World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்

 

Filmmaker Deepa Mehta replies to an attack in the Hindustan Times

 

இந்துஸ்தான் டைம்ஸ் இன் தாக்குதலுக்கு திரைப்படைப்பாளி தீபா மேத்தா பதில்


19 May 2000

 

Back to screen version

 

இந்தியாவில் தீபா மேத்தாவினதுஅண்மைய படமான தண்ணீர் திரைப்படம்தயாரிப்பதைத் தடுக்கும் இந்து தீவிரவாதிகளின்முயற்சிகளுக்கு எதிராக அவரைப் பாதுகாப்பதற்கான உலக சோசலிச வலைதளத்தின் பிரச்சாரத்தையும் தீபா மேத்தாவையும்தாக்கி மே 3-ஆம் தேதி இந்தியப் பத்திரிகையான இந்துஸ்தான் டைம்ஸ் இல் வெளியிடப்பட்டகட்டுரைக்கு தீபா மேத்தா பின்வரும்பதிலை விடுத்தார்.

 

இது சூழ்நிலைப்பொருத்தத்துக்கு வெளியே மேற்கோள்காட்டப்பட்டுள்ள, ஆகையால் தலைப்புச்செய்தியில் இடம்பிடித்துக் கொண்ட இன்னொருவிஷயமாகும். திருவாளர் மோகனின் மேற்கோள்களைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் பொறுக்கிஎடுத்தல் மற்றும் அவற்றை சூழ்நிலைப்பொருத்தம் இன்றி அச்சிடுவதன் மூலம்பரபரப்பாக்கி, உண்மையில் நான் அவ்வாறுஇல்லாவிடிலும் என்னை இந்திய வெறுப்பாளர்,பித்தர் போலக் காட்டி கெட்டவார்த்தைபேசுபவராகத் தொனிக்க வைத்தும் உலக சோசலிச வலைதளத்தின் எழுத்தாளர்களை பழிக்குப்பழி வாங்குபவர்கள் மற்றும்பொறுப்பில்லாதவர்கள் எனத் தொனிக்கும்விதத்திலும் காட்டுகிறது. நிச்சயமாய் அவர்கள்அப்படிப்பட்டோரல்லர். எந்த வகையிலும்வலைத்தளம் இந்தியப் பிரதமருக்கு வெறுப்புஅஞ்சலை ஊக்கப்படுத்தவும் இல்லை.இதனை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பும்எவரும் இந்த வலை தளத்தினை www.wsws.org எனும் முகவரியில் பார்க்கலாம்.

 

தண்ணீர்படத்திற்கு நேர்ந்தது பற்றி கசப்பான,சில நேரங்களில் கோபமும் கூட அடைந்து,நான் தனிப்பட்ட முறையில் காட்டிக் கொடுக்கப்பட்டதாக உணர்ந்த போதும், நான்இந்தியாவை அல்லது இந்தியர்களை ஒருபோதும் கரி பூசவில்லை என்பதைத் தெளிவாக்கவிரும்புகிறேன். நான் பிறந்து வளர்ந்ததேசத்தைப் பற்றி மிக ஆழமாக அக்கறைஉள்ளவளாக இருக்கிறேன். தற்போதுநான் இருக்கும் தூரம், இந்தியாவை சிறிதளவாவதுபுறநிலை ரீதியாகப் பார்க்க என்னை அனுமதிக்கிறது. அது என்னை ஒரு இரகசிய ``பாக்கிஸ்தானி``யாகவோ அல்லது துரோகியாகவோ ஆக்கவில்லை.ஏனைய நாடுகளைப் போல அழகிலும்குறைகளிலும் இந்தியாவுக்கும் அதற்கானபங்கு உண்டு.

 

தண்ணீர் படத்திற்கும் எனக்கும்நடந்தது மிகவும் அதிர்ச்சிப் புண்ணாக இருந்தது;தொடர்ந்தும் அவ்வாறு இருக்கிறது.நான் அதனை தொலைநோக்கில் வைக்கமுயற்சிக்கிறேன். திருவாளர் மோகன் போன்றபத்திரிகையாளர்கள் என்னை சூழ்நிலைபொருத்தமின்றி மேற்கோள் காட்டாதநாகரிகத்தைக் கொண்டிருந்தால் அல்லதுகுறைந்தபட்சம் நான் சொல்லியிருக்கிறமூலக்கருத்து என்ன என்று சரி பார்த்திருந்தால்அது பாராட்டத்தக்கதாக இருந்திருக்கும்.ஆனால் அது நிச்சயமாக பத்திரிகையில்நல்ல ஒரு இடத்தைப் பெறுவதற்கோ,அல்லது கேலிச் சித்திரம் போடுமளவுக்குதகைமை பெற்றிருக்காது. அப்படியல்லவா?

 

நான் என்னை ஒருபோதும் சர்ச்சைக்குரியதிரைப்படப் படைப்பாளியாக எண்ணிப்பார்த்ததில்லை. மற்றும் எனது படங்கள் சர்ச்சைக்குரியனவாக இருக்கவேண்டும் என்ற நோக்குடன்படைக்கப் பட்டவையும் அல்ல. நான்``சர்ச்சைக்குரிய திரைப்படப் படைப்பாளி``என்ற முத்திரையைப் பெற பேரவாக்கொள்ளவில்லை; அப்படி ஒருபோதும்இருந்ததும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக,சூழ்நிலைப் பொருத்தமின்றி மட்டுமே எனதுபடங்கள் பார்க்கப்பட வேண்டுமென்பதேஇந்துத்துவ பரிவாரங்களின் வசவுரைஆகும். இந்தப் பொறுப்பற்ற கட்டுரை``சர்ச்சைக்குரிய`` முத்திரையை பிரச்சாரப்படுத்தியும் உலகம் முழுவதும் சினம் கொண்டஇந்தியர்களிடமிருந்து இந்தியப் பிரதமருக்குவெறுப்பு அஞ்சல்களை உற்பத்தி செய்யவும்பிரச்சாரப்படுத்துகிறது. போலியானவாதமூலக்கூறிலிருந்து திருவாளர் மோகன்தேசியவாத உள்ளக் கொதிப்பை தீமூட்டுகிறார்- அவரது பரபரப்புத் துக்கடாச் செய்தியைஎழுதியபோது இதுதான் அவரது விருப்பமாகஇருந்ததா?

 

மேலும் திருவாளர் மோகன்பழிதூற்றுவதாக இருந்தால் குறைந்தபட்சம்அவர் உண்மைகளை நேரடியாகப் பெறட்டும்:திரு கால்ராஜ் மிஸ்ரா உத்திரப்பிரதேசத்தின்சுற்றுலாத்துறை அமைச்சர் அல்ல மற்றும்அவரது எந்த ``அடி வருடியும்`` என்னைஒருபோதும் தொடர்புகொள்ளவில்லை.திரு மிஸ்ராவை உலக சோசலிச வலைதளத்துடன் தொடர்புடைய எவருக்கும்ஒருபோதும் குறிப்பிடவில்லை. (அவர் என்னிடம்அன்பாகத்தான் நடந்து கொண்டாரேஒழிய வேறொரு

முறையில் நடந்து கொள்ளவில்லை.) இதனை திருவாளர் மோகன் எங்கேபொறுக்கினார்?

 

இந்தியா டூடேயில்தனது கட்டுரையில் தவ்லீன்சிங் குறிப்பிட்டவாறு,``தீபா மேத்தா பற்றி எவரும் எதையும்எழுதும் காலம்`` ஆக இருந்து வந்துள்ளது.உங்கள் வாசகர்களுக்கு சலிப்புத் தட்டவில்லையா? எனக்கு சலிப்பாக இருக்கிறது.

 

உங்கள் அன்புள்ள,

 

தீபா மேத்தா.

 

 

 

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved