்க்கை மனிதர் ஆகியோர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விடயங்கள் வரை, ஆஸ்திரேலியாவில் அகதிகளின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் வரை பல்தரப்பட்ட சமூக விடயங்கள் குறித்து கட்டுரைகளை வெளியிட்டது.
WSWS இன் முதலாமாண்டு மார்க்சிச அழகியலிலும் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறித்தது, குறிப்பாக சினிமா விமர்சனம் தொடர்பான விடயத்தில். டைட்டானிக் படத்தின் ஒரு விமர்சனத்துடன் அந்த வருடம் ஆரம்பித்தது. இப்படம் தகுதியற்ற வகையிலும் அவமானகரமான வகையிலும் விமர்சகர்களிடமிருந்து பெரும் பாராட்டைப் பெற்றது. இப்படத்தை திறனாய்வு செய்த டேவிட் வோல்ஷ் ”மோசமானதொரு படைப்பு - மோசமான கதைவடிவம், மோசமான நடிப்பு, மோசமான இயக்கம்” என்று வருணித்தார். இந்தத் திறனாய்வு WSWS இன் கலைப் பகுதியின் தொனியை நிர்ணயிப்பதாக அமைந்தது. கலை நேர்மை மற்றும் தீவிர கவனமளிப்பை முழுமனதுடன் பாதுகாத்து நிற்பது அதன் பிரதான குணாம்சமாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து Wag the Dog, Amistad, Taste of Cherry, Bulworth, The Truman Show, Saving Private Ryan, Pleasantville, Life Is Beautiful, Elizabeth ஆகிய வெவ்வெறு வகையான படங்களின் திறனாய்வுகளும், பேர்லின், சிட்னி, சான் பிரான்சிஸ்கோ, டொரொன்டோ மற்றும் இலண்டன் ஆகிய திரைப்பட விழாக்கள் குறித்த பதிவுகளும் இடம்பெற்றன. ரோட்சென்கோ மற்றும் மாக்ஸ் ஏர்ன்ஸ்ட் மற்றும் இன்னும் பலரின் படைப்புகளின் கண்காட்சி குறித்த கலைத் திறனாய்வுகளும் இடம்பெற்றன.
மேலதிக தகவல்கள்· 30 January 1998 Why are the critics lauding Titanic?
· 11
April 1998
David Walsh looks at
Taste of Cherry, a new film from Iran · 27 May 1998 A little of John Reed, after all
· 7
May 1998
Twelve-year-old faces
murder charges in the US · 21 October 1998 After Matthew Shepard's killing: which way forward to defend democratic rights? · 13 June 1998 The murder of James Byrd, Jr. - Racial violence and the social forces in America that fuel it நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலான அபிவிருத்திகள் 1998 ஜனவரியில், அதாவது உலக சோசலிச வலைத் தளம் தொடங்கப்படுவதற்கு சற்று முன்னர், ஆஸ்திரேலியாவின் சோசலிச சமத்துவக் கட்சி ஆஸ்திரேலியாவில் ஒரு சர்வதேச கோடைப் பள்ளி க்கு ஏற்பாடு செய்திருந்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஏற்பாடு செய்த இத்தகைய முதலாவது சர்வதேசிய ஏற்பாடாகும் இது. லியோன் ட்ரொட்ஸ்கி குறித்த உரைகள், மற்றும் பூகோளமயமாக்கத்தின் முக்கியத்துவம், காஸ்ட்ரோவாதமும் குட்டி-முதலாளித்துவ தேசியவாதமும், கலைக்கும் சோசலிசத்துக்குமான உறவு, தொழிற்சங்கங்களின் தன்மை ஆகியவை உட்பட மார்க்சிச வரலாறு மற்றும் தத்துவத்தின் அடிப்படையான பிரச்சினைகள் குறித்தும் உரைகள் வழங்கப்பட்டன.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளின் அரசியல் வேலையின் மீதும் WSWS விரிவாய் செய்தி வெளியிட்டது. 1930களில் அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இணைந்தவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான தொழிலாளர் கழகத்தின் ஒரு ஸ்தாபக உறுப்பினருமான ஜீன் புருஸ்ட் மரணத்தை ஒட்டி நடந்த நினைவஞ்சலிக் கூட்டங்கள் இதில் ஒன்று. ஜேர்மனி மற்றும் இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்கள் குறித்த செய்திகளும் இடம்பெற்றன. இலங்கையில் ஆட்சிக்கு எதிராக கெரில்லா போர் நடத்திக் கொண்டிருந்த தமிழ் பிரிவினைவாத இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) கைது செய்யப்பட்டிருந்த சோசலிச சமத்துவக் கட்சியின் ஐந்து உறுப்பினர்களை விடுதலை செய்வதற்கு நடத்தப்பட்ட பிரச்சாரம் WSWS தலைமையில் நடந்தது. இந்த முயற்சி உலகெங்கிலும் இருந்து, குறிப்பாக தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் நெடிய மற்றும் கோட்பாடுடனான வரலாறு குறித்து ஒரு பரந்த விளக்கம், தொலைதூரத்தில் வாழும் தமிழ் புலம்பெயர்ந்த மக்களிடையே இருந்து ஆதரவைக் கொண்டுவந்தது. இறுதியாக இந்த ஐந்து உறுப்பினர்களும் எந்தத் தீங்குமின்றி விடுதலை செய்யப்பட்டனர். ஒரு சிறியதும் ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்டதுமான தீவு நாட்டில் இந்த இணைய தள அடிப்படையிலான பிரச்சாரம் எத்தனை சக்தியுடன் வேலை செய்தது என்பதை அது விளங்கப்படுத்தியது. சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலரான விஜே டயஸ் விடுத்த ஒரு அறிக்கை அறிவித்தது: ஒட்டுமொத்த சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பாக, எங்களது பாதுகாப்பு பிரச்சாரத்திற்கு தொழிலாள வர்க்கத்திடம் இருந்தும் மனித உரிமை அமைப்புகளிடம் இருந்தும் இங்கேயும் ஐரோப்பா, வட அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் அக்கறையுடைய தனிமனிதர்களிடம் இருந்தும் நாங்கள் பெற்ற ஆதரவுக்கு முழுமனதுடன் நன்றி கூறுகின்றேன்… உலக சோசலிச வலைத் தளத்திற்கும் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் எமது சகோதரக் கட்சிகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விடயத்தை சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதில் உறுதிகொண்டிருக்கும் அனைவரது ஆதரவையும் திரட்டுவதற்கும் அவை தளர்ச்சியின்றி உழைத்திருக்கின்றன. சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களின் விடுதலைக்கு குரல் கொடுத்த இலங்கையின் பல தொழிலாள வர்க்கக் கட்சிகள், சங்கங்கள், மனித உரிமை அமைப்புகள், கலைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் நான் நன்றி கூறுகிறேன். நாங்கள் பெற்ற ஆதரவு உண்மையிலேயே மகிழ்ச்சி தருகிறது.
மேலதிக தகவல்கள்· Marxism and the Fundamental Problems of the 20th Century · 4 February 1998 Meeting honors Jean Brust: “Jean lives on in all of us” · 1 December 1998 சோசலிச சமத்துவ கட்சியும் ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டமும் · 3 September 1998 Socialist Equality Party begins election campaign in Germany · 23 September 1998 Statement of SEP (Sri Lanka) General Secretary Wije Dias on status of Tamil socialists held by the LTTE வரலாற்று உண்மையை பாதுகாத்தல் WSWS இன் முதலாம் ஆண்டில் அதன் சாதனை என்பது, ஸ்ராலினிசத்திற்கும், சமூக ஜனநாயகத்திற்கும் எதிராகவும் மற்றும் நான்காம் அகிலத்தில் முன்னர் ஆதரவாளர்களாகவிருந்து பின்னர் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பொருளாதார எழுச்சியின் தோற்றப்பாடான சமயத்தில் முதலாளித்துவ-ஆதரவு மற்றும் எதிர்-புரட்சிகர சக்திகளில் வெளிப்பட்ட பலத்தில் சரணடைந்து விட்டிருந்தவர்களுக்கு எதிராக ட்ரொட்ஸ்கிசத்தின் கோட்பாடுகளுக்கு ஆதரவாக நடத்திய பல தசாப்த கால போராட்டத்தின் பாதையில் திரட்டப்பட்ட அரசியல் மூலதனத்தை முன்கொண்டுவருவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்த உள்ளடக்கத்தில், அனைத்துலகக் குழுவுக்கும் வரலாற்றாசிரியர் வாடிம் ரகோவினுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உறவு என்பது WSWS ஆல் பதிவு செய்யப்பட்ட மிக முக்கியமான அனுபவங்களில் ஒன்றாக அமைந்தது. இவர் எழுதிய ஸ்ராலினுக்கான சோசலிச எதிர்ப்பு என்ற மகத்தான ஆறு-தொகுதி வரலாறு லியோன் ட்ரொட்ஸ்கியின் முக்கியமான பாத்திரத்தின் மீது கவனத்தைக் குவித்தது என்பதோடு இடது எதிர்ப்பாளர் தரப்பு மற்றும் நான்காம் அகிலத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் குற்றங்கள் மற்றும் காட்டிக் கொடுப்புகளுக்கு ஒரு மாற்றீடு இருந்தது என்பதை திட்டவட்டமாக ஸ்தாபித்தது. வாடிம் ரொகோவின் 1998 செப்டம்பரில் காலமானார். அவரது வாழ்க்கையை பாராட்டியும் உலகப் பார்வையாளர்களுக்கு வாசிக்கக்கூடிய வகையில் முக்கியமான மொழிகளில் அவரது படைப்புகளை மொழிபெயர்ப்பதன் மூலம் அவரது பணியைத் தொடர உறுதிபூண்டு அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்கள் மாஸ்கோ, பேர்லின் மற்றும் இலண்டனில் அவருக்கு நினைவஞ்சலிக் கூட்டங்களை நடத்தினர். WSWS இன் ஆசிரியர் குழுத் தலைவரான டேவிட் நோர்த் இக்கூட்டங்களில் “வாடிம் ரகோவின் நினைவாக” என்ற தலைப்பில் அளித்த குறிப்புகளில் ரகோவினின் வாழ்க்கை மற்றும் படைப்புகளின் முக்கியத்துவத்தை சுருங்கக் கூறினார்.
மேலதிக தகவல்கள்· 15 December 1998 In memory of Vadim Z. Rogovin · 20 May 2002 வாடிம் ரொகோவினுக்கு அனுதாபம் |