A political balance sheet of the Yeltsin era
ஜெல்ட்சின் காலப்பிரிவின்
ஒரு அரசியல் இருப்பு நிலை ஏடு
By Vladimir Volkov
21 January 2000
Use
this version to print
ரஷ்ய ஜனாதிபதி பொரிஸ் ஜெல்ட்சின் டிசம்பர்
31, 1999இல் அவர் முன்னதாகவே பதவியிலிருந்து விலகப்போவதாக
அறிவித்தார். இது ரஷ்ய மற்றும் சர்வதேச வரலாற்றில் மிகவும்
திடீர் திருப்பங்களுடையதாகவும் முரண்பாடுள்ளதாகவும் கணக்கிடப்படவேண்டிய
ஒரு காலப் பிரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது, அது அனைத்துக்கும்
மேலாக சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதையும் ''சோசலிச
முகாமின்'' பிரதேசத்தினுள் முதலாளித்துவ உறவுகள் அறிமுகம் செய்யப்பட்டதையும்
குறிக்கிறது.
கடந்த 10 வருடங்கள் தொடர்பாக ரஷ்யாவின்
ஆளும் தட்டினருக்குள் இரண்டு கருத்துக்கள் நிலவுகிறது. முதலாவதாக
கிரெம்ளினின் உத்தியோக பூர்வமான சித்தாந்தம் உள்நாட்டில்
அதன் மிதவாத ஆதரவாளர்களினாலும் மேற்கிலுள்ள ஆளும் வட்டங்களினாலும்
பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அவர்களது அபிப்பிராயப்படி ஜெல்ட்சினின்
கீழ் ரஷ்யா ஒரு ''குழப்ப காலத்துக்கு'' ஊடாக வளர்ந்தது
(பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்துக்கு ஒரு ஒப்புவமை,
அப்போது ரூரிக் அரசர் வம்சம் ரோமனோவினரால் மாற்றீடு
செய்யப்பட்டது) அதாவது ரஷ்ய தேசிய அரசின் வளர்ச்சியில்
ஒரு முறிவு. சோவியத் ஒன்றிய காலத்தின் போது ''சோவியத் மக்கள்
ஆட்சி'' என்ற வடிவத்தை பெற்ற நிஜமாகவே சமூக வாழ்வின்
ரஷ்ய வடிவங்கள் நாட்டினை மேற்கத்திய நாகரிகத்தின் செல்வாக்குகளுக்கு
திறந்துவிட்டபோது பலவீனப்படுத்தப்பட்டன. இவ்வாறாக ''ரஷ்யப்
பண்பின்'' தனித்துவ பாரம்பரியங்களுடனும் ரஷ்ய மக்களின் நலன்களுடனும்
தொடர்பற்ற ஒரு ராஜ்யம் வளர்ச்சி அடைந்தது என்று அவர்கள்
வாதிடுகின்றனர்.
இரு கருத்துக்களுமே தவறாக வழிநடத்துகின்றன.
ஜெல்ட்சின் காலப்பிரிவின் உண்மையான அர்த்தத்தை சோவியத்
யூனியனை அதன் வரலாற்றின் போது உருவாக்கிய சமூக மோதல்களின்
வெளிச்சத்தில் தான் புரிந்து கொள்ள முடியும். ஆதிக்கம் நிறைந்த
அதிகாரத்துவத்துக்கும் வெகுஜனங்களின் மனமார்ந்த முயற்சிகளுக்கும்
இடையிலான போராட்டம், அது ட்ரொட்ஸ்கிச இடது எதிர்ப்பின்
வேலைத்திட்டத்தில் ஒரு நனவு பூர்வமான வெளிப்பாட்டினைக்
கண்டது.
1917 அக்டோபர் புரட்சியானது பரந்தளவில்
ரஷ்ய பாட்டாளிவர்க்கம் மற்றும் விவசாய தட்டுக்களின் துடிப்பான
ஆதரவை அடிப்படையாகக் கொண்டது. சோவியத் யூனியன் அதன்
தோற்றத்துக்கு ஒரு பரந்த வெகுஜன இயக்கத்துக்கு கடன்பட்டிருக்கிறது,
அது சோசலிச சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படையில்
உலக சமுதாயத்தை புரட்சிகரமாக மாற்றுவதை குறிக்கோளாகக்
கொண்டது. ஆனால் இந்த இயக்கமானது சீக்கிரமாகவே தீர்க்கமான
தடைகளை எதிர் கொண்டது.
ஒரு புறம், ஜெர்மனி மற்றும் இதர ஐரோப்பிய
நாடுகளின் புரட்சி தோற்கடிக்கப்பட்டதால் சோவியத் யூனியன்
சர்வதேச ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டது. அது மிக அவசரமாக
சார்ந்திருந்த உலகப் பொருளாதாரத்தின் வளங்களிலிருந்து
அது துண்டிக்கப்பட்டது. மறுபுறம் பொதுவான கஷ்டத்தின்
விளைவாக அதிகாரத்துவம் என்கின்ற வடிவில் ஒரு புதிய சலுகைமிக்க
தட்டு தோன்றியது, அது ஸ்ராலினை அதன் அரசியல் தலைவராக
கருதியது மற்றும் இறுதியாக சமுதாயத்தின் மேலான தனி ஆட்சியாளனாக
தன்னை ஆக்கிக்கொண்டது.
1930களில் டிராட்ஸ்கி முன் கணிப்பு செய்தார்,
அதாவது சோவியத் சமூகத்தின் நிலையற்ற மற்றும் ஆழமான முரண்பாடுள்ள
நிலைமையானது அது இரு வழிகளில் ஏதாவது ஒன்றின் மூலமாக மட்டும்
தான் வளர்ச்சி அடைய முடியும் என்று அர்த்தப்படுத்தியது.
ஒன்று, அதிகாரத்துவம் எதிர்ப் புரட்சியை பூர்த்தி செய்யவேண்டும்,
தனி உடைமையை மீண்டும் அறிமுகப்படுத்தி, ஒரு புதிய ஆளும் வர்க்கத்துக்கான
அடித்தளமாக மாறுவது அல்லது சோவியத் பாட்டாளி வர்க்கம்
ஒரு அரசியல் புரட்சியை நடத்தவேண்டும், உண்மையான
தொழிலாளர் ஜனநாயகத்துக்கான வடிவங்களை நிலைநாட்டுவது,
லெனின் டிராட்ஸ்கியின் சர்வதேச புரட்சிகர முன்னோக்கை புதுப்பிப்பது
மற்றும் சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்தின் மறுபிறப்புக்கான
வழியை திறந்து விடுவதாகும்.
1937-38 பெரும் களையெடுப்புகளின் போது
ஸ்ராலினிசத்துக்கான சோசலிச எதிர்ப்பு, பெருமளவில் அழிக்கப்பட்டது,
ஆனால் சோவியத் யூனியனின் இறுதியான வாழ்க்கையின் முடிவு
இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. 1980 வரையில் அதிகாரத்துவமானது
அக்டோபர் புரட்சியினால் உருவாக்கப்பட்ட சமூகமயமான
சொத்துறவுகளை தாக்கத் துணியவில்லை. பெரஸ்துரொய்கா
(மறுசீரமைப்பு) வருடங்களின் போது மட்டும் தான் அதிகாரத்துவமானது
சோவியத் தொழிலாள வர்க்கத்தின் மீது அவற்றின் சொந்த
வேலைத்திட்டத்தை திணிப்பதில் வெற்றி கண்டது, இந்தக் கட்டத்தில்
''தனி ஒரு நாட்டில்'' சோசலிசம் கட்டுவது என்ற
ஸ்ராலினின் தேசியவாத வாய் வேதாந்தம் சோவியத்
பொருளாதாரத்தை ஒரு மரண முடிவுக்கு வழிநடத்தியது மற்றும்
சமூக பிரச்சனைகளை உடைத்துக்கொண்டு வெளிக்கு வந்தது.
கோர்பச்சேவ், முதலாளித்துவ சீர்திருத்தங்கள்
தொடங்குவதற்கான அடித்தளங்களை நாட்டிய அதிகாரத்துவத்தின்
தலைவனாக தோன்றினார், அதே சமயம் ஜெல்ட்சின்
அச்சொற்பதங்களில் இருந்து ''தப்பிய'' ஒருவராக
முதலாளித்துவ செயல்திட்டத்தை அமல்படுத்துவதற்கான
பொறுப்பை அவரிடமிருந்து எடுத்துக்கொண்டார்.
எதிர்ப்புரட்சியின் வெற்றிகரமான முன்னேற்றம்?
எனவே ஜெல்ட்சின் ஆட்சியின் 10 வருடங்களை
எதிர்ப்புரட்சியின் வெற்றிகரமான முன்னேற்றம் என்று விவரிக்க
முடியுமா? ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், ஆம். வரலாற்று ரீதியாக
ஜெல்ட்சின் பிரதிநிதித்துவம் செய்வது, பல பத்தாண்டுகளுக்கு
முன்னதாக, ஸ்ராலினின் கீழ் தொடங்கிய கொள்கையின் உச்ச
நிலையைத்தான். மறுபுறம் எல்ட்சினின் கீழ் நிகழ்ந்த நிறையன
அரிதாகத்தான் எதிர்ப்புரட்சியின் வெற்றியைப் போன்றிருக்கிறது,
அங்கு உண்மையான எதிர்ப்பு இல்லாத காரணத்தினாலாகும்.
1980களின் இறுதியில் இருந்த சோவியத் யூனியனை
இரண்டாம் உலக யுத்தத்தின் தருவாயிலிருந்த சோவியத் ஒன்றியத்துடன்
அரிதாகத்தான் ஒப்பிட முடியும். பல தலைமுறைகள் கடந்துவிட்டன.
அவை 1917 புரட்சியின் பாரம்பரியங்கள் மற்றும் உணர்விலிருந்து
அறிவுசார்ந்த ரீதியிலும் மனோதத்துவரீதியிலும் துண்டிக்கப்பட்டு
இருந்தன. அவர்களை சூழ்ந்திருந்த சோவியத் யதார்த்தத்தில்
அவர்களது சொந்த சாதனை என்று அவர்கள் கருதுவதற்கான
எதையுமே காண முடியவில்லை, அதன் காரணமாக அவற்றை
பாதுகாப்பது பெறுமதியானது என்று அவர்கள் கருதவில்லை.
கூடுதலாக, சோவியத் பொருளாதாரத்தின்
பின்தங்கிய நிலையும் அது உலக சந்தையில் சார்ந்திருப்பதும்
மிகவும் தெளிவாகியது, அது பல பேருக்கு உலகப்
பொருளாதாரத்துடன் எந்த வடிவத்தில் ஒன்றிணைவதையும் விருப்பமானதாக
தோன்றச் செய்தது, அது முதலாளித்துவ நிலைமைகளின் கீழ் அதன்
பாதகமான விளைவுகளை கொண்டிருந்த போதிலும் கூடவாகும்.
இப்படியான நிலைமைகளின் கீழ், ஜெல்ட்சினால்
ரஷ்ய அரசின் உச்சத்துக்கு உயர முடிந்தது. மற்றும் தற்காலிகமாக
ஒரு குறிப்பிட்ட அளவு செல்வாக்கையும் கூடி அனுபவிக்க கூடியதாக
இருந்தது. நீண்ட ஒட்டத்தில் அவர், எவ்வாறாயினும், அவருக்கு
முன்பு கோர்பச்சேவ் இருந்தது போலவே அவரும் ஒரு
இடைக்காலத்துக்குரிய உருவம் தான். இருவருமே சிறப்பாக
ஒரு சலுகைமிக்க தட்டின் நலன்களுக்கு சேவை செய்யும் ஒரு
கொள்கையை மக்களுக்கு விற்பதற்கே செயற்பட்டனர்.
''சோசலிசத்தை புதுப்பித்தல்'' என்ற பதாகையின்
கீழ் கோர்பச்சேவ் ''அதிர்ச்சி வைத்தியம்'' அறிமுகம் செய்வதற்கு
நாட்டை வழிநடத்தி சென்றார், அதேசமயம் ''ஜனநாயகத்தை
அறிமுகப்படுத்தல்'' என்ற பேரில் ஜெல்ட்சின் பெரும்பான்மையான
மக்கள் கொண்டிருந்த அனைத்தையும் எடுத்துக்கொண்டார்
மற்றும் அவர்களை வெறும் உயிர்பிழைப்புக்கான போராட்டத்துக்குள்
தள்ளி ஒரு சலுகை படைத்த தட்டை பாதுகாத்தா்ா.
1992-இன் தொடக்கத்தில் ஜனாதிபதி ஜெல்ட்சினால்
நியமிக்கப்பட்ட முதலாவது அரசாங்கம், யெகொர் கெய்டர்
தலைமையில் ''அதிர்ச்சி வைத்தியம்'' என்ற அதன் கொள்கையை
தொடங்கியது - பெரும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை
தரங்கள் மற்றும் உரிமைகள் மீதான ஈவிரக்கமற்ற ஒரு தாக்குதல்.
1992-இன் இறுதியில் கெய்டரை மாற்றீடு செய்த விக்டர் செர்னோமிர்டின்
நிதி அமைப்பை பலப்படுத்தவும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை
கவரவும் முயற்சித்தார். இந்த முடிவை எட்ட அவர்
தொழிலாள வர்க்கத்தின் மீது அழுத்தத்தை அதிகரித்தார். 1998-இல்
அவருக்கு அடுத்து வந்த செர்கி கிர்யென்கோ ''அதிர்ச்சி வைத்தியத்தின்''
ஒரு புதிய முறையை முயற்சித்தார், அனைத்துக்கும் மேலாக மிகவும்
பலவீனமான சமூக தட்டுக்களைப் பாதித்த நிதி வீழ்ச்சியை அவர்
ஏற்பாடு செய்தார். அதற்கு பிறகு செர்னோமிர்டின் மீண்டும் பதவிக்கு
அழைக்கப்பட்டார், ஆனால் அவரது நியமனம் டூமா (பாராளுமன்றம்)
வினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அந்த கணத்திலிருந்து ஜெல்ட்சின்
பாதுகாப்பு மற்றும் உளவு சேவைகளில் அவர்களது பணிகளை
தொடங்கியவர்களைத்தான் பிரதம மந்திரிகளாக நியமித்தார்:
செப்டம்பர் 1998-ல் யெவ்ஜெனி பிரிமாகோவ், மே 1999-இல்
செர்கி ஸ்டெப்பாசின், இறுதியாக ஆகஸ்ட் 1999-இல் விளாடிமிர்
புடின்.
அதேசமயம், ''ஜனநாயக'' செயல் திட்டம்
கிரெம்ளினின் வாய் சவடாலில் இருந்து மறைந்துபோனது. உத்தியோகபூர்வ
பிரச்சாரம் அரசை ஸ்திரப்படுத்துவதிலும் ''தேசிய நலன்களை''
முன்னெடுப்பதிலும் கவனம் செலுத்துகின்றது. இது தொடர்பாக
புடினின் பாத்திரம் முன்கூட்டியே சொல்லக்கூடியது. அவர்
ரஷ்யாவிலுள்ள புதிய ஆதிக்க வர்க்கத்தின் நலன்களை எதிர்ப்பவர்களுக்கு
எதிராக எந்த மோசமான தந்திரங்களையும் பயன்படுத்துவார்.
ஜெல்ட்சின் ராஜினாமாவின் புறநிலையான
அர்த்தம் என்ன என்றால் மேலும் முதலாளித்துவ ''சீர்த்திருத்தங்களை''
செயல்படுத்துவதற்கு, அரசு இயந்திரத்தை மறு ஒழுங்கு செய்வது
அவசியமானதாகும், அது தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து
வரும் எதிர்ப்புகளுக்கு எதிராக போலீஸ் வன்முறையுடன் செயல்படுவதை
சாத்தியமாக்கும். இதற்கு தேவையான ஒருவரின் உருவம் நேற்றைய
வாக்குறுதிகளின் சுமைகளையும் அல்லது ''ஜனநாயகவாதி''
என்ற புகழையும் கொண்டிருக்க கூடாது.
ஜெல்ட்சின் ஆட்சியின் இருப்பு நிலை ஏடு
ஜெல்ட்சினின் 10 வருட ஆட்சியின் விளைவுகள்
என்ன? ஒரு சுருக்கமான பதில் பின்வருமாறு கூறும்: அழிவுகள்,
வறுமை, வாழ்க்கைக்கான அடித்தளங்களை மற்றும் எதிர்காலத்துக்கான
எந்த முன்னோக்கையும் அழித்தல்.
மிக ஆழமான நெருக்கடி இருந்த போதிலும்,
கோர்பச்சேவின் ஐந்து வருட பெரஸ்துரொய்காவின்
இறுதியில் சோவியத் யூனியன் இன்னமும் ஒரு குறிப்பிட்ட அளவு
பொருளாதார அடித்தளத்தை கொண்டிருந்தது. சோவியத் கல்வி
மற்றும் சமூக அமைப்புகள் வளர்ச்சிக்கான சாத்தியத்தையும்
ஒரு கலாச்சார உள்ளார்ந்த ஆற்றலையும் விட்டிருந்தன,
அது சமூக கூட்டிணைவமைப்பு சார்பு ரீதியாக வேகமாக குணமடைதல்
மற்றும் புதுப்பித்தல் செய்வதற்கு உதவி இருக்கும். ''சோவியத்
வாழ்க்கைப் பாணி''யுடன் தொடர்புடைய ஒவ்வொன்றுமே
ஒரு நரைத் சோர்வையும் ஒரு பொதுவான கீழ்மட்ட தரத்தையும்
கொண்டிருந்த போதிலும் கூட இதுதான் நிலைமையாக இருந்தது.
இவ்வாறாகத்தான் ரஷ்யாவை ஜெல்ட்சின்
கிரெம்ளினுக்குள் நுழைந்தபோது கண்டார். ஆனால் இருபத்தியோராம்
நூற்றாண்டின் நுழைவாயிலில் அவர் விலகும்போது விட்டுச்சென்றது
என்ன?
சோவியத் யூனியனுக்கு பதிலீடாக அமைக்கப்பட்ட
பொதுநல சுதந்திர நாடுகளின் அமைப்பு (சி.ஐ.எஸ்.) அனைத்துப்
பக்கங்களிலும் உடைந்து கொண்டிருக்கின்றது. கவனமான மதிப்பீடுகளின்படி,
ரஷ்ய தொழில்துறை உற்பத்தி பாதி அளவுக்கு சுருங்கிவிட்டது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, கணிசமான அளவு குறைந்த
மக்கள் தொகையையும் சிறிய நிலப்பரப்பையும் கொண்ட மற்றும்
அதே அளவு கச்சாப் பொருள்களின் அளிப்பைப் பெற்றிராத நெதர்லாந்து
நாட்டின் மட்டத்திற்கு ஆகியுள்ளது. பல லட்சக்கணக்கான ருஷ்யக்
குடிமக்கள் துன்பகரமான வருவாயில் வாழ்கின்றனர், அது நவீன
வாழ்வின் குறைந்தபட்ச தேவைகளைக்கூட நிறைவு செய்ய
முடியவில்லை, சிறு இனக்குழு மற்றும் பிராந்திய மோதல்களின்
இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அல்லது ஒரு சிறந்த
வாழ்க்கையை நாடுவதற்காக பல லட்சக்கணக்கானோர்
தங்களின் வீடு வாசல்களைவிட்டு ஓடும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
சராசரி வாழ்வு நாள் கணிசமான அளவு வீழ்ச்சி
கண்டது, இளைஞர்கள் ஒரு தரமான வேலையை பெற்றுக்கொள்வதற்கான
வாய்ப்பு எதுவும் இல்லாமல் செய்யப்பட்டது. அதிகாரத்தின்
அனைத்து அங்கங்களும் ஊழல் புற்றுநோயினால் பீடிக்கப்பட்டிருந்தது,
மற்றும் கிரிமினல் உலகுடன் கண்ணுக்குத் தெரியாத பிணைப்புகளுடன்
கட்டுண்டிருந்தது. முன்பு தெரிந்திராத ஒரு மட்டத்தை கிரிமினல்
சக்திகளின் அதிகாரமும் செல்வாக்கும் எட்டியது.
சாதாரண ரஷ்யர்களை எதிர்கொள்ளும் துயர
சமுத்திரத்துக்கு மேலே ஒரு மிகவும் மெல்லிய, ஈவிரக்கமற்ற,
எல்லையில்லா பேராசை கொண்ட மற்றும் மிகவும் கர்வம்
கொண்ட புதுப் பணக்கார தட்டுக்கள் தோன்றின, அவர்கள்
அந்த நேரத்துக்காக வாழ்கின்றனர், அவர்களைப் பொருத்தவரையில்
அவர்களது செல்வத்துக்கு என்ன விலை கொடுக்கப்பட்டது அல்லது
அவற்றை பின்தொடர்வது என்ன என்பதெல்லாம் முக்கியமற்றது.
இந்த வீழ்ச்சிக் காலப்பிரிவு மற்றும் இந்த பணக்கார சமூக
மேலேறுபவர்களின் குறுகிய தட்டின் அடையாளச்சின்னமாக ஜெல்ட்சின்
மாறினார்.
தொலைக்காட்சியில் அவரது பிரியாவிடை உரையின்போது
அவர் ஒரு பெரும் வரலாற்றுப் பாத்திரத்தை நிறைவேற்றியவராகவும்
அவரை காட்ட முற்சித்தார், மற்றும் இப்போது அவர் திரும்பப்பெற
முடியும் ஏனென்றால் நாடும் சமூகமும் அதிகமான வெற்றியை
எதிர்பார்க்க முடியும். எவ்வாறாயினும், குறைந்தபட்சம்
ஒரு மலிவான மன்னிப்பு வடிவத்திலாவது, ருஷ்யாவின் உண்மையான
நிலைமை பற்றி குறிப்பிடுவதை அவரால் தவிர்க்க முடியவில்லை.
''நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்'' என்று அவர்
கூறினார். ''உங்களது பல எதிர்பார்ப்புகள் கிடைக்காமல்
போனதற்காக மன்னிப்பு. எங்களுக்கு இலகுவாக தோன்றியது
எதுவோ அது வேதனையானதாகவும், கஷ்டமானதாகவும் மாறியது.
நாம் கடந்த இருண்ட, எதேச்சாதிகார முட்டுக்கட்டையிலிருந்து
ஒரு வெளிச்சமான, செல்வமான, நாகரிகமான எதிர்காலத்துக்குள்
திடீரென்று உடைத்து உள் செல்லலாம் என்று நம்பிய மக்களின்
எதிர்பார்ப்புக்களை என்னால் நிறைவேற்ற முடியவில்லை என்ற
உண்மைக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். நான் கூட அதில்
நம்பிக்கை கொண்டிருந்தேன். மேலும் ஒரு தள்ளு நாம் சமாளித்துவிடுவோம்
என்று தோன்றியது. ஆனால் ஒரு தள்ளுடன் நம்மால் சமாளிக்க
முடியவில்லை. நான் மிகவும் அப்பாவியாக இருந்ததும் பகுதிக்காரணமாகும்.
பிரச்சனைகள் மிகவும் கடினமானதாக இருந்ததும் பகுதிக்காரணமாகும்.
நாம் தவறுகள் தோல்விகள் மூலமாக நமது வழியை முன்னெடுத்து
செல்ல போராடினோம். இந்த கடினமான காலத்தின்
போது பல மக்கள் பெரும் அதிர்ச்சிகளை அனுபவித்தனர்''.
நியாயப்படுத்துவதற்காக அவரால் சொல்ல
முடிந்ததெல்லாம் அதுதான்.
ஜெல்ட்சின் காலப்பிரிவின் முடிவு
ஜெல்ட்சின் காலப்பிரிவு ஆகஸ்ட் 1998 நிதி வீழ்ச்சியுடன்
உண்மையிலேயே ஒரு முடிவுக்கு வந்தது. ரஷ்ய முதலாளித்துவமானது
நாட்டினை பொருளாதார பின்தங்கிய நிலையிலிருந்தும் வறுமையிலிருந்தும்
ஒரு முன்கூட்டி காணக்கூடிய எதிர்காலத்தினுள் விடுவிக்கும் என்ற
அனைத்து நம்பிக்கைகளையும் இந்த நிலை முறிவானது புதைத்துவிட்டது.
ஒரு பிரமாண்டமான சர்வதேச பணவெறி பிடித்த ஊழல் மத்தியில்
ஜெல்ட்சின் தன்னை கண்டுகொண்டார், மற்றும் அவர்
பேராசை கொண்ட புகழ்ச்சி செய்பவர்கள் மற்றும் பாதி -
கிரிமினல் நிதியாளர்களினால் சுற்றிவளைக்கப்பட்ட ஒரு மனிதானாக
தோன்றினார்.
செச்சன்யா யுத்தமானது அதிருப்தி கொண்ட
மேல்தட்டினரின் விமர்சனங்களை அடக்குவதற்கும், மக்களின்
சமூக எதிர்ப்புகளை உள்ளிழுத்துக்கொள்வதற்குமான ஒரு வழியாக
கிரெம்ளினுக்கு சேவை செய்தது. மிகவும் சாதகமான நிலைமையில்
அவர் தயார் செய்திருந்த பின் கதவு வழியாக அது வழங்கிய வாய்ப்பினை
பயன்படுத்தி ஜெல்ட்சின் காட்சியிலிருந்து மறைந்தார்.
விலகிச் செல்வதற்கு முன்பு சுருட்டியதை எடுத்துசெல்ல அவர்
மறக்கவில்லை.
அவர் ஒரு கதாநாயகனாக அரசாங்கத்தை விட்டு
விலகவில்லை, கண்டன ஓசைகள் மற்றும் கூச்சல்களுடன் கூடிய
ஒரு ஜாலக்காரனாகத்தான் விலகினார். இது அவருக்கு அடுத்து
வந்த புடினின் ஜனாதிபதி சட்டத்தினால் வெளிப்படுத்தப்பட்டது,
அது எல்ட்சினுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சிறப்பு அரசு
பாதுகாப்பையும் அதே போல் வாழ்நாள் முழுவதற்குமான
ஒரு காவலரையும் வழங்குகிறது. முன்னைய ஜனாதிபதி முழுநிறை
காப்புடையவராக பிரகடனம் செய்யப்பட்டார்.
''கிரிமினல் அல்லது சிவில் சட்ட விசாரணைகளில்
அவர் பதில் சொல்லும்படி, காவலில் வைக்கும்படி, கைது செய்யும்படி,
சோதனைக்குட்படுத்தும்படி அல்லது குறுக்கு விசாரணை செய்யும்படி
அழைக்கப்பட முடியாது'' என்று புடினின் சட்ட அறிக்கை கூறுகிறது.
அதேபோன்ற உத்தரவாதங்கள் அவரது தனிப்பட்ட நன்மைக்காகவும்
வழங்கப்பட்டிருக்கிறது: ''ஜனாதிபதியின் மீறமுடியாத தன்மை
அவரது வாழ்க்கைக்கு வேலை செய்யும் இருப்பிடத்துக்கு,
அவரது போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கு,
ஆவணங்களுக்கு பொதிகளுக்கு மற்றும் அவரது கடிதத்தொடர்புக்கு
நீட்டிக்கப்படுகின்றது''.
இந்த பின்னணியின் எதிரே, லட்சக்கணக்கான
ரஷ்யர்களுக்கு அவர் தொலைக்காட்சியில் ஆற்றிய உரை ஆழமான
பித்தலாட்டமாக ஒலிக்கிறது: ''உங்கள் ஒவ்வொருவரது வேதனையையும்
நான் எனது சொந்த இதயத்தில் ஏற்பட்ட வேதனையாக உணர்ந்தேன்.
என்ன செய்யப்படவேண்டும் என்பதுபற்றி நான் வேதனையுடன்
சிந்தித்த வேளையில் தூக்கமில்லா இரவுகளை நான் அனுபவித்தேன்,
எனவே மக்கள் மேலும் இலகுவாகவும் சிறப்பாகவும்
வாழமுடியும். இதைவிட மேலும் வேறு முக்கியமான பணிகள் எனக்கு
இருக்கவில்லை''.
அவரது தொலைக்காட்சி உரையின்போது கடந்த
சமீபகாலம் முழுவதும் கிரெம்ளின் பிரச்சாரம் பயன்படுத்திய -
''ஜனநாயகம்'' - என்ற முக்கியமான பதம் அரிதாகத்தான்
குறிப்பிடப்பட்டது என்பது முக்கியமானது. உண்மையிலேயே இந்த
சொற்றொடர் எப்போதுமே பிரச்சார தேவைகளுக்குத்
தான் சேவை செய்தது. அவரது ஆட்சியின் முக்கியமானவைகளாக
இருந்தவை - 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டது,
1993 இலையுதிர்காலத்தில் பாராளுமன்ற கட்டிடத்தை டாங்கிகளினால்
குண்டு பொழிந்து தாக்கல், 1998 ஆகஸ்டில் நிதி சந்தைகளின் வீழ்ச்சி
மற்றும் 1994-96, 1999-இல் மோசமான செச்சன்யா யுத்தங்கள்
- இவை அனைத்துமே ஒரு எதேச்சாதிகார போலீஸ் ராஜ்யத்தை
கட்டுவதற்கான கட்டங்களாகும்.
ஒரு அரசியல்வாதியாகவும், ஒரு தனி மனிதர் நிலையிலும்
ஜெல்ட்சின் ஜனநாயகம் மற்றும் நீதியை உள் கொண்டிருக்கவில்லை.
அவர் ஸ்ராலினிச பாணியிலான ஒரு மாதிரி எடுத்துக் காட்டான
சோவியத் அதிகார உருவமாவார். ஒரு ''எஜமான்'', அவரைப்
பொருத்தவரையில் அவரது சொந்த வாழ்க்கைப்போக்கு
மற்றும் சுருக்கமான வாழ்க்கைக்கு மேலாக இருக்கும்
எதுவுமே மிகக்குறைந்த முக்கியத்துவம் உடையதாகும். அவர்
குறைந்த புத்தி விவேகமுடையவராகவும், வரம்புக்குட்பட்டவராகவும்,
கருவியாகவும் இருந்தார், இருக்கிறார். ஒரு சிக்கலான வரலாற்று
நிகழ்வுப்போக்கில் தற்காலிகமாக சமூக மேற்தளத்துக்கு
தரைதட்டிய ஒரு சமூக தன் முன்னேற்ற குறிகொண்டவர், ஆனால்
உண்மையிலே அவர் மிக சிறிதளவு தான் மாறியிருக்கிறார்.
இது ஜெல்ட்சினை ''ஜனநாயகத்தின் தந்தை''
என்று அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் சமீபத்திய டைம்ஸ்
கட்டுரையில் அழைப்பதை தடுக்கவில்லை. ரஷ்யாவில், எவ்வாறாயினும்,
இந்த சூத்திரமானது அரிதான சாத்தியத்தில் தான் பயன்படுத்தப்படுகிறது.
இது I. Ilf மற்றும் E. Petrov
வின் மிகப் பிரபல்யமான நாவலான பன்னிரண்டு நாற்காலிகளுடன்
மிகப்பலமான கூட்டுக்களை எழுப்புகிறது. இந்த எழுத்து,
1920களின் இறுதியில் எழுதப்பட்டது, இது புரட்சிக்கு முந்திய ரஷ்யாவில்
பெரிய அளவிலான ''ரஷ்ய ஜனநாயகம்'' தொடர்பாக ஒரு கட்டுக்கதை
உருவாக்கும் முயற்சி பற்றி மகிழ்ச்சி கொண்டாட்டம் செய்கிறது.
வரலாற்று ரீதியாக பார்க்கையில், இந்த நூற்றாண்டின்
தொடக்கத்தில் இருந்ததைவிட முதலாளித்துவத்தின் அடிப்படையில்
இன்று ரஷ்யாவில் வளம்பெறக்கூடிய ஜனநாயகத்தை கட்டுவதற்கான
முயற்சிகளுக்கு மிகக்குறைந்தளவிலான வாய்ப்புத்தான் உண்டு.
இன்று ரஷ்ய முதலாளித்துவம் இருப்பதாக இருந்தால் அது மிகவும்
எதேச்சாதிகார ஒடுக்குமுறையில் மிகவும் குரூரமான வழிமுறைகள்
மூலமாக மட்டும்தான் இருக்கமுடியும்.
அவரது அரசியல் பணியின் தொடக்கத்திலேயே
ஜெல்ட்சின் அவரது பெயருடன் சேர்த்து சமூக சமத்துவம்
மற்றம் நீதிக்கான துல்லியமல்லாத நம்பிக்கைகளை உருவாக்குவதன்
தேவையை புரிந்து கொண்டார். அந்த நம்பிக்கைகள்
தொடர்ந்தது வரையில் அவர் புதிய ஆளும் வர்க்கத்தின்
உருவாக்கத்திற்கு ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்தார்,
சலுகைமிக்க தனி உடமை சொந்தக்காரர்களுக்கும் லட்சக்கணக்கான
சாதாரண பிரஜைகளுக்கும் இடையிலான படுபாதாளத்தை நிரப்பினார்.
அவர் விலகியதும் அந்த படுபாதாளம் மிகவும் தெளிவானதாகி
உள்ளது.
முதலாளித்துவத்தின் அற்புதமான பலத்தில் மக்களுக்கு
இருந்த புதுமை உண்ர்ச்சிமிக்க நம்பிக்கை இறுதியாக கடந்த
காலத்துக்கு உரியதாக்கப்படும். உழைக்கும் மக்கள் பக்கத்திலிருந்து
வரும் அனைத்து எதிர்ப்புகளையும் நசுக்குவதற்கு பலாத்காரத்தை
பயன்படுத்த ஆளும் மேல்தட்டுக்கள் தம்மை மறு ஒழுங்கு செய்து
கொள்கின்றனர். இதுதான் புதிய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் புறநிலையான
சமூகப்பாத்திரமாகும்.