World Socialist Web Site www.wsws.org |
WSWS: செய்திகள் & ஆய்வுகள்
Split in Front National deepens crisis of extreme right in France தேசிய முன்னணியின் உள்ளான பிளவானது பிரான்சில் அதிவலதுசாரிகளின் நெருக்கடியை ஆழமாக்கியுள்ளது By Francis Dubois இந்த காலத்தில், இந்த அதிவலதுசாரிகள் வாக்காளர்களில் முக்கிய பகுதியை இழந்தனர். அவர்களது வாக்குகள் 1999 ஜூன் ஐரோப்பிய தேர்தலின் போது 16 வீதத்தில் இருந்து 10 வீதமாக குறைந்தது, அத்துடன் அது ஐரோப்பாவிலும், பிராந்தியங்களிலும், உள்ளூர் மட்டத்திலும் பதவிகளை இழந்துள்ளது. FN ன் முக்கிய தலைவர்களில் ஒரு பகுதியினர் Megret ஐ தொடர்வதற்காக இராஜினாமா செய்தபோது, MNR ம் தொடர்ந்து இராஜினாமா அலைகளினால் பாதிக்கப்பட்டது, இது தற்போதும் தொடர்கின்றது. இவ்விரு பிரிவுகளும் பிரான்சின் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படும் நிலையை தவிர்ப்பதற்காக ஓர் புதிய நல்ல அபிப்பிராயத்தை உருவாக்குவதற்கு முயல்கின்றன. இருந்தபோதிலும், லு பென் பகுதியினரால் அழிவுகளிலிருந்து ஒரு பகுதியை பாதுகாக்கமுடிந்தது. (பிரான்சு அரசினால் வருடத்திற்கு வழங்கப்படும் 41 மில்லியன் பிராங் கட்சி நிதியை பெற்றுக்கொள்ள முடிந்தது). இது நெருக்கடியின் தொடர்சியை பிரதிபலித்துக் காட்டுகிறது. சில கணிப்பிடுகளுக்கிணங்க, இது அங்கத்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியை இழந்துள்ளது, அத்துடன் அதனது தலைவர்களின் புதிய இராஜினாமாக்களுக்கும்் முகம் கொடுக்கிறது. அது பொதுமக்களிடம் இருந்தும் தனது செல்வாக்கை இழந்துள்ளது. 1999 ஜூன், ஐரோப்பிய தேர்தலில் 5.69 வீதத்தில் வெற்றிபெற்றது. இது 8 க்கும் 9 க்கும் இடையிலான வீதத்தில் வெல்லும் என்ற, இடைத்தேர்தலின் எதிர்பார்ப்பை விட குறைவானதாகும். ஏப்ரல் மாதத்தின் கடைசிப் பகுதியில் பாரிஸ் நகரில் நடைபெற்ற FN ன் 11 ஆவது காங்கிரஸ் இந்நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. FN இனது மத்திய குழுவிற்கான தேர்தலில் ஒரு சிறிய பகுதி அங்கத்தவரே பங்குகெடுத்தனர். உடைவு காலத்தில் விசுவாசத்தை பேணிய பல அதனது அங்கத்தவர்கள் தூரவிலகியிருந்தனர். வழக்கமாக நடைபெறும் FN இனது மேதின ஊர்வலத்தில், இந்த வருடத்தில் ஆக ஒரு 3000 பேர் மாத்திரமே கலந்துகொண்டிருந்தனர், இது முன்னரிலும் பார்க்க மிகசொற்பமாகும். MNR ஐ வென்றுவிட்டோம் என்னும் FN இனது வெளிப்படையான கூச்சல் அவர்களது கட்சித் தலைவர்களின் ஈடாட்டமான நிலமையினையே வெளிப்படுத்துகின்றது. இதைவிட, காங்கிரசிஸ் நடைபெற்றபோது அதனது இளைஞர் இயக்கத்தின் தலைவரது இராஜினாமா உள்ளடங்கலாக நெருக்கடிகளினது அறிகுறிகள் மேலும் தென்படுகிறது. FN பிரிந்தது ஏற்றுக்கொள்ளப்பட்டதில் இருந்து அது அறிமுகப்படுத்திய முக்கியமான கொள்கை மாற்றத்தில் ஒன்று "பல கலாச்சாரவாதம்" அல்லது "இன இணைவு" என்பதாகும். இதனூடாக கருதுவது என்னவெனில் பிரான்சில் நீண்டகாலமாக வாழும் வெளிநாட்டவர்களது ஒருங்கிணைப்பு என்பதாகும். FN னின் தலைமையினால் இது, மத கலாச்சார வித்தியாசங்களை பொருட்படுத்தாமல், நிபந்தனைகள் ஏதும் இல்லாமல் மற்றய ஏகாதிபத்திய அரசுகளிடமிருந்து பிரானஸ் அரசு பாதுகாக்கப்பட இது தேவை என்ற வாதத்தால் பேணப்படுகின்றது.கடந்த வருட இறுதியில் செய்யப்பட்ட இந்த மாற்றம் கட்சியினது கத்தோலிக்கப் பகுதியினருடன் ஒரு கடுமையான மோதலுக்ககு இட்டுச்சென்றது. கத்தோலிக்கப் பகுதியினர் சக்தி வாய்ந்ததும் தீவிரமானதுமான முறையில் முஸ்லிம்களுடன் கூடி வாழ்வதை எதிர்க்கின்றனர். எப்படி இருந்தபோதிலும் இம்மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டது. லு பென் னை சூழ உள்ளவர்களாலும் காங்கிரசில் சட்டரீதியாக தீர்மானிக்கப்பட்டதன் படியும் மத்திய குழுவிற்கு ஒரு "Beur" (வட ஆபிரிக்காவை தாயகமாக கொண்டவர்) தேர்த்தெடுக்கப்பட்டதால் ஆகும். அதிகப்படியான அங்கத்தவர்கள் அராபியர்களுக்கு எதிரான இனவாதத்தையே முன்பெல்லாம் பேணிவந்தனர். இம் மாற்றம்் FN இனது பழைய நிலைபாடுகள் ஒவ்வொன்றையும் முரண்பாடுகளுக்குள் கொண்டுவந்துள்ளது. இன்னொரு புதிய அறிவிப்பில், FN கருக்கலைப்பை சட்டரீதியானதாக ஆக்குவதை நிராகரிக்காது. FN இனது பல நாட்டுப் புறத் தலைவர்கள் லூ பென் தனது பாதையை இழந்து விட்டார் எனக்கூறி வெளியேறியுள்ளனர். இவர்களில் ஒருவர் லூ பென் "பைத்தியம் ஆகிவிட்டார்" என கூறியதை பத்திரிகைகள் மேற்கோள் காட்டியிருந்தன. ஆனால் உண்மையில் இந்த மாற்றங்கள் ஓர் அரசியல் மீழ் ஒழுங்கை பிரதிநிதித்துவப்படுத்தின. தேசிய முன்னணி (FN) இனது தலையாய நோக்கம் (அல்லது பிரெஞ்சுப் பூர்சுவா வர்க்கத்தாரிற்கு இதனது பயன்பாடு) என்னவெனில் குட்டி முதலாளித்துவ தட்டினரை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக கட்டியெழுப்பி பேணிக்காப்பதாகும். இதனைப் பூர்த்தியாக்குவதற்கு இனவாதம் ஒன்றே அடிப்படை காரணியாகும்.20 வருடமாக சவால் செய்யப்படாமல் இருந்த லூ பென் இன் தலமையானது இந்த பிளவின் ஒரு வருட காலத்தின் பின் முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு மிக வெளிப்படையாக கேள்விக்குள்ளாகியுள்ளது. சிலர் அவரை பிழை புரிந்ததாக வெளிப்படையாகக் குற்றம் சாட்டினர், ஏனையோர் இது "இல்லாதொழிக்கும் நடவடிக்கை" என்றதுடன், 2002 ஜனாதிபதித் தேர்தலானது இவரது கடைசித் தேர்தலாயிருக்கும் எனவும் எச்சரித்தனர். தனிமனித தலைமை என்பதை இல்லாமல் செய்வதுடன் இன்னும் அதிக "கூட்டான" ஓர் தலைமை வேண்டும் என்ற கோரிக்கைக் குரல்களையும் கேட்க முடிந்தது. லூ பென் ஆல் வரைமுறை செய்யப்பட்டதும் பல தசாப்தங்களாக ஆதரவளிக்கப்பட்டு வந்ததுமான போக்கு காலாவதியாகிப்போனது. கடந்த 30 வருடமாக இவர் கடைப்பிடித்த அரசியல் கட்டுமானம் சரியானதாகத்தான் இருக்கவேண்டும் என்பதற்கில்லை எனக் கூறப்படுவதை பத்திரிகைகள் கூட மேற்கோள்காட்டியிருந்தன. Mégret இன் MNR கட்சியும் ஒன்றும் சிறப்பாக நடந்துவிடவில்லை. அது தொடராக வந்த தேர்தல்களில் கடைக்கோட்டிற்குப் பின்தள்ளப்பட்டது, கடந்த ஜூன் மாதத்தில் நடந்த ஐரோப்பிய தேர்தலில் 3.5 வாக்குகளைப் பெற்றது, இது உள்ளூர் மற்றறும் பாராளுமன்ற இடைத்தேர்தல்களில் கிடைத்ததிலும் விடக்குறைவானதாகும். ஐரோப்பிய தேர்தல்களுக்குப் பின்னர் கட்சி பாரிய நிதிப்பிரச்சனையை எதிர் நோக்கியது.MNR தனது கருத்துக்களுக்கு சார்பாக இருந்த பாரம்பரிய வலதுசாரி அரசியல்வாதிகளின் நெருக்கத்தை பெற முயற்சித்தது, இவ்வழியிலேயே தனது கொள்கைப் போக்கை Mégret தேசிய குடியரசு இயக்கம் (Mouvement National Républicain) என அழைத்ததுக்கொண்டார். MNR இன் மாவட்ட பிரதிநிதிகளின் பிரிவுவொன்று தம்மை "வேறுபட்ட வலது" ("Diverse Right") என்ற பெயரில் அழைத்துக்கொண்டதுடன், கோலிச UDF (Gaullist- Union pour la Démocratie Française- பிரெஞ்சுக்காரர்களுக்கான ஐனநாயக கூட்டமைப்பு) உடனும் மற்றும் RPR (Rassemblement pour la République- குடியரசுக்கான கூட்டு) உடனும் மாவட்ட அளவில் மிக நெருக்கமான கூட்டுக்களை ஏற்றபடுத்த முயற்சித்தனர். ஆனல் அவர்கள் பெரும்பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்தனர். அண்மையில் மேக்ரே, Charles Pasqua இனது RPF (Rassemblement pour la France- பிரான்சிற்கான கூட்டு) கட்சியுடன் தேர்தல் கூட்டுவைக்கவேண்டும் என பிரேரித்திருந்த தனது கட்சி அரசியல் வாதிகளை வெளியேற்ற நிர்ப்பந்திக்கப்பட்டார்.FN இற்கு எதிரான விதத்தில், MNR மிக வெளிப்படையாக இனவாத அடிப்படையை தீவிரமாக்கியதுடன் அண்மையில் குடிவரவாளருக்கு வாக்கு வழங்குவதற்கு எதிராக தீவிர பிரச்சாரத்தை துவங்கியது. இது பசுமைக் கட்சியினால் (Greens) அறிமுகப்படுத்தப்பட்டு இப்பொழுது பாராழுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சட்டத்திற்கான நிராகரிப்பாகும். MNR ஐ பொறுத்தவரை Joerg Haider இன் ஆஸ்த்திரிய சுதந்திரக் கட்சியின் மாதிரியையே நடைமுறைக்கிட்டுள்ளனர்.மேலும், மெக்ரே "பிரெஞ்சுப் புரட்சியின் மரபுகளிலிருந்து" உடைத்துக்கொள்வதாக வெளிப்படையாகவே கூறினார், இது அரசு ஆத்மீக உள்ளடக்கம் கொண்டது என்னும் தத்துவத்திற்கு எதிராக எழுந்த அறிவு மயமாக்கல் தத்துவம் (philosophy of the Enlightenment -17 ஆம் 18 ஆம் நூற்றாண்டுகளில் உருவான இயக்கத்தால் தழுவப்பட்ட "விளைவுகளுக்கான காரணங்கள் மனிதனால் புரிந்து கொள்ளப்பட முடியும்" என்னும் தத்துவம்) மற்றும் மனித உரிமைக் கோரிக்கைகள் என்பனவற்றிலிரிந்தும் உடைத்துக்கொள்வதாகும். இந்த வழியிலேயே மெக்ரே தன்னை FN இலிருந்து கவர்சியாக வேறுபடுத்துவதுடன் கத்தோலிக்கர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள முயல்கின்றார். லூ பென் இற்கும் மெக்ரே இற்கும் இடையில் ஏற்பட்ட உடைவு அமைதியான முறையில் நடந்தேறிவிடவில்லை. வேறுபட்ட அமைப்புகளிலிருத்த போதிலும் அவ்வப்போது ஒவ்வொரு கட்சி அங்கத்தினரும் வழக்கமாக பல்கலைக் கழக தேர்தல் போன்றவற்றில் ஒன்றுபட்டிருந்தனர். இரண்டு வித்தியாசமான போக்குகளான, ஒரு நீண்டகாலமாக MNR இற்குச் சார்பான தன்மையை காட்டிவந்த போக்கும் FN இனுள் இருத்துவத்ததுடன், ஏனையோர் இந்த மோதுதல்களில் கலந்து கொள்ளாதிருந்தனர். daily Présent பத்திரிகை வெளிப்படுத்திய அபிப்பிராயத்தின்படி கத்தோலிக்கரதும் அரச குடும்பத்தினரதும் நிலமையும் இவ்வாறே இருந்தது. லூ பென், MNR உடனான தேர்தல் கூட்டிற்கு மறுப்புத்த தெரிவித்ததிலிருந்தே இப்போதுள்ள முரண்பாடுகள் அபிவிருத்தியடைந்தன. தற்போதுள்ள நிலமைகளின் கீழ், இப் பிளவுக்கிடையே எந்தவொரு தொடர்பையும் ஏற்படுத்த முடியாத வகையிலேயே உள்ளது. குறிப்பிட்ட ஆய்வாளர்கள் FN இன் நெருக்கடி பற்றி பேசுகையில் அதனது "பாதை" அல்லது"உறுதி" உருக்குலைந்து விட்டது என்றனர். பிரான்ஸ் நாட்டில் அதி வலதுசாரிகளை ஆட்டம் காணவைத்த நெருக்கடிகள் முக்கியத்துவம் வாய்ந்த வலதுசாரி வாக்காளர் பகுதியின் அரசியல் நிலமையிலும் மாற்றங்களை ஏற்படுவதை காணமுடிந்தது. தேர்தலின் பெறுபேறுகள் இந்தப் பிளவிற்குப் பின் உடனடியாக இடம்பெற்றிருந்தால் -ஐரோப்பிய தேர்தலைப்போன்று- ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருக்கும். வாக்குகளில் கணிசமான அளவு அவர்களது "இறைமைக்கும்" ["sovereignist"] ஐரோப்பிய எதிர்ப்பு நிலைப்பாட்டிற்குமாக Pasqua விற்கும் de Villiers யிற்கும் அவர்களது RPF இற்கும் கைமாறிப் போனது. லூ பென் ம் மெக்ரே யும் சந்தித்த இழப்பின் அளவும் பஸ்க்குவா மற்றும் து வில்லியே பெற்றுக்கொண்டதன் அளவும் பெருமளவிற்கு ஒரேயளவாக இருந்தது. இருவருக்கும் வடக்குப் பிராந்தியமான Pas de Calais போன்ற தொழில்துறை பகுதிகளிலும் பிரான்சின் தென்-கிழக்கு பகுதியில் Côte d'Azur புறநகர் பிராந்தியத்தின் ஆளுகைக்கு உட்பட்ட நகரங்களிலும் இழப்புகள் ஏற்பட்டன. ஓரளவிற்கு சிறிய பகுதியினர் "வேட்டைக்காரர் கட்சியை" [CPNT- வேட்டை, மீன்பிடி, இயற்கை, பாரம்பரியம்] நோக்கி இழுபட்டுப் போவது சாத்தியமாகவிருந்தது. இவ்வமைப்பானது ஐரோப்பியத் தேர்தலுக்கு சற்று முன்னதாகவே தொடங்கப்பட்டது. இது நகரத்திற்கு எதிராக நாட்டுப் புறத்தினை முன்வைத்துள்ளதுடன், இதனது பகட்டுப் பேச்சு பிரச்சாரங்கள் பிற்போக்கான போக்கிற்கு இட்டுச்செல்பவை எனபது தெளிவு. எவ்வகையான வழிப்படுத்தலும் இல்லாது, அதி-வலதுசாரி வாக்காளர்களில் ஒரு பகுதியினர் கலந்து கொள்ளாதிருந்தனர். இவர்கள் இந்த முறையிலே இவ் இரண்டு போக்குகளுக்கு இடையிலும் தீர்மானிக்கமுடியாமல் போயினர். இந்தவிதமான நிராகரிப்புக்களை குறிப்பாகவும் உறுதியாகவும் "தொழிலாளர் வாக்குகள்" லூ பென் னுக்கு என அழைக்கப்படும் பகுதிகளில் அவதானிக்க முடிந்தது என சில அவதானிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இவர்களுள் அதிகமாக இளம் தொழிலாளர்கள் அடங்குவர்- அவர்கள் "வலதுசாரிகளும் அல்ல இடதுசாரிகளும் அல்ல" எனக் கூறிக்கொள்ளும் குறைந்த படிப்பறிவுள்ள பகுதி நேர வேலைசெய்வோராவர். இந்த வாக்காளர்கள் 1995 காலப்பகுதியிலிருந்து குறிப்பாக லூ பென் ஐ நோக்கி ஈர்க்கப்பட்டவர்களாவர். 1995 ற்கும் 1997 ற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் FN இற்கு கிடைத்த பலமான ஆதரவு வலதுசாரி ஜூபே (Juppé) அரசாங்கத்திற்கு இருந்த பொது எதிர்ப்பினால் கிடைத்ததாகும். FN, அரசாங்கத்தின் உள்நாட்டு கொள்கைகளினால் அதனது வாக்காளர்களில் ஒரு பகுதியினரது எதிர்பார்ப்புகள் வீணடிக்கப்பட்டதுடன் அவர்கள் கட்சியிலிருந்தும் தூர விலகிப்போயினர். Toulon பகுதியில், அங்கு 5 வருடங்களாக FN இன் கட்டுப்பாட்டில் இருந்த நகரசபையில் FN இனது (10.7வீத) MNR இனது (6.8வீத) வாக்குகளும் சேர்ந்து பஸ்குவாவினதும் து வில்லியே இனதும் RPF கட்சியின்20.7 வீத வாக்குகளை நிரப்புவதற்கு போய்ச்சேர்ந்தது. பின்னர் FN ஊழல் எதிர்ப்பு நிலையினால் தெரிவுசெய்யப்பட்டிருந்த பின்னர் மாநகரசபை மிகவேகமாக ஊழல்களால் மூழ்கடிக்கப்பட்டதுடன் ஆழுனர் (mayor) Le Chevalier தேர்தலுக்கு சற்று முன்னதாக FN இல் இருந்து இராஜினாமாச் செய்துகொண்டார்.வோக்லுஸ் பிராந்தியத்தில் (Vaucluse départment- region) இரண்டாவது பெரும் நகரமான ஓரேஞ்ஜ் (Orange) நகர் FN இனாலேயே கட்டுப்படுத்தப்பட்டிருந்தது, எனினும் அங்கே அதி வலதுசாரிகள் 2 வீத வாக்குகளை இழந்தனர். Bouches-du-Rhône பிராந்தியத்தில் FN இன் கட்டுப்பாட்டிலிருந்த இரண்டு நகரங்களான விற்றொலஸ் நகரிலும் மறிக்ஞன் நகரிலும் FN, MNR இரண்டுமே மொத்தமாக15 வீத வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்தன. சோசலிசக் கட்சியின் பிரதம மந்திரி Lionel Jospin ஒருசில தொழிலாளர்களின் பின்தங்கிய தட்டினர் மத்தியில் தற்காலிகமாக ஆதரவைப் பெற்றுக்கொண்டதற்கும், அவர்களது "பரந்த இடது" (கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக்கட்சியுடனான கூட்டிற்கு வழங்கப்பட்ட பெயர்) இற்க்கு வாக்காளர்களை வென்றுகொண்டதற்கும் இது ஒரு காரணமென கருதப்படவேண்டும். Jean Pierre Chevènement இன் Citizens Movement (MDC), பிரான்சின் கம்யூனிஸ்ட் கட்சியும் (PCF), இனவாத மாஸ்ட்ரிச் எதிர்ப்பு தன்மைகளை கொண்டிருப்பதால் இவ் அரசாங்கத்திற்கு கிடைத்த வாக்குகள் அடிப்படையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளது என அர்த்தப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாய், இவ் அதி வலதுசாரிகள் 1980 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலிருந்து அவர்களது கோட்டையாக இருந்து வந்த பிரான்சின் தெற்குப் பகுதியின் சில தொழிற்துறை நகரங்களில் செல்வாக்கை இழந்துள்ளனர், தற்போது இலாபமடைந்துள்ள அரசயல் வாதிகளான பஸ்க்குவா வும் து வில்லியே யும், குறிப்பிட்ட அளவிற்கு பாரம்பரிய வலதுசாரிகள் எனபதற்கு நெருக்கமாக வந்துள்ளனர். அதிதீவிர வலதுசாரிகளும் முன்னைய கைத்தொழில் நகரங்களில் தமது ஆதரவை இழந்துள்ளனர். லூபென் க்கும் மெக்ரே க்கும் இடையிலான போட்டி மேலும் கருத்திற்கெடுக்கையில், லூ பென் பிரான்சின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள -தொழிற்துறை முடிவுக்கு வந்ததனால் துன்பப்படும்- நகரங்களிலும், மெக்ரே Côte d'Azur பிராந்தியத்திலும் அத்துடன் பாரிஸ் நகரில் செல்வத்தரின் பகுதியான 16 ம் (16th arrondissement) வட்டாரத்திலும் நல்ல பெறுபேறுகளைப் பெற்றனர். 10 வருடங்களுக்கு மேலாக, மேக்ரேயும் FN இன் அநேகமான தலைவர்களும், உள்ளூர் மற்றும் பிராந்திய அரசியலில் தீவிரமாக இயங்கி Toulon மற்றும் Orange ஆகிய நகரங்களில் FN ஐ பதவிக்கு கொண்டுவந்தனர். இதுவரை அவர்கள் தங்கியிருந்த குட்டி முதலாளித்துவ பகுதி லூ பென் உடன் முரண்பாட்டிற்கு வந்தனர். இவர்கள் அரசியல் சமூகப்பதட்டம் நிறைந்த வறிய தட்டினரின் பகுதிகளை நோக்கி திரும்பியுள்ளனர். இது பிரான்சின் அதி வலதுசாரிகள் மத்தியில் உள்ள முரண்பாடுகளை வெளிப்படுத்திக் காட்டியுள்ளது. இந்த முரண்பாடுகளில் ஒன்று FN பலதரப்பட்ட தட்டுகளின் (layers) வாக்காளர்களின் மேல் நம்பிக்கை வைத்திருந்த நிலையினாலாகும். ஒரு பக்கத்தில் அதி வலதுசாரி அரசியலின் பக்கம் நிற்க்கும் மக்களும், மறுபுறத்தில் ஸ்தாபிக்கப்பட்ட கட்சிகளால் (அதாவது இரு பாரம்பரிய வலதுசாரி, சோசலிஸ்ட் மற்றும் ஸ்ராலினிச கட்சிகளினால்-) அரசியல் ரீதியில் குழப்பியடிக்கப்பட்டு இக் கட்சிகளுக்கு வழக்கமாக எதிர்ப்பை தெரிவிக்கும் வாக்காளர்களே இருந்தனர். இங்கு ஓர் உறுதியற்ற தன்மையான அடிப்படையில் வாக்களித்த நிலையே மேலோங்கியிருந்தது. இப்படியானதொரு நிலை மிகவும் உறுதியற்ற தளம்பல் நிலையானதுடன், அது இப்போதுதான் வாக்களித்த கட்சிக்கு எதிராக உடனடியாகவே திரும்பக்கூடியதுமான நிலையிலும் இருக்கும். தொழிலாள வர்க்கத்திடமிருந்து ஒர் அரசியல் மாற்றீடு இல்லாதவரையில் லூ பென் இவ் வித்தியாசமான பிரிவு வாக்காளர்களை தனது பக்கம் வென்று கொள்ள முடிந்தது. எவ்வாறாயினும் இவ்வித்தியாசமான தட்டினர் வெவ்வேறு பக்கங்களை நோக்கி இழுக்கப்பட்டுள்ளமை இக் கட்சியின் அடித்தளத்தையும் இல்லாதொழித்து அதனை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. சில விமர்சகர்கள் கூறுவது போல் இந்நெருக்கடிகள் FN இனது முடிவல்ல. அவர்கள் வாக்காளர்களை இழந்துள்ளது ஒர் எச்சரிக்கை அடையாளமாகும். எவ்வாறிருந்தபோதும் பாராளுமன்றத்தை அடித்தளமாக கொண்டிருக்காத, மாறாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக குட்டி முதலாளித்துவ தட்டினதும், உதிரிப் பாட்டாளிகளினதும் அணிதிரட்டலை அடித்தளமாக கொண்ட கட்சிகள் மறைந்து போகின்றன என அர்த்தப்படவில்லை. FN இனுள்ளான உடைவு தொழிலாள வர்க்கத்திற்கு வலதுசாரிக் கட்சிகளின் அபாயத்தை இல்லாதொழிக்காததுடன், .சில சிந்தனையற்ற விமர்சகர்கள் கூறுவது போல் இது "மூச்சுவிடும் காலத்தையும்" வழங்கவில்லை.
Copyright
1998-2000 |