World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்

 

Clinton administration plan for FBI spying on email

FBI ஆல் மின்னஞ்சல்கள் உளவறிவதற்கு கிளின்டன் நிர்வாகம் திட்டமிடுகின்றது

By Patrick Martin
2 August 2000

Back to screen version

FBI மின்னஞ்சல் செய்திகளை கண்காணிக்க அனுமதியளிக்கக்கூடியதாக வலைத்தளசேவை வழங்கினை[Internet Service Providers] நிர்ப்பந்திக்க பாரிய அதிகாரங்களை பெற்றுக்கொள்ளப்போவதாக யூலை 17ம் திகதி கிளின்டன் நிர்வாகம்அறிவித்துள்ளது.இதற்காக "Carnivore"[மாமிச உண்ணி] என தீயபெயரிடப்பட்டுள்ள பொலிஸ் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த மென்பொருள்[software] தொகுதி ஒன்றினை பயன்படுத்தவுள்ளது.

வழக்கமான தனது முறையில் வெள்ளைமாளிகை இவ் பிற்போக்குத்தனமான திட்டத்தை "சீர்திருத்தம்" என முன்வைப்பதுடன், இதனை FBI இன் தொலைபேசி ஒட்டுக்கேட்டலை கட்டுப்படுத்தும் சற்று மேலதிகமான நடவடிக்கை எனவும், சுதந்திரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாகவும் முன்வைத்துள்ளது. தேசிய பத்திரிகையாளர் குழுவில் நிகழ்த்திய உரையில் பிரதம அதிகாரியான John D.Podesta "எமது தொலைபேசி உரையாடல்களை சட்டரீதியாக பாதுகாப்பதுபோல் சகல விதமான தொழில்நுட்பங்களையும் அதேமாதிரியாக பாதுகாக்க எமது தற்போதுள்ள சட்டங்களை புதுப்பிக்கவும்,பொருத்தமுள்ளதாகவும் மாற்றுவதற்கான காலம் வந்துள்ளது" என குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் தற்போதுள்ள வித்தியாசமான வடிவங்களில் உள்ள தனியார் தொடர்புசாதனங்களை பொலிசார் கண்காணிப்பதையும், இடைமறிப்பதையும் சிக்கலான சட்டங்கள் ஒழுங்கமைக்கின்றன. உதாரணமாக தொலைபேசி அழைப்புக்கள் நீதிமன்றத்தின் உத்தரவில்லாமல் ஒட்டுக்கேட்க முடியாது. ஆனால் சாதாரண மின்னஞ்சல்களை[e-mail] இடைமறிக்க எவ்வித சட்டரீதியான கட்டுப்பாடுகளும் இல்லை. Cable modem கள் ஊடாக செல்லும் தகவல் தொடர்புகள் இடைமறிப்பதில் இருந்து மிகவும் பாதுகாப்பானவை. ஒரு சட்டவழக்கினூடாக பொலிசார் நீதிமன்றத்தின் உத்தரவை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டாலும், கண்காணிப்பிற்குள்ளாகுபவருக்கு இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு.

இம்முரண்பாடுகள் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் ஏற்ப்பட்ட துரித வளர்ச்சியின் உபவிளைவாகும். மின்னஞ்சல் செய்திகள் குறைந்தளவு சட்டரீதியான பாதுகாப்பினையே கொண்டுள்ளன. ஏனெனில் இதுவரை FBI ஆல் திட்டமிட்ட வகையில் கண்காணிப்பது தொழில்நுட்பரீதியில் நடைமுறைக்கு சாதகமற்றதாக இருந்தது. Carnivore வழமையாக வலைத்தள சேவை வழங்கிகளால் பொதுவாக பாவிக்கப்படும் "packetsniffer"என அழைக்கப்படுவதின் நவீனமயப்படுத்தப்பட்ட மென்பொருள் திட்டமாகும். இது கடந்த 18 மாதங்களிலேயே அபிவிருத்திசெய்யப்பட்டது. இது வலைத்தள சேவை வழங்கியுள் புகும் செய்தி அலைகளை வகைப்படுத்தி மின்னஞ்சல்களை அனுப்புவோர்களையும், பெறுநர்களையும் அடையாளம் காணுவதனூடாக, கண்காணிக்கப்படவேண்டியோரையும் கண்டுகொள்ளும்.

ஒரு குறிப்பிட்ட வலைத்தளசேவை வழங்கியுள் செல்லும் ஒவ்வொரு மின்னஞ்சல்களையும் Carnivore ஆய்வுசெய்வதனால், "trunk side" என அழைக்கப்படும் தனிதொலைபேசிகளில் இணைக்கப்பட்டிருக்காத மாறாக தொலைபேசி பரிவர்த்தனை நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி ஒட்டுக்கேட்க்கும் முறையை ஒத்ததாகவுள்ளது. இப்படியான ஒட்டுக்கேட்க்கும் முறையானது குறிப்பிட்ட இலக்கினை மட்டும் பொலிசார் ஒட்டுக்கேட்க அனுமதிவழங்காது அனைத்து அழைப்புக்களையும் ஒட்டுக்கேட்க அனுமதி வழங்கியதிலிருந்து கடந்த 30 வருடங்களுக்குமேலாக சட்டவிரோதமானது. கிளின்டன் நிர்வாகத்தின் திட்டத்தின் படி இப்படியான ஒட்டுக்கேட்க்கும் முறையானது தற்போதுமின்னஞ்சல்களுக்கும் சாத்தியமாகின்றது.

ஒரு வலைத்தள சேவை வழங்கியில் Carnivore இணைக்கப்பட்டால் FBI குறிக்கப்பட்ட ஒருவரின் மின்னஞ்சலை மட்டும் கண்காணிப்பதுடன் நிறுத்திக்கொள்ளுமா என்பதை கட்டுப்படுத்த முடியாது என இச்சட்வாக்கலுக்கு எதிரானவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்நிறுவனம் தனது நலன்களை மட்டுமே கருத்தில் கொள்கின்றது. அது Carnivore இனை உருவாக்க உதவிய நிறுவனத்தின் உரிமை நலன்களை காரணம் காட்டி அதன் மூல உள்ளடக்கத்தை[source code] வெளிவிட மறுத்ததுடன், "யாராவது இந்த திட்டத்தை முறியடிக்க விரும்பினால் முயலட்டும், நாங்கள் இந்த போட்டியில் இறங்கப்போவதில்லை" என ஓர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க சிவில் சுதந்திரத்திற்கான அமைப்பின் தலைவரான Barry Steinhardt, Carnivorer ä இணைக்கும் திட்டத்தை கண்டித்து "எண்ணுக்கணக்கற்ற தகவல் பரிவர்த்தனைகளை இப்படியான நிறுவனங்கள் அணுகுவதை கண்காணிக்கமுடியாத வகையில் சட்டங்களை அமுலாக்குதல் அனைத்து அமெரிக்கர்களினது அந்தரங்கவாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தலாகும் "எனக் குறிப்பிட்டுள்ளார்.

கிளின்டன் நிர்வாகத்தின் நிலைப்பாடானது தொலைபேசி ஒட்டுக்கேட்டல் போல் வலைத்தளமுடாக அனுப்பபடும் செய்திகளும் கையாளப்படவேண்டும் என்பதாகும். அதாவது சாதாரண மின்னஞ்சல்களை கண்காணிக்க நீதிமன்ற உத்தரவு தேவையாகும். [பொலிஸ் அதிகாரத்தை கட்டுப்படுத்துவதற்கு] ஏனெனில் கேபிள் ஊடாக மின்னஞ்சலை கண்காணிப்பது இலகுவாக்கப்படவேண்டும். ஆனால் நடைமுறையில் தொலைபேசி தொடர்பிற்க்கும் மின்னஞ்சலிற்க்கும் இடையேயான வித்தியாசமான தன்மை காரணமாக முன்வைக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கையானது பொலிஸ் அதிகாரங்களை பாரியளவில் அதிகரிக்கும்.

உதாரணமாக தற்போதுள்ள சட்டங்கள் தொலைபேசி தொடர்புகளை கண்காணிப்பதற்க்கான "விவகாரங்களுக்கு" உண்மையில் எல்லையற்ற உரிமைகளை வழங்கியுள்ளது. பொலிஸார்கோரும் தறுவாயில் ஒரு தொலைபேசிக்குவந்த, அதிலிருந்து எடுக்கப்பட்ட அழைப்புக்கள் தொடர்பான விபரங்களை வழமையாக தொலைபேசி நிறுவனம் வழங்கவேண்டும். இவ்அதிகாரத்தின்படி ஒரு வலைத்தள சேவைவழங்கி பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல்களையும், அவை அனுப்பப்பட்டிருந்தால் யாருக்கு அனுப்பப்பட்டதென்பதும், வலைத்தளத்திற்கு வந்தவர்கள் தொடர்பான விபரத்தையும் பொலிஸாருக்கு வழங்கவேண்டும்.

இவ் அதிகாரம் தொலைபேசி தொடர்பின் உள்ளடக்கத்தை கண்காணிக்கும் தொலைபேசி ஒட்டுக்கேட்டலை விட அரசியல் சுதந்திரம் மீதான முக்கிய அச்சுறுத்தலாகும். வலைத்தளம் ஒன்றிற்கு வந்தவர்களின் விபரமானது, ஒருவரின் அரசியல் நம்பிக்கைகள் தொடர்பான பாரியளவு தகவல்களை பொலிஸாரின் கண்காணிப்பு இலக்காக்கும். மேலும் ஒரு தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட செய்தி தொடர்பான உள்ளடக்கத்தை பொலிஸார் பின்னர் அணுகமுடியாது மின்னஞ்சல்செய்திகள் வலைத்தள சேவை வழங்கியில் சுயமாகவே பதிவுசெய்யப்பட்டிருக்கும். இதன்படி ஒரு செய்தி உள்ளதென பொலிஸார் அறியும் தறுவாயில் அதன் உள்ளடக்கத்தை வெளிப்படுத்த பாரிய அழுத்தம் பிரயோகிக்கப்பட முடியும்.

மின்னஞ்சல் கண்காணிப்பு திட்டம் உலகளாவிய ரீதியில் தாக்கத்தைக்கொண்டுள்ளது. ஏனெனில் இது அமெரிக்காவிலிருந்து வெளியேறும் செய்திகளுக்கு மட்டுமல்லாது, வந்தடையும் செய்திகளுக்கும் பிரயோகிக்கப்படலாம். இது நாட்டிற்கு வெளியே பரிவர்த்தனை செய்யப்படுபவற்றிற்கு செல்லுபடியாகததாக இருந்தாலும், உதாரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான மின்னஞ்சல்பரிமாற்றம் போல் வலைத்தள சேவைவழங்கி அமெரிக்காவில் இருப்பின் இவையும் கண்காணிக்கப்படலாம். அண்மையில் அமெரிக்கவலைத்தள சேவை வழங்கி ஒன்றினை ஜப்பானிய நிப்போன் ரெலிகிராப்&ரெலிபோன் வாங்குவதை FBI "தேசிய பாதுகாப்பை" காரணம்காட்டி எதிர்த்தது. இது தொடர்பாக ஒர் அறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டது "FBI இன் குற்றச்சாட்டிற்கான காரணம் வலைத்தள சேவை வழங்கி வெளிநாட்டு உடைமையாக இருந்தால் ஒட்டுக்கேட்கும் தகமையின் உள்ளடக்கம் தொடர்பாகவாகும்".

FBI மேலும் வலைத்தள உதிரிப்பாக, மென்பொருள் உற்பத்தியாளர்களை அடுத்த தலைமுறையான உற்பத்திகளை ஒட்டுக்கேட்பதற்கு சாதகமானதாக உற்ப்பத்தி செய்யவதை உறுதிப்படுத்த நெருக்குகின்றது.1994ம் ஆண்டுதொலைத்தொடர்பு உதவி சட்டத்தின்படி உள்ளூர் பொலிஸாரால் வலைத்தளத்தைகண்காணிப்பது தடைசெய்யப்பட்டதற்க்கு எதிராக புதிய அதிகாரங்களை பெற இந்நிறுவனங்கள் முயல்கின்றன.

அமெரிக்க காங்கிரஸில் வெள்ளைமாளிகையின் திட்டம் தொடர்பாக தெளிவற்ற பிரதிபலிப்பையே காணக்கூடியதாகவுள்ளது. கூடுதலான ஜனநாயக கட்சியினர் இதனை ஆதரிக்கின்றனர். Vermont இன் செனற்றரான Patrick Leahy ஒட்டுக்கேட்டல் தொடர்பான நீதிமன்றகட்டளையை சில வலைத்தள சேவை வழங்கிகள் நிராகரித்ததை சுட்டிக்காட்டி"எந்தவொரு வலைத்தள சேவை வழங்கியாவது கட்டளையை நிறைவேற்ற மறுத்தால் FBI என்ன நடவடிக்கை உத்தேசித்துள்ளது "என குறிப்பிட்டுள்ளார். குடியரசுக்கட்சியினர் மத்தியில் கூடிய எதிர்ப்புள்ளது. இது தனிப்பட்ட காரணங்களாலோ அல்லது நாடளாவிய கண்காணிப்பு வலைத்தளத்தின் மீது வேறு வித ஒழுங்குகளுக்கான அல்லது வரி விதிப்புகளுக்கான முன்னோடியாக இருக்கலாம் என்பதாலாகும்.

தொழிலாளர்களால் பாவிக்கப்படும் மின்னஞ்சல்கள், வலைத்தளம் தொடர்பான பரந்தளவிலான உளவுபார்க்கும் தன்மை தொடர்பாக எந்தவொரு கட்சியும் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. கடந்த மாதம் வெளிவிடப்பட்ட அமெரிக்க நிர்வாக அமைப்பு ஒன்றின் கணிப்பீடு 3/4 என்ற விகிதத்தில் சகல நிறுவனங்களும் இப்படியான கண்காணிப்பினை மேற்கொள்ளுவதாகவும், இதன் மூலமாக 1/4 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved