The social meaning of the anti-WTO protests in Seattle
சியாற்றில் நகரில் WTO
இற்கு எதிரான எதிர்ப்பியக்கத்தின் சமூக உள்ளடக்கம்
By Editorial Board
6 December 1999
சியாற்றில் நகரில் நடைபெற்ற உலக வர்த்தக
அமைப்பின் கூட்டத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும்
பொலிசாருக்கும் இடையில் இடம்பெற்ற மோதுதல்கள் வரவிருக்கும்
சம்பவங்களின் ஒரு முன்னறிவிப்பாகும். முதலாளித்துவத்தினுள்ளும்,
விசேடமாக அமெரிக்காவினுள்ளும், மேலெழுந்துவரும் சமூகப்
பதட்ட நிலமைகளின் வெடிப்பை வெளிப்படுத்தி இந்த சம்பவங்கள்
உள்ளன.
சியாற்றில் நகரில் எழுந்த எதிர்ப்புகள் வியட்நாம்
யுத்த காலத்திற்குப் பின்னர் அரசியல் விளைவுகளால் தூண்டப்பட்ட
மிகப்பெரும் அமெரிக்க உள்நாட்டு கலவரமாகும். 1992 இல்
லொஸ் ஏஞ்சல்ஸ்சில், இனவாத தாக்குதலை அடிப்படையாய்
கொண்டுடெழுந்த கலவரம் தவிர -இது றொட்னி கிங் என்ற கறுப்பின
இளைஞர் மீதான தாக்குதலில் பொலிசார் குற்றவாளிகள் இல்லை
என்ற தீர்ப்பிற்கு எதிரான கலகமாகும்- அமெரிக்காவின் பெரு
நகரமொன்றில் ஏறத்தாள முப்பது வருடங்களுக்குப் பின்னர் இச்
சம்பவத்திற்கே -தேசிய படை[National Guard] அழைக்கப்பட்டிருந்தனர்.
சியாற்றில் எழுந்த எதிர்ப்பு, மற்றும் பொலீசார்
குவிக்கப்பட்டதினதும் அளவு ஒருபோதும் 1960 களின் யுத்த எதிர்ப்பு
எழுச்சிகளையோ அல்லது கெற்றொ [யூத இருப்பிடம் சார்ந்த]
கலகத்தையோ போன்றதல்ல. ஆனால் தவிர்க்கவொண்ணாது,
அமெரிக்காவின் உழைக்கும் மக்கள் இளைஞர்கள் மத்தியில்
அரசியல் சமூக பிரச்சனை தொடர்பாக மீண்டும் அக்கறை ஏற்பட்டுள்ளதற்கான
ஆரம்பத்தின் அறிகுறியைக் காட்டியுள்ளது.
சியாற்றிலுக்கு வந்திருந்தவர்களில் பத்தாயிரக்கணக்கானோருள்
சுற்றுப்புறச் சூழல் மற்றும் மூன்றாம் உலக நாடுகளில் குழந்தைகளும்
தொழிலாளர்களும் சுரண்டப்படுவதையிட்டு எண்ணிலடங்கா
விடையங்கள் எழுப்பப்பட்டன. ஆனால், பொங்கியெழுந்து வந்த
இந்த பெரும்பான்மையினரை ஒன்றிணைத்த முக்கிய கண்டனங்கள்,
அமெரிக்காவிற்கு மாத்திரமல்ல உலகம் முழுவதிலும், மிகையாய்
பெருகிவரும் சமூக
சமத்துவமின்மைக்கும் உலகத்தின் உழைக்கும் மக்கள்
பூதாகர-நாடுகடந்த கூட்டுத்தாபனங்களின் முழு-ஆளுமைக்குக்
கீழ் வருவதன்மேலான வெறுப்புமாகும்.
Washington Post
இன் கருத்துப்படி, இவ் எழுச்சியாளர்கள்: "தங்களது 401(k)
எப்படி செயற்படுகின்றது என்பதை பரிசீலித்துப் பார்க்காத
ஒருவகைக் குழுவினராய் இருந்தனர் அல்லது தங்கள் நிறுவனங்கள்
மூலம் மக்கள் மத்தியில் இருந்து கோடீஸ்வரர்களாய் வந்தவர்களுடன்
கூட்டானவர்களோ அல்லர். அவர்கள் எல்லோரும், இப்
பூதாகர நிறுவனங்கள் அவர்களது வாழ்க்கையை கட்டுப்படுத்துவதிலும்
கலாச்சார மதிப்பீடுகளை நிர்ணயிப்பதாகவும் இருக்கின்றன
என்பதிலும் அத்துடன் WTO
அவற்றின் கூட்டான நலன்களின் பாதுகாவலனாய் வந்துள்ளது
என்பதிலும் ஒரு பொது உடன்பாடு உள்ளவர்களாய் காணப்படுகின்றனர்".
சியாற்றில் மாநாடு நடந்தபோது வெளியான மக்கள்
கருத்துக்கணிப்பின்படி,
WTO
இன் நிகழ்ச்சிநிரல் மற்றும் நாடுகடந்த நிறுவனங்களையிட்ட
அமெரிக்காவின் அணுகுமுறை பொருளாதார, வர்க்க நலன்களின்
அடித்தளத்தில் ஆழமாக பிளவுபட்டிருந்ததை காணக்கூயதாய்
இருந்தது. வருடத்திற்கு $20,000 க்கு குறைவாக வருமானம் பெறும்
குடும்பங்களுள் மூன்றில் ஒரு பகுதியினர் இச் சுதந்திர-வாணிப
உடன்படிக்கை கெடுதிவிளைவானதாகவே இருக்கும் என நம்பினர்.
ஆக $50,000க்கு கூடிய வருட வருமானம் உள்ளவர்கள் மட்டுமே
அதாவது தேவைக்கதிகமாய் பெறும் ஒரு குறுகிய பகுதியினர் மட்டுமே
இவ் உடன்படிக்கைக்கு ஆதரவளித்தனர், ஆகக் கூடியளவு
வருமானத்தை பெறுபவர்கள் மாத்திரமே இதற்கு பாரிய ஆதரவளித்திருந்தனர்.
வேறுபடுத்தி பார்க்கும்மிடத்து இவ்வுணர்ச்சியலைகள்,
எதனை வெளிப்படுத்துகின்றன என்றால் வெறுமனே வெளிநாட்டு
வியாபாரத்தின் மேலான வெறுப்பை பிரதிபலிக்கவில்லை. ஆனால்,
ஒரு நூறு பூதாகர-நாடுகடந்த கூட்டுத்தாபனங்களின் கட்டுப்பாட்டின்
கீழ் பொருளாதாரம் பூகோளமயமாவதையிட்ட ஆழ்ந்த
அவநம்பிக்கையும், தமது தொழில்கள், வாழ்க்கைத்தரம்,
வேலைநிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதன்
தாக்கத்தையிட்ட அச்சமுமே வெளிப்பட்டுள்ளன.
சியாற்றில் எழுச்சியில் தீவிர தேசியவாதமோ அல்லது
அமெரிக்கன் சோவினிசமோ ஒப்பீட்டளவில் தென்படவில்லை, இது AFL-CIO
அதிகாரத்துவத்தினுள்ளும் மற்றும் புக்கானனின் சில ஆதரவாளர்களிடையேயுமே
மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டக்காரர்களில்
அதிகமானோர், பின்தங்கிய நாடுகளின் மக்களின் நலன்களை வெளிப்படுத்துபவர்களாகவோ,
அல்லது பல நாடுகளிலுமிருந்து வந்த குழுக்கள் அந்த
நாடுகளது விவசாயிகளதும் சுரண்டப்படும் தொழிலாளர்களதும்
நலன்களை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாகவோ இருந்தனர்.
அமெரிக்காவில் சமுகத்துருவப்படுத்தல்
பரந்துபட்ட மக்களது இம்மாதிரியான இசைந்து
போகாத, முதலாளித்துவ எதிர் மனோநிலை பெரிதும் முக்கியத்துவம்
வாய்ந்த ஓர் அரசியல் நிகழ்வாகும். இது கடந்த இரண்டு
தசாப்தங்களாய் அமெரிக்க சமுதாயத்தில் நிகழ்ந்த கட்டுக்கடங்காத
சமூக துருவப்படுத்தலின் விளைபொருளாகும். ஜனத்தொகையில் ஐந்து
அல்லது பத்து வீதமாக இருக்கும் மேல்மட்டத்தில் உள்ள
சலுகைபடைத்த தட்டினரின் கட்டுக்கடங்காத கனவுகளுக்கும்
மேலாக செல்வம் பெருகியது, இந்நேரம் பரந்துபட்ட
பெரும் பகுதியினரான மத்தியதர வர்க்கத்தினருக்கும்
தொழிலாள வர்க்கத்தினருக்கும் அவர்களது குடும்பங்களின்
கெளரவமான வாழ்க்கையைப் பேணுவதற்கு கடினமான
போராட்டத்திற்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது.
அண்மைய வருடங்களில் எண்ணற்ற ஆய்வுகளில்
ஆவணப்படுத்தப்பட்டுள்ள இச் சமுக, பொருளாதார துருவப்படுத்தலானது
ஒரு சமாந்தரமான அரசியல் போக்குடன் ஒன்றிணைந்துள்ளது.
அமெரிக்காவின் இருகட்சி முறை எப்போதும் பணக்கார தட்டினரின்
கைகளில் ஓர் ஆயுதமாய் இருந்ததுடன் அது மேலும் மேலும்
பெரும்பான்மை மக்களின் நலன்களிலிருந்து விலகிச் சென்றுகொண்டிருக்கின்றது.
இதன் விளைவு என்னவெனில், அமெரிக்காவில் தீர்க்கமான சமூகக்
கேள்விகள் எழுப்பப்படும்போது, ஆட்சியதிகாரத்திடம் இதற்கு
பதில் எதுவுமில்லை. அவர்களிடம் இருப்பதெல்லாம், பொலிசின்
அதிகார தடியடியும், கண்ணீர் புகையும் ரப்பர் குண்டுகளும் ஆகும்.
இதன் மூலம் முக்கிய நகரங்களின் மத்திய பகுதிகளை யுத்தக்களமாக
மாற்றுவதுமேயாகும்.
சியாற்றிலில் நடந்த ஆர்ப்பாட்டம் அடிப்படையில்
பெருவர்த்தகத்தின் பிரதிநிதிகளுக்கும் சாதாரண மக்களுக்குமிடையிலான
இடைவெளியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. குறிப்பாக சியாற்றிலில்
நடந்த நிகழ்வுகளில் பொதுஜனங்களின் மனோநிலை பொதுவாக
ஆர்ப்பாட்டக்காரர்கள் பக்கத்திற்கு ஆதரவாயும் போலீஸ்
நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பானதாகவும் இருந்தது. ஆனால்
இம்மாநாட்டின் முக்கியமானவர்களில் ஒருவரான மைக்கிரோ
சொப்ற் (Microsoft) அதிபர்
Bill Gates ஆர்ப்பாட்டங்கள்
உச்சத்தில் இருந்தபோது ஒரு தொலைக்காட்சி நேர்காணலில்,
பொலிசார் மாநாட்டிற்கு இடையூறாய் இருந்த ஆர்ப்பாட்டகாரர்மீது
போதுமான பலப்பிரயோகம் செய்யவில்லை எனப் புகைந்துதள்ளினார்.
அதிர்ச்சியூட்டும் தாக்கத்தை கொடுத்த WTO
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையிட்டு ஒருபகுதி ஆளும் தலைமைப்
பகுதியினரும் அவர்கள் கட்டுப்படுத்தும் பெரும் தொடர்பு
சாதனங்களும் தமது சொந்த குழப்ப நிலையை எடுத்துக்காட்டினர்.
உலகப் பொருளாதாரத்ததின் தலைவிதியை விவாதிக்க மாநாட்டை
ஒன்றுகூட்டும்போது, அதில் பெரும் வர்த்தக மற்றும் அதன்
அரசியல் பிரதிநிதிகளே பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்பதை தவிர
அவர்கள் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?
கிளின்டனும் அமெரிக்க தொடர்பு சாதனங்களும்
கொண்டுள்ள ஆட்சேபனைபோல், சாதாரணமாக WTO இன்
நடவடிக்கைகள் தன்னகத்தே ஜனநாயகத்திற்கு முரணானதும்
வெளிப்படையாய் பேசாததுமான தன்மையை மாத்திரம் கொண்டிருக்கவில்லை.
அதிகப்படியாக அமெரிக்க அரசாங்கம் WTO போன்றதொரு
கூட்டுத்தலமையின் கருவியாகவே உள்ளது. எந்தவொரு தொழிற்துறை
மயமான நாட்டிலும் அமெரிக்காவைப் போல் வசதியற்ற மக்களின்
நலன்கள் அரசியல் அமைப்பிலும், உத்தியோக பூர்வ தொலைத்தொடர்பு
சாதனங்களில் இருந்தும் அந்நியப்பட்டு இருக்கவில்லை. ஆளும்
வர்க்கம் தனது சொந்த பிரச்சாரங்கள் மூலம் 1990 களின் பங்குச்சந்தையின்
பெருக்கத்தினால் ஒவ்வொரு அமெரிக்கரும் இலாபம் அடைந்துள்ளார்
என நம்பிக்கொண்டிருக்கையில் அமெரிக்க தொழிலாள வர்க்கம்
எதிர்நோக்கும் உண்மையான நிலைமைகள் பங்காளதேஷின் துன்பப்படும்
குழந்தைத் தொழிலாளர்களுக்கு ஈடாகவே உள்ளனர் என்பதை
மறைப்பதாகவே உள்ளது.
சுதந்திர சந்தை சித்தாந்தத்தின் வெறிபிடித்த
பாதுகாவலர்கள் மத்தியில், சியாற்றிலின் எதிர்த்தாக்கம்
அறியாமையினதும் இகழ்ச்சியினதும் ஒரு கலவையாய் பிரதிபலித்தது.
பிரிட்டனின் வர்த்தக நாளேடான The Economist இனது ஆசிரிய தலையங்கம் WTO
எதிர்ப்பு ஆர்ப்பாட்டகாரர்களுக்கான எந்தவொரு மன்னிப்பும்
வழங்குவதற்கு எதிராகவும், சியாற்றில் நகர வீதியில் போர்க்குணம்
கொண்ட மூடர்களின் அறியாமையையா அல்லது அவர்களின் மூளையற்ற
அரசுகளின் விவாதமா மோசமானது என்பதை தீர்மானிப்பது கடினம்"
எனவும் எழுதியுள்ளது.
Wall street Journal மூன்றாம்
உலக நாடுகளில் கடுமையான சுரண்டல் நிலைமைகள் தொடர்பாக
கவனம் தெரிவிப்போரை நிராகரித்து: "நீங்கள்
ஸல்வடோறில் உள்ள ஒரு தாயாக இருந்தால் இது உங்கள் குடும்பத்திற்கு
உணவளிக்க உதவுவதாகவும் அல்லது உள்ளூரில் வேலை செய்யும்
வாய்ப்பற்ற ஓர் சீன இளைஞராக இருந்தால் 'கடுமையான சுரண்டல்'
தமக்கு மேலும் ஒரு வாய்ப்பளிக்கும் சந்தர்ப்மாகவே பார்ப்பார்கள்."
என எழுதியது.
கிளின்டன் நிர்வாகத்தின் பிரதிபலிப்பு "வெற்று"
பேச்சும், சிடுமூஞ்சித் தனமும் அடங்கிய கலவையாக இருந்தது.
ஆரம்பத்தில் வெள்ளை மாளிகை இவ் எதிர்ப் இயக்கத்தை தனது
வர்த்தக திட்டங்களுக்கு ஐரோப்பாவிலும் மற்றும் மூன்றாம்
உலக நாடுகளிலுமிருந்து எழும் எதிர்ப்புக்கு எதிராக பயன்படுத்தும்
நோக்கத்தை கொண்டிருந்தது.
WTO வில்
தனது நிலைப்பாட்டுக்காக
AFL-CIO
அதிகாரத்துவத்துடன் நெருக்கமாக இணைந்திருந்தது. AFL-CIO
இன் முன்னைய தலைவர் ஜன் சுவீன்னியை (John Sweeney)
வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரியான ஜோன் பொடெஸ்ராவிற்கு
(John Podesta)
உதவியாளராய் நியமித்து சியாற்றில் மாநாட்டை சமாளிக்கும்
பொறுப்பிற்காய் ஆலோசகராய் அமர்தியது.
சியாற்றில் சம்பவங்கள் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள்
மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்களும் எதிர்பார்த்ததைவிட
அதிகதூரம் சென்றிருந்தது. இவ் ஆர்ப்பாட்டம் WTO
மாநாட்டின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியதும் கிளின்டன் நிர்வாகம்
ஒரு உபயோகமான பின்னணியாக இல்லாது மூர்க்கத்துடன் செயல்பட்டது.
New York Times , Wall Street Journal இரண்டுமே,
வெள்ளை மாளிகையில் இருந்தும் சியாற்றில் நகர நிர்வாகத்தில்
இருந்தும் வந்த அழுத்தம் காரணமாகவே ஆர்பாட்டகாரர்களுக்கு
எதிராக போலீஸ் வன்முறை தீவிரப்படுத்தப்பட்டதும், ஊரடங்குச்சட்டம்
அமுல்படுத்தப்பட்டதும் தேசிய படையினர் வரவழைக்கப்பட்டதும்
என எழுதின.
இது எவ்வகையிலும் கிளின்டனை அமைதியான எதிர்ப்பு
இயக்கத்தின் நண்பன் எனக்காட்டுவதை தடைசெய்யவில்லை.
சியாற்றில் துறைமுகத்திலும், WTO
மாநாட்டிலும் கிளின்டன் நிகழ்த்திய உரைகளில் அவரது உதவிகள்
உலகம் முழுவதும் பரவிய போதும் சியாற்றில் தெருக்களில்
ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் நடந்தன.
முதலாளித்துவமும் தேசிய-அரசும்
சியாற்றில் ஆர்ப்பாட்டம், உலக மக்களுக்கு
விமர்சனரீதியாக அணுகவேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த விடையங்களை
எழுப்பியுள்ளது. இதை ஒழுங்குபடுத்தியவர்களோ, இதில் பங்குபற்றியவர்களோ
எவருமே நாடுகடந்த கூட்டு நிறுவனங்களதும் முதலாளித்துவ
அரசாங்கங்களினதும் திட்டங்களுக்கு மாற்றீடாக எந்த்வொரு
நியாயமான வேலைத்திட்டத்தையும் முன்வைக்கவில்லை. இதைவிட
மோசமானது என்னவெனில், தொழிற் சங்கவாதிகளும் முதலாளித்துவ
சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு வாதிகளும் மற்றும் ஜனநாயக
கட்சி அரசியல் வாதிகளும் முதலாளித்துவ பூகோளமயமாக்கத்திற்கு
எதிராக பெருகிவரும் எதிர்ப்புக்களை, தேசியவாத சோவினிசத்தினதும்
முதலாளித்துவ தேசிய-அரசை பாதுகாப்பதனதும் திசையில் திருப்ப
முயல்கின்றனர்.
இவர்களுள் முதன்மையானவர் ரொம் ஹாய்டன்,
இவர் 1968 இல் சிக்காக்கோவில் ஜனநாயக தேசிய சபையின் [
Democratic National Convention ]
யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்ககளின் தலைவரும், கலிபோனிய
மாநிலத்தின் நீண்டகால ஜனநாயக சட்ட வரைபாளருமாவார். Washington
Post இன்
ஞாயிறு இதழில் இதற்கு சான்றாக அவர், ஆர்ப்பாட்டக்காரர்கள்
அமெரிக்க தேசியவாத நிலைப்பாட்டிலிருந்து கிளின்டனின் கொள்கைகளை
தாக்கமுடியும் என எழுதினார்.
"ஞாபகத்தில் உள்ளபடி முதல் முறையாக
அவர்களது எதிர் தரப்பினோரின் அல்ல மாறாக பூகோளமயமாக்கும்
நிறுவனத்தாரின் தேசப்பற்று கேள்விக்கு உள்ளாக்கப்பட்டடுள்ளது"
எனத் தொடர்ந்தார். "கிளின்டன் நிர்வாகத்தின் முதலீட்டு-அடித்தள
வியாபார முன்னுரிமைகள் அமெரிக்க உயர்ந்த ஊதிய வேலைகளுக்கான
நலன்களுக்கும், சுற்றாடல் பாதுகாப்பிற்கும் மற்றும் மனித
உரிமைகளுக்கும் அனுகூலம் வழங்குமா? அமெரிக்க ஐனநாயகத்தின்
பெறுமதிகள் மற்றும் மத்தியதர வர்க்கத்தினரது நலன்களும்
நாடுகடந்த கூட்டுத்தாபனங்களிற்கு இரண்டாம் பட்சமானவையா?
ஒரு அடித்தளமான இயக்கம் ( As a grass-roots movement )
ஒடுக்கும் அமைப்பாக எதை காண்கின்றதோ அதை தூக்கி
எறியவேண்டும் என முயல்கின்றது. சியாற்றில் 99, நாமறிந்த தீவிரமிக்க
60 களின் இறுதியை விட பொஸ்டன் தேனீர் விருந்தை அதிகம் ஒத்ததாக
இருந்தது.
இதை ஒத்த வகையிலான றல்ப் நடர் (Ralph
Nader) மற்றைய
சுற்று-சூழல் பாதுகாப்பாாளர்களும், மற்றும் நுகர்வோர்
நடவடிக்கைக்காரர்களும் இவ்வர்த்தக உடன்படிக்கைகள் ஐக்கிய
அமரிக்காவின் தேசிய இறைமைக்கு ஒரு பங்கமாககும் என WTO
மீதான
தமது குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இது பற்றிக் புக்கானன் (Patrick Buchanan)
போன்ற வலது சாரி சோவினிஸ்ட்டுகளது நிலைப்பாட்டுடன் ஒத்ததாகும்.
பற்றிக் புக்கானன் சீர்திருத்த வாத கட்சியின் சார்பில் ஜனாதிபதி
தேர்தலுக்கு போட்டியிட இருப்பதுடன் சியாற்றில் ஆர்ப்பாட்டத்திலும்
பங்குபற்றியவராவார்.
உலக முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் இயக்கத்தின்
அபிவிருத்திக்கு எல்லாவற்றிற்கும் மேலாய் முதலாளித்துவம் தான்
உண்மையான எதிரி என்பதைத் தவிர பூகோள தன்மை அடைந்துவரும்
நவீன சமுதாயம் அல்ல என்பதை நனவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
முதலாளித்துவ பூகோள மயமாக்கம் -என்பது என்னவெனில்,
மனித சமூகத்தை சில நூறு பாரிய நாடுகடந்த கூட்டுத்தாபனங்களின்
இலாப நலன்களுக்கு கீழ்ப்படுத்துவதானது, முதலாளித்துவ
பூகோள மயமாக்கலுக்கு எதிராக பாரிய அளவில் தனிமைப்பட்ட
காலவதியான அமைப்புக்கு திரும்புவது மூலமோ ஐக்கியப்படாத
தேசியப் பொருளாதாரங்களுக்கு திருப்புவதன் மூலமோ
போராட முடியாது.
கம்பியூட்டர்களும் மற்றும் லேசரும் உயிரியல்
தொழில் நுட்பத்திலும் பரம்பரையலகு[மரபணு] பொறியியல் [genetic
engineering]
பயன்படுத்தப் பட்டதுமான, நவீன தொழில் நுட்ப்பத்தின் புரட்சிகர
அபிவிருத்தி ஜனநாயக வழிமுறையில் மக்களின் கட்டுப்பாட்டின் கீழ்
வருமேயானால், எண்ணிலடங்காத சாதகமான சாத்தியப்பாடுகளைத்
திறந்துவிடும். எவ்வாறெனினும் இப்புதிய தொழில் நுட்ப்பங்கள் இப்பொழுது
முதலாளித்துவ நிறுவனங்களினதும் தேசிய அரசுகளினதும் பிடியில் முக்கியமாக
அதி-செல்வந்தரின் இலாபத்தை பெருக்குதவதற்கும் இராணுவத்திற்கு
மேலும் அழிவுகரமான ஆயுதங்களை வழங்குவதற்கும் உபயோகப்படுகிறது.
மனிதகுலம் எதிர் நோக்கும் வரலாற்றுக்கடமைகள்
விஞ்ஞாத்தையும் தொழில் நுட்பத்தையும் நிராகரிப்பதோ அல்லது
ஒரு சிறிய அளவான காலம் கடந்த உள்ளூர் பொருளாதாரத்திற்கு
திரும்பிச்சென்று அதனை மீண்டும் உயிர்ப்பிப்பதோ அல்ல.
மாறாக மனித உழைப்பால் உருவாக்கப்பட்ட பாரிய உற்பத்தி
சக்திகளை நாடுகடந்த நிறுவனங்களினதும் தேசிய அரசினதும்
கைகளிலிருந்து விடுவித்து அவற்றை முழு மனிதகுலத்திற்கும்
பொதுவானதாய் ஆக்கி அவற்றின் அபிவிருத்தியை மனிதகுலத்தின்
தேவைகேற்ப நியாயமானதும் திட்டமிட்டதுமான முறையில்
பயன்படுத்துவமாகும்.
சோசலிச முன்நோக்கு ஒரு சர்வதேச அடித்தளத்தில்
மட்டுமே யதார்த்தமாக முடியும். பொருளாதார அரசியல்
போட்டிகள் ஒரு குறிப்பிட்ட நிலையில் தவிக்க முடியாதபடி
இராணுவ முரண்பாட்டை நோக்கி அபிவிருத்தியடைந்து கொண்டிருக்கும்
தற்போதுள்ள போட்டி தேசிய-அரச அமைப்பு முறைகளிற்குள்
ஒடுக்ககுமுறையையும் சுரண்டலையும் ஒழித்துக்கட்டிவிட
முடியாது. முதலாளித்துவ தனிச் சொத்துடமையும்
தேசிய-அரசமைப்பு முறையும் கடந்தகால எச்சசொச்சங்களாகும்.
இவை உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சிப்போக்கினால்
அடிபட்டு சென்றுவிட்டன. இயற்கை வளங்களை நியாமான முறையில்
பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும், பொருளாதார
அபிவிருத்தியின் தேவைகளை கவனத்தில் கொண்டு ஜனநாயக முறையில்
மக்களால் கட்டுப்படுத்தப்படும் ஓர் உலகளாவிய திட்டமிட்ட
பொருளாதார அடித்தளத்திலான அமைப்பின் உருவாக்கத்தையே
வேண்டிநிக்கின்றது.
1917 இல் உலகின் முதலாவது சோசலிசப் புரட்சியால்
உருவாக்கப்பட்ட அரசான சோவியத் யூனியனின் தகர்வுடன்
1990களின் தசாப்தம் தொடங்கியது. உலகமுதலாளித்துவத்தின் பரிந்துரையாளர்கள்
சோவியத் யூனியனின் வீழ்ச்சியை சோசலிசத்தின் தோல்வி என ஆர்ப்பரித்தபோதும்
உண்மையில் அது தொழிலாள வர்க்கத்தை ஒடுக்கி சோவியத்
யூனியனில் அதிகாரத்தை பலப்படுத்திக் கொண்ட எதிர்ப்புரட்சிகர,
மார்க்சிச எதிர்ப்பு அதிகாரத்துவமான ஸ்ராலினிசத்தின் வங்குரோத்தையே
பிரதிநிதித்துவப்படுத்தியது. ஸ்ராலினிசத்தின் சாராம்சம் என்னவெனில்
"தனியொருநாட்டில் சோசலிசத்தை" கட்டுவதென்ற
தேசியவாத வேலைத்திட்டத்தின் பேரால் சோசலிச சர்வதேசியவாதத்தை
நிராகரிப்பதாகும்.
Wall street இன்
சகலவித வெற்றிப்பெருமிதங்களுக்கும் மத்தியிலும் 1990 களின் முடிவு
முதலாளித்துவ அமைப்பிக்கு எதிரான சர்வதேச இயக்கம் ஒன்றின்
எழுசியின் ஆரம்ப அடையாளத்துடன் முடிவடைவது முக்கியத்துவம்
வாய்ந்தது. இவ் இயக்கம் 20 ஆம் நுற்றாண்டின் பாடங்களான
ஸ்ராலினிசத்திற்கும் சமுகஜனநாயக வாதத்திற்கும் முதலாளித்துவ
தேசியவாதத்திற்கும் எதிரான சோசலிச சர்வதேசியவாதத்தின்
போராட்டங்களை உள்ளீர்த்துக் கொள்வதன் மூலமே முன்னோக்கி
செல்ல முடியும்.
|