World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்

 

Following a string of military defeats
Sri Lankan government imposes severe new censorship and emergency powers

தொடர்ச்சியான இராணுவத் தோல்விகளைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் கடுமையான புதிய தணிக்கையையும் அவசரகாலச் சட்ட அதிகாரங்களையும் திணிக்கிறது

By a correspondent
8 May 2000

Back to screen version

கடந்த வாரம் இலங்கையில் பொதுஜனமுன்னணி அரசாங்கம் பிரிவினைவாத தமிழீழவிடுதலைப் புலிகளுடனான மோதுதலில்ஏற்பட்ட ஒரு தொகை இராணுவத்தோல்விகளினால் உண்டான அவஸ்த்தைகாரணமாக முழு நாட்டையும் "ஒருயுத்த நிலைமையில்" இருத்தியுள்ளது. கடந்தஇரண்டு வாரங்களாக இலங்கை இராணுவம்வடக்கில் உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில்ஆனையிறவிலும் பளையிலும் முக்கிய இராணுவத்தளங்களை இழந்துள்ளது. 1995ன் பின்னர்இராணுவம் யாழ்ப்பாண நகரம் உட்படமுழுப் பிராந்தியத்திலும் தனது கட்டுப்பாட்டைஇழக்கும் சாத்தியத்துக்கு முகம் கொடுத்துள்ளது.

இலங்கை ஏற்கனவே மிகவும் கடுமையானயுத்தகாலக் கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகியுள்ளது. கடந்த புதன் கிழமை அரசாங்கம்பொதுஜன பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பிரகடனம் செய்த புதிய அவசரகாலவிதிகளை 101 பக்கங்களை கொண்ட ஒருபத்திரமாக வெளியிட்டது. இது ஜனநாயகஉரிமைகளுள் புதிதாக பெரிதும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. புதிய தணிக்கை விதிகளுள்,வேலைநிறுத்தங்களுக்கும் போராட்டங்களுக்கும் தடை, இராணுவ பாவனைக்காகசொத்துக்களை சுவீகரிக்கும் அதிகாரம்என்பனவும் இதில் அடங்கும்.

இந்தப்படுபயங்கரமான புதிய விதிமுறைகள் ஜனாதிபதிசந்திரிகா குமாரதுங்க எதிர்க்கட்சித் (யூ.என்.பி)தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்ததற்குமறுநாளும், இந்தியா இராணுவ உதவிகளுக்கானபொதுஜன முன்னணி அரசாங்கத்தின் வேண்டுகோளை வழங்க மறுத்ததைத் தொடர்ந்தும்அறிவிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளைஎதிர்த்துச் சண்டையிட இந்திய அரசாங்கம்கொழும்புக்கு உதவப் போவதில்லைஎன அறிவித்ததோடு மட்டுமன்றி, மே 3ம்திகதி வெளிநாட்டு விவகாரங்களுக்கானஅமைச்சர் ஜஸ்வந்சிங் பத்திரிகை நிருபர்களுடன்பேசுகையில் யாழ்ப்பாணத்தில் முடங்கிப்போய்க் கிடக்கும் 35,000 இலங்கை படைகளைஅப்புறப்படுத்துவது "இந்தியாவின் பொறுப்புஅல்ல" எனவும் தெரிவித்தார்.

இந்தப்புதிய விதிகள் சிவில் வாழ்க்கையின் சகல அம்சங்களையும் ஒழுங்குபடுத்த "தகுதிவாய்ந்த அதிகாரிகளை"நியமனம் செய்ய ஜனாதிபதிக்கு அளவுகடந்தஅதிகாரங்களை வழங்குகின்றது. இதனால்முதற்தடவையாக வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் உட்பட வெகுஜனத் தொடர்புச்சாதனங்கள் முதலில் தாக்குதலுக்குஉள்ளாகியுள்ளன. இவை நாட்டில் ஏற்கனவேகடுமையாக்கப்பட்டுள்ள தணிக்கைக்கட்டுப்பாடுகளின் ஒரு தொகை விஸ்தரிப்புக்குஇலக்காகியுள்ளன.

இந்த விதிகள் 14(1) பிரிவு"தகுதி வாய்ந்த அதிகாரி" இலங்கையின் சகலபகுதிகளிலும் அல்லது இலங்கையின் ஒரு பகுதியில்பிரசுரங்களை கட்டுப்படுத்தலாம் அல்லதுதடை செய்யலாம். தேசிய பாதுகாப்பின்நலன்களுக்கு அல்லது பொதுஜன ஒழுங்கைப்பேணுவதற்கு அல்லது சமூகத்தின் வாழ்க்கைக்குஅத்தியாவசியமான விநியோகங்களையும்சேவைகளையும் பராமரிப்பதற்கு குந்தகம்விளைவிக்க் கூடிய விதத்தில் அல்லது கலகம்,இனக்கலவரம் அல்லது குழப்பம் அல்லதுநடைமுறையில் உள்ள ஏதேனும் ஒரு சட்டத்தைமீறும்படி தூண்டும் எந்த ஒரு விடயத்தையும்வேறுநாடுகளுக்கு பரப்புதலை கட்டுப்படுத்தவும் தடை செய்யவும் முடியும்"...

"தகுதிவாய்ந்த அதிகாரி" கீழ்கண்டவற்றை தணிக்கைக்குசமர்பிக்குமாறு எவரையும் கட்டாயப்படுத்தும் அதிகாரங்களைக் கொண்டிருப்பார்:"பத்திரங்கள், சித்திரங்களின் பிரதிகள், புகைப்படங்கள், சினிமாப் பாடல்கள் டெலிபிரின்டர்கள், தந்தி,தொலைக்காட்சி, பாதுகாப்பு படைகளின்தொழிற்பாட்டுடன் தொடர்புபட்டவிடயங்கள்- செய்தி அறிக்கைகள், ஆசிரியத்தலையங்கங்கள், கட்டுரைகள், ஆசிரியருக்குகடிதங்கள், கார்ட்டூன்கள் (Cartoons), கருத்துக்களை ஒலிபரப்புதல்". தமதுசாதனங்களை தணிக்கை அதிகாரிக்கு சமர்ப்பிக்கத் தவறுவோர் அச்சிடுதல், பிரசுரித்தல்அல்லது விநியோகித்தலில் ஈடுபடாவண்ணம்தடைசெய்யப்படுவர். அத்தகைய சாதனங்களை அச்சிடுவதாக சந்தேகிக்கப்படும்எந்தவொரு அச்சகமும் இழுத்து மூடப்படும்.

புதிய அதிகாரங்கள் இயற்றப்படுவதற்குமுன்னதாகவே அரசாங்கம், பிரித்தானியசெய்தி திட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளின்செய்தி அறிக்கையை மேற்கோள் காட்டிசெய்தி வெளியிட்டதாகக் கூறி உள்ளூர் பீ.பீ.சி.சிங்கள சேவை ஒலிபரப்பை இழுத்து மூடமுயன்றது. புதிய அதிகாரங்கள், இலங்கைஆயுதப் படைகளதும் அவைகளது இராணுவநடவடிக்கைகளதும் விபரங்களை தணிக்கைசெய்வதை மட்டும் கொண்டிருக்கவில்லை.ஆனால் அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சனம் செய்யும் அம்சங்கள்அப்பட்டமான அரசியல் தணிக்கைக்குஉரியவையாகி உள்ளன. உதாரணமாகவார இதழான "சன்டே டைம்ஸ்" பத்திரிகை"முதிர்ச்சியும் பதட்டமும்" என்ற ஆசிரியத்தலையங்கமும் "சகலரும் என்ன நடக்கிறதுஎன்பதை அறிய விரும்புகிறார்கள்" என்றஅரசியல் பந்தியும் கடந்த வாரம் பெருமளவில்வெட்டித் தள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் அரசாங்கம் ஒரு ஆழமான அரசியல்நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளதையும்யுத்தத்துக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கும் எதிரான தொழிலாளர்கள், கிராமத்தவர்கள்புத்திஜீவிகளையும் பரந்த எதிர்ப்பில் குதிக்கஇடமளிக்கும் பாதையை திறந்து விடுமோஎன்பதையிட்டும் அதைக் கிலியடையச் செய்துள்ளதையும் தெளிவுபடுத்துகின்றது. இந்தப் புதியஅவசரகால விதிகள் ஆட்சியில் கொண்டுள்ளதமது சொந்தப் பிடியை கட்டிக் காப்பதற்கான ஒரு வெறிபிடித்த முயற்சியாகும். அந்தளவுக்குஅவர்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில்முற்றுகைக்கு உள்ளாகியுள்ள இலங்கைபடையாட்களின் அதிர்ஷ்டங்களை தாங்கிப்பிடிக்கவும் நேரிட்டுள்ளது.

அரசாங்கம்சகல வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள்,ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்களையும்தடை செய்துள்ளது. அத்தோடு சம்பளத்தைஉறையச் செய்வது உட்பட ஒரு தொகைபொருளாதார நடவடிக்கைகளையும்திணித்துள்ளது. உக்கிரமான யுத்தத்தினால்பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்துக்கும் வரவு செலவுத் திட்டத்துக்கும்முண்டு கொடுக்கும் நோக்கிலேயேஇவை இடம் பெற்றுள்ளன. இந்த சம்பளத்தை உறையச் (Wage freeze) செய்யும் நடவடிக்கையானது 40 வீத சம்பள உயர்வு கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள 400,000 பெருந்தோட்டத்துறைதொழிலாளர்களை உடனடியாகப் பாதித்துள்ளது. சமீபத்தில் இடம்பெற்ற விலை உயர்வுகளில்எரிவாயு (Gas), தொலைபேசி கட்டணம்என்பனவும் அடங்கும். அரசுடமை இலங்கைமின்சாரசபை ஜூலை 1ம் திகதியில் இருந்துகட்டணங்களை 25 வீதத்தினால் அதிகரிக்கப்போவதாக அறிவித்துள்ளது. அதே சமயம்"அத்தியாவசியமற்ற" அபிவிருத்தி திட்டங்களைஇடைநிறுத்தும் அரசாங்கத்தின் தீர்மானத்தினால்இளைஞர்கள் வேலையின்மையால் பாதிக்கப்படுவர்.

ஏனைய விதிகள் அரசாங்கமும் இராணுவமும்சொத்துக்களை பறிமுதல் செய்வதையும்மக்களை கட்டாய இராணுவ சேவைக்குதிரட்டுவதையும் அங்கீகரித்துள்ளன:

*இந்த விதிகளின் பிரிவு 8(1) "இலங்கையில் உள்ளஎந்த ஒரு பொருளையும் (இலங்கையில்வதியும் எவருக்கும் அல்லது இலங்கையின்அல்லது இலங்கையின் எந்த ஒரு பகுதியிலும்உள்ள ஒருவருக்கு சொந்தமான கப்பல்,விமானம் உட்பட) பறிமுதல் செய்ய முடியும்.

* அதிகாரிகள் இந்த விதிகளின் கீழ் அல்லது "1979ம்ஆண்டின் 48ம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தினை மீறி இழைக்கப்படும் எந்தஒரு குற்றத்தின் பேரில் அல்லது இதன் பேரில்பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்படும்"எந்த ஒரு கட்டிடத்தையும் சுவீகரிக்கவும்அங்குள்ளவர்களை வெளியேற்றவும் முடியும்.

* இந்த விதிகளின் 10வது பிரிவின்படி ஜனாதிபதி "தேசியபாதுகாப்பின் அல்லது அத்தியாவசிய சேவைகளின்பேரில் எந்த ஒரு நபரையும் எந்த ஒருவேலையையும் செய்யும்படி அல்லதுஉதவியாக எந்த ஒரு தனிப்பட்ட சேவையையும்ஆற்றும்படி" அதிகாரிகளையும் அலுவலர்களையும் நியமனம் செய்வதை அனுமதிக்கிறது.

இந்தப் புதிய விதிகளை 1971ல் குமாரதுங்கவின்தாயாரான சிறிமாவோ பண்டாரநாயக்கவின்தலைமையிலான ஒரு கூட்டரசாங்கம்ஜே.வீ.பி. யினால் அணிதிரட்டப்பட்ட இளைஞர்களின்கிளர்ச்சியின் மத்தியில் பிரகடனம் செய்த விதிகளுடன்மட்டுமே ஒப்பிட முடியும். அல்லது 1987-89ல்இலங்கையின் தென்பாகத்தில் கிளர்ச்சி கண்டகிராமப்புற இளைஞர்களுக்கு எதிராகயூ.என்.பி. அரசாங்கம் மீண்டும் பாதுகாப்புபடைகளை கட்டவிழ்த்து விட்டதும் 60,000பேரை பலிகொண்டதுமான காலப்பகுதியுடனேயே ஒப்பிட முடியும். அந்தக் காலப்பகுதியில்சும்மா ஒரு தொலைபேசி அழைப்பைபொலிசாருக்கு கொடுப்பதன் மூலம்ஒரு பழிவாங்கும் எண்ணம் கொண்ட அயலவரோ அல்லது ஒரு தனிப்பட்ட எதிரியோ இராணுவத்தையோ அல்லது பொலிசையோ அல்லதுஒரு பயங்கர கோஷ்டியையோ கொண்டுஒரு அப்பாவி நபரையோ அல்லது அவரதுகுடும்பத்தையோ சித்திரவதை செய்வதோஅல்லது கொன்று தள்ளுவதோ சாத்தியமாகியது.

யுத்தம் தொடர வேண்டும்; தமிழீழவிடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளசிங்கள தீவிரவாத குழுக்களிடமிருந்தே பொதுஜனமுன்னணி அரசாங்கத்துக்கு பெரிதும் வாயளவிலான ஆதரவு கிடைத்துள்ளது. புதிதாக ஸ்தாபிதம்செய்யப்பட்ட சிங்கள உறுமய (SinhalaHeritage party) கட்சியின் ஒரு கூட்டான, பாசிசபயங்கரவாதத்துக்கு எதிரான தேசியஇயக்கம் (NMAT) சந்திரிகா குமாரதுங்கநாட்டை ஒரு யுத்த நிலைமையில் இருத்தியமைக்காக அவரைப் பாராட்டியுள்ளது. தாம்நீண்ட காலமாக கோரிவந்ததை அவர்அமுல் செய்துள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலான புதினப் பத்திரிகைகளும் இலத்திரனியல்தொடர்பு சாதனங்களும் யுத்த வெறியைக்கக்குகின்றன. இதனை இந்தக் குழுக்களின்தமிழர் எதிர்ப்பு இனவாதக் கூச்சல்களில்இருந்து வேறுபடுத்த முடியாது.

இடதுசாரிகள்

இந்தஅவசரகால விதிகளை அரசாங்கம் இடதுசாரிகட்சிகள் எனப்படுபவையினதும் தொழிற்சங்கத்தலைவர்களதும் தீவிரமான அல்லது மந்தமானஆதரவுடனேயே திணிக்கின்றது. லங்கா சமசமாஜக் கட்சியும் (LSSP), ஸ்ராலினிச இலங்கைகம்யூனிஸ்டுக் கட்சியும் பொதுஜன முன்னணிஅரசாங்கத்தின் பங்காளிகள். ஆதலால்அவர்கள் இந்த அவசரகால நடவடிக்கைகளுக்கு நேரடி பொறுப்பாளிகள்.

லங்காசமசமாஜக் கட்சியின் தலைவர் பற்றி வீரக்கோனுடன் தொடர்பு கொண்டு இந்தப் புதியவிதிகள் பற்றி கேட்டபோது, இந்த விதிகளின்பிரதி தமக்கு இன்னமும் கிடைக்காததால்இதையிட்டு கருத்து தெரிவிக்க முடியாதுஎனக் கூறினார். ஆனால் இந்த அவசரகாலவிதிகளை பிரகடனம் செய்ய ஏகமனதாகதீர்மானம் செய்த மே 3 அமைச்சரவைக்கூட்டத்தில் பற்றி வீரக்கோன் கலந்து கொண்டார். அவரது கூற்றின்படி பார்த்தால் அவர்இந்தப் பத்திரத்தையே ஏறிட்டும் பார்க்காமல் ஜனாதிபதி கூறியபடி அவசரகாலச் சட்டஅதிகாரங்களுக்கு வாக்களித்துள்ளார்.இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இதையிட்டுஎதுவும் கூறவில்லை.

ஜே.வீ.பி.யும் இதற்குச்சமமான நிலைப்பாட்டையே வகித்துள்ளது.ஜே.வி.பி. தாம் பொதுஜன முன்னணியையும்யூ.என்.பி.யையும் எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்ள முயற்சித்தாலும் அது விடுதலைப்புலிகளை தோற்கடிக்க யுத்தத்தைஉக்கிராமாக்குவதை ஆதரிக்கின்றது. ஜே.வீ.பி.யின்பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்சமே 7ம் திகதி அளித்த ஒரு பேட்டியில் "நாம்யுத்தத்தை நிறுத்துவோம் எனக் கூறும்போது அது வடக்கையும் கிழக்கையும்(விடுதலைப் புலிகளின் தலைவர்) பிரபாகரனுக்குவழங்குவதைக் குறிக்காது. அவர் போரைத்தொடருமிடத்து நாம் அந்த நிலைமைக்குமுகம் கொடுக்கத் தயாராகவுள்ளோம்.நாம் அவர் மேலும் வெற்றிகளை ஈட்டிக்கொள்ள அனுமதிக்க மாட்டோம்" என்றுள்ளார்.அத்தோடு அவர் ஜே.வி.பி. இராணுவத்தினுள்கணிசமான ஆதரவைக் கொண்டுள்ளதாகவும்சுட்டிக்காட்டினார்.

இந்த நிலைமையில் இலங்கையில் பொதுஜனமுன்னணி அரசாங்கத்தை எதிர்த்து, இந்த"இடதுசாரி" கூட்டரசாங்கத்தினால் தோற்றுவிக்கப்படும் ஆபத்தையிட்டு தொழிலாளர்வர்க்கத்தை எச்சரிக்கை செய்த ஒரேஅரசியல் கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிசசமத்துவக் கட்சியே. இதனது தகிடுதத்தங்கள்"குறுங்குழுவாதம்" எனத் தாக்கப்பட்டதுமுற்றிலும் நியாயமானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.லங்கா சமசமாஜக் கட்சியும், இலங்கைகம்யூனிஸ்ட் கட்சியும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் இப்போது அரசாங்கத்தை ஆதரித்துவருகின்றன. இவை தமிழருக்கு எதிரானஇனவாத யுத்தத்தை முன்னெடுக்கும்பேரில் அடிப்படை ஜனநாயக உரிமைகளைத்துடைத்துக் கட்டியுள்ளதோடு பாசிசசக்திகள் மீதும் இராணுவத்தின் மீதும் பெரிதும்நேரடியாக சாய்ந்து வருகின்றன.

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved