World Socialist Web Site www.wsws.org |
WSWS: செய்திகள் & ஆய்வுகள்
European summit in Portugal European Union proceeds with plans for independent military entity போர்த்துக்கல் இல் ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களின் உச்சிமாநாடு. ஐரோப்பிய ஒன்றியம் (EU) தனது சுயாதீனமான இராணுவத்தை யதார்த்தமாக்கும் திட்டங்களை முன்வைக்கின்றது ByUlrichRippert ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் இவ்வார ஆரம்பத்தில் போர்த்துக்கலில் உள்ள சந்தாமரியா டா பைரா (Santa Maria da Feira), வில் ஒரு உச்சி மாநாட்டை அடிப்படை மனித உரிமைக்கான நிலமை தொடர்பான அதிகாரபூர்வ திட்டத்தின் இடைக்கால அறிக்கையுடன் ஆரம்பித்துவைத்தனர். இதைத் தொடர்ந்து ஐரோப்பிய வரிசெலுத்தாமை தொடர்பான காரசாரமான விடயம் முதலில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இது பத்திரிகையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. ஐரோப்பிய தற்காப்பும், பாதுகாப்பும் [European Safety and Defence Policy (ESDP)] பற்றிய விடயம் இந்த இரண்டு நாள் கூட்டத்தின் மத்திய புள்ளியாக எடுக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்கு முன்னால் ஐரோப்பிய பிரதிநிதிகளின் இதேமாதிரியான உச்சி மாநாடு கெல்சிங்கியில் (Helsinki) கூடியபோது 50.000 முதல் 60.000 வரையிலான அதிரடி இராணுவப் படைகளை 2003ல் கட்டியெழுப்புவதாகவும், மேலும் இப்படையினர் சுயாதீனமான ஐரோப்பியத் தலைமையின் கீழ் 60 நாட்களில் யுத்தத்துக்கு தயாராய் அணிவகுத்து நிற்பதுடன், ஒரு வருடத்திற்கு தயார்நிலையில் நிற்ககூடியதாக இருப்பர் எனவும் தீர்மானித்தது. வேறு எந்தவொரு ஐரோப்பிய உடன்பாடும் இவ்வாறு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது கிடையாது. முன்னாள் நேட்டோவின் தலைவர் யாவீனா சோலானா, அவர் இப்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள ஐரோப்பாவின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு கொள்கைகளின் பணியை மாநாட்டுக்காகத் தயாரித்திருந்தார். இது ''ஒளியின் வேகத்தை ஒத்தது எனவும் வழக்கமான யார் அளவுக்கோல் போன்றதல்ல எனவும், இதுதான் இவ்விடத்தின் முன்னேற்றமாக இருக்கிறது எனவும்" பத்திரிகையாளர்களுக்கு சோலானா தெரிவித்தார். அவர் மேலும் இராணுவப் பிரிவும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இராணுவ அதிகாரிகள் பிரிவும் உள்ளடங்கிய ஒரு இடைக்காலப் குழு அரசியல் இராணுவ கேள்விகள் தொடர்பான வேலைகளை ஆரம்பித்துள்ளது எனக் குறிப்பிட்டார். அவர் மேலும், இந்த வருடத்தின் இறுதியில் நீசில் (Nice) இடம் பெறும் உச்சிமாநாட்டில் ஒரு பொதுவான அரசியல், இராணுவ இயக்கங்களுக்கான தற்காப்பு, பாதுகாப்பு அமைப்பு ஒன்று இயங்கவிருப்பதாகவும், அது இந்த ''விதை முளையிலிருந்தே'' ஆரம்பிக்கும் எனவும் தெரிவித்தார். சோலானா இரண்டு விடயங்களில் தமது கவனத்தை செலுத்தினார். அதாவது நேட்டோவுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் இணைந்த செயற்பாடும், அதேபோல் நேட்டோவில் அந்நாடுகளை இணைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தொடர்பற்ற நடவடிக்கையுமாகும். நேட்டோவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒன்றுடன் மற்றொன்று என வைத்திருக்கும் உறவும் மிகவும் சமமாகப் பேணப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். இரு அமைப்புகளுக்குமான ''சம உரிமை'' எனும் வார்த்தையாடலுக்குப் பின்னால், ஒருபுறத்தில் அமெரிக்காவின் பாரம்பரிய ஆளுமைக்கு கீழ் இருந்த நேட்டோவினுள்ளான பிளவுகளும், மறுபுறத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினுள் புதிதாக தோன்றியுள்ள இராணுவ, அரசியல், பொருளாதார ஒருமைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளல் என்ற இரண்டு அர்த்தங்கள் உண்டு. ஐரோப்பிய ஒன்றியம்-நேட்டோவின் உறவுகளைப் பற்றிய இழுபறியான கலந்துரையாடலே மாநாட்டில் நீண்ட நேரத்தை எடுத்தது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், நேட்டோவுக்குமான ஆலோசனைகளும், தீர்மானங்களையும் ஐரோப்பிய ஒன்றியம் முடிவு எடுப்பதற்கான முழுமையான இறைமையை பாதுகாக்கும் வகையில் எடுக்கப்படல் வேண்டும் என இறுதியாக ஒருவாறு உடன்பாட்டிற்கு வந்தனர். மேலும் இத்தீர்மானங்கள் அவ் அறிக்கையின் முடிவில் ''தலைமையின் முடிவுகள்'' எனும் தலைப்பின் கீழ், குறிப்பாக அதன் பாதுகாப்பு புள்ளியைப் பற்றி மிகத்தெளிவான முறையில் வலியுறுத்தப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தத்தின் பிரகாரம், அதன் சொந்த பாதுகாப்புக்கான அனைத்து நிலமைகள் (உடல் ரீதியான பாதுகாப்பு, தனிப்பட்ட ரீதியான பாதுகாப்பு உட்பட) தொடர்பாக அதற்கு சுயமாக முடிவெடுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில்தான் ஐரோப்பிய ஒன்றியம் நேட்டோவுடன் தனது பேச்சுக்களை ஆரம்பிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டது. சாமர்த்தியமான மொழிவல்லமை இதில் கையாளப்பட்டாலும், ஐரோப்பிய நலனுக்கான சுயாதீனமயமாக்கல் போக்கானது வளர்ச்சியடைந்து கொண்டிருந்தபோதும், இது அதனது அத்லாந்திக் கூட்டிற்கு எதிராக முன்வைக்கப்படுவது இதுவே முதல்தடவையாகும். தற்போது நிலவும் அத்லாந்திக்கு இடையிலான உறவுகளின் பதட்டமான நிலையைப்பற்றி Frankfurter Allgemeinen Zeitung பத்திரிகை எழுதியதாவது, ''ஐரோப்பாவின் தற்காப்பு, பாதுகாப்பு அரசியலை முன்னெடுப்பவர்கள் மத்தியில் மிகவும் முரண்பாடான கருத்து வேற்றுமைகள் நிலவுகின்றன. ஐரோப்பாவின் வளர்ச்சியும், அதனுடைய சுயாதீனமயமாக்கல் திட்டங்களும் ஒரு பொதுவான அத்லாந்திக்கு இடையிலான உடன்பாட்டுடன் ஒத்துப்போகுமா? அல்லது அமெரிக்காவின் பலத்தோடு மோதுமா? என்பவை இன்னமும் தீர்மானமாகவில்லை. மேலும் இப் பலப்பரீட்சையின் போக்கு என்பது ஒரு பேரழிவு ஆகும்.'' ஒரு ''அத்லாந்திக்கும்'', ஐரோப்பிய அரசியலான ''கோலிஸ்ட்'' (பிரான்சின்) போக்கும் ஒன்றுடன் மற்றொன்று மோதுவதையே அர்த்தப்படுத்தும். அமெரிக்காவினதும், நேட்டோவினதும் பொதுச்செயலாளர் ஐோர்ச் றொபேர்ட்சன் அத்லாந்திக்கின் பாதுகாப்புக்காக மூன்று I (ä) Improvement, Inclusiveness, Indivisibility (முன்னேற்றம், இணைத்துக்கொள்ளல், பிரிக்கமுடியாது ) தேவை எனக் கூறினார். ''முன்னேற்றம்'' இதன் அர்த்தம் யாதெனில், நேட்டோவின் இராணுவ வல்லமைக்கு ஏற்றவாறு ஐரோப்பாவின் ஆயுத அபிவிருத்தி தொடர்பானவையாக இருக்கவேண்டும் என்பதாகும். நேட்டோவிற்குள் இயங்கும் பாதுகாப்பு வல்லமையை முன்னெடுத்தல் (Defense Capabilities Initiative) எனும் பிரிவு இதற்கான ஓர் ''அளவு கோலாக'' இருக்குமென கூறியுள்ளதுடன் DCI நேட்டோவின் தொழில் நுட்ப கூட்டுறவின் மேம்பாட்டையும், உறுதிப்படுத்தலையும் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தது. ''இணைத்துக்கொள்ளல்'' என்பது நேட்டோ ஐரோப்பியக் கூட்டில் அங்கத்துவம் வகிக்காத நாடுகளான துருக்கி, நோர்வே, அயர்லாந்து, போலாந்து, ஹங்கேரி, செக்குடியரசு போன்றவற்றை நேட்டோவில் இணைப்பது தொடர்பானதாகும். இறுதியாக, ''பிரிக்கமுடியாது'' என்பது முழுமையான நேட்டோவின் துருப்புக்கள் எங்காவது இராணுவ நடவடிக்கையில் இறங்கமுடியாமல் போகும் சமயத்தில் மட்டுமே ஐரோப்பிய படைகளின் நகர்வை கவனத்தில் எடுக்க முடியும் என்பதாகும். மேற்கூறிய இந்த மூன்று I (ஐ) யுடன், மேலும் மூன்று D (®) ä Discriminate, Decouple, Duplicate அமெரிக்காவின் வெளிநாட்டு அமைச்சரான மடலைன் அல்பிரெட்டும் சேர்த்துக்கொண்டார். அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையின் கீழ் இடம்பெறும் ஏதாவதொரு இராணுவ நடவடிக்கையை தவிர வேறொரு வேறு கூட்டின் இராணுவத் தலையீட்டினை தவிர்த்துக்கொள்வது ஒரு ''பாதகமான'' (discrimination) செயலாகும், இது அமெரிக்காவுடனான ஐரோப்பாவின் பாதுகாப்பு அரசியலில் தொடர்பை இழந்துவிடகூடாது "பிளவடையக்கூடாது" (decouple), எனவும் மேலும் இந்த பாதுகாப்பு அரசியலை "பிரதியீடு" (duplicate) செய்யத்தேவையில்லை. அல்பிரெட்டின் இக்கூற்றுக்கமைய, ஐரோப்பா தனது சொந்தப் படையை வைத்திருப்பதில் ஓர் ஆட்சேபனையும் இல்லை, ஆனால் அது எப்பொழுதும் ஐரோப்பிய ஒன்றியம்- நேட்டோவின் உறவுகளை அடித்தளமாகவும், மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான புதிய பாதுகாப்பை அமைத்தல், அத்லாந்திக்குடன் இணைந்து செயல்படுதல், போன்ற இவை அனைத்தும் நேட்டோவின் வரையறைகளுக்குள் மட்டுந்தான் சாத்தியமாகும். ஒரு கோலிஸ்ட்-பாணியிலான அரசியலினூடு ஐரோப்பிய பாதுகாப்பை முன்னெடுப்பது ஐரோப்பிய சுயாதீனமயப்படுத்தலினூடு ஒரு பலம்வாயந்த உலகசக்தியாகவும் அமெரிக்காவுக்கு ஓர் பலத்த எதிர்ப்பாகவும் வளர்த்தெடுப்பதாகும். இது பிரான்சின் ஓர் பழைய "விருப்பம்" என Frankfurter Allgemeine Zeitung பத்திரிகை குறிப்பிட்டது. இதன் நோக்கம் ஐரோப்பாவுக்குள் செல்வாக்கு செலுத்தும் அமெரிக்காவின் பாதுகாப்பு கொள்கையை குறைப்பதனூடாக ஐரோப்பாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகும். ஐரோப்பியக்கூட்டானது நேட்டோவுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான தனது சுயாதீனமான அரசியல், இராணுவ நடவடிக்கைகளில் ஒரு பிரதானமான பங்காற்றும், அதேசமயம் ஐரோப்பிய நெருக்கடிக்கு ஐரோப்பியர்கள் விரும்புப்போது அதற்கு உதவ தனிமைப்படுத்தப்பட்ட, ஒருதலைப்பட்சமான அமெரிக்காவின் சில சக்திகளின் கை மேலோங்கினால் என்ன செய்வது என்ற பயமும் அதற்கு வேறு உள்ளது. அத்லாந்திக்கின் நம்பிக்கை சரிந்து கொண்டுபோவதை அமெரிக்கா கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது, மேலும் அது அத்லாந்திக்-கொள்கையுடன் பாரம்பரியமாக ஒட்டி உறவாடிய ஐேர்மனியும், பிரித்தானியாவும் இன்று வெளிப்படையாகவே இந்த பிரான்சின் "விருப்பை'' வெளிக்காட்டுகின்றன. ஐரோப்பிய ஒன்றியம், தனது பிரான்ஸ் மாதிரி அரசியலினூடு அமெரிக்காவில் தங்கியிருப்பதிலிருந்து விலகி தனது சுயாதீனமயமாக்கல், அதிகாரமயமாக்கல் போன்றவற்றை கட்டியெழுப்புவதுடன், சற்றலைற்றினூடு பெறப்படும் செய்தித் தகவல் நிலையத்தையும் ஸ்தாபிக்க இருக்கிறது. இம்முன்னேற்றத்தில் "அமெரிக்காவின் செல்வாக்கு பின் பக்க கதவின் வழியாக நுழைந்து விடுவதை தடுக்கும் முகமாக" அது, ஐரோப்பியக் கூட்டில் அங்கம் வகிக்காத நாடுகளும் இதற்கான பணிகளில் ஆலோசனைகள் வழங்கலாம் எனவும், ஆனால் அவை இராணுவத் தாக்குதலுக்கான தீர்மானங்களை வழங்கமுடியாது என்றது. இதேமாதிரியான ஒரு எதிர்ப்பை மாநாட்டுக்கு முன்னர் துருக்கி தனது இராஜதந்திரமான ஒரு சிறிய குறிப்பின் மூலம் வெளிப்படுத்தியது. ''ஐரோப்பிய-நேட்டோ அங்கத்துவ நாடு என்ற வகையிலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்க்கு விண்ணப்பித்திருக்கும் நாடு என்றவகையிலும் ஐரோப்பிய தற்காப்பு, பாதுகாப்பு நடவடிக்கை அரசியலில் மிகவும் வெளிப்படையாகவும், எதுவித வரையறைகளுமின்றி பங்குபற்ற உரிமை வேண்டும்'' எனக் குறிப்பிட்டது. இரு வாரங்களுக்கு முன்னால் துருக்கிக்கு விஐயம் செய்த சோலானாவால் இவ்விடயத்தில் துருக்கியின் கருத்தை மாற்றமுடியாது போனதுடன், அவரின் யதார்த்தமான, விட்டுக்கொடுக்கும் தன்மை போன்ற கோரிக்கைகளை துருக்கி காதில் போட்டுக்கொள்ளவும் இல்லை. துருக்கியின் வெளிநாட்டு அமைச்சு இந்தக் குறிப்பை கடந்த வருடம் வாஷிங்டனில் நடைபெற்ற நேட்டோவின் வருடாந்த விழா செய்தியில் அறிவித்தது. அதில் ஐரோப்பிய நெருக்கடிகள் ஓர் ''உயர்ந்த அர்த்தத்தை'' கொண்டுள்ளதாகவும், இது ஐரோப்பியக்கூட்டில் அல்லாத நாடுகளும் தீர்மானங்கள் எடுப்பதில் பங்குபற்றுதல் ''மிகவும் அதி முக்கியம்'' வாய்ந்தது எனவும் கோரியது. சோலானாவின் கருத்தை நிராகரித்ததின் பின்னால் வாஷிங்டன் இருப்பதாக பொதுவாக ஊகிக்கப்படுகின்றது. இவர்களுடைய தத்துவார்த்த கலந்துரையாடல் மிகவும் வித்தியாசமான நிலைப்பாடுகளையும், முடிவுகளையும் எடுத்தன. உண்மையில் இது குழப்பமானதும் ஒன்றுக்கு ஒன்று பகைமையான நலன்களையுமே வெளிப்படுத்தியது. பைராவில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், நேட்டோவுக்கும் இடையேயான ஒன்றுபட்ட, ஐக்கிய நடவடிக்கைகளும், மற்றும் நேட்டோவின் ஆதரவான சிபார்சுகளும் போன்ற இவ் அனைத்து உடன்பாடுகளுக்கும் மத்தியில், முடிவு ஓர் பெரிய ஐரோப்பாவின் சுயாதீனத்தை நிர்மாணிக்கும் திசையில் செல்வதை ஊர்ஜிதப்படுத்தியது. இதுவரையில் நேட்டோவின் இராணுவப் பலத்தின் செல்வாக்கை வைத்திருந்த அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் ஐரோப்பாவின் தொழில் நுட்ப மந்தமானது ஓர் நவீனமயமான இராணுவப் படையின் இருப்பை, மிகவும் பிரமாண்டமான செலவில் உருவாக்க நிர்ப்பந்தித்துள்ளது. பைராவின் இம் முடிவுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து நாடுகளிலும், பாரிய இராணுவமயமாக்கும் வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கான திசையில் முன்னேறுகின்றன.
Copyright
1998-2000 |