World Socialist Web Site www.wsws.org


Fifteen Years of the World Socialist Web Site: 1998-2013

உலக சோசலிச வலைத் தளத்தின்பதினைந்து வருடங்கள்: 1998-2013

David North, Chairman of the International Editorial Board
14 February 2013

Back to screen version

உலக சோசலிச வலைத் தளம் (WSWS) என்ற தினசரி வெளியீடுஆரம்பிக்கப்பட்டு இன்று பதினைந்தாவது ஆண்டு தினமாகும். பிப்ரவரி 14, 1998 தொடங்கி வாரத்திற்கு ஐந்து நாட்களும், அதன் பின் 1999 ஏப்ரல்முதலாக வாரத்திற்கு ஆறு நாட்களும் உலக சோசலிச வலைத் தளம்தவறாது வெளிவந்திருக்கிறது. இவ்வெளியீட்டின் முதல் பல மாதங்களுக்கு,நாளாந்த வாசகர் எண்ணிக்கை நூற்றுக்கணக்காக இருந்தது. பதினைந்துவருடங்களுக்குப் பின்னர் WSWS உலகின் மிகப் பரவலாக வாசிக்கப்படும்இணைய அடிப்படையிலான சோசலிச வெளியீடாகத் திகழ்கிறது.

உலக சோசலிச வலைத் தளமானது அன்றாடம் சுமாராக 40,000 முதல்50,000 வரையான தனிநபர்களால் கணினி மூலமாக அணுகப்படுகிறது.வாசகர் எண்ணிக்கை பல நாட்களில் கணிசமான அளவு அதிகமாவதும்இருக்கிறது. வாசகர் எண்ணிக்கையை விடவும் முக்கியமானதுபூகோளரீதியாக பரந்துபட்ட இடங்களில் இருந்து வாசிக்கப்படுவது தான்.ஒவ்வொரு கண்டத்திலும் இருக்கும் ஏராளமான நாடுகளில் இருந்து WSWSஅணுகப்பட்டு வருகிறது. 19 மொழிகளுக்குக் குறையாத மொழிகளில்கட்டுரைகளை பதிவிடும் உலக சோசலிச வலைத் தளம், உண்மையாக ஒருசர்வதேச வெளியீடாகத் திகழ்கிறது.

உலக சோசலிச வலைத் தளத்தின் வெளியீடு இருபதாம் நூற்றாண்டின்இறுதி ஆண்டுகளில் தொடங்கி இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் முதல்இரு தசாப்தங்கள் வரை தளர்ச்சியின்றி தொடர்ந்து வருகிறது. அதன்முதலாமாண்டில் அதாவது 1998 ஆம் ஆண்டில் 1,540 கட்டுரைகள் தளத்தில்பதிவிடப்பட்டன. 2012 ஆம் ஆண்டில் இக்கட்டுரைகளின் எண்ணிக்கை 4,580ஐத் தொட்டிருக்கிறது. WSWS இன் இணைய ஆவணக் காப்பகத்தில் இப்போதுசுமார் 45,000 கட்டுரைகள் வரை இருக்கின்றன. இது பெருமை கொள்ளத்தக்கஎண்ணிக்கையாகும். ஆயினும் மிகப் பரந்த வகையில் பல்தரப்பட்டவிடயங்கள் குறித்தும் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கிறது என்பதேஉண்மையில் அசாதாரணமானதாகும்.

கடந்த 15 வருடங்கள் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிதொடர்ச்சி பெற்றதும் தீவிரமடைந்ததுமான ஒரு காலகட்டமாகஇருந்திருக்கிறது. 9/11, அதனைச் சூழ்ந்த ஏகாதிபத்திய “பயங்கரவாதத்தின்மீதான போர்”, நவ-காலனித்துவத்தின் மீளெழுச்சி, அமெரிக்காவிற்குள்ளும்சர்வதேசரீதியாகவும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் சிதைவு, அமெரிக்காமற்றும் சீனாவுக்கு இடையில் பெருகும் குரோதத்தை மையமாகக் கொண்டசர்வதேச பூகோள-அரசியல் பதட்டங்களின் அதிகரிப்பு, 1997 இல் ஆசியச்சரிவில் தொடங்கி ஒரு தசாப்தம் கழித்து வோல் ஸ்ட்ரீட் பொறிவில் உச்சம்பெற்றதான உலகளாவிய பொருளாதார அதிர்ச்சிகளின் வரிசை, 2008பொறிவுக்கு பதிலிறுப்பாக முதலாளித்துவ வர்க்கத்தினால்செயல்படுத்தப்படும் நாளுக்குநாள் மிருகத்தனம் அதிகரித்துச் செல்லும்சிக்கன நடவடிக்கைக் கொள்கைகள், எகிப்தில் புரட்சியின் வெடிப்பு மற்றும்உலகளாவிய முதலாளித்துவ சமூக-எதிர்ப்புரட்சிக்கு போர்க்குணமிக்கதொழிலாள வர்க்க எதிர்ப்பின் ஆரம்பகட்ட வெளிப்பாடுகள் ஆகியவைநிர்ணயகரமான அரசியல் நிகழ்வுகளாகவும் சமூகப் பொருளாதாரநிகழ்போக்குகளாகவும் இருந்திருக்கின்றன.

இந்த அத்தனை நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுப்போக்குகளும் உலக சோசலிசவலைத் தளத்தால் ஒப்பில்லாத துல்லியத்துடனும் நுட்பமானபார்வையுடனும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன, பகுத்தாயப்பட்டிருக்கின்றன.ஒவ்வொரு நாளும் என்ன நடக்கிறது என்பதை வெளியிடவும் பதிவுசெய்யவும் இது முனைந்தது என்பது மட்டுமல்ல, மார்க்சிச இயங்கியல்மற்றும் வரலாற்று சடவாத பகுப்பாய்வின் ஒப்பீடற்ற கருவிகளைப்பயன்படுத்தி, நடப்பதன் பின்னால் இருக்கும் உண்மையை வெளிக்கொண்டுவருவதற்கும் இது முனைந்து வந்திருக்கிறது. அதாவது,முதலாளித்துவத்தின் கட்டவிழ்ந்து கொண்டிருக்கும் வரலாறு, அதனால் வர்க்கப் போராட்டத்தின் எழுச்சிக்கு காரணமாவது மற்றும் அதன்தடுக்கமுடியாத விளைபொருளாக இருக்கக் கூடிய உலக சோசலிசப் புரட்சிஆகியவை குறித்த ஒரு நனவுடன் இது நிகழ்வுகளை பகுப்பாய்வுசெய்திருக்கிறது.

தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக சோசலிச வர்க்க நனவினை அபிவிருத்திசெய்வது என்பது தான் உலக சோசலிச வலைத் தளம் வெளிவந்த முதல்நாளிலிருந்தே அதன் நோக்கமாக இருந்து வந்திருக்கிறது. நாளாந்த முக்கியமான அரசியல் நிகழ்வுகள் மீது இடைவிடாத கவனக்குவிப்பு இதற்குஅவசியமாக இருந்திருக்கிறது. ஆனால் உலகெங்கும் இருக்கும் அதன்ஆசிரியர் குழு மற்றும் அர்ப்பணிப்பு மிகுந்த கட்டுரையாசிரியர்களின் பணிஎன்பது வெறுமனே அரசியல் செய்திகள் மற்றும் பகுப்பாய்வுடன் மட்டுப்பட்டுநின்று விட்டதல்ல. கடந்த 15 ஆண்டுகளில் WSWS கலை மற்றும் கலாச்சாரப்பிரச்சினைகளில் பரவலாக எழுதியிருக்கிறது. திரைப்படங்கள், இசை, கலைமற்றும் இலக்கியம் குறித்த அதன் கட்டுரைகளில் ஒரு சமகால சோசலிசசமூகத்தின் அத்தனை அம்சங்களையும் நோக்கிய ஒரு வெகுமுக்கியமானபுரட்சிகர மனோநிலையை விவரிப்பது பிரிக்கவியலாமல் இணைந்ததாய்இருந்திருக்கிறது. விஞ்ஞான ஆராய்ச்சியின் பல துறைகளிலும் நடந்திருக்கக்கூடிய முக்கியமான அபிவிருத்திகளை WSWS மிகக் கவனத்துடன் பின்பற்றிவந்திருக்கிறது, இயற்கையையும் சமூகத்தையும் சடவாதரீதியாகப் புரிந்துகொள்வதை ஊக்குவிப்பதற்கு இந்த முன்னேற்றங்கள் வாய்ப்பு ஏற்படுத்தித்தருவதை வரவேற்றிருக்கிறது.

அதன் 15 ஆண்டு கால பிரசுரப் பாதையில், உலக சோசலிச வலைத் தளம்சர்வதேச புரட்சிகர சோசலிசத்தின் அங்கீகாரமிக்க குரலாக இருந்துவந்திருக்கிறது. உலகெங்கிலும் பெரும் நெருக்கடியும் மனிதத் துயரமும்நிலவுகின்ற காலத்தில் நடந்தேறுகின்ற நிகழ்வுகளைப் புரிந்து கொள்வதற்கும்,உருக்குலைந்து காட்டுமிராண்டித்தனத்தில் மூழ்கிக் கொண்டிருக்கக் கூடியஒரு செயலற்றுப் போன முதலாளித்துவ உலகிற்கு ஒரு உண்மையானமுற்போக்கு, என்பதாலேயே புரட்சிகர, மாற்றினைக் காண்பதற்கு முனைந்துகொண்டிருக்கும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்குதவிர்க்கமுடியாத அரசியல் மற்றும் புத்திஜீவித்தன வழிகாட்டியாகவும் இதுசேவை செய்திருக்கிறது.

15 வருடங்களாக தனது அன்றாட வெளியீட்டை சாத்தியமாக்கிய உலகசோசலிச வலைத் தளத்தின் பெரும் வலிமை எங்கே தங்கியிருக்கிறது? மிகஉயர்ந்த தரத்திலான அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பகுப்பாய்வுமற்றும் வருணனைகளை (இவை காலத்திற்குத் தாக்குப் பிடித்து நின்றதைகாப்பக ஆவணங்களின் மீதான ஒரு ஆய்வு உறுதிப்படுத்தும்)வெளிக்கொண்டுவருவது WSWSக்கு எவ்வாறு சாத்தியமாயிற்று?

புரட்சிகர மார்க்சிச இயக்கத்தின் மகத்தான தத்துவார்த்த மற்றும் அரசியல்மரபுகளில் தான் WSWS இன் வேலை நனவுடன் வேரூன்றியிருக்கிறது என்றஉண்மையில்தான் WSWS இன் வலிமையும் நம்பகத்தன்மையும் முற்றிலும் முதன்மையாகவும் தங்கியிருக்கின்றது. சர்வதேச சோசலிசப் புரட்சியின்வேலைத்திட்டத்தை பாதுகாப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் நான்காம்அகிலத்தின் அனைத்துலகக் குழு நடத்திய பல பத்தாண்டு காலப்போராட்டத்தின் விளைபொருளே WSWS ஆகும். WSWS இன் வெளியீட்டைஆரம்பித்தபோது அனைத்துலகக் குழுவின் நிதியாதாரம் மிகக்குறைவானதாய் இருந்தது. இருப்பினும் அரசியல் மற்றும் புத்திஜீவித்தனமூலதனத்தின் விடயத்தில், நமது உலக இயக்கத்தின் வள ஆதாரங்கள்ஒப்பிட முடியாததாகவும் ஏறக்குறைய எல்லையற்றதாகவும் இருந்தது. உலகநிகழ்வுகள் மீதான WSWS இன் பகுப்பாய்வில் அதன் சர்வதேச ஆசிரியர்குழுவைச் சேர்ந்தவர்கள் முதலாளித்துவம் மீதான மார்க்சிச ஆய்வாளர்களின்நீடித்திருக்கும் தன்மை கொண்ட விஞ்ஞானபூர்வ அடித்தளங்களையும் உலகசோசலிசப் புரட்சியின் இருபதாம் நூற்றாண்டின் மகத்தான மூலோபாயஆசிரியர்களான விளாடிமிர் லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின்அரசியல் சிந்தனைகளையும் கொண்டு வர முடிந்தது.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் பின்னர், சோசலிசம் இறுதிமரணத்தை எட்டி விட்டதென்றும் முதலாளித்துவம் தவிர்க்கவியலாதவரலாற்று வெற்றியைக் கண்டிருக்கிறது என்றும் பிரகடனம் செய்தபிற்போக்குத்தனமான முதலாளித்துவ வெற்றிக்களியாட்டம் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்ததற்கு இடையிலான ஒரு சமயத்தில் தான் உலக சோசலிசவலைத் தளம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. வரலாறு குறித்த அந்த பொய்யானகருத்தை ஏற்றுக் கொண்ட குட்டி-முதலாளித்துவ தீவிரசிந்தனையாளர்களின்எண்ணிக்கை எண்ணிலடங்காததாக இருந்தது. ஆனால் லியோன்ட்ரொட்ஸ்கியின் அரசியல் மற்றும் தத்துவார்த்த வேலைகளில்வேரூன்றியதாக இருந்த அனைத்துலகக் குழு, பல பத்தாண்டுகளாக,ஸ்ராலினிசத்தின் பிற்போக்குத்தனமான பாத்திரம் குறித்து வலியுறுத்திவந்தது என்பதோடு சோவியத் ஒன்றியத்தின் உடைவையும்முன்கணித்திருந்தது. தோல்வியடைந்தது ஸ்ராலினிசமும், அதனுடன்மார்க்சிச-விரோத தேசியவாத சந்தர்ப்பவாதத்தின் அத்தனை வடிவங்களும்தான்.

உலக சோசலிச வலைத் தளம் விவாதத்திற்குரியதும் மற்றும் தனது நிலைப்பாட்டில் தெளிவானதுமாகும். அது தனது புரட்சிகர நோக்கங்களை இரகசியமாக வைத்திருக்கவில்லை. சீரழிந்து கொண்டிருக்கும் முதலாளித்துவசமுதாயத்தை சீர்திருத்துவதல்ல அதன் நோக்கம், அது சாத்தியமற்றதும்கூட. WSWS உண்மையைப் பேசுகிறது என்பதாலேயே, அது புரட்சிகரமானதாகஇருக்கிறது. மார்க்சிச விரோதம் மற்றும் சோசலிச விரோதத்தின் அத்தனைவடிவங்களையும் புத்திஜீவித்தன ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் கண்டனம்செய்வதில் WSWS ஒளிவுமறைவற்றதாகவும், சமரசமற்றதாகவும்,தயவுதாட்சண்யமற்றும் செயல்படுகிறது.

அனைத்துலகக் குழுவானது, உலக சோசலிச வலைத் தளத்தைஆரம்பிப்பதற்கான அதன் திட்டத்தை 1990களில் விவரித்தபோது அதுகூறியதைப் போல, ஒரு புதிய புரட்சிகர எழுச்சிக்கு சாதகமாய் அமையக்கூடிய மூன்று காரணிகளை அது இனங்கண்டது.

முதலாவது, சமகால முதலாளித்துவத்தின் அடிப்படையான முரண்பாட்டை,அதாவது உற்பத்தி சக்திகளின் சர்வதேசரீதியான அபிவிருத்திக்கும்ஒருங்கிணைப்புக்கும் மற்றும் முதலாளித்துவ தேசிய அரசுஅமைப்புமுறையின் பொருளாதாரரீதியான காலாவதியான தன்மைக்கும்இடையிலான மோதலை, தவிர்க்கவியலாமல் தீவிரப்படுத்தக்கூடியமுதலாளித்துவ பூகோளமயமாக்கலின் பொருளாதார மற்றும் அரசியல்விளைவுகள்.

இரண்டாவதாக, முதலாளித்துவத்தின் உலகளாவிய விரிவாக்கத்தில் இருந்துசர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எண்ணிக்கையும் அதனாடாக அதன்புரட்சிகர ஆற்றலும் தீவிரமாக வளர்ந்து பெருகியதை நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழு (ICFI) கவனத்தில் கொண்டது.
மூன்றாவதாக, உலக முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில்சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை வரலாற்றில் முன்கண்டிராத அளவுக்குமூலோபாயரீதியாக ஒருமைப்படுத்துவதை சாத்தியமாக்கத்தக்க குறிப்பாகஇணையம் சம்பந்தப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்பத்தின் எழுச்சி.
உலக சோசலிச வலைத் தளத்தின் வெற்றியானது 1998 இல் அதுதொடங்கப்படுவதற்கு அடிப்படையாக அமைந்த பகுப்பாய்வைஊர்ஜிதப்படுத்துகிறது.

கடந்த 15 வருடங்களில், WSWS ஒப்பில்லாத அரசியல் வரலாற்றைஸ்தாபித்திருக்கிறது. இந்த முக்கியமான தினத்தைக் கொண்டாடும் விதமாக,இந்த வலைத் தளத்திற்குள்ளாக அதன் பரந்த காப்பகத்தில் வாசித்துப்பயனடைவதில் வாசகர்களுக்கு உதவக் கூடிய சிறப்பு காட்சி வரிசைகளைநாங்கள் வைத்திருக்கிறோம். முதலாம் வரிசையில் வெகுமுக்கியமானபதிவுகள் மீதான காலவரிசையிலான ஒரு திறனாய்வு இருக்கும். கடந்தபதினைந்து வருட காலத்தில் நடந்த மாபெரும் நிகழ்வுகளுக்கு WSWS இன்பிரதிபலிப்பை ஆய்வு செய்ய வாசகர்களை நாங்கள் வலியுறுத்துகிறோம்.இந்நிகழ்வுகளை இந்தத் தளம் சரியாக ஆய்வு செய்திருக்கிறதா, தொழிலாளவர்க்கத்திற்கான அதன் அரசியல் பொறுப்புகளை சரியாக பூர்த்திசெய்திருக்கிறதா என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ள முடியும்.

பிந்தைய காட்சிவரிசைகள் கடந்த 15 வருடங்களில் WSWS கட்டுரைகள்விவாதித்த குறிப்பான விவாதப் பொருட்கள் மற்றும் பிரச்சினைகளைஇன்னும் விரிவாய் வழங்குகிறது.
இந்த ஆண்டுதினத்தை நாம் கொண்டாடுவதன் பகுதியாக, சமூகம், அரசியல்மற்றும் கலாச்சாரம் குறித்த உங்களது கண்ணோட்டங்களில் WSWS எத்தனைதூரம் செல்வாக்கு செலுத்தியிருக்கிறது என்பது பற்றிய கருத்துகளைச்சமர்ப்பிக்க எமது வாசகர்களை நாங்கள் அழைக்கிறோம். ஒரு புதியபுரட்சிகரத் தொழிலாள வர்க்க இயக்கம் முன்கண்டிராத சக்தி மற்றும்சர்வதேச வீச்சுடன் வளருவதற்கு ஒரு மிக வலிமையான தத்துவார்த்தமற்றும் அரசியல் அடித்தளத்தை கடந்த 15 ஆண்டு காலத்தில் உலகசோசலிச வலைத் தளம் உருவாக்கித் தந்திருக்கிறது.