Marxist internationalism vs. the perspective of radical
protest
A reply to Professor Chossudovsky's critique of
globalization
மார்க்சிச சர்வதேசியம் எதிர் தீவிர எதிர்ப்பு
முன்னோக்கு
பூகோளமயமாக்கல் தொடர்பாக பேராசிரியர்
சோசுடோவ்ஸ்கியின் விமர்சனத்திற்கு பதில்.
By Nick Beams
23 February 2000
Use
this version to print
பேராசிரியர் மைக்கேல்
சோசுடோவ்ஸ்கியால்எழுதப்ப்ட்டு, உலக சோசலிச வலைத்
தளத்தில் 15 தை 2000ல் பிரசுரிக்கப்பட்ட ''சியாட்டிலும் அதற்கு
அப்பாலும்: புதியஉலக ஒழுங்கை பலவீனமாக்கல்'' என்ற கட்டுரைக்கு
பதிலளிக்கும் முகமாக,உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS)
ஆசியர்குழு உறுப்பினரும் ஆஸ்திரேலியசோசலிச சமத்துவக்கட்சியின்
தேசிய செயலாளரும் ஆன நிக் பீம்ஸால் எழுதப்பட்ட கட்டுரையின்மூன்று
பகுதிகளுள் இறுதிப் பகுதியை உலக சோசலிச வலைத்்்்
தளம் இங்கே வெளியிடுகிறது.)
நிக் பீம்ஸால் எழுதப்பட்ட கட்டுரையின் மூன்று
பகுதிகளுள் பகுதி1
ஜுன்22 லும், பகுதி2
ஜுன் 26 லும் பிரசுரிக்கப்பட்டது.
பகுதி 3
பேராசிரியர் சோசுடோவ்ஸ்கியின்படி,உலக வர்த்தக
அமைப்புக்கும் (WTO)
பூகோள முதலாளித்துவத்தின் ஏனையநிறுவனங்களுக்கும் எதிராக
வளர்கின்றஇயக்கம் இந்த பொருளாதார முறையைகைகழுவி விடுவதையும்
அதன் நிறுவனங்களைக்கலைத்துவிடுவதையும் நோக்கி கட்டாயம்இயக்கப்பட
வேண்டும்.
இந்தக் கட்டுரையின்முதல் இரண்டு பகுதிகளில்
நாம் ஏற்கனவேவிளக்கியவாறு, சோசுடோவ்ஸ்கியைப் பொறுத்தமட்டில்
இதன் பொருள், தற்போதையபொருளாதார ஒழுங்கு கட்டாயமாகநிராகரிக்கப்பட
வேண்டும் மற்றும் சமுதாயமானது தேசிய அரசு பெரிய அளவில்
பொருளாதாரத்தின் மீது ஆளுமையை செலுத்திய முந்தையவளர்ச்சிக்
கட்டத்திற்குத் திரும்பவேண்டும்என்பதாகும். இந்த அடிப்படைப்
பிரச்சினையின்மீதுதான் நமது வேறுபாடுகள் மையம்கொண்டுள்ளன.
சோசுடோவ்ஸ்கியின்அணுகு முறைக்கு மாறாக,
பரந்த மக்கள்திரளுக்கான வேலைத்திட்டம் மற்றும்முன்னோக்கின்
வளர்ச்சியானது, இடம்பெற்றிருக்கிற பரந்த பொருளாதாரமாற்றங்களை
சர்வ சதாரணமாய்நிராகரித்தல் மூலம் முன்னெடுக்கப்படமுடியாது.
இன்னும் சொல்லப்போனால்,உற்பத்தி பூகோள மயமாக்கலில்
சம்பந்தப்பட்ட சமூக மற்றும் பொருளாதார நிகழ்ச்சிப்போக்குகளும்
பூகோள நிதி அமைப்பின்வளர்ச்சியும் கட்டாயமாக விமர்சனஆய்வுக்கு
உட்படுத்தப்பட வேண்டும்.எனவேதான் மனித சமுதாயத்தின்
வரலாற்றுவளர்ச்சி நிலையிலிருந்து
அவற்றின் முக்கியத்துவம்புரிந்துகொள்ளப்பட
முடியும். வேறுவார்த்தைகளில் சொல்வதென்றால்,பூகோள
மயமாக்கப்பட்ட உற்பத்திமுறையின் பகுத்தறிவு ரீதியான பருப்பினை,தற்போது
அதனை மூடியிருக்கும் சமூகமற்றும் பொருளாதார வடிவங்களில்இருந்து
தோண்டி எடுப்பதற்கு அதுதேவையானதாகும்.
பூகோள முதலாளித்துவத்தின் நெருக்கடி தேசிய
அரசின் இறையாண்மையையும் பொருளாதார அதிகாரத்தையும்பாதுகாப்பதற்கான
கோரிக்கைகளைமுன்னெடுத்து வருவது இதுதான் முதல்தடவை அல்ல.
1930களில் மாபெரும் பொருளாதாரத் தாழ்வின் போது அத்தகைய
நிலைப்பாடுகள் பொதுவாக இருந்தன. அந்த நேரத்தில்இந்நிலைப்பாடுகளை
ஆய்வு செய்கையில்லியோன் ட்ரொட்ஸ்கி இந்தப் பிரச்சனையைமனித
சமுதாயத்தின் முழு அபிவிருத்தி மற்றும்அதன் பரிணாமத்தை ஆளுமை செய்யும்விதிகளின்
உள்ளடக்கத்துக்குள் வைத்தார்.
அவர் எழுதினார்: ''மிகச்சிறிய உழைப்பினைக்கொடுத்து
மிகப்பெரிய அளவு பொருட்களைஅடையக்கூடிய தூண்டலால்
மனிதகுலமானதுஅதன் வரலாற்று விடியலில் இயங்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது.
கலாச்சார வளர்ச்சிக்கானஇந்த சடரீதியான அடித்தளமானது.
மிகவும்ஆழமான பார்வையையும் கூட வழங்குகிறது.அதன் மூலம்
நாம் சமூக ஆட்சிகளையும்அரசியல் வேலைத்திட்டத்தையும் கணிப்பீடுசெய்யலாம்.
எந்திரவியல் உலகில் புவி ஈர்ப்புவிதி எவ்வளவு முக்கியத்துவம் உடையதோஅதேபோல
மனித சமுதாய உலகில் உழைப்பின்உற்பத்தித்திறன் அதே அளவு முக்கியத்துவம்உடையது.
விளைகின்ற சமுதாய வடிவங்களின்மறைவு, இந்த கொடுமையான
விதியின்வெளிப்பாடுதான். இந்த விதிதான் மனிதனைமனிதன் சாப்பிடுவதன்
மீது
அடிமைத்தனத்தின்வெற்றியையும் அடிமைத்தனத்தின்
மீது பண்ணைஅடிமைகளின் வெற்றியையும் பண்ணை அடிமைகளின்மீது
வாடகைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் வெற்றியையும்
தீர்மானித்தது. உழைப்பின்உற்பத்தித்திறன் விதியானது தனது வழியைநேராகக்
கண்டு கொள்ளாது மாறாகமுரண்பாடான வகைகளில், தனது
வழியில்எதிர்ப்படும் பூகோள மற்றும் மனித உடற்கூறுமற்றும்
சமூகத் தடைகளை வெடித்தெழும்விசைகளாலும் திடீர்த் தடைகளாலும்மற்றும்
பாய்ச்சல்களாலும் வளைவுசுழிவுகளாலும் கடந்து வரும். இங்கெல்லாம்வரலாற்றில்
பல்வேறு 'விதிவிலக்குகள்' இருக்கின்றன.அவை உண்மையில் விதியின் குறிப்பிட்ட
விலகலாகஇருக்கும்.'' (1)
இந்த நிலைப்பாட்டிலிருந்துதான்ட்ரொட்ஸ்கி,
தேசிய அரசு முறையின் மட்டுப்படுத்தப்பட்ட குறுகிய பாதைக்குள்
ஏதோஒருவகையில் பலவந்தமாய் திருப்பி அனுப்புவதற்கான
பொருளாதார நிகழ்ச்சிப் போக்குகளுக்கான அழைப்பை
அணுகுகிறார்: ''புதிய தொழில்நுட்பத்திற்கு பொருளாதார மற்றும்சமுதாய
உறவுகளின் தளத்தை எப்படிப்பொருத்துவது என்ற முற்போக்குப்பணிதலைகீழாக
மாறிவிட்டது மற்றும் அது பழையதேசிய தளத்திற்கும் பழைய
சமூக உறவுகளுக்கும் பொருந்துகிறாற்போல் உற்பத்தி சக்திகளைஎப்படித்
தடுப்பது மற்றும் எப்படி
வெட்டுவது பற்றிய பிரச்சனையாகவும்தெரிகிறது.''
(2)
ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதற்கானநிகழ்ச்சிப்
போக்குகள் கடந்த ஐம்பதுஆண்டுகளாக அளவிட முடியா வகையில்வளர்ந்துள்ளன.
இது தொடர்பாகஎண்ணிப்பார்க்குங்கால் நாடுகடந்தநிறுவனங்களின்
உருவாக்கம் 1930களில் மட்டும்வெளிப்படத் தொடங்கியிருந்தது,
அதுவும்பிரதானமாக எண்ணெய்த் தொழிற்துறையில்மட்டும்
தான், ஆனால் இப்போது அதுஉற்பத்தியின் ஒவ்வொரு வடிவத்திலும்
மேலாதிக்கம் செய்கிறது. இன்றைய உலகில் இருக்கின்றமிகப் பெரிய
100 பொருளாதார நிறுவனங்கள்பற்றிய அண்மைய மதிப்பீடுகளின்படி,
பாதியளவுநாடுகடந்த நிறுவனங்கள், மேலும் அந்தஎண்ணிக்கை
கடந்த ஆண்டில் இடம்பெற்றஇணைப்பு அலையில் இன்னும் அதிகரிக்கலாம்.இந்த
உண்மை மட்டுமே தேசிய அரசுக்குபொருளாதார இறையாண்மையைமீட்டுவிக்கும்
சோசுடோவ்ஸ்கியின் வேலைத்திட்டத்தின் படுசாத்தியமின்மையை எடுத்துக்காட்டுகிறது.
நாடு கடந்த நிறுவனங்களின் வளர்ச்சியும்பொருளாதார
வடிவங்களின் அதன்மேலாதிக்கமும் உழைப்பின் உற்பத்தித்திறன் பற்றிய
விதியின் வெளிப்பாடாகும். இந்தஅமைப்புகளின் தோற்றம் வெறுமனேதேசிய
அரசு மற்றும் தேசிய நிறுவனங்களின்உயர் வளர்ச்சியை மட்டும்
குறிப்பிடவில்லை,அது பொருளாதார மற்றும் சமூகஅமைப்புகளின்
புதிய மற்றும் உயர் வடிவங்களையும் கூட சுட்டிக்காட்டுகிறது.
இங்கு ''சுதந்திரசந்தை'' க்கு வக்காலத்து
வாங்குவோர்,நனவு பூர்வமான திட்டமிடலினை அடிப்படையாகக்
கொண்ட சோசலிச பொருளாதாரஅமைப்பின் சாத்தியம் பற்றிய
அவர்களின்முடிவற்ற கண்டங்களுடன் அவர்களால்உண்டு பண்ணப்பட்ட
தத்துவவியல் குழப்பத்தைஊடுருவ வேண்டியது அவசியமானதாகும்.சாராம்சத்தில்
நாடுகடந்த நிறுவனங்களின்தோற்றமானது, முதலாளித்துவ
சமூகஉறவுகளின் அமைப்புக்குள்ளே முதலாளித்துவசந்தையின் அழிவுப்போக்குகளால்
விளையும்அராஜகத்தையும் வீணாக்கலையும் வென்றுசெல்ல
விழையும் முற்சியைத்தவிர வேறொன்றுமில்லை.
நாடு கடந்த நிறுவனங்களுக்குள்ளேசெயல்பாட்டிற்கான
அடிப்படை, உற்பத்திநிகழ்ச்சிப் போக்கினை நனவுபூர்வமானதிட்டமிடலுக்கும்
கட்டுப்பாட்டிற்கும்கீழ் கொண்டு வருவதற்கான தொடர்ச்சியானமுயற்சியாகும்.
சமுதாயம் ஒட்டு மொத்தத்தின்உள்ளேயும் சமூக உறவுகள் சந்தையின்அராஜகத்தால்
மேலாதிக்கம் செய்யப்படுகின்றன என்பது நடக்கும் நிகழ்வுதான்
என்றாலும்கூட, நாடுகடந்த நிறுவனங்களின் வளர்ச்சியானதுஇந்த
அராஜகத்தை வெற்றிகொள்ளமுடியாது. இன்னும் சொல்லப்போனால்இந்த
நிகழ்ச்சிப் போக்கானது, முதலாளித்துவசந்தையின் சமுதாய ரீதியில்
அழிவுகரமானமற்றும் அராஜகப் போக்குகளை இன்னும்அதிக
அளவில் குவிப்பதற்கே வழிவகுக்கிறது.இருப்பினும் இதனை எதிர்க்காமல்,
நாடுகடந்த நிறுவனம் உழைப்பின் உற்பத்தித்திறனை அபிவிருந்தி செய்ய
தொடர்ச்சியானஓட்டத்தில் ஒரு முயற்சியை, பொருளாதாரநடவடிக்கையை
நனவு பூர்வமான கட்டுப்பாட்டிற்கு கீழ்கொண்டு வருவதற்கான
ஒருமுயற்சியைக் குறிக்கிறது.
அறுபதாண்டுகளுக்குமுன்னால் எழுதப்பட்ட
தனது அலசி ஆராய்ந்தகட்டுரையில் நோபல் பரிசு வென்ற
பொருளாதார வல்லுநர் ரொனால்ட் ஹெ ச். கோஸ்,''நிறுவனத்தின்
சிறப்பு முத்திரை விலை செயல்பாட்டுமுறையை நசுக்குவதுதான்''
என்று சுட்டிக்காட்டினார். சந்தையின் கோளத்திற்குள்ளே(கார்பரேஷன்)
நிறுவனங்கள் தங்கள்நடவடிக்கைகளைச் செய்கின்றன. மற்றும்இறுதியில்
அதனால் மேலாதிக்கம் செய்யப்படுகின்றன. ஆனால் அவை,
ஒரு வாளி மோரில் அதிகஅளவு வெண்ணெய் திரளுவதுபோல இந்தநனவற்ற
கூட்டுறவின் கடலில் நனவானசக்தியின் தீவுகள்'' போல் அவ்வாறு
செய்கின்றன.(3)
கடந்த நூற்றாண்டின் முடிவில் தேசியஏகபோகங்களின்
உருவாக்கத்திலிருந்துநாடுகடந்த கம்பெனிகளின் உருவாக்கம்மற்றும்
இப்பொழுது நாடுகடந்த பகாசுரநிறுவனங்களின் இணைப்பு இயக்கம்
வரை,குழுமங்களின் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும்சம்பந்தப்பட்டிருப்பது
கண்ணுக்குத்தெரியாதசந்தையின் கையை கண்ணுக்குத் தெரிகின்றதிட்டமிடலின்
கையால் பதிலீடு செய்வதற்கானமுயற்சியாகும். அதேபோக்குத்தான்இப்போது
பொருளாதாரத்தின் அனைத்துப்பகுதிகளினூடாகவும் அடித்துச் செல்லும்தொழில்
நுட்ப மாற்றங்களில் காணப்படுகிறது.தகவல் தொழில் நுட்பவியல்
என்று அழைக்கப்படுவதன் நோக்கம் இருக்கின்ற குழுமத்துக்குள்ளேஉடனடி
உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கினைமிக நனவு பூர்வமானதாகச் செய்வதுமட்டுமல்லாமல்,
பல்வேறு கிளைகளின்,பல்வேறு நிறுவனங்களினதும் செயல்பாடுகளையும்
கூட, அவை அடுத்தடுத்து ஒன்றை ஒன்றுஅமைந்திருந்தாலும் சரி அல்லது
உலகின்மறுபக்கத்தில் அமைந்திருந்தாலும் சரிஅவற்றின் செயல்பாடுகளை
என்று மிராதஅளவு இன்னும் நெருக்கமாக ஒருங்கிணைப்பதற்கும்
ஆகும்.
இந்த வரலாற்று நிலைப்பாட்டில்,இருந்து
நோக்குகையில், பூகோள மயமாக்கப்பட்ட உற்பத்தியின் முக்கியத்துவம்
முதலாளித்துவகட்டமைப்புக்குள்ளே திட்டமிட்ட சோசலிசபொருளாதாரத்தின்
அபிவிருத்திக்கானசடரீதியான முன் நிபந்தனைகளின் பக்குவத்தைஅது
பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதுதான்.
உற்பத்தி நிகழ்ச்சிப் போக்குகளை நாடுகள்மற்றும்
கண்டங்களைக் கடந்து கடைசிக்கோடிவரை ஒழுங்கமைக்க
முடியும்என்றால், சரக்குகள் மற்றும் பணிகளின்இயக்கத்தை விசும்பையும்
காலத்தையும்தழுவி ஊசிமுனையளவு துல்லியமாய் தீர்மானிக்கமுடியும்
என்றால், பூகோளப் பொருளாதாரத்தை உலக மக்களின்
தேவைகளை நிறைவுசெய்வது சடரீதியாக சாத்தியம் என்பதில்அங்கு
கேள்விக்கே இடமில்லை. சுருங்கச்சொன்னால் ''சுதந்திர சந்தையாளர்''களின்
வாதம், திட்டமிடப்பட்ட சோசலிசப்பொருளாதாரம் என்பது
சிக்கலானமுடிவெடுக்கும் நிகழ்ச்சிப் போக்கின் காரணமாக பண்புரீதியாக
முடியாது, ஆகையால்,சந்தை மற்றும் இலாப முறை தாக்குப்பிடிக்கும்
சமூக அமைப்பின் வடிவத்தை மட்டுமேகொண்டிருக்கும், முதலாளித்துவப்
பொருளாதாரத்திற்குள்ளேயே உள்ள அபிவிருத்தியினால்நடைமுறையில்
அதுவும் மறுதலிக்கப்படும்என்பது ஆகும்.
அதே வேளையில், முதலாளித்துவசமூக உறவுகளின்
அமைப்புக்குள்ளே,அனைத்து பொருளாதார நடவடிக்கையும்இலாப
வேட்கைக்குக் கீழ்ப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பரந்த
தொழில் நுட்ப மாற்றங்கள்அவசியமான அளவு. பரந்த மக்கட்
திரளினதுவாழ்க்கைத் தரங்களைத் தொடர்ச்சியாகசீரழிப்பதில்
விளைவை ஏற்படுத்தும் மற்றும்சமூக துருவமுனைப்படுத்தலின் வளர்ச்சியையும்-
ஒரு துருவத்தில் நம்ப முடியாத அளவுசெல்வக் குவிப்பையும் மற்றொரு
துருவத்தில்அதன் சமூக நோய் நொடிகளுடனும்சேர்த்து அதிகரித்த
துன்பத்தினையும் விளைவிக்கும்.
இந்த நெருக்கடிக்குத் தீர்வானது, கற்பனவாத
தேசியப் பொருளாதார இறையாண்மைக்குசாதகமாக
பூகோளமயமாக்கலினைநிராகரிப்பதில் இல்லை, மாறாக முதலாளித்துவத்தின்
காலத்திற்கொவ்வாத சமூக உறவுகளினால் திணிக்கப்படும் கசக்கிப்பிழிதல்களில்
இருந்துஉற்பத்திச் சக்திகளை விடுவிப்பதில்தான்இருக்கிறது. அத்தகைய
இயக்கத்திற்கானசமூக மற்றும் அரசியல் அடிப்படை
தொழிலாளவர்க்கத்தின் சர்வதேச ஐக்கியமாகும்.புதிய தொழில்
நுட்பங்களின் விளைவின் கீழ் தொழிலாளவர்க்கம் ''காணாதுபோய்விட்டது''
என்றுசாதிப்பவர்களின் குற்றச்சாட்டுகளுக்குமாறாக, உண்மையில்
அது மொத்தமாகவும்ஒப்பீட்டு ரீதியிலும் பெருகியுள்ளது.
உலகில்ஒரு சில பத்தாண்டுகளுக்கு
முன்பாகவேதொழிற்சாலை ஏற்பட்ட பிராந்தியங்களில்,உற்பத்தி
பூகோளமயமாக்கலானதுபலகோடிக்கணக்கான தொழிலாளர்களைத்
தோற்றுவித்துள்ளது. முதலாளித்துவ வளர்ச்சியின்ஆரம்பக் கட்டங்களில்
இருந்த உழைப்பின்பழைய வடிவங்களை அவை மறையச்செய்தது
போலவே, முன்னேறிய முதலாளித்துவநாடுகளில் உழைப்பின் பழைய
வடிவங்களில்பெரும்பான்மையானவை மறைந்துவிட்டன.ஆனால்
தொழில் நுட்பத்திறன் கண்டுபிடிப்புக்களுடன் தொடர்புடைய
பொருளாதாரமாற்றங்கள் அர்த்தப்படுத்துவது யாதெனில்,மக்கட்
தொகையின் பலபகுதிகள், முதலாளித்துவஆட்சியின் ஸ்திரத்தன்மை சார்ந்திருந்த
ஒருசமயம் நடுத்தர வர்க்கமாகக் கருதப்பட்டவை கூட, சக்திமிக்க
வகையில் பாட்டாளி வர்க்கமயப்படுத்தப்பட்டுள்ளன என்பது
தான்.
இந்த நிகழ்ச்சிப் போக்குகளின் விளைவு,மனிதகுல
வரலாற்றில் முதன் முறையாகஉலக மக்களில் பெரும்பான்மையினர்தங்களின்
உழைப்புச் சக்தியைத்தவிர விற்பதற்குவேறு எதுவும் இல்லாத
பாட்டாளி வர்க்கத்தினர் ஆகியதுதான்.
உலகின் ஒவ்வொரு பகுதியிலும்,தேசியப்
பொருளாதார வாழ்க்கையில்குறிப்பிட்ட வேறுபாடுகள் என்னவாகஇருப்பினும்,
உழைக்கும் மக்களின் பரந்தமக்கட் திரளினர் தங்களின் சமூக
நிலைமைகள்அதே பூகோள பொருளாதார முறையின்நடவடிக்கையால்
சீரழிந்துள்ளது என்பதைக்காண்கின்றனர். ஒருங்கிணைந்த
பூகோளமுதலாளித்துவப் பொருளாதாரமானது,அவர்களின் தேசிய
மூலம் எதுவாக இருப்பினும்செல்வந்தத்தட்டினருக்கும் மக்கட்தொகையின்
பரந்த மக்கட் திரளுக்கும் இடையில் பிரிவாக- பூகோள ரீதியில்
துருவமுனைப்படுத்தப்பட்டசமுதாயத்தைத் தோன்றச் செய்திருக்கிறது.
பூகோள மயமாக்கலின் விளைவு ஏற்கனவேசமூக
எழுச்சிகளை விளைவித்துள்ளது -இரண்டைக்குறிப்பிடுவதென்றால்
1995-ல் பிரான்சில் பரந்தவேலை நிறுத்தப் போராட்ட அலையும்இந்தோனேஷிய
சர்வாதிகாரி சுகர்ட்டோவின்வீழ்ச்சியும் ஆகும்- இவை பூகோள
முதலாளித்துவப் பொருளாதாரத்தினுள்ளே நிலையற்றதன்மை அதிகரித்து
வருவதன் அறிகுறிகளாகும்.
1990களின் தசாப்தம் சோசலிசத்தின் தோல்விமற்றும்
சந்தையின் வெற்றி பற்றிய பிரகடனம்செய்யும் சூத்திரங்களுக்கு
திறக்கப்பட்டது.ஆனால் இவ்வெற்றியானது குறுகிய வாழ்வுகொண்டதாகவே
நிரூபிக்கப்பட்டிருக்கிறது.கடந்த பத்தாண்டு வரிசைக்கிரமமானநிதி
மற்றும் பொருளாதார நெருக்கடிகளைக்கண்டிருக்கின்றது -
ஸ்காண்டிநேவியன் வங்ககளின்நெருக்கடியைத் தொடர்ந்த 1992ல்
ஐரோப்பியநாணயமாற்று வீத தொழிற்பாட்டின்சீர்குலைவு, 1994-95ல்
50 பில்லியன் டாலர் மெக்சிகன்பிணை எடுப்பைத் தொடர்ந்து
1994-ன் பங்குப்பத்திர சந்தைக் குழப்பம், பூகோள நிதியமைப்புமுறையின்
நெருக்கடியாய் விரைவில் மாறிய1997-98ன் ஆசிய நிதி நெருக்கடி
என்று கூறப்படுவதுஆகியனவாகும். இப்போது புதிய நிதிப் புயல்கள்முதலாளித்துவ
அமைப்பின் இதயத்தில், அமெரிக்கநிதிச் சந்தைகளில் கடன் மற்றும்
ஊக வாணிபத்தின்முக்கியப் பகுதியில் வளர்ந்து கொண்டிருக்கின்றன.
சியாட்டிலில் உலக வர்த்தக அமைப்பின்கூட்டத்தில்
பிரதான முதலாளித்துவ சக்திகள்எந்தவித உடன்பாட்டிற்கும் வர
இயலாமற்போனதைப் போலவே, இந்த நிதி வெடிப்புக்கள்
உறுதியாய் பூகோள முதலாளித்துவப்பொருளாதாரத்தின் நடந்துகொண்டிருக்கும்நிலை
முறிவின் அடையாளங்களாகும். இந்தநிலைமுறிவு முன்னேறிய முதலாளித்துவ
நாடுகளிலும்அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் என்றுஅழைக்கப்படுவனவற்றிலும்
ஆழமானசமூகப் போராட்டங்களை ஒரே மாதிரியாய்உண்டு பண்ணும்.
ஆனால் தீர்க்கமான கேள்விஎந்த வேலைத்திட்டத்தின் மீது இந்த
இயக்கம்வளர்ச்சி அடையும் என்பதுதான். எல்லாவகை பகுதி
மற்றும் தனிப்பட்ட விஷய கோரிக்கைகள் பாத்திரத்தை ஆற்றும்,
சந்தேகமில்லை.ஆனால் இந்தப் போராட்டங்கள்,அவற்றின்
மிகவும் முன்னேறிய சக்திகளுக்குதெளிவாகத் தயாரிக்கப்பட்ட சர்வதேசியமுன்னோக்கு
வழிகாட்டக்கூடிய மட்டத்திற்குமட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டும்.
இதற்கு இருபதாம் நூற்றாண்டின் அரசியல்படிப்பினைகளை
- எல்லாவற்றுக்கும்மேலாக 1917-ன் ரஷ்யப் புரட்சியின்
விளைபொருள்மற்றும் இயல்பின் வரலாற்றுப் புரிதலைஉட்கிரகித்தல்
தேவைப்படுகிறது.
ரஷ்யப்புரட்சி- 1870 லிருந்து 1914 வரை முதலாளித்துவ
பூகோளமயமாக்கலின் முதல் கட்டத்தால் தயாரிக்கப்பட்டபுறநிலை
ரீதியான பொருளாதார மற்றும்சமூக நிலைமைகளுக்கு - சோசலிச
அடித்தளங்களின் மீது சமுதாயத்தை மறு நிர்மாணம் செய்வதற்கான
முதலாவது முயற்சியாக இருந்தது.லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின்
போல்ஷேவிக்கட்சித் தலைமையும் முதலாளித்துவத்தைமுதலாவதாக
வீழ்த்தப் பொறுப்பெடுத்ததொழிலாளர்களும், ரஷ்யாவில் அரசியல்அதிகாரத்தைக்
கைப்பற்றுவது அத்தோடுமுடிந்துவிடுவதல்ல, மாறாக இன்னும்சொல்லப்போனால்
பரந்த புறநிலையை- உலகசோசலிசப் புரட்சியை நோக்கியமுதல்
அடி என்ற புரிதலினால் தூண்டப்பட்டும்வழிநடத்தப்பட்டும் இருந்தார்கள்.
சமுதாயத்தை சோசலிச மறுநிர்மாணம்செய்தலின்
முதலாவது முயற்சி இறுதியில்தோல்வி அடைந்தது. புரட்சி தனிமைப்படநேர்ந்ததோடு
அது பரவத் தவறியது,ஸ்ராலினிச அதிகாரத்துவம் வடிவிலும் மற்றும்அதன்
''ஒரு நாட்டில் சோசலிசம்'' எனும்முன்னோக்கு வடிவிலும்
ஆபத்தான தேசியபிற்போக்கின் தோற்றத்திற்கான சூழ்நிலைகளைஉண்டுபண்ணியது.
அதனைத் தொடர்ந்தஆண்டுகளில் சர்வதேசத்
தொழிலாளவர்க்கத்தின் தலைமையானது, முதலில்சமுகஜனநாயகத்தாலும்
பின்னர் ஸ்ராலினிசம்மற்றும் நாஜிசத்தாலும் படுகொலைசெய்யப்பட்டதன்
ஊடாக சர்வதேசத்தொழிலாள வர்க்கத்திற்கு பயங்கரமானதாக்குதல்கள்
தொடுக்கப்பட்டன.ரஷ்யப் புரட்சியின் சீரழிவும் அதன்
தலைமைபடுகொலை செய்யப்பட்டமையும்தொழிலாள வர்க்கத்தினுள்
பெரும் குழப்பத்தைத் தோற்றுவித்தவேளை, மார்க்சிசம்மற்றும்
கம்யூனிசத்தின் பேரில் மிகவும் படுபாதகமான குற்றங்கள் நிறைவேற்றப்பட்டன.
சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்துக்குள்ளே
தத்துவார்த்த மற்றும் அரசியல் சீரழிவின்விளைவாக உண்டு பண்ணப்பட்ட
சூழ்நிலைகள்-சமூக சீர்திருத்த வாதம் மற்றும் ஸ்ராலினிசம்-அதைப்
போலவே மாவோயிசம் மற்றும்கெரில்லாயிசம் போன்ற விவசாயியை
அடிப்படையாகக் கொண்டதும் குட்டி முதலாளித்துவத்தைஅடிப்படையாகக்
கொண்டதுமானஇயக்கங்களுடன் தொடர்பு கொண்ட-பல்வேறு
தேசியவாதக் கோட்பாடுகளின்மேலாதிக்கத்திற்கான சூழ்நிலைகளைஉண்டுபண்ணின.
இந்த நிகழ்ச்சிப்போக்குதொழிலாள வர்க்கத்துடன்
அரசியல்வழிவிலகலை வாரிசாக விட்டுச் சென்றுள்ளது.ஆனால் சர்வதேச
சோசலிச இயக்கத்தைப்புதுப்பிக்கவும் சர்வதேசத்
தொழிலாளவர்க்கத்தை மறுநோக்கு நிலைப்படுத்தவும்மற்றும்
தெளிவூட்டவும் அதற்கு அரசியல்கற்பிக்கவும் ஏற்ற புறச் சூழ்நிலைகள்தோன்றுகின்றன.
ரஷ்ய புரட்சியானது முதலாளித்துவ பூகோள மயமாக்கலின் முதலாவதுகட்டத்தின்
விளைபொருளாக இருந்தால்,பின்னர் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகவரலாற்று
நிகழ்ச்சிப் போக்கின் மேலும்உக்கிரமடைதலானது புதிய புரட்சிகரஎழுச்சிகளை
நிச்சயமாக உண்டு பண்ணும்.
வரலாற்றின் சக்கரங்கள் அனைத்தையும்மிக
மெதுவாகவே அரைக்கின்றன என்றுசிலவேளை கூறப்படுகிறது. இந்த
உணர்ச்சிகளின்மீது தன்னைத் தளப்படுத்திக் கொண்டுகுட்டி முதலாளித்துவ
சந்தர்ப்பவாதமானது,தொழிலாள வர்க்கத்தினுள் புரட்சிகரத்தலைமையைப்
படிப்படியாய்க் கட்டிஎழுப்பும் நீண்ட போராட்டத்திற்கு எதிராகபுதிய
வழிகளை, குறுக்கு வழிகளை மற்றும்உடனடி ''பலன்கள்'' ஆகியவற்றை
வழங்குகிறது.வரலாற்று நிகழ்ச்சிப்போக்கானதுசில வேளைகளில்,
மெதுவாக நிகழ்வதுபோலதோன்றுமாயின் அது எப்பொழுதும்மிகவும்
முழுமை பெற்றதாக இருக்கும்.மக்கட்திரளை முன்னேற்றுவதற்காகவழங்கப்பட்டதாக
உரிமை கோரும்அனைத்து தேசியவாத வேலைத்திட்டங்களும்''ஒன்றின்
மேல் ஒன்று இல்லாமல்'' தரைமட்டமாகியுள்ளன.
இருபதாம் நூற்றாண்டின்மாபெரும் நிகழ்வுகளின்
சோதனையில்நின்று பிடிக்கும் ஒரே வேலைத்திட்டம்
லியோன்ட்ரொட்ஸ்கியால் வளர்த்தெடுக்கப்பட்டதும்இன்று
அனைத்துலகக் குழுவின் தலைமையின்கீழ் நான்காம் அகிலத்தால்
முன்னெடுத்துச்செல்லப்படுவதுமான சர்வதேச சோசலிசமுன்னோக்கு
ஆகும். இந்த வேலைத்திட்டத்தின்அடிப்படையில் சர்வதேச
தொழிலாளர்இயக்கத்தை மறு கல்வியூட்டவும் மறுஒழுங்கமைக்கவுமான
குவிமையப் புள்ளியாக உலக சோசலிச வலை தளம் ஆகும்என்பதில்
நாம் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.நமது காலத்திய சவால்களை
எதிர்கொள்ளகட்டாயம் முகம் கொடுத்தாக வேண்டியதீர்க்கமான
அரசியல் பிரச்சனைகளின் மீதானகலந்துரையாடலை திறந்து விட்டதற்காக,நாம்
பேராசிரியர் சோசுடோவ்ஸ்கியினால்வழங்கப்பட்ட பங்களிப்பை
வரவேற்கிறோம்.
குறிப்புகள்:
1. லியோன் ட்ரொட்ஸ்கி,எழுத்துகளில் தேசியவாதமும்
பொருளாதாரவாழ்க்கையும்
1933-34, பக்கம் - 158
2. லியோன் ட்ரொட்ஸ்கி, அதே நூல். மேற்கோள்பக்கம்
- 159
3. ரொனால்ட் ஹெ ச்.கோஸ்,
பொருளாதாரத்தில் நிறுவனத்தின்இயல்பு 4,
1937,
ஹெ ன் ஊட்ஸின் வால்ஸ்ரீட்டில் மேற்கோள்காட்டப்பட்டது,
பக்கம் - 249.
|