World Socialist Web Site www.wsws.org
WSWS:
செய்திகள்
& ஆய்வுகள்
Child
labour on the increase in Bangladesh
பங்களாதேஷ்: சிறுவர் உழைப்பாளிகளின்எண்ணிக்கை
அதிகரிப்பு
By Nishanthi Priyangika
3 November 1999
Back
to screen version
கடந்த செப்டம்பர் மாதம் யூனிசெப்நிறுவனம் வெளியிட்ட
ஒரு அறிக்கையின்படி,14 வயதுக்கு குறைவான சிறுவர் உழைப்பாளிகள்6.3
மில்லியன் பேர் பங்களாதேஷில் உள்ளனர்.இந்தச் சிறார்கள் வீட்டுப்
பணியாளர்களாகவும்,ஆடைத் தொழிற்சாலைகள், பொறியியல்வேலைத்
தளங்கள், கட்டுமான வேலைகள்,பஸ் அல்லது முச்சக்கர வண்டி
உதவியாளர்கள்,பீடித் தொழிற்சாலைகள், வீதிகளின் இருபுறங்களிலும்உள்ள
சிற்றுண்டிக் கடைகள், நடைபாதைவியாபாரம், தேயிலைத்
தொழிற்சாலைகள்,விவசாய நிலங்கள் போன்ற பல துறைகளிலும்தொழிலில்
ஈடுபட்டுள்ளனர்.
'ஆசியாவில்சிறுவர் உழைப்பு' எனும் அறிக்கைக்கு
இணங்க,பங்களாதேஷின் 40 வீதத்துக்கும் அதிகமானஉற்பத்தித் துறைகளிலும்
பாதுகாப்பற்ற,அபாயகரமான தொழில்களிலும் இச்சிறுவர்கள்
ஈடுபட்டுள்ளார்கள். சுரங்கம்தோண்டுதல் கடற் தொழில்
இயந்திரங்களைஇயக்குதல், மற்றும் சுத்தப்படுத்தல்போன்றவை
அபாயகரமான தொழில்களாகஇருப்பதோடு, அவ்வாறான ஈடுபாட்டின்போது
அவர்கள் பல விதமான அச்சுறுத்தல்களுக்கும் அபாயங்களுக்கும்
முகம் கொடுக்கத்தள்ளப்படுகின்றனர். விஷம் கலந்த தூசி,விச
வாயு, நச்சுப் புகை, அதிக வெப்பம்,இரைச்சல் போன்ற
நெருக்கடிகள்உட்படஎலும்பு மற்றும் சுவாசத் தொகுதிகளோடு
தொடர்புபட்ட நோய்களுக்கும்இந்த சிறுவர்கள் முகம்
கொடுத்துள்ளதாகஅறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.
கொழும்புப்பல்கலைக்கழக பேராசிரியர் ஏ.ஜே.வீரமுண்டநடாத்திய
ஆய்வின்படி பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் மாத்திரம்
300 தோல் பதனிடும்நிலையங்களில் இளம் ஆண் சிறுவர்கள் தொழில்செய்து
வருவதாக அறியப்பட்டுள்ளது.
இந்த விபரங்களுக்கு மேலதிகமாக, சிறுவர்பாலியல்
துஷ்பிரயோகமும் அதிகமாக பரவியுள்ளது. 1996ல் தென் ஆசியாவில்
பெண்கள், சிறார்கள்பற்றிய அறிக்கை கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகின்றது:நேபாளத்திலிருந்து
வருடத்திற்கு 4500 சிறுமிகள்இந்தியாவிற்கு கடத்திச் செல்லப்படுவதோடு,அதே
அளவிலான சிறுமிகள் பங்களாதேஷில்இருந்து பாகிஸ்தானுக்கு கொண்டு
செல்லப்படுகின்றனர். 1994 யூனிசெப் அறிக்கையும் இதற்குசமமான
விபரங்களை காட்டுவதோடு,1994ல் மாத்திரம் 4,800 சிறுமிகள் பாகிஸ்தானுக்கும்இந்தியாவிற்கும்
கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்தச்
சிறுவர்களைஆபாச திரைப்படங்கள் எடுக்க பயன்படுத்துவதோடு
பொருட்களை அங்கும் இங்கும்தூக்கிச் செல்லவும் பயன்படுத்துகிறார்கள்.
'1997 -ஆசியாவில் சிறுவர் உழைப்பாளிகள்' எனும்தலைப்பில
வெளியிடப்பட்டுள்ள அறிக்கைவீட்டுப் பணியாளர்களாக வேலை செய்யும்சிறார்களின்
சுபாவம், நிலைமை தொடர்பாகநடாத்தப்பட்ட ஆய்வுகளின் குறிப்புகள்பின்வருமாறு
குறிப்பிடுகிறது: "பெரும்பாலானசிறார்கள் வீட்டுப் பணியாளர்களாக
வேலைசெய்வது சம்பளம் வாங்காமல் அல்லதுகுறைந்த சம்பளத்துக்கேயாகும்.
எதிர்காலத்தில் நல்ல தொழிலில் சேர்ப்பதாக கூறும்எஜமானர்களின்
வாக்குறுதிகளுக்கு இணங்கவேகுறைந்த சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது.அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளதுபோல் வழங்கப்படும் குறைந்த சம்பளமானது,
அந்த சிறார்கள்வீட்டுக்குச் செல்லும் போதோ அல்லதுஅவர்களைப்
பார்க்க உறவினர்கள்யாரும் வந்தால் அவர்களின் கைகளில்கொடுக்கப்படுகிறது.
பெரும்பான்மையானசிறுவர்கள் வீட்டுப் பணியாளர்களுக்கானசம்பளமாக
(அமெரிக்க) டாலர் 2,50க்குசமமான குறைந்த சம்பளமே பெறுகின்றனர்.ஆய்வுகளின்
போது சந்திக்கக் கிடைத்தபெரும்பான்மையான சிறுவர் உழைப்பாளிகள்11
வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர். அவர்களில்
பெரும்பாலானவர்களுக்கு(பால் வேறுபாடுகளின்றி)
எழுதவோவாசிக்கவோ தெரியாது. அவர்கள் பாடசாலை செல்லாதவர்கள்
என்பதே இதன் அர்த்தமாகும்.குறைந்த பட்சம் வீடுகளில் கூட
அவர்கள்படித்திருக்கவில்லை. வீட்டுப் பணியாளர்களாகசேவை செய்துவரும்
சிறுமிகளின் குடும்பத்தில்உள்ளவர்களும் வாசிக்கவோ எழுதவோதெரியாதவர்களேயாகும்."
இந்தசிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைவாய்த்
திட்டல் தொடக்கம் உடல் ரீதியானதுன்புறுத்தல் வரை வளர்ச்சி
கண்டுள்ளது.பல பெயர்களில் ஏசுதல், குற்றம் சுமத்திதண்டனை
வழங்குதல், பிழை கண்டுபிடித்துநாகரீகமற்ற வார்த்தைகளில்
ஏசுதல்,அடித்தல், உள்ளங்கையில் அடித்தல், மற்றும்சூடாக்கிய
கரண்டிகளாலும், கட்டைகளாலும்சுடுதல் போன்ற நடவடிக்கைகள்
மிகவும்சாதாரணமான அடக்குமுறைகளாகஉள்ளன.
ஏழ்மை நிலை மற்றும் தமக்குஅவசியமானவற்றை
பெற்றுக்கொள்ளமுடியாத பட்சத்தில் சிறுவர்கள் உழைப்பாளிகள்ஆக்கப்படுகிறார்கள்.
பங்களாதேஷ்தனிநபர் வருமானம் 240 டாலர்களாகும்.126 மில்லியனாக
உள்ள முழு சனத்தொகையில்18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் 51 மில்லியனாகும்.பாடசாலை
செல்ல வேண்டிய சிறார்களில்நூற்றுக்கு 38 வீதத்துக்கும் அதிகமானோர்பாடசாலை
செல்வதில்லை. பெண்களில் நூற்றுக்கு74 வீதமானவர்கள் கல்வியறிவற்றவர்களாவர்.1997
மனித அபிவிருத்தி அறிக்கை குறிப்பிட்டுள்ளநிலைமைகளுக்கு இணங்க
ஆயிரத்தில் 537 சிசுக்கள்ஒரு வயதாகும் முன்னரே இறந்து
போகின்றன.
உலகம் முழுவதிலும் உள்ள சிறுவர்களின்
நிலைமைதொடர்பாக யுனிசெப் வெளியிட்டுள்ளஅறிக்கையில், பங்களாதேஷில்
5 வயதுக்குகுறைந்தபிள்ளைகளில் அரைவாசியினர் வலிப்பு நோயால்பாதிக்கப்பட்டுள்ளதோடு,
மேலும்ஆயிரக்கணக்கான பிள்ளைகள், உடல் ரீதியானதும்,உளவியல்
ரீதியானதுமான நோய்களுக்குமுகம் கொடுத்துள்ளனர்.
செப்டம்பர்26ம் திகதி பத்திரிகை மாநாட்டில் பேசியஅந்நாட்டின்
தொழிலாளர், மனித வளஅமைச்சர் "2005ம் ஆண்டளவில்
அரசாங்கம்நாட்டில் உள்ள சிறுவர் உழைப்பாளிகளைஒழிக்க திட்டமிட்டுள்ளதாக
குறிப்பிட்டார்.இதற்கு முன்னர் அதாவது 1995ல் பங்களாதேஷ்ஆடை
உற்பத்தி, ஏற்றுமதியாளர் சங்கமும்,சர்வதேச தொழிலாளர்
அமைப்பும் (ILO) மற்றும்
யுனிசெப் நிறுவனத்துடன்இணைந்து "ஆடைத் தொழிற்சாலைகளில்சேவையாற்றும்
சிறுவர் உழைப்பாளிகளைநீக்க" ஒரு ஒப்பந்தத்தில்கைச்சாத்திட்டுள்ளன.
ஆனாலும் புள்ளி விபரங்கள் அதற்கு எதிரானநிலைமைகளையே
காட்டுகின்றது. பங்களாதேஷில் சிறுவர் உழைப்பாளிகள் குறைவதற்குபதிலாக
அதிகரித்துள்ளது. பங்களாதேஷில்உழைப்பு வளம் தொடர்பான ஆய்வுகளின்படி,1998ல்
அந்நாட்டில் 5 வயதுக்கும் 14 வயதுக்கும்இடைப்பட்ட சிறுவர்கள்
6.1 மில்லியன் பேர்பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வெளியாகியுள்ள புதிய யுனிசெப் அறிக்கைசுட்டிக்காட்டுவதன்படி,
இந்தத் தொகை6.3 மில்லியன் வரை அதிகரித்துள்ளது. அந்தவயதுக்குட்பட்ட
சிறுவர்கள் சனத் தொகையில்30 வீதமாகும்.
ஆசியாவில் சிறுவர் உழைப்பாளிகள்தொடர்பாக சர்வதேச
தொழிலாளர்அமைப்பு மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி,
உலகம் முழுவதிலும் 5 வயதுக்கும் 14 வயதுக்கும்இடைப்பட்ட
120 மில்லியன் சிறுவர்கள் முழுநேரஉழைப்பாளிகளாவர். ஏனைய
சிறுவர்உழைப்பாளிகளையும் இதனுடன் சேர்க்கும்போது இந்த
தொகை 250 மில்லியனாகும்.உலகில் உள்ள சிறுவர் உழைப்பாளிகளில்நூற்றுக்கு
60 வீதமானவர்கள் ஆசியாவிலேயேவாழ்கின்றனர்.
வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS
)
உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல்
அனுப்பவும்.
Copyright
1998-2000
World Socialist Web Site
All rights reserved
|