By the Editorial
Board கொக்காசியன் குடியரசானசெச்னியாவுக்கு எதிராக ரஷ்யப்படைகள்மூன்று மாதங்களுக்கு மேலாக யுத்தத்தில்ஈடுபட்டுள்ளன. இதில் கொல்லப்பட்டோர்எண்ணிக்கை 10.000க்கு அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. செச்சினியன் சனத்தொகையில் 1/3 பங்கினர்வீடுகளை இழந்துள்ளனர். 250.000 பேர் இன்றுஅகதிகளாகியுள்ளனர். ரஷ்ய ஷெல் தாக்குதல்களாலும் அங்குமிங்குமாக இடம்பெறும் படைகளின்ஊடுருவல்களாலும் நொந்து போயுள்ளதும்,முற்றுகையிடப்பட்டுள்ளதுமான தலைநகர்குரொஸ்னியினுள் சிக்குண்டு போயுள்ள மக்களின்எண்ணிக்கை 30.000 50.000 என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக சோசலிச வலைத் தளம் (WSWS) யுத்தத்தை உடன் நிறுத்துமாறும்ரஷ்யப் படைகளை வாபஸ் பெறும்படிகோருமாறும் அனைத்து தொழிலாளர்களையும், மாணவர்களையும், புத்திஜீவிகளையும்வேண்டுகின்றது. ரஷ்ய மக்களின் நலன்களின்பேரிலேயே செயற்பட்டு வருவதாகக்கூறும் கிரேம்ளினின் சுயநலவாதங்கள் நிராகரிக்கப்பட வேண்டும். செச்சினியா மீதான தாக்குதல்ரஷ்ய ஆளும் பிரமுகர்களின் ஒரு படுகொலையுத்தமாகும். மாஜி ரஷ்ய ஜனாதிபதி ஜெல்ட்சினும்,அவரால் புதிதாக நியமனம் செய்யப்பட்டவாரிசு விளாடிமிர் புட்டினும் செச்சினியாமீதான தாக்குதல் தனித்து பயங்கரவாதகொள்ளையர்களுக்கு எதிராகவே நெறிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிக்கொள்கின்றனர்.இந்த யுத்தத்தை ஒரு வெறும் பொலிஸ்நடவடிக்கையாகக் காட்டிக்கொள்ளஅவர்கள் எடுக்கும் முயற்சிகள், செச்சினியன்நகரங்களிலும், பட்டினங்களிலும் வாழும்அப்பாவி பொதுமக்கள் மீது இவர்கள்நடாத்திய குண்டுவீச்சு விதிமுறைகள் மூலம்நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுசெப்டம்பரில் மாஸ்கோவிலும் மற்றும்நகரங்களிலும் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களுக்கு செச்சினியன் பிரிவினைவாதிகளே பொறுப்புஎன்ற வாதமே இந்த யுத்தத்துக்கானஉடனடியான சாக்குப்போக்காகியது.இதில் 200 மக்கள் கொல்லப்பட்டனர்.ஆனால் இதுகாறும் இந்த குண்டு வெடிப்புகளில்செச்சினியர்கள் தொடர்பு கொண்டிருந்தனர்என்ற குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கானஉறுதியான ஆதாரங்கள் எதுவுமே முன்வைக்கப்படவில்லை. ரஷ்ய அரசாங்க வட்டாரங்களில்வன்முறை குற்றங்கள், அரசியல் படுகொலைகளின் சாதனைகளை அடிப்படையாகக் கொண்டமாபியா மூலகங்களின் செல்வாக்குகள்போட்டியிட்டு வருகின்றன. இந்தக் கொலைகார நடவடிக்கைகளுக்கு உண்மையில் அவர்களேபொறுப்பு என்பதை நிராகரித்துவிட முடியாது.இருப்பினும் குண்டுவீச்சுக்களும், செச்சினியன்யுத்தமும் ரஷ்ய ஆட்சியாளர்களின் அரசியல்நோக்கங்களின் நலன்களுக்கு பயன்பட்டுள்ளது.பொலிசாரின் அடக்குமுறை அதிகாரங்கள்பலப்படுத்தப்பட்டுள்ள அதேவேளையில்நாட்டினுள் நிலவிவரும் பெரும் சமூக நெருக்கடிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அடியோடுஒதுக்கித் தள்ளப்பட்டுள்ளது. ரஷ்யாவின்குழப்ப நிலையை ஒரு ஒழுங்கு முறைக்குகொணர்வதற்கு அவசியமான பலசாலியாகஜனாதிபதி வாரிசு புட்டின் சித்தரிக்கப்பட்டார். யுத்தம் ஜெல்ட்சினின் உள்கட்சி வட்டாரங்களுக்குஇந்த முக்கிய வாகனத்தை வழங்கியது.எதிர்த்தரப்பு சக்திகளின் அரசியல் கைப்பொம்மைகளுக்கு எதிராக ரஷ்ய பெடரேசனின்பிராந்திய ஒன்றிணைப்பைக் கட்டிக் காப்பதன்மூலம் ரஷ்ய மக்களின் நலன்களின் பேரில்யுத்தம் இடம்பெற்று வருகின்றது என்பதேபுட்டின் அரசாங்கம் முன்வைத்துள்ளமுக்கிய நியாயப்படுத்தலாகும். எவ்வாறெனினும்வெகுஜனங்களின் காவலனாகவும் ரஷ்யதேசிய நலன்களின் பாதுகாவலனாகவும்கிரேம்ளின் தன்னைச் சித்தரித்துக்காட்டுவதுசிரிப்புக்கிடமானது. ஏறக்குறைய ஒரு தசாப்தகாலமாக முதலாளித்துவ சந்தைக்கொள்கைகளே ஜெல்ட்சினாலும் தற்சமயம்புட்டினாலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.யுத்த காலத்துக்கு வெளியே எந்த ஒருமக்களும் பலிகடாக்களாகியுள்ள மாபெரும்சமூக, பொருளாதார பேரழிவுகளுக்குஇவர்களே பொறுப்பு. புதிய ஒழுங்குமுறையின் உச்சியில் குந்திக்கொண்டுள்ள விரல்விட்டுஎண்ணக்கூடிய அரை- கொலைகாரமூலகங்கள் பரந்தளவிலான ரஷ்ய தொழிலாளர்களை பெருமளவிலான வேலையின்மைக்கும்,வறுமைக்கும், முக்கிய சமூகசேவைகளின்ஒழிப்புக்கும் பலிகடாக்களாக்குவதன்மூலம் தம்மை வளப்படுத்திக் கொண்டனர். மேலும் இது கிரம்ளின் ஆளும் கும்பலானமாஜி ஸ்ராலினிச அதிகாரத்துவத்தில் இருந்துஒரு தசாப்தத்துக்கு முன்னர் முதலில்தலைநீட்டிய காலம் தொடக்கம் தனதுஉயிர் நீடிப்புக்கு மேற்கத்தைய அரசாங்கங்களிலும், வங்கிகளிலும், கூட்டுத்தாபனங்களிலுமேதங்கியிருந்தது. முக்கியமாக அமெரிக்காவினதும்,ஐரோப்பாவினதும் ஒரு வாடிக்கையாளர்ஆட்சியாளனாக தொழிற்பட்டு, முன்னையஅரசுடமை, கைத்தொழில்களை ஒழித்துக்கட்டியும் அனைத்துலக மூலதனம் ரஷ்ய இயற்கைவளங்களையும், சந்தைகளையும் கையாளவழிவகுத்தும் செயற்பட்டு வந்தது. செச்சினியாவுக்கு எதிரான யுத்தம், ரஷ்ய தரகு முதலாளித்துவத்தின் (கொம்பிரதோர்) புதிய வர்க்க நலன்களைப்பாதுகாக்க இடம்பெற்றது. ரஷ்யாவின்நீண்டகாலக் கூட்டாளியான சேர்பியாமீதான நேட்டோ குண்டுவீச்சைத் தொடர்ந்துஇந்த ஆளும் பிரமுகர்கள் கும்பல் தனதுகாக்கசியன் பிராந்தியம் மீதான மேற்கத்தையநாடுகளின் சவாலையிட்டு பெரிதும் கவலைகொண்டிருந்தது. இந்தப் பிராந்தியம்பிரமாண்டமான கஸ்பியன் எண்ணெய் வயல்களுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையேயானஒரு விரகி முக்கியத்துவம் கொண்ட பாலமாகவிளங்கியது. உத்தியோகபூர்வமான அரசாங்கப்பிரகடனங்கள் பொதுவில் மத்தியகிழக்கில்உள்ள இஸ்லாமிய ஆட்சியாளர்களை செச்சினியபிரிவினைவாதிகளின் மறைமுக ஆதரவாளர்களாகஇனங்காட்டி வந்துள்ள போதிலும் சிலமுன்னணி அரசியல்வாதிகள் அமெரிக்காவின்நேரடி தலையீடு இருந்து கொண்டுள்ளதாகஜாடை காட்டி வந்துள்ளனர். சமீபத்தில்இடம்பெற்ற இராணுவத் தலைவர்களின்ஒரு கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர்இகோர் சேர்கியேவ் ''அமெரிக்காவின்தேசியநலன்கள் வடக்கு காக்கசசில்இராணுவ மோதுதலை வேண்டி நிற்கிறது.வெளியிலிருந்து தூபமிடப்பட்டு இடைவிடாதுகுமுறிக் கொண்டுள்ளது. மேற்கத்தையநாடுகளின் கொள்கையானது ரஷ்யாவுக்குஒரு சவாலாக உள்ளது. அதனது அனைத்துலகஅந்தஸ்தை பலவீனம் அடையச் செய்யவும்விரகி முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியங்களிலிருந்துஅப்புறப்படுத்துவதுமே நோக்கமாகஉள்ளது.'' எனப் பிரகடனம் செய்தார். ஒருபுறத்தில் கொசோவா யுத்தத்தின்பின்னர் அமெரிக்காவுக்கு எதிராக பரந்தஉணர்வலைகளின் அடிப்படையில் இத்தகையஒரு அறிக்கையின் இலக்கு, செச்சினியன் பிரச்சாரஇயக்கத்துக்கு ரஷ்யாவின் உள்ளே பரந்தமக்கள் ஆதரவை வெற்றி கொள்வதாகும்.ஆனால் அமெரிக்க இராணுவத்தின் வளர்ச்சியின்மூலம் தோன்றியுள்ள அச்சுறுத்தலைபுட்டினும், இராணுவத்திலுள்ள அவரதுசகாக்களும் மாபெரும் ரஷ்யன் சோவினிசத்தைதூண்டி விடுவதன் அடிப்படையில் எதிர்த்துநிற்க முடியாது. இந்த யுத்தத்திற்கு தொழிலாளர்வர்க்கம் வழங்கும் எந்தவொரு ஆதரவும்அவர்களின் சொந்த ஒடுக்குமுறையாளர்களின்கரங்களையும், அனைத்துலக வங்கிகளுக்கும்,கைத்தொழில் கூட்டுக்களுக்கும் ஊடாகரஷ்யாவில் மேலாதிக்கம் செலுத்தும் அந்தஅரசாங்கத்தையும் மட்டுமே பலப்படுத்தச்செய்யும். செச்சினியாவில் கிரம்ளினின் இலக்கு,ரஷ்யாவின் வல்லரசு அந்தஸ்தை மீள ஸ்தாபிதம்செய்வதும், ஏகாதிபத்திய அரசாங்கங்களுடனும், மேற்கத்தைய வங்கிகளுடனுமான தமதுபேரம்பேசும் பலத்தை உறுதி செய்வதும்,அதன் மூலம் ரஷ்யன் காக்கசியன் மக்களைசுரண்டுவதில் பங்குகொள்ளும் தமதுஉரிமையை பேணுவதுமேயாகும். செச்சினியாவில் ஏகாதிபத்தியத்தின் பாத்திரம். செச்சினியாவிலான ரஷ்ய ஆக்கிரமிப்பை மேற்கத்தைய வல்லரசுகளுக்கும், நேட்டோவுக்கும்அல்லது ஐக்கிய நாடுகள் சபைக்கும்ஒரு சமபலம் கொண்டதாக நோக்குவதுஒரு பாரதூரமான தவறாகும். ஏகாதிபத்தியஅரசாங்கங்களும் குறிப்பாக அமெரிக்கா,இன்றைய துயரமான நிகழ்வுகளுக்குஒரு பெரும் பொறுப்பாகும். சோவியத்யூனியனை உடைத்து எறிந்துவிட்டு, முதலாளித்துவசந்தை உறவுகளை புனருத்தாரணம்செய்ததிலிருந்து மலர்ந்த முதலாவதுபுதிய ஜனநாயக ஒழுங்குமுறை என இதைப்பிரகடனம் செய்த அமெரிக்கா, ஐரோப்பாவினால் உத்தரவாதம் செய்யப்பட்டதுமானஒரு ஆட்சியாளர்களால் இது இடம்பெற்றுள்ளதுஎன்பதை இந்த யுத்தம் தொடர்பானஎந்தவொரு வெகுஜனத் தொடர்புச்சாதன விமர்சகர்களும் குறிப்பிடத் தவறிவிட்டனர்.ஜெல்ட்சினின் அரசாங்கம் அரசுடமைநிறுவனங்களை தகர்த்து எறிந்தும் பல்லாயிரக்கணக்கானோரை வறுமைக்குள் தள்ளியும்தம்மை செல்வந்தர்களாக்கிக் கொண்டும்இருந்த ஒரு நிலையிலேயே இவர்கள் ஒருமாஜி ஸ்ராலினிஸ்ரான ஜெல்ட்சினை மாபெரும்மனிதநேயக்காரனாகவும், ஜனநாயக,உயர் இலட்சியங்களைக் கொண்டவனாகவும்காட்டினர். அமெரிக்காவும், ஐரோப்பாவும் ரஷ்ய யுத்தத்தை கண்டனம் செய்வதுஅடியோடு பாசாங்கானது. ஈராக்குக்குஎதிரான அவர்களின் இராணுவத் தாக்குதலும்,தடைவிதிப்புக்களும் இலட்சோப லட்சம்அப்பாவி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும்இறந்ததற்குப் பொறுப்பாகும். சேர்பியாவுடனான மோதுதலின் போது நேட்டோபெல்கிரேட்டிலும், நாடுபூராவுமுள்ளநகரங்கள், பட்டினங்களிலும் சிவிலியன்கள்மீது குண்டுவீச்சுத் தாக்குதலை நடாத்தியது.அத்தோடு சிறிய தேசிய இனங்களின் தேசியஇறைமையில் கைவைப்பதற்குள்ள தனதுஉரிமை பற்றியும் வலியுறுத்தியது. அமெரிக்காநீண்டகாலமாக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் உரிமை பாராட்டி வந்துள்ளது. கடந்தஆண்டு பயங்கரவாதத்தை எதிர்த்துபோராடும் பம்மாத்தின் கீழ் சூடானின்மாபெரும் மருந்து உற்பத்தி பக்டரி மீதுகுண்டுவீச்சு நடாத்தியது. சேர்பியாமீதான நேட்டோ தாக்குதல், ரஷ்யாவின்நீண்டகால புவிசார்- அரசியல் நலன்களைசவால் செய்யும் விதத்தில் அமெரிக்காகையாண்ட ஒரு தொகை நடவடிக்கைகளின்சமீபத்திய சம்பவமாகும். கடந்த சிலவருடங்களாக சோவியத் சகாப்தத்தைச்சேர்ந்த வார்ஷோ ஒப்பந்தத்தின்ரஷ்யாவின் மாஜி சகாக்களை ஈர்க்கும்விதத்தில் நேட்டோ விரிவுபடுத்தப்பட்டது.இதேசமயம் இவற்றில் பலவிற்குஐரோப்பிய யூனியனில் அங்கத்துவம் பெறும்சாத்தியங்களும் வழங்கப்பட்டன. அமெரிக்கா, 1972ம் ஆண்டின் பீரங்கி ஏவுகணைஎதிர்ப்பு ஒப்பந்தத்திற்கு மாறாக அணுவாயுதஏவுகணைத் தாக்குதலுக்கு எதிராகஒரு தேசிய பாதுகாப்பு கேடயத்தைஉருவாக்கும் புதிய திட்டங்களுடன் முன்னேறிவருகின்றது. இது ரஷ்யாவுக்கும் இதன் ஆபத்தைகொணர்கின்றது. அமெரிக்கா இதன் பிராந்தியத்தின் மீது சார்பு ரீதியில் தண்டணைக்கு அப்பாற்பட்டதாக்குதலில் ஈடுபட முடியும். அதேசமயம்அமெரிக்கா கஸ்பியன் பள்ளத்தாக்கில் இருந்தும்அதனூடாக காக்கசஸ் வரையுமானஎண்ணெய் போக்குவரத்து வழிகளில் ரஷ்யாகொண்டுள்ள கட்டுப்பாட்டைக் குறைக்கும்கொள்கையும் தொடர்ந்து கடைப்பிடிக்கின்றது. இந்த நிலைமைகளின் கீழ் ரஷ்யாவினுள் இருந்துகொண்டுள்ள பெரிதும் சோவினிச சக்திகளைதவிர்க்க முடியாத விதத்தில் பலப்படுத்துவதாகவும் விளங்கியது. எவ்வாறெனினும் அமெரிக்காவோஅல்லது ஐரோப்பாவோ ரஷ்யா செச்சினியாவில்கொண்டுள்ள நடவடிக்கைகளின் பேரில்அவை ரஷ்யாவுடன் கொண்டுள்ள பொருளாதார, அரசியல் உறவுகளை தியாகம் செய்துகொள்ளவிரும்புவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.அவர்கள் அக்கறை காட்டுவது செச்சினியன்மக்களின் தலைவிதியைப் பற்றியல்ல; தமதுநலன்களுக்குப் பெரிதும் சேவகம் செய்தஒரு ஆட்சியாளர்களுடனான உறவுகள்முழுமையாகத் தகர்ந்து போகும் ஆபத்தையிட்டே. மேற்கத்தைய அரசாங்கங்களின்உத்தியோகபூர்வமான பிரகடனங்கள்இடைக்கிடையே, ரஷ்யாவின் தரப்பிலானமிதமான போக்குக்கு அழைப்பு விடுவிப்பதோடுஅதன் சொந்தப் பிராந்தியத்தினுள் ''பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை'' அடக்குவதற்கானமாஸ்கோவின் உரிமையை அங்கீகரிக்கவும்செய்கின்றன. ஈராக்கிலும், பொஸ்னியாவிலும்கொசோவாவிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்சொந்த யுத்த நடவடிக்கைகளை ஆதரிக்கும்வாஷிங்டனின் மனித உரிமை பிரச்சாரத்தினால்ஏமாற்றப்பட்ட சகலருக்கும் இது ஒருநல்ல படிப்பினையாக விளங்கும். வரலாற்றுப் படிப்பினைகள். உலகசோசலிச வலைத் தளம் (WSWS) 20ம் நூற்றாண்டின் அடிப்படை அரசியல்படிப்பினைகளை அடியொற்றி- ரஷ்ய, செச்சினியன்,அனைத்துலக- தொழிலாளர் வர்க்கத்துக்குஒரு சுயாதீனமான முன்னோக்கினை முன்வைக்கின்றது. செச்சினிய யுத்தம் மாஜி ஸ்ராலினிச ஆட்சியாளர்கள் 1917 அக்டோபர் புரட்சியின் சமூக, ஜனநாயகஅபிலாசைகளை பல தசாப்த காலங்களாககாட்டிக் கொடுத்ததில் வேரூன்றிக் கொண்டுள்ளது. லெனின், ட்ரொட்ஸ்கி தலைமையில் வழிநடாத்தப்பட்ட போல்ஷிவிக் கட்சியின் அனைத்துலகவாதம்,சமத்துவ அடிப்படைக் கொள்கைகள்அப்பட்டமாக மீறப்பட்டதன் காரணமாகசெச்சினியன் மக்களின் தொடர்ச்சியானதேசிய, ஜனநாயக துயரங்களுக்கு ஸ்ராலினிசமேபொறுப்புச் சொல்லியாக வேண்டும். தொழிலாளர் வர்க்கம் விவசாயிகளில் பெரும்பான்மையினரதும் ரஷ்ய சாம்ராச்சியம் பூராவும்அடக்கி ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களதும்ஆதரவுடனேயே 1917ல் ஆட்சியைக் கைப்பற்றுவதுசாத்தியமானது. சோவியத் சோசலிசக்குடியரசு ஒன்றியம் (USSR) 1922ல் ஸ்தாபிதம்செய்யப்பட்டதோடு பல்வேறு தேசியசிறுபான்மை இனங்களைச் சேர்ந்த65 மில்லியன் மக்கள் உட்பட்ட 140 மில்லியன் மக்களைக்கொண்டிருந்தது. இந்த ஒடுக்கப்பட்டமக்கள் பகுதியினர் மீது தொழிலாளர் வர்க்கதலைமையை உறுதி செய்யும் பொருட்டுபோல்ஷிவிக்குகள் அனைத்து சோவியத்மக்களதும் சமத்துவம், இறைமையையும்,பிரிந்து சென்று சுயாதீனமான அரசுகளைஅமைப்பதையும், தேசிய- மத சிறப்புரிமைகளைஒழிப்பதையும், தேசிய சிறுபான்மையினரதும்தேசிய இனக்குழுக்களதும் சுயாதீனமானஅபிவிருத்தியையும் பிரகடனம் செய்தது.இந்த விதத்தில் அவர்கள் ஏகாதிபத்தியசக்திகளதும் தேசிய முதலாளி வர்க்கத்தின்வெள்ளையர் சக்திகளதும் அரசியல் செல்வாக்கை எதிர்கொள்ளும் அதேவேளை மாபெரும்ரஷ்ய சோவினிசம் தொடர்ந்து வருவதுதொடர்பான எந்தவொரு சந்தேகத்தையும் அவர்களிடமிருந்து போக்க முடிந்தது.சோவியத் மக்களின் ஒன்றிணைவை தெளிவானவிதத்தில் ஸ்தாபிதம் செய்வதன் மூலம் பழையஜார் பேரரசு ஒரு சிறியதும் பின்னடைவும்,மலட்டு தேசிய அலகுகளையும் கொண்டமேற்கத்தைய பெரும் வல்லரசுகளுக்குஅரசியல் ரீதியில் தொடர்ந்தும், கீழ்ப்படிவானதுமான ஒரு இரத்தப்புற்று நோயாக சிதறுண்டுபோவதைத் தடுக்கத் தன்னிச்சையாகஉதவியது. இக்கொள்கை உலகம் பூராவுமுள்ள ஒடுக்கப்படும் வெகுஜனங்களின் இயக்கத்துக்குஒரு பிரமாண்டமான உந்துதலை வழங்கியது.அக்டோபர் புரட்சி கேள்விக்குரிய பதிலைவழங்கியது; காலனித்துவ நாடுகளின் மக்கள்எந்த விதிமுறைகளுக்கு ஊடாகவும் எந்தவேலைத்திட்டத்தின் அடிப்படையிலும் ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலையை ஈட்டிக் கொள்வதும்பொருளாதார சமூக முன்னேற்றத்தைநோக்கிய தமது பாதையை ஊர்ஜிதம்செய்வது, தேசிய ஒடுக்குமுறையிலிருந்துதலையெடுப்பதற்கான நிஜ அடிப்படைஒரு சோசலிச பொருளாதாரத்தின்அபிவிருத்திக்கு அத்திவாரம் இடும் விதத்தில்தொழிலாளர் வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றுவதே என்பதை இந்த உதாரணத்தின் மூலம்நிரூபித்தது. ஸ்ராலினிசத்தின் மாபெரும் அட்டூழியம்,அத்தகைய ஒரு சோசலிசத் தீர்வில் உலகத்தொழிலாளர்களும், விவசாயிகளும் நம்பிக்கைவைப்பதை அவமானப்படுத்தி குழிபறித்ததேயாகும். போல்ஷிவிக்குகள் சோசலிச நிர்மாணப்பணி ஒரு உலகளாவிய ரீதியில் மட்டுமே பூர்த்திசெய்யப்பட முடியும் என்பதை புரிந்துகொண்டிருந்தனர். சோவியத் யூனியன்தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுஇருந்து வரும்வரை ரஷ்யாவின் பொருளாதாரப் பின்னடைவுகளின் முதுசங்களிலிருந்து தலையெடுக்கமுதல் நடவடிக்கை எடுப்பது மட்டுமேசாத்தியமாகியது. ஒரு நிஜமான சமூகசமத்துவமும், செழிப்பும் கொண்ட சமுதாயத்தை நிர்மாணிப்பதற்கு அவசியமான சட பொருளாதார அவசியங்களை புரட்சியை ஐரோப்பாவின்பெரிதும் முன்னேற்றம் அடைந்த நாடுகளுக்குவிஸ்தரிப்பதன் ஊடாகவும் இறுதியில் ஒரு உலகசோசலிச அமைப்பை ஸ்தாபிதம் செய்வதன்மூலமுமே அடைய முடியும். எவ்வாறெனினும்ஐரோப்பாவில் புரட்சிகரப் போராட்டங்கள்தோல்விகண்ட ஒரு நிலைமையின் கீழ் கட்சியினுள்இருந்த பரந்த தட்டினரும் அரச அதிகாரத்துவமும் இந்த முன்னோக்கு ''யதார்த்தமற்றது''எனக்கூறி நிராகரித்தனர். அவர்கள் தமதுசொந்த வசதி வாய்ப்புக்களை கட்டிக்காப்பதை தொழிலாளர் வர்க்கத்தின்வரலாற்று நலன்களுக்கு மேலாக தூக்கிப்பிடித்ததோடு ஸ்ராலினை தமது தலைவராகவும்''தனியொரு நாட்டில் சோசலிசத்தை''நிர்மாணிப்பதை தமது பிற்போக்கு கற்பனாவாதத்துக்கான கோட்பாட்டு நியாயப்படுத்தலாகவும் கண்டனர். லியோன் ட்ரொட்ஸ்கி போல்ஷிவிக்கட்சியினுள் ஸ்ராலினிசத்தின் தேசியவாத முன்னோக்கையும் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்ட ''மாபெரும்சக்திகளின் சண்டை'' மீண்டும் தலைதூக்குவதையும்எதிர்க்கும் பொருட்டு ''இடது எதிர்ப்புஇயக்கத்தை'' அமைத்தார். ஸ்ராலினின்தலைமையில் அதிகாரத்துவத்தின் வளர்ச்சிஅதன் மார்க்சிச எதிர்ப்பாளர்கள் பயங்கரம்,அடக்குமுறை, கொலைகள் மூலம் அதிகரித்தவிதத்தில் கையாண்டது. சோவியத் தொழிலாளர்களுக்கும், தேசிய சிறுபான்மையினருக்கும் எதிரானபயங்கரங்கள் உக்கிரம் கண்டன. ஸ்ராலினிசஅதிகாரத்துவம் இழைத்த படுபயங்கரமானஅட்டூழியங்களில் ஒன்று இரண்டாம் உலகயுத்தகாலத்தின் போது-1944ல்- சோவியத்மத்திய ஆசியாவிற்கு 400,000 செச்சினியர்களும்,இன்குஷ்டுக்களும் பெருமளவில் நாடுகடத்தப்பட்டனர். இதன் பெறுபேறாக நாடுகடத்தப்பட்டவர்களில் 30 சதவீதத்தினர் இறந்துபோனதாகமதிப்பிடப்பட்டது. பிரிவினைவாதத்தின்முட்டுச்சுவர். யுத்தத்தை எதிர்ப்பதுஎன்பது செச்சினியாவில் உள்ள பிரிவினைவாதக்குழுக்களதும், தேசியவாதத் தலைவர்களதும்முன்னோக்குகளையோ அல்லது விதிமுறைகளையோ ஆதரிக்க முடியாது. கிரேம்ளின் அடக்குமுறைக்கான ஒரே பதிலீடு ஒரு சுதந்திரமான செச்சினியன்அரசே என்ற வாதம் பொய்யானது.அத்தகைய ஒரு முன்னோக்கு காக்கசசின்முற்போக்கான பொருளாதார அபிவிருத்திக்கோ அல்லது அதன் பரந்த மக்களது சமூக,ஜனநாயக தேவைகளை நிறைவு செய்வதற்கோ தாக்கிப் பிடிக்கக்கூடிய ஒரு அடிப்படையையோ கொண்டிருக்க முடியாது. இது செச்சினியர்களோ அல்லது ரஷ்ய வெகுஜனங்களோ பழையஸ்ராலினிச ஆட்சியாளர்களின் கீழ் இருந்து வந்தநிலைமைகளுக்குத் திரும்பிச் செல்வது பற்றியஒரு பிரச்சினையல்ல. சோவியத்யூனியனின்அனைத்து மக்களும் ஸ்ராலினாலும் அவரதுவாரிசுகளாலும் ஏற்படுத்தப்பட்ட அதிகாரத்துவ பொலீஸ் அரசின் கீழ் பல தசாப்த காலங்களாகதமது ஜனநாயக, சமூக உரிமைகள் நசுக்கப்பட்டு வருந்தினர். இருப்பினும் லெனின் போல்ஷிவிக்கட்சியின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டசோவியத்யூனியன் ஈரோ ஏசியன் (ஐரோப்பியஆசிய) நிலப்பரப்பின் மக்களின் அரசியல், பொருளாதார, கலாச்சார கூட்டு அபிவிருத்தியில் ஒருபிரமாண்டமான ஒருபடி முன்னேற்றத்தைபிரதிநிதித்துவம் செய்தது. அந்த நிலைப்பாட்டிலிருந்து காக்கசசிலும், வேறு இடங்களிலும் இன்றுபல்வேறு பிரிவினைவாத இயக்கங்களின் தோற்றம்சோவியத்யூனியனைக் கலைத்ததன் மூலம்உச்சக்கட்டத்தை அடைந்த சமூக எதிர்ப்புரட்சிக்கு எதிரானது அல்ல. ஆனால் அதன் ஒருபாகமாகும். செச்சினியாவிலுள்ள இஸ்லாமியபிரிவினைவாத சக்திகள் ரஷ்யாவுக்கு எதிரானவரலாற்று, சமகால குறைபாடுகளைசுரண்டிக்கொள்ள முடிந்தது. ஆனால்அவர்களின் விதிமுறைகளும், நோக்கும் முன்னோக்குகளும் அடிப்படையில் ஜெல்ட்சின், புட்டினில்இருந்து வேறுபடவில்லை. சோவியத்யூனியன்கலைக்கப்பட்டதில் இருந்து காக்கசஸ்தேசிய தகராறுகளினால் சின்னாபின்னமாகிப்போய்விட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரிட்டது.இந்த மோதுதல்கள் பெரஸ்ரொயிகாவுக்குப்பின்னைய செச்சினியன் சுதந்திர இயக்கத்தின்முதல் தலைவரான ஜொக்கர் டுடேவ்போன்ற கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள்அதிகாரிகளினால் பெருமளவுக்கு ஊக்குவிக்கப்பட்டது. இவை தேசிய விடுதலையின் ஒழுங்குமுறையான இயக்கங்கள் அல்ல. இவைக்கும்ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்துக்கும்எதுவிதமான தொடர்பும் கிடையாது.அல்லது அவை எந்தவிதத்திலும் ஒடுக்கப்படும்வெகுஜனங்களின் ஜனநாயக அபிலாசைகளைஉள்ளடக்கிக் கொண்டதும் கிடையாது.இதற்குமாறாக அவை தேசிய முதலாளிகளின்சமூக நலன்களைக் கொண்ட பல்வேறுகும்பல்களின் அபிலாசைகளை வெளிக்காட்டிக்கொண்டுள்ளன. ஒரே சீரான இனக்குழுபிராந்தியங்களாக கூறுபோடுவதன்மூலமும் தொழிலாளர் வர்க்கத்தைஇனக்குழு- இனவாத அடிப்படையில் பிளவுபடுத்துவதன் மூலமும் இவர்கள் உலக முதலாளித்துவத்துடன் தமது சொந்த நேரடி உறவுகளைஸ்தாபிதம் செய்ய முயற்சிக்கின்றனர். இந்த சமூகத் தட்டினரைப் பொறுத்தமட்டில்தேசிய சுதந்திரம் என்பது எண்ணெய் வினியோகம்,எண்ணெய் சுத்திகரிப்பு இவற்றுடன் சேர்ந்துபோதைப்பொருள் வர்த்தகம் , ஆயுத,தளபாட விற்பனை, விபச்சாரம் போன்றவைமூலம் இலாபத்தைக் கறந்து கொள்வதற்கான ஒரு சாதனமாகவே நோக்கப்படுகின்றது.ரஷ்யாவுக்கு எதிரான ஆயுதப் போராட்டம்,இவை தம்மைக் கணிசமான அளவு எண்ணெய்படிவங்களுக்கு நெருக்கமானவர்களாகவும்வாஷிங்டனுடனும், பேர்லினுடனும், லண்டனுடனும் ஒரு லாபகரமான வாடிக்கையாளர்உறவை ஏற்படுத்திக்கொள்ளும் விதிமுறையாகவும் உள்ளது. டிசம்பர் 27ம் திகதி வோல்ஸ்ரீட் ஜேர்ணலில் வெளியான காக்கசஸ்சந்தையின் (CCM) தலைவர் கோஸ்-அகமத்- நெளக்காவின் கட்டுரையில் இதுவெளிப்பாடாகி இருந்தது. நெளக்காவ்செச்சினியன் பிரிவினைவாத வட்டாரங்களின்ஒரு முன்னணி பிரமுகராவார். அவர் தனதுதொழிலை ஒரு கடைகெட்ட செச்சினியன்மாபியாவாக (Mafia) மாஸ்கோவில்ஆரம்பித்தார். அவர் தனது மோசடி,பண சம்பாத்தியம் போன்ற கொலைகாரநடவடிக்கைகளை ''சுதந்திரத்துக்கானஒரு தொடர்ச்சியான போராட்டம்''என வருணித்துக் கொண்டார். வோல்ஸ்ரீட் ஜேர்ணலுக்கு எழுதிய கட்டுரையில்நெளக்காவ் ''முடிவில்லாத கெரில்லாயுத்தத்தில்'' ஈடுபடும் பிரிவினைவாதிகளின் பலத்தைப்பற்றி ஜம்பம் அடிப்பதோடு ''செச்சினியாயுத்தத்தணல் ஜோர்ஜியா, அஜர்பைஜான்,கஸ்பியன் எண்ணெய் வயல்களுக்கு பரவுவதற்குமுன்னர்'' முடிந்த மட்டும் கூடிய விரைவில்காக்கசஸ் வரையில் சமாதானத்தைபுணருத்தாரணம் செய்யும் முக்கியமானமூலோபாய, பொருளாதார நலன்களைஐரோப்பாவும், அமெரிக்காவும் கொண்டுள்ளன என எச்சரிக்கையும் செய்கின்றார். மேற்கத்தைய நலன்களுக்கு அத்தகையஒரு நேரடி வேண்டுகோளை விடுப்பதுஎந்தவிதத்திலும், முற்றிலும் ஒரு செச்சியன்தோற்றப்பாடு அல்ல. இவற்றின் பிரதிபலிப்புக்களை உலகம் பூராவுமுள்ள இத்தகைய தேசியவாதஇயக்கங்களில் கண்டுகொள்ள முடியும்.20ம் நூற்றாண்டின் முதற்பாகத்தில் ஒடுக்கப்படும் நாடுகளில் உள்ள தேசியவிடுதலைப் போராட்டங்களின் முதலாளித்துவத் தலைவர்கள் ஏகாதிபத்தியஆதிக்கத்தை தூக்கி வீசிவிட்டு, தமது சொந்ததேசிய சந்தையை தமது கட்டுப்பாட்டுக்குள்கொணர முயன்றனர். எவ்வாறெனினும்இன்று முதலாளித்துவ உற்பத்தியின் பூகோளரீதியான இணைப்பானது இனக்குழு அல்லதுஇனவாத அடிப்படையிலான புதிய வகையிலானதேசிய பிரிவினைவாத இயக்கங்களின் அபிவிருத்திக்குஇட்டுச் சென்றுள்ளது. ஏகாதிபத்திய கட்டுப்பாட்டுக்கு முடிவுகட்டி தேசிய சந்தைகளைஅபிவிருத்தி செய்வதற்கு மாறாக இந்தஇயக்கங்கள் இன்றுள்ள அரசுகளைத்துண்டாடவும், ஏகாதிபத்திய வல்லரசுகளுடனும்,ட்ரான்ஸ்நஷனல் கூட்டுத்தாபனங்களுடனும்நேரடி உறவுகளை ஸ்தாபிதம் செய்துகொள்ளவும் முயற்சிக்கின்றன. ஒவ்வொரு விடயத்திலும்முதலீடுகளை உள்ளே ஈர்க்கும் பொருட்டானஇந்த உந்துதல்கள் சம்பள வெட்டுக்கள்மூலமும் சுரண்டல் மட்டத்தை ஒழுங்குமுறையாக அதிகரிக்கச் செய்வதன் மூலமும் சுகாதாரம்,ஓய்வூதியம் போன்ற முக்கிய சமூக சேவைகளைசிதறடிப்பதன் மூலமும் வெளிப்பாடாகிஉள்ளன. இவை கம்பனிகளின் இலாபங்களைகாலி செய்யும் ஒரு மன்னிக்க முடியாதநடவடிக்கையாகக் கணிக்கப்படுகின்றது. செச்சினியாவிலும் நிலைமைகள் இதிலிருந்துவேறுபட்டது அல்ல. ஆளும் கும்பல் எண்ணெய்வருமானங்கள் மூலமும் கொழுத்துப்பருக்கலாம். ஆனால் பெருமளவிலானநாட்டுப்புற மக்கள் வறுமைக்கும்,சுகாதார சீர்கேட்டுக்கும் பலியாகத்தள்ளப்பட்டுள்ளனர். ஒரு சோசலிசபதில் செச்சினியன் யத்தத்தையும்ரஷ்யா பூராவுமுள்ள தொழிலாளர் வர்க்கத்தின்சமூக, ஜனநாயக உரிமைகள் மீதான முன்னொருபோதும் இல்லாத அளவிலான பெரும்தாக்குதல்களையும் எதிர்ப்பதற்கானஒரே முற்போக்கு பாதை, கிரேம்ளினின்ஊழல் நிறைந்த ஆட்சியாளர்களதும், அத்தோடுஏகாதிபத்திய வல்லரசுகளதும் முதலாளித்துவபுணருத்தாரணத்தின் பலிகடாக்கள் ஆகியுள்ளகோடானுகோடி மக்களை ஒன்றுபடுத்தப்போராடுவதே ஆகும். 20ம் நூற்றாண்டின்உதயத்தோடு கோடானுகோடி தொழிலாளர்கள் சோசலிச முன்னோக்கினாலும் தொழிலாளர் வர்க்கத்தை அனைத்துலக ரீதியில் ஒன்றுபடுத்தும்போராட்டத்தினாலும் ஊக்குவிக்கப்பட்டனர்.அப்படியானால் இன்று விமர்சனப் பார்வைகொண்ட தொழிலாளர்கள் அத்தகையதொருமுன்னோக்கு 21ம் நூற்றாண்டுக்கு பொருந்திவராது என்ற மனத்தளர்ச்சியும் சிடுமூஞ்சித்தனமும் மூடத்தனமானதுமான வாதத்தை ஏன்ஏற்றுக்கொள்ள வேண்டும்? கடந்தநூற்றாண்டின் தொடக்கத்திலேயே முதலாளித்துவ தேசியவாத இயக்கத்தின் வரையறைகள்(குறைபாடுகள்) அந்தச் சகாப்தத்தின்மிகவும் முன்னேற்றமான சிந்தனையாளர்களுக்கு- லெனின், றோசா லக்சம்பேர்க், ட்ரொட்ஸ்கிபோன்றவர்களுக்கு ஏற்கனவே தெட்டத்தெளிவாகியது. இத்தகைய ஒரு தோற்றப்பாட்டை ஒப்பீட்டுக்கு அப்பாற்பட்ட வடிவத்துக்குதரமிறக்கி இனக்குழு அடையாளத்தைதேசியத்தை நிர்மானிப்பதற்கான அடிப்படையாக வாதிட்டு- ஏன் புத்துயிர் பெறச் செய்யவேண்டும்? அத்தோடு பொருளாதாரவாழ்வின் பூகோளமயமாக்கம் அந்தக்காலத்திலிருந்த எதற்கும் அப்பால் சென்றுள்ளநிலையில் இன்று தொழிலாளர் வர்க்கம்அதை ஏன் கட்டியணைக்க வேண்டும்? புட்டின் ஆட்சியாளர்களின் மாபெரும்ரஷ்ய சோவினிசத்தை எதிர்கொள்வதற்குமுன்னைய சோவியத்யூனியனின் மக்கள் சோவியத்யூனியனின் ஆரம்பத்தில் ஸ்தாபிதம் செய்யப்பட்டசோசலிச அனைத்துலகவாதத்துக்கானபொறுப்பை புத்துயிர் பெறச்செய்யவேண்டும். 1920களின் தொடக்க காலத்தில்ரஷ்யன், காக்கசியன் மக்களை சுயவிருப்பின்மூலம் ஒன்றிணைத்தமை, தொழிலாளர்வர்க்கத்தின் அடிப்படை அவசியங்களைநிறைவு செய்யும் விதத்தில் பொருளாதாரமறுசீரமைப்புச் செய்வதன் மூலமேசாத்தியமாகியது. அதைத் தொடர்ந்துவந்தசோவியத்யூனியனின் ஸ்ராலினிச சீரழிவுகள் என்னவாகஇருந்தபோதிலும் சமூக முன்னேற்றத்துக்கும்,ஜனநாயகத்துக்குமான ஒரே பாதையாகஇது இருந்து கொண்டுள்ளது. இந்த இலக்கைஅடைய ரஷ்யாவிலும், செச்சினியாவிலும் உள்ளதொழிலாளர் வர்க்கம் ஏகாதிபத்தியஆக்கிரமிப்புக்கும் முதலாளித்துவ சுரண்டலுக்கும்எதிரான போராட்டத்தில் ஐரோப்பாவிலும்,அமெரிக்காவிலும் உள்ள தமது சகதொழிலாளர்பக்கம் திரும்ப வேண்டும். ரஷ்யாவிலும்உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்கள்முகம் கொடுக்கும் மைய அரசியல் பணிஉலக சோசலிசப் போராட்டத்தில்ஈடுபடுவதற்கான ஒரு புதிய மார்க்சிசத்தலைமையை அபிவிருத்தி செய்வதேயாகும்.உலக சோசலிச வலைத் தளம் நான்காம்அகிலத்தின் 'இணைய' மையமாகும். நான்காம்அகிலம் ஸ்ராலினிச காட்டிக்கொடுப்புக்களுக்குஎதிராக சோசலிச அனைத்துலக வாதத்தைப்பேணுவதற்காக லியோன் ட்ரொட்ஸ்கியினால்ஸ்தாபிதம் செய்யப்பட்டது. பெரிதும் அரசியல்ரீதியில் முன்னேற்றம் கண்ட தொழிலாளர்களும்புத்திஜீவிகளும் ஒண்றிணைந்து உலக சோசலிசப்புரட்சிக் கட்சியை கட்டியெழுப்புவதற்கானஆய்வுப்பீடம் இதுவே.
Copyright 1998-2000 World Socialist Web Site All rights reserved |