World Socialist Web Site www.wsws.org |
WSWS: செய்திகள் & ஆய்வுகள்
SriLankan government imposes prices rises to finance the war effor யுத்தச் செலவிற்கு நிதி திரட்டுவதற்காக சிறீலங்கா அரசாங்கம் விலை உயர்வை திணிக்கின்றது By Dianne
Sturgess ஜூன்மாதமுதற்கிழமையில் சிறீலங்காவில் அறிவிக்கப்பட்டஒரு தொடர்விலை அதிகரிப்புக்கள் ஏற்கனவேபரந்துபட்ட ரீதியில் பொதுஜன முன்னணிஅரசாங்கத்திற்கிருந்த எதிர்ப்பினை அதிகரிக்கின்றது.ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின்நிர்வாகம், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தின் இராணுவச்செலவின் சுமையை வெளிப்படையாகஉழைக்கும் மக்கள் மேல் சுமத்துகின்றது. சித்திரை மாதத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள்இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவினைக் கைப்பற்றியதோடும் தொடர்ச்சியானஇராணுவத் தோல்விகளைத் தொடர்ந்தும்அரசாங்கம் பல மில்லியன் டொலர்களைபுதிய இராணுவத் தளபாடங்களுக்காகசெலவு செய்திருக்கின்றது. சமீபத்திய விலையுயர்வுகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன: ஷெல் (Shell) நிறுவனம் ஜூன்முதலாம் திகதி எரிவாயுவின் விலையை 30 வீதத்தினால்அதிகரித்தது. இதன் விளைவாக வீட்டுப்பாவனைக்கான 13 கிலோ எரிவாயு சிலிண்டர் 365 ரூபாவிலிருந்து470 ரூபாவாக அதிகரித்தது, தொழிற்துறைபாவிப்புக்கான 37.5 கிலோ சிலிண்டர் 1,095 ரூபாவிலிருந்து1425 ரூபாவாக அதிகரித்தது. கடந்த பெப்பிரவரிமாதத்தில் இந்த நிறுவனம் ஏற்கனவேஅண்ணளவாக பத்து வீதத்தால் எரிவாயுவின்விலையை அதிகரித்திருந்தது. ஷெல் நிறுவனம்அரசாங்கத்துக்குச் சொந்தமானஎரிவாயு நிறுவனத்தினை பொது ஜன முன்னணிஅரசாங்கத்தின் தனியார்மயப்படுத்தும்வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக 1995ல்விலைக்கு வாங்கியது. பெற்றோல், டீசல்ஆகியவற்றின் விலையுயர்வும் திட்டமிடப்பட்டிருக்கின்றது. எரிவாயுவின் விலையுயர்வானது அரசாங்கம்உலகச் சந்தையின் விலைத் தாக்கங்களைமட்டுப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டிருந்த சமூகநல மானியத்தினை ஒரு முடிவிற்குகொண்டுவந்ததன் விளைவாகும். விலையுயர்வினைநியாயப்படுத்திய அறிக்கையொன்றில் குமாரதுங்கா முன்னைய 400 மில்லியன் ரூபா மானியமானதுச்தற்போதைய நிலைமைகளில் அதிகரித்துவரும்யுத்த செலவீனத்தின் மத்தியில் தொடர்ந்தும்கட்டுபடியாகாது" என்றதுடன் தமிழீழவிடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தினால்ஏனைய மானியங்களும், சமூகநல நடவடிக்கைகளும் துடைத்துக் கட்டப்படும் என்றும்சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தின்கட்டுப்பாட்டுக்குட்பட்ட மின்சார சபையானது ஜூன் முதலாம் திகதியிலிருந்து சராசரியாகமுன்னைய இரண்டு மாதங்களிலும் பாவித்தமின்சாரத்தின் அளவிலிருந்து ஒப்பிடுகையில்20 வீதம் குறைந்த அளவினைப் பாவிக்காதபாவனையாளர்கள் மீது 20 வீதம் மேலதிகக்கட்டணத்தை அறவிட தீர்மானித்திருக்கின்றது.இந்த மேலதிக கட்டணமானது மே மாதத்தில்அரசாங்கத்தில் நாட்டின் அவசரகாலநிலைமை விதிகளின் கீழ் திணிக்கப்பட்டிருக்கின்றது.மின்சாரத்தின் பாவனையைக் குறைப்பதற்கானஉடனடிக் காரணம் நீர் மின்சாரம் உற்பத்தியாகும் பிரதேசங்களில் வரட்சியினால் உருவாகக்கூடியபற்றாக்குறையாகும். ஆனால் இந்தமேலதிகக் கட்டணம் மின்சாரசபை சராசரியாக மின்சாரபாவனை அலகின் கட்டணத்தை10 வீதமாக கூட்டுவதற்காக எடுத்த முடிவின்மேல் திணிக்கப்படுகின்றது. அரசாங்கத்திற்கும்ஜப்பானிய பண்நாட்டுக் கூட்டுத்தாபனமான (TNC) நிப்பொன் ரெலிகொம் (Nippon Telecom) நிறுவனத்திற்கும் சொந்தமானசிறீலங்கா ரெலிகொம் ஜூன் மாதத்திலிருந்துகட்டணங்களை 20 வீதத்தினால் உயர்த்தியுள்ளது.நீர்வளச் சபையானது மின்சாரம், எரிவாயுவிலையதிகரிப்பினை காரணம் காட்டி நீரின்விலையை 20 வீதத்தினால் உயர்த்துவதற்குதிட்டமிட்டிருக்கின்றது. இந்த அதிகரிப்புக்கள்உடனடியாக ஏனைய உற்பத்திப் பொருட்கள்,சேவைகள் மீதான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. போசனசாலைகளில் விற்கப்படும்உணவின் விலை ஏற்கனவே 15 இலிருந்து 25 வீதத்திற்குஅதிகரிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன்எரிவாயுவை சக்தியாகப் பாவித்து உற்பத்திசெய்யப்படும் பொருட்களின் உற்பத்திச்செலவும் பாதிக்கப்படவிருக்கின்றது. இறுதி அதிகரிப்பானது பாதுகாப்பு வரியை1 வீதத்தினால் அதாவது 6.5 வீதத்திற்கு அதிகரித்ததாகும். இந்த வரியானது யுத்த செலவிற்காக குமாரதுங்க அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மறைமுக வரியானதுதொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு பாரியளவிலான பொருட்களை உள்ளடக்குமளவிற்குவிரிவுபடுத்தப்பட்டுள்ளது. அரசாங்கம்தனியார் நிறுவனங்களையும், பொது நிறுவனங்களையும் இரண்டுநாள் சம்பளத்தை யுத்தநிதிக்கு "நன்கொடை" வழங்கும்படி வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. இந்த "வேண்டுகோள்"பணவீக்கத்தினோடு ஒத்துப்போவதற்குபோராடும் தொழிலாளர்கள் மத்தியில்ஆத்திரத்துடன் கூடிய எதிர்ப்பினை உருவாக்கியிருக்கின்றது. மே மாதத்தில் மட்டும் வாழ்க்கைச்செலவு சுட்டெண்ணானது 21 புள்ளிகளினால்-2505 ஆக அதிகரித்திருக்கின்றது. அனைத்துவிபரங்களின்படி விலையுயர்வுகளை தீர்மானிப்பதற்கான மந்திரி சபைக் கூட்டமானது ஒரு அமைதியானவிடயமாக இருக்கவில்லை. பெரும்பான்மையான மந்திரிகள் தங்கள் பாராளுமன்றத் தொகுதிகளுக்கு முகம்கொடுக்க முடியாதென்றுஒப்பாரி வைத்தனர். குமாரதுங்க எரிவாயுநிறுவனத்தின் முடிவு தொடர்பாக அதிருப்திதெரிவித்தார். எப்படி இருப்பினும் இறுதியில்அவர் தற்போதைய நிலைமைகளில் விலையுயர்வானது அத்தியாவசியம் என்பதை வலியுறுத்தியதுடன்அனைவரையும் இதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார். மானியங்களைவெட்டுவது பாதுகாப்பு வரி சம்பள"நன்கொடைகள்" என்பவை அனைத்தும்பிற்போக்கு யுத்தத்திற்கு பரந்துபட்டமக்களை கொள்ளையடிப்பதன் ஒருபகுதியாகும். ஆனையிறவு இராணுவ முகாமின்வீழ்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம் ஆயுதக்கொள்வனவிற்காக நிதி செலவளிக்கும் விருந்தில்ஈடுபட்டிருக்கின்றது. இஸ்ரேலிடமிருந்து போர்விமானங்களையும், பீரங்கிப் படகுகளையும்,செக் குடியரசியமிருந்து தாங்கிகளையும்,பாகிஸ்தானிடமிருந்து பல குழல் ஏவுகணைகளையும் (MBRL), சிறு ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் வாங்கிக் குவிப்பதன் மூலம் யாழ் குடாநாட்டில் சிக்குண்டு கிடக்கும் தனது 30.000 இராணுவத்தினருக்கும் முட்டுக்கொடுக்கும் பதட்ட நடவடிக்கையில்ஈடுபட்டுள்ளது. சமீபத்திய வானொலிபேட்டியொன்றில் பிரதி பாதுகாப்பு அமைச்சர்அனுருத்த ரத்வத்தை ஆயுதங்களை வாங்குவதற்காக குமாரதுங்கா 24 பில்லியன் ரூபாக்களைஉடனடியாக ஒதுக்கியிருப்பதாக குறிப்பிட்டார்.ஐக்கியத்திற்கு வேண்டுகோள் விடுத்த அவர்"இந்த யுத்தத்தின் காரணமாக உருவாக்கப்பட்ட வாழ்க்கைச் செலவின் உயர்ச்சி தொடர்பாக மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது.பாதுகாப்புச் செலவினங்கள் யுத்தத்தினால்ஊதிப் பெருத்திருக்கின்றது" என்றார். இராணுவ நிலைமைகளின் சீரழிவு தொடர்பாகஆளும் வட்டாரங்களில் நிலவும் கவலையை சமீபத்திய சண்டே ரைம்ஸ் (Sunday Times) பத்திரிகையின் இரண்டு ஆசிரியத் தலையங்கங்கள்வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருந்தன.இந்தப் பத்திரிக்ைகளின் வர்த்தகப் பகுதியானதுஏற்கனவே உடைந்து கொட்டும் நிலையில்உள்ள சிறீலங்காவின் பொருளாதாரத்திற்குஏற்படக்கூடிய பின்விளைவுகள் தொடர்பாகஅழுது புலம்பியிருந்ததுடன் தீவிரமான சேமிப்புவேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கோரியிருந்தது. "சென்மதி நிலுவைப் பிரச்சினையின்அளவும், முக்கியத்துவமும் அந்தளவுக்குவந்துள்ளதால் உடனடியாகவும், தீவிரமாகவும்நடைமுறைப்படுத்தக் கூடியதுமானதற்காலிகமாக சாத்தியப்படக்கூடியநடவடிக்கைகளின் தேவையை வேண்டுகின்றது.நாட்டினை யுத்தத்திற்கான பாதையில்இட்டுச் செல்வது பொருளாதார முனையில்அசாதாரணமான நடவடிக்கைகளையும்வேண்டிநிற்கின்றது." இந்தக்கட்டுரை அரசாங்கம் "முக்கியத்துவம் குறைந்த விடயங்களில்வெளிநாட்டு செலவினை" முழுமையாகவெட்டுவதற்கும் இறக்குமதிப் பொருட்களைக்குறைத்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டபொருட்களை" பாவிக்கும்படியும் சிபார்சுசெய்தது. சென்மதி நிலுவை பற்றாக்குறையானது கடந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் 73 வீதத்தினால்அதிகரித்திருக்கின்றது. இதற்கான பிரதானமானகாரணம் உலகச் சந்தையில் எண்ணெய்பொருட்களின் விலை அதிகரிப்பாகும். அரசாங்கத்தின் பாரிய இராணுவச் செலவீனங்களின் விளைவுகளின்தாக்கம் சென்மதி நிலுவை நெருக்கடியைமேலும் மோசமாக்கும். ஏனையஅவதானிகள் கொழும்பு பங்குச் சந்தையின்"உயிரோட்டமற்ற" தன்மையையும் வெளிநாட்டவர்கள் வெளிப்படுத்திய அக்கறையின்மையினால்உள்நாட்டு முதலீட்டாளர்கள் "பெரியவேதனைக்கு" உட்பட்டிருப்பதையும்சுட்டிக்காட்டினர். அரசாங்கம் யுத்தத்திற்குசெலவு செய்வதற்காக அரசிற்கு சொந்தமான நிலையற்ற சேமிப்புக்களை பயன்படுத்தியதின்விளைவாக பணச்சந்தையின் பிரதான வட்டிவிகிதம் 0.92 விகித அதிகரிப்பு 16.6 வீதமாக கூடியிருக்கின்றது. வரவுசெலவுத் திட்டத்தின் பற்றாக்குறைமொத்தத் தேசிய உற்பத்தியின் 8 விகிதம் என்றஇலக்கிலிருந்து 11.5 விகிதத்திற்கு கூடும் என்பதுகணிக்கப்படுகின்றது. தனியார்மயப்படுத்துதல்மூலம் கிடைக்கக்கூடிய லாபங்கள் திட்டமிட்டதிலும்குறைவாகவிருக்கின்றது. தற்போதையஸ்திரமற்ற அரசியல் நிலைமைகளில் மிகக்குறைந்தமுதலீட்டாளர்களே அரச நிறுவனங்களின்பங்குகளை வாங்குவதற்கு தயாராகஇருக்கின்றனர். "சண்டே ரைம்ஸ்" பத்திரிகையின்இரண்டாவது ஆசிரியத் தலையங்கம் "குடிமகன்பெரேரா சுட்டு வீழ்த்தப்பட்டார்"என்ற தலைப்பின் கீழ் இந்த விலையுயர்வுவெள்ளப் பெருக்கானது என்ன சமூகஅமைதியின்மையை உருவாக்கும் என்றுகவலை தெரிவித்துக் கொள்கின்றது. "குடிமகன்பெரேரா" என்பது சாதாரண மனிதனைக்குறிப்பிடும் சொற்பதமாகும். "யுத்தத்தினைபிழையாக நிர்வகித்தது" தொடர்பாகஅரசாங்கத்தினையும் "சந்தேகத்துக்கிடமானசெலவளிப்புக்கள்", "உயர்ந்த மதில்களுடன்புதிதாகக்கட்டிய மாளிகைகள்" தொடர்பாகஆயுத வினியோகத்தர்களையும் அவர்களதுஇடைத் தரகர்களையும், ஷெல் நிறுவனம் போன்றவற்றின் விலையேற்றத்தையும்திட்டித் தீர்த்துவிட்டு இந்தக் கட்டுரை பின்வரும்முடிவிற்கு வருகின்றது: "இந்தப்போர்தேசியப் பொருளாதாரக் கொள்கையின்தாக்கத்திற்கு முகம்கொடுக்க முடியாதமெதுமையான அடிவயிற்றினைக் காட்டுகின்றது.தற்போது நாடு நாடுகடந்த நிறுவனங்கள்போன்ற பேராசை பிடித்த சக்திகளினதும்,பலவித கொள்ளைக்கார சீமான்களினாலும்கருணையில் தங்கியிருக்க வேண்டியிருக்கின்றது.யுத்த பொருளாதாரத்தினையும், தேசியப்பொருளாதாரத்தினையும் முழுமையாகப்பிரித்து வைத்திருப்பதற்கான காலம் சிலவேளைகளில் கடந்திருக்கலாம். ஆனால் யுத்தத்தினால்பிறப்பெடுத்த ஸ்திரமற்ற சூழ்நிலையானதுவளர்ச்சியடையும் பொருளாதார சிக்கல்களினால் கொழுந்துவிட்டு எரிகின்றது. இது சமூககட்டமைப்பின் இறுதியான சீரழிவிற்கானகுறுகிய பாதையாகவிருக்கும். அரசாங்கம்இந்த விபரீதத்திற்கான பொறுப்பை தனதுகூட்டான உணர்மையின் மீது போடுவதற்குவிரும்பமாட்டது என்று நாங்கள் நம்புகின்றோம்." "சண்டே ரைம்ஸ்" எழுத்தாளர்கள்பத்திரிகையின் வர்த்தகப் பகுதியில் ச்பொருளாதார முனையில் அசாதாரணமான நடவடிக்கைகளை" எடுக்கவேண்டும் என்று வழங்கிய ஆலோசனையையும் "சமூகக் கட்டமைப்பின் சீரழிவு" தொடர்பான பயத்தையும் எப்படி அரசாங்கம்ஒப்பிட்டுப் பார்க்கப் போகின்றது என்பதைவிளங்கப்படுத்தவில்லை. ஒட்டுமொத்தத்தில்இந்த விமர்சனங்கள் முதலாளித்துவ வர்க்கமும்அதனது அரசியல் கட்சிகளும் முகம்கொடுக்கும்நெருக்கடியை கோடிட்டுக் காட்டுகின்றன.யுத்தத்தினை ஒரு முடிவிற்கு கொண்டுவரமுடியாமல் புதிய சுமைகளை மக்கள்மீதுசுமத்துவது உழைக்கும் மக்களின் எதிர்ப்பைக்உருவாக்கும் என்பது தொடர்பாகஇவர்கள் பயப்படுகின்றார்கள். இந்தசிக்கலான நிலையில் இருந்து தலையெடுக்கமுயல்கையில் யாருடைய நலன்கள் கவனத்தில்எடுக்கப்படும் என்பது தொடர்பாகசந்தேகம் கிடையாது. குமாரதுங்காவின்மந்திரிசபைக் கூட்டத்தில் விலையுயர்வுகள்தொடர்பான இழுபறிகளின் மத்தியிலும் "குடிமகன்பெரேரா" வின் நலன்கள் முதலாளித்துவத்தின்கொள்ளைக்கார சீமான்களின் தேவைகளுக்காக தியாகம் செய்யப்பட்டதை எடுத்துக்காட்டின.
Copyright
1998-2000 |