World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்

Beijing's WTO concessions signal a new stage in China's capitalist restructuring

உலக வர்த்தக அமைப்புடனான பெய்ஜிங்கின்உடன்பாடு சீனாவின் முதலாளித்துவ மறுசீரமைப்பின்புதிய கட்டத்தை எடுத்துக்காட்டுகின்றது.

By James Conachy
28 June 2000

செய்திகளில் மிககுறைவாக இடம்பெற்ற,உலக வர்த்தக அமைப்புடன் இணைந்துகொள்வதற்கான சீனாவின் அண்மையஉடன்பாடானது உலகிலே ஆகக்கூடியசனத்தொகையை கொண்ட நாட்டின்பொருளாதார, அரசியல், சமூக வாழ்க்கையில்பாரதூரமான விளைவுகளை கொண்டிருக்கும்.பத்துவருட காலத்திற்குள் நாடுகடந்தநிறுவனங்களும், வங்கிகளும் நிறுவனங்களின்ஒன்றிணைவுகளாலும் அல்லது கூட்டு முயற்சிகள்மூலமும் உள்ளூர் பொருளாதாரத்தின்மீது ஆதிக்கம் செலுத்துமென சீன ஆய்வாளர்கள்முற்கூட்டியே கூறுகின்றனர்.

கடந்த20 வருடங்களாக பெய்ஜிங் அரசு ஏற்றுமதிநோக்குடைய விசேட வர்த்தக வலையங்களில்வெளிநாட்டு நேரடி முதலீட்டினை ஊக்குவித்துவருகின்றது. பெய்ஜிங் அரசு சீனாவின் தேசியசந்தையை நாடுகடந்த நிறுவனங்கள்அணுகுவதை அதிகாரத்துவத்தட்டு கட்டுப்படுத்துவதற்காக சிக்கலாக ஒழுங்குமுறைகளையும்வரிகளையும் பிரயோகித்து வந்தது. விசேடவர்த்தக வலையங்களில் பெரும்பாலானவைஅரசாங்க நிறுவனங்களின் தனிஉரிமையாகஇருந்தன. தற்போது இவற்றுள் பெரும்பான்மையானவற்றில் ஒரு பகுதி தனிப்பட்ட பங்குடைமையாளர்களின் சொத்தாகவும், மிகுதி அதிகரித்துவரும்தனியார் வர்த்தகர்களின் கைகளிலும் மாறியுள்ளது.

அமெரிக்காவுடன் இறுக்கமாக உருவாக்கப்பட்டுள்ள உலகவர்த்தக அமைப்பு உடன்பாடுஇந்நிலையை ஒருமுடிவிற்க்கு கொண்டுவருகின்றது.2005ம் ஆண்டளவில் சீனாவின் தேசிய பொருளாதாரத்தினுள் வெளிநாட்டு நிறுவனங்கள் உற்பத்திசெய்யவும், விற்பனை செய்யவும் இருந்தஒருதொகை கட்டுப்பாடுகள் இல்லாதுபோகின்றது. இதனூடாக நாடுகடந்தநிறுவனங்கள் தமது சொந்த விநியோக,விற்பனை நிலையங்கள், சந்தைப்படுத்தல்,வாடிக்கையாளர்களுக்கு ஆதரவானபராமரிக்கும் வலைப் பின்னல் போன்றவற்றைசுயாதீனமாக உருவாக்கமுடியும்.

2001-2006 வரை சீனா தனது வரியை சராசரி24.6% இருந்து 9.4%ஆக குறைக்கவுள்ளது. கணனிகள்,உயர் தொழிற்நுட்ப பொருட்கள் மீதானவரிகள் முற்றுமுழுதாக இல்லாது போகின்றது.சீனாவினுள் இறக்குமதி பாரியளவில் அதிகரிக்கும்என எதிர்பார்க்கப்படுகின்றது. சீனாவின்உயர்பாதுகாப்பான வங்கிகள், காப்புறுதிநிறுவனங்கள், பங்கு இலாப சந்தைகள்திறந்துவிடப்படபோகின்றது. 5வருடங்களுள்பூகோள நாணய அமைப்புகள் சீனாவின்உள்ளூர் வங்கிகளுக்கு உள்ள உரிமைகளைகொண்டிருப்பதுடன், சந்தையை ஒருதடையுமின்றி அணுககூடியதாக இருக்கும்.

பெய்ஜிங்அரசு அரசியல் ஆதரவுவழங்கிய சீனாவின்1000 பாரிய பங்குவியாபார கூட்டுத்தாபனங்களை குறைக்கவுள்ளது. இவற்றுள் பல நியூயோர்க்கிலும் கொங்கொங்கிலும் பங்குசந்தைகளில்ஈடுபட தயாரிப்புச் செய்கின்றன. இவற்றில்அரசு உரிமை சராசரி 62% ல் இருந்து 51%ஆகவோ அல்லது சிலவேளைகளில் மேலும்குறைவாக வீழ்ச்சியடைகின்றது. தற்போதுபகுதி-தனியார்மயமாக்கப்பட்ட சீன ரெலிகொம்கூட்டுத்தாபனம் 50% வெளியார் உடமைக்குதிறந்துவிடப்படவுள்ளது.

பாரிய பூகோளநிறுவனங்களான Motorola, Siemans, AT&T,MCI ஆகியவைரெலிகொம் நிறுவனங்களின் கூடுதலானபங்குகள் மீது அக்கறை கொண்டுள்ளன.சீன விமான சேவைகள் வெளிநாட்டு நிறுவனங்களின்முக்கிய இலக்காகியுள்ளது. Rupert Murdoch இன் செய்தி நிறுவனம் சீனத் தொலைக்காட்சியில்கூடிய பங்கெடுக்க முயல்கின்றது. மசகுஎண்ணெய் கைத்தொழிலில் சர்வதேசரீதியாகஇரண்டாம் நிலையில் உள்ள சீன தேசிய பெற்றோலிய கூட்டுத்தாபனத்தாபனமான PetroChina வின் 20% பங்கினை அண்மையில் BP Amoco எடுத்துள்ளது. இந்த வருடம் வோல்ஸ்ரீட் பங்குச்சந்தையில் சீனாவின் எண்ணெய்நிறுவனமான Sinopec இணைந்த பின்னர் Shell நிறுவனம் இதனது முக்கிய பங்காளனாகஉருவாகுவதாக எதிர்பார்க்கபடுகின்றது.ஏற்கனவே 80 வெளிநாட்டு வங்கிகளும்பங்குலாப நிறுவனங்களும் சீனாவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இயங்குகின்றன.

வளம்மிகுந்த 500 பாரிய நாடுகடந்த நிறுவனங்கள்நீண்ட காலத்திற்க்கு முன்னரே சீனாவில்இயங்க ஆரம்பித்துவிட்டன. பலதுறைகளில்சீன-பங்காளிகளுடனான கூட்டு நிறுவனங்களூடாகதமது நிலையை ஸ்திரப்படுத்திக்கொண்டன.இப்படியான ஒழுங்குகள் மூலம் நாடுகடந்தநிறுவனங்கள் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டதொழிற்சாலைகள், கிளைகள், விநியோகவசதி, தொழிலாளர்கள் போன்றவற்றுடன்பெய்ஜிங் அரசின் பாதுகாப்பையும் பெற்றுக்கொள்கின்றன. ஏற்கனவே வரிகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் சந்தையின் ஆதிக்கத்தைஆக்கிரமித்துள்ளதுடன் திறமை குறைந்தசீன உற்பத்தியாளரை சந்தையை விட்டுஅகற்றியுள்ளனர்.

மோட்டார் வாகனதொழிற்துறை ஒர் முக்கிய உதாரணமாகும். Volkswagen இன் கூட்டுநிறுவனம் ஏற்கனவேசீனாவின் 50% மோட்டார்வாகன நுகர்வுச்சந்தையை கொண்டிருப்பதுடன், போட்டியைஇல்லாமல் செய்ய மேலும் $1.4 பில்லியன்ஐ முதலீடு செய்யவுள்ளது. $1.5 பில்லியன் பெறுமதியான General Motor's கூட்டுநிறுவனம் Shanghai இல்சீன அரசியல், வியாபார கும்பல்களுக்குசொகுசு வாகனங்களை உற்பத்தி செய்வதுடன், சாதாரண வாகன உற்பத்திக்கும் தயாராகவுள்ளது. மே மாதம் 29ம் திகதி Toyota சீனாவின்பாரிய கார் உற்பத்தி நிறுவனமான Tianjin இலுள்ள Xiali Group உடன் கூட்டுநிறுவனம்ஒன்றை நிறுவப்போவதாக அறிவித்துள்ளது.இது சந்தையின் 30% இலக்கு வைத்துள்ளது.

வாகனங்களுக்கான வரியை குறைப்பதுசீனாவில் தொழிற்சாலைகளை கொண்டஉலக ரீதியாக வாகன உதிரிப்பாகங்களைஉற்பத்தி செய்யும் கூட்டுநிறுவனங்களுக்குசெலவீனங்களை குறைப்பதற்கும், உலகஏற்றுமதிசந்தை போட்டியில் வெற்றியீட்டுவதற்க்கு சாதகமாகவும் இருக்கும். இதனூடாக500,000 சீன வாகன தொழிற்சாலை வேலைத்தலங்கள் இல்லாமல் போகுமென ஆய்வாளர்கள்கூறுகின்றனர். நாடுகடந்த முதலீட்டாளர்கள்இல்லாத உள்ளூர் உதிரிப்பாக தயாரிப்பாளர்களும், ஒன்றிணைக்கும் [Assembly] நிறுவனங்களும்போட்டியிட முடியாதவையாக போவதுடன்,இவை சீன அரசாங்கத்தால் வங்குரோத்தாகப் போகச் செய்யப்படும் சாத்தியக்கூறுகள் உண்டு.

இதேபோன்ற நிலமைபாரிய உலக நிறுவனங்களில் ஒன்றிணைப்பு,கூட்டு இணைவுகளின் அதிகரிப்பால் பாரியமறுசீரமைப்பு, வேலை நீக்கங்களை தொடர்ந்து நிதி, சேவை, கைத்தொழில் துறையிலும் இதுஎதிர்பார்க்கப்படுகின்றது. உலக வர்த்தகஅமைப்புடனான உடன்பாடுகள் 2005ம்ஆண்டளவில் சீனாவினுள்ளான மூலதன உட்பாய்ச்சலை இரண்டு மடங்காக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது. இது வெளிநாட்டு நேரடி முதலீட்டைஅதிகரிப்பதுடன் சீன பங்குசந்தை வியாபாரத்தினைவேகமாக அதிகரிக்கச்செய்யும்.

வருடாந்தம் $80 பில்லியனுக்கும் அதிகமான உட்பாய்ச்சல்எதிர்பார்க்கபடுகின்றது. முதலீடு செய்யும்நிறுவனங்களாக ஆரம்பத்தில் அமெரிக்க,ஐரோப்பிய, யப்பானிய கூட்டுத்தாபனங்களைசீனாவினுள் நகர்த்துவதாக இருக்குமெனவும்,கொங்கொங் மற்றும் தாய்வான் முதலீட்டாளர்களின் பங்கு குறைவாக இருக்குமெனவும்எதிர்பார்க்கபடுகின்றது. நாடுகடந்தமுதலீடுகள் ஏற்கனவே புதிய தொழில்நுட்ப,வர்த்தக வலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளசக்தி வாய்ந்த மையங்களான ஷங்காய்,பெய்ஜிங் போன்றவற்றை நோக்கியிருக்கும்.

சீனாவின் வர்த்தக விதிகள் வெளிநாட்டு நிறுவனங்களினதும், தனியார் வர்த்தகர்களினதும் சொத்துரிமைகளை பாதுகாப்பதற்காக நூற்றுக்கணக்கானதிருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.முதலீடுகளுக்கு தடையாக இருக்குமெனகருதப்படும் பல தட்டுக்களான அதிகாரத்துவத்தையும், சலுகை வழங்கும் பாரம்பரியத்தையும் கொண்ட ஸ்ராலினிச அரசை பெய்ஜிங் களையெடுக்க ஆரம்பித்துள்ளது. கடத்தல், இலஞ்சம்போன்ற குற்றச் செயல்களுக்காககடந்த வருடம் பல ஆயிரக்கணக்கானோர்கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 2.5 மில்லியனுக்கும்அதிகமான பொதுச் சேவை உத்தியோகத்தர்கள் வேலைநீக்கப்பட்டுள்ளனர்.

தரகு முதலாளித்துவம்

1990 களில் அரசுக்கு சொந்தமான பொருளாதாரத் துறையை கூட்டுறவுகளாக்குவதனூடாகஉலகச் சந்தையில் போட்டியிடக்கூடியதாகவும், இலாபகரமானதாகவும்மாற்ற சீர்திருத்தங்களை செய்வதேசீன அரசின் கொள்கையாக இருந்தது.இணைவு, நவீன மயமாக்கல், வேலைநீக்கம்போன்றவற்றை செய்த நிறுவனங்களுக்குபில்லியன் கணக்கான கடனுதவிகளை வழங்கஅரசு வங்கிகளை பிரயோகிப்பதன் மூலம்இம்மறுசீரமைப்புக்கான நிதியுதவி வழங்கப்பட்டது. மேலதிகமானவை என கருதப்பட்டஆயிரக்கணக்கான நிறுவனங்கள் திட்டமிட்டபடிவங்குரோத்தடைய செய்யப்பட்டனஅல்லது தனியாருக்கு விற்கப்பட்டன.

எவ்வாறிருந்த போதும் அரசியல் ரீதியாகஆதரவளிக்கப்பட்ட கூட்டுறவுகளும்,பேராசை மிக்க தனியார் வர்த்தகர்களும்தம்மை பெருக்கமடைய செய்யும் வசதிகளுடன்உலகச் சந்தையுள் புகமுடியவில்லை.மாறாக அவர்கள் அதீத உற்பத்தி, விலைவீழ்ச்சி,அதிகரித்துவரும் போட்டியினாலான அழுத்தம்,தாழ்ந்த இலாப விகிதம் போன்றவற்றினைகொண்ட வீழ்ச்சியடையும் பொருளாதாரசூழ்நிலையை சந்திக்கவேண்டியிருந்தது.இருப்புகளினது அல்லது சொத்துக்களதுஅதிகரிப்புடன் 1990-1998 வரை சீனாவின் மொத்தஉள்ளூர் உற்பத்தி அமெரிக்காவின் 0.4% த்துடன்ஒப்பிடுகையில் சராசரி 5.7% ஆக இருந்தது.

சீனாவினது Liaoning வட-கிழக்கு மாநிலத்திலுள்ளஇரண்டாவது பெரிய உருக்கு கூட்டுத்தாபனமான Anshan Iron and Steel சீன முதலாளித்துவத்தின்முரண்பாடுகளின் மாதிரியாகும். அது 1995ல் 380.000 ஆகவிருந்த தொழிலாளர்களை172.000 ஆக குறைத்துள்ளதுடன், இதனூடாக$1 பில்லியன் இனை சேமித்துள்ளது. அதனதுஉருக்கு உற்ப்பத்தி 12 மடங்காக அதிகரித்துள்ளதுடன், அதன் வருமானம் $2பில்லியன் ஐ விட அதிகமாகும்.எவ்வாறிருந்தபோதும் அடுத்தவருடம்வரை Anshan Iron and Steel இன் வருமானம் 25 $ பில்லியன்ஐ அடையாது என எதிர்பார்க்கப்படுகின்றது. Anshan Iron and Steel ம் அதனுடன் இணைந்த முக்கியமற்றதொழிற்துறைகளும் சேர்ந்து 50.000 தொழிலாளர்களே உருக்கு உற்பத்தியில் ஈடுபட்டிருப்பதுடன்,இவர்கள் 120.000 ஓய்வூதியம் பெற்ற தொழிலாளர்களின் ஓய்வூதிய பணத்தை செலுத்தும் பொறுப்புடையவர்களாகவும் இருக்கின்றார்கள்.

முதலாளித்துவ சந்தையின் கொள்கைகள் Anshan போன்ற நிறுவனங்கள் தொடர்ந்துமறுசீரமைப்பு செய்ய நிர்ப்பந்திக்கின்றன.இதற்கும் ஏனைய முக்கிய உருக்கு உற்பத்தியாளர்களுக்கும் ஆதரவளிக்க பெய்ஜிங் 129.000 பேரைகொண்ட 103 சிறிய உருக்கு தொழிற்சாலைகளைஏப்ரல் 24ம் திகதி மூடிவிட நிர்ப்பந்தித்தது.இதன் நோக்கம் என்னவெனில் 4.5 மில்லியன்தொன் உருக்கு உற்ப்த்தியை குறைப்பதும்,விலையை அதிகரிக்கச் செய்வதுமாகும்.ஆனால் இது தற்போதுள்ள உற்பத்தியைதீவிரமாக்கவும், வேலைநீக்கம் செய்வதைஅதிகரிக்கவும் போதாது.

சீனாவின் புதியமுதலாளித்துவ பிரிவு சர்வதேச மூலதனத்தைநோக்கி திரும்ப வேண்டியுள்ளது. சீனாவின்வங்கி அமைப்பு அரசு சொந்தமானநிறுவனங்களுக்கு வழங்கிய $200 பில்லியன் மீளப்பெறாத கடன்களால் பிரச்சனைக்குள்ளாகி இருக்கின்றன.வெளிநாட்டு கடன் வழங்குனர்கள் வட்டிவீதத்தை அதிகரித்துள்ளனர் அல்லது அதற்கேற்றபடிகடனின் அளவை குறைத்துள்ளனர்.

பெய்ஜிங்உம் நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ளநெருக்கடியை தவிர்த்துக் கொள்வதற்காகபொதுசேவைகளுக்காக மில்லியன் கணக்கானடொலர்களை செலவிடவேண்டியுள்ளது.சமூக வெடிப்பை இல்லாது செய்வதற்காகஆகக்குறைந்த சமூகநல கொடுப்பனவுதிட்டத்தை உருவாக்கியுள்ளது. 1985 ல் மொத்தசமூக உற்பத்தியின் 25% ஆக இருந்த அரசவருமானம் தற்போது 13%ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் விளைவு பொதுகடன் [Public debt] வேகமாக அதிகரிப்பதாகும்.

இதேவேளைஅரசாங்கம் $120 பில்லியன் வங்கிகளிலிருந்துகடன் எடுத்து நான்கு சொத்துக்களைநிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. கடன்பட்டுள்ள அரச நிறுவனங்களை விற்பதனூடாக 15-20% மான அளவுகூட பெய்ஜிங் மீளமுடியாது என்பதே தற்போதயகருத்தாகும்.

Brookings Institute இன் பொருளியலாளரான Nicholas Lardy "தற்போதய போக்கின்படியும், சீன அரச வங்கிகளின் கடன்சுமைநிலையுட்பட பார்த்தால் சீன அரசின் கடன்தற்போதுள்ள மொத்த சமூக உற்பத்தியின்19% இருந்து 2008ம் ஆண்டளவில் $1.4 ரில்லியன் அல்லது100% ஆக நிறுத்தமுடியாததாக அதிகரிக்கும்"என குறிப்பிட்டுள்ளார். முழு தேசிய வரவுசெலவுத்திட்டமும் வட்டியை கூட செலுத்தபோதாமலிருக்கும். உலகவர்த்தகஅமைப்புடனான உடன்பாட்டின் விளைவுஇதுதான். அடுத்த பத்து வருடங்களில்சீனாவின் மறுசீரமைப்பை நாடுகடந்தநிறுவனங்களும், வங்கிகளும் தீர்மானிக்கப்போகின்றன. இதற்கு கடந்த இரு தசாப்தங்களாகசுதந்திர சந்தையின் நடவடிக்கைகளால்இலாபமடைந்த பங்குசந்தைகளில் முதலீடுசெய்த வசதிபடைத்தோரும், தனியார் வர்த்தகர்களும் ஆதரவளிப்பர்.

இப்புதிய சீன முதலாளித்துவவர்க்கம் தனது 1949 ற்கு முந்திய முன்னோர்களின்நிலையை நோக்கிச்செல்கின்றது. அதாவதுஇளைய கூட்டாளிகளாக அல்லது தரகுமுதலாளித்துவமாக சீன தொழிலாளவர்க்கத்தையும் வளங்களையும் சுரண்ட விளைகின்றது.இதன்மூலமாக அது கட்டிவளர்த்த அதனதுசொத்துக்களையும், விசேட நலன்களையும்தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பிற்கு எதிராகபாதுகாக்க முயல்கின்றது.

சமூக துருவப்படுத்தல்

கூடுதலான வசதிபடைத்தவர்கள் ஸ்ராலினிசகம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். 120 பில்லியன் டொலர் பெறுமதியான1.5 மில்லியன் நிறுவனங்களை கொண்ட 3 மில்லியன்தனியார் வர்த்தகர்கள் 18 மில்லியன் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். 440பில்லியன் டொலர் மொத்த சந்தை மூலதனத்தைக் கொண்ட ஷங்காயினதும் ஷென்சானினதும்பங்குச்சந்தைகளில் 47 மில்லியன் தனியார்முதலீட்டு கணக்குகள் இருப்பதாக கூறப்படுக்கின்றது. 1% ஆன சனத்தொகை [12 மில்லியன்] $24,000க்கு மேல் வருமானமாக பெறுகின்றது.இது கிராமத்தின் சராசரி தனிநபர் வருமானமான$268 இலும் பார்க்க 90 மடங்கு அதிகமானதாகும்.

பெய்ஜிங் இல் முதலாளித்துவ மறுசீரமைப்பினால்பாதிக்கப்பட்டவர்கள் சீன தொழிலாளிகளும்விவசாயிகளுமாவர். கடந்த 3 வருடங்களில்மட்டும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களிலிருந்து 30 மில்லியன் வேலைத்தலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த வருடத்தில் மேலும் 10 மில்லியன்அரசுதுறை வேலைத்தலங்கள் இல்லாமல்போகின்றது. இவற்றில் கூடுதலான பகுதி,தமது தொழிலாளர்களுக்கு குறைந்தவிலையில் சேவைசெய்ய கைத்தொழில்நிறுவனங்களின் உரிமையாக இருந்த வைத்தியசாலைகள், பாடசாலைகள், பண்ணைகள், கடைகள்போன்ற உற்பத்தியில் நேரடித்தொடர்பற்றதுறைகளிலாகும். பல உற்பத்தியில் நேரடித்தொடர்பற்ற துறைகள் நிர்வாகிகள் போன்றநெருக்கமான தொடர்புடைய தனியார்களுக்கு விற்கப்படுகின்றன. அவர்கள் இவற்றைஇலாபநோக்குடன் இயக்குகின்றனர்.

1978ம் ஆண்டின் 78% உடன் ஒப்பிடுகையில் தற்போதுஅரசாங்கத்துறைகளில் 40% ற்கு குறைவானகிராமப்புற தொழிலாளர்கள் வேலைசெய்கின்றனர் அண்மைய வருடங்களில் கூடுதலானஇவ்நிறுவனங்கள் பாரிய சமூக தாக்குதலின்அடித்தளத்தில் இலாபங்களை காட்டஆரம்பித்துள்ளனர். நம்பத்தகுந்த கணிப்பீடுகளின்அடிப்படையில் அரசுக்கு சொந்தமானகனரக கைத்தொழில் பிரதேசங்களானவட-கிழக்கு, மத்திய மாகாணங்களில் வேலையின்மையும் ஊதியம் குறைந்த வேலைகளினதும்அளவு 50 மில்லியனுக்கு அல்லது 25% ற்கு அதிகமாகும்.

கொள்கை வகுப்பாளர்களால் உதாசீனம்செய்யப்பட்ட சீனாவின் கிராமப்புறத்தில்அரசாங்க மானியங்கள் வெட்டப்பட்டமையால் விவசாயத்துறை வருமானம் ஸ்தம்பிதமடைகின்றதுஅல்லது வீழ்ச்சியடைகின்றது. அண்மைய ஆய்வுஒன்று 20% ற்கு மேற்பட்ட விவசாயிகளின் குடும்பம்ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்டகுடும்ப அங்கத்தவர்கள் வேறு வேலைக்குசெல்வதில் தங்கியிருப்பதை எடுத்துக்காட்டுகின்றது. கிராமப்புற ஊதியம் குறைந்த வேலைகளின்அளவு 150 மில்லியன் என கணிப்பிடப்பட்டுள்ளது.இது இயந்திரங்களின் அறிமுகப்படுத்தலால்இன்னும் அதிகரிக்கலாம். நகரங்களுக்கானபடையெடுப்பு அதிகரிக்கின்றது. நிலமற்றவிவசாயிகள் தொழிற்துறைக்கு குறைந்தசம்பள வேலைகளுக்கு விநியோகிக்கப்படுகின்றனர்.

உலக வர்த்தக அமைப்புடனானஉடன்பாடு மா-ஓ-சேதுங்காலும் அவரதுஆதரவாளர்களாலும் கூறப்பட்ட அபிவிருத்திக்குதனியான சீனத் தேசிய பாதை இருக்கின்றதுஎன்ற கட்டுக்கதையை சீனத் தொழிலாளர்கள்மத்தியில் மேலும் இல்லாதொழிக்கும். உலகின்ஏனைய தொழிலாளர்களை போல்சீனத் தொழிலாளர்களின் தலைவிதியும் பூகோளமயமாக ஒழுங்கமைக்கப்பட்ட மூலதனத்திற்குஎதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின்ஐக்கியப்பட்ட இயக்கத்தின் வளர்ச்சியிலிருந்துபிரிக்கப்பட முடியாததாகும்.

 

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved