World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்

While Indian government remains silent:
A reply by the Hindustan Times to WSWS campaign in defence of filmmaker Deepa Mehta

இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் மெளனம் காக்கிறது:

திரைப்பட நெறியாளர் தீபா மேத்தாவை காக்கும் உ.சோ.வ.த. வின் பிரச்சாரத்துக்கு ஹிந்துஸ்தான் டைம்ஸின் தாக்குதலுக்கு பதில்

By Linda Tenenbaum
19 May 2000

Back to screen version

இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயோ அல்லது உத்தரப் பிரதேச முதலமைச்சர் பிரதேஷ் ஸ்ரீ ராம் பிரகாஷ் குப்தாவோ இந்தியாவில் பிறந்த திரைப்பட நெறியாளர் தீபா மேத்தாவின் ஆதரவாளர்களால் கடந்த மூன்று மாதங்களாக அனுப்பி வைக்கப்பட்ட ஆட்சேபனைக் கடிதங்களுக்கு எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை.

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர்களான கென் லோச்சும், மோஷன் மக்மல்பாவும் உலகம் பூராவுமுள்ள ஒரு தொகை கலைஞர்கள், திரைப்பட நெறியாளர்கள், புத்திஜீவிகளுடன் சேர்ந்து கலைப் படைப்பு சுதந்திரத்துக்கான மேத்தாவின் உரிமை நசுக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார்கள்.

பாரதீய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான உத்தரப் பிரதேச மாநில அரசாங்கத்தின் அங்கத்தவர்களுடன் சேர்ந்து கடந்த ஜனவரியில் இந்து சோவினிஸ்டுகள் தீபா மேத்தாவின் புதிய படமான 'வோட்டர்' (Water-தண்ணீர்) படப்பிடிப்புக்கு போடப்பட்ட செட்டுக்களை நாசமாக்கியத்ை தொடர்ந்து அவர் தயாரிப்பை இடைநிறுத்தத் தள்ளப்பட்டார். வறிய இந்திய விதவைகளின் வாழ்க்கை நிலைமைகளை சித்தரிக்கும் இத்திரைப்படம் இந்து எதிர்ப்பானது எனக் கூறி, குண்டர்கள் 650,000 டாலர்களுக்கும் அதிகமான சேதத்தை ஏற்படுத்தினர்.

பெப்பிரவரி 06ம் திகதி தீபா மேத்தா சிவில் அமைதியீனத்தை ஏற்படுத்துவதாக உத்தரப் பிரதேச அரசாங்கத்தினால் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறினார். மேற்கு வங்காள, மத்திய பிரதேச மாநில அரசாங்கங்கள் இத்திரைப்படம் தமது மாநிலங்களில் படமாக்கப்படுவதற்கு ஆதரவு வழங்க முன்வந்ததைத் தொடர்ந்து இந்து அடிப்படைவாதிகள் (Hidu Fundamentalist) தமது போக்கை மாற்றிக் கொண்டனர். முதலில் இவர்கள் மேத்தாவுக்கு கரிபூசவும் அவரின் திறமைகளை நாசமாக்கவும் அவரை பிறரின் கருத்துக்களை திருடுபவராக குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து அவரின் திரைப்படம் இந்து எதிர்ப்பானது அல்ல எனவும் ஆனால் "காந்தி எதிர்ப்பானது" எனத் தாக்குதல் நடாத்தினர். இதன் நோக்கம், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குக்கு உட்பட்ட மத்திய பிரதேசம் போன்ற பகுதிகளில் இத்திரைப்படத்துக்கு எதிராக குரோதத்தை தூண்டிவிடுவதாக விளங்கியது.

மேத்தா இத்தாக்குதல்களுக்கு எதிராக ஒரு பகிரங்கமான நிலைப்பாட்டை வகித்தார். அவர் இந்தப் பயமுறுத்தல்களுக்கு அடிபணிந்து போக மறுத்ததோடு பிறரின் கருத்தைத் திருடுபவராக காட்டும் குற்றச்சாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஆயத்தமானார்.

படப்பிடிப்பைத் தொடர்வதில் அவர் காட்டிய கண்டிப்பான போக்கும், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் பொது மக்களின் அறிக்கைகளும் மதத் தீவிரவாதிகளை மேலும் ஆத்திரமடையச் செய்தது. பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் மெளனம் சாதித்து வந்த அதே வேளையில் பிறிதொரு வட்டாரத்தில் இருந்து பிரதிபலிப்புக்கள் கிளம்பின. இந்தியத் தலைநகரான புது டில்லியில் இருந்து வெளிவரும் ஒரு பிரபல தினசரியான 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' (Hidustan Times) தீபா மேத்தாவையும் அவரின் சார்பில் ஒரு அனைத்துலக பிரச்சார இயக்கத்தை ஏற்பாடு செய்த உலக சோசலிச வலைத் தளத்தையும் (WSWS) தாக்கும் ஒரு கீழ்த்தரமான கட்டுரையை மே 3ம் திகதி வெளியிட்டது.

"தண்ணீரால்- பீதி கண்ட தீபா மேத்தா நெருப்பு கக்குகின்றார்" என்ற தலைப்பிலான முன்பக்கத் தலைப்புச் செய்தியில் மேத்தாவை "பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு தலையடி" போடும் ஒருவருக்கு ஒப்பிடுகின்றது. "வெறுப்பு தெரிவிக்கும் இந்தியக் கடிதங்களை" பிரதமருக்கும், உத்தரப் பிரதேச முதல் அமைச்சருக்கும் அனுப்பிவைக்குமாறு "பார்வையாளர்களை ஊக்குவிப்பதாக" உ.சோ.வ.த. (WSWS) த்தை குற்றம் சாட்டுகின்றது.

இந்தக் கட்டுரையாளரான ஆர்கிஸ் மோகன் தற்சமயம் கனடாவில் வாழும் மேத்தாவை ஒரு "கனடியன்" என வருணிக்கின்றார். அவர் மேத்தாவின் திரைப்பட 'செட்' டுகளுக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகளைப் பற்றியோ அல்லது அவர் அப்படத்தை வேறொரு இடத்தில் படமெடுப்பதை தடை செய்யும் வெறிபிடித்த பிரச்சாரம் பற்றியோ மூச்சும் காட்டவில்லை. அதற்குப் பதிலாக மோகன் இந்த அடிப்படைவாதிகளுக்கு சார்பாக அப்பட்டமாக வக்காலத்து வாங்கிக் கொண்டு "பொதுமக்கள் தண்ணீர் திரைப்படமெடுப்பதை எதிர்க்கிறார்கள்" எனக் குறிப்பிடுகின்றார். அத்தோடு மேத்தா ஒழுங்கை குலைக்கும் ஒரு பிரமாண்டமான சதியில் ஈடுபட்டுள்ளதாக காட்டவும் முயற்சிக்கின்றார்.

அந்த 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' கட்டுரை உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) முழு விலாசத்தையும் கொண்டிருப்பதோடு "நெருப்பும் கந்தகமும்" எனப் பொறிக்கப்பட்டுள்ள ஒரு "பிரீவ் கேஸ்" சுமந்து கொண்டுள்ள மூர்க்கமான கண்களைக் கொண்ட மேத்தாவின் கேலிச் சித்திரத்தையும் கொண்டுள்ளது.

மேத்தாவின் பேரில் தீவிரவாத மத வெறியை மேலும் கக்குவதற்கு என்றே எழுதப்பட்ட இக்கட்டுரை வெற்றியீட்டிக் கொண்டுள்ளது போல் தோன்றுகின்றது. இக்கட்டுரை பிரசுரமான தினத்திலும் அடுத்து வந்த மே 3ம் மே 4ம் திகதிகளிலும் மேத்தாவை இனவாத, தேசியவாத அடிப்படையில் கண்டனம் செய்யும் ஒரு தொகை மின் அஞ்சல்கள் (E-Mails) பிரசுரிக்கப்பட்டன.

"தீபா பொலிசாரால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டிருக்க வேண்டும். அவளது திரைப்படங்களும் அவளது பயணங்களும் இந்தியாவில் தடை செய்யப்படவேண்டும். அவள் தனது படங்களின் மூலம் இந்தியாவையும் இந்தியர்களையும் பிச்சைக்காரர்களாகவும் ஏழைகளாகவும் சமூக ரீதியில் பின்தங்கியவர்களாகவும் சித்தரிப்பதன் மூலம் அவள் இந்தியர்களுக்கு அவமானத்தை மட்டுமே கொணர்ந்துள்ளாள். அந்தவிதத்தில் கலை என்ற பேரில் சில பணத்தை சம்பாதித்துக் கொள்ளலாம்." அவள் ஒரு இந்து "ஆனால் நாற்றம் கண்டவள்" என ஒருவர் சீறி விழுந்துள்ளார்.

இன்னொருவர், தனது தாக்குதலில் மேத்தா "பொது மக்களின் உரிமைகளுள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதாக" கண்டனம் செய்தார். ஏனெனில் அவர் இந்தியாவின் சமூகப் பிரச்சினைகளை கையாண்டுள்ளார். இந்த அநாமதேய எழுத்தாளர் தீபா மேத்தா இந்தியாவில் வசிக்காததால் இங்கு படமெடுப்பதை அடியோடு நிறுத்த வேண்டும் என கோருகின்றார்.

"கிறிஸ்" மேத்தாவின் "பொறி" யினுள் அகப்பட்டுப் போனதாகவும் "உதவாக்கரைகளை விளம்பரத்திற்காகவும் உ.சோ.வ.த. வை கண்டனம் செய்வதோடு மேத்தா இந்தியாவில் தங்கி இராதவர் என்பதை மீளவும் குறிப்பிடுகின்றார். ... அவர் இந்திய கலாச்சாரம் பெறுமானங்களுக்கு அப்பாற்பட்டவர். ...ஆதலால் அவர் கனடாவிலேயே படம் எடுக்க வேண்டும்" என்கிறார்.

ஒருவர் இந்தத் தர்க்கத்தை அதன் முடிவுக்கு இட்டுச் செல்லின் கடந்த பல நூற்றாண்டுகளாக சிருஷ்டிக்கப்பட்ட பெரிதும் அழகானதும் சக்திவாய்ந்ததுமான கலைப் படைப்புக்கள்- ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் புகினியின் இசை நாடகங்கள் உட்பட (Opera) - இன்றைய உலகின் வெளிச்சத்தை தரிசித்திருக்க மாட்டா.

எந்த ஒரு கடிதங்களும் ஹிந்துஸ்தான் டைம்சின் கட்டுரையைப் பற்றிக் குறிப்பிடுவதாய் இல்லை. அல்லது அவை எந்த ஒரு அமைப்புடனும் தம்மை இணைத்துக் கொள்வதாய் இல்லை. ஆனால் அவை மேத்தாவை பயமுறுத்தும் இந்து அடிப்படைவாதிகளின் பிரச்சாரத்துடன் நேரடியாக இணைந்து கொண்டிருந்தன. அவை தீபா மேத்தா தனது படத்தை தயாரிக்கவுள்ள அடிப்படை ஜனநாயக உரிமையை வழங்க மறுத்துள்ளன.

'ஹிந்துஸ்தான் டைம்சுக்கு' அனுப்பி வைத்த ஒரு கடிதத்தில் மேத்தா பின்வருமாறு பிரகடனம் செய்தார்: "நான் என்னை ஒரு சர்ச்சைக்குரிய திரைப்பட நெறியாளராக ஒரு போதும் நினைத்தது கிடையாது. எனது படங்கள் சர்ச்சைக்கான நோக்கினைக் கொண்டு தயாரிக்கப்பட்டவையும் அல்ல. நான் "சர்ச்சைக்குரிய திரைப்பட நெறியாளர்" என்ற முத்திரை குத்திக் கொள்ள ஒரு போதும் ஆசைப்பட்டது கிடையாது.... மனவருத்தத்துக்கு உரிய விதத்தில் "ஹிந்துத்துவ பிரிகேட்" (Hindutva Brigade) எனது படங்களை இந்த அடிப்படையில் பார்க்கவே விரும்புகிறது. இந்தப் பொறுப்பற்ற கட்டுரை "சர்ச்சைக்குரிய" முத்திரையை பிரச்சாரம் செய்ததோடு உலகம் பூராவும் உள்ள சினமடைந்த இந்தியர்களிடமிருந்து வெறுப்பு அஞ்சல்களையும் உற்பத்தி செய்தது. ஒரு போலியான எடுகோளில் இருந்து திரு. மோகன் தேசியவாதக் கொதிப்புடன் கூடிய தீச்சுவாலைகளைத் தூண்டிவிட்டுள்ளார். அவர் தனது உணர்ச்சி ததும்பும் கட்டுரையை எழுதிய வேளையில் அவரின் உள் நோக்கமாக இருந்தது இதுவல்லவா"?

மோகனின் கட்டுரை தொடர்பாக எழுதுகையில் தீபா மேத்தாவின் பூமி (Earth) :1947 என்ற திரைப்படத்தின் திரைக்கதையின் அடிப்படையாக விளங்கிய 'த ஐஸ்- கன்டி மேன்' (The Ice- Candy Man) என்ற நூலின் ஆசிரியரான பப்சி சித்வா சுட்டிக் காட்டியதாவது: "இந்த தணிக்கைக்கு முன்னோடியானது. இன்றைய பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் கலாச்சாரப் பொலிசார் இப்பாத்திரத்தை வகிப்பவராகத் தெரிகிறது. இந்தத் திரைப்படத்துக்கான திரைக் கதையை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்த தகவல், ஒலிபரப்பு அமைச்சர் அருண் ஜெயிற்லி இப்போது 'வோட்டர்' படப்பிடிப்பில் ஈடுபடுவதற்கான அனுமதியை இரத்துச் செய்யும் சாத்தியம் இருந்து கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் இது ஒரு திருட்டு வேலை. இது உண்மையானால் நான் இந்தக் குற்றச் சாட்டை ஆர்.எஸ்.எஸ். நெருக்குவாரங்களுக்கு இடமளிக்கும் விதத்தில் "இந்து எதிர்ப்பு" திரைக் கதையை ஒழித்துக் கட்டுவதற்கு சாதகமாகப் பயன்படுத்த முடியும்." (ஹிந்துஸ்தான் டைம்ஸ்- மே 7)

(இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 1948ல் மகாத்மா காந்தியைப் படுகொலை செய்வதில் சம்பந்தப்பட்டது)

சித்வா தொடர்ந்து கூறுகையில் குறிப்பிடுவதாவது: "இந்தச் சகல கொடூரங்களும் படம் இன்னமும் தயராக முன்னரே இடம்பெற்றுள்ளது. இந்தக் குழப்பத்தில் கைபோட்டுக் கொண்டுள்ளது. பாசிசத்தின் கரங்களாக இல்லாது இருக்குமானால் இந்தப் புகைச்சலில் ஒருவர் நகைச்சுவையைக் காணலாம். தமது தேர்தல் தொகுதியில் இருந்து பெரும் ஆதரவைத் திரட்ட இவர்கள் தீபாவை பாவிக்கிறார்கள். நாட்டைப் பீடித்துள்ள வறுமையையும் நோய்களையும், அறியாமையையும் ஒழித்துக் கட்ட எவரும் ஒரு சிறிய அளவில் தன்னும் உதவாமல் இருக்க முடியாது".

தீபா மேத்தாவை காக்கும் பிரச்சார இயக்கத்தை தொடுத்த வேளையில் உலக சோசலிச வலைத் தளம், இந்து தீவிரவாதிகளின் பிரச்சாரம் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வு அல்ல என எச்சரித்தது. இந்து சமயத்தின் அடிப்படையிலான ஒரு வலதுசாரி தேசியவாத அரச சித்தாந்தத்தை இந்தியாவில் திணிப்பது அதன் ஒரு பாகமாகும். பெரும்பான்மையினரின் வாழ்க்கை நிலைமைகள் சீரழிந்து போய்க் கொண்டுள்ள ஒரு நிலைமையில் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையேயான சமூக ஆதாளபாதாளம் ஆழித்து வருகின்றது. பாரதீய ஜனதா கட்சி இந்திய மக்களை சாதி, மத அடிப்படையில் பிளவுப்படுத்தும் பொருட்டு இனவாத உணர்வுகளைத் தூண்டி விடுவதில் முன்னணியில் நின்று கொண்டுள்ளது.

நாம் மீண்டும் திரைப்படத் தொழிற்துறையில் உள்ளவர்களையும் சகல கலைஞர்களையும் தொழிலாளர்களையும் எழுத்தாளர்களையும் தீபா மேத்தாவை காப்பது தொடர்பாக ஒரு நிலைப்பாட்டை வகிக்குமாறும் ஜனநாயக, கலை உரிமைகள் மீதான நச்சுத்தனமான தாக்குதல்களை எதிர்க்குமாறும் வேண்டுகின்றோம்.

 

ஆட்சேபனை கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

Atal Bihari Vajpayee
Prime Minister of India
South Block, Raisina Hill,
New Delhi, India- 110011

Fax-91-11-301 9545/91- 113016857

Shri Ram Prakash Guptha,
Chief Minister,
Uttar Pradesh S,
Kalidas Morg, Lucknow, India.

Fax-91-522-239234/91-522-230002

Email- cmup@upindia.org& cmup@up.nic.in

தயவு செய்து அனைத்துக் கண்டனக் கடிதங்களின் பிரதிகளையும் editor@wsws.org மூலம் உ.சோ.வ.த. வுக்கு அனுப்பி வையுங்கள்.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved