World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்

 Background to the Russian assault on Chechnya: a power struggle over Caspian oil

செச்சென்யா மீதான தாக்குதலின் பின்னணி: கஷ்பியன் எண்ணெய் மீதான ஆதிக்கப் போராட்டம்.

By Chris Marsden
18 November 1999

செச்சென்யா மீதான ஏழுவார இராணுவத் தாக்குதல் நிகழ்வில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான பதட்டங்கள் வெடித்துள்ளன. செப்டம்பரில் மாஸ்கோ யுத்தத்தைத் தொடுத்ததிலிருந்து 4000 செச்சென்ய குடிமக்கள் மற்றும் 1,200 செச்சென் துருப்புக்கள் கொல்லப்பட்டிருக்கின்றன. 2,00,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து பலவந்தமாக வெளியேறும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

துருக்கியில் உள்ள இஸ்ரன்புலில், வியாழக்கிழமை நடைபெற்ற ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான அமைப்பின் (ஓ.எஸ்.சி.இ) உச்சிமாநாட்டில், அமெரிக்காவும் ஐரோப்பிய அரசாங்கங்களும், குச்ரான்சி மற்றும் ஏனைய பெரிய நகரங்களில் ரஷ்ய குண்டு வீச்சினைக் கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டன. ரஷ்ய ஜனதிபதி பொரிஸ் யெல்ட்சின், ``ரஷ்யா தனது எல்லைப்புறத்திலுள்ள பயங்கரவாதிகளையும் கொள்ளைக்காரர்களையும் அழிப்பதற்காக ரஷ்யாவைப்பற்றிக் குறைகூற மேற்கத்திய நாடுகளுக்கு உரிமையில்லை`` என்றுகூறி, அத்தகைய அனைத்து விமர்சனங்களையும் நிராகரித்தார்.

சிடுமூஞ்சித்தனமும் கிறுக்குத்தனமும் எல்லாப்பகுதிகளிலும் நிலவுகின்றன. சேர்பிய நகர்களிலும் நகர்ப்புறங்களிலும் தங்களது கொடூரமான விமானத்தாக்குதல்களின் சில மாதங்கள் மட்டுமே முடிந்தவேளையில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஜேர்மனி மற்றும் ஏனைய நேட்டோ நாடுகள், செச்சென்யாவில் நகரங்களையும் மக்களது வசிப்பிடங்களையும் இலக்காகக்கொண்டு மொஸ்கோ தாறுமாறாகக் குண்டு வீசுவது தொடர்பாக அதிச்சியையும் அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளன. ஒரு ரஷ்ய அதிகாரி புகார் செய்ததுபோல், அமெரிக்க ஏவுகனைகள் சேர்பிய மக்களைக் கொன்றபொழுது, வாஷிங்டன் அதனைப் ``பதிலுக்கு பதிலான நாசம்`` என்று குறிப்பிட்டது. மாறாக ரஷ்யகுண்டுகள் செச்சென்ய மக்களைக் கொல்லும் பொழுது அமெரிக்க அதிகாரிகள் மனித உரிமை கொடுமைகளைப் பற்றியப் பேசுகின்றனர்.

நாட்டின் தென்கிழக்கில் ``குர்துகளுக்கு எதிரான அங்காராவின் யுத்தத்தை`` சிறுபான்மையினத்தவருக்கு எதிரான இரத்தம் தோய்ந்த மற்றும் உலகின் மிகப் பழமையானதுமான இராணுவ தாக்குதல்களுள் ஒன்றாகவும், போலீஸ் அரசு ஒடுக்குமுறைக்கு பிரபலமான நாட்டில் மனித உரிமை, ஜனநாயகம் மற்றும் அமைதிக்காகத் தங்களை அர்ப்பணித்துள்ளதாக அமெரிக்க மற்றும் ஐரோப்பியத் தலைவர்கள் ஒன்றுகூடியுள்ள கேலித்தனத்தை, ஓ.சி.எஸ்.இ. உச்சிமாநாட்டைக் காணவந்திருக்கும் ஆயிரக்கணக்கான மேற்கத்திய பத்திரிகையாளர்களுள் ஒருவர் கூட கண்டு கொள்ளவில்லை.

ரஷ்யர்கள் தங்கள் பங்குக்கு, பயங்கரவாதத்துக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை என்று, வடகாகசஸின் ஏழை மக்கள், நாடு மற்றும் வளங்கள் மீதான தங்களின் பிடியை நிலைநாட்டிக் கொள்வதற்கு கொடூரமான ஆக்கிரமிப்பை நியாயப் படுத்துக்கின்றனர்.

பிரதான முதலாளித்துவ சக்திகளுக்கிடையிலான மோதல்களின் எப்போதும் இருக்கிறவாறு, அங்கு பிரச்சாரங்களுக்குப் பின்னால், திட்டமிட்ட நோக்கங்களும், உண்மையான வெளிப்படுத்தப்படாத குறிக்கோள்களும் நலன்களும் இருக்கின்றன. எவ்வளவு கூர்மையான முரண்பாடுகள் வந்துள்ளன என்பதற்கு, கடந்த வெள்ளி அன்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் இகோர் செர்ஜியெவ் அறித்த அறிக்கை காணப்பட்டது. செச்சென் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா உதவுகிறது என்பதைக் குற்றம்சாட்டி, அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு வடகாகசஸில் இராணுவ மோதல், வெயிலிருந்து விசிறப்படவும், தொடர்ந்து கொழுந்ததுவிட்டெரிவதும் தேவைப்படுகின்றன. மேற்கத்தைய நாடுகளின் கொள்கையானது ரஷ்யாவின் சர்வதேச ஸ்தானத்தையும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இருந்து அதனை வெளியேற்றவும் இலக்கு கொண்டுள்ள ஒரு சவால் ஆகும் என்று அவர் மேலும் குறிப்பிட்பர்.

செர்ஜியெவ் கூற்றுக்களை வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் நவம்பர் 15 இதழானது, ரஷ்யா மற்றும் ஈரான் எல்லை ஓரப்பகுதிகளுமாக எண்ணைக் குழாய் அமைப்பதற்கு, இந்தப் பிராந்தியத்தில் உள்ள முன்னாளைய சோவியத் குடியரசுகளை சம்மதிக்கச் செய்வதற்கான அமெரிக்க முயற்சிகள் அத்தகைய சந்தேகங்களைத் தூண்டி விட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டது. செச்சென்யாவில் தற்போதைய மோதலில் முக்கிய விஷயத்தில் இது பரவலாய் ஜாடையாகக் காணப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பா ஆகியவற்றுக்கிடையில் மூலோபாய ரீதியில் வளம்வாய்ந்த காகசாஸ் பகுதியைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான பெரும் ஆதிக்கப் போட்டியில் இறங்கியுள்ளன. இந்தப் பகுதி காஸ்பியன் கடலையும், உலகில் இன்னமும் பயன்படுத்தப்படாத பிரமாண்டமான எண்ணெய்ப் படுகைப் பகுதியையும் எல்லைப் பகுதிகளாகக் கொண்டுள்ளது. ம்த்திய ஆசியாவில் எந்த அரசு மேலாதிக்க நிலைவகுக்கிறதோ அதன் கைகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய் மூலம் பல்லாயிரம் கோடி வருமானமும் பூகோள அரசியல் நலன்களும் விழுவது இப்போட்டியில் பணயம் வைக்கப்பட்டுள்ளது.

