World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்

Ten charged in Holland and UK for deaths of 58 Chinese immigrants

58 சீனக் குடிவரவாளர்களின் மரணத்தில் ஒல்லாந்திலும் ஐக்கிய-இராச்சியத்திலும் பத்துப்போ்கள் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளனா்.

Byeith Lee
30 June 2000

Back to screen version

கடந்தவாரம் 58 சீன குடிவரவாளர்கள் ஒருலாறி-வண்டியில் முச்சுத்திணறி மரணமானநிலையில் மீட்க்கப்பட்டனர். தற்போதுஇந்த சம்பவத்தில் பத்துப் பேர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.டோவர் (Dover) துறைமுகம்வழியாக பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்கமுயன்ற 60 பேரில் 2 பேர் மட்டுமே உயிர்பிழைத்திருந்தனர்.

இந்த 58 பேரைக் காவுகொண்டமனிதப்படுகொலையில் குற்றஞ் சாட்டப்பட்டிருந்த ஏழு பேர் வெள்ளிக்கிழமை Rotterdam நகரிலுள்ள ஒரு நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.58 பேரினதும் மரணத்திற்கு காரணமானநெதர்லாந்து (ஒல்லாந்து) போக்குவரத்துநிறுவனம் ஒன்றினால் வடிவமைக்கப்பட்ட ட்றக் வண்டியின் உரிமையாளரும் இதில்உள்ளடங்கியிருந்தார். கடந்த வாரம்,டச்சுக்காரரான இந்த லாரியின் சாரதியான Perry Wacker பிரித்தானிய நீதிமன்ற முன்நிலையில்,சட்டத்திற்கு புறம்பாக நாட்டில் நுளைவதற்கும் 58 பேரின் படுகொலைக்கும் துணைபோனார்என குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் Wacker, இங்கு கண்டுபிடிக்கப்பட்ட60 பேரும் தனது லாரிக்குள் இருந்ததுசம்பந்தமாக தான் எதுவும் அறிந்திருக்கவில்லைஎன மறுத்துரைத்தார். புதன் கிழமை Kent நகர பொலிசார் மேலும் இரண்டுநபர்களை இக் குடிவரவாளர்களின்மரணத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாககுற்றம் சாட்டினர். இதில் You Yi, YingGuo என்ற இருவரும், -''சட்டத்திற்குபுறம்பாக- பிரித்தானியாவுக்குள் நுளைவதற்குவசதிசெய்து கொடுத்து சதிவேலை செய்தனர்''என் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ஒரு அகாலமரண விசாரணை அதிகாரியின்விசாரணையை தொடர்ந்து, லாரியில் அந்தகுடிவரவாளர்களின் கொடூரமானகடைசி நேரம் தொடர்பான மேலதிகவிபரங்கள் வெளிவரத் தொடங்கின. மரணத்திற்கான சட்டரீதியான காரணம் மூச்சடைத்துஇறந்து போனதாக கூறப்பட்டது. Zeebrugge ல் இருந்து டோவர் இற்குபாதை (Ferry) வழியாகப் போகும்பொழுது அவர்கள் லாறிக்குள் ஒழிந்திருந்தபகுதிக்குள் காற்று வரும் வழி அடைபட்டதுஒக்சிஜின் கிடைப்பது தடைப்பட்டுகாபன் ஈர்-ஒக்சையிட்டு நிரம்புவதற்குகாரணமாகியது. கொள்கலனுக்குள்அடைபட்டுப் போயிருந்த குடிவரவாளர்கள்திணறியடித்து தமது ஆபத்து நிலையை வெளிப்படுத்துவதற்கு பிறரின் கவனத்தை ஈர்ப்பதற்காககுளிர்சாதனப்பகுதியின் சுவரில் சப்பாத்துகளால்உதைத்தனர். மரண விசாரணையாளர் Richard Start இன் கூற்றுப்படி, '' அவர்கள்58 பேரும் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளுடனேயே இறந்து போனார்கள், சிலர் ரீ-சேட்டும்காற்சட்டையும் Trainer உம்அணிந்திருந்தனர். குடிவரவாளர்கள் எவரும்எந்த ஆவணங்களையும் கொண்டிருக்கவில்லை. பொலிசாரினால் 29 பேரின் அடையாளத்தையேஉறுதிப்படுத்த முடிந்தது.

