World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Indian Airlines hijacking highlights political tensions on the Indian subcontinent


இந்திய ஏர்லைன்ஸ் கடத்தல் இந்திய துணை கண்டத்தில் அரசியல் பதட்டங்களை வெளிச்சமாக்குகிறது.

By Peter Symonds
30 December 1999

 

இந்திய ஏர்லைன்ஸ் விமானம் 814 கடத்தப்பட்டு ஆறாவது நாளை அடைந்த போதிலும் அது உடனடியாக தீர்க்கப்படுவதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. கத்திகள், வெடிகுண்டுகள் மற்றும் கைத்துப்பாக்கிகளை வைத்திருக்கும் ஆறு கடத்தல் காரர்கள் 150க்கும் மேற்பட்ட பயணிகளையும் விமான ஓட்டிகளையும் ஏ-300 ஏர் பஸ்ஸில் பணயகைதிகளாக பிடித்துள்ளனர். அந்த விமானம் தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கண்டஹர் விமானதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பயணிகளில் பெரும்பாலானவர்கள் இந்திய பிரஜைகள். அவர்கள் நேபாளத்திலுள்ள காத்மண்டுவில் இருந்து புதுடில்லிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அந்த விமானம் வெள்ளி மதியம் கைப்பற்றப்பட்டது, அது கண்டஹரில் தரையிறங்க அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக இந்தியாவிலுள்ள அம்ரிட்ஸார், பாகிஸ்தானிலுள்ள லாகூர், ஐக்கிய அரபு குடியரசில் உள்ள துபாயில் சிறிது நேரம் தரையிறக்கப்பட்டது. துபாயில் 27 பெண்களும், குழந்தைகளும், ஆண்களும் விமானத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர். ரிப்பன் கட்யால் என்பவர் அவரது கண்மூடியை எடுத்ததற்காக குத்திக் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது, அவரது உடல் விமானத்திலிருந்து அகற்றப்பட்டது.

காஷ்மீரில் பிரிவினை வாதத்தின் ஆதரவாளர்களான கடத்தல்காரர்கள் இந்திய அரசாங்கம் மேலானா மசூத் அஸாரையும் பல காஷ்மீரிகளையும் விடுவிக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாக ஆப்கானிஸ்தானிலுள்ள தாலிபன் ஆளும் நிர்வாகிகளிடம் தொடக்கத்தில் தெரிவித்தனர்; அஸார் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு இஸ்லாமிய போதகர், அவர் காஷ்மீரி பிரிவினைவாத இளக்கத்துக்கு ஆதரவளிப்பதற்காக 1992-ல் இந்தியாவுக்கு பயணம் செய்தார். அவர் 1994-ல் கைது செய்யப்பட்டு இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் உள்ள உயர்ந்த பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டார்.

முதலில் ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகள் சபை ஒருங்கிணைப்பாளரான எரிக்-டி-மல் பிறகு இந்திய அதிகாரிகளைக்கொண்ட ஒரு குழு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு தோல்வி அடைந்தது. பணய கைதிகளை கொல்லப்போவதாக கடத்தல்காரர்கள் மிரட்டிய பிறகுதான், திங்கட்கிழமை அன்று இந்திய பேச்சுவார்த்தையாளர்கள் வந்து சேர்ந்தனர். விமானத்தில் இருந்தவர்களுக்கு குறிப்பிட்ட அளவு உணவு, நீர் மற்றும் மருத்துவப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டது. சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் எஞ்சியிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளை விமானத்திலிருந்து விடுவிக்கவேண்டும் என்ற வேண்டுகோளை கடத்தல்காரர்கள் நிராகரித்தனர்.

செவ்வாய்கிழமை கோரிக்கைகள் கணிசமான அளவு அதிகரித்தது. அஸார் மற்றும் இதர 35 காஷ்மீரி பிரிவினைவாதிகளை விடுவிப்பதற்கு பணயமாக 900 கோடி ரூபா வழங்குவது மற்றும் ஜீனில் இந்திய சிறையிலிருந்து தப்பிக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் கொல்லப்பட்ட சஜாட் அப்கானியின் சவப்பெட்டியை திரும்ப ஒப்படைப்பது என்ற கோரிக்கைகளை கடத்தல்காரர்கள் வலியுறுத்துவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜஸ்வந் சிங் அறிவித்தார்.

செவ்வாய் அன்று கூடிய இந்திய அமைச்சரவை இந்தக் கோரிக்கைகளில் எதற்குமே சம்மதிப்பதாக இல்லை. `இந்து`வில் வெளியான ஒரு அறிக்கைப்படி அமைச்சர்களின் உணர்வு ``விதிவிலக்கின்றி, கோரிக்கைகள் தீமை விளைக்கத்தக்கதாக இருக்கின்றது என்பதும் அவற்றை அரிதாகத்தான் நிறைவேற்றமுடியும் என்பதும் ஆகும்.`` 1990-களில் இந்திய இராணுவம் பல்வேறு பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீரி பிரிவினைவாத குழுக்களுக்கு எதிராக அடிக்கடி துன்பம் விளைவிக்கும் குரூரமான யுத்தத்தை நடத்தியது. இந்த மோதல்களில் 10,000-இலிருந்து 15,000 வரையிலானவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று நடுத்தரமான மதிப்பீடுகள் தெரிவிக்கிறது.

புதன் அன்று, பணயப்பணம் மற்றும் ஆப்கானியின் சவப்பெட்டியை திரும்ப ஒப்படைப்பது போன்ற கடத்தல்காரர்களின் கோரிக்கைகள் `இஸ்லாமியம் அல்லாதது` என்று தாலிபன் கூறியதன் பேரில் அதனை அவர்கள் கைவிட்டனர். ஆனால் இந்திய பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரமோத் மகாஜன் புதுதில்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு பேசுகையில் அந்த சலுகைகள் ``நிலைமையில் சட்டரீதியான மாற்றங்களை ஏற்படுத்தவில்லை`` என்று தெரிவித்தார். ஆப்கான் வெளிநாட்டு அமைச்சர் வக்கில் அகமத் முட்டாவ்கல், விமான கைப்பற்றல் சீக்கிரமாக முடிவடையவில்லை என்றால் அவரது அரசாங்கம் கடத்தப்பட்ட விமானம் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கும் என்று எச்சரிக்கை செய்தார்.

கடத்தல், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தொடரும் பதட்டங்களை சீக்கிரமாக மேலுக்கு கொண்டுவந்தது.

ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய ஜஸ்வந் சிங் வலியுறுத்தி கூறினார், அதாவது கடத்தல்காரர்கள் கராச்சியிலிருந்து வந்த ஒரு பாகிஸ்தான் இன்டெர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேபாளத்துக்கு வந்தார் என்றும் அஸாரை விடுவிக்கவேண்டுமென்று அவர்கள் எழுப்பிய கோரிக்கையையும் அவர் சுட்டிக் காட்டினார். அஸார் முன்பு ஹராகட்-அல்-அன்சார் என்றழைக்கப்பட்ட ஹராகட்-அல்-முஜாகிதின் என்ற காஷ்மீரி பிரிவினைவாத குழுவுடன் தொடர்புடையவர். அந்த அமைப்பு அஸாரை விடுவிப்பதற்காக 1995-ல் ஆறு உல்லாச பயணிகளை கடத்தியதற்கு பொறுப்பானது என்று குற்றம் சாட்டப்பட்டது.

ஆறு கடத்தல்காரர்களில் நால்வர் பாகிஸ்தான் பிரஜைகள் என்றும் ஹராகட்-அல்-முஜாகிதின் பாகிஸ்தானின் எல்லைகளுக்குள் இருந்து இயங்க பாகிஸ்தான் அரசாங்கம் அனுமதிப்பதாக இந்திய அதிகாரிகளும் பத்திரிகைகளும் கூறுகின்றன. `டைம்ஸ் அப் இந்தியா`வில் வெளியான ஆசிரியர் தலைப்பு இந்த ஆதாரமானது ``பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் அரசு என்ற அந்த நாட்டின் (பாகிஸ்தானின்) பாத்திரத்தை நன்றாக வெளிப்படுத்தி உள்ளது`` என்று கூறினார் மற்றும் பணயகைதிகளை விடுவிக்க அது உதவவில்லை என்றால் பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச பொருளாதார தடைகள் போடப்படவேண்டும் என்பதை அது அர்த்தப்படுத்தியது. இதர ப்த்திரிகை அறிக்கைகள் கடத்தலை திட்டமிடலில் பாகிஸ்தானின் இன்ரர் செர்விஸ் இன்டெலிஜென்ஸ் (ஐ.எஸ்.ஐ) சம்பந்தப்பட்டிருப்பதாக கூறின.

பாகிஸ்தானின்மேல் குற்றச்சாட்டை திருப்புவதன் மூலமாக இந்திய அரசாங்கம் அதன் சொந்த நடவடிக்கைகள் தொடர்பாக உள்நாட்டில் எழும் விமர்சனத்தை திசைதிருப்ப முயற்சிக்கிறது. பணயக் கைதிகளின் உறவினர்களும், ஆதரவாளர்களும் புதுதில்லியில் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்யின் இல்லத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர் மற்றும் இந்திய விமானத்துறை அமைச்சகத்தின் கேட்டுகளை உடைத்து உள்ளே சென்றனர். இந்திய அரசாங்கத்தின் மெத்தனப் போக்கையும் அம்ரிட்சாரில் விமானம் மரையிறங்கிய பிறகு இந்திய ஆகாயதளத்திலிருந்து விமானம் செல்வதை தடுக்க தவறியதையும் பத்திரிகை குறிப்பு சொல்வோர் விமர்சித்தனர்.

உறவினர் சார்பில் பேசிய டாக்டர் சஞ்சீவ் சிபர் இந்திய நிர்வாகிகளின் இரட்டைத்தன்மையை சுட்டிக் காட்டினார். 1989-ல் இந்திய பிரதமர் வி.பி.சிங் அவரது உள்நாட்டு அமைச்சராக இருந்த மப்தி மொகமட் சயித்-இன் மகளை விடுவிக்க சிறையிலிருந்து காஷ்மீரி எதிர்ப்பாளர்களை விடுவித்தார். அமைச்சரின் மகளுக்காக தீவிரவாதிகளை விடுவிக்க முடியுமாயின் 150 உயிர்கள் ஊசலாடும்போது ஏன் பெரும் தயக்கம் உள்ளது என்று டாக்டர் சிபர் கேட்டார்.

பாகிஸ்தான் அரசு கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளது என்ற இந்திய குற்றச்சாட்டுகளை வைத்தது. பாகிஸ்தான வெளிநாட்டு அமைச்சர் அப்துல் சத்தார், புதிய இராணுவ ஜீன்தாவை தனிமைப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக கடத்தல் நாடகத்தை இந்திய உளவுத்துறை நடத்தியுள்ளது என்று கூறினார். ``ஒருவேளை இந்திய அரசாங்கமானது சர்வதேச ரீதியாக பாகிஸ்தானை இழிவுப்படுத்துவதற்கான அதன் நோக்கத்தில் மற்றொரு சம்பவத்தை உருவாக்கியுள்ளது. இந்த சம்பவம் வெளிநாட்டு உளவு அமைப்பினால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதற்கான சாத்தியத்தை புறக்கணிக்க முடியாது`` என்று சத்தார் கூறினால். கடத்தப்பட்ட விமானத்தில் இந்திய `ரா` வின் ஏஜண்டு ஒருவர் இருந்தார் என்ற கதைகளை பாகிஸ்தான் செய்திப்பத்திரிகைகள் பிரசுரித்தன.

இந்திய காஷ்மீரில் கார்கில்-டாஸ்-பட்டாலிக் பகுதியில் உள்ள மூலோபாய சிகரங்களை கடந்த ஜீனில் பாகிஸ்தான் ஆதரவு டைகள் கைப்பறியதை தொடர்ந்து பாகிஸ்தானும் இந்தியாவும் நேருக்கு நேர் இராணுவ மோதலில் கட்டத்திற்கு வந்தன. பெருமளவில் ஆயுதங்களை கொண்ட காஷ்மீரி பிரிவினைவாதிகளை அகற்றுவதற்காக பல வாரக்கணக்கில் இந்திய இராணுவ பெரிய அளவிலான எதிர்தாக்குதலை நடத்தி கடுமையான போராட்டம் நடந்தது. பாகிஸ்தானின் நீண்ட நாள் கூட்டாளியான அமெரிக்காவின் அழுத்தத்தின் கீழ் ஜீலை தொடக்கத்தில் பாகிஸ்தான் அதன் படைகளையும் கூட்டாளிகளான காஷ்மீரி போராளிகளையும் திரும்ப பெற்றது. பின்வாங்கல் பற்றிய அதிருப்தி, பிரதமர் நவாஷ் ஷெரிபை ஆயுதப்படையினர் அகற்றி ஜெனரல் பெர்வஸ் முஸாரப் தலைமையிலான புதிய இராணுவ ஆட்சியை அமைப்பதை சாத்தியமாக்கிய பேரணிகளில் ஒன்றாகும்.

கார்கில் மோதலின் பின்னால் அமெரிக்கா, இந்து பேரினவாத பாரதீய ஜனதா கட்சியின் (பி.ஜெ.பி) தலைமையிலான கூட்டணி கட்சிகளை கொண்ட இந்திய அரசாங்கத்துடன் நெருக்கமான உறவுகளை உருவாக்கியது. கிளிண்டன் நிர்வாகம் வேகமாக கடத்தலை கண்டனம் செய்தது. பத்திரிகை அறிக்கைகளின்படி அது காஷ்மீரி பிரிவினைவாத குழுக்கள் பற்றிய உளவுத் தகவலை இந்தியாவுக்கு வழங்கியது. இந்திய வெளிநாட்டமைச்சர் சிங் ஒரு செய்தி மாநாட்டில் கூறினார்: ``அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு கிடைத்துள்ள ஆதரவு பற்றி நான் முழுமையாக திருப்தி கொண்டுள்ளேன்``. ஆப்கானிஸ்தான ஏற்கனவே அமெரிக்காவின் பிரமாண்டமான அழுத்தங்களுக்கு உள்பட்டுள்ளது, அது ஒஸாமா பின் லெடனை வெளியேற்ற அந்த நாடு தவறியதற்கு எதிராக ஐக்கியநாடுகள் சபை பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. பின் லேடன் 1998-ல் கென்யா மற்றும் தான்சானியாவிலுள்ள அமெரிக்க துாதரகங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியதற்கு பொறுப்பனவர் என்று குற்றம் சாட்டப்பட்டார். அமெரிக்காவினுள் அரசாங்க நிர்வாகிகளம், பத்திரிகைகளும் டிசம்பர் 14-ல் அல்ஜீரியாவை சேர்ந்த அகமத் ரேசனை கைது செய்த பிறகு ஏற்பட்ட புதிய பயங்கரவாத அச்சுறுத்தலுடன் பின் லேடனை இணைக்க முயற்சிக்கின்றன. அகமத் ரேசன் கனடாவுக்கு கடந்து செல்லும்போது அவரது காரில் ``குண்டுகள் தயார் செய்யும் பொருட்களை`` வைத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. டிசம்பர் நடுப்பகுதியில் கிளின்டன் நிர்வாகம் ஒரு அப்பட்டமான எச்சரிக்கை விடுவித்தது, அதாவது உலகின் எந்தப் பகுதியிலும் அமெரிக்க பிரஜைகள் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆளாவார்களாயின் அதற்கு நேரடியாக ஆப்ானிஸ்தான் பொறுப்பாளி ஆக்கப்படும்.

ஆப்கானிஸ்தானிலுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத தலிபன் ஆட்சி கடத்தலிலிருந்து அதனை விலக்கிக் காட்டுவதிலும், அதனை செய்தவர்களுடன் எந்த தொடர்போ அல்லது அவர்கள் மீது அனுதாபமோ இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதில் ஜாக்கிரதையாக உள்ளது. ஆப்கான் வெளிநாட்டு அமைச்சர் வக்கில் அகமத் முட்டவகல் அவரது அரசாங்கம் கடத்தல்காரர்களுக்கு இடம் அளிக்காது என்றும் அது ``ஆப்கானிஸ்தான மண்ணில் அப்பாவி மக்களின் இரத்தம் சிந்துவதை விரும்பவில்லை`` என்றும் வலியுறுத்தினார். பணயக்கைதிகளை அபாயத்திலிருக்கும் அறிகுறி ஏதாவது தென்பட்டால் விமானத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவோம் என்று தலிபன் அதிகாரிகள் எச்சரிக்கை செய்தார்கள்.

இந்திய பேச்சுவார்த்தை குழுவானது கண்டஹகரில் முட்டவகல் மற்றும் அதேபோல் உயர்மட்ட தலிபன் இராணுவ கமாண்டருடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தியது. விமானக் கைப்பற்றலை முடிவுக்கு கொண்டுவர கமாண்டோ தாக்குதல் நடத்தப்படுவது பற்றி விவாதம் ஏதாவது செய்யப்பட்டதா என்பது பற்றி குறிப்பிட இந்திய அதிதாரிகள் மறுத்தனர்.