டிரான்ஸ் காகசஸ் ஆசியப் பகுதி மேற்கத்திய கம்பெனிகளுக்கும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கம்பெனிகளுக்கும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் ஐரோப்பாவிலும் நேஸ்பியன் எண்ணெய் வயல்களையும் ஐரோப்பாவையும், கருங்கடல் வழியாகவோ அல்லது மத்திய தரைக்கடல் வழியாகவோ இணைக்கும் பாலமாக பயன்படும். அக்டோபர் 1997-ல் லு மொன்ட் டிப்ளமட்டிக், கஸ்பியன் பகுதியைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான முறுகல் நிலையின் விளைப்பயன்களைப் பற்றிய ஆழ்ந்த மதிப்பீட்டினைச் செய்தது. அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் அடையிலான உறவினைப் பற்றி எழுதுகையில் அது குறிப்பிட்டதாவது: அமெரிக்க அரசுத்துறையானது இந்தப்பகுதியில் ஒருங்கிணைந்த கொள்கையை வகுப்பதற்கு நீண்டகாலம் முன்பே, அமெரிக்க எண்ணெய் கம்பெனிகள் அக்கறை காட்டிவந்தன. எண்ணெய் ஒப்பந்தங்களின் பேச்சு வார்த்தையானது, இப்பிராந்தியத்தில் வாஷிங்டன் நேரடி அக்கறை கொள்ள ஊக்கமூட்டியது.

அமெரிக்க அரசாங்கமானது பாரசீக வளைகுடா எண்ணெய் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்டும்போது, அதனை கூடுதல் வளமாக்கப் பார்த்தது. அது முன்னாள் சோவியத் குடியரசுகளை ரஷ்யாவிலிருந்து பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் துண்டித்துவிடவும் அதன்மூலம் மொஸ்கோ தலைமையிலான ஒன்றுகடலை சாத்தியமில்லாததாக்கவும் கூட விரும்பியது. வசந்த காலத்தில் வெளியிட்ட கட்டுரையில், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கேஸ்பர் வெயின்பேகர், மாஸ்கோ கஸ்பியன் மேலாதிக்கவும் செய்வதன் வெற்றிபெற்றால், மேற்கு நாடுகள் நோட்டோவை விரிவுப்படுத்துதைவிட பெரும் வெற்றியைச் சாதித்ததாக இருக்கும் என்று எழுதினர்.

லு மொன்ட் டிப்ளமட்டிக் இச்சூழலினைப் பற்றிய முடிவுரையில் எழுதியதாவது: ஒவ்வொரு குடியரசும் ஒன்று அல்லது பல வெளிநாட்டு சக்திகளின் அரவணைப்பைப் பெறவிழைகின்ற, வியப்பூட்டும் கூட்டுக்களை கொண்டதாகக் காணப்படுகின்றன. புதிய வரவாக அமெரிக்காவானது, ரஷ்யா வருவதையும் ஈரானிய அபிலாஷைகளையும் தகுந்தவகையில் குறைக்கக்கூடிய பிரதான பாத்திரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயல்கிறது. இந்த அபிவிருத்திகளின் போட்டியில், அண்மையில் வெளிநாட்டு எல்லையாக ஆனதில், ரஷ்யா, செச்சென்யாவில் (1995) அதன் தோல்வியில் இருந்து இன்றும் பின்தங்கி உள்ளது. சுருங்கக்கூறின், காககசிய வரலாற்றில் அடுத்த கட்டம் அமெரிக்க வல்லாண்மைக்கும் ரஷ்யாவின் எதிர்ப்புக்கும் இடையிலானதாக இருக்கும்.

பல ஆண்டுகளாக, போட்டி எண்ணெய்க் குழாய்த் திட்டங்கள் எண்ணெய் விநியோகங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் போட்டியிட்டு வருகின்றன. அமெரிக்க நிறுவனங்களான அமோகோ, எச்சான், பென்ச்ஸாய்ல் மற்றும் யுனோகால் ஆகியன, அஜெர்பைஜானின் (செச்சென்யாவின் அண்டைநாடு) எண்ணெய்க் கூட்டு சங்கம் மற்றும் மேற்கத்திய கம்பெனிகள், அஜெர்பைஜானின் சர்வதேச எண்ணெய்க் கழகம் (ஏ.ஐ.ஓ.சி) எனும் அமைப்பைத் துவக்கியுள்ளன. அதனுடைய நோக்கம், கஸ்பியன் கடலோரப்படுகையில் இருந்து பெருமளவு அஜெரி எண்ணெயைக் கொண்டுவரும் எண்ணெய்க் குழாயை அமைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. அஜெர்பைஜானில் தற்போதைய முதலீட்டில் 50%-க்கும் மேலானவை அமெரிக்க நிறுவனங்களினதாகும்.

அமெரிக்க அரசாங்கமானது, தொடக்கத்திலிருந்து துருக்கிக்கு செல்லும் எண்ணெய்க் குழாய், செச்சென்யாவின் மற்றொரு பக்கத்து நாடான ஜோர்ஜியா வழியாகச் செல்லும் இக்குழாய்ப்பாதை, அஜர்பைய்ஜானிலிருந்து ஈரானுக்கு செல்லும் பாதையின் செலவை விட இருமடங்கு உடையதாக இருப்பினும், வற்புறுத்தி வருகிறது. வாஷிங்டனின் குறிக்கோள், ரஷ்யன் மற்றும் ஈரானியத் தலையீட்டில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படாமல் உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. அமெரிக்க எண்ணெய்க் குழாய் இவ்வாறு ஆண்டுக்கு 50 மில்லியன் மெட்ரிக் டன் அளவு எடுத்துச் செல்லும் (நாளுக்கு ஒரு மில்லியன் டாலர்கள்).

இது பாக்குவிலிருந்து துருக்கியின் மத்தியதரைக்கடல் துறைமுகமான செயான். கஸ்பியன் பிராந்தியத்தில் ஐச்ராப்பாவின் நலனும் கணிசமாக இருக்கிறது. அதனுடைய மையத்திட்டம் கருங்கடலுக்கும் மத்திய ஆசியாவுக்கும் இடையில், வட துருக்கிய தொழில்நகரமான சாம்சுன்னில் இருந்து பாட்டுமி எனும் ஜோர்ஜிய துறைமுகம் வரையிலான நெடுஞ்சாலை அமைப்பதன் வழியான வர்த்தகத் தொடர்பு ஆகும். கஸ்பியனில் உள்ள ஷாடெனில் எண்ணெய்வயல், அமெரிக்க தலையீடு இன்றி, ஈரான் வழியாக அமைக்கப்பட்டு ஐரோப்பியக் கழகங்களை வழிநடத்தப்படும் எண்ணெய்க் கட்டுக்களால் எடுக்கப்படுகிறது.

கஸ்பியன் எண்ணெய்க்கான தனது முழு குழாய்வழியும் இஸ்லாமிய பிரிவினைவாதிகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகிவருவதன் காரணமாக, டிசம்பர் 1994-ல் செச்சென்யாவுக்கு எதிரான யுத்தத்துக்கு செல்வதற்கான ரஷ்யாவின் முந்தைய முடிவின் மையத்தில் தான் பிரச்சனைகள் எழுந்துள்ளன. செச்சென்யாவில் உள்ள பிரிவினைவாதிகளின் தலைவர்கள் ஐரோப்பா மற்றும் எங்கும் அமைப்பு ரீதியான குற்றங்களின் நலன்களுடன் தொடர்புகொண்டுள்ளனர் என்று தெரிந்ததே. தங்களது சொந்த கணக்கீடுகளில் வடகாகசஸில் உள்ள எண்ணெய் வழி மற்றும் குழாய்களின் மீது முக்கிய கட்டுப்பாட்டைச் செய்வதினை கொண்டிருக்கிறார்கள்.

காகசியன் மற்றும் மத்திய ஆசியன் எண்ணெய் விநியோகத்தினைக் கட்டுப்படுத்துவதில் தனது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வர்த்தகப் போட்டியாளர்களை வெல்லும் எந்த வாய்ப்பையும் இழக்கச் செய்துவிடும் என்ற அச்சம் 1996-ல் தனது இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவரும் ரஷ்யாவின் முடிவில் முக்கிய காரணியாக இருந்தது. அப்போதிலிருந்து, காஸ்பியனில் அமெரிக்க பொருளாதார சுற்றிவளைப்புக்கு தனது சொந்த பதிலை ரஷ்யா விரிவாக்குவதை விரும்புகிறது. கடந்த நவம்பர் 29-ல் ரஷ்யா தலைமை தாங்கிய கஸ்பியன் குழாய்ப்பாதை கூட்டமைவு, கஸ்பியன் எண்ணெய்ப்படுகை உள்ள டெங்கிஸ் வயலிலில் இருந்து கசாக் எண்ணையை ரஷ்யா கருங்கடற் துறைமுகமான நோவோச்ராசிக்கு செச்சென்ய கிளர்ச்சியாளர்காளால் கறந்து எடுத்துச் செல்லும் 2.2 மில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டங்களை அறிவித்தது.

1500 கிலோமீட்டர் குழாய்ப்பாதைகள் கேஸ்பியன் எண்ணெய்ப்படுகையின் வளங்களை பூமியிலிருந்து துளையிட்டு எடுக்கும் முதலாவது பெரியதிட்டமாகும். அமெரிக்கா தலைமையிலான ஏ.ஐ.ஓ.சி. திட்டம் முழுதும் செயல்படும் முன் அமெரிக்கா தலைமையிலான அஜெர்பைஜானுக்கான மற்றும் அஜெரி எண்ணெயை 2003 ஆண்டுவரை 5 மில்லியன் மெட்ரிக் டன்னை வெளியே எடுப்பதற்கான தற்காலிக ஒப்பந்தத்திற்கு மாற்றாக ரஷ்யா குழாய்ப்பாதையை முன்னெடுத்தது. ஆகஸ்டில் 1,200 செச்சென் கிளாச்சியாளர்கள் டாஜெஸ்தானில் குண்டு வெடிப்புக்களை செய்தபோது, ரஷ்யன் குழாய்வழி தற்காலிகமாக மூடும்படி நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த இடையூறு யெல்ட்சின் அரசாங்கத்துக்கு செச்சென்யா மீது புதிய தாக்குதலைத் தொடுக்க பெரிய தூண்டலை வழங்கியது.

செச்சென்யா மீதான ரஷ்யாவின் அக்கறை சேர்பியாவுக்கு எதிரான அமெரிக்க நேட்டோ யுத்தத்தின் விளைவாகவும் அதை அடுத்து கோசோவாவை நேட்டோ ஆக்கிரமித்தின் விளைவாகவும் மேலும் வளர்ந்தது. ஜீன் 12-ல் நேட்டோ கொமாண்டர் ஜெனரல், வெஸ்லி கிளார்க், பிரிஸ்டினா விமானதளத்தை ரஷ்யன் துருப்புக்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு முன் பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் துருப்புக்கள் இராணுவத் தாக்குதலைத் தொடுக்கவேண்டும் என்று கட்டளையிட்டதுடன் யுத்தம் முடிவுக்கு வந்தது. அமெரிக்க ஜெனரலின் கட்டளைகள் கொசோவாவில் நேட்டோ படைகளின் பிரிட்டிஷ் கொமாண்டர் ஜெனரல் மைக்கேல் ஜாக்சன் உங்களுக்காக நான் முன்றாவது உலக யுத்தத்தை ஆரம்பிக்கப் போவதில்லை என்று கிளார்க்கிடம் கூறினார்.

இந்நிகழ்வுகளின் மற்றும் கொசோவா அமெரிக்க பராமரிப்பின் கீழான பிரதேசமாக ஆனதன் முக்கியத்துவம் ரஷ்யன் இராணுவத்தையும் அரசியல்தட்டையூம் திகைப்படையச் செய்யவில்லை. அதேவேளை யெல்ட்சின் அரசாங்கமும் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளுள் அதன் கொள்கை வேறுபாடும் பால்கன் யுத்தத்தால் மிக மோசமாக செல்வாக்கிழந்துவிட்டது.

அமெரிக்காவுக்கு எதிராக வளர்ந்துவரும் வெகுஜன குரோதத்தின் பின்னணி, நிர்வாகத்திலும் இராணுவத்திலும் உள்ள மிக வலதுசாரி தேசிய சக்திகள் காகசஸில் ரஷ்யாவுக்குள்ள நலன்களைப் பாதுகாக்க நிலை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியதற்கு ஊக்கமூட்டியது. செச்சென்யாவில் தலையீடு மேற்கத்திய அரசுகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் மற்றும் சுற்றியுள்ள காகசியன் குடியரசுகளுக்கு இன்னும் நம்பிக்கைக்குரிய சக்தி எனவும் அர்த்தப்படக்கூடியதாக இருக்கும். ரஷ்ய விமானப்படைத்தளபதி அனடோலி கொர்னுக்கோவ் இவ்வாரம், நமது தேசத்தில் ஒழுங்கை நிலைநாட்டுவதில் நாம் ஈடுபட்டுள்ளோம். அவ்வாறு நாம் செய்வதை நிறுத்தவோ அதற்கான உரிமையோ ஒருவருக்கும் இல்லை. ரஷ்யா ஈராக்கோ, யூகோஸ்லாவியாவோ இல்லை. (அந்நிய) தலையீட்டுக்கான எம்முயற்சியும் சற்றும் தயக்கமின்றி தடுக்கப்படும்.

அதிகரித்துவரும் அமெரிக்க இராணுவ நிலை மற்றும் ரஷ்யாவின் தீவிரமான தேசிய ரீதியான பதில் மனித துயரத்தில் மிக மோசமானதுக்கான அச்சுறுத்தலை தற்போது திறந்துவிட்டுள்ளது. ``அரங்கு ஏவுகணை பாதுகாப்பு`` எனும் விண்வெளியுத்தம் பாணியிலான அமெரிக்காவின் புதிய திட்டம் அணு ஆயுத ஏவுகணைக் கெதிரான தேசிய பாதுகாப்பாக 1972 அமெரிக்க-ரஷ்ய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எதிர்ப்பு ஒப்பந்தத்தை மீறுவதாகும். ஏவுகணை எதிர்ப்பு ஒப்பந்தம் ரஷ்யாவையும் அமெரிக்காவையும் ஒரு இடத்துக்கெதிராக ஒரு இடத்தில் வைக்கப்படுவதைக் கட்டுப்படுத்துகிறது. அடுத்த ஆண்டு, எவ்வாருயினும் கிளின்ரன் நிர்வாகம் புதிய ஏவுகணை எதிர்ப்பு முறையை முரட்டுத்தனமான அரசுகள் என்று கூறப்படுகின்ற வடகொரியா, ஈரான் மற்றும் ஈராக் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் தாக்குதல் என்று கூறப்படுவனவற்றை தடுப்பதற்கு அலாஸ்காவில் நிறுவதற்கு அங்கீகாரம் பெற ஏற்பாடு செய்யவிருக்கிறது.

யெல்ட்சின் கிளின்ரனுக்கு, இத்திட்டங்கள் ஆயுதக்கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களுக்கு ``மிக அபாயகரமான விளைவுகளை`` உண்டுபண்ணக்கூடும் என்று எழுதினார். அதேவேளை ரஷ்யாவின் மூலோபாய ஏவுகணை சக்திகளின் ஜெனரல் விளாதிமீர் யாக்கோவ்லேவ் ஏவுகணை எதிர்ப்பு உடன்படிக்கை மாற்றப்படவேண்டுமா என ரஷ்யா தன்னை அனைத்து ஆயுதக்கட்டுப்பாட்டுக் கடப்பாடுகளில் இருந்தும் விடுவித்துக்கொள்ள எண்ணிப்பார்க்கவேண்டும் என்று குறிப்பிட்டார். இம்மாதத் துவக்கத்தில் ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக எஸ்.எஸ்.-21 என்ற அணு ஆயுத சக்தி திறன் கொண்ட தந்திரோபாய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் எவுகணை எதிர்ப்பு ராக்கெட் உட்பட இரு ஏவுகணைகளை சோதனைபார்த்தது.


வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.

Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved