World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Sri Lankan president relies on trade union leaders for support

இலங்கை ஜனாதிபதி தொழிற்சங்கத் தலைவர்களின் ஆதரவில் நம்பிக்கை

By Dianne Sturgess
22 May 2000

Use this version to print

இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க6 அமைச்சரவை அமைச்சர்களுடன்சேர்ந்து தனது அரசாங்கத்தின் அடக்குமுறைஅவசரகால நடவடிக்கைகளுக்கும்தமிழீழ பிரிவினைவாதிகளுக்கு எதிராக இடம்பெற்று வரும் யுத்தத்துக்கும் ஆதரவுதரும்படி கோரும் முன்னொருபோதும்இடம்பெறாத வகையில் ஒரு கூட்டத்தைமே 16ம் திகதி மாலை நாட்டின் தொழிற்சங்கத்தலைவர்களுடன் நடாத்தினார்.

தமிழீழவிடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஒரு தொகை படுமோசமான இராணுவத் தோல்விகள் ஏற்பட்டதைத்தொடர்ந்து ஒரு ஐக்கிய அரசியல் முன்னணியைஉருவாக்கும் ஒரு முயற்சியாக அனைத்துகட்சி கூட்டத்தை நாடாத்திய ஒரு நாளின்பின்னர் ஜனாதிபதி குமாரதுங்க தொழிற்சங்கத்தலைவர்களை அலரிமாளிகைக்கு அழைத்தார்.

அரசாங்கச் சார்பு 'டெயிலி நியூஸ்' பத்திரிகையின்படிகுமாரதுங்கவும் அவரின் அமைச்சர்களும்50 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 84பிரதிநிதிகளுக்கு வடக்கில் உருவாகியுள்ள இராணுவநிலைமையைப் பற்றி விளக்கி கூறியதோடுயுத்த நடவடிக்கைகளில் அவர்களின் நேரடிபங்காற்றலையும் வேண்டி நின்றனர்.

இந்தக் கூட்டத்தில் ஆளும் பொதுஜனமுன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ளசகல கட்சிகளையும்- ஸ்ராலினிச கம்யூனிஸ்ட்கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி உட்பட-சேர்ந்த தொழிற்சங்கங்கள் மட்டுமன்றிஎதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி,ஜே.வீ.பி. தலைமையிலான தொழிற்சங்கங்களும்'இடதுசாரி' தலைமையிலான தொழிற்சங்கங்களான இலங்கை வர்த்தக ஊழியர் சங்கம் (CMU), இலங்கை வங்கி ஊழியர் சங்கம்போன்றவையும் கலந்து கொண்டன.இலங்கை மத்திய வங்கி ஊழியர் சங்கத்துக்கும்நவசமசமாஜக் கட்சி தலைமையிலானதொழிற்சங்கங்களுக்கும் மட்டும் அழைப்புகிடைக்கவில்லை.

கூட்ட ஒழுங்கமைப்பாளரான அமைச்சர் அலவி மெளலானா, இக்கூட்டத்தில்கலந்து கொள்ள உடன்பட்டு வருகைதந்த சகலரையும் பெரும் ஆரவாரத்துடன்வரவேற்றார். 'டெயிலி நியூஸ்' பத்திரிகை இதைப்பற்றிக் கூறுகையில் குறிப்பிட்டதாவது: "அமைச்சர்மெளலானா இக்கூட்டத்தை ஒரு முக்கியதிருப்பமாக வருணித்தார். சுதந்திர இலங்கையின்வரலாற்றில் அனைத்து பெரும் தொழிற்சங்கங்களும் அரசின் தலைவியை முதற்தடவையாகச்சந்தித்தினர்" என்றது.

மாகாண சபைகள்,உள்ளூராட்சி சபைகளின் அமைச்சராகவும்செயற்படும் அலவி மெளலானா, குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொண்டுள்ள தொழிற்சங்கங்களின் தலைவராகவும் தொழிற்சங்க கூட்டு சம்மேளன அதிபராகவும் செயலாற்றுகின்றார். இந்தக் கூட்டத்தில்கலந்து கொண்ட ஏனைய அமைச்சர்களுள்பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்தரத்வத்த, பீ.எம். ஜயரத்ன, தர்மசிரி சேனாநாயக, மங்கள சமரவீர, சீ.வீ.குணரத்னவும் அடங்குவர்.

மெளலானா 'டெயிலி நியூஸ்' பத்திரிகைக்குஅளித்த பேட்டியில் குமாரதுங்க "இன்றையயுத்த நிலைமையைக் கையாள அனைத்துதொழிற்சங்கங்களதும் பூரண ஒத்துழைப்பைவேண்டினார். தொழிற்சங்கங்கள் தமதுசேவையை கிராம மட்டத்தில் சோதனைச்சாவடிகளை நிர்வகித்தல், ஆஸ்பத்திரிகளின்உணவு விநியோகம் முதலான நடவடிக்கைகளில்சுயேச்சையாக ஈடுபட முடியும் எனத்தெரிவித்தன".

ஏனைய அறிக்கைகளின்படிகுமாரதுங்க "விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் வரை" யுத்தத்தை முன்னெடுக்கும்தமது அரசாங்கத்தின் திட்டத்தை விளக்கினார்."அவர் வேலைத்தளங்களில் "சிவிலியன் பாதுகாப்புகமிட்டிகளை" அமைக்கும் நடவடிக்கையில்உதவுமாறு தொழிற்சங்கங்களை வேண்டிக்கொண்டதோடு யுத்த நடவடிக்கைகளுக்கான வேறு சிபார்சுகளையும் வேண்டினார்."நிலைமை வழமைக்கு திரும்பும்" வரைதொழிற்சங்கத் தலைவர்கள் எதுவிதமானவேலை நிறுத்தங்களையோ அல்லதுதொழிற்துறை நடிவடிக்கைகளையோஅனுமதிக்க கூடாது என வலியுறுத்தினார்.

மே 22ல் முக்கிய இராணுவத் தளமானஆனையிறவில் இராணுவம் தோல்வி கண்டதன்பின்னர் அரசாங்கம் முழு அளவிலான செய்திதணிக்கையை திணித்தது. வேலை நிறுத்தங்களைதடை செய்தது. அரசியல் கூட்டங்களையும்ஊர்வலங்களையும், மறியல் போராட்டங்களையும் கூட தடை செய்தது. துண்டுப் பிரசுரங்கள்சுவரொட்டிகள் விநியோகம் கூட தடைசெய்யப்பட்டுள்ளது. இன்று எந்த ஒருஅடிப்படை அரசியல் அல்லது கைத்தொழில்நடவடிக்கைக்காக வாதிடுவதும் கூடஒரு குற்றம் ஆகியுள்ளது.

ஆனால் அத்தகையபடு கொடூரமானதும் ஜனநாயக எதிர்ப்பானதுமான நடவடிக்கைகளை நிறைவேற்றுவதுஒன்று. அவற்றை அமுல் செய்வது வேறொன்று.தொழிற்சங்கங்களுடனான இந்த மாநாடு,அரசாங்கம் இவற்றின் அங்கத்தவர்களுக்குஎதிரான நடிவடிக்கைகளை எடுப்பதைபாதுகாப்பதற்கு தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் பெரிதும் தங்கியுள்ளது என்பதை எடுத்துக்காட்டிக் கொண்டுள்ளது.

அன்றையதினம் இங்கு கூடிய தொழிற்சங்கங்களில்ஐந்து தொழிற்சங்கங்களைத் தவிர ஏனையசகல தொழிற்சங்க அதிகாரிகளும் இதனைஏற்றுக் கொள்ள இணங்கினர். யூ.என்.பி.யுடன்இணைந்த தேசிய ஊழியர் சங்கம் யுத்தத்துக்கும்அவசரகால விதிகளுக்கும் பூரண ஆதரவுவழங்கினர். ஆளும் பொதுஜன முன்னணியின்தொழிற்சங்க அதிகாரிகளின் சார்பில் இலங்கைகம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கத் தலைவர்டபிள்யூ.எச்.பியதாச, போர்வீரர்களைசோதனைச் சாவடிகளில் இருந்து விடுவித்துஅவர்களை யுத்த முனைக்கு அனுப்பும்விதத்தில் யூனியன்கள் "பாதுகாப்பு வேலை"களில் பங்குகொள்ளும் ஒரு வேலைத்திட்டத்தைஅபிவிருத்தி செய்யும்படி ஜனாதிபதி குமாரதுங்கவைவேண்டிக் கொண்டார்.

அரசாங்கசேவை தொழிற்சங்க சம்மேளனத்தலைவரான பியதாச கூறியதாவது: "நாம்இன்று ஒரு தீர்க்கமான கட்டத்தில் இருந்துகொண்டுள்ளோம். நாட்டின் பிரதேசஒருமைப்பாடு பற்றிய ஒரு பிரச்சினை தலைதூக்கியுள்ளது. அரசாங்கம் இதைப் பற்றி யோசித்து,இதையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்."பியதாச, 1980ல் ஜனாதிபதி ஜெயவர்தனஆட்சியில் இடம்பெற்றது போல் அரசாங்கம்அவசரகால விதிகளை வேலைநிறுத்தங்களைநசுக்கித் தள்ள பயன்படுத்தவில்லை எனக்கூறி புதிய அவசரகால சட்ட விதிகளுக்கானதமது ஆதரவை நியாயப்படுத்த முயன்றார்.அதே மூச்சில் பொதுஜன முன்னணி அரசாங்கம்அடக்குமுறை நடவடிக்கைகளைத் தவிர்த்துக்கொள்வதில் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

லங்கா சமசமாஜக் கட்சி தொழிற்சங்கத்தலைவரான எஸ்.சிறிவர்தன அரசாங்கசட்டவிதிகளை வெளிவெளியாக ஆதரித்தார்."அவசரகாலச் சட்டவிதிகளை இயற்றுவதில்தவறேதும் கிடையாது." என அவர் சொன்னார்.எவ்வாறெனினும் அவர் இந்தச் சட்டவிதிகளின்காரணமாக "வேலை கொள்வோர்தொழிலாளர்களை மீண்டும் சேவையில்சேர்க்க மறுத்துவிட்ட நிலையிலும்" தாம்"வேலைநிறுத்தங்களை நிறுத்திக் கொள்ளநேரிட்டதை" ஒப்புக் கொண்டனர்.

கொழும்பு நகர்புறத்தில் உள்ள "இன்டர்நஷனல் கிப்ட் டிசைன் பக்டரி" (InternationalGift Design Factory) யைச் சேர்ந்த வேலைநிறுத்தம் செய்து வந்த தொழிலாளர்களைவேலை நிறுத்தத்தை நிறுத்திக் கொள்ளும்படிலங்கா சமசமாஜக் கட்சியின் கட்டுப்பாட்டிலான தொழிற்சங்கம் அழைப்பு விடுத்ததுதொடர்பாகவே சிறிவர்தன இதைத்தெரிவித்தார். பக்டரி முதலாளி தொழிலாளர்களை மீண்டும் சேவையில் அமர்த்த எதிர்ப்புத்தெரிவித்ததன் காரணமாக 54 தொழிலாளர்கள்வேலை இழந்தனர். வேலைக்குத் திரும்பியதொழிலாளர்கள் வேறொரு சங்கத்தைஅமைத்ததன் மூலம் தொழிற்சங்கக்காட்டிக் கொடுப்புக்குத் தமது எதிர்ப்பைத்தெரிவித்தனர். இதைப் பற்றிக் குறிப்பிடுகையில்ஒரு தொழிலாளி கூறியதாவது: "இந்தப்புதிய சட்டங்களின் காரணமாக நாம்ஒரு சட்டப்படி வேலை செய்யும் பிரச்சாரஇயக்கத்தை நடாத்துவதும் முடியாதுபோயுள்ளது. எமது தொழிற்சங்கத்தலைவர் அரசாங்கம் அடக்குமுறைச்சட்டங்களை திணிப்பதற்கு முன்னமே இந்தவேலை நிறுத்தத்தைக் கைவிடத் தயார்செய்து வந்தார்". என ஒரு தொழிலாளிகுறிப்பிட்டார்.

கைத்தொழில் அமைதியின்மைக்கான வேறு அறிகுறிகளும் இருந்து வந்தன. அட்டனுக்குச்சமீபமாக உள்ள மஸ்கெலியாவில் உள்ளலக்கொம் தனியார் தோட்டத்தைச்சேர்ந்த சுமார் 225 தொழிலாளர்கள்மே 10ம் திகதி சம்பள வெட்டுக்கு எதிராகஅவசரகாலச் சட்டத்தையும் மீறி திடீர்வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 13 தொழிலாளர்கள் மஸ்கெலியாபொலிஸ் நிலையத்தில் நீண்ட நேரம் குறுக்குவிசாரணை செய்யப்பட்டனர். இந்தவேலை நிறுத்தத்துக்கு தோட்டத் துறையைச்சேர்ந்த நான்கு பெரும் தொழிற்சங்கங்களில்-இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையகதொழிலாளர் சங்கம், இலங்கை தேசியதொழிலாளர் காங்கிரஸ், லங்கா தேசியதோட்டத் தொழிலாளர் சங்கம் - எதுவும்ஆதரவு வழங்கவில்லை.

தேயிலைப் பெருந்தோட்டப் பகுதியில் ஒரு பரந்தளவிலான முரண்பாடுவெடிக்கும் சாத்தியங்கள் உண்டு.உயர்ந்த சம்பளத்துக்கான ஒரு போராட்டத்தை கோரி வந்த 600,000 தொழிலாளர்களைச்சாந்தப்படுத்த தொழிற்சங்கங்கள்பெரும் சிரமப்பட்டன. மே 6ம் திகதி சம்பளஅதிகரிப்பு சம்பந்தமாக வேலை கொள்வோருடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தைகள்நான்காவது தடவையாகவும் பொறிந்துபோயிற்று. ஆனால் தொழிற்சங்கங்களோ"இன்றைய நிலைமையின் அடிப்படையில்"வேலை நிறுத்தம் செய்யப் போவதில்லைஎனத் தெரிவித்தனர்.

அரசாங்கத்தின்தனியார்மய திட்டங்களை எதிர்த்து வரும்தபால் ஊழியர்கள் நீண்டகாலமாக தபால்,தொலைத் தொடர்பு தொழிற்சங்கத்தின்பொதுச் செயலாளராக இயங்கி வருபவரைப்பதவிநீக்கம் செய்யும்படி கோரியுள்ளனர்.தனியார்மயமாக்கத்துக்கான முதற்படியாக தபால் திணைக்களத்தை ஒருகூட்டுத் தாபனமாக்கும் ஒரு மசோதாவைஎதிர்த்து மே 8ம் திகதி இடம்பெற இருந்தஎதிர்ப்பு வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கம்இரத்துச் செய்தது. இந்தப் பொதுச்செயலாளர் இம்மசோதாவை தயார்செய்ய அரசாங்கத்துக்கு உதவினார்.இது அவரை ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணைமூலம் செயற்குழு இடைநிறுத்தம் செய்யக்காரணமாகியது. அவரைப் பதவி நீக்கம்செய்யும் பொருட்டு தபால் ஊழியர்சங்கப் பிரதிநிதிகள் மே 28ம் திகதி கூடவுள்ளனர்.தபால் சேவையை மீளமைக்கும் உலகவங்கிகடனுக்கான ஒரு நிபந்தனையாக ஜூன்மாதமளவில் ஒரு மசோதாவைக் கொணரும்அரசாங்கத்தின் திட்டங்களையும் இதுஅச்சுறுத்தியுள்ளது.

ஏனைய தொழிற்சங்கங்களும் இதே விதத்திலேயே தொழிற்பட்டுக் கொண்டுள்ளன. அரசாங்கம் புதிய சட்டவிதிகளைத் திணித்ததுதான் தாமதம் அரசாங்க நிலஅளவையாளர் சங்கம், கடந்த ஏப்பிரல்24ம் திகதி வரை வேலைநிறுத்தம் செய்துவந்த தனது அங்கத்தவர்களை வேலைநிறுத்தத்தை நிறுத்திக் கொள்ளும்படி வேண்டியது."வடக்கு யுத்தமுனையில் உள்ள நிலைமைகாரணமாக நாம் எமது வேலைநிறுத்தஇயக்கத்தை மே 05ம் திகதியுடன் தற்காலிகமாகஇடை நிறுத்துவோம்" எனத் தொழிற்சங்கம்தெரிவித்தது. "நாம் ஒரு இரத்ததானஇயக்கத்தை வெள்ளிக் கிழமை (மே 05) ஏற்பாடுசெய்வதோடு கொழும்பு தொடக்கம்களனி வரை நடாத்த இருந்த எதிர்ப்புஊர்வலத்தையும் இரத்துச் செய்துள்ளோம்"என இச்சங்கம் மேலும் தெரிவித்தது.

அரசாங்க சேவை தொழிற்சங்க சம்மேளனம்உட்பட 17 அரசாங்கதுறை தொழிற்சங்கங்கள்இவை லங்கா சமசமாஜக் கட்சியுன்இணைந்து கொண்டவை- மே 8 -மே 21ம்திகதி வரை சம்பள உயர்வு கோரி நடாத்தவிருந்த மதிய போசன இடைவேலைக் கூட்டங்களையும் இரத்துச் செய்தது.

அடக்குமுறைச்சட்டங்களும், தொழில், சேவை நிலைமைகள்மீதாக இடம்பெற்று வரும் தாக்குதல்களுக்குஎதிராக தொழிலாளர்களிடையே வளர்ச்சிகண்டு வரும் எதிர்ப்புக் காரணமாகஐந்து தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின்அவசரகால விதிகளை கண்டனம் செய்துள்ளன.பாலா தம்பு தலைமையிலான இலங்கைவர்த்தக, கைத்தொழில் ஊழியர் சங்கம் (CMU) இலங்கை வங்கி ஊழியர் சங்கம் (UPTO), தபால் தொழிலாளர் தொழிற்சங்கம் ஐக்கிய அரசாங்க தாதிமார் சங்கம்,அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (நிவிளிகி) என்பனவே அவையாகும்்்.

ஆனால் இந்தத் தொழிற்சங்கத் தலைவர்கள்இதனை அரசாங்கத்தின் அவசியங்களைநடைமுறைக்கிடும் புதிய சட்டங்கள் என்றபேச்சளவிலான எதிர்ப்புக்களுடன் நின்றுவிடுகின்றார்கள். யூ.பி.ரீ.ஓ. (UPTO) தபால்தொழிற்சங்கத் தலைவர்களைப் போலவேஇலங்கை வங்கி ஊழியர் சங்கமும் (CBEU) பெருமளவிலான பிரச்சாரஇயக்கத்தை நிறுத்திக் கொண்டுள்ளன.மே 15ம் திகதி அவர்கள் 35 வீத சம்பள உயர்வுக்கான சங்கத்தின் நீண்டகால பிரச்சார இயக்கத்தைநிறுத்தவும் தனியார் வங்கிகளின் 21 வீத சம்பளஉயர்வினை அங்கீகரிக்கவும் தீர்மானம் செய்துகொண்டுள்ளன. ஏனைய கோரிக்கைகள்தொடர்பாக மூன்று வருடக் காலக்கெடுவையும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும் இந்த ஐந்து தொழிற்சங்கங்களில்ஒன்று தன்னும் அவசரகாலச் சட்டஅதிகாரங்களுக்கு எதிராக ஒரு பிரச்சாரஇயக்கத்துக்கு அழைப்பு விடுக்கவும்இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிரான அரசாங்கத்தின்யுத்தத்தை எதிர்க்கவும் இல்லை. தாதிமார்சங்கம் யுத்தத்தை வெளிவெளியாக ஆதரித்துக்கொண்டுள்ளது. அரசாங்க வைத்திய அதிகாரிகள்சங்கம் சீ.எம்.யூ.வினதும் வங்கி ஊழியர் சங்கத்தினதும்நிலைப்பாட்டை அங்கீகரித்துள்ளது. ஆனால்முன்னர் வெளியிட்ட ஒரு பத்திரிகை அறிக்கையில்"சிவில் உரிமைகள்" மீதான தடைகளுக்கு மத்தியிலும்இது அரசாங்கத்தை "முழுமனதாக"ஆதரித்தது.

சீ.எம்.யூ. இலங்கை வங்கி ஊழியர்சங்கங்களின் யுத்தம் தொடர்பானநிலைப்பாடு நழுவி ஓடுவதாக இருந்துகொண்டுள்ளது. இவை ஒரு யுத்த நிறுத்தத்துக்கும் அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான ஒரு "பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு" அழைப்பு விடுத்துள்ளன.இது முற்றிலும் இலங்கை வர்த்தக சமூகத்தின்ஒரு பகுதியினரது கோரிக்கைகளுக்கும்மேற்கத்தைய வல்லரசுகளின் பேரம்பேசல்களுக்கும் இணங்கிப் போவதாகும்.பொதுஜன முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்ததொழிற்சங்கங்கள் கூட முன்னர் அரசாங்கம்யுத்தத்தைத் தொடர பூரண ஆதரவுவழங்கும் அதே வேளையில் நோர்வேயோஅல்லது வேறு எந்த ஒரு நாடோ அனுசரணையாளராக தொழிற்பட அழைப்பு வடுத்திருந்தன.

யுத்தத்துக்கு நிதியீட்டம் செய்யும் பொருட்டுஅவர்கள் சுமக்கத் தள்ளப்பட்டுள்ளபிரமாண்டமான பளுவின் தாக்கம் காரணமாக-அதிகரித்த வரி, அரசாங்க சேவைகள்வெட்டு, வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சி-தொழிலாளர்களிடையே உருவான வெறுப்புக்கள் குவியுமோ, என்ற அச்சம் பொதுஜனமுன்னணி அரசாங்கத்தைப் பீடித்துக் கொண்டுள்ளது. அரசாங்கம் படு கொடூரமானசட்டங்களினால் ஆயுதபாணிகள் ஆக்கப்பட்டுள்ளநிலையில் பெரிதும் வெடித்துச் சிதறும் நிலைமைஅதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்குமுற்றிலும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலேயே சார்ந்துள்ளது.