World Socialist Web Site www.wsws.org |
WSWS: செய்திகள் & ஆய்வுகள்
What is US envoy Thomas Pickering doing in Sri Lanka? அமெரிக்க பிரதிநிதி தோமஸ் பிக்கறிங் சிறீலங்காவில் என்ன செய்கின்றார்? By Barry Grey அமெரிக்க பிரதிநிதி தோமஸ் பிக்கறிங் இன் இந்திய,ஸ்ரீலங்கா விஜயத்தினூடாக அமெரிக்கா இந்திய தென்கரையில் இருக்கும் தீவினைசீரழித்த 17 வருட உள்நாட்டு யுத்தத்தினுள்நேரடியாக தலையிட்டுள்ளது. பிக்கறிங்என்ற மனிதனினூடாக அமெரிக்கா, தமிழ்பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளின் அண்மித்துள்ளஇராணுவ வெற்றிக்கு எதிராக தனது கைகளைவைத்துள்ளது. அரசியல் விவகாரங்களுக்கானஅமெரிக்க உப செயலாளர் வழமைபோலவாஷிங்டனின் தலையீடு தனியே மனிதாபிமானஅடித்தளத்திலேயே என குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்க இராஜாங்கத் துறையின்நீண்டகால சேவையாளனும், மிகநம்பிக்கைக்குரியகையாளனுமான பிக்கரிங், ஸ்ரீலங்காவின்யாழ்ப்பாண தீபகற்பகத்தில் "ஒரு மனிதப்பேராபத்தை" தடுப்பதற்காக உயர்அதிகாரிகளை சந்தித்துள்ளதாக இந்தியபத்திரிகைகளுக்கு தெரிவித்தார். கடந்தமாதங்களில் ஆச்சரியப்படத்தக்க இராணுவவெற்றிகள் மூலம் ஸ்ரீலங்காவின் தமிழ் சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்தின்மையமான யாழ்ப்பாண நகருக்கு சிலமைல் தூரத்தில் தமிழீழ விடுதலை புலிகள் வந்துள்ளனர். 30,000 ஸ்ரீலங்கா படையினர் ஸ்ரீலங்காவையும்இந்தியாவையும் பிரிக்கும் பாக்குநீரிணையைநோக்கி தள்ளப்பட்டு த.வி.புலிகளால்கைப்பற்றப்படும் அபாயத்திற்கு உள்ளாகிஉள்ளனர். அமெரிக்காவின் வெளிநாட்டுகொள்கை தொடர்பாக அறியாத,அவதானித்திராத ஒருவராலேயே பிக்கரிங்கின்மனிதாபிமான பாசாங்கிற்கு சிறிதளவேனும்மதிப்பளிக்க முடியும். கிட்டத்தட்ட கடந்த20 வருடங்களாக வாஷிங்டன் வடக்கு கிழக்குதமிழ் மக்களுக்கு எதிரான தொடர்ந்தயுத்தத்தை செய்துவரும் ஸ்ரீலங்கா அரசாங்கங்களுக்கு பொருளாதார இராணுவ அரசியல்ஆதரவு அளித்து வந்துள்ளது. அதனது மனிதாபிமானஉணர்ச்சி ஒரு உள்நாட்டு யுத்தத்தில் சிங்களமுதலாளித்துவத்தால் தமிழர்களுக்குஎதிராக செய்யப்பட்ட கொலை, சித்திரவதை,இராணுவ ஆக்கிரமிப்பு, ஒடுக்குமுறை போன்றவற்றால் கிளர்ந்து எழவில்லை. அமெரிக்கஅரசியல் துறையினரின் அறிக்கைகளின்படிஇவ்யுத்தத்தில் 60,000 பேர் உயிர் இழந்துள்ளதுடன்600,000 பேர் வீடற்றவர்களாக்கப்பட்டுள்ளனர். சரியாக்கூறின் பிக்கரிங்கை புதுடில்லிக்கும்கொழும்புக்கும் வரச்செய்தது என்னவெனில்,சிங்கள ஆழும் வர்க்கத்தின் அழிவுமிக்க தோல்வியும்,ஸ்ரீலங்கா தேசம் உடைந்துவிடும் என்பதற்கானஎதிர்பார்ப்புமாகும். வழமைபோல்வாஷிங்டனின் ஐனநாயகம், மனித உரிமைகள்தொடர்பான வாயளப்புகளுக்கு பின்னால்இருப்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்உலக பொருளாதார, பூகோள அரசியல்நலன்களாகும். மே 24-25 இல் இந்தியவெளிநாட்டமைச்சின் செயலாளர் லலித்மன்சிங்கையும் பாதுகாப்பமைச்சர்ஜோர்ஜ் பெர்ணான்டஸ் ஐயும் சந்தித்தபின்னர்,பிக்கரிங்கும் அவரது இந்திய கூட்டாளியினரும்"இராணுவத் தீர்விற்கும், த.வி.புலிகளின் தமிழீழதனிநாட்டு கோரிக்கைக்கும் தமது கூட்டுஎதிர்ப்பினை வெளிப்படுத்தினர். பிக்கரிங், த.வி.புலிகளின்வெற்றியை இல்லாமல் செய்ய இந்தியாமிக மூர்க்கமாக இயங்க வேண்டும் என்றவாஷிங்டனின் வலியுறுத்தலை தெளிவாக்கியதுடன்,யாழ்ப்பாணத்திலிருந்து ஸ்ரீலங்கா துருப்புக்களைவெளியேற்ற தனது கடற்படையை பயன்படுத்தமுன்வர வேண்டுமெனவும், கொழும்புபொது ஜன முன்னணி அரசு அப்படியானகோரிக்கையை விடவேண்டும் எனவும்கூறியுள்ளார். அவர் மேலும் ஸ்ரீலங்காஅரசாங்கத்திற்கும் த.வி.புலிகளுக்கும் இடையேயுத்த நிறுத்தத்திற்கும் சமாதான பேச்சுவார்த்தைக்கும் நடுவராக நிற்கும் தற்போதுகொழும்பு வந்துள்ள நோர்வே தூதுக்குழுவின்முயற்சிகளுக்கு வாஷிங்டனின் வெளிப்படையானஅங்கீகாரத்தை வழங்கியுள்ளார். இவ்இராஜதந்திர முயற்சிகளில் நேரடியானபங்கு வகிக்க அமெரிக்காவிற்கு எந்தவிதநோக்கமுமில்லை என்பதை வலியுறுத்துகையில்பிக்கரிங் வாஷிங்டன் "ஸ்ரீலங்காவின் நிலைமைகளைகவனமாக அவதானிக்கின்றது" என தீக்குறித்தனமாக (கெட்டநோக்கத்துடன்) கூறியுள்ளார்.அமெரிக்காவும் இந்தியாவும் யாழ்ப்பாணத்திலுள்ள ஸ்ரீலங்கா படையினருக்கு ஆதரவாகஇராணுவ தலையீடு செய்யும் திட்டமேதுமில்லைஎன மறுக்கையில், இந்தியா ஒரு கடற்படைகப்பலையும் போர்விமானங்களையும்யாழ்ப்பாணக்கரையை நோக்கி நகர்த்தியுள்ளது. அமெரிக்கா பாரசீக வளைகுடாவிலுள்ளபடையின் ஒரு பகுதியை ஸ்ரீலங்காவின் மேற்குகரையை நோக்கி அதாவது அராபியகடலின்தென்பகுதியை நோக்கி நகர்த்தியுள்ளது. பிக்கரிங் மே 29 ஸ்ரீலங்கா அரச அதிகாரிகளைகொழும்பில் சந்திக்கவுள்ளார். அத்துடன்ஸ்ரீலங்காவில் அவர் நோர்வே மத்தியஸ்தர்களையும் சந்திக்கவுள்ளார். இதேவேளை ஸ்ரீலங்காஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கா இராணுவரீதியாக இல்லாவிடினும் அமெரிக்காவின் நேரடிஇராஜதந்திர தலையீட்டிற்கு கதவுகளைதிறந்துவிட்டுள்ளதுடன், ஒரு தொலைக்காட்சிபேட்டி காண்பவருக்கு அமெரிக்காவும்,நோர்வேயுடனும் இந்தியாவுடனும் சேர்ந்து"சமாதான முயற்சிகளில்" ஈடுபடுவதைவிரும்புவதாக கூறியுள்ளார். த.வி.புலிகளைபேச்சுவார்த்தை மேசைக்கு தள்ளும்வாஷிங்டனின் உயர்மட்டத்திலான நகர்வுதுணைக்கண்டத்தில் தனது பிராந்திய பிரதிநிதியாகவளர்த்தெடுக்கும் நம்பிக்கையில் இந்தியாவுடன்கூட்டுசேரும் அண்மைய திருப்பத்துடன்இணைந்துள்ளது. குளிர்யுத்த காலகட்டத்தில்காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்த காலம் முழுவதும் வாஷிங்டன், இந்தியாவை சோவியத் யூனியனின்ஏறுகுதிரையாகவே நோக்கியது. அத்துடன்பாக்கிஸ்தானை இந்தியாவிற்கு எதிரானசக்தியாக வளர்த்து வந்தது. ஆனால்பாரதீய ஜனதா கட்சி பதவிக்கு வந்ததும்வாஷிங்டன் தனது முன்னைய கூட்டானபாகிஸ்த்தானிடமிருந்து விலகி இந்திய அரசுடன்தனது பொருளாதார, இராணுவ, உளவுத்துறைத் தொடர்புகளை வெளிப்படையாகவேபலப்படுத்திக் கொள்ள தொடங்கியது.பாரதீய ஜனதா கட்சி அமெரிக்க வங்கிகளாலும்,நாடுகடந்த கூட்டு நிறுவனங்களாலும்மிகசிநேகிதபூர்வமாக நோக்கப்படுகின்றது.ஏனெனில் சர்வதேச நாணய நிதியம் வரையறைசெய்த தனியார்மயமாக்கல், மறுஒழுங்கமைப்புகொள்கைகளை அதன் போட்டியளரானகாங்கிரஸ் கட்சியினரை விட வேகமாகவும்,மூர்க்கமாகவும் நிறைவேற்ற உறுதிமொழிவழங்கியுள்ளதாலாகும். கிளின்ரன் நிர்வாகத்தால் பாரதீய ஜனதா கட்சி அரசு அணைத்துக்கொள்ளப்படுவது வாஷிங்டனின் ஜனநாயக, அமைதிவாதபாசாங்கு பொய்களுடன் இணைந்துகொண்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சி ஒரு இந்துசோவினிச கட்சிமட்டுமல்லாது அதுபாசிச அமைப்புகளுடன் ஒன்றிணைந்துள்ளது.அது தனது மூர்க்கமான இராணுவ நோக்கங்களை இரண்டு வருடத்திற்கு முன்னர் பாகிஸ்த்தான்எல்லையில் அணுக்குண்டு சோதனை செய்த்தன்மூலம் எடுத்துக்காட்டியது. இந்தியாவும்அதன் ஆலோசகரான அமெரிக்காவும்ஸ்ரீலங்காவில் த.வி.புலிகளின் இராணுவ வெற்றியைகவனிப்பதன் நோக்கம் ஒரு சுதந்திரதமிழ் ஈழ அரசு முக்கியமாக காஷ்மீர், தென்மாநிலமான தமிழ்நாடு உட்பட பல பிரிவினைவாதஅமைப்புக்களை எதிர்நோக்கும் இந்தியதேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு பாரியஅச்சுறுத்தலாக இருப்பதாலாகும். வலதுசாரி பாரதீய ஜனதா கட்சியுடனானவாஷிங்டனின் கூட்டு அதனது வெளிநாட்டுகொள்கை பிரகடனங்களுடன் இணைந்தமுரண்பாடுகள் பலவற்றினுள் ஒன்றுமட்டுமாகும்.இது தமிழ் பிரிவினை வாதிகளுடனான எதிர்ப்புஉணர்விற்க்கும் கொசவோ அல்பானியஇன பிரிவினைவாதிகளை கட்டித்தழுவுவதற்கும்இடையேயான வித்தியாசத்தில் மிக தெளிவாகவெளிப்படையானது. இன்றைக்கு ஒருவருடத்திற்கு முன்னர் பெல்கிராட் தனதுதென்மாநிலத்தில் வாழ்ந்த பெரும்பான்மைஅல்பானிய மக்களுக்கு எதிராக இனசுத்திகரிப்பையும், படுகொலையையும் செய்ததாககுற்றஞ்சாட்டி கொசவோ விடுதலைஇயக்கத்துடன்[KLA] ஒன்றுகூடிசேர்பியாவிற்கு எதிரான ஆகாயத்தாக்குதலில்ஈடுபட்டது. இன்று இதே மனிதாபிமானகோஷங்கள் ஸ்ரீலங்காவின் வட கிழக்கிலுள்ளபெரும்பான்மை தமிழ் மக்களுக்கெதிரானகொழும்பின் ஒடுக்குமுறைக்கு ஆதரவாகவும்,பிரிவினைவாத த.வி.புலிகளுக்கு எதிரான தலையீட்டைநியாயப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றது.எவ்வாறு இந்த தெளிவான முரண்பாட்டைவிளங்கப்படுத்தப்படமுடியும்? எவ்வாறுஅம்மனிதாபிமானம், வேறுபட்ட இராஜதந்திரத்தோடு ஒரு நாள் சேர்பியாமீது குண்டுமழைபொழியவும், மறுநாள் சிங்கள முதலாளித்துவத்தை பாதுகாக்குமுகமாக அரசியல் உடன்பாட்டிற்கு நிர்ப்பந்திக்கவும் வாஷிங்டனை கட்டாயப்படுத்துகின்றது? அமெரிக்க பேச்சாளர் தங்களுடையமூர்க்கத்தனத்துடனும், சிடுமூஞ்சித்தனத்துடனும்இக்கேள்விகளுக்கு பதிலளிக்க முயலப்போவதில்லை. ஊழல் மிக்க அமெரிக்க தொலைத்தொடர்புசாதனங்களும் இக்கேள்விகளை எழுப்பப்போவதில்லை என்பதும் தெரிந்தவரையில் நிச்சயமானது. கொசவோவினருக்கும் ஸ்ரீலங்கா தமிழ்மக்களின் பரிதாபத்திற்கும் இடையில் முக்கியவேறுபாடுகள் உள்ளன. ஆனால் இவைஅமெரிக்காவின் ஏமாற்றை குறைத்தேமதிப்பிடுகின்றது. அல்பானிய கொசவோவினர்மீதான சேர்பிய ஒடுக்குமுறை, தமிழ்மக்கள்மீதான கொழும்பின் 17 வருட கொலைகளுடன்ஒப்பிடுகையில் மறைந்து போகின்றது. சேர்பியஒடுக்குமுறையினுள்ளும் நேட்டோ[NATO] வின் குண்டுவீச்சினாலும் இறந்த கொசவோவினரின் தொகை அநேகமான கணக்கீட்டின்படிகிட்டத்தட்ட 1000 ஆகும். தமிழ் மக்கள் மீதானகொழும்பின் யுத்ததினால் இறந்தவர்கள்60,000 மேலாகும். 1999 பெப்ரவரியில் வெளியிடப்பட்டஸ்ரீலங்காவில் மனித உரிமைகளின் நடைமுறைதொடர்பான அமெரிக்க இராஜாங்கதிணைக்களத்தின் சொந்த அறிக்கையிலிருந்துஒரு பந்தி பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. "சித்திரவதை செய்யப்பட்டவர்களில் கூடுதலானோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள்அல்லது ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்களாகும். சித்திரவதை முறைகளில் மின்சாரஅதிர்ச்சி, அடித்தல்[விசேடமாக குதிக்கால்களில்],கைகளில் அல்லது கால்களில் முறுக்கப்பட்டநிலையில் கட்டித்தொங்கவிடுதல், எரித்தல்,நீரினுள் அமிழ்த்துதல் என்பன அடங்கும்.வேறு சந்தர்பப்பங்களில் நீடித்தகாலத்திற்குஇயற்கைக்கு மாறான நிலையில் நிற்கவைத்தல், கிருமிநாசினி அல்லது மிளகாய்தூள் அடங்கியபைகளினுள் கட்டப்படல் அல்லது தலையின்மேல் மண்ணெண்ணெய் ஊற்றுதல் என்பனஅடங்கும். மோசமாக நடத்தப்பட்டதன்விளைவாக எலும்பு முறிவுகளும் வேறு மோசமானகாயங்கள் தொடர்பாகவும் கைதிகளால்முறையிடப்பட்டுள்ளது." மேலும் தமிழீழவிடுதலைப் புலிகளின் இனவாத அரசியலைகவனத்திற்கு எடுக்காவிட்டாலும் அதுதனது கடந்த வரலாற்றில் கொசவோவிடுதலை இயக்கம் ஒருபோதும் அடைந்திராதபரந்த மக்கள் ஆதரவை பெற்றிருந்தது.கொசவோ விடுதலை இயக்கத்தைஇராஜாங்க திணைக்களத்தின் பயங்கரவாதஅமைப்புகளின் பட்டியலிருந்து நீக்கி "தேசியவிடுதலை இயக்கமாக" முன்மொழிய தீர்மானிக்கையில் அமெரிக்க அதிகாரிகளுக்கு மாபியாகுழுக்களுடனான அதனது தொடர்பையும்,போதைமருந்து கடத்தலில் ஈடுபாடுகுறித்தும் தெரிந்திருந்தது. ஆனால் சிங்களஅரசுகளால் வருடக்கணக்கான ஒடுக்குமுறைக்கும், பாகுபாட்டிற்கும் உள்ளானதற்கெதிரானதமிழர்களின் எதிர்ப்பின் மத்தியில் தோன்றியதமிழீழ விடுதலைப் புலிகளை அமெரிக்காதொடர்ந்தும் தடைசெய்துள்ளது. இவ்உள்நாட்டு யுத்தம் 1983 இல் அரசாங்கத்தால்ஆதரவளிக்கப்பட்ட வன்செயல்களில்நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதனால் தோன்றியதாகும். அமெரிக்காவின்ஸ்ரீலங்காவின் தலையீடு தொடர்பானஆய்வு, தோமஸ் பிக்கரிங்கின் ஜனநாயக,அமைதிவாத நற்சாட்சிப் பத்திரங்கள்தொடர்பான ஆய்வு இல்லாமல் பூர்த்தியானதாக இருக்காது. அமெரிக்க வெளிநாட்டுசேவையில் உயர்பதவியான தூதுவராக,அமெரிக்க இராஜதந்திரத்தின் அனுபவமிக்கவர்என்ற வகையில் மிக இழிவிற்கு உரிய காலகட்டமானகடந்த முப்பது வருடங்களாக இவர்சேவையிலீடுபட்டிருந்தார். அமெரிக்கவெளிநாட்டுக் கொள்கை அமைப்பின்எழுச்சி நட்சத்திரமாக அமெரிக்கா வியட்நாம்தோல்வியிலிருந்து வெளிவர முயல்கையில்1973-1974 இல் கீஸீங்கரின் விசேட உதவியாளராககடமையாற்றினார். சிலியில் பாசிச சர்வாதிகாரியும்பெரும் கொலைகாரனுமான ஒகஸ்ரோபினோசேயை பதவிக்கு கொண்டுவரகீஸீங்கர் மூளைவகுத்தபோது அவரின் விசேடஉதவியாளராக இருந்தார். றேகனின்நிர்வாகத்தின் கீழ் வாஷிங்டன் எல் சல்வடோர்கொலைப்படை அரசாங்கத்திற்கு உதவுகையில்எல் சல்வடோருக்கான அமெரிக்கதூதுவராக பிக்கரிங் கடமையாற்றினார்.அவா் இறுதியாக தூதுவராக கடமையாற்றியது 1993-1996 இல் மொஸ்கோவில் ஆகும். அங்குஜெல்ட்சின் அரசாங்கம் 1993 ஒக்ரோபரில்ருஷ்ய பராளுமன்றத்தின் மீது குண்டு போடுகையில்அதற்கு உதவியளித்தார். இதுதான் வாஷிங்டன்ஸ்ரீலங்காவிற்க்கு நியமித்துள்ள மனிதனின் சுருக்கமாகும். இது இந்திய துணைக்கண்டத்தின் அமெரிக்ககொள்கையின் மனிதாபிமான வாயடிப்புகளுக்குபின்னால் உள்ள பிற்போக்கு சாராம்சத்தைஎடுத்துக்காட்டுகின்றது.
Copyright
1998-2000 |