A man-made crisis
Severe drought hits tens of millions across India,
Pakistan and Afghanistan
மனிதன் உண்டுபண்ணிய நெருக்கடி
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் கடும்
வறட்சி கோடிக்கணக்கானோரை தாக்குகின்றது.
By Deepal Jayasekera
11 May 2000
Use
this version to print
இந்தியாவின்
பெரும் பகுதிகளிலும் அதேபோலபாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில்
குறிப்பிடத்தக்க பிரதேசங்களிலும் வாழுகின்ற கோடிக்கணக்கான
மக்களை, கடும் வறட்சி தாக்கிவருகிறது.அது கால்நடை வளத்தை
அழித்துள்ளதோடுலட்சக்கணக்கான மக்களை தப்பிப்பிழைப்பதற்காக
நகரங்களுக்கு அல்லது நீர்வளம்நிறைந்த பகுதிகளுக்கு இடம்
பெயர வைத்திருக்கிறது. இதன்பின் உள்ள பெரும்பாலானோர்போதுமான
அளவு உணவு மற்றும் சுத்தமானகுடிநீர் ஆகியவற்றின் அளிப்பைப்
பெற முடியாதவர்களாக, பட்டினி மற்றும் நோயின் ஆபத்துக்களைஎதிர்கொண்டு,
ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்த
நூற்றாண்டில் மிக மோசமானஇந்திய வறட்சி என்று விவரிக்கப்படும்
இதனால்,மேற்கில் குஜராத், இராஜஸ்தான், மகாராஷ்ட்ரா மற்றும்
தெற்கில் ஆந்திரப்பிரதேசம் ஆகியமாநிலங்களில் 5 கோடிப் பேர்
பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 60 நகரங்கள்மற்றும்
60,000 கிராமங்களுக்குமேல்பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையான
மக்கள்குடிநீர் பெற தவியாய் தவிக்கிறார்கள்,அவர்களுடைய பயிர்கள்
சருகாகி உதிர்ந்துவிட்டனமற்றும் லட்சக்கணக்கான கால்நடைகள்மற்றும்
வெள்ளாடுகள் இறந்துவிட்டன.ஒருவிதத்தில் அல்லது வேறுவிதத்தில்
11 மாநிலங்கள்பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கஅறிக்கை காட்டுகிறது.
தொடர்ந்துஇரண்டாவது
ஆண்டாக வறட்சியால்இராஜஸ்தான் மிகவும் மோசமாகப்பாதிக்கப்பட்டுள்ளது.
26,000 கிராமங்கள்மற்றும் 35 லட்சம் மக்கள் - அதாவதுமாநிலத்தின்
மக்கட்தொகையில் முக்கால்பங்கினர் - பாதிக்கப்பட்டுள்ளதாக
மதிப்பிடப்பட்டுள்ளது. சில கிராமங்களில் தண்ணீர் பெறும்ஒரேவழி
15 நாட்களுக்கு ஒருமுறை நீர்த்தொட்டிவாகனத்திற்கு ஏற்பாடு
செய்யப்பட்டு,ஒவ்வொரு கிராமவாசிக்கும் 10 முதல்15 லிட்டர்களுக்கு
இடையிலான அளவில் வழங்கப்படுகிறது.
குஜராத்தில்
(25 மாவட்டங்களுள்)17 மாவட்டங்களில் 9421 கிராமங்கள் - 25 லட்சம்மக்கள்-
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகஅரசாங்க அறிக்கை காட்டுகிறது.
தானியஉற்பத்தி 30 சதவீத அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் எண்ணெய்
வித்துக்கள் உற்பத்தி 50 சதவீதஅளவே உள்ளதாகவும் அறிக்கை
படம்பிடித்துக்காட்டுகிறது. 70 லட்சத்திற்கும் மேலானகால்நடைகள்
பாதிக்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தஆண்டு
புயலாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட ஒரிசா மாநிலத்தில்,
மிகவும் பாதிக்கப்பட்டபொலாங்கீர் மாவட்டத்தில் 8000 கிணறுகள்அளவில்
முற்றிலுமாக வறண்டுவிட்டன. உள்ளூர்ஆட்சித்துறை பள்ளிகளையும்
கல்லூரிகளையும்மூடத் தொடங்கியுள்ளதுடன் அரசாங்கஅலுவலக
நேரங்களையும் குறைத்துள்ளன.ஏப்ரல் 29 அன்று கல்கத்தாவிலிருந்து
குடிநீர்கொண்டுவந்த இரயில் வண்டி, நீருக்காகஅலையும் ஆற்றொணா
நிலை கொண்டமக்களால் சூறையாடப்பட்டது. டிட்லகார்மாவட்டத்தின்
சிறையில் உள்ளவர்கள் இரண்டுநாட்களாக குடிநீர் வழங்கப்படாதுவிட்டதற்காக
கலவரம் செய்தனர்.``குடிநீர் கொடுங்கள் அல்லது எங்களைக்கொன்று
விடுங்கள்`` என்று அவர்கள் கூச்சலிட்டனர்.
பாகிஸ்தானின்
தென்பகுதி மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமை பயங்கரமாக
இருக்கிறது.பாகிஸ்தான் மாகாணமான பலூச்சிஸ்தானில்குரல்தரவல்ல
அதிகாரிகள் 26 மாவட்டங்களில்பெரும்பான்மையானவை வறட்சியால்கடும்
பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக்கூறுகின்றனர். மாகாண
ஆளுநர் அமிருல்முல்க் மெங்கல், எட்ட முடியாத பகுதிகளில்20,000
குடும்பங்களும் பத்துலட்சத்துக்கும்அதிகமான கால்நடைகளும்
சிக்கிக்கொண்டுள்ளதையிட்டு கவலை அதிகரித்து வருவதாகக்குறிப்பிட்டுள்ளார்.
கடந்த
திங்கள் அன்று,பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியாளர் ஜெனரல்பெர்வெல்
முஷாரஃப் வறட்சியால்பாதிக்கப்பட்டோருக்கு உதவ
நன்கொடைக்காக தொலைக்காட்சி வேண்டுகோளைவிடுத்தார்.
கடும் தண்ணீர்ப் பற்றாக்குறையின்விளைவாக, இந்திய எல்லை
அருகே உள்ளதர்பார்க்கர் பிராந்தியத்தில் பெரும்பாலும்,கடந்தமூன்று
மாதங்களில் 127 பேர் இறந்துள்ளதாக சிந்துமாகாண ஆளுநர்
அறிவித்தார்.சிந்து மற்றும் பலூச்சிஸ்தான் பகுதிகளைவிட்டுபத்தாயிரக்கணக்கில்
மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.
ஆப்கானிஸ்தானத்தில்உலக
உணவுத்திட்டத்தின் நாட்டு இயக்குனர்மைக்சாக்கெட் கடந்தவாரம்
எச்சரித்தாவது: ``இன்னும் நடக்கும் எலும்புக்கூடுகள்இல்லை,
ஆனால் போதுமான மழைவீழ்ச்சிஅளவு பற்றாக்குறையின் காரணமாகஏறத்தாழ
மழையை நம்பிய கோதுமைப்பயிர்கள் அனைத்தையும் மற்றும் 80
சதவீத கால்நடைகளையும் இழந்தபின்னர் ஆயிரக்கணக்கானஆப்கானியர்கள்
கொடும் கோடையைஎதிர்கொண்டுள்ளனர்.`` உலக உணவுத்திட்டம்எதிர்வரும்
12 மாதங்களில் மிகவும் ஏழையானமற்றும் மிகவும் தேவையான
நான்குலட்சம்பேருக்கு உணவு வழங்கும் திட்டங்களைவைத்திருப்பதாக
அவர் அறிவித்தார். மிகவும்பாதிக்கப்பட்ட பகுதிகளான
ஜாபுல்,காந்தஹ
ார், நிம்ரோஸ் மற்றும் ஹெல்மாண்ட் ஆகிய பகுதிகளில் நாற்பது
லட்சத்திற்கும்அதிகமானோர் வாழ்கின்றனர்.
வறட்சியின்உடனடியான
காரணம் 1999 அக்டோபர்முதல் டிசம்பர் வரையிலான பருவ
மழைக்குப்பிந்திய காலகட்டம் மற்றும் இந்த ஆண்டில்ஜனவரி
மற்றும் பிப்ரவரியில் குளிர்கால மழைஆகியன உட்பட, பருவமழை
திரும்பத்திரும்பபொய்த்ததனால் ஆகும். ஆனால் பேரழிவுக்கான
காரணங்கள் மனிதனால் உண்டுபண்ணப்பட்டவை. இம்மூன்று
நாடுகளில் உள்ள அரசாங்கங்களும்வறட்சி பீடித்துள்ள பகுதிகளில்
பாதுகாப்பானகுடிநீர் வழங்கலுக்கு நீண்டகால நடவடிக்கைகளை
எடுக்கத்தவறிவிட்டன. மேலும் வளர்ந்துவரும்வறட்சி சூழ்நிலைகள்,
மேலோட்டமாகத்தெரியத் தொடங்கியபோது கடந்தஆறு
மாதங்களாக சிறிய நடவடிக்கையேஎடுக்கப்பட்டது.
இந்தியாவில்
பி.ஜே.பி.யால்தலைமைதாங்கப்படும் தேசிய ஜனநாயகக்கூட்டணி
அரசாங்கம் ஏப்ரல் இறுதியில்,பாதிக்கப்பட்ட மாநிலங்களில்
நிவாரணத்திற்காகமற்றும் உணவு, நீர், கால்நடைகளுக்குத்தீவனம்
வழங்க சிறு நிதியை மட்டுமே ஒதுக்கத்தொடங்கியது. ஏப்ரல் 26ல்
அரசாங்கம் குஜராத்தில்வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு
குடிநீரைஎடுத்துச்செல்லும்படி கடற்படைக்கப்பல்களைக்
கேட்டுக் கொண்டது.
தேசிய
ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமானதுசெய்தி நிறுவனங்களில் இருந்து
மட்டுமல்லாமல்எதிர்க்கட்சிகளிடம் இருந்தும் அதனுடையசொந்த
அரசியல் கூட்டணிகளிடம் இருந்தும்கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
ஏப்ரல்25 அன்று வறட்சிபற்றி விவாதிக்க கூட்டப்பட்டஅனைத்துக்கட்சி
கூட்டத்தில், தெலுங்குதேசக்கட்சியின் தலைவர் எர்ரா நாயுடு,
வறட்சியைத்தடுக்க கேட்கப்பட்டவற்றின் அளவில் பத்தில் ஒரு
பகுதியே பெறப்பட்டிருக்கிறதுஎன குற்றம் சாட்டினார். வறட்சி
பாதிக்கப்பட்ட ஆந்திரப்பிரதேசத்தில் ஆளும்கட்சியும் (என்.டி.ஏ.)தேசிய
ஜனநாயகக் கூட்டணியில் முக்கியக்கூட்டாளியும் தெலுங்கு தேசம்
என்பதுகுறிப்பிடத்தக்கது.
வறட்சி
பாதித்துள்ளமாநிலங்களான இராஜஸ்தான் மற்றும்குஜராத்திலிருந்து
வரும் எதிர்க்கட்சி காங்கிரஸ்பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதிக்கப்பட்டோருக்கு
``பற்றாக்குறை நிவாரணம்``அளிப்பதாக, அரசாங்கத்தைக் குற்றம்சாட்டி
பாராளுமன்றக் கட்டிடத்துக்குவெளியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆனால்காங்கிரஸ்கட்சி தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி
அரசாங்கம் போல அதனுடையஆட்சிக்காலத்தில் வறட்சியின்
ஆபத்துக்களைத்தணிப்பதற்கு சிறிதளவே செய்தது. குஜராத்தில்இரு
அரசாங்கங்களும் எதிர்க்கட்சிகளும்வழக்கமாக மாநிலத்தின்
குடிநீர் பிரச்சினைகளைதீர்க்கப்போவதாக தேர்தல் பிரச்சாரங்களில்
உறுதிமொழிகளைக் கூறின. தேர்தல் முடிவுற்றஉடனே வழக்கம்போல்
தங்களது உறுதிமொழிகளைத் தள்ளிவைத்தன.
மாநில
மற்றும்தேசிய அரசாங்கங்கள் இரண்டுமேவறட்சியானது திடீரென
வந்தது என்றும்அது கவனிக்கப்பட வேண்டியது என்றும்வறட்சியின்
அரசியல் விளைவைக் குறைத்துள்ளன.ஆனால் சிறப்பாக இராஜஸ்தான்
குஜராத்மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்றமாநிலங்களில் நீர்ப்பற்றாக்குறை
என்பதுநன்கு தெரிந்த மற்றும் நீண்டகாலப் பிரச்சனைஆகும்.
ஒரு
அதிகாரி குறிப்பிட்டதாவது:``பற்றாக்குறை மழை வறட்சியாக முதிர்ச்சிஅடைய
சில மாதங்கள் எடுக்கின்றன. அதுதொடர்ந்து இரண்டாவது ஆண்டு
நிகழ்ந்தால்,அது பஞ்சமாக உருவெடுக்கிறது...... ஆகையால்மத்தியிலாவது
மாநிலத்திலாவது எந்த அரசாங்கமும் இந்த ஆண்டு வறட்சி
நழுவிக் கொண்டுவந்ததுபோலவும் ஒவ்வொருவரையும்வியப்பில்
ஆழ்த்தியதுபோலவும் நடிக்கின்றன.``
நுகர்வோர்
விவகாரம் மற்றும் பொதுவிநியோக அமைச்சர் சாந்தகுமார்,வருகின்ற
ஜுன் - செப்டம்பர் பருவமழைவழக்கமான நிலையைவிட கீழானதாகஇருக்கும்
என அச்சமூட்டுகிறார் ``எல்லாம்கட்டுப்பாட்டில் உள்ளன.
பாதிக்கப்பட்டபகுதிகளுக்கு சாத்தியமான அனைத்துஉதவிகளையும்
அனுப்பிவருகிறோம்..... என்னதான்ஆயினும் அங்கு உணவுப் பற்றாக்குறைஇருக்காது``
என்று அவர் கூறினார்.
ஆனால்
டைம்ஸ் ஆப் இந்தியா தலையங்கம்குறிப்பிட்டபடி: ``முன்னெச்சரிக்கை
சாதாரணமாக பலப்படுத்தப்பட்டது, ஆனால் இந்தியஅதிகாரிகள்
அத்தகைய தர்க்கத்தைதலையில் கொண்டிருக்கின்றனர். கடந்தநான்கு
ஆண்டுகளாக கோடை பருவமழைதொடர்பாக துல்லியமாய்க்
கணிப்பிட்டுவரும்கணக்கியல் மாதிரி மற்றும் கணிணி உருமாற்றல்மையத்தின்படி
- இந்த ஆண்டு தென்மேற்குபருவமழை இந்தியாவை வஞ்சிக்கும்.
இதுகாலத்தோடு கவனிக்கப்படாவிடில்,ஏற்கனவே, 5 கோடி இந்தியர்களைப்பஞ்சத்தில்
ஆழ்த்தி இருக்கும் மோசமானநிலையை மேலும் உக்கிரமாக்கும்``
பெங்களூரை
அடிப்படையாகக் கொண்டவானிலை ஆய்வு மையத்திலிருந்து பிரசாந்த்கோஸ்வாமி
என்பவரின்படி, கடந்தஆண்டுபெய்த பருவமழை அளவான 840 மில்லிமீட்டருடன்ஒப்பிடுகையில்,
வருகின்ற மொத்த பருவமழைஅளவு 789 மில்லிமீட்டராக இருக்கும்.
அந்தகுறைந்த அளவு பிராந்திய வேறுபாடுகள்எதனையும் கணக்கிலெடுக்காத
நாடுமுழுமைக்கும் ஆன அளவாகும்.
அறிவியல்மற்றும்
சுற்றுச்சூழல் மையத்தின் இயக்குனரும்உலக நீர் கமிஷனின் முன்னாள்
உறுப்பினருமானஅனில்அகர்வால் அவுட்லுக் என்ற இந்தியஇதழிடம்
கூறியதாவது: ``அது (வறட்சி) சுத்தமாகமனிதனால் உருவாக்கப்பட்டது.
அரசாங்கம்சரியாக இருக்கவேண்டும். இந்தியாவில்ஒவ்வொரு
கிராமமும் தண்ணீர் கிடைக்காமல்இருப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை...``என்றார்.
தற்போதைய
வறட்சிஏன் ஏற்பட்டது என்று கேட்டால், அவர்விடை கூறினார்:
``அரசியல்வாதிகளைக் கேளுங்கள்.கடந்த ஆண்டு செப்டம்பரில்
ராஜஸ்தான்குஜராத் பகுதிகளில் மக்கள் கிராமங்களைவிட்டுஓடும்போது
வறட்சி கண்முன் சாட்சியாகஇருந்தது. ஆனால் செய்தித் தொடர்புசாதனங்கள்
உட்பட அனைவரும் குறைந்தஅக்கறையே காட்டினர். எனக்கு
நினைவிருக்கிறது,உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானிகடந்த
பொதுத்தேர்தலில் பிரச்சாரம்செய்யச் சென்றபோது, அவர்
``முதலிலேதண்ணீர் பின்னர் அத்வானி`` (பஹ்லே பானி பிர்அத்வானி)
என்ற முழக்கத்துடன் வாழ்த்தப்பட்டார்.``
13
ஆண்டுகளுக்கு முன்னர் பெரும்வறட்சி இந்தியாவைப் பேரழிவு செய்ததிலிருந்துபோதுமான
நடிவடிக்கைகள் எதுவும்எடுக்கப்படவில்லை. 12 ஆண்டுகள் ``சாதாரண``பருவ
மழைகள் பெய்த நிலையில், மழைபொய்த்த வட்டாரங்களில் மக்களின்துயரத்தை,
தொடர்ந்து வந்த அரசாங்கங்களும் செய்தி நிறுவனங்களும்
பெரும்பாலும்புறக்கணித்துவிட்டன. மேலும் அரசாங்கங்கள்செய்தவற்றில்
பரந்த பெரும்பான்மையினரானகிராமப்புற ஏழைகளை வயிற்றிலடித்துபலனடைந்தது
செல்வந்த விவசாயிகளும்நிலப்பிரபுக்களுமாவர்.
பி.பி.சி.
செய்தியாளர்டேவிந்தர் ஷர்மா குறிப்பிடுவதாவது: ``நீரைச்சேமிக்கும்
அறுவடைசெய்யும் பாரம்பரியவடிவங்கள் அழிவதுடன், கிராமப்புற
நீர்ப்பாசனம் திறமற்ற அரசாங்க எந்திரத்தால் முழுமையாக
எடுக்கப்பட்டது, இருக்கும் நிலத்தடிநீர்பாரபட்சத்துடன் சுரண்டப்பட்டுவருகிறது``இந்தியா
``26 மில்லியன் டன்கள் உணவு தானியஅளிப்புக்களை நிறைவாய்`` பெற்றிருந்தது.ஆனால்
அத்தியாவசியமானோருக்குஅது கிடைக்கக் கூடும் என்பதற்கு எந்தவித
உத்தரவாதமும் இல்லாதிருந்ததுஎன்றும்கூட சுட்டிக்காட்டியது.
``வறட்சிவியாபாரிகள்
கொள்ளை இலாபத்தைசுருட்டுகின்றனர்`` என்று தலைப்பிடப்பட்டடைம்ஸ்
ஆப் இந்தியா கட்டுரையில்`` மற்றவர்களின்துன்பத்திலிருந்து யார்
இலாபம் சம்பாதிப்பது,யார் வாழ்வது, யார் சாவது என்றுதீர்மானிப்பது
முதலாளித்துவ சந்தையின்நடவடிக்கை என்பது வெளிச்சம் போட்டுக்காட்டப்பட்டுள்ளது.
``வறட்சி
குஜராத்தில்பெரும்பான்மையான மக்களின் துன்பத்தையும்துயரத்தையும்
அர்த்தப்படுத்தியிருக்கலாம்.ஆனால் அது சில விவசாயிகளையும் நீர்த்தொட்டிவாகன
உடமையாளர்களையும் வறட்சிவியாபாரிகளாக உருமாற்றியிருக்கிறது.மேலும்
அங்கு ஹெல்லி ஹெல்த்கேர் போன்றநீர் வழங்குபவர்கள் நீரைவிற்றே
மாதம்1,50,000 ரூபாய்கள் ஈட்டுகின்றனர். ஒரு லீட்டருக்கான
விலையை ரூ.1-லிருந்து ரூ.1.50-ஆக உயர்த்தியிருக்கிறஹெல்லி ஹெல்த்கேர்
நிறுவனத்தார் கோடையில்வியாபாரம் விண் நோக்கி எழுவதையடுத்து,அவர்கள்
வங்கிக்குப் போகும் பொழுதுவழியெல்லாம் வாய்விட்டுச் சிரித்தவண்ணம்செல்லுகின்றனர்.
நாட்டுப்புற
லால்ஜிபாய்(ஒரு வறட்சி வியபாரி) தனது சொந்த ஊரின்அறிவாற்றலைப்
பயன்படுத்தி கத்தியவாரியிலிருந்துஇடம்பெயர்ந்தவர் தற்போது
ஷ்யமல்வரிசைவீடுகள் அருகில் மாளிகையைச் சொந்தமாகக்கொண்டுள்ளார்.
அவர் தனது வியாபாரத்தைப் பாதுகாக்கிறார். அவரிடம் எத்தனைமுறை
அவரது தண்ணீர் வண்டிகள் தண்ணீர்கொண்டுவருகின்றன என்றுகேட்டால்நேராக
பதில் சொல்லாமல் மழுப்புகிறார்.சொல்லும்படி வற்புறுத்தினால்
வெடுக்கென்று``சுடுகாட்டுக்கு விறகு விற்பவன் நிறையப்பேர்செத்தால்தான்
தனக்கு வியாபாரம்நடக்கும் என்பான்- அதே நிலைதான்எங்களுக்கும்``
என்றார்.
பத்து
லட்சக்கணக்கான மக்கள் வாழ்விற்குஅடிப்படைத் தேவையான
தண்ணீருக்காகஇத்தகைய பொருளாதார ஒட்டுண்ணிகளைதங்கியிருக்குமாறு
நிர்ப்பந்திக்கப்பட்டுஇருக்கின்ற நிலையானது, சுதந்திரத்தின்பின்னர்,
இந்தியத்துணைக் கண்டம் முழுவதும்ஆளும்வர்க்கமும் அதன்
அரசியல் வாதிகளும்தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்படும்
மக்களின் மிகவும் அடிப்படைத் தேவைகளைநிறைவேற்ற முழுமையாகத்
திராணியற்றவர்கள்என்பதை நிரூபித்துள்ளனர்.
|