World Socialist Web Site www.wsws.org |
WSWS: செய்திகள் & ஆய்வுகள்
Asian "recovery" on shaky foundations ஸ்திரமற்ற அடித்தளத்தில் ஆசிய "மீட்சி" By Joe Lopez பல பொருளாதார கொள்கை வகுக்கும் அமைப்புக்களும், சிந்தனைக்கூடங்களும் 1997-98 நெருக்கடியில் இருந்து ஆசியப்பொருளாதாரம் மீட்சியடைந்து விட்டதாகவும், எதிர்வரும் காலத்தில் உறுதியான வளர்ச்சியை காணக்கூடியதாக இருக்கும் எனவும் முடிவிற்கு வந்துள்ளனர். உதாரணமாக பசுபிக் பொருளாதார கூட்டமைப்புச் சபை இப்பிரதேசத்தின் வளர்ச்சி 1999 இன் 3.9% இலிருந்து இவ்வாண்டு 4.9% ஆக அதிகரிக்குமென கூறியுள்ளது. இப்பிரதேசத்தின் பொருளாதார எதிர்காலம் தொடர்பான நம்பிக்கை எவ்வாறாக இருந்தபோதும், பொருளாதார ஆய்வாளர்களின் அண்மைய கருத்துக்கள் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியிலும், அமெரிக்க சந்தைகளுக்கான ஏற்றுமதியிலும் தொடர்ந்தும் பாரியளவில் தங்கியிருப்பதால் இம்மீட்சி ஸ்திரமற்ற அடித்தளத்திலேயே இருப்பதாக கூறுகின்றன. Wall Street Journal பத்திரிகை "அமெரிக்கா தும்மினால்" என்ற தலையங்கத்தின் கீழ் "ஆசிய சீரடையும் போக்கு தனது பலத்தை இழப்பது போல் தெரிகின்றது" என, Merril Lynch இற்கான ஆசிய பொருளாதார ஆய்வாளரான Bill Belchere இன் கருத்தை வெளியிட்டுள்ளது. ஆசிய மீட்சி அபாயகரமான அளவில் அமெரிக்க பொருளாதாரத்திலும், முக்கியமாக ஸ்திரமற்ற தொழில்நுட்ப துறையிலும் தங்கியுள்ளது.Wall Street Journal பத்திரிகை "[அமெரிக்க தேவையின்] ஒரு வீழ்ச்சியானது ஆழ்ந்த அடிப்படையான நெருக்கடிகளை உருவாக்குவதுடன், கடந்த நெருக்கடியின் இரண்டு வருடங்களின் பின்னர் இப்பிரதேசத்தினை பாரிய கடனுக்குள் இட்டுச்செல்லும்" என குறிப்பிட்டுள்ளது.அல்லது Bill Belchere இன் கருத்தின்படி "வெள்ளம் வற்றியபின்னர் அழிந்துபோன மிச்சசொச்சங்கள் கூடுதலாக அங்கு இருப்பதை நாங்கள் காணலாம்" என்பதாகும். USB Warburg பொருளியலாளரான Arup Raha இதே அறிக்கையில் "மீட்சி", "ஆரோக்கியம்" போன்ற சொற்கள் "இரட்டை முழுக்கு" என்பதால் மாற்றீடு செய்யப்படலாம் எனவும், தென்கிழக்கு ஆசியாவின் மீட்சியானது அதன் ஒற்றைத்தன்மையான ஏற்றுமதியில் தங்கியுள்ளது. அப்போதிருந்தே இது அபாயகரமானதாகும் எனவும் கூறியுள்ளார்.Wall Street Journal அமெரிக்க சந்தையில் தங்கியிருக்கும் நிலையை சுட்டிக்காட்டி "முக்கிய அபாயம் என்னவெனில் பலவீனமான ஏற்றுமதியாகும். தென்கிழக்கு ஆசியாவின் மீட்சி அமெரிக்க பாவனையாளர்கள் இந்தோனேசிய தயாரிப்பான தோற்சப்பாத்துக்களையும், தாய்லாந்தின் பட்டுவகைகளையும், பிலிப்பைன்சில் உருவாக்கப்பட்ட Intel chips இனையும் வாங்குவதில் முக்கியமாக உறுதியாக்கப்படுகின்றது. அமெரிக்கா தென்கிழக்கு ஆசியாவின் பொருட்களின் முக்கிய கொள்வனவாளனாகும். அது தாய்லாந்தினதும், மலேசியாவினதும் ஏற்றுமதியின் 20% இனையும், பிலிப்பைன்சின் 30% இனையும் கொள்வனவு செய்கின்றது. சிறிய அலை பாரிய விளைவுகளை கொடுக்ககூடியது. தென்கிழக்கு ஆசியாவின் வர்த்தகம் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் பொருட்களை தயாரிக்க பயன்படுத்தும் உதிரிப்பாகங்களையும், மூலப்பொருட்களையும் விற்பனை செய்வதில் தங்கியுள்ளது" என குறிப்பிட்டுள்ளது."தற்போதுள்ள பொருட்கள் தவிர ஏனைய பாவனைப்பொருட்களின் ஊடான அமெரிக்க வர்த்தகத்தின் மூலம் இப்பிரதேசத்தின் பொருளாதாரத்தின் மீதான தாக்கம் பல மடங்காக அதிகரிக்குமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர்". ஆசிய பங்கு சந்தையின் ஸ்திரதன்மை தொடர்பாகவும் கவனம்செலுத்தப்படுகின்றது. Australian பத்திரிகை "ஆசியா இன்னும் உடைவில் உள்ளது" என்ற தலையங்கத்தின் கீழ் கடந்த மாதம் வெளிவிட்ட கட்டுரை ஒன்றில் கடந்த இரண்டு மாதங்களாக ஆசிய பங்கு சந்தைகள் பலவற்றின் வீழ்ச்சியை சுட்டிக்காட்டியது. "பூகோளரீதியாக செல் என்ற முதலீட்டு ஆலோசகர்களின் வாய்பாட்டின் பின்னால் ஆசிய நிறுவனங்களில் முதலீடு செய்ய ஓடியவர்களின் தலைமுடிகள் ஏற்கனவே முடிவிற்கு வந்துவிட்டது. Nikkei யை மட்டும் பாருங்கள் ஏப்ரலில் 20,883 சுட்டியாக இருந்தது ஆறு கிழமைகளின் பின்னர் 16,008 ஆக வந்துள்ளது. அல்லது Hang Seng மார்ச்சில் 18,301 ஆக இருந்து மேயில் 13,722 ஆகிவிட்டது. தென் கொரியாவின் முக்கிய பங்கு சந்தை 915 இலிருந்து 655 ஆகிவிட்டது. சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்சின் நிலைமையும் சிறப்பானதாக இல்லை" என மேலும் எழுதியுள்ளது. இக்கட்டுரை மேலும் Ord Minnet இன் முக்கிய பொருளியலாளரான Frank Shostak அண்மைய கருத்தான "ஆசிய மீட்சி" மூடநம்பிக்கைக்குரியது எனபதை குறிப்பிட்டது. Shostak இன் கருத்தின்படி ஆசிய பிரதேசத்தின் "எழுச்சியானது" நிதியுதவியின் தீவிர அதிகரிப்பினால் நிகழ்ந்ததே தவிர வேறொன்றுமில்லை எனவும், இந்நிதியுதவி மீழப்பெறப்படுகையில் இப்பிரதேசத்தின் இரண்டு வருடத்திற்கு முந்திய அடிப்படையான பிரச்சனைகள் அதேபோன்று இருக்கும். அரசாங்கங்கள் கடந்த இரண்டு வருடங்களாக தமது பொருளாதாரத்திற்கு பாரியளவு நிதியை உட்செலுத்தியுள்ளனர். ஆனால் இப்போக்கு காலவரையறையின்றி செல்லமுடியாது. Shostak இன் கருத்தின்படி "அவர்கள் கூடியளவு நிதியை உட்செலுத்துவது சம்பந்தமாக கவனமாக உள்ளனர் எனெனில் அது விலை அதிகரிப்பை உருவாக்கும். ஆசிய மீட்சியானது போலியானது, அதன்பின்னால் உள்ளடக்கம் எதுவுமில்லை". கிழக்காசிய பொருளாதாரத்தின் ஸ்திரமற்ற தன்மை தொடர்பாகவும், வோல்ஸட்ரீட்டின் எழுச்சியுடன் அது தங்கியிருப்பதன் முக்கியம் தொடர்பாகவும் கடந்த ஏப்பிரலில் Far East Economic Review இல் வெளிவந்த அறிக்கையின் கவனத்துக்கு உள்ளாகியுள்ளது. NASDAQ index ஏப்பிரல் 14ம் திகதி வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து வெளிவந்த இக்கட்டுரை "ஆசிய சந்தைகளை நிதித்தொற்றுநோய் மீண்டுமொரு தடவை தாக்குகின்றது" என எச்சரித்தது. "NASDAQ சுட்டி பாரிய வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து இப்பிராந்தியத்திலுள்ள ஆசிய பங்குச்சந்தைகளின் பெறுமதிகள் ஒன்றின் பின் ஒன்றாக வீழ்ச்சியடைந்து ஏப்பிரல் 17ம் திகதி 200 பில்லியன் டொலர் பெறுமாதியான பங்குகள் இல்லாதொழிக்கப்பட்டன. ஏப்பிரல் 17 இன் விற்பனை ஒருசிறிய முழங்கால் உதறலின் வெளிப்பாடாக இருக்கலாம் எனக்கூறுகையில், இப்பயம் ஆசிய முதலீட்டாளர்களின் பங்குகளை அமெரிக்க அளவின் வீழ்ச்சியுடன் ஒப்பிடத்தக்க அடித்தளத்தில் பின்வாங்க செய்தது. இவற்றிற்கிடையான உறவு பின்வருமாறு தொழிற்பட்டது. பங்குவிலைகளின் வீழ்ச்சியானது அண்மையில் அமெரிக்காவின் உள்நாட்டில் சேமிக்கப்பட்ட செல்வத்தை இல்லாதொழித்தது. தங்களது சொத்துக்களின் பெறுமதி வீழ்ச்சியடைவதை கண்ட பாவனையாளர்கள் தமது செலவைக் குறைத்ததுடன், இது அமெரிக்காவின் முக்கிய ஆசிய ஏற்றுமதிப் பொருட்களின் கேள்வியின் அளவையும் குறைத்தது. ஆசிய பொருட்களுக்கான அமெரிக்க நிறுவனங்களினது கேள்வியும் இதனால் பாதிக்கப்பட்டது. வீழ்ச்சியடையும் பங்கு விலைகள் காரணமாக மூலதனத்தின் செலவு அதிகரிப்பானது நிறுவனங்களை தகவல் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதை குறைக்க நிர்ப்பந்தித்தது" என மேலும் Far East Economic Review இன் கட்டுரை தெரிவிக்கன்றது. சிங்கப்பூர் அபிவிருத்தி வங்கியின் பொருளாதார ஆய்வுத்துறையின் தலைவரான Fred Wu இன் கருத்தை FEER என்ற பத்திரிகை எடுத்துக்காட்டியது. அவர் கடந்த வருடம் 328 பில்லியன் டொலர் பெறுமதியான எலக்ரோனிக் பொருட்களை ஆசிய நாடுகள் ஏற்றுமதி செய்துள்ளதாகவும், இதில் 36% அல்லது 117.5 பில்லியன் டொலர் பெறுமதியானவை அமெரிக்காவிற்கு சென்றுள்ளது. Fred Wu இன் கணிப்பீட்டின்படி ஆசிய பொருட்களின் அமெரிக்க ஏற்றுமதிக்கான வீழ்ச்சி ஆசியாவிலுள்ள நாடுகள் அனைத்திலும் 2% பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். உலகத்தின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான யப்பானின் பொருளாதார முட்டுக்கட்டுநிலையின் தொடர்ச்சியும், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி வெளிநாட்டு முதலீட்டின் உட்பாய்ச்சலில் தொடர்ச்சியாக தங்கியிருப்பதும் வோல்ஸ்ரீட்டின் உறுதியற்ற தன்மையை அதிகரிக்கும். ஆசியாவின் "பொருளாதார மீட்சி" குறைந்த வாழ்க்கைக்காலத்தையே கொண்டிருக்கும்.
Copyright
1998-2000 |