World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்

 

Marxist internationalism vs. the perspective of radical protest

A reply to Professor Chossudovsky's critique of globalization

மார்க்சிச சர்வதேசியம் எதிர் தீவிர எதிர்ப்புமுன்னோக்கு

பூகோளமயமாக்கல் தொடர்பாக பேராசிரியர் சோசுடோவ்ஸ்கியின் விமர்சனத்திற்கு பதில்.

By Nick Beams
23 February 2000

Back to screen version

பேராசிரியர் மைக்கேல் சோசுடோவ்ஸ்கியால்எழுதப்ப்ட்டு, உலக சோசலிச வலைத் தளத்தில் 15 தை 2000ல் பிரசுரிக்கப்பட்ட ''சியாட்டிலும் அதற்கு அப்பாலும்: புதியஉலக ஒழுங்கை பலவீனமாக்கல்'' என்ற கட்டுரைக்கு பதிலளிக்கும் முகமாக,உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) ஆசியர்குழு உறுப்பினரும் ஆஸ்திரேலியசோசலிச சமத்துவக்கட்சியின் தேசிய செயலாளரும் ஆன நிக் பீம்ஸால் எழுதப்பட்ட கட்டுரையின்மூன்று பகுதிகளுள் இரண்டாம் பகுதியை உலக சோசலிச வலைத்தளம் இங்கே வெளியிடுகிறது.)

பகுதி-2

பூகோள முதலாளித்துவத்தினதுஉலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும்ஏனைய நிறுவனங்கள் தொடர்பானபேராசிரியர் சோசுடோவ்ஸ்கியின் அடிக்கடியானஉணர்ச்சிவசப்பட்ட கண்டனங்கள் அனைத்தின்வழியாகவும் இழையோடிக் கிடப்பதுஒரு திட்டவட்டமான அரசியல் வேலைத்திட்டமாகும். அவரது கண்ணோட்டத்தில் உ. வ. அமைப்புபோன்ற ''சர்வ அதிகாரங்கள்'' கொண்டஅமைப்புக்களினால் கீழ்ப்படுத்தப்பட்டுஇருக்கின்ற தேசிய அரசின் இறைமையையும்அதிகாரத்தையும் புனரமைப்பதன் மூலம்பூகோளமயமாக்கல் கட்டாயம் எதிர்க்கப்பட வேண்டும் என்பதாகும்.

சோசுடோவ்ஸ்கியின்படி, உ.வ.அமைப்பை நிறுவிய 1994 உடன்பாடு,''ஒவ்வொரு உறுப்பினர் நாடுகளதும்ஜனநாயக விதிமுறைகளைக் கடந்து சென்றுவிட்டது''. அத்துடன், பூகோள வங்கிகளுக்கும்,பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் பேரளவுஅதிகாரம் வழங்குவதன் மூலமாகதேசிய சட்டங்களையும் அரசியலமைப்புவிதிமுறைகளையும் வேண்டுமென்றே சீரழிக்கின்றது.

அவர் பின்வருமாறு தொடர்கிறார் ''வேறுவார்த்தைகளில் சொல்வதெனில், உருகுவேசுற்றின் இறுதி நடவடிக்கையை தொடர்ந்துஉ.வ.அமைப்பு உருவாக்கப்பட்ட முறைஅப்பட்டமான 'சட்டவிரோதம்' ஆகும்.தேசிய அரசாங்கங்களின் இறைமையையும்,உரிமைகளை சீரழிக்கும், ஒவ்வொரு நாட்டுமட்டத்தில் பொருளாதார மற்றும்சமூகக் கொள்கைகளை மேற்பார்வைசெய்யும் சர்வதேச சட்டத்தின்கீழ் 'சர்வஅதிகாரங்கள்' கொண்ட அரசாங்கங்களுக்கிடையிலான அங்கம் என்று அழைக்கப்படும்ஒன்றை ஜெனிவாவில் தற்காலிகமாக நிறுவப்பட்டது.

''உ. வ. அமைப்புடனான தங்களதுஅரசாங்கங்களின் அங்கத்துவத்தை காலதாமதமின்றி திரும்பப்பெறவும், ரத்துச் செய்யவும்தங்களது அரசாங்களுக்கு அழுத்தம்கொடுக்கவும், ''உ.வ.அமைப்பின் அங்கத்துவநாடுகள் தேசிய அரசியல் சட்டங்களையும்உள்நாட்டுச் சட்டங்களையும் அப்பட்டமாகமீறுவதைச் சுட்டிக்காட்டி, தேசிய நீதிமன்றங்களின்அவற்றுக்கெதிராக'' சட்டரீதியான வழக்குநடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும்அழுத்தம் கொடுப்பதற்கு, ''உலகெங்கும்உள்ள மக்கள் இயக்கங்களுக்கு'' சோசுடோவ்ஸ்கி அழைப்பு விடுகிறார்.

உண்மையை அம்பலப்படுத்தலையும் விமர்சன ரீதியான விவாதத்தையும்தடுப்பதற்காக வெகுஜன ஊடகங்களைசோசுடோவ்ஸ்கி கண்டனம் செய்கின்றார்.அத்துடன், ''சுதந்திர சந்தை'' யின் ஒரேவாக்குறுதி, சர்வதேச நாணய நிதியம்மற்றும் உ.வ.அமைப்பு ஆகியவற்றால்வழங்கப்பட்ட ''கசப்பான பொருளாதாரமருந்தால்'' ஏற்ப்பட்ட பொருளாதாரச்சீரழிவுதான் மக்களது வாழ்க்கைத்தரத்தைஅழிக்கின்றது என்று சுட்டிக்காட்டுகிறார்.பின்னர் அவர் ''நாம் கட்டாயம் உண்மையைமீட்கவேண்டும், நமது நாடுகளுக்கும்நமது நாட்டு மக்களுக்கும் இறைமையைமீண்டும் கட்டாயம் நிலைநாட்ட வேண்டும்''என பிரகடனம் செய்கிறார்:

பூகோளமுதலாளித்துவத்துக்கும் அதன் நிறுவனங்களுக்கும்எதிரான தேசிய எல்லைகளைக் கடந்துசர்வதேச தொழிலாள வர்க்கத்தைஒன்றிணைப்பதன் அடிப்படையிலான போராட்டமான சோசலிச கொள்கைகளை கொண்டஎதிர்ப்புக்கும், தேசிய அரசின் அதிகாரத்தைமீளமைக்க ''மக்கள் இயக்கத்துக்கு''அழைப்பு விடுக்கும் பூகோளமயமாக்கலுக்குஎதிரான குட்டி முதலாளித்துவ எதிர்ப்புக்கும்இடையிலான அடிப்படை வேறுபாட்டிற்கானதெளிவான விளக்கம் இதைவிட வேறெதுவும்இருக்க முடியாது.

இந்த பிரச்சனைகள்எவ்வகையிலும் தற்போது முதல்முறையாகவெளிப்படவில்லை. ஏகாதிபத்திய மையப்படுத்தலையும் தேசிய ஒடுக்குமுறையின் எல்லா வடிவங்களையும் எதிர்த்துப் போராடுகின்ற அதேவேளையில், ''நமது கண்டம் முழுவதும்மட்டுமல்லாது மேலும் பூகோளம் முழுவதுமாக திட்டமிடப்பட்ட அமைப்பை நோக்கிய,நவீன, தடை செய்யமுடியாத மற்றும்ஆழமான பொருளாதார வாழ்க்கையின்போக்கின் வழியில் 'தேசியக் கொள்கையை'ஈடுபடுத்த பாட்டாளி வர்க்கம் அனுமதிக்கக்கூடாது'', என்று ட்ரொட்ஸ்கி முதலாவதுஉலக யுத்தத்தின் மத்தியில் விளக்கினார்.

அவர் தொடர்ந்தார்: "நவீனப் பொருளாதாரம் முன்னர் வட்டார மற்றும் பிராந்தியஎல்லைக்குள் சிறைப்பட்டுக்கிடந்ததுடன்தன்னைத்தானே கிழித்துக் கொண்டு வந்ததுபோல, குறுகிய தேசிய நோக்கின் பைத்தியக்காரதனத்திலிருந்து தன்னையே முற்று முழுதாகத்துண்டித்துக் கொண்ட இந்தப்போக்கின்முதலாளித்துவ கள்ள வெளிப்பாடுதான்ஏகாதிபத்தியம். ஏகாதிபத்திய வடிவிலானபொருளாதார மையப்படுத்தலுக்குஎதிராகப் போராடுகின்ற அதே வேளையில்,அது ஒரு குறிப்பிட்ட போக்கு என்பதற்காகவேசோசலிசம் ஒரு போதும் அதை எதிர்ப்பதில்லை,மாறாக அந்தப் போக்கினை தனதுசொந்த வழிகாட்டும் தத்துவமாக்குகின்றது''.1

இந்த தொடரின் முடிவுப்பகுதியில் இந்தவழிகாட்டும் தத்துவத்தின் விளைபயன்களின்சிலவற்றை நாம் கவனிப்போம். இந்தக்கட்டத்தில் சோசுடோவ்ஸ்கியால் முன்னெடுக்கப்படும் தேசியவாத வேலைத்திட்டத்தின்விளைவுகளை நாம் ஆராய்வோம்.

பேராசிரியர் சோசுடோவ்ஸ்கியின் கண்டனங்களை வாசிக்கும்பொழுது உ.வ.அமைப்பு மற்றும்அவர் அழைக்கின்ற புதிய உலக ஒழுங்குஒருபோதும் பூகோள முதலாளித்துவஒழுங்கு அல்ல, இதேவேளை இது பற்றியஅமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ளஅதிவலதுசாரி தேசியவாதிகளின், மக்கள்வாதமற்றும் நவீன பாசிச அமைப்புக்களதுபிரகடனங்கள் கூட ஒருவர் நினைவு கூராமல்இருக்கமுடியாது.

அமெரிக்காவில், பட்ரிக்புக்கானனின் [Patrick Buchanan] ஆதரவாளர்களும்ஏனைய வலதுசாரி அரசியல்வாதிகளும்புதிய உலக ஒழுங்கு, உ.வ.அமைப்பு மற்றும்ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றை''உலக அரசாங்கத்தின்'' உறுப்புகள்என கூறி நிராகரித்து அமெரிக்க அரசாங்கத்தின்அதிகாரங்களையும் இறைமை உரிமைகளையும்அழிவுக்கு ஆளாக்குகின்றன என்று கண்டனம்செய்கின்றனர். ஐரோப்பாவில் இதேபோன்றநிலைப்பாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின்எதிர்ப்பாளர்களான வலதுசாரி மற்றும்நவீன பாசிசவாதிகள் மத்தியில் காணப்படுகின்றன.உ.வ.அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்இவ்விரண்டையும் சோசலிஸ்டுகளும் எதிர்க்கிறார்கள் தான். ஆனால் இதில் தீர்க்கமான பிரச்சனையாதெனில் அவ்வெதிர்ப்பு அடிப்படையாகக்கொண்டிருக்கும் வேலைத்திட்டமாகும்.

இந்த உள்ளடக்கத்தில் வெர்செயில்ஸ் உடன்படிக்கை [Versailles Treaty] தொடர்பான ட்ரொட்ஸ்கியின்நோக்கை நினைவு கூருதல் பயனுள்ளதாகும்.கம்யூனிஸ்டு அகிலம் இந்த உடன்படிக்கையைமுற்றாக எதிர்த்த அதேவேளை, ஜேர்மன்கம்யூனிஸ்ட் கட்சி ''வெர்செயில்ஸ் ஒழிக'' என்றுவெறுமனே முழக்கத்தை முன்னெடுக்கமுடியாதிருந்தது. ஏனெனில் அவ்வாறு செய்வதுஅதனைத் தவிர்க்கமுடியாதபடி நாஜிகள்மற்றும் ஏனைய வலதுசாரிதேசியவாதக்குழுக்களின் அரசியலுடன் அணிசேர்த்துவிடும்.இன்னம் சொல்லப்போனால், வெர்செயில்ஸ்மற்றும் அது அறிமுகப்படுத்தய ''புதியஉலக ஒழுங்கு'' ஆகியவற்றுக்கு எதிரானஅரசியல் எதிர்ப்பை, ஐரோப்பிய ஐக்கியசோசலிச அரசுகளுக்கான போராட்டத்தின்அடிப்படையில் அவர் நிலைநாட்டி வந்தார்.

சந்தேகத்துக்கிடமின்றி பேராசிரியர் சோசுடோவ்ஸ்கி, உ.வ.அமைப்பிற்கு எதிரான வலதுசாரிதேசிய எதிர்ப்பாளர்களுக்கு குரோதமானவர்தான். ஆனால் அரசியலில் அது ஒருவரின் விருப்பங்கள்பற்றிய பிரச்சனை அல்ல, மாறாக ஒருவர்போராடும் வேலைத்திட்டத்தின் உள்ளடக்கம்மற்றும் புறநிலை தர்க்கமும், அத்துடன்அந்த வேலைத்திட்டம் எந்த சமூகசக்திகளின்நலன்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்பதேமுக்கியமாகும். உ.வ.அமைப்பிற்க்கானஎதிர்ப்பானது, தேசிய அரசைப் பலப்படுத்தவும் அதன் அரச உரிமைகளை புனருத்தானம்செய்ய அழைப்பைவிடும் வேலைத்திட்டத்தைஅடிப்படையாகக் கொண்டு, அத்தேசியஅரசின் உரிமைகளை கீழ்ப்படுத்துவதால்உ.வ.அமைப்பை ''சட்ட விரோதமானது''என்று கண்டனம் செய்வது வலதுசாரிதேசியவாத அரசியல் போக்குடன் அரசியல்அணிசேர்தலையே உருவாக்க முடியும்.

உ. வ. அமைப்பிற்க்கு ''மனிதாபிமான முகத்தை''வழங்கியும் அதனுடைய ஜனநாயக பண்பில்பிரமைகளை ஊட்டியும் வருவதில் அரசுசாரா அமைப்புகள் மற்றும் செய்திநிறுவனங்களின் பாத்திரத்தை பேராசிரியர்சோசுடோவ்ஸ்கி தனது கட்டுரை முழுவதும்அம்பலப்படுத்த விழைகிறார். ஆனால்தேசிய அரசு தொடர்பாக வருகையில்அவர் தானே பிரமைகளையும், கட்டுக்கதைபுனைவதையும் ஊக்குவிக்கிறார்.

அவர்அரசு நிறுவனங்கள் தம்மை நிதிநிறுவனங்களின்பிடியில் இருந்து விடுவித்துக்கொள்ளவும் நேரடிஉற்பத்தியாளர்களின் உரிமைகளை மீட்கவும்அரசு நிறுவனங்களின் மாற்றத்திற்கு அழைப்புவிடுக்கிறார். அவரது நோக்கம் தேசியஅரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கவும்இறுதியில், முதலாளித்துவ அரசின் சீர்திருத்தத்தைநிறைவேற்றவும் ''மக்கள்'' இயக்கத்தைவளர்த்தெடுப்பதுதான். ஆனால் வரலாற்றுஆதாரங்கள் அத்தகைய திட்டத்தின் சாத்தியமின்மையை எடுத்துக்காட்டுகிறது.

முதலாளித்துவதேசிய அரசு என்பது சக்திமிக்க பொருளாதாரநலன்களால் கைப்பற்றப்பட்டிருக்கும்சமுதாயத்துக்கு மேலாக நிற்கும் ஏதோநடுநிலையான அரசியல் நிறுவனம் அல்ல.அது முதலாளித்துவ வர்க்கத்தினை உருவாக்கியதும் அதன் அமைப்பும் ஆகும். இந்த அரசுபரந்த மக்கள் திரளால் எப்படியோ''கைப்பற்றப்'' பட்டு அவர்களின் நலன்களின்பேரில் ஜனநாயகப்படுத்தப்பட முடியாமல்போனது.

இதன் கருத்து தொழிலாளவர்க்கமும் அதன் கூட்டணியும் ஜனநாயகக்கோரிக்கைகளுக்காகப் போராடக்கூடாது,அல்லது இதற்கான போராட்டத்திற்குஏனைய சமூக வர்க்கங்களிலிருந்து வென்றெடுக்க முடியாது என்று அர்த்தப்படவில்லை. மாறாக, பூகோள முதலாளித்துவ சந்தையின்சர்வ அதிகாரத்துக்கும் எதிரான போராட்டத்தில் ஜனநாயகக் கோரிக்கைகள் மிகமுக்கியத்துவத்தை பெறுவதுடன், பெறவும் முடியும்.ஆனால், தொழிலாளர் இயக்கத்தின் அரசியல்போராட்டத்தின் முழு வரலாறும் காட்டுவதுபோல், அதனுடைய வடிவம் எப்படிப்பட்ட''ஜனநாயக'' மானதாக இருந்தாலும்இந்தக் கோரிக்கைகளுக்கான போராட்டம்முதலாளித்துவ அரசினூடாக அல்லாதுஅதற்கு எதிரான போராட்டத்தினூடாகத்தான்மேற்கொண்டு முன்செல்லமுடியும்

பூகோள ''சுதந்திர சந்தை'' யின் நடவடிக்கையால் இப்பொழுது உண்டுபண்ணப்பட்டிருக்கும்சமூக மற்றும் பொருளாதார சீரழிவுக்குகாரணம் மூலதனம் இலாபத்திற்கானஅதன் பூகோளப் போராட்டத்தில்தொடர்ந்து ஈடுபடும் தேவைக்காகசமுதாயத்தின் ஒவ்வொரு அம்சமும்மூலதனத்தின் தேவைகளுக்கு கீழ்ப்படுத்தப்படுகின்றதாலாகும். இதற்கான தீர்வு பொருளாதாரத்தை மேலிருந்து கீழாக மறு ஒழுங்குசெய்வதும்மற்றும் பரந்த பெரும்பான்மையினரதுதேவைகளை நிறைவுசெய்ய விஞ்ஞானமற்றும் கலாச்சார முன்னேற்றங்களின்பயன்படுத்தல்களின் அடிப்படையில் முற்றிலும்புதிய சமூக முன்னுரிமைகளை நிறுவுதலைதவிர குறைவான எதையும் வேண்டி நிற்கவில்லை.

ஆனால், பேராசிரியர் சோசுடோவ்ஸ்கிசந்தேகத்திற்கிடம் இன்றி ஒத்துக்கொள்ளும்முன்னோக்கான முதலாளித்துவ அரசின்மூலம் அது அடையப்பட முடியுமா? அதற்குபரந்த ஜனத்திரள் அரசியல் அதிகாரத்தைப்பயன்படுத்தும் புதிய வடிவிலான அமைப்பின்உருவாக்கத்தையும் அரசியல் அமைப்புமுறையை முழுவதுமாக மாற்றி அமைப்பதையும்தனது இலக்காகக் கொண்டுள்ள ஒருஅரசியல் இயக்கம் தேவையில்லையா?இதற்கு எதிரான அனைத்தும் நிச்சயமாகபிரமைகளை உண்டுபண்ணுவதும், உ. வ.அமைப்பின் ஆதரவாளர்களால் ஊட்டிவளர்க்கப்பட்டு வருபவை போல அதேஅளவு ஆபத்தானதுமாகும்.

பேராசிரியர்சோசுடோவ்ஸ்கியின் முன்னோக்கின் ஒருங்கிணைந்தஉள்ளடக்கம் ''சுதந்திர-சந்தை'' நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்ட சமூக மற்றும்பொருளாதாரச் சீரழிவு தடுக்கப்படுவதற்கு,தேசிய அரசாங்கங்களுக்கும் அவற்றின்நிதி நிறுவனங்களுக்கும் தேசிய பொருளாதாரஒழுங்குமுறை கொள்கைகளுக்குத் திரும்புமாறுநிர்ப்பந்தித்து அழுத்தம் கொண்டு வந்தால்முடியும் என்ற அவரது நம்பிக்கைதான்.இது போருக்குப் பிந்தைய செழுமையைப்பண்பிட்டுக்காட்டும் தேசிய பொருளாதாரஒழுங்கமைப்புக் கொள்கைகளின் மூலதாரியானபிரித்தானிய பொருளாதார வாதியானஜான் மேனார்ட் கெயின்சின் [John Maynard Keynes] ஆய்வை அடிப்படையாகக் கொண்டதாகும்.

அனைத்து கெயின்சியனிச ஆதரவாளர்களைப்போலவே சோசுடோவ்ஸ்கியும் முதலாளித்துவபொருளாதார நெருக்கடியின் ஊற்றிற்குபொருளாதார தேவையின் [Economicdemand] பற்றாக்குறையை காரணம்காட்டுகிறார்.

இதை மிகத் தெளிவாக அவரது புத்தகமான"வறுமையின் பூகோளமயமாக்கல்" என்பதில்நிலைநிறுத்துகிறார். சர்வதேச நாணநிதியத்தினால்உதவி வழங்கப்படும் சீர்த்திருத்த திட்டங்கள்வேலையின்மையை உருவாக்கலும், "உற்பத்திசெலவைக்குறைத்தல்" போன்றவற்றால் உலக மக்கள் தொகையின் பெரும் பகுதியினரின்ஏழ்மைக்கு வழிவகுக்கும் மற்றும் ''கொள்வனவுசெய்யும் சக்தியை பாரியளவில் சுருங்கச்செய்யும்'' என எழுதுகிறார்.

''வளர்ந்தமற்றும் வளர்ந்துவரும் நாடுகளில் முறையே,குறைந்த மட்டத்திலான வருவாய்கள்உற்பத்தியில் தாக்குதலை ஏற்படுத்தி மேலும்தொடர்ச்சியான ஆலை மூடல்களுக்கும்திவால்களுக்கும் வழியமைக்கின்றன. இந்தநெருக்கடியின் ஒவ்வொரு நிலையின் இயக்கமானது பூகோளரீதியான மிகை உற்பத்தியையும்நுகர்வோர் தேவையின் வீழ்ச்சியையும்நோக்கியிருக்கும். சமூகத்தின் நுகர்வதற்கானதகமையின் குறைவு மூலம், உலகரீதியில் பிரயோகிக்கப்படும் உலகரீதியான பொருளாதார [Macro-economic] சீர்த்திருத்தங்கள் இறுதியில்மூலதனம் பெருகுவதற்கு தடையாகிறது.''2

முதலாளித்துவ நெருக்கடியின் இத்தகையஆய்விலிருந்து திட்டவட்டமான அரசியல் முடிவுகள்ஊற்றெடுக்கின்றன என்பது தெளிவாகிறது.பேராசிரியர் சோசுடோவ்ஸ்கி நிலைநாட்டுகிறவாறு, பூகோள நிதி நிறுவனங்களால் திணிக்கப்படும்வேலைத்திட்டம் இறுதியில் மூலதனம் விரிவடையதடையாக இருந்தால், அங்கே அப்பொழுதுஇந்தக் கொள்கைகளை பின்நோக்கிதிருப்பும் நோக்கம் கொண்ட அரசியல்இயக்கம் வளர்வது சாத்தியப்படும்.அத்தகைய பின்நோக்கிய திருப்பம் இறுதிவிளைவாக மூலதனத்திற்கே நன்மை விளைக்கும்அரசியல் இயக்கம் வளர்வதை சாத்தியப்படுத்தும்.

எவ்வாறாயினும், நாம் எடுத்துக்காட்டப்போவது போல், இலாப முறைக்குள்இருக்கும் முரண்பாடுகளால் எழும் நெருக்கடிகளும், தேவையின் பற்றாக்குறையும் தவறானகொள்கைகளின் விளைபொருள் அல்ல.மாறாக அது மிகஅடிப்படையான போக்குகளின் வெளிப்பாடாகும். அப்படியானால்,தேவையினை விரிவடையச்செய்வதன் அடிப்படையிலான சீர்திருத்த வேலைத்திட்டம் அதனைத்தீர்க்காது என்பது தெளிவு.

சோசுடோவ்ஸ்கி''வாங்கும் திறனையும் ('தேவைப்பகுதி'),உலகரீதியான வேலைவாய்ப்பின் உருவாக்கத்தையும், வறுமைக் குறைக்கும் உலகரீதியானகொள்கைகளை விரிவாக அடங்கிய புதுச்சட்டங்கள் மூலம் வர்த்தகத்தை ஆளுமைசெய்ய அழைப்பு விடுக்கிறார்.3.

1998-ல் வெளியிடப்பட்ட,நிதியுத்தம் எனத் தலைப்பிடப்பட்ட கட்டுரையில்,அவர் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டத்தைதெளிவாய் விளக்குகிறார்: "போருக்குப்பிந்தைய காலகடடத்தை அடுத்து பிரதானமுதலாளித்துவ சக்திகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, கொள்கைகளுக்குத் திரும்பவேண்டும்,அவற்றை பூகோள அளவில் பயன்படுத்தவேண்டும்''.4.

அவர் எழுதுகிறார், "உலக ரீதியானநெருக்கடி மத்தியப்படுத்தப்பட்ட வங்கிமுறைஅழிதலைக்குறிக்கிறது. அதன் பொருள் தேசியப்பொருளாதார இறைமையின் குறைவும்,சமுதாயத்தின் சார்பில் பணம் உருவாக்கப்படுவதைக் கட்டுப்படுத்த தேசிய அரசால்இயலாமல் போனமையும் ஆகும்''.

அவர் நிற்கின்ற அறிவியல் மற்றும் அரசியல்மரபுகள் இறுதிப்பந்தியில் வெளிக்காட்டப்படுகிறது.

சோசுடோவ்ஸ்கி எழுதுகிறார்: ''தற்போதுள்ளநிதிநெருக்கடியானது உலகெங்கும் உள்ளதேசிய அரசு நிறுவனங்களின் அழிவை மட்டும்உண்டுபண்ணவில்லை, 1944-ல் பிரெட்டன் ஊட்ஸ் [Bretton Woods] மாநாட்டில் நிறுவன முன்னோடிகளால் ஏற்படுத்தப்பட்ட போருக்குப் பிந்தையநிறுவனங்களின் படிப்படியான சிதறுண்டுபோதலையும் (மற்றும் தனியார்மய சாத்தியத்தினை)கூட கொண்டிருக்கிறது. சர்வதேச நாணயநிதியத்தின் தற்போதைய அழிவிகரப் பாத்திரத்திற்குமாறாக இந்த நிறுவனங்கள் அவற்றின்வடிவமைத்தவர்களால் தேசியப் பொருளாதாரங்களின் உறுதிப்பாட்டைப் பாதுகாக்கும்நோக்குடன் உருவாக்கப்பட்டது. (1944ஜுலை 22) மாநாட்டுக்கு தனது முடிவுரையில்,அமெரிக்க திறைசேரி செயலாளர் ஹென்ரிமோர்கென்த்தா [Henry Morgenthau] பின்வருமாறுகூறினார்: "தற்போதைய யுத்தத்திற்க்குகொண்டு சென்ற 'பணமதிப்பிறக்கப் போட்டிமற்றும் வர்த்தகத்திற்கு அழிவுகரமானமுதுகுக்குப் பின்னான வேலைகள் போன்றஇப்பொருளாதாரத் தீமைகளை ஒழிக்கும்வழிமுறைகளை வகுப்பதற்கு நாம் இங்குவந்துள்ளோம்''.

தேசிய பொருளாதாரஒழுங்கமைப்பின் கொள்கைகளுக்குத்திரும்புமாறு இதேபோன்று அழைப்புவிடுக்கும்,பூகோள அமைப்பு முறையின் ஏனையஅநேக விமர்சகர்களைப் போலவேசோசுடோச்ஸ்கி, கெயின்சியன் பாணி நிர்வாகத்தினைஅடிப்படையாகக் கொண்ட போருக்குப்பிந்தைய பொருளாதார ஒழுங்கு ஏன்முதல் தடவை உடைந்துபோனது என்றகேள்விக்கு ஒருபோதும் பதிலளிக்கவில்லை.

இதுவரை அத்தகைய விமர்சகர்களால்வழங்கப்படும் எந்த விளக்கமும் போல,அது றேகன் மற்றும் தாட்சரால் முன்முயற்சிஎடுக்கப்பட்ட கொள்கை மாற்றத்திற்கும்''சுதந்திர சந்தை'' தத்துவத்தின் தோற்றத்தினையும் வழக்கம்போல காரணம் காட்டுவதாகஇருக்கும். அத்தகைய ஆய்வு எவ்வாறாயினும்றேகன் மற்றும் தாட்சர் போன்றசிறிய மற்றும் மிகக் குறிப்பிட்ட வரையறைக்குட்பட்ட தனிநபர்கள் எப்படி ''உலக வரலாற்றுமனிதர்களாக" உருமாற்றம் செய்யப்பட்டார்கள் என்றோ, அல்லது 1960களில் பொருளாதாரகிறுக்கன் ஆக குறிப்பிடப்பட்ட சிக்காகோ''சுதந்திரசந்தை'' பள்ளியின் தந்தை மில்டன்பிரீட்மேன் [Milton Friedman] 1980 களில் பொருளாதார அறிவுடைமையின் ஊற்று என குறிப்பிடப்பட்டார்என்றோ விளக்க முடியாது.

"சுதந்திரசந்தையின்" தோற்றத்திற்கான வேலைத்திட்டத்தினை யுத்தத்திற்க்கு பிந்திய பொருளாதாரஒழுங்கின் நெருக்கடி, அபிவிருத்தி, அதன் தோற்றம்ஆகியவற்றை ஆய்விற்கு உட்படுத்துவதன்மூலமே விளங்கிக்கொள்ள முடியும்.

பிரெட்டன்ஊட்ஸ் உடன்படிக்கையை உருவாக்கவும்,மற்றும் அதனை அடுத்த ஆண்டுகளில் அபிவிருத்திசெய்யப்பட்ட கொள்கைகள் முதலாவதாகயுத்தத்தின் கடைசிக் காலகட்டத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் காலனித்துவ நாடுகளிலும்ஒரேமாதிரியாக வளர்ச்சியடைந்த மக்கட்திரளின்உள்ளுறைந்த புரட்சிகர இயக்கத்திற்குபதில் ஆகும்.

முதலாளித்துவ வர்க்கத்தின்மிகவும் தொலைநோக்கு கொண்டஅரசியல் பிரதிநிதிகள் மூலதனத்தின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் மற்றும் வாழ்க்கைத்தரங்களை பொதுவில் அபிவிருத்தியடையச்செய்வதை உறுதிப்படுத்தும் வரிசைக்கிரமமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால்தாம் வரிசையாய் எழுச்சிகளை எதிர்கொள்ளநேரிடும் என்பதை உணர்ந்தனர். அவைமுதல் உலக யுத்தத்தைத் தொடர்ந்துவந்ததைவிடவும் பரந்த அளவிலாய் எழுவதும்சாத்தியம் என்பதை உணர்ந்தனர். வேறுவிதமாகச் சொன்னால், இரு உலக யுத்தங்களுக்கும்மாபெரும் வீழ்ச்சி எனும் பொருளாதாரஅழிவுக்கும் பிறகு, முதலாளித்துவ பொருளாதாரம் மேலிருந்து திரும்பக்கட்டி அமைக்கப்படாவிட்டால், அங்கு கீழிருந்து அதனைத் தூக்கி வீசும் உண்மையான ஆபத்து உள்ளது என்பது உணரப்பட்டது.

சுதந்திரச் சந்தையின் தங்கு தடையற்றநடவடிக்கைகளின் சமூக மற்றும் அரசியல்விளைபயன்கள் பற்றிய பீதியே பிரெட்டன்ஊட்ஸ் அமைப்பின் பிரதான உள்ளடக்கமாகும்.அதற்கான நடவடிக்கைகளாக நிலையானநாணய உறவுகளை உருவாக்கல், மூலதனக்கட்டுப்பாடுகள், தேசியப் பொருளாதாரத்தினை கட்டுவதற்கான அரசாங்கங்ஙளைதூண்டுதல், மற்றும் பரந்த சமூக நலநடவடிக்கைகளை அமைத்தல் ஆகியவைமேற்கொள்ளப்பட்டன. இவை யுத்தத்திற்குபின்னான விரிவாக்கத்திற்கான கட்டமைப்பைவழங்கின.

ஆனால் இந்தக் கொள்கைமுன் முயற்சிகள் முக்கியமானவையாகஇருந்தும், அவைதாமாகவே வெற்றிபெறமுடியவில்லை. முதலாளித்துவத்தின்வரலாற்றில் நீண்ட செழிப்பான காலப்பகுதியான- யுத்தத்திற்கு பின்னான விரிவாக்கத்தின் அடிப்படைக்காரணம் 1920-களிலும் 1930-களிலும் ஐக்கிய அமெரிக்கநாடுகளிலும், அங்கிருந்து ஏனைய வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளிலும் அபிவிருத்தியடைந்தஒன்றிணைக்கும் தொழிற்பிரிவு [Assemble line] முறையை அடிப்படையாகக் கொண்டபுதிய முதலாளித்துவ உற்பத்தி வழிமுறையின்விஸ்தரிப்பாகும். இந்த புதிய உற்பத்தி முறைகளும்அவற்றுக்கு இணைந்துபோகும் அரசியல்மற்றும் சமூக கட்டமைப்பின் நிறுவலும்இலாப வீதங்களை மீட்டமைத்தலை சாத்தியமாக்கின.

இறுதி ஆய்வில் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் நீண்ட எழுச்சிக் காலப்பகுதியானதுஅது அரசாங்கக் கொள்கைகளால்முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் அல்லதுதடுக்கப்பட்டிருக்கலாம், அதன் விளைவுஇலாபங்களின் விரிவாக்கம் ஆகும். அதிகரித்தஇலாபங்கள் அதிகரித்த முதலீடுகளுக்குவழிவகுத்தன. அவை மேலும் விரிவாக்கம்இடம்பெறும் வண்ணம் முறையே கூடுதல்வேலைவாய்ப்புகளையும், நுகர்வோர்தேவைகளின் விரிவாக்கத்திற்கும், புதிய சந்தைகளின்உருவாக்கத்திற்கும் வழிவகுத்தன.

இந்தஒழுங்கான வட்டம் தொடர்கின்றவரை, வர்த்தக சுழற்சியில் ஏற்ற இறக்கங்கள்இருந்த போதும் முதலாளித்துவப் பொருளாதாரம் தொடர்ந்து விரிவடைந்தது. ஆனால்மார்க்ஸ் ஆய்வு செய்தவாறு இலாபமுறைக்கும், மூலதனம் திரள்வதற்கும்உள்ளே அடிப்படை முரண்பாடுகள் இருக்கின்றன. அதன் அர்த்தம் சில நிலைமையில் அது கட்டாயம்உடையும்.

இறுதி ஆய்வில், முதலாளித்துவப்பொருளாதாரத்திற்குள்ளே இலாபத்திற்கானமுற்றுமுழு ஊற்று தொழிலாள வர்க்கத்தின்உயிருள்ள உழைப்பிலிருந்து உபரி மதிப்பு கறந்தெடுக்கப்படுவதில் தான் இருக்கிறது. ஆனால்இலாப வீதங்கள் முதலீடுசெய்யப்பட்டுள்ளமொத்த மூலதனத்துடன் தொடர்புடையன.அதாவது மூலப்பொருட்களிலும், இயந்திரத்திலும்முதலிடப்பட்டுள்ள மூலதனத்துடனும் (மாறாமூலதனம்), உழைப்புச் சக்தியின் மீது முதலிடப்பட்டுள்ள மூலதனத்துடனும் (மாறும் மூலதனம்)ஆகும்.

மாறும் மூலதனம் உபரி மதிப்பிற்கானமுழு ஆதாரமாக இருக்கும் வரையில்,இந்த உபரி மதிப்பு என்றுமில்லா அளவுமொத்த மூலதனத்தை (மாறும் மற்றும்மாறா மூலதனத்தை) அதிகரிக்கும். முதலாளித்துவஉற்பத்தியை மிக விரிவடையச் செய்யும் இம் மூலதனத்திரட்சி இலாப வீதத்தில் ஒருபோக்கினைத் தூண்டும். அது மொத்தமாகஇடப்பட்டுள்ள மூலதனத்துக்கும் மொத்தஉபரி மதிப்புக்கும் இடையேயுள்ள விகிதாசாரம்வீழ்ச்சியடைவதாகும். இந்த நிகழ்ச்சிப்போக்கின் தோற்றம் நெருக்கடிக்குவழிவகுக்கும்.

இவ்வாறாக நெருக்கடியின்மத்தியில் இருப்பது தேவையின் பற்றாக்குறைஅல்ல மாறாக இலாபங்களின் பற்றாக்குறையே தான், அல்லது இன்னும் குறிப்பாகச் சொன்னால் முந்தைய வீதத்தில் மூலதனம் தொடர்ச்சியாகவிரிவடைவதற்கு இலாபங்கள் போதுமானஅளவு இல்லாமை தான்.

இலாபவீத வீழ்ச்சிப்போக்கு 1960 களின் முடிவில் எடுத்துக்காட்டப்பட்டது.இதனைத்தொடர்ந்து 1970 களில் ஒரு தொடர்பொருளாதார, நிதிநெருக்கடிகள் உருவாகியதுடன் நிலையான நாணயமாற்றுக்கானபிரெட்டன் ஊட்ஸ் நிதியமைப்பை இல்லாதொழித்தது. இது 1974-75 இல் யுத்தகாலத்தின் பாரிய வீழ்ச்சியின்பின்னர் ஆழமான பின்னடைவை உருவாக்கியது.

இது இரண்டு முக்கிய விளைவுகளை உருவாக்கியது.முதலாவதாக, முன்னைய காலத்தில்தொழிலாள வர்க்கத்திற்கு வழங்க கடமைப்பட்ட சமூகநல நிலைமைகளை அரசாங்கங்கள்இல்லாதொழிக்க தொடங்கின. இரண்டாவதாக, இலாபவீத வீழ்ச்சியிலிருந்து மீழ்வதற்காகபூகோளமயமான உற்பத்தி முறைகளைஅபிவிருத்தியை அடித்தளமாக கொண்டமறுசீரமைப்பு போக்கை மூலதனம்ஊக்குவித்ததுடன், கணணி தொழில்நுட்பத்தையும்பிரயோகிக்க தொடங்கியது.

இந்த நெருக்கடிகளை ஆராய்வது முதலாளித்துவ வர்க்கத்தின்எந்தவொரு பிரிவோ அல்லது முழுமுதலாளித்துவவர்க்கத்தாலோ யுத்ததிற்க்கு பின்னரானகாலகட்டத்தால் குறிப்பிடப்பட்ட தேவையின்பெருக்கத்திற்கும், சமூகநல சலுக்ைகளுக்குமான கொள்கைகளுக்கு ஏன் திரும்பமுடியாதுபோனதற்கான என்பதற்கான சாத்தியமின்னையை வெளிப்படுத்துகின்றது. சம்பளத்தினதும்,சமூகநல நடவடிக்கைகளது ஒவ்வொருஅதிகரிப்பும் தேவையின் அளவை கூட்டும்என்பது நிச்சயம். ஆனால் இது இலாபத்தின்எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாததுடன், மொத்த மூலதனத்தின் அளவிற்கு ஏற்கனவேஇலாபம் பொருத்தமற்றதாக இருக்கும்நிலைமையிலும் கூட இப்படியான நடவடிக்கைகள் நெருக்கடியை தீவிரமாக்கும்.

இது தொடர்பான இன்னுமொரு அரசியல் காரணம் கவனத்திற்குஎடுக்கப்படவேண்டியுள்ளது. சோசுடோவ்ஸ்கி''சுதந்திர சந்தை'' யின் விளைவிற்கு எதிரானபோராட்டம் "பரந்த அடித்தளத்திலும்,எல்லா நாடுகளிலும் உள்ள பாரிய தாக்குதலுக்குரிய தொழிலாளர்கள், விவசாயிகள், சுயாதீனஉற்பத்தியாளர்கள், சிறியவியாபாரிகள்,உத்தியோகத்தர்கள், கலைஞர்கள்,கல்விமான்கள், மத பிரதிநிதிகள், மாணவர்கள்,புத்திஜீவிகளை கொண்ட சமூகத்தின் சகலமட்டத்திலுள்ள சகலபிரிவினரையும் ஜனநாயகரீதியாக உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்"என வலியுறுத்துகின்றார்.

பூகோள முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளவர்க்கம் ஏனைய வர்க்கங்களினதும்,நெருக்கமான சமூகதட்டினரதும் ஆதரவைபெற முயற்சிக்கவேண்டும் என்பது தொடர்பாக ஐயமெதுவும் இல்லை. ஆனால் கடந்த25 வருடஅரசியல் வரலாறு ஏன் இப்படியானஒரு இயக்கம் கெயின்சிய வாத தேசியஒழுங்கமைப்புக்கு கொள்கைகளுக்குதிரும்பும் அடித்தளத்தில் உருவாக்கமுடியாதுஎன்பதை எடுத்துக்காட்டியுள்ளது. கெயின்சியவாத முன்னோக்கினை சாதகமாக்கிய பொருளாதார நிலைமைகள் அதாவது 1970 களில் வீழ்ச்சிகண்டஇலாப குவிப்பின் அதிகரிப்பும் முதலீடும், இதனைஅரசாங்க பற்றாக்குறையை அதிகரிக்கசெய்வதன் மூலமாகவும் உயர் வரிகளினூடாகவும் நிலைத்திருக்க வைக்க முயல்வது பணவீக்கத்தின்அதிகரிப்பினை உருவாக்குவதுடன் பரந்தமத்தியதர வர்க்கத்தினரிடயே ஆழ்ந்தமனக்கசப்பை உருவாக்குவதிலேயைசென்றுமுடியும். சமூக சீர்திருத்தத்தின் தோல்வியின்மீதான அரசியல் எதிர்ப்புணர்வு எதிர்மாறாகறேகன் தாட்சர் அரசாங்கங்களால்மேற்க்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கான அரசியல் அடித்தளத்தை உருவாக்கும்.

''சுதந்திர சந்தை'' முன்னோக்கினால்தொடர்ந்த அனுபவங்கள் அதன் அறிமுகத்துடன்இணைந்த நப்பாசைகளையும் இல்லாதொழித்துள்ளது. இது இம்முன்னோக்கினால் ஒருகாலத்தில்கவரப்பட்ட மத்தியதர வர்க்கத்தினர்உட்பட சமுதாயத்தின் சகலபிரிவினரிடையேயும்ஆழ்ந்த நெருக்கடியை உருவாக்கியுள்ளது.ஆனால் அதிகரித்த வகையில் விலகிசென்றுகொண்டிருக்கும் மத்தியதர வர்க்கத்தினரை கடந்தகாலத்திற்குரிய தோல்வியடைந்த தேசியசீர்திருத்தவாத முன்னோக்கின் அடித்தளத்தில்தொழிலாள வர்க்கத்தை நோக்கி வென்றுகொள்ள முடியாது.

மத்தியதர வர்க்கத்தினரையும்ஏனையநெருக்கமான சமூகதட்டினரையும்தொழிலாள வர்க்கம் வென்றுகொள்ள,இலாப அமைப்பினை சீர்திருத்தும் நோக்கத்தைகொண்டிராத அதற்கு எதிரான முன்நோக்கினை முன்வைக்க வேண்டும். தொழிலாள வர்க்கம்முழு சமுதாயத்தினது உடல்,மூளை உழைப்பினால்உருவாக்கப்பட்ட பாரிய உற்பத்திச்சக்திகளை தனிச்சொத்து நலன்களுக்கானஆழுமையிலிருந்து விடுவித்து சமுதாயத்தின்சொத்துக்களாக்கி அதன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவேண்டும். அது சொல்லிலும்செயலிலும் சமுதாயத்தை புதிய சமூகநோக்கில்மறுஓழுங்கு செய்வதன் தேவையை தவிர வேறொன்றும் இல்லை என்பதை வலியுறுத்தவேண்டும்.

பேராசிரியர் சோசுடோவ்ஸ்கிசரியாக கூறுவதுபோல், "பூகோளமயமாக்கல்", "சுதந்திர சந்தை'' அமைப்பிற்கு எதிரானபோராட்டத்திற்கு "உயர்ந்தளவு ஒற்றுமையும், உலக வரலாற்றில் முன்னுதாரணம் காட்டமுடியாதளவு சர்வதேசியவாதமும் தேவை". ஆனால் இங்குதான் அவரது முன்நோக்கின்அடிப்படை பிழை உள்ளது. அந்த அளவிலானசர்வதேசியவாதம் "எமது நாடுகளின்இறைமையை நிலைநாட்டுவதன்" ஊடாகஅடையமுடியாது.

இப்பிரச்சனைக்கானஉண்மையான அடிப்படை உலகம் எதிா்எதிரானதும், போட்டி தேசிய அரசுகளுக்கிடையே அரசியல் பிளவடைந்திருப்பதே. தேசியஇறைமையை மீளமைக்க முயலும் எந்தவொருமுன்நோக்கும் அதாவது தனது எதிராளிகளுக்கும், போட்டியாளர்களுக்கும் எதிராகஒருநாட்டின் உரிமையை வலியுறுத்துவதுதவிர்க்கமுடியாதவாறு சர்வதேச ஒற்றுமையின்வளர்ச்சிக்கும், தேவையான "பூகோளமயமான" போராட்டத்திற்கு தடையாகவேஇருக்கும். மேலும் தேசிய இறைமையைவலியுறுத்துவதும், தேசிய சட்டங்களைதிறமையானதாக்க முன்னுரிமை வழங்குவதும்புதிய ஏகாதிபத்திய யுத்தத்திற்கான தயாரிப்பாகும்.

சோசுடோவ்ஸ்கி கூறுவது போல்,யுத்தமும் பூகோளமயமாக்கலும் ஒன்றுடன்ஒன்று தொடர்புடையதுடன், யுத்தம்பற்றிய அபாயத்தை விளங்கிக்கொள்ளவும்வேண்டும். இது தொடர்பாக எவ்விதகருத்துவேறுபாடுமில்லை. ஆனால் இதனால்தான் தேசிய அரசையும், அதன் தேசிய இறைமையையும் அடிப்படையாக கொண்ட முன்நோக்குமுக்கியமாக எதிர்க்கப்படவேண்டும்.இப்படியான ஒரு முன்நோக்கு யுத்தத்தைநடாத்துவதற்கான அரசியல், தத்துவார்த்தநிபந்தனைகளை உருவாக உதவியளிக்கின்றது.சோசுடோவ்ஸ்கி நேட்டோவை இல்லாமல்செய்யவும், ஆயுத தொழிற்சாலையை கலைக்கவும்அழைப்புவிடுகையில், ஒருபக்கம் இன்னொருநாட்டின் இறைமையை உறுதிப்படுத்தவும்பாதுகாக்கவும் அழைப்புவிட்டுக்கொண்டு மறுகரையில் "தனது" ஒருநாட்டின் யுத்தத்திற்கான திட்டங்களை எதிர்ப்பது சாத்தியமல்ல.

சர்வதேசிய வாதம் வெறும் நல்லுணர்வுக்குரியகட்டாயமாடதல்ல. அதற்க்கு அவசியமானதுதேசிய வாதத்தின் தன்மையை இல்லாமல்செய்வதாகும். இது உலகமக்களின் தலைவிதிதேசியஅரசுடன் பிணைக்கப்பட்டிருக்கவில்லைஎன்பதன் அடித்தளத்தில் ஆதாரமாககொண்டுள்ளதுடன், தனியார் சொத்துடமையின்கட்டமைப்பான தேசியஅரசு மனிதசமுதாயத்தின் உயர்வளர்ச்சிக்கு முக்கிய தடையாகமாறியுள்ளதுடன், அது ஓர் உயர்ந்த பொருளாதார, சமூக, அரசியல் அமைப்பினால் மாற்றீடுசெய்யப்படவேண்டும்.

முன்னோக்கி செல்வதற்கான பாதைசோசுடோவ்ஸ்கி வழிமொழிவது போல்தேசியவாத அடுப்படிக்கு செல்வதல்ல,மாறாக உலக சோசலிசத்திற்கானஅபிவிருத்திக்காக போராடுவதாகும்.இப்பதிலின் அடுத்துவரும் பகுதியில் பூகோளமுதலாளித்துவத்தினுள் இயங்கும் போக்கினால்எவ்வாறு இப்போராட்டம் தயார்ப்படுத்தப்படுகின்றது என ஆராய்வோம்

 

 

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved