World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்

 

As LTTE issues ultimatum to surrender

US and EU push India to intervene in Sri Lanka

தமிழீழ விடுதலைப் புலிகள் அரச படைகளைசரணடையும்படி காலக்கெடு விதிக்கையில்

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையில் தலையிடும்படி இந்தியாவுக்கு நெருக்குவாரம்.

By Dianne Sturgess
26 May 2000

Back to screen version

இலங்கை அரசாங்கப் படைகளுக்கும்பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்இடையே கடும் சண்டை தொடர்ந்துகொண்டுள்ள ஒரு நிலையில் ஒரு யுத்த நிறுத்தத்தைஏற்படுத்தி, இரு தரப்பையும் பேச்சுவார்த்தைக்கு இட்டுச் செல்வதற்கான கலந்துரையாடல்கள் புதுடில்லியிலும் கொழும்பிலும் உக்கிரம்கண்டுள்ளன. அமெரிக்காவும் ஐரோப்பியஒன்றியமும் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்தலைமையிலான இந்திய அரசாங்கத்தை,நெருக்கடியில் நேரடியாகத் தலையிடும்படிநெருக்கி வருகின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு தொடர்ச்சியானவெற்றிகளைத் தொடர்ந்தே இது ஏற்பட்டுள்ளது.

திங்கட்கிழமை நோர்வே பிரதி வெளிநாட்டுஅமைச்சர் றேமண்ட் ஜோன்சன், சிறப்புபிரதிநிதி எறிக் சொல் ஹெயிம் ஆகியோரைஉள்ளடக்கிய ஒரு நோர்வே தூதுக்குழுஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடனும்இலங்கை வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன்கதிர்காமருடனும் எதிர்க்கட்சித் தலைவர்ரணில் விக்கிரமசிங்காவுடனும் இரண்டு நாள்அந்தரங்க பேச்சுவார்த்தைகள் நடாத்தியது.இவர்கள் கொழும்புக்கு வருகை தருவதற்குமுன்னர் சொல்ஹெயிம் வாஷிங்டனுக்குவிஜயம் செய்ததோடு லண்டனில் உள்ளதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களுடன்பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும்நம்பப்படுகின்றது.

பெரும் ஐரோப்பியவல்லரசுகளுக்கு ஆதரவு வழங்கும் நோர்வே,நீண்டுவரும் உள்நாட்டு யுத்தத்துக்குஒரு பேச்சுவார்த்தை மூலமான தீர்வைக்காணும் இராஜதந்திர நடவடிக்கைகளைபெப்பிரவரியில் ஆரம்பித்து வைத்தது. இதுஆட்டங்கண்டு போன போதிலும் இந்தமோதுதல் இலங்கையில் மட்டுமன்றி இந்தியத்துணைக் கண்டம் பூராவும் ஏற்படுத்தும்தாக்கங்களையிட்டு ஐரோப்பிய தலைநகரங்களில் பெரும் பீதி நிலவுவதால் இப்போதுஇப்பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. மே 15ம் திகதி ஐரோப்பிய ஒன்றியம்வெளியிட்ட ஒரு அறிக்கையில் இரு தரப்பினரையும்"குரோதங்களை களையும்படியும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும்படியும்" வேண்டியது.சிறப்பாக நோர்வே அரசாங்கத்தின்முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படிதூண்டியது.

சொல்ஹெயிம் கொழும்புபேச்சுவார்த்தைகளின் பின்னர் புதன்கிழமை,இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைநடாத்த புதிடில்லி பயணமானார். இருப்பினும்இந்தப் பேச்சுவார்த்தைகளையிட்டுஎதுவித விபரமும் வெளியிடப்படவில்லை. ஆனால்இன்றைய நிலைமையில் இந்தியா தலையிடவேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்சொல்ஹெயிம் கூறியதாவது: "இந்திய அரசாங்கம்எப்படி எப்போது செயல்பட வேண்டும்என்பது' பற்றி நான் இந்திய அரசாங்கத்துக்குஎப்போதும் ஆலோசனை கூறப்போவதில்லை"எனத் தெரிவித்தார். ஆனால் அவர் மேலும்கூறுகையில் சுட்டிக்காட்டியதாவது:"இந்தியாவின் முக்கியத்துவம் பிரமாண்டமானதுஎன்பதை நான் பெரிதும் ஒப்புக்கொள்கின்றேன்".

அதே நாளன்று அமெரிக்க அரசியல்விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச்செயலாளர் தோமஸ் பிக்கரிங்கும் இந்தியாவில்இருந்து கொண்டிருந்தார். இலங்கையில்இந்தியா முன்னணிப் பாத்திரம் வகிப்பதன்முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.இந்திய வெளிநாட்டு செயலாளர் லிலித்மன்சிங்குடனும் பாதுகாப்பு அமைச்சர்ஜோர்ஜ் பெர்னான்டஸ் உடனும் பேச்சுவார்த்தைகள் நடாத்தியதைத் தொடர்ந்துபிக்கரிங்கும் இந்தியத் தரப்பினரும், இன்றுள்ளஸ்ரீலங்கா அரச கட்டுமானத்தினுள் பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வு காணப்பட வேண்டும்என வலியுறுத்தினார். தமிழீழ விடுதலைப் புலிகளின்முக்கிய இலக்கான ஒரு சுதந்திர தமிழ்அரசை அமைப்பதற்கு எதுவித உதவியும்வழங்குவதை இந்தியாவும் அமெரிக்காவும்நிராகரித்தன. அடுத்த திங்கட் கிழமை அரசியல்தலைவர்களுடன் பேச்சுவார்த்தைநடாத்தும் பொருட்டு பிக்கரிங் கொழும்புக்குவருகை தர உள்ளார்.

இலங்கை நெருக்கடிதொடர்பாக அமெரிக்கா கொண்டுள்ளஅக்கறையை வெளிக்காட்டும் வகையில்பாரசீக வளைகுடாவில் இருந்த அமெரிக்ககடற்படை அதிரடிப்படையின் ஒரு பகுதியினர்தெற்கு அராபியக் கடலுக்கு, அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இன்றைய இந்து பத்திரிகையின்படி:"ஆய்வாளர்களின்படி இந்த யுத்தக் கப்பல்களின்நகர்வானது அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர்திரு. தோமஸ் பிக்கரிங்கின் விஜயத்துடன் இணைந்துகொண்டுள்ளது. இலங்கையில் வளர்ச்சிகண்டுவரும் நிலைமைகளை நெருக்கமாகநோட்டமிடுவதில் அமெரிக்கா ஆர்வம்காட்டுகின்றது. இங்குள்ள வட்டாரங்களின்தகவல்களின்படி தனது கப்பல்களைநெருக்கமாக நகர்த்துவது, அமெரிக்காபிராந்தியத்தில் இந்தியாவின் மேலாதிக்கத்தைசவால் செய்வதாக அமையாது. மாறாக,புதன்கிழமை பிக்கரிங் சுட்டிக் காட்டியதுபோல் அமெரிக்காவும் இந்தியாவும்நோர்வேயும் இலங்கையின் இனப்பிரச்சினையைஒரு பிராந்திய கட்டுமானத்தினுள் தீர்த்துவைப்பதில் ஒரு முன்னணிப் பாத்திரம் வகிப்பதையேவிரும்புகிறது".

தமிழீழ விடுதலைப் புலிகள்யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்துகொண்டுள்ள சுமார் 40,000 இலங்கைப் படைகள்இன்று சரணடைய வேண்டும் அல்லதுஒரு "இரத்தக் களரிக்கு" முகம் கொடுக்கவேண்டும் என்ற காலக் கெடுவை விதித்ததோடுஇராஜதந்திர நடவடிக்கைகள் ஆவேசம்கண்டுள்ளன. 'புலிகளின் குரல்' (Voice of Tigers) வானொலி விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணநகரில் இறுதி தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறியது. இதையிட்டு இலங்கை அரசாங்கம்எந்தவிதமான உத்தியோக பூர்வமானபிரதிபலிப்புக்களைக் காட்டிக் கொள்ளாதபோதிலும் யாழ்ப்பாணத்தை பிடியில் வைத்திருக்க'கடைசி மனிதன் இருக்கும் வரை' இராணுவம்போராடும் என குமாரதுங்கவும் அவரின்அமைச்சர்களும் தெரிவித்ததாக பகிரங்கஅறிக்கைகள் குறிப்பிட்டன.

பொதுஜனமுன்னணி அரசாங்கம் அதனது புதிய அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் கடும் தணிக்கையை அமுல்படுத்திஉள்ளதாலும் எந்தவொரு பத்திரிகையாளரும்யுத்தப் பிராந்தியத்துக்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாலும் யுத்த நிலைமையைமதிப்பீடு செய்வது சங்கடமாகியுள்ளது.ஆனால் அரசாங்க, விடுதலைப் புலிகள்வட்டாரங்களின் தகவல்களின்படி யாழ்ப்பாணநகருக்கு கிழக்கே பல இடங்களில் -சாவகச்சேரி, செம்மணி உட்பட- கடந்த ஒரு சில தினங்களில்கடும் மோதுதல்கள் இடம்பெற்றுள்ளதுதெளிவாகியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளுக்குஇராணுவத்தின் விரகி முக்கியத்துவம் வாய்ந்தபலாலி விமானத்தளத்தில் இருந்து ஒரு சிலகிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ளஅச்சுவேலியில் இடம்பெற்ற "சுற்றிவளைத்துதேடும்" நடவடிக்கையில் ஐந்து தமிழீழவிடுதலைப் புலிப் போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

தமிழீழவிடுதலைப் புலிகள் அமைப்பு நாட்டின்கிழக்கு மாகாணத்தில் ஒரு புதிய இராணுவமுன்னரங்கை திறப்பதாகக் தெரிகின்றது.கொழும்பில் இருந்து கிழக்கே 300 கி.மீ. அப்பால்உள்ள மட்டக்களப்பில் இராணுவ முகாமும்விமானத் தளமும் இந்த வாரத் தொடக்கத்தில்பிரிவினைவாதிகளால் தாக்கப்பட்டதைஇலங்கை இராணுவ வட்டாரங்கள் ஊர்ஜிதம்செய்தன. நகரில் உள்ள தரைப்படைதலைமை அலுவலகம் மோட்டார் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ஏப்பிரல் 22ம் திகதி விடுதலைப்புலிகள் ஆனையிறவு இராணுவ முகாமைகைப்பற்றியதோடு, யாழ்ப்பாணக்குடாநாட்டைத் தமது கட்டுப்பாட்டுக்குள்கொணரத் தள்ளப்பட்டதில் இருந்துகிழக்கில் யுத்தம் இடம் பெறுவது இதுவேமுதற் தடவையாகும்.

நிஜ இராணுவநிலைமை என்னவாக இருந்தாலும் இந்தியாவிலும்ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஒருதெளிவான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மேலாதிக்கம்செலுத்துவதோடு இலங்கை ஆயுதப்படைகளின் தோல்வி ஒரு கிழமையில் அல்லதுஇன்னும் ஒரு சில நாட்களுக்கு அப்பாற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய பிரதமர்வாஜ்பாய் திங்களும் செவ்வாயும் பாதுகாப்புதொடர்பான விசேட அமைச்சரவைகமிட்டியின் (CCS) ஒரு தொடர் கூட்டத்துக்குதலைமை தாங்கும் பொருட்டு திட்டமிட்டபடிபோபாலுக்கு விஜயம் செய்வதை இரத்துச்செய்தார். ஒரு இந்திய பத்திரிகை செய்தியின்படி:"மூன்று படைத் தளபதிகளும் இலங்கைநிலைமை தொடர்பாக கடைசியாககிடைத்த புலனாய்வு தகவல்களை கமிட்டியிடம்வெளியிட்டனர். ஒரு தகவலின்படி புலனாய்வுஅறிக்கைகள் யாழ்ப்பாணம் இம்மாதக்கடைப்பகுதியளவில் வீழ்ச்சி காணலாம் எனஎச்சரித்துள்ளன. உண்மையில் தமிழ் நாடுகாரைக்கால் பகுதியைச் சேர்ந்தஇந்திய கடற்படையினால் வழங்கப்பட்டஅதிர்ச்சி தரும் அறிக்கைகள் யாழ்ப்பாணத்தின்வீழ்ச்சி 24 மணித்தியாலங்களுள் இடம்பெறலாம்"எனக் குறிப்பிட்டுள்ளது.

முன்னர் இந்தியஅரசாங்கம் இலங்கையில் நேரடி இராணுவத்தலையீட்டை நிராகரித்து இருந்ததோடுமுற்றுகைக்குள்ளாகியுள்ள படைகளையாழ்ப்பாணத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு உதவப் போவதில்லை எனவும் சமிக்கைசெய்திருந்தது. இந்த சீ.சீ.எஸ்.(CCS) கூட்டத்தைத்தொடர்ந்து இந்திய அரசாங்கம் அப்பிராந்தியத்தில் ஒரு யுத்த நிறுத்தம் ஏற்படுமிடத்துஇலங்கைப் படைகளை அப்புறப்படுத்தத்தயாராக உள்ளதாக அறிவித்தது. இந்தியஆயுதப் படைகள் தெற்கு நோக்கி யுத்தக்கப்பல்களையும் கனரக போக்குவரத்துவிமானங்களையும் அத்தோடு 15000 படையாட்களையும் ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளது.இந்தியப் பத்திரிகைகளுக்கு விமானப் படைத்தளபதி விஜே சங்கர் வெளியிட்ட ஒரு அறிக்கையில்:"புதுடில்லியில் இருந்து உத்தரவு வருமிடத்துநாம் அரை மணித்தியாலத்தில் நகர முடியும்"எனக் குறிப்பிடப்பட்டாா்.

நேற்று'நியூயோக் டைம்ஸ்' பத்திரிகை கிளர்ச்சி படைகள்"ஒரு பெரிதும் உறுதியான போராட்டத்தில்"ஈடுபட்டுக் கொண்டுள்ளதாக இலங்கைஜனாதிபதி குமாரதுங்கவை மேற்கோள்காட்டி கட்டுரை தீட்டியதோடு "படைவிலக்கல்தற்போதைக்கு சாத்தியம் போல்தெரியவில்லை" எனவும் தெரிவித்தது. இந்தப்பத்திரிகை மேலும் குறிப்பிட்டதாவது: "6:1என்ற விகிதத்தில் (அரசாங்கப்) படைகள்கிளர்ச்சிப் படைகளின் எண்ணிக்கையை தாண்டிச்சென்றாலும் அரசாங்கம் திட்டவட்டமற்றமுறையில் தாக்கிப் பிடிக்குமா என்பது சந்தேகத்துக்கு இடமானது என இராணுவ ஆய்வாளர்களும்மேற்கத்தைய இராஜதந்திரிகளும் தெரிவிக்கின்றனர். இலங்கை இராணுவம் ஒரு பெரிதும் அரசியல்மயமாக்கப்பட்ட கட்டளை அமைப்பினாலும்ஒரு மனமுறிவு கண்ட படையாட்களாலும்பறக்கமுடியாத விமானங்களாலும் பலவீனம்கண்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றார்கள்.இராணுவ மூலோபாயத்தில் குறைபாடுகள்இருந்து கொண்டுள்ளதை திருமதி குமாரதுங்கவே ஒத்துக் கொண்டுள்ளார்."

இலங்கைப்படைகளை உடனடியாக அப்புறப்படுத்தும்திட்டத்தை திட்டவட்டமான முறையில் தயாரிப்பதில்இந்தியாவும் நோர்வேயும் சிக்கிக் கொண்டுள்ளன என்பதற்கான அறிகுறி தென்படுகின்றது.செவ்வாய்க் கிழமை வெளியான கல்கத்தா'டெலிகிராப்' பத்திரிகையின் ஒரு கட்டுரைகூறியதாவது: "சந்திரிகா குமாரதுங்கஅரசாங்கம் ஒரு யுத்த நிறுத்தத்துக்குஇணங்கியுள்ளது. யாழ்ப்பாணத்தில் அடைபட்டுப்போய்க் கிடக்கும் சிங்கள படையாட்களைபாதுகாப்பான இடத்துக்கு இட்டுச்செல்ல இந்தியக் கடற்படையினர் செல்வதற்கான நேரம் இதுவே. ...(ஆனால்) தமிழீழ விடுதலைப்புலிகள் சாத்தியம் இல்லாத கோரிக்கைகளைமுன்வைத்துள்ளது. அவர்கள் சும்மாஈழத்தை மட்டும் கோரவில்லை. அவர்கள்தப்பித்து ஓட்டம் பிடிக்கும் இலங்கைப்படைகளினால் விட்டுச் செல்லப்படும்ஆயுதங்களுக்கும் யுத்தத் தளபாடங்களுக்கும்திரும்பத் திரும்ப உரிமை கொண்டாடுகின்றனர்."

இந்திய அரசாங்கம் இலங்கையின் வேண்டுகோளின் பேரில் இராணுவ ரீதியில் தலையிடு செய்யதயக்கம் காட்டுகின்றது. முதலாவதாக,ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டின் கணிசமானபங்காளிகளான தமிழ் நாடு அரசியல் கட்சிகளின்எதிர்ப்பு விளங்குகின்றது. இரண்டாவதாகஇந்திய- இலங்கை உடன்படிக்கையின் கீழ்1980களின் கடைப்பகுதியில் இலங்கையின் வடபாகத்தில்இந்திய இராணுவத்துக்கு ஏற்பட்ட பேரழிவுமிகுந்த சிக்கல்கள் இருந்து கொண்டுள்ளது.எவ்வாறெனினும் மறுபுறத்தில் தனது சொந்தக்கோடிப்புறத்தில் ஏனைய சக்திகள் தலையிடுவதை இந்திய ஆளும் வர்க்கம் தடுக்க வேண்டியுள்ளது.அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளின் வெற்றிஇந்தியத் துணைக்கண்டத்தின் வேறு பகுதிகளிலும்-குறிப்பாக ஜம்மு-காஷ்மீர், தமிழ் நாடு- பிரிவினைவாதஇயக்கங்களுக்கு ஊக்கமளிக்கும் எனஅஞ்சுகின்றது.

அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாகஇந்திய ஆளும் வட்டாரங்களில் ஒரு உக்கிரமானவிவாதம் இடம் பெற்று வருகின்றது.

'இந்து' பத்திரிகையின் ஒரு ஆசிரியத் தலையங்கம்எந்தவிதமான நேரடி இரணுவத் தலையீட்டையும் எதிர்த்து வாதிட்டுள்ளது: "இலங்கையின்இனக்குழு யுத்தத்துக்கு இந்தியா ஒருநேரடியான இராணுவப் பாத்திரத்தையோஅல்லது ஒரு இராணுவ தீர்வையோ கொண்டிருக்கவில்லை. இனக்குழு யுத்தத்தை தீர்த்துவைப்பதே இந்தியா இலங்கையில் கொண்டுள்ளமுதல் அக்கறையாகும். தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆக்கிரமிப்புக்கு முகம் கொடுக்கவும்ஜனாதிபதி திருமதி. சந்திரிகா குமாரதுங்கஅமுல் செய்யத் திடசங்கற்பம் பூண்டுள்ளஅரசியல் அதிகாரப் பரவலாக்கத்துக்குதார்மீக ரீதியான அரசியல் ஆதரவை வழங்குவதுமே இந்தியா செய்யக்கூடிய சிறந்த உதவியாகும்."

ஆனால் "இந்தியா இலங்கையில் தலையிடவேண்டும்" என்ற தலைப்பில் 'டெக்கான்குரோனிக்கல்' (Deccan Chronicle) கடந்தவாரம்எழுதிய கட்டுரையில் "தேசிய உடன்பாடு"எனக் குறிக்கப்படுவதை சவால் செய்தது."இந்தப் பிராந்தியத்தில் ஒரு நீண்ட காலசமாதானத்தை ஸ்தாபிதம் செய்ய அவசியப்படுமிடத்து காலடி வைப்பதற்கான காலம்அங்கு இருக்குமானால் அது இதுதான்.தமிழீழ விடுதலைப் புலிகளின் சமீபகால வெற்றிகளும்இலங்கை அரசாங்கத்தின் உதவிக்கானவேண்டுகோளும் இந்த அமைப்பின் அதிகரித்துவரும் செல்வாக்கை கட்டுப்படுத்தி,ஸ்தம்பிக்கச் செய்வதற்கும் அதேசமயம்ஒரு நண்பனதும் அயலவரதும் பிராந்தியஒருமைப்பாட்டைக் காக்கவும் இந்தியாவுக்குஒரு நல்ல சாட்டாகியுள்ளது".

'இந்து'பத்திரிகைக்கு குமாரதுங்க இந்த வாரம்வழங்கிய ஒரு பேட்டியில் இந்தியா இராணுவஉதவியை வழங்கத் தவறியதையிட்டு ஏமாற்றம்அடைந்துள்ளதாக தெரிவித்தார். "எம்மால்தேர்ந்தெடுக்கப்பட்ட அனுசரணையாளரான நோர்வேயின் கரங்களைப் பலப்படுத்துவதன்மூலம்" இந்தியா இலங்கையிலான சமாதானநடவடிக்கைகளுக்கு இனியும் பங்களிப்புச்செய்ய முடியும் எனவும் மேலும் தெரிவித்தார்.நோர்வேயுடன் சேர்ந்து "பல நாடுகளை"உள்ளடக்கிய ஒரு கூட்டு இராஜதந்திரமுயற்சிகளில் இந்தியாவைச் சேர்த்துக்கொள்ளும் சாத்தியங்களையிட்டு தனதுஅரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும்அவர் குறிப்பிட்டார்.

பிக்கரிங்கின் விஜயத்தின்ஒரு நோக்கம் இலங்கையில் ஒரு பெரிதும்ஊக்கமான பாத்திரத்தை வகிக்கும்படிஇந்திய அரசாங்கத்தை தள்ளுவதேயாகும்.'த டைம்ஸ் ஒப் இந்தியா' பத்திரிகை இதையிட்டுகருத்து தெரிவிக்கையில்: புதுடில்லியில் உள்ளஇந்த அதிகாரிகள் (பிக்கரிங் விஜயம்) இந்தியாவேகமாக நடைபோடச் செய்யும்ஒரு வழியாகக் காண்கின்றார்கள். 'இந்தியாதொடர்ந்து சம்பந்தப்படாது இருக்கமுனைகிறது; பேச்சுவார்த்தைகளையிட்டுகிடுநடுங்குகின்றது என்ற உணர்வு- அல்லதுஏதோ ஒரு வகையிலான சம்பந்தம்-அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தைபதட்டம் காண வைத்துள்ளது' என ஒருஅதிகாரி தெரிவித்தார். பிக்கரிங் விஜயமானதுஇந்திய மத்தியஸ்தத்தின் முழுப் போக்கினையும்துரிதப்படுத்தும் என ஊகிக்கப்படுகின்றது".

ஜனாதிபதி பில் கிளின்டனின் சமீபத்திய இந்திய துணைக்கண்ட விஜயம் அமெரிக்காவின் நலன்களைப் பாதுகாக்கவும் அதன் பேரிலான பிராந்திய பொலிஸ்காரனாக செயற்படவும் இந்து சோவினிச பாரதீயஜனதா கட்சி (BJP) தலைமையிலான இந்தியஅரசாங்கத்தின் மீது பெரிதும் நம்பிக்கைவைக்கத் தயாராகி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஒரு வருடமாகஅமெரிக்க, இந்திய, இராணுவ, புலனாய்வுஅதிகாரிகள் "பயங்கரவாதம்" தொடர்பாகபல கூட்டங்களை- குறிப்பாக காஷ்மீர்,ஆப்கானிஸ்தான் சம்பந்தமாக- நடாத்தியுள்ளனர்.

நேற்று 'டைம்ஸ் ஒப் இந்தியா' வில் வெளியானஒரு கட்டுரை புதுடில்லி மீதான நெருக்குவாரங்களைத் தொகுத்துக் கூறியது. "வாஷிங்கடனில்உள்ள கொள்கைத் திட்டமிடலாளர்களின்உள்ளங்களில் இலங்கை ஒரு கீழ்மட்ட முன்னுரிமைஇடத்தையே வகிக்கிறது. "உலக ஒழுங்கு"முறையைக் காட்டிலும் தீவில் தமக்கு எதுவிதமானநிஜ அக்கறையும் கிடையாது என்பதைமுன்னொருபோதும் இல்லாத விதத்தில்இன்று நம்புகின்றனர். அதுவே யுத்தத்துக்குமுடிவுகட்டும்படி அக்கறை கொள்ளச்செய்துள்ளது. ஆனால் இலங்கை இராணுவம்யாழ்ப்பாணத்தில் தோல்வி காணுமானால்,யாரோ ஒருவர் இதையிட்டு ஏதோஒன்றைச் செய்ய வேண்டி நேரிடும். இந்த"யாரோ ஒருவர்" இந்தியாவே என்பதில்இணக்கம் காணப்படுவதாக தெரிகிறது.புவியியல் வரலாற்று, சேவை வசதிகள்அது தெளிவான முறையில் ஆற்றத் தயங்கும்ஒரு பாத்திரத்தை வகிக்க வேண்டுமானால்-ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில்ஒரு நிரந்தர ஆசனத்துக்கு ஆவல் கொண்டிருக்குமானால் குறைந்த பட்சம் அதனதுபிராந்திய சுமைகளுக்கு தோள் கொடுக்கவேண்டும் என அமெரிக்க, ஐரோப்பியகொள்கைத் திட்டமிடலாளர்கள் வலியுறுத்துகின்றனர்."

தற்போதைக்கு இந்தியா 'மத்தியஸ்தர்'பாத்திரத்தை வகிக்கவும் யாழ்ப்பாணத்தில்இருந்து இலங்கை படையாட்களை அப்புறபடுத்தவும் உதவவும் போவதை பகிரங்ககலந்துரையாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன.எவ்வாறெனினும் யாழ்ப்பாண இராணுவநிலைமையில் அல்லது கொழும்பு அரசியல்நெருக்கடியிலான துரித மாற்றங்கள்,வல்லரசுகள் தீவில் முதலாளித்துவ ஆட்சியைக்கட்டிக் காக்கும் பொருட்டு இந்தியாவைஇராணுவ ரீதியில் தலையிடும்படி கோருவதைக்காணக்கூடியதாக இருக்கும்.

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved