World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS : செய்திகள் & ஆய்வுகள்:ஆசியா:இலங்கை

Victory of international defense campaign strengthens Tamil struggle

The SEP and the fight for the Socialist United States of Sri Lanka and Eelam

சோசலிச சமத்துவ கட்சியும் ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டமும்

Statement of the ICFI on the release of SEP members by the LTTE

1December 1998

Use this version to print

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்களை விடுதலை செய்துள்ளது. இதை இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சி உறுதி செய்துள்ளது.

ஏறக்குறைய 50 நாட்களுக்குக் கைதிகளாக இருந்த பின்னர் திருஞானசம்பந்தன், காசிநாதன், நகுலேஸ்வரன் மற்றும் இராஜேந்திரன் சுதர்சன் ஆகியோர் செப்டம்பர் 13, 1998 அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராஜரத்தினம் ராஜவேல் 17 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பிறகு செப்டம்பர் 16ம் தேதி, 1998 அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். நான்கு சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர்களும் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். அவர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட பொழுது, விடுதலைப் புலிகளால் சித்திரவதை செய்யப்படவோ அல்லது வேறுமுறையில் சரீர ரீதியாக தவறான முறையில் நடத்தப்படவோ இல்லை.

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களின் விடுதலையானது, ஜனநாயக உரிமைகளுக்குக் கிடைத்துள்ள ஒரு முக்கிய வெற்றியாகும். இது ஸ்ரீலங்காவிலும், ஈழத்திலும் தமிழர்கள், அரச பாரபட்சம் மற்றும் தேசிய ஒடுக்குதலுக்கு எதிராகத் தொடுத்துவரும் போராட்டத்திற்குப் பலம் சேர்க்கின்றது.

சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத்தளமும் சர்வதேச பாதுகாப்புப் பிரச்சார இயக்கத்தினைத் தொடுத்திருக்காவிட்டால் இப்படியான ஒரு முடிவு, எப்படியும் சாத்தியமாகி இருக்காது. சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களை விடுதலைசெய்ய பகிரங்க பிரச்சாரம் தொடுக்கப்படுமாயின், அது இந்த உறுப்பினர்களின் மரணத்தில் போய் முடியும் என்று நேரடியாக எச்சரிக்கைகள் விடப்பட்டன. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (நா.அ.அ.கு) இவற்றை நிராகரித்தது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (த.ஈ.வி.பு.) முற்போக்கு மற்றும் சோசலிச பொது அபிப்பிராயத்தின் அழுத்தத்தை உதாசீனம் செய்யாது என்ற நம்பிக்கையை நா.அ.அ.கு. கொண்டிருந்தது. மேலும், கோட்பாட்டு ரீதியாக சோசலிச சர்வதேசியத்திற்காகப் போராடுபவர்கள், தொடர்ந்து துன்புறுத்தப்படுவதைக் கண்டு சர்வதேச ரீதியாகக் கொப்பளித்து வெடிக்கும் உணர்வுகளை தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் வெறுமனே தட்டிக் கழிக்க முடியாது என்று அது நம்பியது.

இறுதியில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியான புத்திசாலித்தனமான முடிவை எடுத்தது. அது தனக்கும், தமிழரின் போராட்டத்திற்கும், அபாயங்களைத் தரக்கூடிய பாதையில் வைத்த காலை பின் எடுத்துக் கொண்டது. சோசலிச கட்சிக்கு எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை தொடர்ந்திருக்குமேயானால், அது வர இருக்கும் வருடங்களில் தமிழ் தேசிய இயக்கத்திற்கும், தீவின் தென்பகுதியில் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான உறவுகளுக்கு நஞ்சூட்டி விடாவிட்டாலும் அதனை கடுமையாகச் சேதப்படுத்தியிருக்கும்.

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டும் அல்லது மிகக் குறைந்தபட்சம் அவர்களைக் கைது செய்ததை ஒப்புக்கொண்டு, தடுப்புக் காவலில் வைக்கப்படுவர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்புகளைக் கொடுக்கவேண்டும் என, த.ஈ.வி.பு. களின் மேல் நிர்ப்பந்தம் கொணர்ந்த, தென் ஆசிய மற்றும் உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை மற்றும் தொழிலாளர் இயக்கங்களுக்கும், அதேபோல அக்கறை கொண்டுள்ள தனி நபர்களுக்கும் சோ.ச.க.வும் நா.அ.அ.கு.வும் தமது நன்றியைத் தெரிவிக்க விரும்புகின்றன. தீவிலும், இந்திய மாநிலமான தமிழ்நாட்டிலும் மற்றும் ஆஸ்திரேலியா, ஐரோப்பா வடஅமெரிக்காவில் குடிபெயர்ந்து வாழும் தமிழ் சமூகங்களில் சோ.ச.க.வின் மேல் த.ஈ.வி.பு. தொடுக்கும் தொடர் ஒடுக்குமுறையை நிறுத்தும்படி அதனை வற்புறுத்திய பல தமிழர்களுக்கு நாம் சிறப்பாக நன்றிக்கடன் உள்ளவர்களாவோம். தமிழ் மற்றும் சிங்கள பரந்துபட்ட மக்களை ஸ்ரீலங்கா அரசிற்கு எதிராகவும், அதன் யுத்தத்திற்கு எதிராகவும் ஐக்கியப்படுத்தப் போராடும் தொழிலாள வர்க்கக் கட்சிக்கு எதிரான அடக்குமுறையானது, தமிழ் தேசியப் போராட்டத்தைக் கீழறுப்பதோடு மட்டுமல்லாது பொதுஜன முன்னணி அரசாங்கத்தைப் பலப்படுத்தும் என்றும் அவர்கள் உணர்ந்தார்கள். எனவேதான் அவர்கள் அப்படிச் செய்தார்கள்.

இருந்தபோதிலும், சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனநாயக உரிமைகள், அதன் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் சமூக ரீதியான தனி உரிமைகள் (civil rights) சம்பந்தமாக தொடர்விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். நாடு கடந்து வாழும் த.ஈ.வி.பு. களின் தலைமை என்றாலும் சரி, அல்லது அதன் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பகுதிகளின் அதிகாரிகளாயினும் சரி, பரந்த தமிழ் மக்களுக்கு சோ.ச.க. தனது வேலைத்திட்டத்தை முன்வைக்கும் அதன் ஜனநாயக உரிமைக்கு எதிராகத் தாம் தலையிடமாட்டார்கள் என எந்த ஒரு உறுதிமொழியையும் கொடுக்கவில்லை.

சோசலிச சமத்துவக் கட்சியின்வேலைத்திட்டம்

தனது சோசலிச எதிர்ப்பாளர்களுக்கு எதிராக த.ஈ.வி.பு. நடத்திய அடக்குமுறைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட சர்வதேசப் பிரச்சார இயக்கம் வளரும் எண்ணிக்கையில் கேள்விக் கணைகளைக் கிளப்பியுள்ளது. த.ஈ.வி.பு. பற்றிய சோ.ச.க.வின் மதிப்பீடு என்ன? தேசிய ஒடுக்குமுறையை நிர்மூலமாக்க நமது மூலஉபாயம் என்ன? எமது வரலாறு, எமது வேலைத்திட்டம் என்ன? என்ற கேள்விகள் குறிப்பாக தமிழ் தேசியப் போராட்டத்தின் ஆதரவாளர்களிடம் இருந்து வந்துள்ளன.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோ.ச.க. ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளை அமைக்க, சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களின் விவசாயிகளின் புரட்சிகரக் கூட்டை போராட்ட உலைக்களத்தில் உருவாக்கப் போராடுகின்றது. பரந்த மக்களின் ஜனநாயக அபிலாஷைகள் என்றாலும் சரி, அல்லது அவர்களின் சமூக அபிலாஷைகள் என்றாலும் சரி அவற்றை ஸ்ரீலங்கா முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியின் கீழோ அல்லது 1947-48இல் இந்திய உபகண்டத்தில் நிறுவப்பட்ட தேசிய - அரசு அமைப்பின் எல்லைப்பரப்பின் உள்ளோ அடையமுடியாது. கடந்த கால காலனித்துவத்தின் மற்றும் தொடர்ந்து வந்த ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் விளைபயனான ஸ்ரீலங்கா மற்றும் ஈழத்தின் பின்தங்கிய நிலைமையை உலக சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியாகத் தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்தை நிறுவுவதன் மூலம் மட்டுமே வெல்லமுடியும்.

தமிழர்களை தொடர்ந்து அடிமைப்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா அரசு 15 வருடங்களாக நீண்ட யுத்தத்தைத் தொடுத்து வருகின்றது. இந்த யுத்தகாலம் முழுவதும், சோ.ச.க. புரட்சிகர தோற்கடிப்புவாத நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வந்துள்ளது. அது வடக்கிலும், கிழக்கிலும் இருந்து அனைத்து ஸ்ரீலங்கா பாதுகாப்புப் படைகளையும் உடனடியாகவும், நிபந்தனையின்றியும் திருப்பி அழைக்கும்படி கோருகின்றது.

தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் மேலாதிக்கத்திலிருந்து விடுவித்து அதை சுய நனவு உள்ள ஒரு புரட்சிகர சக்தியாக உருமாற்றி, அதை அனைத்து ஒடுக்கப்படுவோருக்கும் தலைமை கொடுக்கவல்லதாக்க சோ.ச.க. தொடுத்துவரும் போராட்டத்திற்கு, அதன் யுத்தத்திற்கு எதிரான நிலைப்பாடு, நெம்பு மையம் போன்றதாக உள்ளது. போர் கொடுமையின் தாக்கத்தைத் தாங்கி வரும் வடக்கு மற்றும் கிழக்கின் பரந்த மக்களுக்கு இந்த யுத்தம் ஒரு துன்பியலாக இருந்து வருவதுடன் மட்டுமல்லாமல், தெற்கிலும் பரந்த மக்களின் ஜனநாயக உரிமைகள், மற்றும் வாழ்க்கைத் தரங்களின் மேல் நெறிமுறைப் படுத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடுக்கவும், அதன் சிங்கள வகுப்புவாத சித்தாந்தத்தைப் பரப்பவும் ஸ்ரீலங்கா முதலாளித்துவ வர்க்கம் இந்த யுத்தத்தை ஒரு மூடுதிரையாகப் பயன்படுத்தி வருகின்றது.

மாகாண சபைத் தேர்தல்களைக் காலவரையற்றுத் தள்ளிப்போடவும் தீவு முழுவதும் அவசரகால நிலை ஆட்சியை விரிவுபடுத்தவும் அனைத்து இராணுவ-போலீஸ் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளின் மேல் இராணுவத் தணிக்கையைத் திணிக்கவும், அதற்கு நியாயம் கற்பிக்கவும் அண்மைய மாதங்களில்தான் பொதுஜன முன்னணி அரசாங்கம் யுத்தத்தைக் காரணம் காட்டியுள்ளது. பொதுஜன முன்னணி (பொ.ஜ.மு) அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை, தெற்கில் சமூகக் கொந்தளிப்பை ஒடுக்க பாதுகாப்புப் படைகளை மேலும் பரவலாகப் பயன்படுத்துவதைப் பற்றி பகிரங்கமாக எழுதி அச்சிட்டு வெளியிடுவதை சட்டரீதியாக இயலாததாக்குகின்றது. யுத்த முயற்சிக்கு விருப்பத்துடன் வழங்கும் பங்களிப்பு என்று ஜோடித்து அரசாங்கத் தொழிலாளர்கள் மேல் பொ.ஜ.மு. அரசாங்கம் மேலும் ஒரு சம்பளவெட்டை திணித்துள்ளது. ''தேசிய நெருக்கடி நேரத்தில் தொழிலாளர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்துவது உகந்ததல்ல'' என்று மீண்டும் தனது வாதத்தை வைக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் உதவியுடன், பொ.ஜ.மு. இப்பொழுது அனைத்து தனியார் துறை தொழிலாளர்களுக்கும் கூலி சிக்கனத்தை விரிவுபடுத்த முயலுகின்றது.

சோ.ச.க யுத்தத்தை எதிர்க்கின்றது. ஆனால், இது த.ஈ.வி.பு.வின் தேசிய பிரிவினைவாத வேலைத்திட்டத்திற்கு எந்த ஒருமுறையிலும் ஆதரவு அளிப்பது என்று பொருள்படாது. த.ஈ.வி.பு. எந்த வடிவிலும் தமிழ் மக்களின் நிஜமான அபிலாஷைகளுக்கோ அல்லது நலன்களுக்கோ குரல் கொடுக்கவில்லை என வடக்கிலும், கிழக்கிலும் வாழும் பரந்துபட்ட தமிழ் மக்களுக்கு சோ.ச.க. எச்சரிக்கை விடுக்கின்றது.

இன்றைய நேரத்தில் ஈழத்தின் பகுதிகளில் த.ஈ.வி.பு. களின் கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் அதன் நிர்வாகம் நிலவுகின்றது. அங்கெல்லாம் யுத்தத்தின் காரணமாக ஏற்படும் எந்த ஒரு நிதி இழப்பீட்டுக்கும் தொழிலாளர்களும், விவசாயிகளும் வரி செலுத்த வேண்டிய நிலையில், த.ஈ.வி.பு. நிர்வாகம் போக்குவரத்தையும் மற்றும் சில்லறை வியாபாரத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முதலாளிகளுடன் கண்டும் காணாதது போல் இருந்து ஒத்துழைத்து வருகின்றது. பரந்த மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றி ஸ்ரீலங்கா அரசு காட்டும் அக்கறையைவிட த.ஈ.வி.பு. நிர்வாகம் அதிக அக்கறையை காட்டவில்லை. தமிழ் அரசு ஒன்று நிறுவப்படுமாயின் அது இன்றைய ஸ்ரீலங்கா அரசைப் போலவே, ஒரு முதலாளித்துவ அரசாக, பூகோள மூலதனத்தின் கட்டளைகளுக்கு செயல்ரீதியாக துணைபோகும் அரசாக இருக்கும்.

தெற்கில் பரந்த மக்களை யுத்தத்திற்கு எதிராகவும், பொதுஜன முன்னணி ஆட்சிக்கு எதிராகவும் அணிதிரட்ட சோ.ச.க. போராடுகின்றது. அப்படி யுத்தத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் தலைமை தாங்கி நடத்தும் பரந்துபட்ட இயக்கத்தை பயன்படுத்தி த.ஈ.வி.பு. வடக்கிலும், கிழக்கிலும் தனது ஆட்சியை பலப்படுத்தும், என்ற வாதத்தினால் எந்த வகையிலும் சோ.ச.க.வை தடுத்துவிட முடியாது. பிற்போக்கு ஸ்ரீலங்கா அரசின் நிலப்பரப்பின் முழுமையை கட்டிக்காப்பதன் மூலம் ஒடுக்கப்படும் சிங்கள மற்றும் தமிழ் பரந்துபட்ட மக்களின் ஐக்கியத்தை உருவாக்க முடியாது.

தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான நடவடிக்கையின் விளைபயனாக போர் ஒரு முடிவுக்கு வருமாயின், தீவின் வர்க்கங்களுக்கு இடையிலான உறவு அடிப்படை ரீதியான முழுமாற்றத்தை அடையும். உடனடியாக இராணுவ அரங்கில் எப்படியான விளைபயன்கள் ஏற்பட்டாலும் யுத்தத்திற்கு எதிராக வெற்றிகரமாக தொழிலாளவர்க்கம் அணிதிரண்டமை, சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தவும், தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் குட்டி முதலாளித்துவ பரந்த மக்களுக்கும் இடையில் ஒரு கூட்டை அமைப்பதற்கும், நகர்ப்புற மற்றும் நாட்டுப்புற தமிழ் மற்றும் சிங்கள பரந்த மக்களுக்கு இடையில் கூட்டை உருவாக்குவதற்கும் அளப்பரிய சாதகமான நிலைமைகளை உருவாக்கும். யுத்தத்தை நிர்ப்பந்தித்து ஒரு முடிவுக்கு கொண்டு வருவதன் மூலம் தொழிலாளவர்க்கமானது தமிழ் பரந்த மக்களின் விடுதலையின் நிஜமான நடவடிக்கையின் முதல்வனும்தானே என்பதோடு, அது மாற்றீடான ஆட்சியின் தலைவனும் தானே என்றும் கொண்டாடும்.

கொழும்பில் தொழிலாளர்கள் விவசாயிகளின் அரசாங்கம் ஆட்சிக்கு வரும் சாத்தியக்கூறு, ஈழத்தினுள் வர்க்க குரோதங்களை அதிகரித்து அவற்றை அம்மணமாக்கிவிடும். இது த.ஈ.வி.பு. களின் கையையும் அதன் பிரிவினைவாத வேலைத்திட்டத்தையும் அம்பலமாக்க பெரிதும் உதவும். தெற்கில் தமது வர்க்க சகோதரர்களின் செயலை, தமிழ்த் தொழிலாளர்கள் தமது ஜனநாயக மற்றும் வர்க்க அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு, ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளை அமைப்பதன் மூலம் கதவு திறக்கப்படுவதாக அறிவார்கள். அதே நேரத்தில் தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தினர் அதன் சிங்களப் போட்டியாளர்களுடன் தமது ஆட்சிக்கும், உரிமைக்கும் உள்ள அபாயத்தைக் கண்டு அஞ்சுவார்கள். இப்படியான நிலைமைகளினுள் வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் அரசு ஒன்று உருவாகுமாயின் அது பிற்போக்கு அணிதிரளும் ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் மட்டுமன்றி, சிங்கள முதலாளித்துவ வர்க்கத்தின் பெரும் பகுதியினர் அணி திரளும் அரங்கமாக மாறும் என்று எந்த ஒரு முரண்பாட்டு அச்சமுமின்றி நம்மால் கூறமுடியும்.

வரலாற்றின் வெளிச்சத்தில் ''சுயநிர்ணயம்''

சோ.ச.க.வின் எதிர்ப்பு உட்பட்ட, தமிழ் ஈழ தேசிய அரசு அமைப்பதற்கு எதிரான எந்த ஒரு எதிர்ப்பும் -த.ஈ.வி.பு. களும் எண்ணற்ற போலி சோசலிச குழுக்கள் மத்தியில் உள்ள அவர்களின் ஆதரவாளர்களும், தமிழர்களின் ''சுயநிர்ணய உரிமையை'' மறுப்பதாக அமையும் என்கின்றார்கள். ஒரு குறிப்பிட்ட அரசியல் வேலைத்திட்டத்திற்கு தொழிலாளர்வர்க்கத்தின் எதிர்ப்பை பிற்போக்கின் எதிர்ப்புடன் ஒன்றாக காட்டுவது ஒரு பழைய புரளியாகும். இதை தேசிய முதலாளித்துவ வர்க்கமானது தொழிலாள வர்க்கம் தனது அரசியல் சுயநிர்ணயத்தை செயற்படுத்துவதை தடுக்கவும் அதன் சொந்த வர்க்க மாற்றீடை முன்னெடுப்பதை நிறுத்தவும் அடிக்கடி கையாண்டு வரும் ஒரு பழைய புரளியாகும். உண்மை என்னவென்றால் ''சுயநிர்ணயம்'' அதன் அடிப்படையான முற்போக்கான உள்ளடக்கத்தை - தேசிய ஒடுக்குதலை அடியோடு ஒழிப்பதை - சோ.ச.க. யின் ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான வேலைத்திட்டத்தின் மூலம் மட்டுமே அடைய முடியும்.

மார்க்சிய இயக்கத்தில் தேசியப் பிரச்சனை நீண்ட காலமாக நீடித்து விவாதிக்கப்பட்ட ஒரு பிரச்சனையாகும். எப்படியிருந்த பொழுதிலும் மாபெரும் சம்பவங்கள் தேசிய ஜனநாயக மற்றும் சோசலிச கோரிக்கைகளுக்கான போராட்டங்களுக்கு இடையிலான உறவைப் பற்றி தெளிவுபடுத்தவும், தேசிய ''சுயநிர்ணய'' கோரிக்கைக்கான அறைகூவலின் செல்லுபடியான தன்மை தொடர்பாகவும் தெளிவுபடுத்த உதவியுள்ளன.

தேசியவாதிகள், தேசத்தை என்றென்றும் உள்ள ஒரு மூலக்கூறாக அல்லது மனிதகுல வளர்ச்சியில் பெரிதும் உயர்ந்த கட்டமாக சித்தரிக்கின்றவேளை, மார்க்சிஸ்டுகள் அவற்றை வரலாற்றின் உற்பத்தி என்று வலியுறுத்துகிறார்கள். மேற்கு ஐரோப்பாவிலும் மற்றும் வடஅமெரிக்காவிலும் வளர்ந்து வந்த முதலாளித்துவமானது, தேசிய இயக்கங்களின் மூலமும், தேசிய அரசுகளை நிறுவுவதன் மூலமும் உள்நாட்டுச் சந்தையின் மேல் அதன் கட்டுப்பாட்டை நிலைநாட்டி, முதலாளித்துவத்தின் வளர்ச்சியை தடை செய்த பிரபுத்துவ சமூக உறவுகளையும் மற்றும் மிச்ச சொச்சங்களையும் அழித்தது.

இந்தியாவைப் போன்று நேரடி காலனித்துவ ஆட்சிக்கு உட்படுத்தப்பட்ட அல்லது சீனாவிலும் ஈரானிலும் போல அரை காலனித்துவ சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்ட உலகின் மிகப்பரந்த பகுதிகளில் நவீன முதலாளித்துவ உறவுகள் தோன்ற ஆரம்பித்த காலத்திலேயே போல்ஷேவிக் கட்சியினதும் அதன்பின் கம்யூனிச அகிலத்தினதும் வேலைத்திட்டத்தில் சுயநிர்ணயம் சேர்க்கப்பட்டது.

பிரபுத்துவ எதேச்சதிகாரம் ஆட்சி புரிந்த மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் வேறுபட்ட கட்டங்களை அடைந்த எண்ணற்ற தேசிய இன மற்றும் இனப்பிரிவு குழுக்களைக் கொண்டிருந்த ஜாரிச ரஷ்ய சாம்ராஜியத்தில் போல்ஷேவிக்குகள் சுயநிர்ணய முழக்கத்தை உயர்த்தினார்கள். அதை அவர்கள் ஜாரிச ஒடுக்குமுறை, வேறுபட்ட தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் மூட்டிவிட்ட குரோதங்களை வெல்வதற்கு ஒரு வழியாகவும், முதலாளித்துவ தேசியவாதிகள் தமது சொந்த வர்க்க நலன்களை முன்னெடுக்க, ரஷிய பேரினவாத வெறிக்கு எதிரான பரந்துபட்ட எதிர்ப்பை பயன்படுத்தும் அந்த முயற்சியை முறியடிக்கவும் முன் வைத்தார்கள்.

சுயநிர்ணய உரிமை கோரிக்கையானது, ஒரு ''எதிர்மறையான'' கோரிக்கை என்று லெனின் வலியுறுத்தினார். அது செயலுக்கு விரும்பத்தக்கவாறு பிரிவினைக்கு ஆதரவு தருவதை அர்த்தப்படுத்தவில்லை. அது, இதற்கு மாறாக ஜாரிச ஆட்சி, ஒடுக்கப்படும் தேசிய இனங்களை அதன் சாம்ராஜ்யத்தினுள் வைத்திருக்க அதன் இராணுவ பெரும் பலத்தை பயன்படுத்துவதற்கு எதிராக போல்ஷேவிக்குகளின் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

சிறிய தேசிய இனங்களின் இக்கட்டான நிலையையும், அவற்றின் தேசிய கோரிக்கைகளையும், ஏகாதிபத்தியம் சூழ்ச்சித்திறனுடன் அவற்றைக் கையாள்வது பற்றியும் லெனினும் அவரது காலத்து சோசலிஸ்டுகளும் மதிநுட்பத்துடன் இருந்தார்கள். பால்கன்கள் சம்மந்தமாக ஒன்றன்பின் ஒன்றாக ஏற்பட்ட ரத்தம் சிந்தும் அலைகளின் மூலம் சிறு இனக்குழு அரசுகளாக துண்டுபோடும் தேசியவாதிகளின் முயற்சிக்கு எதிராக சோசலிச இயக்கம், பால்கன் சோசலிச ஐக்கிய அரசுகள் என்னும் முன்னோக்கை முன்வைத்தது. தொழிலாள வர்க்கத்தினதும் மற்றும் ஒடுக்கப்படும் பரந்த மக்களினதும் புரட்சிகர செயலின் மூலம் மட்டுமே பால்கனின் நிஜமான ஜனநாயக ஐக்கியப்படுத்தலைச் சாத்தியமாக்க முடியும். தேசிய பிணக்குகளை தீர்க்கவும் நவீன தொழிற்துறை பொருளாதாரம் வளரவும் சாத்தியமாக்கும் ஒரு அரசகட்டமைப்பு இதன் மூலமே உருவாக்கப்படும்.

மாபெரும் போலந்து மார்க்சிஸ்டான ரோசா லக்சம்பர்க்கைப் பொருத்தளவில் சுயநிர்ணய முழக்கத்திற்கு எதிராக தொலைநோக்குடைய எதிர்ப்பை கிளப்பினார். அவர், இது தவிர்க்க முடியாமல் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தினால் அதன் சொந்த வர்க்க லட்சியங்களை அடைவதற்காக பயன்படுத்தப்படும் என்று எச்சரித்தார். சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை, தேசிய விருப்பு ஒன்று உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ளுகிறது. ஆனால் லக்சம்பேர்க் அவதானித்ததுபோல் அப்படியான ஒரு விருப்பு வர்க்கப்போராட்டத்திற்கு வெளியேயோ அல்லது லோனதாகவோ இருக்கவில்லை என்றும், உண்மையில் அது வர்க்கப் போராட்டத்தின் விளைபொருளாகும்.

நிரந்தரப் புரட்சி

இரண்டாம் உலக யுத்தத்திற்கு முந்திய பத்தாண்டுகளிலும் அதன்பின் தொடர்ந்து உடனடியாக வந்த பத்தாண்டுகளிலும் தேசியப் பிரச்சனையானது மாபெரும் காலனித்துவ எதிர்ப்பு இயக்கங்களுடன் பிணைக்கப்பட்டிருந்தது. இந்த இயக்கங்கள் மதத்தால், மொழியால், ஜாதியால், அல்லது குணங்களால் பிரிக்கப்பட்ட வேறுபட்ட மக்களை ஐக்கியப்படுத்த, அவை பிரமாண்டமான ஜனநாயக மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கத்தை கொண்டிருந்தன. ஆனால் தேசிய ஐக்கியமானது காலனித்துவ அல்லது அரை காலனித்துவ அடிமையில் இருந்து விடுதலையுடனும், முதலாளித்துவத்திற்கு முந்திய சுரண்டும் முறைகளை அகற்றுவதற்கும் நவீன பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சிக்கு வேண்டிய பெரிய அரசியல்-பொருளாதார கூறுகளை நிறுவுவதுடனும் பிணைக்கப்பட்டிருந்தபொழுது, தேசிய பிரச்சினையின் வர்க்க இயக்கவியல் மேற்கு ஐரோப்பாவிலும், வடஅமெரிக்காவிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்ததை விட ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் பெரிதும் வேறுபட்டதாக இருந்தது. ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியுடன், பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்திற்கு புரட்சிகர போட்டியாளாக தோன்றியதுடன், தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் இயலாமை மேலும் மேலும் வளர்ந்து அது பிற்போக்கானது. தேசிய ஜனநாயக புரட்சியில் எது வரலாற்று ரீதியாக முற்போக்கானதாகவும், அத்தியவசியமானதாகவும் இருந்ததோ, அது முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் தலைமையின் கீழ் தொடர்ந்தும் அடையமுடியாத ஒன்றாக ஆகியது.

இங்குதான் லியோன் டிராட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் முக்கியத்துவம் இருக்கின்றது. தேசிய முதலாளித்துவ வர்க்கத்திற்கும் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான புதிய சமூக அமைப்புக்கான போராட்டத்தில், மற்ற அனைத்து ஜனநாயக பணிகளைப்போல இதுவும் தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ் ஒடுக்கப்படுவோரின் புரட்சிகர கூட்டு அமைப்பதுடன் மற்ற எல்லாவற்றையும் போல உட்படுத்தப்படுகிறது.

எதிரிடையாக தேசிய விடுதலையானது சமூக விடுதலையிலிருந்து பிரிக்கப்பட்டு இருக்கும்வரை ஒரு அரசியல் ஏமாற்றாக இருக்கும். இந்திய, சீன மற்றும் காலனித்துவ மக்களது தேசிய விடுதலைக்கான போராட்டங்களை ஆதரிக்கும் அதே நேரத்தல் நான்காம் அகிலத்தின் சார்பில் 1940-ல் எழுதும் பொழுது டிராட்ஸ்கி பின்வருமாறு எச்சரித்தார்: ''காலங்கடந்த தேசிய அரசுகள் சுதந்திரமான ஜனநாயக வளர்ச்சியை மேலும் எதிர்பார்க்க முடியாது. இத்துப்போகும் முதலாளித்துவத்தால் சூழப்பட்டு ஏகாதிபத்திய முரண்பாடுகளால் பின்னி பிணைக்கப்பட்டுள்ள ஒரு பின்தங்கிய அரசின் சுதந்திரமானது, தவிர்க்க முடியாது அரை கற்பனையானதாக இருக்கும். அதன் அரசியல் ஆட்சி உள்வர்க்க முரண்பாடுகளினதும் வெளி அந்தஸ்துகளினதும் செல்வாக்கின்கீழ் தவிர்க்க முடியாது மக்களுக்கு எதிரான சர்வாதிகாரத்தினுள் சரியும். இப்படியான ஆட்சிகள்தான் துருக்கியின் ''மக்கள்'' கட்சியின் ஆட்சியும் சீனாவின் கோமிண்டாங் ஆட்சியுமாகும். நாளை இதேபோல் காந்தியின் ஆட்சி இந்தியாவில் இருக்கும்.''

இந்த முன்னோக்கானது. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிந்திய காலனித்துவத்திலிருந்து விடுவித்தலின் அனுபவத்தை ஒரு சோகமான முறையில் ஊர்ஜிதம் செய்துள்ளது. காலனித்துவ விடுபடலில் மாபெரும் காலனித்துவ சாம்ராஜ்யங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன. அரசியல் அதிகாரம் தேசிய முதலாளித்துவ ஆட்சிகளிடம் மாற்றப்பட்டது. ஆட்சி அதிகாரத்தை ஏற்ற தேசிய முதலாளித்துவ வர்க்கமானது ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையாளனாக செயல்படவில்லை, அது ஏகாதிபத்திய சூறையாடலின் இளம் பங்காளியாகவே செயல்பட்டது.

புதிதாக சுதந்திரமடைந்த முதலாளித்துவ ஆட்சிகள் வளர்ச்சித் திட்டங்களை செயற்படுத்தின. அவை முதலாளித்துவத்திற்கு முந்திய ஒடுக்குமுறை வடிவங்களின் மீதமாய் இருப்பவனவற்றை அழிக்கவும் இல்லை. அதேபோல அவை தமது நாடுகள் கைவிட்டு எண்ணக்கூடிய, இயற்கை வளங்களிலும் மற்றும் விவசாய ஏற்றுமதிகளிலும் தங்கி இருக்கும் நிலையை உடைக்கவும் இல்லை.

பொதுவாக ''சோசலிச திட்டங்கள்'' என்று ஜோடிக்கப்பட்ட இத்திட்டங்கள் இருந்த பொழுதும் ஒன்றை சாதித்தன. அவை அரிதாக உள்ள வளங்களை பேராசை பிடித்த பணத்திற்காக எதையும் விற்றுவிடும் முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளினுள் திருப்பி விட்டன.

காலனித்துவத்திலிருந்து விடுபட்டமையானது தேசிய ஒடுக்குமுறை பிரச்சனைக்கான உண்மையான தீர்வுக்கான அடித்தளத்தை ஒருபோதும் வளங்கவில்லை. இதற்கு மாறாக ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் உருவாக்கப்பட்ட புதிய அரசுகள் அடிப்படை ஜனநாயக கோட்பாடுகளின் திரிபுபட்ட வடிவத்திலேயே அமைக்கப்பட்டன. அவை காலனித்துவ சூறையாடல் மூலமும் மற்றும் ஏகாதிபத்திய யுத்தங்கள், ராஜதந்திரங்கள் என்பனவற்றின் மூலமும் நிர்மாணிக்கப்பட்ட அரசியல் அமைப்பின் மேலேயே கட்டி எழுப்பப்பட்டன.

பரந்துபட்ட மக்களின் ஜனநாயக விருப்பு ஒரு புறம் இருக்க, அவ் அரசுகளின் எல்லைகள், எந்த ஒரு முறையிலும் தேசிய-இன அல்லது புவியியல் எல்லைகளுடன் தொடர்புபட்டதாக இருக்கவில்லை. பரந்துபட்ட மக்களின் அபிலாஷைகளை எதிர்நோக்க ஆற்றலற்றதோடு, அவற்றுக்கு எதிராக தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சிகள் ஜனநாயக உரிமைகளை இனவாத மற்றும் தேசிய-இனக் குழுக்களுக்கிடையேயான முரண்பாடுகளை பயன்படுத்தி சமூக கிளர்ச்சிகளை திசைதிரும்பச் செய்து அதிகாரத்திற்கும் சலுகைகளுக்குமாக இடைவிடாப் போராட்டத்தை தொடுத்து வந்துள்ளன.

காலனித்துவத்திலிருந்து விடுபடலின் முதன்மையான உதாரணம் தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்திய உபகண்டத்தில் ஆட்சி அதிகாரம் கை மாறியதாகும். இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை தேசிய முதலாளித்துவ ஆட்சிகளுக்கு அரசியல் அதிகாரம் மாற்றப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் முதற்பாதியில் இந்திய உபகண்டமானது, சக்திவாய்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களினால் குலுங்கியது. இந்த இயக்கமானது பிரதானமாக தொழிலாளர்களின் மற்றும் விவசாயிகளின் சமூக அதிருப்தியினால் உந்தப்பட்டது. ஆனால் இந்த பிரமாண்டமான எழுச்சி, தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் தலைமையின் கீழ் தொடர்ந்தும் இருந்ததினால், அது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் உடன்பாட்டில் முடிந்தது. இந்த உடன்பாடு இந்தியாவை வகுப்புவாத அடிப்படையில் முஸ்லிம் பாகிஸ்தான் மற்றும் இந்து இந்தியா என்ற பிரிவினையில் முடிந்தது. இதன் மூலம் வகுப்புவாத பிரிவினை உக்கிரப்படுத்தப்பட்டது. நிலப் பிரபுத்துவத்திற்கும் சாதிவாதத்திற்கும் இடம் கொடுக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் ஐக்கிய இந்தியா என்ற அதன் சொந்த வேலைத்திட்டத்தை கைவிட்டது; பிரிவினையை ஏற்றது. ஏன் என்றால் அதனுடைய வர்க்க ஆக்க அமைவு மற்றும் அதனுடைய வெளி நோக்கு அதை இந்து மற்றும் முஸ்லிம் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களினது ஐக்கியத்தை புடம்போட்டு உருவாக்கும் ஒரே மார்க்கத்தில் இருந்து அதிர்ச்சியூட்டி பின்வாங்கச் செய்தது. அதாவது இந்து மற்றும் முஸ்லிம் விவசாயிகளையும் தொழிலாளர்களையும் அவர்களுக்கு பொதுவான நிலப்பிரபு, வட்டிக்காரன் மற்றும் முதலாளித்துவ ஒடுக்கு முறையாளர்களுக்கு எதிராக அவர்களது ஐக்கிய அணிதிரட்டலுக்கு முன் அசந்து பின்வாங்கியது.

தேசிய முதலாளித்துவ ஆட்சியின் அரை நூற்றாண்டுக்கு பின் இன்று இந்திய பரந்த மக்களது சீரழிவு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்ததைவிட, மேலும் பெருமளவிலானதாகும். ஏறக்குறைய முப்பத்திரெண்டு கோடி இந்தியர்கள் முற்றமுழுதான வறுமைக்குள் வாழ்கிறார்கள். அதாவது அவர்கள் ஒருநாள் முழு உழைப்பிற்கும் வேண்டிய சக்தியை தரும் உணவைப் பெற இயலாதவர்களாக இருக்கிறார்கள்; 18.6 கோடி மக்கள் சுத்தமான தண்ணீர் பெறமுடியாதவர்களாகவும் 65 கோடிமக்கள் சாக்கடை வசதிகளை பெற முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். அண்மைய பத்தாண்டுகளில் சமூக நெருக்கடியானது மேலும் ஆழமாகியுள்ளது. முதலாளித்துவவர்க்கம் மேலும் மேலும் ஜாதி, வகுப்புவாத மற்றும் மொழி ரீதியான வேறுபாடுகளை சூழ்ச்சி திறனுடன் கையாளுவதில் தங்கியிருந்து வருகிறது. மூன்று தடவை இந்தியா பாகிஸ்தானுடன் யுத்தத்திற்கு சென்றுள்ளது. இந்திய ராணுவத்தை அணு ஆயுதமயமாக்குவதற்கான

தயாரிப்பில் கடந்த மே மாதம் இந்து மதவெறி பரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான இந்திய அரசாங்கம் அணுகுண்டுகளை வெடித்தது. இதைத் தொடர்ந்து இதற்கு எதிரிடையாக பாகிஸ்தான் அணு குண்டு பரிசோதனை செய்தது.

பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நிர்பந்திப்பதற்காக இந்திய முதலாளித்துவ வர்க்கம் குறிப்பிட்ட பரந்த இயக்கங்களுக்கு ஆதரவு காட்டியது. ஆனால் இலங்கை முதலாளித்துவ வர்க்கத்திற்கு அத்தகைய உறவு எதுவும் இருந்ததில்லை. அது பிரதான நிலப்பரப்பில் இருந்து இலங்கையின் அரசியல் பிரிதலை இறுகப் பற்றிக் கொண்டது. இதன் மூலம் அது தீவிரவாத பாதிப்புக்கள் பாக் நீரிணையை கடப்பதைத் தடுக்கும் ஒரு மார்க்கமாகவும், போர்க்குணமிக்க இலங்கைத் தொழிலாளர்கள் தமது இந்திய சகோதரர்களுடன் ஐக்கியப்பட எடுக்கும் முயற்சிகளை தடுக்கும் ஒரு மார்க்கமாகவும் கண்டது. பிரிட்டிஷாரினால் 1948-ல் அரசு அதிகாரம் ஸ்ரீலங்கா முதலாளித்துவ வர்க்கத்திடம் விருப்பத்துடன் வழங்கப்பட்டது. உடனே ஸ்ரீலங்கா முதலாளித்துவ வர்க்கம் அதன் ஆட்சி வகுப்புவாதத்தின் மேல் தங்கி இருக்கும்படி செயல்பட்டது. அரசினுடைய சிங்கள பெரும்பான்மையை தமிழ் சிறுபான்மைக்கு எதிராக தூண்டிவிட்டுச் சென்றது. தமிழ் அரசியல் மேல் தட்டினருடைய உடன்பாட்டுடன் (சுதந்திர) இலங்கையின் முதலாவது பாராளுமன்றம் மலைநாட்டு தோட்ட தொழிலாளர்களிடம் இருந்து அவர்களது குடியுரிமைகளை பறித்தது. 1949ம் ஆண்டு குடியுரிமை சட்டம் ஸ்ரீலங்காவினதும் ஈழத்தினதும் தமிழர்களின் ஜனநாயக உரிமைகளின் மீது, பின்னர் தொடுக்கப்பட்ட அனைத்து தாக்குதல்களுக்கும் அடித்தளத்தை அமைத்தது.

தொழிலாள வர்க்க தலைமை நெருக்கடியும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தோற்றமும்

வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழர்கள் எப்பொழுதும் அல்லது நீண்ட காலமாக ஒரு சுதந்திர அரசை நிறுவுவதை நாடிநின்றார்கள் என்று த.ஈ.வி.பு. அரிதாகக் கூட கூறமுடியாது. இதற்கு மாறாக இலங்கை சமசமாஜ கட்சி நான்காம் அகிலத்துடன் உடைத்துக்கொண்டு நிரந்தர புரட்சி வேலைத்திட்டத்தை நிராகரித்ததினால் ஏற்பட்ட தொழிலாள வர்க்க நெருக்கடியை பயன்படுத்தி, தமிழ் பிரிவினைவாதம் கொழுத்து பெருகியது.

சுதந்திரத்திற்கு பிந்திய காலப்பகுதியில் இலங்கை தனியொரு இடத்தை வகித்தது. இங்கு தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் டிராட்ஸ்கிச இயக்கம் இருந்தது. தமிழ் தோட்ட தொழிலாளர்களுடைய குடியுரிமைகளுக்கான போராட்டத்துடன் 1948ல் ஆரம்பித்து, புதிய அரசில் தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை சிங்கள இன வெறிக்கு எதிராக காத்து நிற்கும் போராட்டம், நேரடியாக தொழிலாள வர்க்கத்துடனும் அதன் தலைமையுடன் அன்று டிராட்ஸ்கிச கட்சியாக இருந்த சமசமாஜ கட்சியுடனும் இணைந்த ஒன்றாக இருந்து வந்தது. தமிழ் பரந்த மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை பெற்றுதரக் கூடிய சக்தி தொழிலாள வர்க்கம் என்று கண்டார்கள். இது 1953ம் ஆண்டு ஹர்த்தாலிலும் 1963-64, 21 கோரிக்கை இயக்கத்திலும் ஜடரீதியாக எடுத்துக்காட்டப்பட்டது.

சமசமாஜ கட்சியின் தேசியவாத சீரழிவு, தமிழ் போராட்டத்திற்கும் தொழிலாள இயக்கத்திற்கும் இடையிலான உறவை அடிப்படை ரீதியாக கலைத்து, முதலாளித்துவ தேசியவாத அரசியலின் வழிப்போக்கில் இழுபட்டுச் செல்லுவதற்கு வேண்டிய நிலைமைகளை உண்டு பண்ணியது. ஸ்ரீலங்கா முதலாளித்துவ வர்க்கத்தின் தேசிய வளர்ச்சித் திட்டத்திற்கு பத்தாண்டு காலமாக இணங்கி வந்ததின் பின் சமசமாஜ கட்சி, டிராட்ஸ்கிசத்துடன் அதன் முறிவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டரசாங்கத்தில் சேருவதன் மூலம் முழுமைக்குக் கொண்டு வந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக சிங்களம் மட்டும் தனி உத்தியோக மொழியாக்கவேண்டும் என்ற கிளர்ச்சிக்கு தலைமை தாங்கினார். 1972ம் ஆண்டில் சமசமாஜ கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இரண்டாவது தடவை கூட்டரசாங்கம் அமைத்த பொழுது, அது சிங்களத்தை சலுகை மிக்க அந்தஸ்த்தில் வைக்க அரசியல் அமைப்பு சட்டம் நிறைவேற்றப்படுவதில் தலைமைப் பங்கு வகித்தது.

தொழிலாள வர்க்கத்தினால் தாம் கை விடப்பட்டுவிட்டோம் என்று நம்பிய தமிழ் பரந்த மக்களின் பெரும் பகுதியினர், சிங்கள இன வெறிக்கு சமசமாஜ கட்சியின் சரணாகதியை தொடர்ந்து, தேசிய ஒடுக்கு முறையை எதிர்க்க புதிய முறைகளை நாடினார்கள். இது இறுதியில் யாழ்ப்பாண குடா நாட்டின் மாணவர், இளைஞர் மத்தியில் இருந்து த.ஈ.வி.பு.வையும் அதைப் போன்ற மனப்பாங்கு கொண்ட தேசியவாத குழுக்களையும் மேலெழ இட்டுச் சென்றது.

தமிழ் பிரிவினைவாதம் தோன்றுவதற்கு இரண்டாவது பிரதான காரணி இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் ஸ்டாலினிசம் வகித்த பங்காகும். சமசமாஜ கட்சிக்கு நீண்ட காலத்திற்கு முன்னரேயே இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாள வர்க்கத்தை பண்டாரநாயகாவிற்கும் அவரது ஸ்ரீலங்கா சுந்ததிரகட்சிக்கும் கீழ் நிலைப்படுத்த முயன்றது. அது ''ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ''முற்போக்கான'' அல்லது ''ஏகாதிபத்திய எதிர்ப்பு'' முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதி என்றது. இதுதான் மென்ஷிவிக்-ஸ்ராலினிச இருகட்டப் புரட்சி தத்துவ கருத்தின் இலங்கைக்கான மாற்றுருவாகும். அதாவது ஜனநாயக புரட்சியை தேசிய முதலாளித்துவம் முடிவுக்கு கொண்டுவரும் வரை தொழிலாள வர்க்கம் அதன் தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகும்.

எதிர்ப்புரட்சி சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவம் வகித்த பங்கு இதனைக்காட்டிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கெடுபிடி யுத்த சூழ்நிலைமைகளில் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் பல்வேறு தேசிய இயக்கங்களை ஊக்குவித்ததோடு அவற்றை சூழ்ச்சி திறனுடன் ஏகாதிபத்தியத்திற்கு நிர்ப்பந்தம் கொண்டுவரும் ஒரு சாதனமாக பயன்படுத்தியது. இப்படியான இயக்கங்களுக்கு அதிகாரத்துவம் அளித்த ஆதரவு எப்பொழுதும் அது ஏகாதிபத்தியத்துடன் சமரசமாக வாழ வகை தேடுவதற்கு கீழ்நிலைப்பட்டதாகும். எரிட்ரிய தேசிய போராட்டத்திற்கு சோவியத் ஆதரவை திரும்பப்பெற்றதும் அதன் பின்னர் மென்கெஸ்டு ஆட்சிக்கு அது எத்தியோப்பிய சாம்ராஜ்யத்தின் பழைய எல்லைகளை பேண கொடுத்த ராணுவ ஆதரவும், மாஸ்கோ பல்வேறு தேசிய இயக்கங்களுக்கு கொடுத்த ஆதரவு எந்த நோக்கத்துடன் கொடுக்கப்பட்டது என்பதற்கான படுமோசமான உதாரணங்களில் ஒன்றாகும். இது வல்லரசுகளின் அரசியலின் அதிகார எல்லைகளுக்குள் சாதகமானவற்றிற்கு பச்சையாக செய்யப்பட்ட கணிப்பீடுகளின் ஒரு படுமோசமான உதாரணமாகும். இருந்தபொழுதிலும் சோவியத் அதிகாரத்துவம் தேசியவாதத்திற்கு ஊக்கம் அளித்தமை, தேசிய விடுதலை முன்னோக்கினை அது உலக சோசலிசத்திற்கான போராட்டத்தில் இருந்து வேறுபட்டதும் அப்பாற்பட்டதுமான ஒரு கட்டம் என்றும் இக்கட்டம் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட முறைமை உடையதாகவும் ஏன் புரட்சிகர பண்புக்கு உரியதாகவும் கூட காட்ட உதவியது.

சமசமாஜ கட்சியின் காட்டிக் கொடுப்புத்தான் தொழிலாள வர்க்கப் போராட்டத்தில் இருந்து தமிழ் தேசிய போராட்டம் உடைந்ததற்கு காரணம் என்பதை கண்டுகொண்டதுடன் ஸ்ராலினிசம் அழிவை உண்டாக்கக் கூடிய தேசிய வாதத்தை வளர்த்தெடுப்பதை கவனத்தில் கொண்ட சோ.ச.க.வின் முன்னோடியான புரட்சி கம்யூனிஸ்ட் கழகம், 1972ம் ஆண்டு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் பல்கலைக்கழக நுழைவில் தரப்படுத்தலையும் எதிர்த்து எழுந்த தமிழ் இளைஞர் குழுக்கள் மத்தியில் தலையீடு செய்தது. இந்தக் குழுக்கள் பெரும்போர்க்குணத்தையும், தியாகத்திற்கு தமது தயாரையும் எடுத்துக்காட்டிய பொழுதும் அவை தமிழ் மேல்தட்டினரின் வர்க்க அரசியலுடன் தொடர்ந்தும் கட்டுண்டு இருந்தன. அதோடு அவை அவற்றின் ஆரம்ப வருடங்களில் தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதான அரசியல் இயக்கமான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் நெருக்கமாக செயற்பட்டன.

1970ம் ஆண்டுகளின் பிந்திய அரைப் பகுதியில் குறிப்பாக 1977ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி, தமிழர்களுக்கு எதிரான புதிய தாக்குதலை கட்டவிழ்த்துவிட்ட காலத்தில், தமிழ் இளைஞர் குழுக்கள் அவற்றின் வாய் வீச்சிலும் தந்திரோபாயங்களிலும் மேலும் அதிக தீவிரம் உள்ளனவையாக வளர்ந்தன. முதலாளித்துவ தேசிய இயக்கங்கள் நன்கு நடைபோட்ட பாதையைப் பின்பற்றி இவை மற்ற முதலாளித்துவ அரசுகள் பக்கம் (இந்த சந்தர்ப்பத்தில் இந்தியா பக்கம்) மற்றும் சோவியத், சீன ஸ்டாலினிச அதிகாரத்துவங்கள் பக்கமும் ஆதரவுக்காக திரும்பின. இதுமட்டுமல்லாது தமிழ் தொழிலாளர்களினதும் விவசாயிகளினதும் சமூக கோரிக்கைகளை அன்று வரை அலட்சியம் செய்து வந்தவை, அவற்றின் ஆதரவை அணிதிரட்டுவதற்காகவும் ஸ்ராலினிசத்திடமிருந்து ஆதரவு பெறவும் த.ஈ.வி.பு.வும் மற்ற தமிழ் தேசிய தீவிரவாதக் குழுக்களும் தம்மை ''சோசலிஸ்டுகள்'' என்று பிரகடணப்படுத்திக் கொண்டன.

இருந்த பொழுதிலும், இந்த குழுக்கள் தமிழ் தோட்ட தொழிலாளர்களின் நலன்களை முன்னெடுக்கவில்லை அல்லது அவர்களுடைய தேசிய வேலை திட்டம் ஏகாதிபத்தியம் திணித்த பாக் ஜலசந்தி எல்லையின் புனிதத் தன்மைக்கு சவால் விடவில்லை. இதை நாம் கிளப்புவதன் மூலம் ''பரந்தகன்ற தமிழ்நாடு'' (தீவிலும், தென்னிந்தியாவிலும் உள்ள தமிழ் பேசுபவர்களை உள்ளடக்கிய ஒரு அரசு) அரசு ஒன்றுக்கான திட்டம் மிக முற்போக்கானது அல்லது ஒரு நிலையான இலக்கு என்ற எண்ணத்தை நாம் எழுப்புவதாக அர்த்தமில்லை. இது எதை எடுத்துக்காட்டுகிறதென்றால் த.ஈ.வி.பு. களினதும் இலக்குகளும் அபிலாஷைகளும் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள தமிழ் முதலாளித்துவ மேல்தட்டினரின் வழக்கமான பிரத்யேகவாத அரசியலுடன் உள்ள தொடர்ச்சியே ஆகும்.

தேசிய விடுதலை என்ற பெயரில் பிரத்யேகவாதம் -புதிய தேசிய இயக்கங்கள் 1970களிலும் 1980களிலும் தோன்றிய பல புதிய தேசிய இயக்கங்களில் ஒன்றுதான் த.ஈ..வி.பு. இவை சுயநிர்ணயம் என்ற பெயரில் ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் உள்ள புதிய காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட அரசுகளை துண்டாட நிர்ப்பந்தம் கொண்டு வந்தன. இந்தியாவை மட்டும் நாம் கருத்தில் கொள்வோமாயின் கடந்த இரண்டு பத்தாண்டுகளில் பிரிவினைவாத கிளர்ச்சிகள் பஞ்சாப்பை, காஷ்மீரை மற்றும் வடகிழக்கை அதிர வைத்துள்ளன. அசாமியர்கள், கூர்க்காக்கள் மற்றும் போடோக்கள் உட்பட மற்றைய ஆதிவாசி மக்களின் கிளர்ச்சிகள் வடகிழக்கை அதிர வைத்துள்ளன.

வரலாற்று ரீதியான தேசிய இயக்கங்கள் வேறுபட்ட மக்களை காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் ஐக்கியப்படுத்த வாதிட்டன. இருந்தபொழுதிலும் இந்த புதிய தேசிய இயக்கங்கள் இனக்குழு, மொழி மற்றும் மத வேறுபாடுகளை புதிய அரசுகளை உருவாக்குவதற்கான கோரிக்கைகளின் அடித்தளமாகக் கொண்டுள்ளன.

ஆழவேரூன்றிய சமூகப் பொருளாதார மற்றும் தேசிய குறைபாடுகளின் காரணமாக, இந்த பிரத்தியேகவாத இயக்கங்கள் ஜனரஞ்சகமான ஆதரவை மட்டுமின்றி, வீரஞ்செறிந்த தியாகங்களுக்கும் உயிரூட்டம் கொடுத்துள்ளன. ஆனால், அவை வரலாற்றுரீதியான தேசிய இயக்கங்களின் அழுகி நாற்றம் எடுத்தலும் மற்றும் அவை நிர்மானித்த தேசிய இன அரசுகளும், தேசிய இனக்கூறு, மொழிவாரி மற்றும் மதவாத பிரிவினைவாத வேலைத்திட்டத்தை உறுதிப்படுத்தவில்லை. இதற்கு பதிலாக இது ட்ரொட்ஸ்கிச முன்னோக்கான நிரந்தரப் புரட்சியின் அவசர தேவையை கோடிட்டு காட்டுகிறது. அதோடு, 1947-48ல் புதிதாக உருவாக்கப்பட்ட அரசுகளான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அரசுகள் வரலாற்று ரீதியாக ஒரு அடிப்படை ரீதியில் நிலையானவை அல்ல. ஏனென்றால் அவை ஜனநாயக புரட்சியின் வெற்றியில் அல்லாது அதன் கருச்சிதைவில் உருவானவை என்று வலியுறுத்திய இந்திய உபகண்டத்தின் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் தொலைநோக்கை அது எடுத்துக்காட்டுகின்றது.

தென் ஆசியாவிலும், பால்கன்கள் அல்லது ஆப்பிரிக்காவினைக் காட்டிலும் தேசிய இன-இனக்கூறு குழுக்கள் சிக்கல்களில் இருந்து விடுபட்டு, தேசிய இன அரசை எல்லைகளுக்கு ஏற்புடையவனவாக ஆக்க முடியாது. இப்படியான ஒரு முயற்சி பிரிவினைக் கோரிக்கைகளுக்கான முடிவடையாத கோரிக்கைகளுக்கு கதவை திறந்துவிடும். அதுமட்டுமின்றி இவை ஏகாதிபத்திய வல்லரசுகளால் சூழ்ச்சித் திறனுடன் கையாளப்பட்டு, இரத்தக் களரிகளுக்கு இசைவு அளிப்பதில் முடியும்.

தேசிய ஒடுக்குதலுக்கும் மற்றும் உராய்வுகளுக்குமான ஒரு ஜனநாயக மற்றும் நிலையாக நிலைத்து நிற்கக்கூடிய தீர்வை, ஒரு உயர்ந்த சமூக அமைப்பிற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, முதலாளித்துவத்தையும் மற்றும் அது வரலாற்று ரீதியாக வேரூன்றியுள்ள தேசிய இன அரசு அமைப்பையும் ஒழித்துக் கட்டுவதன் மூலம் அடைய முடியும்.

வரலாற்று ரீதியான தேசிய இயக்கங்கள் அழுகிக் கெடுதலும், பிரிவினைவாத இயக்கங்களின் புதிய அலை ஒன்று மேல் எழுதலும் அரசியல் பொருளாதாரத்தில் ஏற்படும் பிரதான மாற்றங்களில் வேரூன்றி உள்ளன.

உற்பத்திமுறை பூகோள ரீதியாக ஒன்றிணைக்கப்பட்டது, காலங்கடந்த முதலாளித்துவ வளர்ச்சி கொண்ட நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவ வர்க்கத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான மோதுதலின் கீழ் தவிர்க்க முடியாது இருந்த பொருளாதாரத் தேவையை அடியிலிருந்து துண்டித்து விட்டது. தேசிய அரசின் பரிமாணத்தினுள் உற்பத்தி மூலதனம் தொடர்ந்தும் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் வரை தேசிய அரசை தனது அரசியல் பிடியின் கீழ் வைத்திருப்பது, மேல் எழுந்த தேசிய முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஏகாதிபத்தியத்தின் அழுத்தங்களை எதிர்த்து நிற்பதற்கு ஒரு முக்கிய சாதனமாக அமைந்தது. இதன்மூலம் அது உள்நாட்டு சந்தையின் மேல் அதன் கட்டுப்பாட்டினை நிலைநாட்ட முடிந்தது. பூகோளமயம் தேசிய சந்தைகளின் முக்கியத்துவத்தை வீழ்ச்சி அடையச் செய்தது. இருந்தபொழுதிலு:ம இந்தியாவிலிருந்து

மெக்சிகோ மற்றும் அர்ஜெண்டினா வரையிலான தேசிய முதலாளித்துவ ஆட்சிகளை அவற்றின் மரபுரீதியான தேசிய பொருளாதார மூல உபாயங்களை கைவிடச் செய்துள்ளது. இன்று பல்வேறு தேசிய முதலாளித்துவ ஆட்சிகள் தமது நலன்களை அடைவதற்கு சர்வதேச மூலதனம் தமது நாட்டின் மனித மற்றும் இயற்கை வளங்களை சுரண்ட, உள்ள தடைகள் அனைத்தையும் அகற்றி வருகின்றன.

மரபுரீதியான முதலாளித்துவ தேசிய இயக்கங்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு போலி பகட்டுக்களை புதிய பூகோள பொருளாதார உறவுகள் தகர்த்துள்ள நிலை, புதியவகை தேசிய இயக்கங்கள் தோன்றுவதற்கான புறநிலைரீதியான அடித்தளத்தை கொடுத்துள்ளன. இந்த புதுவகை தேசிய இயக்கங்கள், நிலவும் அரசுகளை துண்டு போட்டு பிராந்தியங்களை அடித்தளமாக கொண்டுள்ள மேல் தட்டினர் தமது சொந்த உறவுகளை சர்வதேச மூலதனத்துடன் நிலைநாட்ட விழைகின்றனர். இது ஏனைய ஏகாதிபத்தியத்தினால் ஒடுக்கப்படும் நாடுகளுக்கு மட்டும் உண்மையானதாக அமைந்துவிடவில்லை. பழம்பெரும், முதலாளித்துவ தேசிய இன அரசுகளில் கனடா, இத்தாலி மற்றம் பிரிட்டன் உள்பட கணிசமானவற்றில் பிரிவினைவாத இயக்கங்கள் தோன்றி உள்ளன.

''இந்தியா மற்றும் சீனாவில் தேசிய இயக்கம் ஏகாதிபத்தித்திற்கு எதிராக ஒரு பொதுவான போராட்டத்தில் வேறுபட்ட மக்களை ஐக்கியப்படுத்தும் பணியை தன் முன்வைத்தது. இந்தப் பணி தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் தலைமையின் கீழ் அடையமுடியாத ஒன்று என்பது நிரூபிக்கப்பட்டது'' என்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழு அதன் அண்மைய அறிக்கை ஒன்றில் எழுதி உள்ளது. இந்த புதிய வடிவத்திலான தேசியவாத, இனக்குழு, மொழிவாரி மற்றும் மதரீதியான அடிப்படைகளில் பிரிவினைவாதத்தை உள்நாட்டு சுரண்டல் வாதிகளின் நலனுக்காக வளர்க்கின்றது. இப்படியான இயக்கங்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்துடன் எந்தவித சம்பந்தமும் இல்லாதவையாகும். அதோடு அவை ஒடுக்கப்பட்ட பரந்த மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை தம்முள் உள்ளடக்கவில்லை. அவை தொழிலாள வர்க்கத்தை பிரிக்கவும் வர்க்கப் போராட்டத்தை இனக்குழு மற்றும் வகுப்புவாத யுத்தமாக திசைதிருப்பிவிடவும் பயன்படுகின்றன. (பூகோளமயமும் சர்வதேச தொழிலாள வர்க்கமும் - ஒரு மார்க்சிச ஆய்வு, பக்கம் 109)

தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாறு

கடந்த கால் நூற்றாண்டினில் தமிழரசு கட்சியினதும் மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினதும் சட்டரீதியான அரசியலுக்கு மாற்றீடாக தோன்றிய தமிழ் தேசியவாத மிதவாத குழுக்கள் ஈழத்தமிழர்களை தேசிய ஒடுக்குதலிலிருந்து விடுதலை செய்யவோ, தமிழ் பரந்த மக்களின் கொழுந்து விட்டெரியும் 'சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வை அளிக்கவோ, அவர்களுக்குள்ள உள்ளார்ந்த ரீதியான ஆற்றலின்மையை நிரூபித்துள்ளன.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி.), தமிழ் ஈழ விடுதலை இயக்கம், (டெலோ), தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்கழகம், (பிளாட்), மற்றும் த.ஈ.வி.பு.க்கு போட்டியான மற்றைய தேசிய குழுக்களும் ஒட்டுமொத்தமாக ஸ்ரீலங்கா அரசுடனும் முதலாளித்துவ வர்க்கத்திடமும் தம்மை முற்றாக அர்ப்பணித்துள்ளன. இன்று அவை ஸ்ரீலங்கா பாதுகாப்பு படைகளின் துணைப் படைகளாக, வடக்கிலும், கிழக்கிலும் உள்ள தமிழர்களை கொழும்பின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வர நடக்கும் போராட்த்தில் செயல்பட்டு வருகின்றன.

இதே நேரத்தில் த.ஈ.வி.பு. தமிழர்களின் சுயநிர்ணயம் பற்றி எவ்வளவுதான் முழக்கமிட்டாலும், தொடர்ந்தும் அதன் போராட்டத்தை சிங்கள முதலாளித்துவ வர்க்கத்தின் பகுதியுடனும் இந்திய அரசாங்கத்துடனும் ஏகாதிபத்திய வல்லரசுடனும் ஏய்ப்பு ஆட்டம் ஆடுவதில் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. த.ஈ.வி.புலி இயக்கத்தின் தலைவரான பிரபாகரன், அவர் இந்திய ஸ்ரீலங்கா உடன்பாட்டில் ஏமாற்றப்பட்டு கையெழுத்து போட்டார் என்க்கூறி பத்து வருடங்களுக்கு பின்னரும், த.ஈ.வி.பு. இன்றும் டில்லியில் உள்ள ஆட்சி தமிழர்களின் விடுதலையாளன் ஆக முடியும் என்று கருதி வருவதுடன், தென்ஆசியாவின் பிராந்திய வல்லரசாக இந்திய முதலாளித்துவ வர்க்கம் கூறிவருதலை த.ஈ.வி.பு. எப்பொழுதும் உயர்த்திப் பிடிக்க முயன்று வந்துள்ளது. ஒருகாலத்தில் ''சோசலிசம்'' என்ற போர்வையின்கீழ் த.ஈ.வி.பு. ஒரு தேசிய பொருளாதார மூலோபாயத்தை முன்வைத்து வந்தது. ஆனால், இன்று அது பொருளாதார புலிகள் என்று அழைக்கப்படும், தென் ஆசிய நாடுகளுடன் போட்டியிடும் வகையில் சுதந்திர தமிழ் ஈழம் முதலீட்டாளர்களுக்கு மலிவான கூலியை பெறும் புகலிடமாக ஆகுமென்று வாதிட்டு வருகின்றது. த.ஈ.வி.பு. செல்வந்த முதலாளிகளின்மேல் நிதி ரீதியாக தங்கியிருப்பது, தவிர்க்க முடியாது அதன் காரியாளர்களின் தியாகங்களை ஏளனம் செய்யும் அரசியல் உறவுகளுக்கு இட்டுச் செல்கின்றது. 1994ல் இன்றைய பொ.ஜ.மு. ஆட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவதை த.ஈ.வி.பு. ஆதரித்தது. இன்று அது தமிழ் ஸ்ரீலங்கா மோதுதலினால் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழுள்ள ஐக்கிய நாடுகள் சபையை இழுத்து சேர்த்துக் கொள்வதன் மூலம் சர்வதேசியமயமாக்க முடியும் என்று எதிர்பார்க்கின்றது.

சிங்கள பரந்த மக்களைப் பொறுத்தவரை த.ஈ.வி.பு. என்பது அவர்களுக்கு எதிரான இகழ்ச்சியும், பகைமையும் தவிர வேறு எதுவுமில்லை. அது சிங்கள தொழிலாளர்களுக்கு எதிராகவும் தெற்கிலுள்ள சாதாரண மக்களுக்கு எதிராகவும் குண்டுகள் வைப்பதிலும், ஆயுத தாக்குதல் தொடுப்பதிலும் மேலும் மேலும் கூடுதலாக ஈடுபட்டு வருகின்றது. இப்படியான அடாவடியான பயங்கரவாத செயல்கள் சிங்கள இனவெறியை பலப்படுத்தி தமிழ் மக்களின் போராட்டத்தை இனக்குழு - வகுப்புவாத முறைகளில் வடிவமைத்து, ஸ்ரீலங்கா முதலாளித்துவ வர்க்கத்தின் குற்றங்களுக்காக ஒடுக்கப்படும் சிங்களவர்களை பழிவாங்குகின்றது.

அண்மைய வருடங்களில் 1996ல் யாழ்ப்பாணத்தின் மேல் அது வைத்திருந்த கட்டுப்பாட்டை இழந்தது உட்பட கணிசமான ராணுவ பின்னடைவுகளுக்கு த.ஈ.வி.பு. உள்ளாக்கப்பட்டுள்ளது. ஆனால் பொது ஜன முன்னணி ஆட்சியின் நெருக்கடி நிலையின் உள்ளும் தெற்கில் புத்தத்திற்கு எதிராக வளர்ந்து வரும் பரந்துபட்ட பகைமை நிலைமகளிலுள்ளும் மீண்டும் த.ஈ.வி.பு. எதிர்த்தாக்குதலை தொடுக்கக் கூடிய ஆற்றலை அடையும் என்பது அநேகமாக சாத்தியமாகும். புதிய ராணுவ வெற்றிகள் த.ஈ.வி.பு. தலைமையை சர்வதேச ரீதியாக அங்கீகாரத்தை அது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு தவிர்க்க முடியாது இட்டுச் செல்லும். அதாவது உலக வல்லரசுகள் தமிழ் தேசிய இன அரசை சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற த.ஈ.வி.பு.வின் நிர்பந்தமும், நிலவும் அரச அமைப்பு முறையை ஸ்திரம் இழக்க செய்யும் தாக்கத்தைக் கண்டு அஞ்சும் ஏகாதிபத்திய வல்லரசிடமிருந்து பேரம்பேசும் மேசைக்கு த.ஈ.வி.பு. வரவேண்டும் என்ற அழைப்பிற்கும் உடன்பட இட்டுச் செல்லும்.

தமிழ் ஈழக் கோரிக்கை எப்படி அடையப்படும் என்பதை 1987ம் ஆண்டு இந்திய ஸ்ரீலங்கா உடன்பாடு முன்கூட்டியே எடுத்துக்காட்டிற்று. ஐக்கிய அமெரிக்க அரசுகள், பிரிட்டன் மற்றும் ஏகாதிபத்திய வல்லரசுகளும் இந்திய முதலாளித்துவ வர்க்கமும் ''சமாதான'' மாநாடு ஒன்றைக் கூட்டி தமிழ் அரசு ஒன்றை கூறுபோடுவதை மேற்பார்வை செய்யும். அப்படி ஒரு உடன்பாட்டிற்கு அவை தமது ஆசிர்வாதத்தை வழங்க கொழும்பு மற்றம் த.ஈ.வி.பு. தலைமையிடம் பொருளாதார மற்றும் பூகோள அரசியல் உத்தரவாதங்களை பிழிந்தெடுக்கும் அதே வேளையில், இந்த இரு அரசுகளிலுள்ளும் அதிகாரத்திற்கும் செல்வாக்கிற்கும் ஒருவரை ஒருவர் தம்முன் நெருக்கித்தள்ளிக் கொண்டு முன்னேற முயற்சிப்பர்.

தவிர்க்க முடியாது புதிய எல்லைகளை வரைவதும் தீவின் சொத்துக்களையும், வளங்களையும் பங்குபோடுவதும் மேலும் முறுகியிருக்கும் தமிழ் சிங்கள உறவுகளை மேலும் மூட்டிவிடும். இந்த முறுக்கேற்றிய நிலைமைகளை ஏகாதிபத்தியம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். இந்த முடிவின் விளைபயன் இந்த ஒவ்வொரு அரசும் தேசியவாத மற்றும் வகுப்புவாத தழும்புகள் நிறைந்த ராணுவ மயமாக்கப்பட்ட போட்டி அரசுகளாக இருக்கும். த.ஈ.வி.பு. இந்து கற்பனை பழங்கதைகளை உச்சாடனம் செய்வதும், இந்துக்கள் அல்லாதவர்களுக்கு எதிராக நேரடியான பலாத்காரத்தில் ஈடுபடுவதும், தமிழ் பேசும் முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் பிரமாண்டமான அளவில் ஏற்கனவே அன்னியப்படுத்திவிட்டது. இது பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் இன்று பொது ஜன முன்னணியுடன் கூட்டுச்சேர்ந்துள்ள முஸ்லிம்களுக்கு தனி அரசு உருவாக்க வேண்டும் என்று கூறும் முதலாளித்துவ பிரிவினைவாத கட்சியின் வளர்ச்சிக்கு தீனிபோட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்றும் இருக்கும் முஸ்லிம்கள் மற்றும் சிங்களம் பேசுபவர்கள் யார் என்றால் ஸ்ரீலங்கா ராணுவத்தில் உள்ளவர்கள் மட்டுமே. த.ஈ.வி.பு. அதன் தமிழரசை கூறுபோடுவதில் வெற்றிகாணுமாயின், சிங்கள இன வெறியர்கள் தமது பங்காக தெற்கில் உள்ள தமிழ் சிறுபான்மையினரை ஸ்ரீலங்கா முதலாத்துவ வர்க்கத்தின் யுத்தக் கொள்கையின் பொறிவிற்கு பலிகடாவாக்கி அவர்களைப் பழி வாங்குவார்கள்.

இது வெறும் ஊகத்திற்கான விசயமல்ல கடந்த அரை நூற்றாண்டு காலத்தினுள் முதலாளித்துவ ''விடுதலை'' இயக்கங்களின் தலைவர்கள் தமது கெரில்லாப்போர் உடைகளைக் களைந்து விட்டு, வணிக கனவான்களின் உடைகளை உடுத்திக் கொண்டு, ஏகாதிபத்தியம் தரகு செய்த உடன்படிக்கைகளை ஏற்றுள்ளதைத் தொழிலாள வர்க்கமும், ஒடுக்கப்படும் மக்களும் பார்த்துள்ளார்கள். இந்த உடன்படிக்கைகள் மூலம் அவர்கள் அரசியல் அதிகாரத்தில் ஒரு பங்கிற்காக ஏகாதிபத்திய முதலீட்டிற்கும், நலன்களுக்கும் உத்தரவாதம் தருபவர்களாக மாறியுள்ளார்கள். 1990ம் ஆண்டுகளில் ஏற்பட்ட இந்த நிகழ்வுப் போக்கின் மிகச் சிறந்த உதாரணங்கள்தான், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், சின்பின் ஐரிஸ் குடியரசு இராணுவம் மற்றும் பாலஸ்தீன விடுதலை இயக்கமாகும்.

த.ஈ.வி.பு. அதன் வேலைத் திட்டத்தை அடைய இப்படி அல்லாத மாற்று மாற்று உதாரணம் ஒன்றை எடுத்துக்கூறும்படி சவால்விடுகின்றோம். தமிழ் ஈழ அரசு ஒன்றுக்கு சர்வதேச அங்கீகாரம் பெறுவதைவிட பெரிய ஒரு அபிலாஷை த.ஈ.வி.பு. தலைமைக்கு இல்லை என்பது உண்மையல்லவா? சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தை திரட்டுவதை அடிப்படையாகக் கொண்ட முன்னோக்கிற்குக் குரோதமான த.ஈ.வி.பு., ஸ்ரீலங்கா மற்றும் சர்வதேச முதலாளித்துவ வர்க்கத்துடன் புதியதொரு உறவினை அடைவதற்கான ஒரு வழிமுறை அல்லவா அது நடத்தும் ஆயுதப் போராட்டம்?

பல அம்சங்களில் த.ஈ.வி.பு.வின் நீடித்த ஆயுதப் போராட்டம் மற்றும் கசப்பான பின்னடைவுகளும் நெருக்கமாக பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினை ஒத்ததாக இருக்கின்றது. பாலஸ்தீன விடுதலை இயக்கம் பலத்த ஜனரஞ்சக ஆதரவை அனுபவித்திருந்ததோடு அது வீரஞ்செறிந்த தியாகங்களுடன் சம்மந்தப்பட்டிருந்தது. ஆனால் அதன் அரசியல், எப்பொழுதும் முதலாளித்துவ தேசிய இயக்கத்தின்

அரசியலாகவே இருந்தது. அதன் மிகப்பெரும் அச்சம் தேசிய விடுதலைப் பேராட்டம் அதன் கட்டுப்பாட்டில் இருந்து தப்பி, எல்லாவகை ஒடுக்குதலையும் சுரண்டலையும் வேரோடு அகற்றும் இலக்கைக் கொண்ட சோசலிசப் போராட்டத்துடன் ஒன்றாய் இணைந்துவிடும் என்பதேயாகும். அது ஓஸ்லோ ''சமாதான'' உடன்படிக்கைக்குச் சென்றது இரண்டு காரணிகளால் நிர்ணயிக்கப்பட்டது. அவை இண்ட்டிபாடாவின் வளரும் போர்க்குணத்தினால் ஏற்பட்ட அச்சமும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் மற்றும் பல்வேறு முதலாளித்துவ அரபு ஆட்சிகளுக்கும் ஏகாதிபத்திய அழுத்தத்திற்கு சமன் செய்யும் சாதனமாக இருந்த சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் வீழ்ச்சியுமாகும். கடந்த காலத்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைமை அனைத்து வகையான ஏகாதிபத்திய எதிர்ப்பு அறிக்கைகளையும் வெளியிட்டு வந்துள்ளது. இன்று அதன் பாலஸ்தீன ஆட்சியகம், முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு சிறிய தட்டினரின் உடைமைகளையும் மற்றும் இலாபங்களையும் பாதுகாத்து வருகின்றது. அதே நேரத்தில் அது பரந்த கிளர்ச்சி எழுச்சிகளை அடக்க அமெரிக்க சி.ஐ.ஏ.யுடனும் மற்றும் சியோனிச அரசுடனும் உள் ஆளாக செயற்பட்டு வருகிறது.

த.ஈ.வி.பு. தலைமையின் ஆதரவின்கீழ் உருவாக்கப்படும் தமிழ் ஈழம் எப்படி அதிக முற்போக்கானதாகவும் அல்லது வேறு எந்தவொரு வழியிலாவது காசாவிலும் மற்றும் மேற்குக் கரையிலும் நிறுவப்பட்ட பாலஸ்தீன ஆட்சியகத்தின் கீழான பரந்த மக்களின் நிலைமைகளைக் காட்டிலும் மேம்பாடுடையதாக இருக்கும் என்றும் விளக்கும்படி த.ஈ.வி.பு. தலைமைக்கு நாம் சவால் விடுக்கின்றோம்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிந்து சென்று தீவில் இரண்டாவது முதலாளித்துவ அரசு ஒன்றை நிறுவுவதன் மூலம் ஸ்ரீலங்காவிலும் ஈழத்திலும் உள்ள தமிழர்கள் மற்றும் சிங்களவர்களின் சகவாழ்வு பற்றிய பிரச்சனைக்கு எப்படியொரு நிஜமான ஜனநாயக தீர்வுக்கான அடிப்படையை தர முடியும்? தமிழ் ஈழத்தின் அதிகப்படியான பெரும்பாண்மையான குடிமக்களாக இருக்கக் கூடிய தமிழ் தொழிலாளர்களின் சமூக பிரச்சனைகளுக்கு எப்படி தமிழ் ஈழத்தை நிறுவுவதன் மூலம் அவற்றை வெல்லுவதற்கான ஒரு அடித்தளத்தை உருவாக்க முடியும்? தொழிலாளர்களின் ஊதியங்கள் உயர்த்தப்படுமா? உலக பண்ட சந்தைகளில் விவசாயிகள் தமது உற்பத்தி பொருட்களுக்கு உயர்ந்த விலைகளைப் பெறுவார்களா? பரந்த மக்களின் சமூக மற்றும் கலாச்சார மட்டங்கள் உயர்த்தப்படுமா?

ஆசிய பொருளாதார ''அதிசயத்''தின் சரிவுடன் ஒரு சின்னஞ்சிறு வலிமைமிக்க அரசின் வளர்ச்சிக்கான வாய்ப்புவளம் மேலும் மங்கலாக வளர்ந்துள்ளது. உலக முதலாளித்துவ பொருளாதாரத் தாழ்வின் தாக்கம் பரந்த மக்களின் வாழ்வு நிலைகளில் ஏற்படுத்தும் விளைபயன்களை எதிர்கொண்டு போராட எந்த ஒரு வேலைத்திட்டமும் அதனிடம் இல்லாதது மட்டுமல்லாது, த.ஈ.வி.பு. கிழக்கு ஆசிய வளர்ச்சி முன்மாதிரியை அரவணைத்துள்ளது.

இந்தக் கேள்விகளை கிளப்புவது த.ஈ.வி.பு. காரியாளர்களின் சுயதியாகத்தை மறுப்பதற்காக அல்ல. இதற்கு மாறாக, நமது நோக்கம் அரசியல் வேலைத்திட்டங்களதும் மற்றும் வர்க்க உறவுகளினதும் தாக்கத்தை சுட்டிக்காட்டுவதற்கேயாகும். த.ஈ.வி.பு. தலைமை ஒட்டு மொத்த தமிழ் மக்களின் சார்பில் பேசுவதாக உரிமை கொண்டாடிய பொழுதும், அதன் வேலைத்திட்ட வரலாறு மற்றும் உள்ளமைவு காரணமாக அது, ஏகாதிபத்தியத்துடன் இணைக்கப்பட்டு அதற்கு அடிவருடியாக இருக்கும் தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு அரசியல் கருவியாக உள்ளது.

த.ஈ.வி.பு. காரியாளர்களின் இக்கட்டான நிலை பற்றிய அனுதாபம், கூறவேண்டியவற்றை கூறாமல் விடுவதற்கு ஒரு சாக்காக அமையக்கூடாது. த.ஈ.வி.பு. தமிழ் பரந்துபட்ட மக்களை ஒரு முட்டுச்சந்தினுள் இட்டுச் சென்றுள்ளது.

முன்னேற வழி

சிங்கள தேசியவாதத்திற்கு இலங்கை சமசமாஜகட்சி சரணாகதி அடைந்தபொழுதும் முதலாளித்துவ தேசியவாதமுட்டுச் சந்திலிருந்து வெளியேற வழிகாட்டும் ஒரேயொரு முன்னோக்கு, சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்னோக்காகும். தமிழ் மற்றும் ஸ்ரீலங்கா தொழிலாளர்களின் தலைமையின்கீழ் தமிழ் தேசிய போராட்டமானது. தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சிக்கு எதிராக அனைத்து ஒடுக்கப்படுவோரையும் அணிதிரட்டும் போராட்டத்துடன் ஒன்றாக்கப்படவேண்டும். ஜனநாயகப் புரட்சியின் மற்றைய தீர்வுகாணப்பெறாத பணிகள் அனைத்தையும்போல, புரட்சிகர தொழிலாளர்களின் மற்றம் விவசாயிகளின் அரசாங்கத்தை சோசலிச உலகிற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக தொடுக்கும் நடவடிக்கை மூலம்தான் தேசிய ஒடுக்குதலை துடைத்துக்கட்ட முடியும். ஸ்தூலமாக தமிழர்களுக்கு எதிராக வடக்கிலும், கிழக்கிலும் ஸ்ரீலங்கா அரசு தொடுத்து வரும் யுத்தத்தை தயக்கமற்று உறுதியாக எதிர்ப்பதாகும். அதே நேரத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை அகற்றவும் சிங்களவர்களுக்கு மற்றும் சிங்களம் பேசுபவர்களுக்கு உள்ள சலுகைகள் அனைத்தையும் ஒழித்து, ஈழம்-ஸ்ரீலங்கா ஐக்கிய சோசலிச அரசுகளின் பதாகையை உயர்த்துவதாகும். இந்த போராட்டத்தின் வெற்றியின் உயிர்நாடி 1947-48ல் நிறுவப்பட்ட பிற்போக்கு அரசியல் அமைப்பிற்கு எதிராக இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், ஸ்ரீலங்கா, மற்றும் ஈழத்து பரந்த மக்களை கூட்டாக அணிதிரட்டி, தென் ஆசியாவில் சோசலிச ஐக்கிய அரசுகளுக்கான போராட்டத்தைத் தொடுப்பதாகும்.

சோ.ச.க.யும் அதன் முன்னயை புரட்சி கம்யூனிஸ்ட் கழகமும் இலங்கை சமசமாஜ கட்சியின் சிங்கள தேசியவாதத்திற்கும் இனவெறிக்கும் எதிராக தோன்றிய பாட்டாளி வர்க்க சர்வதேசிய அரசியல் போக்கில் அவற்றின் தோற்றுவாயைக் கொண்டுள்ளன. முப்பது வருடங்களுக்கும் மேலாக சோ.ச.க.வும் புரட்சி கம்யூனிஸ்ட் கழகமும், இலங்கை சமசமாஜ கட்சியின் காட்டிக்கொடுப்பு தொழிலாளவர்க்கம் தலைமை கொடுக்கும் ஒடுக்கப்படுவோரின் இயக்கம் ஒன்று தோன்றுவதற்கு எதிராக உருவாக்கிய தடைகளை வெல்லுவதற்காக போராடி வந்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக அவை தமிழர்களுக்கும் தெற்கிலுள்ள தொழிலாள வர்க்கத்திற்கும் இடையில் ஏற்பட்ட நட்பு முறிவை வெல்லவும், ஜனதா விமுக்தி பெரமுனையின் (J.V.P.) குட்டி முதலாளித்துவ இனவெறி அரசியலை எதிர்த்துப் போராடியும் வந்துள்ளன. தொழிலாளவர்க்கம் தமிழ் பரந்த மக்களின் கண்களில் அவர்களின் விடுதலையின் உண்மையான பிரதிநிதியாகத் தோன்ற கதவைத்திறந்து விட்டுள்ள புறநிலையான நிலைமைகள் உலக அளவிலும் மற்றும் தீவிலும் இன்று வியக்கத்தகு முறையில் இடம் பெறுகின்றன.

கிழக்கு ஆசிய பொருளாதார சரிவை இன்று சர்வதேச முதலாளித்துவ வர்க்கம் உலக முதலாளித்துவத்தின் அமைப்பு ரீதியான நெருக்கடியை விட எவ்வகையிலும் குறைவானது அல்ல என்று ஒத்துக்கொள்ளுகின்றது. இது சர்வதேச பாட்டாளி வர்க்கம் மீண்டும் மூலதனத்தின் எதிரியாக அரங்கில் தோன்ற முன்னறிவிக்கின்றது. இந்த மீண்டும் தோன்றலானது அடிப்படை ரீதியாக உலக அரசியலை குறிப்பாக ஆசியாவில் உருமாற்றும். கடந்த முப்பது ஆண்டுகளில் ஆசியாவில் தொழிலாள வர்க்கத்தின் எண்ணிக்கை அளவும் மற்றும் அதன் வீத எடையும் பெருமளவு எடுத்துக்கூறும் அளவிற்கு வளர்ந்துள்ளன.

பூகோளமயமும் சோவியத் அதிகாரத்துவத்தின் வீழ்ச்சியும், காலங்கடந்து முதலாளித்துவம் வளர்ச்சிகண்ட நாடுகளிலுள்ள தேசிய முதலாளித்துவ வர்க்கங்களை மேலும் மேலும் தம்மை ஏகாதிபத்தியத்தின் கூட்டாளியாகவும் முகவனாகவும் வெளிப்படுத்த நிர்பந்தித்து வருகின்றது.

சோ.ச.க. நடத்திய பாதுகாப்பு பிரச்சார இயக்கத்திற்குப் பின், தெற்கிலுள்ள தமிழர்களிடமிருந்தும் அதேபோல குடிபெயர்ந்த தமிழ் சமூகங்களில் உள்ளவர்களிடமிருந்தும் கொடுக்கப்பட்ட பரந்துபட்ட ஆதரவு த.ஈ.வி.பு.விற்கான ஆதரவில் ஏற்பட்டிருக்கும் கூர்மையான சரிவை சுட்டிக் காட்டுவதுடன், மாற்று முன்னோக்குப்பற்றி வளர்ந்துவரும் அக்கறையையும் எடுத்துக்காட்டுகின்றது. உண்மையில் சோ.ச.க. உறுப்பினர்மேல் நடத்தப்பட கைதுகளின் அலை த.ஈ.வி.பு. நடத்திய முந்தித்தாக்குதலின் தன்மையைக் கொண்டுள்ளது.

சோ.ச.க. எதிர்வரும் வாரங்களிலும் மாதங்களிலும் சிங்கள மற்றும் தமிழ் பரந்த மக்களை த.ஈ.வி.பு.வின் பிரிவினைவாத முதலாளித்துவ சார்பு வேலைத்திட்டத்திற்கு மாற்றீடான சோசலிச-சர்வதேசிய மாற்றீடு கொண்டு ஆயுதபாணியாக்கும் தனது போராட்டத்தை உக்கிரப்படுத்தும்.

த.ஈ.வி.பு.வையும் சோ.ச.க.வையும் எட்டிப்பிடிக்க முடியாத வேறுபாடு பிரிக்கின்றது. இருந்தபொழுதிலும் இந்த அறிக்கையை நாம் தமிழ் போராளிகளுடன் ஒரு உரையாடலை வளர்க்க உதவும் என்ற நம்பிக்கையின் ஒரு பகுதியாக வெளியிடுகின்றோம். நாம் த.ஈ.வி.பு.வின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரதேசங்களில் இராணுவக் காரணங்களினால் அரசியல் விவாதம் அடக்கப்பட வேண்டும் என்ற த.ஈ.வி.பு.வின் வாதத்தை நிராகரிக்கின்றோம். இதற்கு மாறாக அப்படியான ஒரு அரசியல் விவாதம் தேசிய ஒடுக்குதலுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டத்திற்கு பலம்சேர்க்கும். எப்படி என்றால், தொழிலாளவர்க்க தலைமையின்கீழ் ஸ்ரீலங்காவினதும், ஈழத்தினதும் தமிழ் பரந்துபட்ட மக்களை புதிய அரசியல் அச்சாணி ஒன்றை கண்டுகொள்ள வகைசெய்வதன் மூலமாகும்.