McCain in
Vietnam: the ugly face of American imperialism
வியட்நாமில்
மக்கெயின்: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அழுக்கு முகம்
By Patrick
Martin
3 May 2000
Use
this version to print
வியட்நாமில்தேசிய
விடுதலை முன்னணியின் வெற்றியின் இருபத்தைந்தாவது நினைவுதினம்
ஹொ-சி-மின் நகரத்திலும்,நாடுமுழுவது பெரும் ஊர்வலங்களுடனும்,
அதிகாரபூர்வ விழாக்களுடனும் கொண்டாடப்பட்டதுடன் அமெரிக்க
தொடர்புசாதனங்கள்இந்த விமர்சனங்களால் நிரம்பிவழிந்தன.அங்கு,
வியட்நாம் மக்களால் அமெரிக்கஏகாதிபத்தியம்
தோற்கடிக்கப்பட்டவரலாற்றுத் தோல்வியானது இப்பொழுதும்அமெரிக்காவின்
ஆளும் வட்டாரங்களில் ஆத்திரத்தை எழுப்புகின்றது.
தென்வியட்நாமின்
பொம்மை ஆட்சியின் தலைநகராய்இருந்த சய்கோன் நகரை
நோக்கியவியட்நாமிய இராணுவப்படைகளின் நகர்வுடன்,ஜப்பானிய,
பிரான்சிய, அமெரிக்க ஆக்கிரமிப்புக்குஎதிரான 30வருடகால யுத்தத்திற்குப்பின்அந்நாட்டின்
மீழ் இணைப்பு முற்றுப்பெற்றது.இது இருபதாம் நூற்றாண்டின்
மாபெரும்புரட்சிகர மக்கள் போராட்டத்தின்உச்சவடிவமாய்
இருந்ததுடன், இதன்போதுமுப்பதுலட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்.லட்சக்கணக்கானோர்
அங்கவீனராயினர்,காயமடைந்தனர், எரிக்கப்பட்டனர், இரசாயனப்
பொருளால் (chemicaldefoliants)-
நஞ்சூட்டப்பட்டனர் அல்லது வீடிழந்து அகதிகளாக்கப்பட்டனர்.
இறுதி அமெரிக்க
இராஜ தந்திரிகளும், இராணுவஅதிகாரிகளும், ஊழல் நிறைந்த
இராணுவசர்வாதிகார நகு வன் தியு (
Nguyen VanThieu) இன் ஆயிரக்கணக்கான
கையாட்களுடன்ஹெலிஹாப்டர் மூலம் நகரைவிட்டு வெளியேறினர்.இந்த
விரைவான, திகில் நிறைந்த பின்வாங்கலின்போது, தென் சீனக்கடலில்
காத்திருந்த விமானம்தாங்கிகப்பலில் இருந்த கடற்படையினர், சய்கோன்இலிருந்து
ஒவ்வொரு முறையும் அவர்களதுபடையாட்கள் வந்திறங்கியபின்
மேலும்அடுத்தடுத்து வரும் விமானங்கள்இறங்குவதற்கு இடம்
கொடுப்பதற்காக ஹெலிஹாப்டர்களை பக்கவாட்டுக்கு தள்ளிவிடவேண்டியிருந்தது.
எப்படியிருந்தபோதும்
அரை மில்லியனுக்கு மேற்பட்டதுருப்புக்களைக் கொண்ட, தன்நிகரற்றசக்திவாய்ந்த
தாக்குதிறனும், பொருளாதாரரீதியில் மிக வலுவானதுமான, கடலையும்வானையும்
கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தஅமெரிக்காவின் இராணுவம் சண்டைக்குசற்றும்
சோர்வடையாது காணப்பட்டஎதிரியை வெற்றி கொள்ள முடியாமல்
போனது.வியட்நாமிடம் அடிபட்டு நொருங்கிப்போனதிலிருந்து
அமெரிக்க ஆழும் வர்க்கமோ அல்லதுஅமெரிக்க சமூகமோ
ஒருபோதும் மீளாததுடன், இது பென்டகனின் இராணுவகட்டமைப்பை
ஆழமாய் ஆட்டம் காணவைத்தஒன்றாகும்.
இந்த நீண்ட
கசப்புணர்வு''செனெட்'' சபை நபரான ஜோன்மக்கெயினால்
கடந்தவாரம் வெளிப்படுத்தப்பட்டது. இவர் அரிஸோனா மாநில
குடியரசுக்கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிட்டுஜோர்ஜ்
W.
புஜ்ஷ் இனால்தோற்கடிக்கப்பட்டவராவார். இவர்வியட்நாம்
மக்களின் மீது குண்டுகளைப் பொழிந்துதள்ளிய முன்னை நாள் கடற்படை
மாலுமியாவார். அதன்பின் ஹநொய் இல் யுத்தக் கைதியாகஐந்தரை
வருடம் இருந்தார். இவ் இருபத்தைந்தாவது வருட நினைவுதினத்திற்காக,
NBC
(அமெரிக்க தொலைக்காட்சி) இன் இன்றைய நாள் என்னும்
நிகழ்ச்சிக்காகஒழுங்கு செய்யப்பட்ட சுற்றுப்பயணத்திற்காகஅங்கு
விஜயம் செய்தார்.
ஜோன்மக்கெயின்
கிளின்டன் நிர்வாகம் வியட்நாமுடன்1994-95 இல் இராஜதந்திர, வியாபார
உறவுகளைமீளவும் நிலைநிறுத்துவதற்கு காங்கிரஸின்ஆதரவினைக் கட்டி
எழுப்புவதற்கு திறவுகோலான பாத்திரத்தினை வகித்தவராவார்.
இந்தக்காலப் பகுதியில் இருந்து அவர் அரை டசின் தடவைகளுக்கு
மேல் இந்நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார்.ஆனால் இந்த தற்போதய
விஜயம் மிகவும்வித்தியாசமான அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது.
இது தென் கறோலினா வில் நடந்த அவரது முதலாவது இனவாத
விளக்க உரையுடன்தொடர்புடையது, அதன் போது அவர்தனது
வியட்நாம் கைதிளை "கூக்ஸ்'' (gooks-
இது தூரகிழக்கு நாட்டினரை கேவலமாககுறிக்கும்
சொல்) என திரும்ப திரும்ப அழைத்துதூற்றினார்.
தலைநகரான
ஹநொாய்இற்கும், ஹோ -சி -மின் நகரிற்கும் -முன்னயசய்கோன்
நகர்- சென்ற மக்கெயின்வியட்நாமியர் மீது ஆத்திரமூட்டும் தாக்குதலைதுதொடுத்தார்.
அர்த்தமற்ற பிதற்றலாய்''தப்பான நபர்கள்'' யுத்தத்தில் வெற்றிபெற்றனர்
என கூறினார். மேலும், ஹோசி மின் நகரில் மக்ககெயின் பத்திரிகையாளர்களிடம்பேசுகையில்
''நான் நினைக்கின்றேன் கப்பல்மூலம் வெளியேறிய சிறந்த மனிதர்களைஅவர்கள்
இழத்துவிட்டனர், அத்துடன்ஆயிரக்கணக்கானோருக்கு மரணதண்டனைவழங்கப்பட்டது,
நூறாயிரக்கணக்கானோர் (re-education
camp) சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டனர்''
என்றார்.
அத்துடன் அவர்தற்போதுள்ள
ஆட்சியின் கொள்கைகளைமோசமாய் விமர்சிக்கையில், அமெரிக்காவுடன்ஒர்
அனுசரணையான உறவைப் பேணுவதற்கு''வியட்நாம் அரசாங்கத்தினுள்
சிலர் விரும்பவில்லை''என குற்றம் சாட்டினார். ''அரசாங்கத்தில்இங்கு
வெளிநாட்டு முதலீடு சம்பந்தமாகவும்ஒரு வியாபார உடன்படிக்கையை
இட்டும்ஓர் வித்தியாசமான அணுகுமுறை காணப்படுகின்றது. சுட்டியலும்
அரிவாளும் கொடியில் இருப்பதைநான் காண்கின்றேன்'' என்றார்.
மேலும்அவர், ''இவ் கொள்கைகள் மற்றும்அணுகுமுறை மீதும்,
நாட்டில் ஊழல் மலிந்துவருவதையிட்டும் நான் சற்று கவலைப்படுகிறேன்.''
என்றார்.
மக்கெயினினது
விஜயமும் அவரதுவிமர்சனமும் உடனடியான அரசியல் உள்நோக்கம்
கொண்டது. அமெரிக்க அதிகாரிகள்,வியட்நாம் தன்னை உலகச்சந்தைக்குதிறந்துவிடுவதற்கு
முன்வருவதையிட்டு எந்தவொரு பொறுமையையும் காட்டவில்லை.
முன்னர்ஒரு முறை ஹநொய் இன் ஸ்ராலினிச ஆட்சியதிகாரத்தால்
1986 இல் ''டொய் மொய்'' என்ற சுலோகத்தின் கீழ் முதல் முறையாய்
இதற்கு கதவு திறந்துவிடப்பட்டது. ஆனால் இது தாய்லாந்தை
அண்டியபகுதியிலிருந்து எழுந்துவந்த 1997-ஆசிய நாணயநெருக்கடியுடன்
அடிப்படையில் மந்தமாய்போனது. கடந்த வருடம் அமெரிக்காவிற்கும்வியட்நாமிற்கும்
இடையிலான வியாபாரஉடன்படிக்கையையிட்டு கொள்கையடிப்படையில்
பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது.ஆனால் வியட்நாமிய அரசு
அதில் கையொப்பமிடுவதிலிருந்தும் அதை யதார்த்தம் ஆக்குவதிலிருத்தும்
பின்வாங்கியது. இதுவே மக்கெயின் தனதுவிஜயங்களின் போதான கண்டனத்தில்
சுட்டிக்காட்டியிருந்த அந்தத் திருப்பமாகும்.
ஆனால்இங்கு
அவரது குறிப்புக்கு ஓர் ஆழ்ந்தமுக்கியத்துவம் இருக்கின்றது. இக்
கூற்றுக்கள்பெருமளவு விவசாய நாடொன்றின் கைகளில்தாம்
தோற்றுப் போனதை ஒத்துக்கொள்ளாத அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
அகங்காரம்நிறைந்த தன்மைக்கு எடுத்துக்காட்டாகும்.மக்கெயின்
வியட்நாமியர்களுக்கு உபதேசம்செய்த இவ்வேளையில், அமெரிக்க
இராணுவப்படை அங்கு ஆற்றிய கைங்கரியத்தை ஞாபகப்படுத்த
அனுமதியுங்கள். அவர்கள் அங்கு பாரியகொலைகளைச் செய்யதனர்.
பொதுமக்கள்மேல் குண்டுகளைப் பொழிந்தனர். நாட்டின்அரைப்பகுதியை
அழித்தொழித்தனர். பாலியல்வன்செயல்களையும் சித்திரவதைகளையும்நடாத்தினர்.
கிராமங்களை எரித்தனர்,குழந்தைகளைச் சுட்டுக் கொன்றனர்.ஹெலிஹாப்டரில்
இருந்து கைதிகளை வீசி எறிந்தனர்.அத்துடன் இறந்தபோனவர்-உயிருடனிருந்தவர்என்ற
வித்தியாசமில்லாமல் மக்களின் காதுகளைஅறுத்தெடுத்து அவற்றை
ஞாபகச் சின்னமாய்எடுத்துக்கொண்டனர் அல்லது ஒரு ''பீர்''புட்டிக்காக
பரிமாறினர். ஒவ்வொருஇராணுவத்தினனும் தனிப்பட்ட ரீதியில் இப்படியானகுற்றச்
செயல்களில் ஈடுபட்டார்கள்என்பதல்ல. ஆனால் இவ் இராணுவ
ஆக்கிரமிப்புகாட்டுமிராண்டித்தனமான, ஜனநாயகவிரோத ஏகாதிபத்தியத்தின்
குணாம்சமாகும்.அதன் இப்படியான வக்கிரம் மிக்க தன்மை வெளிப்படுத்துவது
தவிர்க்க முடியாது.
மனித உரிமைகளுக்கு
எதிரான குற்றங்கள்மற்றும் யுத்தக்குற்றங்கள் என மட்டுமேஇவற்றை
வரையறுக்க முடியும் என்பதிற்குபின்னால் பென்டகனின் உயர் மட்டத்தினதும்ஜோன்ஸன்
மற்றும் நிக்ஸன் நிர்வாகத்தினதும்திட்டம் இருந்தது. அங்கே
விலை உயர்ந்ததும்,முழுவதுமான சீருடை அணிந்த மனிதர்கள் Operation
Phoenix (நெருப்புக் கோழி தாக்குதல்-இது
தேசிய விடுதலை முன்னணி உறுப்பினர்என சந்தேகத்திற்கு உள்ளான
20,000 கிராமத்தலைவர்கள் கொன்று ஒழிக்கப்பட்டனர்) ஐநடாத்துவதற்கு
உத்தரவிட்டனர். மேலும்ஹநொாய் இல் இடம்பெற்ற கிறிஸ்மஸ் குண்டுத்தாக்குதல்,
1970 இல் கம்போடியா மீதான ஆக்கிரமிப்பு,நாபாம் குண்டு, Agent
Orange ஐ பரந்தஅளவில் பயன்படுத்தியது
அத்துடன், -1998இல் ஆவணப்படுத்தப்பட்டதன் படி-நரம்புகளை
செயலிழக்கச் செய்யும்வாயுவை பயன்படுத்தியதுமான செயற்பாடுகள்
நடாத்தப்பட்டன.
வெளிநாட்டமைச்சின்பேச்சாளர்
பங் தை தங் (Phan
ThuyThanh) ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருந்த
தனது உரையில் மக்கெயினுக்கு பொருத்தமாய் பதிலளித்தார்.
''எமது மக்கள் மீதுகுண்டுகளை பொழிந்து எமது நாட்டிற்குபாரிய
அழிவை ஏற்படுத்திவிட்டு இன்று அவர்களால்வஞ்சிக்கப்பட்டவர்களின்
இரட்சகர்களாகஅவர்களை விமர்சனம் செய்யும் உரிமையைகொண்டிருப்பதாக
நினைப்பது அவர்களதுபண்புகளுக்கே எதிராக திரும்புகின்றது".
மக்கெயின்,
''எமது நபர்கள்'' என உயர்த்திப்பிடிக்கும் வடவியட்நாமின் பொம்மை
ஆட்சியின்துருப்புக்கள், 1975 இல் ஏன் மிகச் சோகமானமுறையில்
உடைந்து நொருங்கின என்றபிரச்சனையை ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை.
நகு வன் தியு உலகின் -அமெரிக்கா, சீனா,சோவியத் ரஷ்யா ஆகியவற்றிற்கு
அடுத்தபடியாக-நான்காவது பெரிய இராணுவத்தைகட்டுப்படுத்தினார்
அத்துடன் பொருத்தமானஆகாயப் படையையும் வைத்திருந்தார்.ஆனால்
அவரது ஆட்சியே வரலாற்றில்மிக ஊழல் மலிந்ததாய் இருந்ததெனலாம்.அவரது
தென் வியட்நாமிய கிஸிக்ஷிழி அதிகாரிகள்,நாட்டுக்குள் டொலர் நாணயத்தினதுபெறுமதி
அமெரிக்காவினால் மாற்றப்படுவதற்கு முன் பணத்தை தத்தமது
வெளிநாட்டுவங்கிக் கணக்குகளுக்கு எவ்வளவு விரைவாகமுடியுமோ
அவ்வளவு விரைவாக தள்ளினர்.
வியட்நாம்
இன்று வியட்நாமிய கம்யூனிஸ்ட்கட்சியினால் இறுக்கமாக கட்டுப்படுத்தப்படுகிறது.
ஆனால் தனிக்கட்சி அரசில் சில துறைகளைபார்க்குமிடத்து அங்கு
மனித உரிமைகளும்சமூக நிலைமைகளும் ''சுதந்திர நிலம்"
எனஅழைப்பதற்கு ஒத்திசைவானதாக இல்லை.இருபத்தி ஐந்தாவது
நினைவுதின மன்னிப்புவழங்கலினால் வியட்நாமிய சிறைகளில் இருப்பவர்களின்
எண்ணிக்கை 70,000 இல் இருந்து 60,000 ஆயிரம்ஆக குறைக்கப்பட்டது,
இது ஒவ்வொருஆயிரம் மக்களுக்கு ஒருவரிலும் குறைவானதாகும்.
இதற்கு எதிராக ஐக்கிய அமெரிக்காவில்பார்க்குமிடத்து அங்கே
இருபது இலட்சத்திற்கும் அதிகமானோர் சிறையில் இருக்கின்றார்கள்.இது
நூற்றுக்கு ஒருவர் என்ற வீதத்தில் இருக்கின்றது. இவர்களில் பல்லாயிரக்
கணக்கானோர்வியட்நாம் யுத்த போராளிகளாவர்.இவர்கள் பிழையாக
வழி நடத்தப்பட்டவர்களும் தென்கிழக்கு ஆசியாவின் அனுபவங்களால்உளவியல்ரீதியாக
ஊனமுற்றவர்களாவர்.
வியட்நாம்
ஒரு வறியநாடு. ஆனால் அதுஅப்படி இருந்தபோதிலும் அதனால்பல
செல்வந்த நாடுகளை விஞ்சுமளவிற்குகல்வி வசதிகளை பேணமுடிந்துள்ளது.
வயதுவந்தோரில் அண்ணளவாக 90 வீதமானோர்எழுத்தறிவு படைத்தவர்களாவர்.
இதுஆசியாவின் குறை அபிவிருத்தி நாடுகளை விடமிக மேல் நிலையிலும்,
அமெரிக்காவின் பலமாநிலங்களை விட உயர்வானதாகவும்இருக்கின்றது.
சக்திவாய்ந்த குண்டுவீச்சினால்நாசம் செய்யப்பட்ட நிலத்தை
அயராதுசிரமம் எடுத்து கட்டி எழுப்பி பேணிப் பாதுகாத்ததால்,
நெல் உற்பத்தி ஒரு மட்டத்தைஎட்டியது. இந்நிலையில் வியடநாம்
தொடர்ச்சியான உணவுப் பற்றாக் குறையிலிருந்து மேலெழுந்து,ஓர்
இறக்குமதி செய்யும் நாடு என்னும்நிலையிலிருந்து இன்று அரிசி ஏற்றுமதியில்
உலகில்இரண்டாவது இடத்தை வகிக்கின்றது.
சர்வதேச
ரீதியிலும், வியட்நாமிலும் ஸ்ராலினிசத்தால்இவ் விடுதலப் போராட்டத்திற்கு
எதிராகநடாத்தப்பட்ட குற்றங்கள் முழுவதையும்உள்ளடக்கியதான
வியட்நாம் புரட்சியின்வரலாற்றுக் கணிப்பீடு ஒன்று நிச்சயம் வரையப்பட
வேண்டும். ஆனால் வியட்நாம், அமெரிக்கஆக்கிரமிப்பால்
விளைந்த அழிவுகளுக்கும்,உயிர்இழப்புகளுக்கும் எந்தவொரு
நஸ்டஈட்டையோ அல்லது சாதரணமானஅனுதாபத்தின் வெளிப்பாட்டையோஒரு
போதுமே பெற்றுக்கொள்ளவில்லை,அத்தோடு அதற்கு
அமெரிக்காவின்அரசியல் வாதிகளிடம் இருந்து எந்தவொருஒழுக்கரீதியான
போதனையும் தேவையில்லை.
|