இறந்து போனவர்களின் குடும்பத்தவர்களின் சார்பில் வாதிடும்வழக்கறிஞர்கள் சட்டபூர்வமில்லாமல்இங்குள்ள மற்றைய குடிவரவாளர்களுக்குமன்னிப்பு வழங்காததற்கு பிரித்தானியாநிர்வாகத்தை குற்றம் சாட்டினர். அப்படிவழங்கப்படுமாயின் அவர்களால் இறந்தவர்களை அடையாளம் காண்பதற்கு உதவமுடியும்.பேட்டியளித்த சட்டபூர்வமில்லாமல்இங்குள்ள ஓர் குடிவரவாளர், "இறந்துபோனவர்களின் குடும்பத்தவர்க்களுக்காகநாம் பெரும் வேதனை அடைகின்றோம்.நாம் அந்த நாளை நினைத்தால் மிகவும்மனதிற்கு வேதனையாக உள்ளதுடன்,இதில் மாண்டுபோனது நானாக இருக்கலாம்என்றுகூட நீங்கள் கருதமுடியும்" என்றார்.

தொழிற் கட்சி அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தை குடிவரவாளர்களுக்கு எதிரான தனதுநடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்குபயன்படுத்துகின்றது. அரசாங்கம் கடத்தல்கார டிறக் வண்டிச் சாரதிகளுக்கு அதிக தண்டனைகொடுக்கும்படியும், லாறிகளை மேலும்அதிக சோதனைக்குட்படுத்தவும் பிரேரித்துள்ளது. இந்த வருட ஏப்பிரல் மாதத்திற்கு பின்னர்மட்டும் சட்டத்திற்கு புறம்பான குடிவரவாளர்களை ஏற்றிவந்த 200 சரக்கு வண்டிகளின் சாரதியினர்ஒவ்வொருவருக்கும் தலா 2000ா தண்டம் அறவிடப்பட்டது. அவர்களதுவாகனத்துள் ஆட்கள் மறைந்திருப்பதுதொடர்பாக ஐயுறவு கொள்ள சந்தர்ப்பம்இல்லையெனவும், தம்மை ஊதியமற்றகுடிவரவு அதிகாரிகளாக பாவிக்க முயல்கின்றனர்எனவும் பல சாரதிகள் முறையிட்டனர்.

இப்பொழுது ஐரோப்பா முழுவதும்நடைமுறையிலுள்ள கடுமையான குடிவரவுவழிமுறைகளின் படி, புகலிடம்கோரி ஐக்கியஇராச்சியத்தினுள் சட்டபூர்வமாக நுளைவதுஅசாத்தியமானது. பிளேயர் அரசாங்கத்தின் கீழ், புகலிடம் கோரிவந்த1000 க் கணக்கானோர் போலிப் பத்திரங்களில்பயணம் செய்தனர் என்பதன் பேரில்சிறையில் தள்ளப்பட்டுள்ளனர்.அகதிகள்வருவதை தடுத்து நிறுத்துவதற்கானகடுமையான சட்டமே அவர்களில் பலர்மேற்கு ஐரோப்பாவிற்குள் நுளைவதற்கானமுயற்சிக்கு, அனேகமான சந்தர்ப்பங்களில்அவர்களது உயிரையே விலையாக கொடுப்பதுகுற்றவாளிக் கும்பல்களையும், கடத்தல்காரர்களையும் பயன்படுத்த நிர்ப்பந்தப்படுத்தியது.

Beng Chew லண்டனில் உள்ள ஒருசட்டத்தரணி (solicitor) ஆவார்.இவர் (இவரது வாடிக்கையாளர்களில்சீன அகதிகளும் அடங்குவர்) இப்படியானபல பிரயாணங்கள் பற்றி அதிகம் கேள்விப்பட்டுள்ளார். "எல்லையை கடப்பதற்கான பாதுகாப்பான இடத்தை இறுதியாய் அடைவதற்கு முன்னர், அவர்கள் பல நாட்கள் மலைகளின்ஊடாக நடந்தனர், மோசமான நிலைமைகளிலும் கரடுமுரடானதரைகளிலும் உறங்கினர்,ஆறுகளைக் கடந்து நீந்தினர். இது மிகக்கடினமானதும் கடுமையாக விலைகொடுப்பதுமாகும். அதிகமானோர் இதில் வெற்றியடைவதில்லை. வழக்கமாக அவர்கள் குளிர்காலத்திலேயேபயணம் செய்வர். சென்ற வருடம் ஒருபெண் அவளது முப்பதாவது வயதில் சக்தியின்றி (exhaustion) பரிதாபமாய் இறந்துபோனாள்என அறிந்தேன்" என கூறியுள்ளார். 1999 இல்மட்டும் ஐரோப்பாவிற்குள் நுளையும்முயற்சியில் புகலிடம் தேடிவந்தவர்களில்2,500 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்தவருடங்களில் சீன அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் தொழிற்துறைகளைமிக வேகமாக தனியார் மயப்படுத்தல்,அரச நிறுவனல்களை இல்லாது ஒழித்தல்,அத்துடன் சமுகக் கொடுப்பனவுகளில்பாரிய வெட்டடுக்களை நடாத்தல்முதலியவற்றினால் அந்நாட்டின் தொழிலாளர்களும், விவசாயிகளும் பாரியளவில் விலைகொடுக்கத்தள்ளப்பட்டுள்ளனர். இதுவே சீனாவிலிருத்துஅகதிகள் வெளியேறுவதை மிகவும் உக்கிரப்படுத்தியுள்ளது. வருடந்தோறும் அண்ணளவாக100,000 மக்கள் சீனாவிலிருந்து அகதிகளாக வெளியேறுகின்றனர். இவர்களே பிரித்தானியாவில் தஞ்சம்கோரும் பெரும் தொகையானராவர்.சீனாவிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்து சேர்ந்தவர்களுள் 5 வீதத்தினரினது அகதி விண்ணப்பங்கள்மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

டோவர் துறைமுகத்திற்கு வந்த இக்குடிவரவாளர்கள் சீனாவின் ஃபூஜியன் பிராந்திய (Fujian province) பகுதியிலிருந்துவந்தவர்கள் எனவும், அங்கு எல்லாசமூக கழகங்களும் (communities club) சேர்ந்து இந்த எல்லை கடக்கும் பிரயாணத்தை ஒழுங்கு செய்த கடத்தல் கும்பல்களுக்குகொடுக்கப்படவேண்டிய பெருந்தொகைப்பணத்திற்கு ஏற்பாடுசெய்தார்கள் எனவும்நம்பப்படுகின்றது. ஃபூஜியன் (Fujian) நகரிலுள்ள ஒரு கொட்டகையின் சுவர்ஒன்றில் மேற்கத்திய நாடுகளுக்கானபயணத்தை வெற்றிகரமாக முடித்தவர்களதுபெயர் விபரங்கள் அடங்கிய சிவப்பு நிறசுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.இவை கிராமத்தின் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்தும் ஒரு முதலீடாக நோக்கப்படுகின்றன.வெளிநாடுகளிலிருந்து அவர்களால் அனுப்பப்படும் பணம் உளளூர் பொருளாதாரத்திற்குஉதவி செய்கிறது. சீனாவின் ஆட்சியாளர்கள்மக்கள் அரசாங்க கொடுப்பனவுகளைஎதிர்பார்ப்பதற்குப் பதிலாக தாமேதமக்கான பொறுப்பை எடுப்பதைஊக்கிவிக்க ஆரம்பித்ததில் இருந்து குடிபெயர்வாளர்கள் கடத்தப்படுவதை இட்டு பெருமளவில்கண்மூடித்தனமாக இருக்கின்றது.

மனிதர்களைக் கடத்துவது ஓர் பெரும் வியாபாரமாகஉள்ளது. குடிவரவாளர் தொடர்பானசர்வதேச அமைப்பின் 1996 ஆம் ஆண்டு கணிப்பீட்டின்படி இது பெருமளவிற்கு சா்வதேச போதைப்பொருள் கடத்தலை ஒத்ததாக உள்ளதுடன்,வருடத்திற்கு ா8 தொடக்கம் ா20 பில்லியன் வரை இலாபமீட்டுவதாகஉள்ளது. ஐக்கிய-ராச்சியத்தின் குடிவரவாளர்மற்றும் குடியுரிமை நிர்வாகசபையின் ஓர்குறிப்பறிக்கையில் கணிப்பிட்டதன் படி, கடத்தல்கும்பலினர் ரூமேனியாவில் இருந்துவரும்குடிபெயர்வாளர் ஒவ்வொருவருக்கும்தலா ா1,500 ம், இந்தியாவிலிருந்துவருபவர்களுக்கு தலா ா6,000-ா9,000 வரையிலும் சீனாவிலிருந்து வருபவர்களுக்குஇன்னும் அதிகமாய் ஒவ்வொருவருக்கும்தலா ா16,000 மும் அறவிடுகின்றனர்.இந்திய உபகண்டத்தில் இருந்து ஐந்து அமைப்புக்கள் இப் பயணங்களை ஒழுங்குசெய்துகொடுக்கின்றன. இதன்போது குற்றவாளிக்கும்பல்கள் (Criminalgangs) வாழ்க்கைத்தரம் பாரியளவில் சீரழிவடைந்த, சமுதாய,அரசியல்ரீதியாக ஸ்திரமற்ற தன்மையும்,அத்துடன் கூடவே உள்நாட்டு யுத்தமும்நடந்துகொண்டிருப்பதுமான ஆபிரிக்கா,தூர-கிழக்கு, கிழக்கைரோப்பா மற்றும்லத்தீன் அமெரிக்கா வழியாக பிரயாணஒழுங்குகளை செய்துகொடுக்கின்றன.

கடத்தல்காரர்களைப் பயன்படுத்துபவர்களில் அனேகமானோர் முற்பணத்தைமட்டுமே கொடுக்ககூடியதாக இருப்பதுடன் மிகுதி தொகையை மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு வந்து வேலை தேடியபின் செலுத்துவதாக உடன்பாடு செய்துகொள்கின்றனர். இவர்கள்போகவேண்டிய இடத்தை அடைந்தபின்னர் மலிவுக் கூலியாகஉணவகங்களிலோ அல்லது வியாபாரநிலையங்களிலோ (sweat shops) வேலைசெய்யவேண்டியது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. கடந்தகிழமை ஒரு BBC விபரணநிகழ்ச்சி, ஆயிரக்கணக்கானசட்டபூர்வமற்ற குடிபெயர்வாளர்களை -குறைந்த கூலிக்கு- பல மி்ல்லியன் பவுண்ஸ்சுகளுக்கு சூப்பர் மார்கற் தொடர்களுக்கு (supermarket chains) உணவை தயாரித்து வினியோகிக்குமநிறுவனங்களில் வேலை செய்கின்றனர் என்பதை எடுத்துகாட்டியது.

ஒரு லண்டன் வக்கீலான Wah-Piow Tan, Independent பத்திரிக்கைக்்குஅளித்த பேட்டியி்ல் ்"அவர்கள்திருப்பி அனுப்பப்படும் நிலைமைக்கு முகம் கொடுக்கவேண்டி வரும்இடத்து, குடும்பஸ்த்தர்களாக இருந்தாலும்கூட அவர்களது நாட்டிற்கு திருப்பியனுப்பப்பட்டால் பெருமளவில்கடத்தல் கும்பல்களின் கடன்சுமை காரணமாக தற்கொலை செய்கின்றார்கள். இதற்கு வேறெந்தவழியும்இல்லை. அவர்கள் சீனாவி்ல்இருந்து அவர்களது கடனை அடைப்பதாயின் 200 வருடங்கள் பிடிக்கும்".எனகூறினார்.

 

 

 

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved