World Socialist Web Site www.wsws.org |
WSWS: செய்திகள் & ஆய்வுகள்
Bundeswehr to become an army for foreign intervention ஜேர்மன் இராணுவம் சர்வதேச ஆக்கிரமிப்பு இராணுவமாகின்றது வைஸ்சேக்கர்- ஆணைக்குழுவிற்கான முன்மொழிவு By Ulrich Rippert முன்னைய ஜனாதிபதியான றிச்சார்ட் வொன் வைஸ்சேக்கரின் தலைமையில் இராணுவ சீரமைப்பு ஆணைக்குழுவின் முன்மொழிவு தொடர்பான கடந்த செவ்வாய்க்கிழமை வெளிவந்த உத்தியோகபூர்வ அறிக்கைகள் ஜேர்மன் இராணுவத்தின் கடமைகளும் எதிர்காலமும் தொடர்பாக குறிப்பிட்ட காலமாக நிகழ்ந்துவரும் தொடர்ச்சியான விவாதங்களை மேலும் கூர்மையடையச் செய்துள்ளது. இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் ஜேர்மன் இராணுவம் முதல் தடவையாக கொசவோ யுத்தத்தில், ஒரு தாக்குதல் யுத்தத்தில் ஈடுபட்ட ஒரு வருடத்தின் பின்னர் ஜேர்மன் அரசியலில் மீண்டும் மூலோபாய நலன்கள், அபாயமான நிலைமை, யுத்தத் தயாரிப்பு தொடர்பாக விவாதிக்கப்படுகின்றது. இது அடுத்த யுத்தத்திற்கான தயாரிப்பு ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது என்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. Frankfurter Allgemeinen Zeitung என்ற நாளேட்டில் குறிப்பிடப்பட்ட பழமொழியான "உனக்கு சமாதானம் வேண்டுமானால் நீ யுத்தத்திற்கு தயார் செய்" என்பது தற்போதைய நிலைமைக்கு சரியானது போல் தோன்றுகின்றது. ஆரம்பத்தில் பாதுகாப்பு அமைச்சர் ரூடொல்வ் ஷார்ப்பிங் [சமூக ஜனநாயக கட்சி] உம் கொசவோ யுத்தத்தின் போது நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவும் "ஜேர்மன் இராணுவத்தின் எதிர்கால கடமைகளுக்கும் கட்டமைப்பிற்குமான அடிப்படை" தொடர்பான ஆலோசனைகளின் முடிவினை எதிர்வரும் செப்டம்பரிலேயே முன்வைக்க இருந்தது. வித்தியாசமான நிலைப்பாடுகளை ஆழமாக ஆய்வு செய்ய தங்களுக்கு போதியளவு கால அவகாசம் தேவையென நிறைவேற்றுக்குழுத் தலைவரான றிச்சர்ட் வொன் வைஸ்சேக்கர் தெரிவித்திருந்தார். அவரது ஆணைக்குழுவில் இராணுவ நிபுணர்கள், கட்சிப்பிரதிநிதிகள், தொழிற்சங்கவாதிகள், மதக்குழுவினர், முன்னைநாள் சாத்வீக போராளிகளும் அடங்குவர். இவ் ஆணைக்குழுவின் பிரதித்தலைவராக, Die Zeit என்ற பத்திரிகையின் வெளியீட்டாளரும், முன்னாள் பிரதமர் Helmut Schmidt இன் நெருங்கிய நம்பிக்கையாளரான Theo Sommer கடமையாற்றினார். மேலும் Daimler Chrysler இன் நிர்வாகசபை உறுப்பினரான Eckhard Cordes உம், கிழக்கு ஜேர்மனின் கடைசி பிரதமரான Lother de Maiziere இக்குழுவில் இருக்கின்றனர். யூதர்களின் மத்தியசபை தலைவரான Ignas Bubi கடந்த ஆகஸ்ட்டில் இறக்கும்வரை ஆணைக்குழுவில் கலந்துகொண்டார். இங்கு ஒரு பரந்த சமூக கூட்டு உருவாக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு அமைச்சர், இவ் ஒரு அறிக்கைக்காக இலையுதிர் காலம்வரை காத்திருக்கமுடியாது விரைவாக தருமாறு நெருக்கினார். அத்துடன் பொருளாதார ரீதியாக முதலாவது அணியில் விளையாட வேண்டுமானால் பாதுகாப்பு அரசியலில் இரண்டாவது அணியிலிருப்பது தொடர்ச்சியாக சாத்தியமற்றது என தொடர்ந்தும் கூறிவந்துள்ளார். அத்துடன் "கோல் அரசாங்கத்தின் கீழ் இராணுவம் பலவருடக்கணக்காக நோக்கமும் இல்லாது, திட்டமும் இல்லாது மாற்றியமைக்கப்பட்டிருந்தது. இது பல பிரச்சனைக்கூடாகவே தனது கூட்டுக் கடமைகளை [நேட்டோவினுள்] செய்தது. ஜேர்மன், மத்திய ஐரோப்பாவில் அதன் பூகோள முக்கியத்துவமான நிலைகாரணமாகவும், அதனது அளவு, பொருளாதாரபலம் காரணமாகவும் பாதுகாப்பான ஐரோப்பாவை உருவாக்க முக்கியபங்கு வகிக்ககூடிய நிலைமையில் காலத்தை இழக்ககூடாது" என ஷார்ப்பிங் கூறியுள்ளார். வைஸ்சேக்கர் ஆணைக்குழுவின் முக்கியத்துவம் என்னவெனில் அது ஜேர்மன் மறுஇணைப்பினதும் அதனுடன் இணைந்த ஒரு முழுச் சுதந்திர அரசினது நோக்கங்களை முன்னெடுப்பதற்கான இவ்அபிவிருத்தியின் விளைவுகளிலிருந்து முடிவுகளை எடுப்பதாகும். அதாவது ஜேர்மன் இராணுவத்தை உள்நாட்டை பாதுகாக்கும் இராணுவம் என்பதிலிருந்து ஒரு குறுகிய காலத்தில் 1.3 மில்லியன் படையினரை கொண்ட சர்வதேசரீதியாக நடவடிக்கையில் ஈடுபடுத்தக்கூடிய ஆக்கிரமிப்பு இராணுவமாக மாற்றுவதும், அதன் முக்கிய கடமையாக "நெருக்கடி தடுக்கும், நெருக்கடி தீர்க்கும் தலையீடுகளில் கலந்துகொள்ள" செய்வதாகும். 1992 இல் புதிய இராணுவ ஆய்வொன்று தாய்நாட்டை பாதுகாத்தலுடன் சேர்ந்து நெருக்கடியான பிரதேசங்களில் தலையீடுசெய்வது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என உறுதிப்படுத்தியுள்ளது. பாதுகாப்புஅரசியல் திட்டமிடல் என்ற அறிக்கையில் "எதிர்காலத்தில் எமது போர் வீரர்கள் இந்நெருங்கிய உலகத்தில் தமது நாட்டிற்கான பொறுப்புடன் ஏனைய மக்களினதும், நாட்டினதும் சுதந்திரமும் நல்வாழ்க்கையும் அபாயத்திற்கு உள்ளாகையில் அதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இதனை ஜேர்மன் அரசியலும் பாதுகாப்பு நலன்களும் வழிநடத்தவேண்டும். உலகபொருளாதார அமைப்பின் கீழ் சுதந்திரமான உலக வர்த்தகமும், உலகம் முழுவதுமுள்ள சந்தைகளுக்கும் மூலப்பொருட்களுக்குமான தடையற்ற நுகர்வு பராமரிக்கப்படவேண்டும்." என குறிப்பிட்டுள்ளது.[ Difence Policy Guidelines] இவ் அடித்தளத்தில் திட்டமிட்ட வகையில் ஜேர்மன் இராணுவத்தை நேட்டோ எல்லைக்கு வெளியே கூட வெளிநாடுகளில் தலையீடு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டது. 1991 இல் ஈராக்கின் மீதான இரண்டாவது யுத்தத்தில் ஆயுத, வெடிபொருள், திட்டமிடல், நிதி உதவிகளைச் செய்தது. சிலமாதங்களில் கம்பூச்சியாவிற்கான மருத்துவ உதவி தொடர்ந்தது[1991-1993]. பொஸ்னிய யுத்தத்தின்போது யூகோஸ்லாவியா மீதான கண்காணிப்பு பொறுப்பினை ஜேர்மன் AWACS விமானிகள் எடுத்துக்கொண்டதன் மூலம் தெளிவான இராணுவக் கடமையை செய்து முடித்தனர். 1993 இல் சோமாலியாவிலும் பின்னர் கடந்த வருடம் கொசவோ யுத்தத்திலும் ஜேர்மன் இராணுவத்தினர் ஈடுபட்டனர். வைஸ்சேக்கர் ஆணைக்குழு, ஜேர்மன் இராணுவத்தினை சர்வதேச தலையீட்டிற்கு தயார் செய்யவும், அதன் அளவு, ஆயுதமயமாக்கல், கட்டளைஅமைப்பு என்பவற்றினை இந்நோக்கத்தில் உருவாக்கவும் ஆலோசனை வழங்குகின்றது. மேலும் "புதிய ஜேர்மன் இராணுவத்தின் அளவு ஒரேநேரத்திலும், காலவரையறுக்கப்பட்டதுமான இரண்டு நெருக்கடித் தலையீடுகளில் கலந்துகொள்ளக்கூடியதான அளவைக்கொண்டுதாக இருக்கவேண்டும்" எனவும் குறிப்பிட்டுள்ளது. இம்முன்மொழிவுகளில் மத்திய புள்ளியாக இருப்பது நெருக்கடிதலையீட்டுப் படையை தற்போதய 60.000 இருந்து 140.000 ஆக அதிகரிப்பதுடன், இராணுவ கீழ்மட்ட அமைப்பை 100.000 பேருள்ளதாக மாற்றுவதாகும். தற்போது 323.000 ஆக இருக்கும் படையினர் அளவு எதிர்காலத்தில் 240.000 ஆக இருக்கும். இதில் தற்போது 1/5 என்ற அளவில் இருக்கும் சர்வதேச போர்நடவடிக்கையில் ஈடுபடுவோரின் அளவு இனிமேல் 1/2 என்ற அளவில் இருக்கும். நிர்வாகதுறையிலுள்ளவர்களின் அளவு 130.000 இருந்து 80.000 ஆக குறைக்கப்பட்டு, 660 ஆகவிருக்கும் இராணுவ முகாம்கள் 40% ஆல் குறைக்கப்படும். படையினரின் அளவில் குறைக்கப்படுகையில் இராணுவசெலவீடும், கவன அதிகரிப்பும் ஆயுதங்களுக்கான செலவீனத்தில் கூடுதலாக அதிகரிக்கப்படவுள்ளது. "விலை உயர்வான நவீனமயமாக்கல்" அதாவது ஆயுதங்களும் தளபாடங்களும் நவீன தரத்திற்க்கு கொண்டுவரப்பட உள்ளதுடன் அதற்கான முதலீடு தொடர்ந்து அதிகரிக்கப்படவுள்ளது. இதற்காக தற்போது மதிப்பிடப்பட்டுள்ளதை விட வருடாந்தம் 2-3 மில்லியாடன் மேலதிக தேவையாக உள்ளது. 2010 வரையில் இதற்காக 120 மில்லியாடன் மார்க் செலவிடப்பட வேண்டியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. போக்குவரத்து தகைமையின் அளவினை இட்டுநிரப்பவேண்டிய தேவை முக்கியமாகவுள்ளது. "புதிய கடமைகள் தொடர்பாக பார்க்கையில் முக்கியமான ஆகாயப் போக்குவரத்தும் [ஆகாயத்தில் எரிபொருள் நிரப்பும் வசதி] ஐரோப்பிய கூட்டினருடன் இணைந்து திறமையான கடல்போக்குவரத்து தகமைகளும் தேவை. எதிர்காலத்து ஆயுதமயமாக்கலின் மத்திய புள்ளியாக "சகல காலநிலைகளினுள்ளும் குறிப்பிட்ட தூரத்தினை துல்லியமாக அளவிடகூடிய ஆயுதமயமாக்கல்" இருக்க வேண்டும். தொழில் ரீதியான இராணுவமும் பொதுஅதிகாரியும் வைஸ்சேக்கர் ஆணைக்குழுவின் முன்மொழிவுகள், யுத்தகாலத்தின் பின்னான பாரம்பரியமான ஜேர்மன் இராணுவத்தின் அடிப்படையாக இருந்த பொதுவான கட்டாய இராணுவசேவை என்பதிலிருந்து முற்றாக உடைத்து கொள்கின்றது. ஜேர்மன் இராணுவாதத்தின் துன்பகரமான அனுபவங்களிலிருந்து "இராணுவ உடையணிந்த மக்கள்" அல்ல தொழில் ரீதியான இராணுவமே புதிய இராணுவத்தின் முதுகெலும்பாக இருக்கவேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளது. சீர்திருத்தப்பட்ட இராணுவம் தற்காலிகமாக தொழில் ரீதியான இராணுவத்தினரை கொண்டிருக்க வேண்டுமென கூறுகையில், இதில் கூட ஆணைக்குழு தற்போதுள்ள முறையிலிருந்து மாற்றமடைகின்றது. தற்போதுள்ள 323.000 படையாட்களில் கிட்டத்தட்ட அரைவாசியான 134.000 பேரே அவர்களது சேவையை கட்டாய சேவையாக செய்கின்றனர். ஆணைக்குழுவின் கருத்தின்படி இது 30.000 ஆக குறைக்கப்பட வேண்டும். இவர்கள் கட்டாய இராணுவ சேவை "தேர்ந்தெடுக்கப்படும்- இராணுவசேவை" எனப்படுவதால் பிரதியீடு செய்ய முன்மொழிகின்றனர். ஏன் கட்டாய சேவையினை மிகவும் குறைவாக வைத்திருக்கவேண்டும் என்பதை ஆணைக்குழு பின்வருமாறு நியாயப்படுத்துகின்றது."தொடர்ச்சியான வெளிப்படையான உறுதியற்ற தன்மை காரணமாக படையின் கட்டமைப்பு மாற்றமடையக் கூடியதாக இருக்கவேண்டி உள்ளதுடன், வளர்ச்சியடையும் தன்மையும் அடுத்த தலைமுறையை உருவாக்ககூடியதாகவும் இருக்கவேண்டும்". அதாவது ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இராணுவ சேவை விரைவாக விஸ்தரிக்க கூடியதாகவும், "படையினரின் அளவு 300.000 உள்ளதாகவும் 100.000 பேரைக் கொண்ட மேலதிக படையை கொண்டதாக" விஸ்தரிக்க கூடியதாகவும் இருக்கவேண்டும். Suddeutschen Zeitung என்ற பத்திரிகைக்கு வைஸ்சேக்கர் வழங்கிய பேட்டியில், "நாங்கள் தாய்நாட்டைப் பாதுகாப்பது முக்கியமா என ஒருவரும் கூறமுடியாத ஒரு காலகட்டத்தில் வாழ்கின்றோம். இப்படியான நிலைமையில் கட்டாய சேவையை வைத்திருப்பது முக்கியமானது. இது இல்லாமல் போகுமானால் அது சர்வதேச ரீதியான பாரியவெடிப்பிற்குரிய பிரச்சனைக்குரிய அர்த்தத்திற்குரியது. இதற்கு பதில் கூற முடியாது. கட்டாய சேவையை வைத்திருப்பதனூடாகவே தேவையான மாற்றமடையக் கூடிய தன்மையை பாதுகாத்துக் கொள்ளலாம்" எனக் கூறியுள்ளார்.இன்னுமொரு புள்ளியில் ஆணைக்குழுவின் முன்மொழிவு முன்னையபாரம்பரியத்துடன் முறிவிற்கு வருகின்றது. வைமார் குடியரசிலும், நாசிகளின் கீழும் ரைஷ் இராணுவத்தின் [Reichwehr ] பொதுஅதிகாரி [General Staff] வெயர்மாக்ட் [Wehrmacht] உம் வகித்த மோசமான பாத்திரத்தின் பின்னர் இவ் கட்டளைக் கட்டமைப்பு இராணுவத்தின் மீதான நிர்வாகக் கட்டுப்பாட்டை கொண்டிருக்கும். ஆனால் பொது அதிகாரி என ஒருவரும் பயிற்றுவிக்கப்படவில்லை. அதி உயர் அதிகாரியான பொதுபரிசோதகர் [General Inspector] பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகராக இருப்பதுடன் கட்டளையிடும் அதிகாரமற்றும் இருப்பார். வைஸ்சேக்கர் ஆணைக்குழு, கட்டளையிடும் அமைப்பை அதிக மத்தியப்படுத்த முன்மொழிகின்றது. பொதுபரிசோதகரின் கீழ் "நடைமுறைப்படுத்தும் குழு" உருவாக்கப்பட்டு, இது எதிர்காலத்தில் தாக்குதல் நடத்துவதற்க்கான இராணுவ தலைமையை எடுத்துக்கொள்ளும். நடைமுறைப்படுத்தும் குழுவின் தலைமையை எடுத்துக்கொள்வதனூடாக பொதுபரிசோதகர் நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரின் உயர்அதிகாரியாகின்றார் என முன்மொழியப்படுகின்றது. Die Welt என்ற பத்திரிகை "உயர்அதிகாரியின் மேல்அதிகாரி [Chief of Staff] பொதுமேல் அதிகாரி [General Chief of Staff] என்ற பதவியில்லாது ஒரு சிறிய-மேலதிகாரிக்கான கதவு திறக்கப்பட்டுள்ளதென" குறிப்பிட்டுள்ளது. உளவுத்துறையும் கூட, இவ்வடித்தளத்தில் அமெரிக்காவிலிருந்து சுயாதீனமாகி மத்தியப்படுத்தப்பட வேண்டும். செய்திகள் தொடர்பான மதிப்பீடு, ஆய்வு, தீர்மானிப்பதற்கான தேசியத் தகமையை சீர்திருத்துவதற்காக ஜேர்மன் இராணுவத்தின் செய்திச் சேவையும் [Bundesnachtrichtendienst] தனித்தனியான பகுதிபாதுகாப்புபடையினரின் செய்திச் சேவையும் ஒன்றிணைக்கப்பட்டு பேர்லினுக்கு இடம்மாற்றப்படவுள்ளது. "நெருக்கடி நிலைமைகளின் அபிவிருத்தியை முன்னராகவே தெரிந்து கொள்ளவும், மூன்றாம் நபரின் ஒருபக்க விளக்க அறிக்கையில் தங்கியில்லாமலிருக்க இது மிகஅத்தியாவசியமானது என ஆணைக்குழு அறிக்கை குறிப்பிடுகின்றது. கட்டாய இராணுவசேவை தொடர்பான விவாதம் நெருக்கடி தலையீட்டுப்படையை குறைப்பது தொடர்பாக அனைத்து அரசியல் மட்டத்திலும் உடன்பாடு இருக்கையில், கட்டாய சேவையை மட்டுப்படுத்துவது தொடர்பான முன்மொழிவு ஆழ்ந்த விவாதத்தினை ஆரம்பித்து வைத்துள்ளது. இதன்போது எவருமே ஒரு இராணுவத் தட்டு தவிர்க்கமுடியாதபடி சமூகரீதியான அங்கீகாரத்திற்கும் அரசியல் ஆழுமையையும் பெற்றுக்கொள்ள முயலும் தொழில் ரீதியான இராணுவத்தினை கட்டுவதன் பகிரங்க அபாயம் குறித்து எச்சரிக்கவில்லை. ஜேர்மன் இராணுவத்தின் சத்தியபிரமாணத்தின் பகிரங்கப்படுத்தல் இராணுவ எதிர்ப்பாளர்களுக்கு அது தொடர்பான கசப்பான விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. முக்கியமாக இராணுவ வாதத்தின் எதிர்ப்பாளர்கள் என காட்டிக்கொண்ட பசுமைக்கட்சியினர் [Greens] இது தொடர்பாக முழுக்குருடர்களாக இருக்கின்றனர். அவர்கள் வைஸ்சேக்கர் ஆணைக்குழு அறிக்கைக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாது, தொழில்ரீதியான இராணுவம் மட்டும் இருக்கவேண்டும் என கூறும் ஒரே ஒரு கட்சியுமாகும். வைஸ்சேக்கர் ஆணைக்குழுவின் முன்மொழிவான கட்டாய சேவையினரை 30.000 ஆக குறைப்பதன் மீதான விமர்சனம் இரண்டு வகைப்படும். பாதுகாப்பு அமைச்சர் ரூடொல்வ் ஷார்ப்பிங் 80% இவ்வறிக்கையுடன் உடன்படுவதாக [இருப்பு எடுப்பு, அபாயத்திற்குரிய ஆய்வு, படையினரின் தகமை தொடர்பாக 100%] உடன்படுவதாக தனது கருத்தைக் கூறுகையில், கட்டாய சேவையினர் எதிர்கால தொழில் ரீதியான இராணுவத்தின் முக்கியமான அணிதிரட்டும் களமாக இருக்கும். எனவே கட்டாய சேவையினரின் அளவே ஒரளவு உயர்மட்டத்தில் வைத்திருப்பது தேவை என்கின்றார். அவருடைய கருத்தின்படி, கட்டாய சேவையினை இல்லாமல் செய்வது பயிற்சி முடிந்த ஒரு சிலவருடங்களில் திறமையான, புத்திசாதுர்யமானவர்கள் பொருளாதார துறையிலோ அல்லது உயர்பட்டபடிப்புகளிலோ ஈடுபட்ட பின்னர் அவர்கள் இராணுவத்தை விட்டுதூர போய்விடுகின்றார்கள் அல்லது வழமைக்கு மாறான கவர்ச்சியான விசேடகொடுப்பனவுகள் வழங்கவேண்டியுள்ளது. கட்டாய சேவையில்லாவிடின் வலதுசாரிகளும் பொருளாதாரத்திலும் ஆய்வுத் துறையிலும் போதியதிறமையின்மையினால் சந்தர்ப்பம் கிடையாதவர்களுமே இராணுவத்தில் சேர முன்வருவர். "இதனால் எங்களுக்கு முட்டாள்களும், மொட்டைத் தலையர்களுமே [நாசிகள்] கிடைப்பர், சில பத்திரிகைகள் பாதுகாப்பு அமைச்சரை மிகசேறுபூசி எழுதுவர்" என்கின்றார். நவீன ஆயுததொழில்நுட்பத்திற்கு விசேட பயிற்றுவிக்கப்பட்டவர்கள் தேவையாக இருக்கையில் சட்டபூர்வமான கட்டாய இராணுவ சேவையினை வைத்திருப்பதனூடாக ரூடொல்வ் ஷார்ப்பிங் பாடசாலைகளுக்கும், பல்கலைக் கழகங்களுக்கும் செல்லும் ஒரு தலைமுறையினர் மீதான பிடியினை வைத்திருக்கின்றார். கட்டாய இராணுவ சேவைகால மாதங்களின் போது படைவீரர் தொழிலுக்கு செல்லமுடிவு எடுக்கசெய்ய ஒரு சில திறமையானவர்கள் மீது ஆழுமை செலுத்துவதற்கான போதிய சந்தர்ப்பங்களுண்டு. ஷார்ப்பிங் தனது விவாதத்திற்கு ஏற்கெனவே தொழில் ரீதியான இராணுவத்தினை அமைத்துள்ள அல்லது அண்மையில் அமைக்கத் திட்டமிட்டுள்ள ஐரோப்பிய அண்டை நாடுகளிலிருந்து உதாரணங்களை எடுத்துக்காட்டி ஆதரவு தேடுகின்றார். அங்கும் அவர் பயப்படுவது போல் பிரச்சனைகள் தோன்றியுள்ளன. முக்கியமாக பிரித்தானியாவில் உடனடியாக தீவிர முரண்பாடுகளையும், எதிர்ப்பையும் சந்திக்கவேண்டியிருந்தது. ஷார்ப்பிங் இலும் பார்க்க கூடுதலான எதிர்ப்பை இராணுவ மட்டங்களிலிருந்தும், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி, கிறிஸ்தவ சமூகக் கட்சி, பழைமைவாத பத்திரிகைகளில் இருந்தும் இராணுவ சேவையினை கட்டுப்படுத்துவதற்கும், படையின் அளவினை குறைப்பதற்கும் எதிராக கேட்கக் கூடியதாக உள்ளது. ஒரு பக்கத்தினர் அபாயமான நிலைமையுள்ளது என்ற மதிப்பீட்டை ஏற்றுக்கொள்ளாது எப்போதும் தயார்நிலையிலுள்ள இராணுவம் தேவையற்றது என கருதுகையில், Die Welt என்ற பத்திரிகை ரஷ்யாவின் ஸ்திரமற்ற, நிலையற்ற சூழ்நிலை காரணமாக ஐரோப்பாவில் பாரிய இராணுவ முரண்பாடு முற்றாக இல்லாமல் போய்விட்டதென கருதமுடியாதென எழுதியுள்ளது. பழமைவாத பிரிவினர் கட்டாய இராணுவசேவை "மெதுவாக இல்லாமல் போவதனுாடாக" ஜேர்மன் இராணுவம் சமூகத் தொடர்பினை இழந்துவிடும் எனப் பயமுறுகின்றனர். இத்தொடர்பு எல்லா யுத்தங்களிலும் மக்களை அணிதிரட்டுவதற்கான அடிப்படையை உருவாக்குகின்றது. வெளிநாட்டுக் கொள்கை தகவமைவு கட்டாய இராணுவசேவை, படையினரின் அளவு தொடர்பான விவாதங்களில் ஜேர்மனியின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான பழைய முரண்பாடுகள் மீண்டும் எழுகின்றது. வைஸ்சேக்கர் ஆணைக்குழுவின் முன்மொழிவுகள் கொசவோ யுத்தத்தின் பின்னர் திட்டமிட்டு வேகமாக ஒரு ஐரோப்பிய பாதுகாப்பு மூலோபாயத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் அடிப்படையில் ஒரு நவீன, சர்வதேச ரீதியாக ஆக்கிரமிப்பு இராணுவத்தை கட்டும் நோக்கத்தை கொண்டதாகும். இது ஐரோப்பிய படையுடன் நெருங்கி இயங்கி அதனுடன் ஒன்றிணையும் நோக்கில், நேட்டோவில் அமெரிக்க ஆழுமையை மீறிச்செல்லும் நோக்கத்தைக் கொண்டது. இதுவும் இதனுடன் இணைந்த ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கப் படையின் வெளியேற்றமும் குறித்து ஆணைக்குழுவின் முன்மொழிவுகளை எதிர்க்கும் பழைமைவாத பிரிவினர் பயப்படுகின்றனர். Die Welt பத்திரிகை "ஜேர்மனியில் நிலைகொண்டுள்ள நேட்டோ- வான்படை உட்பட இன்னும் 100.000 அமெரிக்க இராணுவபடை ஐரோப்பாவில் இன்னும் குறிப்பிடத்தக்களவு உள்ளது. இது ஜேர்மன் பாதுகாப்பு மூலோபாயத்திற்கு எப்போதும் முக்கிய பங்களித்திருந்தது" என ஞாபகப்படுத்துகின்றது. வைஸ்சேக்கர் ஆணைக்குழுவால் முன்மொழியப்பட்ட நாட்டுப்பாதுகாப்பு படையின் அளவை குறைப்பதால் "இது அமெரிக்கபடை இதுவரை தேவையாக இருந்த விமான நிலையம், படைத்தளம் போன்றவற்றை நிரப்பப் போதாது என பயப்படுகின்றது. பரந்த கட்டமைப்பையும், தந்திரோபாய ஏவுகணை எதிர்ப்புத்திறனை உள்ளடக்கிய அமெரிக்க பாரிய படையின் 50.000 படைவீரர்களையும் 800 தாங்கிகளையும் 440 ஆட்லறி நிலைகளையும் ஜேர்மனி இட்டுநிரப்புமா என்ற பயமே இதுவாகும். இத் தொகையானது பரந்த அளவில் பார்த்தால் ஐரோப்பாவில் நிலைகொண்டுள்ள பிரித்தானிய, பிரான்சு படையின் மொத்தஅளவாகும்". வைஸ்சேக்கரின் அறிக்கை முன்வைக்கப்பட்ட அடுத்தநாள் பொதுபரிசோதகர் Hans-Peter von Kirchbach இன் இராஜினாமா எவ்வளவிற்கு கருத்து முரண்பாடுகள் சம்பந்தமானது என்பது இதுவரை தெளிவற்றதாக இருக்கின்றது. பொதுப் பரிசோதகர் தான் தனது இராஜினாமாவிற்கான காரணத்தை வெளிப்படுத்தாது இருப்பதாக பாதுகாப்பு அமைச்சருடன் உடன்பட்டுள்ளதாக மட்டும் கூறியிள்ளார். வெளிநாட்டு அரசியல் கொள்கை தொடர்பான தகவமைவு மீதான சிக்கலான கேள்விகளும் கருத்து முரண்பாடுகளும் இருக்கையில் ஷார்ப்பிங் இராணுவ சீரமைப்பு தொடர்பான விவாதங்களை மிகவும் குறைக்க விரும்புகின்றார். தனது அமைச்சு உடனடியாக திட்டமொன்றை முன்வைக்குமெனவும் 3 கிழமைகளின் பின் பாராளுமன்றம் இறுதியாக முடிவெடுக்கும் எனவும் அறிவித்துள்ளார். எந்த நிலமைகளின் கீழும் மட்டுமட்டான செய்திக்குரிய பாராளுமன்ற கோடைகால விடுமுறை இக்கேள்வி தொடர்பாக நிரம்ப ஷார்ப்பிங் விரும்பவில்லை.
Copyright
1998-2000 |