Opposition to Sri Lankan government grows
Political lessons of May 25 picket
இலங்கை அரசாங்கத்துக்கு
எதிரானஎதிர்ப்பு வளர்ச்சி காண்கிறது
மே 25ம்திகதிய மறியல் போராட்டத்தின் அரசியல்படிப்பினைகள்
By Dianne Sturgess
8 June 2000
Use
this version to print
இலங்கை அரசாங்கத்தின்
அவசரகாலச்சட்ட யுத்த விதிகளுக்கு எதிராக எதிர்ப்புத்தெரிவிக்கும்
பொருட்டு கொழும்பு லிப்டன்சுற்றுவட்டத்தில் (Lipton
Circus) மே 25ம் திகதிஇடம் பெற்ற,
3000 பேர் கலந்து கொண்டமறியல் போராட்டம் பல அம்சங்களில்சிறப்பு
முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
இந்த ஆர்ப்பாட்டம், ஜனாதிபதி சந்திரிகாகுமாரதுங்கவின்
பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கும் வடக்கு, கிழக்கில் வாழும்
தமிழ்மக்களுக்கு எதிராக அது நடாத்தும்பிற்போக்கு யுத்தத்துக்கு
எதிராகவும்வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்பினைத் தெட்டத்தெளிவாகக்
காட்டிக் கொண்டது. இந்தஆர்ப்பாட்டம், அனைத்து அரசியல்
நடவடிக்கைகளையும் வேலை நிறுத்தங்களையும்தடை செய்துள்ளதும்
படுபயங்கரமானசெய்தித் தணிக்கையைத் திணித்துள்ளதுமானஅவசரகால
விதிகளை மீறி இடம்பெற்றது.
நாளாந்தம் விலை அதிகரிப்புக்களும், சம்பளவெட்டுக்கான
கோரிக்கைகளும் இடம்பெற்றுவருவதோடு அரசாங்கம் மேலதிகமாகபல
கோடி ரூபாக்களை ஆயுதக் கொள்வனவின் பேரில் செலவு செய்ய
முடிவு செய்துள்ளது.இந்த ஊர்வலம் தம்மீது திணிக்கப்பட்டு வரும்சகிக்க
முடியாத சுமைகளுக்கு எதிரானபரந்த மக்கள் தரப்பினரின் எதிர்ப்பின்ஒரு
வெளிப்பாடாக விளங்கியுள்ளது.
மேலும் அரசாங்கம் இந்த ஆர்ப்பாட்டஊர்வலத்தைக்
கலைக்க கண்ணீர் புகையையும்இரசாயன கலவை தண்ணீரையும்,
பொலிஸ்குண்டாந்தடி அடியையும் பயன்படுத்துவதுஎனத் தீர்மானம்
செய்தது. இது குமாரதுங்கவின்ஆட்சிக்கு எதிராகவும் அவரின்
கொள்கைக்குஎதிராகவும் தொழிலாளர் வர்க்கத்திடையேவளர்ச்சி
கண்டுவரும் எதிர்ப்புத் தொடர்பாகஆட்சியாளர்களிடையே நிலவும்
கலக்கத்தைசுட்டிக் காட்டுகின்றது. தொழிலாளர்களும்விவசாயிகளும்
தமிழ் மக்களுக்கு எதிரானயுத்தத்துக்கு ஆதரவு காட்டாத
ஒருநிலைமை இருந்து வருகின்றது. அவர்கள்தமது குழந்தைகள் பீரங்கிக்
குண்டுகளாகபயன்படுத்தப்படுவதைக் கண்டு கொண்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக அரசாங்கத்துக்கு இராணுவ ரீதியில் ஏற்பட்ட
பின்னடைவுகள்நீண்ட காலமாக வளர்ச்சி கண்டுவரும்வெகுஜன அதிருப்திகளை
முன்னணிக்கு கொணருமோ என்ற அச்சத்தை அதற்கு ஏற்படுத்திஉள்ளது.
இந்த உண்மைகள் மே 25ம்திகதிய ஆர்ப்பாட்டத்தை
ஏற்பாடு செய்தஅரசியல் கட்சிகளின் -நவசமாஜக் கட்சி (NSSP),
«ü.M.H. (JVP)
முஸ்லீம் ஐக்கிய விடுதலைமுன்னணி (MULF)-
அரசியல் நடவடிக்கைகளைஆய்வு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர்இவற்றின்
முக்கிய அரசியல் சுலோகங்களால்-"அடக்குமுறைச் சட்டங்கள்
வேண்டாம்","இனவாதம் வேண்டாம்", "யுத்தம்
வேண்டாம்","வெளிநாட்டு படைகள் வேண்டாம்"-
கவரப்பட்டுள்ள அதே சமயம், பொதுஜன முன்னணிஅரசாங்கத்துக்கு
எதிரான தமது போராட்டத்தை முன்னெடுக்க ஒரு வழியைத்
தேடுகின்றனர்.ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்களோ
வேறொரு நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்தனர்.
இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தைஏற்பாடு செய்தது,
யுத்தத்துக்கு எதிராகதொழிலாளர் வர்க்கத்துக்கு ஒரு சுயாதீனமான
வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக அல்ல. ஆனால்
பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக வளர்ச்சி கண்டுவரும்
எதிர்ப்பின்தலைமேல் ஏறிக்கொள்ளவும், குமாரதுங்கஅரசாங்கம்
வீழ்ச்சிகாணும் ஒரு நிலையில்ஒரு புதிய முதலாளித்துவ கூட்டரசாங்கத்தைஅமைக்கும்
நோக்கில் அதை திசை திருப்பமுயற்சிப்பதுமே இவர்களது திட்டம்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷிக்கப்பட்டசுலோகங்களின்
மிகவும் சிறப்பு முக்கியத்துவம்என்ன தெரியுமா? வடக்கு- கிழக்கில்
இருந்துஇலங்கை இராணுவத்தை பூரணமாகவாபஸ்பெறும்படி
கோரும் சுலோகம்இடம்பெறாததேயாகும். குறைந்தபட்சம்
அனைத்து யுத்த செலவீனங்களுக்கும்முற்றுப் புள்ளி வைக்கும்படி
தன்னும் அங்குகோரப்படவில்லை.
மெளனம்
இந்த அடிப்படையான கோரிக்கைகள்தொடர்பாக
இவர்கள் காட்டிக் கொண்டமெளனம், ந.ச.ச.க.- ஜே.வி.பி. கூட்டினால்அபிவிருத்தி
செய்யப்பட்டு வரும் ஒரு தொகைஅரசியல் நிகழ்ச்சித் திட்டங்களை
எடுத்துக்காட்டுகின்றது.
இந்த ஆர்ப்பாட்டம்இடம்பெறுவதற்கு 10 நாட்களுக்கு
முன்னர்(ந.ச.ச.க.வுடன் நெருக்கமான உறவுகொண்ட)முஸ்லீம் ஐக்கிய
விடுதலை முன்னணியும் ஜே.வி.பி.யும்"வடக்கு, கிழக்கு மாகாணங்களில்
உருவாகியுள்ளநிலைமையை கலந்துரையாட" குமாரதுங்கவினால்
கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி மாநாட்டில்கலந்து கொண்டன.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதல் காரணமாக இலங்கைஆயுதப்
படைகளுக்கு ஏற்பட்ட ஒருதொகை தோல்விகளின் பின்னர் இப்பேச்சுவார்த்தை
இடம்பெற்றது.
யுத்தத்துக்குஆதரவு திரட்டும் முயற்சி
இந்தக்கூட்டம் கடும் தணிக்கை விதிகள் அமுலாகிவந்த
ஒரு நிலைமையில் இடம் பெற்றது.அந்த விதத்தில் இது யுத்தத்துக்கு
ஆதரவுதிரட்டும் ஒரு முயற்சியாகவும் அதி வலதுசாரிசிங்கள சோவினிச
அமைப்புகளுக்கு ஒருதளம் அமைத்துக் கொடுப்பதாகவும்விளங்கியது.
முஸ்லீம் ஐக்கிய விடுதலை முன்னணிகலந்துரையாடலில் முழுமையாக
பங்குகொண்ட அதே வேளையில் ஜே.வி.பி. சிலநடைமுறை ரீதியான
கருத்து வேறுபாடுகள்காரணமாக கலந்துரையாடலில் இருந்துவிலகிக்
கொண்டது. அரசாங்கத்தை வலதுசாரிக்கோணத்தில் இருந்து
விமர்சனம் செய்யும்ஒரு அறிக்கையை இது வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
மாகாண சபைகளுக்கு மேலதிகஅதிகாரங்களை வழங்கும் அதிகாரப்பரவலாக்கல்
பொதி அரசைப் பலவீனப்படுத்திவிட்டதாகவும் "நாட்டை
தனிநாட்டின்வெற்றியை நோக்கி தள்ளி விட்டதாகவும்"ஜே.வி.பி.
குறிப்பிட்டது. இதற்குச் சமமானநிலைப்பாட்டையே சிங்கள சோவினிச
அமைப்புக்களும் "சிங்கள தேசத்தை" காட்டிக்
கொடுப்பதாகக் குறிப்பிட்டன.
நவ சம சமாஜக்கட்சி இந்த அனைத்துக் கட்சிக்
கலந்துரையாடலில் பங்குகொள்வதில்லை எனத் தீர்மானம்செய்தது.
ஆனால் இது ஒரு கொள்கைப்பிடிப்பான நிலைப்பாடு அல்ல.
ந.ச.ச.க.1986ல் வலதுசாரி ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவினால்
கூட்டப்பட்ட இத்தகைய ஒருவட்டமேசை மகாநாட்டில் பங்கு
பற்றியது.இது குமாரதுங்கவுக்கு எதிர்ப்புக் காட்டுவதைஅடிப்படையாகக்
கொண்டதும் அல்ல.எல்லாவற்றுக்கும் மேலாக குமாரதுங்கஎதிர்க்
கட்சியில் இருந்து வந்த நாட்களில்ந.ச.ச.க. அவரை ஒரு
"தொழிலாளர்வர்க்க தலைவி" யாகத் தூக்கிப் பிடிக்கும்நடவடிக்கையில்
ஈடுபட்டது. 1994 பொதுத்தேர்தலில் அவரின் பொதுஜன முன்னணியின்தேர்தல்
பிரச்சார நடவடிக்கைகளுக்குஆதரவாக செயல்படுவதற்கு
முன்னரேஇது இடம்பெற்றது. ந.ச.ச.க. வின் முடிவுகள்,அரசாங்கத்துக்கு
ஆழமான நெருக்கடிகள்உருவான வேளைகளில் அதில் இருந்து
தலையெடுப்பதற்கான பெரும் வாய்ப்பை வழங்கும்உபாய ரீதியான
மதிப்பீட்டை அடிப்படையாகக்கொண்டவை.
இதன்படி ந.ச.ச.க.பொதுச் செயலாளர் விக்கிரமபாகுகருணாரத்ன
ஜனாதிபதிக்கு எழுதிய ஒருகடிதத்தில் தாம் கலந்துரையாடலில்கலந்துகொள்ளப்
போவதில்லை எனத்தெரிவித்தார். ஏனெனில் குமாரதுங்க "இந்தயுத்தத்தை
தாம் கையாண்டு வரும்பிற்போக்கானதும் அடக்குமுறையானதுமானவேலைத்திட்டத்துக்கு
நேரடி ஆதரவைதிரட்டவே ஏற்பாடு செய்துள்ளதாகவும்ந.ச.ச.க.
எந்த விதத்திலும் அதற்கு பங்களிப்புச்செய்யமுடியாது" எனவும்
தெரிவித்தது.
ந.ச.ச.க (குறைந்தபட்சம் தற்சமயம்)குமாரதுங்கவில்
இருந்து விடுபட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் இது யுத்தத்துக்கு
ஆதரவுகாட்டும் ஏதேனும் ஒரு கொள்கைப்பிடிப்பான எதிர்ப்பினால்
ஏற்பட்ட பெறுபேறுஅல்ல. தனது புதிய கூட்டாளியான ஜே.வீ.பி.யின்வேலைத்திட்டத்தை
ஆய்வு செய்யும்போது இது விளங்கும்.
மே 25ம் திகதியஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து
கருணாரத்னஒரு அறிக்கையை உடனடியாக வெளியிட்டார்.அதில்
"போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல ஜே.வி.பி. இடதுசாரிகளின்
ஒரு பரந்தகூட்டுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்"என
ந.ச.ச.க. எதிர்பார்ப்பதாக அவர்குறிப்பிட்டார். அத்தகைய
ஒரு போராட்டம்எந்தத் திசையில் பயணம் செய்யும்
என்பதைஜே.வி.பி. வெளியிட்ட ஒரு தொகை அறிக்கைகள்புட்டுக்
காட்டின. ஜே.வி.பி, குமாரதுங்கஆட்சியை எதிர்க்கக் காரணம்,
அது யுத்தத்தைதொடர்வதினால் அல்ல. மாறாக அதுஒரு இராணுவ
வெற்றியை ஈட்டுவதற்குஇலாயக்கற்றது என்பதை நிரூபித்துக்கொண்டுள்ளதேயாகும்.
ஆனையிறவில்இடம்பெற்ற பெரும் இராணுவ
பின்னடைவைத்தொடர்ந்து அதை முதற்தடவையாகவிடுதலைப் புலிகளிடம்
பறிகொடுக்க நேரிட்டது.இதைத் தொடர்ந்து ஜே.வி.பி. பிரச்சாரசெயலாளர்
விமல் வீரவன்ச சிங்கள சோவினிசவார இதழான 'லக்பிம' வுக்கு
மே 7ம்திகதி அளித்த பேட்டியில் பின்வருமாறு குறிப்பிட்டார்:"இந்த
தோல்வி எம் அனைவரதும் தோல்வியாகும். என்னதான் இழப்புக்கள்
ஏற்பட்டாலும்நாம் ஒரு (தமிழ் தாயகம்) ஈழத்துக்குஇடமளிக்க
மாட்டோம். அதே சமயம்நாம் அவர்களுக்கு புதிய வெற்றிகள்
கிட்டுவதையும் அனுமதிக்க மாட்டோம். தமிழீழ விடுதலைப்புலிகள்
(LTTE) பிரச்சினைக்கு
தீரவுகாணவேண்டுமானால் அவர்கள் பிரச்சினைகளைஎம்முடன்
கலந்துரையாடலாம். ஆனால்அவர்கள் யுத்தத்தை தொடர
வேண்டுமானால் நாம் நிலைமைக்கு முகம் கொடுக்கத்தயாராக
உள்ளோம்" என்றார்.
யுத்தத்தை எதிர்ப்பதற்கு மாறாகவீரவன்ச விடுதலைப்
புலிகளைத் தோற்கடிப்பதுஎப்படி என்பதையிட்டு ஆலோசனைவழங்கியுள்ளார்.
"செய்யவேண்டியதுஎல்லாம் விடுதலைப் புலிகளின் விநியோகமார்க்கங்களைத்
துண்டிப்பதேயாகும்.ஜே.ஆர். (ஜனாதிபதி ஜெயவர்த்தன)அகற்றிய
கரைக்காவல் முறையை நாம்மீண்டும் அமுல் செய்வோம்"
ஆனையிறவுமுகாம் வீழ்ச்சி கண்டதைப் பற்றி ஜே.வி.பி.அரசியல்
குழுவினால் மே 5ம் திகதி வெளியடப்பட்டஅறிக்கை கூறியதாவது:
"...முதலாளித்துவக்கட்சிகளின் போலியான போக்குகள் இரத்தவெறி
கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின்கைகளை மட்டுமே பலப்படுத்தியுள்ளது".இந்த
அறிக்கை வெளியாகிய 'சீனுவ' (மணி) பத்திரிகை(மே15) சந்திரிகா
குமாரதுங்கவுக்கு ஒருபகிரங்கக் கடிதத்தையும் வெளியிட்டிருந்தது.ஜே.வி.பி.
பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவினால் எழுதப்பட்ட இப்பகிரங்கக்
கடிதம்"இரத்த வெறி கொண்ட விடுதலைப் புலிகளின்"கைகளுக்குள்
ஆனையிறவு வீழ்ச்சி கண்டமைக்குகுமாரதுங்கவின் தவறுகளே காரணம்எனப்
பிரகடனம் செய்திருந்தது.
ஆனையிறவின்வீழ்ச்சி தொடர்பான நவசமசமாஜக்கட்சியின்
பிரதிபலிப்புகள் இதே போக்கிலேயேபயணம் செய்தன.
நவசமசமாஜக்கட்சியின் அரசியல் குழுவின் பிரபல அங்கத்தவரும்புதிய
இடதுசாரி முன்னணியின் (ந.ச.ச.க. வும்முஸ்லீம் ஐக்கிய இடதுசாரி
முன்னணியும்) செயலாளருமான லீனஸ் ஜயதிலக கூறியதாவது: "வடக்குயுத்தத்தில்
கிலியூட்டும திடீர் மாற்றங்களுக்குபொதுஜன முன்னணி அரசாங்கமே
பொறுப்பாளி." வேறுவார்த்தைகளில் சொன்னால்ஜே.வி.பி.யைப்
போலவே நவசமசமாஜக்கட்சியும் இலங்கை இராணுவத்தின்
தோல்வியைதேசத்தின் மீதான ஒரு "கிலியூட்டும்" தாக்குதலாகக்
கணித்துக் கொண்டுள்ளது.
பதிலீடு
ஆனையிறவுத் தோல்வியைத் தொடர்ந்துநவசமசமாஜக்
கட்சி குமாரதுங்கஅரசாங்கத்தை இராஜினாமாச் செய்யும்படிகோரும்
ஒரு அழைப்பை வெளியிட்டது.ஆனால் இதனை எந்த ஆட்சியினால்
பதிலீடுசெய்வது? அதற்கு ந.ச.ச.க. வழங்கும்பதில் என்ன தெரியுமா?
ஜே.வி.பி. தலைமையிலானஒரு "பரந்த இடதுசாரி கூட்டை"
வேண்டிநிற்கிறது. அத்தகைய ஒரு அரசாங்கம்ஜே.வி.பி. யை மட்டுமன்றி
முக்கிய முதலாளித்துவக்கட்சிகளில் இருந்து பிளவுண்டு போன
ஒருபரந்த ரீதியிலான அமைப்புக்களையும்உள்ளீர்த்துக் கொள்ளும்.
இதில் புதிதாகஸ்தாபிதம் செய்யப்பட்டதும் ஜே.வி.பி.யுடன்பெரும்
கருத்து வேறுபாடுகள் இல்லாததுமான 'சிங்கள உறுமய' (Sinhala
Heritage) கட்சியும்அடங்கும்.
அனைத்துலக தொழிலாளர்இயக்க வரலாறும்,
எல்லாவற்றுக்கும்மேலாக இலங்கைத் தொழிலாளர்இயக்க
வரலாறும், முதலாளித்துவக்கட்சிகளுடனும் அமைப்புக்களுடனுமானகூட்டுக்களாலும்
கூட்டரசாங்கங்களாலும்ஏற்பட்ட நாசகரமான விளைவுகளால்நிறைந்து
போயுள்ளது. ஆனால் நவசமசமாஜக் கட்சியோ இந்தச் சந்தர்ப்பவாதஅரசியல்
வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைஇப்போது எழுத முயற்சிக்கின்றது.
முன்னர்பொதுஜன முன்னணி அரசாங்கத்துடன்அணிதிரண்டு
போயிருந்த இவர்கள் இப்போதுதொழிலாளர் வர்க்கத்தை ஜே.வி.பி.க்குஅடிபணியுமாறு
அழைப்பு விடுத்துள்ளனர்.இதே அமைப்பின் பயங்கரவாத இயக்கநடவடிக்கைகள்
காரணமாக 1989/90 களில்ந.ச.ச.க. வின் டசின் கணக்கான அங்கத்தவர்கள்உட்பட
நூற்றுக் கணக்கான தொழிலாளர்களும்தொழிற்சங்கவாதிகளும்
படுகொலைசெய்யப்பட்டனர். அத்தோடு ஜே.வி.பிந.ச.ச.க வின்
பொதுச் செயலாளரின்உயிருக்கும் கூட உலைவைக்க அச்சுறுத்தல்விடுத்தது.
ந.ச.ச.க. வின் கொள்கைநிலைப்பாட்டில்
இன்னொரு பக்கமும்இருந்து கொண்டுள்ளது. சும்மா பார்க்கும்போது
ந.ச.ச.க. அதனது அணியான ஜே.வி.பி. க்குமுரண்பட்டதாக நடந்து
கொள்வதுபோல் தோன்றும். ஆனால் தொழிலாளர்வர்க்கத்தின்
சுயாதீனத்தின் பேரிலான ஆழமானகுரோதத்துக்கு இது வெளிச்சம்
பாய்ச்சுகின்றது. இதனது சகல அரசியல் கயிறு திரிப்புக்களுக்கும்சுற்றுமாற்றுக்களுக்கும்
இவை அத்திவாரமாகிவிடுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் "புரட்சிகர"நற்சாட்சிப்
பத்திரங்களைப் பற்றி தூக்கிப்பிடிப்பதுஇதன் முயற்சியாக இருந்து
கொண்டுள்ளது.
ஏப்பிரல் 22ல் ஆனையிறவு முகாம் வீழ்ச்சி கண்டதுதான்
தாமதம் கருணாரத்ன வெளியிட்ட அறிக்கையில்(ஏப்பிரல் 24)
"சகல சமூகங்களையும் சேர்ந்தஒடுக்கப்படும் மக்கள்
ஒன்றுபடவும்சுரண்டல் அமைப்பை தூக்கி வீசவும் தமிழ்பேசும்
மக்களுக்கு சுயநிர்ணய உரிமையுடன்கூடிய ஜனநாயகத்தையும்
சமாதானத்தையும் ஸ்தாபிதம் செய்யவும்" தருணம் வந்துவிட்டதாகபிரகடனம்
செய்தார்.
சுயநிர்ணய சுலோகத்தை சேர்த்துக் கொண்டது
தம்மையும்ஒரு மாநகர சபை அங்கத்தவராகக்கொண்ட
கொழும்பு மாநகர சபைதேர்தலில் தமிழ் வாக்காளர்களின்
ஆதரவைச்சுருட்டிக் கொள்வதற்காக திட்டமிட்டுச்செய்யப்பட்டதாகும்.
ஆனால் ந.ச.ச.க.வின்பண்பில் இருந்து ஊற்றெடுக்கும் அதற்குஇன்றியமையாத-
அதைக்காட்டிலும்பெரிதும் ஆழமான காரணிகளும் இருந்துகொண்டுள்ளன.
ந.ச.ச.க.வின் அரசியல்வழிகாட்டல் கயிறானது
சோசலிச நனவுவளர்ச்சி காண்பதைத் தடை செய்யும்பொருட்டு
தொழிலாளர் வர்க்கத்தையும்விவசாயிகளையும் ஏதோ ஒரு முதலாளித்துவஅமைப்புக்குக்
கீழ்படியச் செய்வதாகவேஇருந்து வந்துள்ளது. ஏனவேதான்
கருணாரத்னஒரு புறத்தில் தமது கட்சியை ஜே.வி.பி.யுடன்இணைப்பதன்
மூலம் சிங்கள தாயக காப்பாளர்களுடன் சேர்ந்து வேட்டையில்
ஈடுபடுகின்றார்.மறுபுறத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனும்தமிழ்
மக்களுக்கு தனிநாடு கோரும் அதன்வேலைத் திட்டத்துடனும்
சேர்ந்து ஓடுகின்றார்.
இந்த முரண்பாட்டில் ஒரு இன்றியமையாதஒருமைப்பாடு
இருந்து கொண்டுள்ளது.இவ்விரு நிலைப்பாடுகளும் -ஜே.வி.பி. யினால்முன்வைக்கப்பட்டுள்ள
சிங்கள தாயகம்என்றாலும் சரி அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளின்
தமிழர் தாயகம் என்றாலும் சரி- வெகுஜனங்களின் ஜனநாயக உரிமைகள்முதலாளித்துவ
அரசினால் பேணி, பாதுகாக்கப்பட முடியும் என்ற
கருதுகோளை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவ்விரு நிலைப்பாடுகளின்பின்னணியிலும்
முதலாளித்துவத்தை தூக்கி வீசி,ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின்
அடிப்படையில்ஜனநாயக உரிமைகளை அடையும் போராட்டத்துக்கு
சிங்கள, தமிழ் தொழிலாளர் வர்க்கத்தினதும் விவசாயிகளதும் ஐக்கியத்தை
நிராகரிப்பதுஇருந்து கொண்டுள்ளது.
உண்மையில்மே 25ம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்குமாரதுங்க
ஆட்சியாளர்களுக்கும் தமிழ்மக்களுக்கு எதிரான அதனது பிற்போக்குயுத்தத்துக்கும்
வளர்ச்சி கண்டுவரும்எதிர்ப்பினை அம்பலமாக்கியுள்ளது. ஆனால்இது
ஒரு போராட்டத்தில் நவசமசமாஜக்கட்சியினதும் அதனது சிங்கள
சோவினிச கூட்டினதும்அரசியலுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தின்ஒரு
சுயாதீனமான வேலைத்திட்டத்தின்எல்லைக்கோடு இருக்க வேண்டியதன்அவசியத்தை
எடுத்துக் காட்டியது.
அத்தகைய ஒரு முன்நோக்குக்கானதொடக்கப்
புள்ளியாக வடக்கு-கிழக்குமாகாணங்களில் இருந்து இலங்கைப்படைகள்
நிபந்தனையின்றி வாபஸ் பெறப்படவேண்டும்! கொழும்பு ஆட்சியாளர்களின்பிற்போக்கு
யுத்தத்துக்கான அனைத்துநிதியீட்டங்களும் நிறுத்தப்பட வேண்டும்!என்ற
சோசலிச சமத்துவக் கட்சியின் கோரிக்கைகள் விளங்குகின்றன.
சோசலிச சமத்துவக்கட்சி, ஸ்ரீலங்கா அரசைக் கட்டிக் காப்பதையும்
தீவில் ஈழம் என்ற வடிவில் மற்றொரு முதலாளித்துவ குட்டி அரசு
சிருஷ்டிக்கப்படுவதையுமஎதிர்க்கின்றது.
சிங்கள, தமிழ் தொழிலாளர்களும்விவசாயிகளும்
எதிர்கொள்ளும் பிரச்சினைகளை,ஈழம் ஸ்ரீலங்கா ஐக்கிய சோசலிச
குடியரசுக்கான போராட்டத்தின் மூலம் மட்டுமேதீர்த்து வைக்க
முடியும். இந்த முன்நோக்கின்அடிப்படையில் தொழிலாளர் வர்க்கத்தைஅணிதிரட்டுவதன்
மூலம் மட்டுமே முதலாளித்துவஆட்சி ஒடுக்கப்படும் மக்களை
இட்டுச்சென்றுள்ள சகதியில் இருந்து அவர்களைமீட்டெடுக்க
முடியும்.
|