World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

The families of Sri Lankan soldiers speak:
'Whoever wins this war, the poor people stand to lose'

இலங்கை இராணுவத்தினரின் குடும்ப அங்கத்தவர்கள் பேசுகின்றார்கள்:

'யுத்தத்தில் யார் வென்றாலும், தோல்வி காண்பது ஏழைகளே'

By a correspondent
27 May 2000

Use this version to print

தற்போது நாட்டில் சஞ்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிருபர் இலங்கை இராணுவத்தினரின் குடும்ப அங்கத்தவர்களிடம் எடுத்த பேட்டி உலக சோசலிச வலைத் தளத்துக்குக் கிடைத்துள்ளது. இலங்கையில் தற்போதுள்ள கடுமையான தணிக்கைச் சட்டங்களைக் காரணமாகக் கொண்டு பேட்டியாளர்களைப் பாதுகாக்கும் முகமாக அவர்களின் பெயர்கள் இங்கு வெளியிடப்படவில்லை.

நாட்டின் வடக்குப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற அண்மைக்கால மோதுதல்களின் போது நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். கொழும்பு இராணுவத் தலைமையகத்திலும் முக்கிய ஆஸ்பத்திரிகளின் அருகிலும் தங்கள் பிள்ளைகளின் தலைவிதியைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக கூடியிருக்கும் குடும்ப அங்கத்தவர்களை ஒவ்வொரு நாளும் காணக்கூடியதாக உள்ளது.

அனுபவிக்க முடியாத பொருளாதார நெருக்கடியின் காரணமாக இராணுவத்தில் சேர்ந்த, சாதாரண மக்களின், பிள்ளைகளதும் தந்தைமார்களதும் சகோதரர்கள் மற்றும் கணவர்களதும் துண்பமும் துயரமும் நிறைந்த சோகக் கதைகளை அவர்களின் உரையாடல்கள் வெளிப்படுத்துகின்றன. 17 வருடகால கசப்பான உள்நாட்டு யுத்தத்துக்கு உடனடி முடிவைக் காணும் தங்கள் விருப்பத்தைப் பலர் தெரிவித்தனர்.

இரண்டு படைவீரர்களின் சகோதரி யுத்தத்தில் சிக்கியுள்ள தனது சகோதரர்களின் தலைவிதியை விபரித்தார். இவர் தென்பிராந்தியத்தில் உள்ள ஒரு குடியிருப்பான ரத்கமையைச் சேர்ந்தவர். அவரின் மூத்த சகோதரர் மே 1ம் திகதி ஆனையிறவு இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள பளையில் கொல்லப்பட்டுள்ளார். மிலிட்டரி பொலிசாரால் மீண்டும் அழைக்கப்படும் வரை அவர் 18 மாதங்கள் இராணுவத்தை விட்டு ஒதுங்கியிருந்தார். அவரின் இளம் சகோதரரும் ஒரு படைவீரர். தற்போது அவர் யாழ்ப்பாணத்தில் மோதல் இடம்பெற்று வரும் பகுதியில் இருந்து கொண்டுள்ளார்.

இவரின் சகோதரர்கள் இருவரும் தற்செயலாக இராணுவத்தில் சேர்ந்ததாக அவர் குறிப்பிட்டார். "எங்களுடைய தந்தை அரசாங்க அளவைகள் திணைக்களத்தில் தொழிலாளியாக இருந்தார். அவர் 11 வருடங்களுக்கு முன்னர் காலமானார். குடும்பத்தில் ஐந்து பிள்ளைகள். எங்களது மூத்த சகோதரர் ஒரு வலிப்பு நோயாளி ஆகையால் எனது தாய் சுன்னாம்புத் தளத்தில் வேலை செய்யத் தள்ளப்பட்டார். அவர் வழமையாக பாதைகளில் இளநீர் விற்பனை செய்து வந்தார். கூலி வேலை செய்வதற்காக அவர் வீடுகளுக்கும் சென்று வந்தார்.

இவரது கணவரும் இராணுவ நடவடிக்கைச் சேவையில் 9 ஆவது ஆட்டிலரிப் படைப் பிரிவில் உள்ளார். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். எனது கணவரிடமும் சகோதரரிடமும் இராணுவத்திற்கு செல்ல வேண்டாம் என நான் எப்பொழுதும் வேண்டிக் கொள்வேன். ஆனால் எனது கணவர் வீட்டில் இருந்து என்ன செய்ய முடியும் என அடிக்கடிக் கேட்பார். ஒவ்வொருவராக வீட்டில் நிறுத்திக் கொண்டால் எங்களால் எப்படி வாழ முடியும்?

"உயிரழந்த ஒரு படைவீரரின் உடல் அடையாளம் காணமுடியாமல் சிதைந்திருக்குமானால், அவர்கள் சடலத்தின் மேல் சூடான தார் ஊற்றி அவரை 'மோதலில் காணாமல் போனவர்களின்' பட்டியலில் சேர்த்துவிடுவார்கள். ஒரு நூறு அல்லது ஆயிரம் தடவைகள் யுத்தம் சாபத்துக்குள்ளானது. பொறுக்க முடியாத வேதனைகளைத் தரும் இந்த யுத்தம் ஏனையவர்களுக்கும் துண்பம் விளைவிக்கும் முன் ஏதாவது ஒரு வழியில் நிறுத்தப்பட வேண்டும் என நான் வேண்டிக் கொள்கிறேன்."

இந்தச் சதிகளுக்காக அவர் அரசியல்வாதிகளை வசை பாடினார். " பொதுஜன முன்னணி அரசாங்கம் 1994ல் யுத்தத்தை நிறுத்துவதாக வாக்குறுதியளித்தது. நாங்கள் இதற்காக வாக்களித்தோம். ஆனால் அந்த வாக்குறுதிகள் தற்போது கந்தலாகியுள்ளன. நான் இப்போது யாரையும் ஆதரிப்பதில்லை. மக்கள் யுத்தத்துக்கு சேர்வது நாட்டைக் காப்பதற்காக அல்ல, அவர்களுக்கு வாழ வழியில்லாததாலேயே. ஆனால் ஒரு முறை அவர்கள் சீருடை அணிந்து ஆயுதத்தை கையில் எடுத்தவுடன் சோவினிச உணர்வுகளுக்குள் தள்ளப்படுகின்றார்கள்."

கொழும்பில் இருந்து சில கிலோமீற்றர்களுக்கு அப்பால் உள்ள கடவத்தை பிரதேசத்தில் உள்ள ஒரு விதவை, தனது கணவர் கடந்த மே 10ம் திகதி யாழ்க்குடாநாட்டில் உள்ள சாவகச்சேரியில் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டார். "வேறு தொழில்கள் கிடைக்காததால் எனது கணவர் இராணுவத்தில் சேர்ந்தார். அவர் தன்னுடைய வாழ்நாளில் சிறந்த பகுதியை இந்த பயனற்ற யுத்தத்தில் செலவழித்தார். 11 வருட சேவையில் பல பதக்கங்களைப் பெற்றிருந்த போதிலும் அவரால் ஒரு இடமாற்றத்தைப் பெற முடியாமல் போயிற்று. இன்னும் ஒன்றரை வருடங்களில் தனது 12 வருடகால சேவையின் முடிவில் அவர் விலகுவதற்கு எத்தணித்திருந்தார். ஆனால் தற்போது அவர் அனைத்தையும் இழந்து விட்டார்.

அவருக்கு 6 வயது மகன் உள்ளார். இன்னொரு குழந்தைக்காக காத்திருக்கும் அவர் எதிர்காலத்தில் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பது பற்றி தன்னால் கற்பனை செய்ய முடியவில்லை என்றார். இந்த படைவீரர்களின் தந்தை மகனின் மரணத்தின் காரணமாக பெரும் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.

கானாமல் போயுள்ள ஒரு படைவீரரின் தாய் குறிப்பிடுகையில்: "எனது மகன் நாட்டைப் பாதுகாக்கப் போனார் ஆனால் கடைசியில் எங்களுக்கு அவரின் உடலில் ஒரு துண்டைக் கூடப் பார்க்கக் கிடைக்கவில்லை. ஆயுதங்களையும் கூட கைவிட்டுவிட்டு முகாமில் இருந்து ஓட்டம் பிடிக்கையில், காயமடைந்தவர்களையும், இறந்தவர்களையும் எடுத்துச்செல்ல அவர்கள் நிற்பார்களா?" 9 ஆவது காலாட்படைப் பிரிவில் லான்ஸ் கோப்ரலாக கடமைப் புரிந்த, 33 வயதுடைய அவரது மகன், இலங்கை இராணுவம் ஆனையிறவிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து காணாமல் போனதாக ஏப்பிரல் 27ம் திகதி அறிவிக்கப்பட்டது.

"எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் அதே போல் பொதுஜன ஐக்கிய முன்னணியும் இந்த யுத்தத்துக்கு பொறுப்புச் சொல்ல வேண்டும். யார் இந்த யுத்தத்தில் வெற்றி பெற்றாலும், ஏழைகள் தோற்கடிக்கப்படுவார்கள். நாங்கள் எங்கள் பிள்ளைகளை இழந்து வருகிறோம். வயது போன காலத்தில் எங்களை பராமரிப்பது யார்? அவர்களது பிள்ளைகள் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளார்கள்," என அவர் குறிப்பிட்டார்.

ஏனைய குடும்ப அங்கத்தவர்கள் பேசுகையில்: "எங்களின் வேண்டுகோளைக் கேட்காமல் அவர் இராணுவத்தில் சேர்ந்தார். எங்கள் குடும்பத்தில் ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளுமாக 7 பேர் உள்ளனர். அவர்தான் அதில் மூத்தவர். 'நான் இராணுவத்தில் சேர்ந்து எனது பெற்றோர்களைக் காப்பேன்.' என அவர் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார் எங்கள் தந்தை ஒரு பண்னைத் தொழிலாளி, சில வருடங்களுக்கு முன் கடுமையான சுகயீனம் காரணமாக அவரால் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாமல் போனது."

ஒன்பது மாதப் பெண் குழந்தை ஒன்றை வைத்திருக்கும், ஒரு கோப்ரலின் மனைவி, குறிப்பிடுகையில்: "ஏப்பிரல் 21ம் திகதி அவரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. 'புலிகள் எங்களை எல்லாப் பக்கங்களிலும் சுற்றி வளைத்துள்ளனர்' என அவர் எழுதியிருந்தார். என்னால் முடிந்தால் நடந்தும் கூட வீட்டுக்கு செல்வேன் (300 கிலோமீட்டருக்கு மேல்). எனக்குப் புது வருட விருந்துகள் கிடையாது. ஆனால் நீங்கள் புதுவருடத்தை அனுபவிப்பீர்கள் என நினைத்து நான் சந்தோசமாய் இருப்பேன்.' (சிங்களத் தமிழ் புத்தாண்டு ஏப்பிரலில் கொண்டாடப்படும்)

"எனக்கு ஏதாவது நேர்ந்தால் உன்னையும் பிள்ளைகளையும் பார்த்துக் கொள்வதற்கு யாரும் இருக்கமாட்டார்கள்' என அவர் எப்பொழுதும் சொல்வார். வீட்டுக்கு மின் இணைப்பை பெருவதற்காக அவர் இராணுவத்தில் 10,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார் (133 அமெரிக்க டொலர்கள்). அதைத் திருப்பிச் செலுத்துவதற்காகவே அவர் இராணுவத்தில் தொடர்ந்தும் இருந்தார்.

"அவர் வீட்டில் இருக்கும் போதும் கூட யுத்த முனையில் என்ன நடந்து கொண்டிருந்தது எனப்தைப் பற்றி கதைக்கவே மாட்டார். அவர்கள் அங்கு எவ்வாறு வாழ்கின்றார்கள் என்பதை எங்களுக்கு காட்டுவதற்காக அவர் இம்முறை ஒரு கமராவை எடுத்துச் சென்றார். ஆனால் அதை தனது பங்கருக்கு எடுத்துச் செல்ல அவர் அனுமதிக்கப்படவில்லை என எழுதியிருந்தார்."

ஒரு சார்ஜன்ட் மேஜரின் விதவை மனைவி பேசுகையில்: "எனது கணவர் ஏற்கனவே இராணுவச் சேவையில் இருந்த தனது தந்தையைப் பின்பற்ற வேண்டும், என்ற என்னத்துடன் இராணுவத்தில் சேர்ந்தார். விரைவாக யுத்தம் நிலைமையை மீறியது. நாம் அனுபவிக்கும் துண்பம் பலருக்கும் பொதுவானது. முழுக் குடும்பங்களும் அனாதைகள். நாங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க முடியாது. வரும் துன்பங்களுக்கு முகம் கொடுக்க தயாராய் இருக்க வேண்டும். பிள்ளைகளுக்கான எமது அனைத்துத் திட்டங்களும் நாசமாகிவிட்டது. மொத்தம் 16 வருடங்கள் அவர் இராணுவத்தில் இருந்த போதும் வீட்டில் இருக்கும் போது எப்போதும் அவர் யுத்தத்தைப் பற்றி கதைப்பது கிடையாது. நாங்கள் அவரை ஏதாவது சொல்ல வைக்க முயற்சிக்கும் போது, 'பெருமதியான ஒன்றைப் பற்றி பேசச்' சொல்லி சொல்வார்".

இதே பிரதேசத்தில் உள்ள (தீவின் தென்பகுதி) வதுகெதரவில், ஏப்பிரல் 20ம் திகதி ஆனையிறவில் கொல்லப்பட்ட ஒரு படைவீரரை இழந்த ஒரு குடும்பத்தினர் துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தனர். அவர் 10 வருடங்கள் சேவை புரிந்ததோடு விசேட அதிரடிப் படையணியிலும் ஒரு அங்கத்தவராக இருந்துள்ளார். 1985ல் தனது தந்தையின் மரணத்துடன் தன் கல்வியை சாதாரண தரத்துடன் முடித்துக்கொண்டார்.

அவரின் தாயார் குறிப்பிட்டதாவது: "அவருக்கு குடும்பத்தை நடத்திச் செல்லும் பொறுப்பை தனது சகோதரர்களின் தோள்களில் கட்டியடிக்கும் எண்ணம் இருக்கவில்லை. அவர்கள் தச்சு வேலை செய்பவர்கள். ஆனால் கட்டுமானத் தொழிலில் பெரும் வேலைகள் இருக்கவில்லை. முதலாவது விண்ணப்பத்துக்கு நான் காசு கொடுக்கவில்லை. ஆனால் அவர் தனது சகோதரியின் பணத்தில் 96 ரூபாயை எடுத்துக் கொண்டு நேர்முகப் பரீட்சைக்கு சென்றுவிட்டார். அவருடன் இணைந்த அவரின் இரண்டு நண்பர்கள் பயிற்சிக் காலத்தின் போதே கொல்லப்பட்டுவிட்டனர். மற்றொரு நண்பர் ஏற்கனவே காயமடைந்து கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளார். அவரால் முடியாததனால் இராணுவத்தில் இருந்து விலக்கப்பட்டுவிட்டார்.

"எனது மூத்த மகன் மத்திய கிழக்கில் தொழில் செய்கின்றார். குடும்பம் சற்றுத் தலைதூக்கும் போது ஒருவரை இழந்து விட்டோம். மூத்த மகன் பணம் அனுப்பத் தொடங்கியுள்ளார். எனது மகனுக்கு இந்த நேரத்தில் செல்வதற்கு (யுத்த முனைக்கு) மனமிருக்கவில்லை. தனது சகபாடிகளின் வட்புருத்தலின் பேரிலேயே அவர் சென்றார். அவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டனர். எனது மகன் யுத்தத்தில் மூன்று முறை காயமடைந்திருக்கின்றார். அவருக்கு நிற்கவேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் இராணுவப் பொலிஸ் அவரைத் தேடிவரும் எனக் கூறினார்.

ஒரு சார்ஜன் மேஜரின் மனைவி குறிப்பிடுகையில்: "மக்களின் வாழ்க்கையை மீதப்படுத்திக் கொண்டு இந்த யுத்தம் முடிவுக்கு வருமானால் சிறந்தது. அவர்கள் புதிய ஆயுதங்களை வாங்கியதால் யுத்தத்தை நிறுத்த முடியுமா? எனது கணவருக்கு ஆனையிறவு மோதுதலின்போது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடியதாய் இருந்தது. ஆனால் அவரது சகோதரர் கானாமல் போய்விட்டார்."

ஒரு குடும்பத்தில் உள்ள அங்கத்தவர் இராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்டால், அடுத்தவர் சேவையில் இருந்து விலகிக் கொள்வார் என அவர் புரிந்து கொண்டவகையில் எமக்கு தெளிவுபடுத்தினார். ஆகவே தனது கணவர் விலகவேண்டும் என அவர் பிரார்த்திக்கின்றார்.

அவர் தென் இலங்கையைச் சேர்ந்தவர் அவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். "நான் ஐந்து வருடங்களுக்கு முன்னர் திருமணம் முடித்தேன். நான் உயர்தரப் பரீட்சை எழுதினேன், ஆனால் என்னால் வேலை தேடிக்கொள்ள முடியவில்லை. தற்போது எனது முழு வாழ்க்கைக்கும் பயந்து வாழவேண்டியுள்ளது. எனது கணவர் சேவையில் ஈடுபடாவிட்டால் பொலிசார் அவரைக் கைது செய்வதற்கு வருவார்கள்".

அண்மையில் இராணுவ நடவடிக்கையொன்றில் கொல்லப்பட்ட ஒரு படைவீரரின் பாட்டனார்: விவசாயத்தில் வாழ்க்கைக்கு போதுமானளவு சம்பாதிக்க முடியாததன் காரணமாக இளைஞர்கள் இராணுவத்தில் சேர்வதாக அவர் தெளிவுபடுத்தினார். அவர் மத்திய மலைநாட்டில் பண்டாரவளைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். "இந்தக் கிராமத்தில் அதிகமான குடும்பங்கள் கொடிய வறுமையில் உள்ளதாக" அவர் குறிப்பிட்டார். "சிலர் வாழ்வதற்கு எதையாவது சம்பாதித்துக் கொள்ள தோட்டப் புறங்களுக்குச் செல்வார்கள்.

என் அடுத்த வீட்டுக்காரரின் மகன் இராணுவத்தில் சேர்ந்துள்ளார். அவரது ஏழைத் தாய் அவர்களைப் பராமரிப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியாததே அதற்குக் காரணம். எனது பேரன் ஒரு தொழிலுக்கு தகமை தேடிக் கொள்வதற்காக ஆங்கிலம், தட்டச்சு மற்றும் தொழில்நுட்பக் கல்வியையும் கற்றார். ஒரு நாள் அவர் வேலை ஒன்றைத் தேடிக்கொண்டதாக கூறி வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் அவர் இராணுவத்தில் சேர்ந்து கொண்டார். நாங்கள் அவரை இராஜினாமா செய்துவிட வேண்டினோம். 'என்னைக் கடைசிவரை உங்களால் பராமறிக்க முடியுமா? காசு இன்றி என் சகோதரிக்கு ஒரு கணவனைத் தேட உங்களால் முடியுமா?' என அவர் கேட்டார்.

தோட்டப்புறப் பிரதேசமான கம்பளையைச் சேர்ந்த ஒரு தபால் ஊழியர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது சகோதரனை பார்வையிட வந்திருந்தார். "எனது சகோதரரால் தற்போது நடக்கமுடியாதுள்ளது. அவரது கால் கடுமையான தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது. அவர் ஒரு ஏவுகனைத் தாக்குதலில் சிக்கியுள்ளார். அவர் முழுக் குடும்பத்தையும் பராமரிக்கின்றார். ஆனால் தற்போது அவர் அடுத்தவர்களின் உதவியுடன் வாழவேண்டியுள்ளது. நாங்கள் ஐந்துபேர் அடங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்களில் மூன்றுபேர் மணம் முடித்துவிட்டார்கள். என் இளம் தங்கை பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருக்கிறார். என் சகோதரரால் மட்டுமே அவருக்கு உதவ முடியும். எனது அப்பாவும் சகோதரியும் சகோதரர்களும் முன்னர் ஒரு ஏக்கருக்கும் குறைவான சிறிய நிலப்பரப்பில் விவசாயம் செய்தார்கள். நாங்கள் அந்தக் குடும்பத்துக்கு உதவ முடியாதளவுக்கு ஏழைகள்".

யுத்தத்தைப் பற்றிக் கேட்டபோது அவர் குறிப்பிட்டதாவது: "நாட்டைப் பாதுகாப்பதற்காக யுத்தம் செய்வது பொருத்தமானது". அதே மூச்சில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது: யுத்தம் இல்லை என்றால் எத்தனையோ இளைஞர்களின் வாழ்க்கை எஞ்சியிருக்கும்.