World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Marxist internationalism vs. the perspective of radical protest

A reply to Professor Chossudovsky's critique of globalization

மார்க்சிச சர்வதேசியம் எதிர் தீவிர எதிர்ப்பு முன்னோக்கு

பூகோளமயமாக்கல் தொடர்பாக பேராசிரியர் சோசுடோவ்ஸ்கியின் விமர்சனத்திற்கு பதில்.

By Nick Beams
21 February 2000

Use this version to print

பேராசிரியர் மைக்கேல் சோசுடோவ்ஸ்கியால் எழுதப்ப்ட்டு, உலக சோசலிச வலைத் தளத்தில் 15 தை 2000ல் பிரசுரிக்கப்பட்ட ''சியாட்டிலும் அதற்கு அப்பாலும்: புதியஉலக ஒழுங்கை பலவீனமாக்கல்'' என்றகட்டுரைக்கு பதிலளிக்கும் முகமாக, உலகசோசலிச வலைத் தளத்தின் (WSWS)ஆசியர்குழு உறுப்பினரும் ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக்கட்சியின் தேசிய செயலாளரும்ஆன நிக் பீம்ஸால் எழுதப்பட்ட கட்டுரையின் மூன்று பகுதிகளுள் முதல் பகுதியை உலக சோசலிச வலைத்்்் தளம் இங்கே வெளியிடுகிறது.)

 

பகுதி-1

கடந்த டிசம்பரில் சியாட்டிலில் உலக வர்த்தக அமைப்பின் (WTO) அதிகாரபூர்வ கூட்டம் தோல்வியடைந்தது இரு முக்கிய அம்சங்களின் முக்கிய அரசியல் நிகழ்ச்சியாகும். முதலில் புதியநூற்றாண்டிற்கான வர்த்தக சுற்று ஒன்றை ஏற்படுத்துதற்கான முயற்சிகளின் சீர்குலைவானது, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் ஆகிய பிரதான முதலாளித்துவ சக்திகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் நிதி மோதல்களின் புதிய கட்டத்தைக் குறிக்கிறது.

இரண்டாவதாக, 1960கள் மற்றும்1970களில் வியட்நாம் யுத்தம் தொடர்பான அரசியல் எழுச்சிகளின் பெரும் நடவடிக்கைகளுப் பின்னர், கூட்டத்திற்கு வெளியே இடம்பெற்ற எதிர்ப்புகள் மற்றும் ஆர்பாட்டங்கள்,அதிகரித்துவரும் சமூக துருவபடுத்தல்களின் விளைவாக அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் வளர்ந்து வருகின்ற வெடிப்புமிக்க சமூகப் பதட்டங்களை வெளிப்படுத்துகின்றன. அவை உழைக்கும் மக்களது வாழ்க்கைமற்றும் சமுதாயம் முழுமையும் மீதானநாடுகடந்த நிறுவனங்கள் மற்றும் நிதிநிறுவனங்களின் மேலாதிக்கத்திற்கு எதிராகவளர்ந்து வரும் குரோதத்தை எதிரொலிக்கின்றன.

எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பின்னர்,மிகத் தீர்க்கமான பிரச்சனை இந்நிகழ்வுகள் மீதான அரசியல் கணக்கெடுப்பினை தயாரிப்பதும், நம்முன்னுள்ள அரசியல் மற்றும் சமூகப் போராட்டங்களுக்கான முன்னோக்கினையும் வேலைத்திட்டத்தையும் அபிவிருத்திசெய்வதுமாகும். இதன் காரணமாக, பேராசிரியர் மைக்கேல்சோசுடோவ்ஸ்கியால் ''சியாட்டிலும்அதற்கு அப்பாலும்: புதிய உலகை ஒழுங்கைபலவீனமாக்கல்'' என்று தலைப்பிடப்பட்டபங்களிப்பை நாம் வரவேற்றோம்.அது உலக சோசலிச வலைத் தளத்தால்ஜனவரி 13ல் வெளியிடப்பட்டது.

பல ஆண்டுகளாகபேராசிரியர் சோசுடோவ்ஸ்கி, சர்வதேசநாணய நிதியம் (IMF) உலக வங்கி மற்றும்உலக வர்த்தக அமைப்பு (WTO) போன்றவற்றின் மூலம் திணிக்கப்படும் நாடுகடந்த நிறுவனங்களின்''சுதந்திர சந்தை'' திட்டத்தின் சமூக மற்றும்பொருளாதார விளைவுகளை அம்பலப்படுத்துவதில் முக்கிய வேலைகளை செய்துவருகிறார்.குறிப்பாக எப்படி இந்த வேலைத்திட்டம் வளர்ந்துவரும் உலக வறுமைமைக்கு வழிவகுத்திருக்கிறது எனவும் மற்றும் 1994-ல்

ருவாண்டாவில் இனப்படுகொலை போன்ற பேரழிவுகளுக்கும், முன்னாள் யூகோஸ்லாவியாவினை துண்டாடலால் உண்டு பண்ணப்பட்ட மோதல்களுக்கும் எப்படி வழிவகுத்திருக்கிறது என்றும் அவர் ஆழமாய் விளக்கியிருக்கிறார்.

முக்கியமாக, சேர்பியா மீதான நேட்டோயுத்தத்தில் அவர் தெளிவான நிலைப்பாட்டை எடுத்திருந்தார். நடுத்தர வர்க்க தீவிரவாதத்தட்டினரின் பல பிரிவினர் கொசோவோ விடுதலை இராணுவத்தை [KLA] ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடும் ''தேசிய விடுதலை''இயக்கம் என புகழ்பாடி, நேட்டோயுத்தப் பிரச்சாரத்தின் பின் அணிவகுத்து நின்றதற்கும் எதிராக, அவர் கொசோவோ விடுதலை இராணுவத்தின் உண்மை இயல்பை அம்பலப்படுத்தினார்.

 

உலக வர்த்தக அமைப்பு தொடர்பான அவரது கட்டுரையில்,பேராசிரியர் சோசுடோவ்ஸ்கி ஜனநாயகம்,வெளிப்படைத் தன்மை மற்றும் பங்களிப்பு பற்றிய சொற்றொடர்களின் பின்னுள்ள பிரதான முதலாளித்துவ சக்திகளது அரசாங்கங்கள், வங்கிகள் மற்றும் பெரிய வர்த்தக அமைப்புகளது உண்மையான நிகழ்ச்சிநிரலை மறுபடியும் அம்பலப்படுத்தவிழைகிறார்.ஆனால் இக்கட்டுரை முழுவதுமாக அடிப்படையிலேயே குழப்பத்தை ஏற்படுத்துவதால் உ.சோ.வ. தள ஆசிரியர் குழு 1999 நவம்பர்30ல் வெளிவிட்ட அறிக்கையான ''பூகோள முதலாளித்துவத்துக்கு எதிரான இயக்கத்துக்கு அரசியலே முதற்கோட்பாடு'' என்பதில் எமது கவனத்தை இது தொடர்பாக செலுத்தியிருந்தோம்.

அதில் நாம் எழுதினோம்:''இன்றைய மட்டுப்படுத்தப்பட்ட மற்றும்பெரும்பாலும் ஒரே மாதிரியான அரசியல் விவாதத்தில், 'பூகோள முதலாளித்துவம் 'மற்றும் 'பூகோளமயமாக்கல்' ஆகியன முக்கியமாக ஒரு கருத்தை குறிக்கும் வேறுசொற்களாக இருக்கின்றன''. அது எவ்வாறாயினும், கணணி அறிவியல், தொலைத் தொடர்புமற்றும் போக்குவரத்தில் புரட்சிகர முன்னேற்றத்தால் தூண்டிவிடப்பட்ட முற்போக்கு வளர்ச்சியான உற்பத்தி மற்றும் பொருட்களின் பரிவர்த்தனையின் அதிகரித்துவரும் பூகோளத்தன்மைக்கும், பூகோளமயமாக்கலில் இருந்துசமூகரீதியான அழிவுகரவிளைவுகள் தோன்றவில்லை,மாறாக பொருளாதார வாழ்வை தனியார் லாபத்திற்கான அராஜக போட்டியினால் இயக்கப்படும் காலாவதியாகிப் போன தேசிய வடிவமான அரசியல் அமைப்புக்கு கீழ்ப்படுத்த முயலுவதற்க்கும் இடையிலான வித்தியாசத்தை எடுத்துக்காட்டுவது அவசியமாகும்.

இந்த ஆய்விலிருந்து எழும் அரசியல் முன்னோக்கு மற்றும் வேலைத் திட்டம் மீதான கேள்விக்களுக்கு விடையளிக்கும் முகமாக அறிக்கை பின்வருமாறு தொடர்ந்தது.''இன்று மாபெரும் கேள்வி என்னவெனில் இன்றைய அபிவிருத்தியை தனிமைப்படுத்தப்பட்ட தேசிய பொருளாதார வாழ்வின் பேரளவிலும் புராதன காலத்துக்கு பின்நோக்கி கொண்டுசெல்வது பற்றியதல்ல. கேள்வி என்னவெனில்: யார் பூகோளப் பொருளாதாரத்தினை கட்டுப்படுத்தப் போகிறார்கள்?, யாருடைய நலன்கள் தீர்மானிக்கப் போகின்றன?, எப்படி அதனுடைய ஆழமான தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார தகைமைகள் பயன் படுத்தப்படவிருக்கின்றன? என்பதுதான். பூகோள பொருளாதாரத்தை முற்போக்கானவகையில் ஒழுங்கமைக்கக்கூடிய ஒரேசமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம்தான்''.

இதன் மீதான அடிப்படை விஷயங்களில்தான் உ.சோ.வ.தவின் பார்வைக்கும் பேராசிரியர் சோசுடோவ்ஸ்கியின் பார்வைக்கும் இடையிலான வேறுபாடுகள் திரும்புகின்றன. முதலாளித்துவக் கொள்ளையிடலுக்கு சோசுடோவ்ஸ்கி ஒரு எதிரி என்பதில் கேள்விக்கு இடமில்லை.ஆனால் அவரது விமர்சனம் லாப அமைப்புக்கும் மற்றும் அது அடிப்படையாக கொண்டிருக்கும் சமூக உறவுகளுக்கும் மேல் செலுத்தப்படவில்லை, மாறாக இன்னும் சொல்லப்போனால் பூகோளமயமாக்கல் போக்கின் மீது செலுத்தப்பட்டுள்ளது. அவர் அத்தியாவசியமாக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் முந்தைய வடிவங்களை மீளமைக்க ஆதரவைத் தூண்டிவிடுகிறார்.

சுருங்கக் கூறின், நான்காம்அகிலத்தின் அனைத்துலகக் குழுவினதும் அதன் உலக சோசலிச வலை தளத்தினதும் வேலைத்திட்டம் தொழிலாளவர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்காகவும், சமுதாயத்தை சோசலிச வழியில் மறு ஒழுங்கமைப்பதற்குமான போராட்டத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இருக்கையில், சோசுடோவ்ஸ்கியின் வேலைத்திட்டம் முதலாளித்துவத்தின் முக்கிய அரசியல் இயங்கு முறைகளுள் ஒன்றான தேசிய அரசை பலப்படுத்தவும் அதற்கு மெருகூட்டவும் விரும்புபவர்களுக்கு ஒரு தத்துவார்த்த மேடையை வழங்குவதில் போய் முடிகிறது.

உலக சோசலிச வலைத் தளத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம், மனிதகுலம் முழுவதையும் ஒட்டுமொத்தமாக முன்னேற்றுவதற்காக நவீன பொருளாதாரத்தின் பூகோளத்தன்மையின் உற்பத்திப் பொருள் என்ற வகையில் சர்வதேசத் தொழிலாள வர்க்கம் பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்திமுறையின் அபரிமிதமான ஆற்றலைக் கட்டுப்படுத்துவதற்கான எதிர்கால தேவையையும் நோக்கமாக கொண்டது. இந்த முன்னோக்கிற்கு எதிராக, சோசுடோவ்ஸ்கி தனது பார்வையை சிறப்பானதென கூறப்படும் கடந்தகாலத்துக்கு திருப்பி, ஆரம்ப காலகட்டத்தில் முதலாளித்துவ ஆட்சிக்கு அடிப்படையாக அமைந்த கீன்சிய [Keynesian] பாணியிலான தேசியப் பொருளாதார ஒழுங்குபடுத்தல் மற்றும் சமூக சீர்த்திருத்தங்கள் ஆகியவற்றை மீளக் கொணர்வதற்காக அழைப்புவிடுக்கிறார்.

இன்று சாதாரணமாகக் காணப்படும் அரசியல் குழப்பத்தின் மத்தியில், இந்தக் கண்ணோட்டங்கள் சந்தேகத்திற்கிடமில்லாமல் ஏதாவதொரு கோணத்தில் சியாட்டிலில் உள்ள உலகவர்த்தக அமைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் பெரும்பான்மையோரினதும் உலகம் முழுவதும் அவர்களது பிரச்சாரத்திற்கு ஆதரவாகவும் அதனைப் பின்பற்றவும் செய்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகளதும் கண்ணோட்டத்தை எதிரொலிக்கின்றது. அவை உ.சோ.வ தளத்தைப் பொறுத்தவரை சோசுடோவ்ஸ்கியின் கட்டுரைக்கு விளக்கமாகப் பதிலளிப்பதைமிக முக்கியமானதாக ஆக்கியது. இந்தகலந்துரையாடல் முக்கியமானது, ஏனென்றால் நமது கண்ணோட்டத்தில் பேராசிரியர் சோசுடோவ்ஸ்கியால் முன்வைக்கப்பட்ட வேலைத்திட்டமும், ஆய்வும் பூகோளமுதலாளித்துவத்திற்கு எதிராக வெளிப்படும்இயக்கத்தை எவ்வழியிலும் முன்னேற்றகரமாக கொண்டுசெல்லாது, மாறாக அதனைத்தடம்மாறச் செய்யும்.

பேராசிரியர் சோசுடோவ்ஸ்கியின் கண்ணோட்டத்தை ஆழமான ஆய்வுக்கும் விமர்சனத்துக்கும் உட்படுத்துவதில் எமது கலந்துரையாடல்களின் முடிவுகள் எவ்வளவுற்கு கூர்மையாக இருந்தாலும், இவை நமது காலத்தின்மிக முக்கியமான அரசியல் பிரச்சினைகள் எவை என்பதில் உண்மையான தெளிவைப் பெறவிரும்புகிற அனைவராலும், சோசுடோவ்ஸ்கியாலும் வரவேற்கப்படும் என்பதில் நாம் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

சோசுடோவ்ஸ்கியின் படி, சியாட்டிலில் ''பெரும் பிளவு'', ''புதிய உலக ஒழுங்கினை உண்மையாய், எதிர்ப்பவர்களுக்கும் தோற்றத்திற்கு எல்லாவகையிலும் 'முற்போக்காக' இருப்பதாக தோற்றமளிக்கும் 'கூட்டு' (‘partner') பொது அமைப்புகளுக்கும் இடையிலானதாகும். ஆனால் இக் கூட்டுஅமைப்புகள் உண்மையில் இந்தஅமைப்பு முறையின் படைப்புக்கள் மட்டுமல்லாது, புதிய ஒழுங்குக்கு எதிரான 'உண்மையான' சமூகஇயக்கங்கள் இணைவதை உடைப்பதற்கு சேவை செய்பவர்கள்''.

அரசுசாரா அமைப்புகள் என்றழைக்க கூடிய நிறுவனங்களை அரசு நிதி உதவி, அவற்றில் மேற்கத்திய உளவு நிறுவனங்களின் ஊடுருவல் மற்றும் உலகவர்த்தக அமைப்புக்காக "மனிதாபிமான முகத்தை" வழங்கும் அவர்களது பாத்திரம் பற்றி சிலமுக்கிய விஷயங்களை அவர் எழுப்புகிற அதேவேளையில், உண்மையான பிளவு சோசுடோவ்ஸ்கி கருதும் இடத்தில் இல்லை. அரசாங்கங்கள்மற்றும் அரசு சாராநிறுவனங்கள் ''எதிர்ப்பு''குழுக்கள் மற்றும் நிதிவளங்கள் வரும்பாதை ஆகியவற்றை அம்பலப்படுத்துவது தேவைதான்.ஆனால் அது எவ்வகையிலும் போதுமானதன்று.எந்த அமைப்பினதும் பாத்திரத்தைத் தீர்மானிப்பதில் விடைகாணப்பட வேண்டியமுக்கிய கேள்வி அது யாருடைய நலன்களை பிரதிநிதித்துவபடுத்துகின்றது, மற்றும் அதுமுன்னெடுக்கும் அரசியல் ஆய்வும் வேலைத்திட்டமுமாகும்.

''இந்த அமைப்புமுறையின் படைப்புக்கள்'' மற்றும் ''உண்மையான'' எதிர்ப்பு என்றஅடிப்படையில் -உலக வர்த்தக அமைப்புடன் ஏதோ ஒருவகையில் பேச்சுவார்த்தையில் அவை ஈடுபடுகின்றதா அல்லது இல்லையா என்பதன்படி விளக்குவது- இவற்றினடிப்படையில்''பிரதான வேறுபடுத்தலை'' நிலை நாட்டுவதற்கான சோசுடோவ்ஸ்கியின் முயற்சியானது ஆரம்பத்திலிருந்தே முரண்பாடுகளுக்குள் செல்கிறது.அவர் எழுதுகிறார், ''கூட்டு அரசு சாராஅமைப்புகள்'' ("partner non-governmental organizations") என அழைக்கப்படுபவை உலக வர்த்தகஅமைப்பை ஒரு நிறுவனம் என்பதின் நியாயமானஅல்லது 'சட்டபூர்வமானதை' கேள்விக்குள்ளாக்கக் கூடாது என்பதில் ஏற்கனவே கவனமாக இருக்கின்றன.'' இந்த அம்சத்தைக் கூறிஅவர் தொடர்கிறார்: ''உலக வர்த்தக அமைப்புடனும் அரசாங்கங்களுடனும் 'உரையாடல்' பேச்சுவார்த்தைக்கான வழிமுறையாக கூடாது என்று இது அர்த்தப்படுத்தாது. மாறாக, பேச்சுவார்த்தைகள் சமூக இயக்கங்களுடன் நெருக்கமானஇணைந்து ''அடித்தள வேலைகளைப்பலவீனப் படுத்துவதைக்காட்டிலும் பலப்படுத்தும்'' நோக்குடன் கட்டாயம் பயன்படுத்தப்படவேண்டும்.

சோசுடோவ்ஸ்கி ''பேச்சுவார்த்தைகள்'' மற்றும் ''உரையாடல்'' வகையினை மேற்சொன்ன பந்தியில் அனுமதித்தாலும் பின்னர் அவரது கட்டுரையில் இவற்றை நிராகரிப்பது போல் காணப்படுகிறார்.1994-ல் உலகவர்த்தக அமைப்பு நிறுவப்பட்டதைஆய்வு செய்கையில் அவர் உ.வ.அமைப்பை'சர்வ அதிகாரம் படைத்த' அமைப்பாகஉருவாக்கும் உருகுவே சுற்றுப்பேச்சுவார்த்தையின் கடைசி சட்டத்தின் உண்மையான சட்டத்துக்குப்புறம்பான தன்மை மற்றும் அநீதி தொடர்பாகநாம் கட்டாயம் செயல்படவேண்டும்''என்று அவர் எழுதுகிறார். உ.வ.அமைப்பைஒரு சர்வதேசநிறுவனம் என்ற வகையில் சட்டவிரோத அமைப்பு என்று முத்திரை குத்துவதை தவிர வேறு மாற்று வழி ஏதும் இருக்க முடியாது.வேறு வார்த்தைகளில் சொன்னால், அனைத்து நிகழ்ச்சிப்போக்குகளும் ஒரேயடியாக நிராகரிக்கப்பட வேண்டும்'' (வலியுறுத்தல் மூலத்தில் உள்ளபடி)

சோசுடோவ்ஸ்கியின் அணுகுமுறையில் அத்தியாவசிய தன்மை என்னவெனில் அவர் உ.வ.அமைப்பைஉலக வரலாற்றின் ஒருவகை படைப்பாளியாக மாற்றுகின்றார். அவர் அதன் ஆரம்பத்தை வங்கிகள் மற்றும் நாடுகடந்த நிறுவனங்கள் உலகப் பொருளாதாரத்தைத் தன்கட்டுபாட்டில் எடுக்கவும், அதன் மூலம்தேசிய அரசாங்கங்களினதும், நிறுவனங்களினதும் செயல்பாடுகளைக் பலவீனப்படுத்தும்''சட்ட விரோத'' நடவடிக்க்ைகளில் காண்கின்றார். ஆனால் இந்த அணுகுமுறை கேள்வியை மட்டுமே எழுப்பியிருக்கின்றது. உ.வ. அமைப்புஏன் 1994ல் மட்டும் நிறுவப்பட்டது? ஏன் முன்னர் நிறுவப்படவில்லை? அதன் நிறுவுதலுக்கு வழிவகுத்த இயக்கு சக்திகள் எவை? இந்த விஷயங்களைஆராயாமல் உ.வ. அமைப்பை ஆய்வுசெய்வதும் அதன் கலைப்புக்காக அழைப்பதும் மார்க்ஸ் இன்னொரு உள்ளடக்கத்தில் குறிப்பிட்டவாறு, கோவிலை இடிக்காமல் பூசாரியை விரட்டச் சொல்வது போலத்தான்.

உலக வர்த்தகத்தை கடந்த அரைநூற்றாண்டாக ஆளுமை செய்த வர்த்தகத்திற்கும் வரிக்குமான பொது உடன்படிக்கை (GATT) இன் சட்டதிட்டங்களில், அமைப்பில் ஒரு தீர்க்கமான மாற்றத்தையே உ.வ.அமைப்பின் ஸ்தாபிதம் காட்டுகிறது என்பதில் கேள்விக்கே இடமில்லை. 1948-ல் 23 உறுப்பினர்களின் அங்கமாக வாணிகம் மற்றும் சுங்கவரிகள் தொடர்பான பொது உடன்பாடு நிறுவப்பட்டு தொழில்துறை உற்பத்திப் பொருட்களுக்கு முற்போக்கான சுங்கவரி குறைப்பை இலக்காக கொண்டதும்,1930களில் மாபெரும் அழிவுகரமான வர்த்தக யுத்தத்துக்கு வழிவகுத்த யதேச்சாதிகாரத்திலிருந்து பின் வாங்கலையும், தங்களது அண்டை அயலாரின் வர்த்தகக் கொள்கைகளைக் சட்டத்திட்டங்களின் மூலம் தடுப்பதையும் நோக்கமாக கொண்டது.

எவ்வாறாயினும் யுத்ததிற்க்கு பிந்தைய சகாப்தத்தில் பூகோள முதலாளித்துவப் பொருளாதாரத்தின் விரிவாக்கத்திற்கு வர்த்தகத்திற்கும் வரிக்குமான பொதுஉடன்படிக்கை (GATT) வகித்த பங்கு புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. 1980களின் அளவில் வர்த்தகத்திற்கும் வரிக்குமான பொது உடன்படிக்கை கட்டமைப்பானது அபிவிருத்தியடைந்த பூகோள பொருளாதாரத்திற்கு மிகவும் குறுகியதாகிவிட்டது. அது உருவாகியபோது சர்வதேசப் பொருளாதார உறவுகள் தேசியப் பொருளாதாரங்களுக்கு இடையேயான வர்த்தக தொடர்புகள் மேலோங்கியிருந்த அந்த சகாப்தம் கடந்து போய்விட்டது.பூகோள உற்பத்தி முறைகளும், சேவையையும்,அறிவையும் அடிப்படையாகக் கொண்ட தொழிற்துறையின் வளர்ந்துவரும் முக்கியத்துவமும், சர்வதேச நிதி நிறுவனங்களின் அதிகரிக்கும் எதிர்பார்ப்புகளுடனும் சேர்ந்து அர்த்தப்படுத்துவது யாதெனில் அதிகரித்துவரும் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் விவகாரங்களை ஒழுங்கமைக்க புதிய ஒழுங்குமுறை ஒன்று தேவையாக உள்ளது என்பதாகும்.

உ.வ. அமைப்பின் உருவாக்கம் பிரதான முதலாளித்துவ சக்திகளால் பூகோளமயமான உற்பத்திக்கும், போக்குவரத்து -தொலைத் தொடர்பில் ஏற்ப்பட்ட புரட்சிகர அபிவிருத்திகளின் தேவைகளுக்கும் எழும் நிதி தேவைகளை பூர்த்தி செய்யவும், விஞ்ஞானரீதியான முன்னேற்றங்களைப் உற்பத்தி தொழில் நுட்பங்களுக்கு பயன்படுத்துவதால் உற்பத்தி சக்திகளில்பரந்த வளர்ச்சியை சாத்தியமாக பூகோளமயமாக்கலுக்கு பொருந்துகிறவாறு அமைப்பு ஒன்றை உருவாக்க எடுக்கப்பட்ட முயற்சியைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

முதலாளித்துவத்தின் கீழ் பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தி உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களைச் சுரண்டுவதை உக்கிரப்படுத்துவதற்கான வழிமுறைகள் தான் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை. அதன் விளைவு வளர்ச்சியடைந்த நாடுகளிலும் பின்தங்கிய நாடுகளிலும் ஒரே மாதிரியாகபரந்த மக்களின் சமூக நிலைமைகளைமோசமடையச்செய்து வருகிறது. ஆரம்பகாலகட்டத்தில் அமைக்கப்பட்ட அனைத்துசமூக சீர்திருத்தங்களும் இலாபத்தை அதிகரிப்பதற்கும், தனது நடவடிக்கைகளுக்காக எல்லாத்தடைகளையும் அகற்றுவதற்குமான பூகோள மூலதனத்தின் தேவையின் தடையற்ற அழுத்தத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் இது பூகோளமயமாக்கலை ஒரேயடியாய் எதிர்க்கப்பட வேண்டும் என அர்த்தப்படுத்தவில்லை. முதலாளித்துவம் அதன் வரலாற்று அபிவிருத்தியில் ஒவ்வொரு கட்டத்திலும், எல்லாவற்றுக்கும் மேலாக இதன் இன்றைய வடிவத்திலும் வர்க்கச் சுரண்டலின் அமைப்பாகும். ஆனால் அதற்கும் மேலாக அது தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலமாகவும் சர்வதேச உழைப்புப்பிரிவினை மூலமாகவும் இவ்விரு வகையிலும் உற்பத்தி சக்திகளின் தொடர்ச்சியான அபிவிருத்தியுடன் தொடர்புடைய உற்பத்தி அமைப்பின் வடிவமுமாகும். இவ்விஷயங்களை கவனத்திற்கெடுக்கையிலேயே முன்னோக்கு தொடர்பான அடிப்படைக் கேள்விகள் எழுகின்றன.

இறுதி ஆய்வில், சமூகத்தின் அடிப்படை வர்க்க அமைப்பின் ஒரு குறிப்பிட்ட வடிவமல்ல.மாறாக இன்னும் சொல்லப்போனால் உற்பத்தி சக்திகளின் வரலாற்று அபிவிருத்திகளின் மேல்தான் வர்க்கங்கள் அமைகின்றன,வடிவம் எடுக்கின்றன, மீள் ஒழுங்கமைக்கப்படுகின்றன, அவற்றுக்கிடையிலான உறவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. தொழில்துறை முதலாளித்துவத்தின் தொடக்கத்தில் ஆலை உரிமையாளர்கள் மற்றும் நில உடைமையாளர்களின் வர்க்கத்தில்இருந்து இன்றைய உலகில் கால்பரப்பிநிற்கும் நிதி நிறுவனங்கள் மற்றும் பரந்தநாடு கடந்த நிறுவனங்கள் வரை, நவீனவரலாறு முழுவதும் உற்பத்தி சக்திகள் முதலாளித்துவ வர்க்கத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு அடிபணிய செய்யப்பட்டன.ஆனால் உற்பத்தி சக்திகள் சொத்துடமை வர்க்கத்தின் பொருளாதார மேலாதிக்கத்திற்கான சாதனங்களை என்பதனை விடவும் மேலானவை. மிகவும் அடிப்படையான மட்டத்தில் சமூக மற்றும் பொருளாதார போக்கின் சடத்துவரீதியான உள்ளடக்கத்தினை கொண்ட அவை மனிதகுலத்தின் பொருளாதார,தொழில் நுட்ப அபிவிருத்தியையும் உள்ளடக்கியுள்ளன.

உற்பத்தி சக்திகள் முதலாளித்துவத்தின் கீழ் சுரண்டுவதற்கான சாதனங்களாக சேவை செய்யும் வேளையில், அவை அந்தசுரண்டலை இல்லாமல் செய்வதற்கானதும் மற்றும் முழு மனிதகுலத்தினையும் முன்னேற்றுவதற்கான சடத்துவரீதியான முன் நிபந்தனையையும் கொண்டுள்ளன. இந்த முரண்பாட்டின்மேல்தான் சோசுடோவ்ஸ்கியும் அவருக்கு முன் அவரைப் போன்ற ஏனைய பலரும் தடுமாறினர்.

புகழ் மிக்க அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு முன்னுரை என்பதில் மார்க்ஸ் உற்பத்தி சக்திகளுக்கும் சமுகத்தின் வர்க்க அமைப்புக்கும் இடையிலான சக்திமிக்க உறவை பின்வருமாறு விளக்குகிறார்:''அபிவிருத்தியின் குறிப்பிட்ட கட்டத்தில், சமுதாயத்தின்சடத்துவரீதியான உற்பத்தி சக்திகள் அப்போதுள்ள உற்பத்தி உறவுகளுடன் மோதலுக்கு வருகின்றன. -இது அதே விஷயத்தையே சட்டரீதியான வார்த்தைகளில் வெறுமனே விளக்குகிறது- அதாவது உற்பத்தி சக்திகள் இதுவரை அவை இயங்கிவந்த கட்டமைப்புக்குள்ளேயான உற்பத்தி உறவுகளுடன் மோதலுக்கு வருகின்றன. உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தியின் வடிவங்களில் பார்க்கையில் இவ்வுறவுகள் அவற்றிற்கு தடையாக மாறிவிடுகின்றன.இதன் பின்னர் சமூகப் புரட்சிகளின் சகாப்தம் ஆரம்பமாகிறது".

உ.வ.அமைப்பின் உருவாக்கத்திற்க்கு பின்னர் காரணமாகிய பூகோளமயமான உற்பத்தியின் வரலாற்று முக்கியத்துவத்தை முதலாளித்துவ அபிவிருத்தியின் போக்கினை ஆளுமை செய்யும் நிகழ்ச்சிப் போக்குகளை ஆய்வு செய்வதன் ஊடாக மட்டுமேபுரிந்து கொள்ளமுடியும். பூகோளமயமாக்கலானது மூலதனம் பொருத்தமான உபரிமதிப்பை பெற்றுக்கொள்ளவும், பெருப்பிக்கவும் வேண்டியநோக்கில் உருவாகிய சுரண்டலின் மேலதிகமான அபிவிருத்தி மட்டுமல்ல. அது அறிவியல் முன்னேற்றத்தையும் சர்வதேசஉழைப்புப் பிரிவினையின் மேலதிக அபிவிருத்தியையும் ஈடுபடுத்துகின்ற உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியையும் கூட குறிக்கிறது. அதன் மூலம் மனிதகுல உழைப்பின்மூலம் உருவாக்கப்பட்ட இந்த உற்பத்திசக்திகளுக்கும் தனிச் சொத்துடைமைமற்றும் தேசிய அரசுமுறை ஆகியவற்றின்மேல் தங்கியிருக்கின்ற முதலாளித்துவ சமூக உறவுகளுக்கும் இடையில் உள்ள முரண்பாட்டை உக்கிரப்படுத்தியுள்ளது.

இந்த தத்துவார்த்த கருதுகோள்கள் தொழிலாள வர்க்கத்துக்கான முன்னோக்கையும் வேலைத் திட்டத்தையும் உருவாக்குவதற்கான ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கின்றன. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதன் தோற்றகாலத்திலிருந்து, தொழில்துறை முதலாளித்துவம் உற்பத்தி சக்திகளின் தொடர்ச்சியான புரட்சிகர மயப்படுத்தலை முன்னெடுத்ததனூடாக அதன் விளைவாக மார்க்சின் வார்த்தைகளில் சொல்வதெனில் ''அனைத்து சமூக நிலைமைகளின் குறுக்கீடு செய்யப்படாத இடையூறுகளை'',பழமையான போற்றுதலுக்குரிய தப்பெண்ணங்கள் மற்றும் கருத்துக்களுடன் இணைந்த அனைத்து நிலையான, உறுதியாகிபோன உறவுகளையும் அடித்துச்சென்றுவிட்டது''.

இந்த தொடர்ச்சியான மாற்றங்கள்மற்றும் மோதலின் விளைவான சமூக எழுச்சிகளின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அடிப்படையில் எதிரெதிரான இரு அரசியல் போக்குகளின் தோற்றத்தைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

முதலாளித்துவ உற்பத்திமுறையின் மாற்றங்களுக்கு மார்க்சிசப் போக்கின் பதிலானது இறுதி ஆய்வில், சமூகமாற்றத்திற்கான இயக்கு சக்தியை வடிவமைக்கின்ற உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தியின் இயற்கை போக்கின்மீது எப்போதும் தன்னை அடித்தளமாக கொண்டிருக்கும். அதாவது மார்க்சிசத்தின் பதிலானது உற்பத்தி சக்திகளுக்கும் முதலாளித்துவசமூக உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை இம்மாற்றங்கள் எவ்வாறு உக்கிரப்படுத்துகின்றன என்பதனை ஆய்வு செய்வதும், அதன்மூலம் சர்வதேச தொழிலாளவர்க்கம் அரசியல்அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் சோசலிசத்தை நிறுவுதற்கும் போராட்டத்தைமுன்னெடுக்க பொருத்தமான வேலைத்திட்டத்தை வளர்த்தெடுப்பதாக இருக்கவேண்டும்.

இந்த அணுகுமுறையானது தொழிலாளவர்க்கம் வெறுமனே சுரண்டப்படும்வர்க்கம் அல்ல என்பதிலிருந்தும், அது முதலாளித்துவ அபிவிருத்தியாலேயே உருவாக்கப்பட்ட முழு சமூக சக்தியிலும் புரட்சிகரமான வர்க்கம் என்பதிலிருந்தும், உற்பத்தி சக்திகளை முதலாளித்துவ சமூக உறவுகளின் பிடிகளில் இருந்து விடுவித்துநாகரீக வளர்ச்சியை முன்னெடுத்துச்செல்லும் என்று புரிந்து கொள்ளுவதை அடித்தளமாகக் கொள்ளவேண்டும்.

இந்த முன்னோக்கினை விரிவுபடுத்தலானது,இந்த சமூக நெருக்கடிக்கு பதில் பழைய ஒழுங்குக்கு திரும்புமாறு அழைப்பு விடுப்பதுதான்என குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகளாலும் முதலாளித்துவ வர்க்கத்தின்சிலபகுதிகளாலும்கூட முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியல் வேலைத்திட்டத்துக்குஎதிரான போராட்டத்தின் மூலமாகவேஎப்போதும் இடம்பெறும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரிட்டனில் தொழிற்புரட்சியின் விளைவாக அஞ்சி நடுங்கி சுவிஸ் அரசியல் பொருளாதாரவாதி சிஸ்மோண்டி விவசாய அடிப்படையிலான கிராமப்புறப் பொருளாதாரத்தைத் தக்கவைக்குமாறு அழைப்பு விடுத்தகாலத்திலிருந்து, முதலாளித்துவத்துக்கு எதிரான குட்டி முதலாளித்துவ பதிலானதுஇதே அடிப்படைப் பாதையைத்தான் பின்பற்றியது.

சில சமயங்களில் இரண்டாவது கைத்தொழிற்புரட்சி என அழைக்கப்பட்ட பாரிய அளவில் முதலாளித்துவ மற்றும் டிரஸ்ட்டுகளது இணைவுகளை கொண்ட பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் ஆரம்ப காலத்தை பண்பிட்டுக் காட்டிய சிறிய முதலாளித்துவ நிறுவனங்களுக்கு இடையிலான சுதந்திரமான போட்டிக்கு திரும்புமாறு அழைப்புவிட்டதைக்கண்டது. தற்போதும் இருபதாம் நூற்றாண்டின் முடிவில், பூகோளமயமான உற்பத்திக்குஇந்தப் போக்கினரின் பதிலானது, தேசியப் பொருளாதார ஒழுங்கமைப்பின் கொள்கைகளுக்கும், 1950 மற்றும் 1960களின் போருக்குப்பிந்தைய செழிப்பினைக் குறிக்கும் சமூக சீர்த்திருத்தத்துக்கும் திரும்புமாறு அழைப்பதாக இருக்கிறது.

சிஸ்மொண்டி முன்னணி தத்துவார்த்தப் பிரதிநிதியாக இருந்த குட்டி முதலாளித்துவ உருவாக்கங்களில் இப்போக்கின் தொடக்கத்தை மார்க்ஸ் மட்டுமே பார்த்த அதே வேளை,அவற்றின் அத்தியாவசிய அடிப்படைக் கண்ணோட்டம் பற்றிய மார்க்சின் ஆய்வானது அதன் பொருத்தமான தன்மை எதையும் இன்றும் இழந்து விடவில்லை.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில்"இவ்வகைப்பட்ட சோசலிசம் நவீனப்பொருளுற்பத்தி உறவுகளிலுள்ள முரண்பாடுகளைக் கண்டு மிகுந்த மதிநுட்பத்துடன் அவற்றை விவரித்தது. பொருளியலாளர்களுடையகபடமான நியாயவாதங்களை அது அம்பலப்படுத்திற்று. இயந்திரங்களும் உழைப்புப் பிரிவினையும் உண்டாக்கும் நாசகரவிளைவுகளையும், மூலதனமும் நிலமும் ஒருசிலரின் கைகளில் குவிவதையும், அபரிதமான உற்பத்தியையும் நெருக்கடிகளையும் அது மறுக்கமுடியாத வகையில் நிரூபித்துக்காட்டிற்று. குட்டி முதலாளித்துவப் பகுதியோருக்கும் விவசாயிகளுக்கும் தவிர்க்க முடியாதவாறு ஏற்படும் அழிவையும், பாட்டாளி வர்க்கத்தின் கொடுந்துன்பத்தையும், பொருளுற்பத்தியில் நிலவும் அராஜகத்தையும், செல்வத்தின் வினியோகத்தில் ஏற்படும் படுமோசமான ஏற்றத்தாழ்வுகளையும், தேசங்களிடையிலான படுநாசமான தொழிற்துறைப் போரையும்,பழைய ஒழுக்கநெறியும் பழைய குடும்ப உறவுகளும் பழைய தேசிய இனங்களும் குலைந்து செல்வதையும் அது எடுத்துரைத்தது.

ஆயினும் இவ்வகைப்பட்ட சோசலிசம் அதன் சாதகமான குறிக்கோள்களைப் பொறுத்தவரை, பழைய உற்பத்தி, பரிவர்த்தனைச் சாதனங்களையும் அவற்றுடன் கூடவேபழைய சொத்துடைமை உறவுகளையும் பழைய சமுதாயத்தையும் மீட்டமைக்கவேவிரும்பிகிறது. அல்லது நவீன உற்பத்தி, பரிவர்த்தனைச் சாதனங்களை அவற்றால் தகர்த்தெறியப்பட்டுள்ள, தகர்த்தெறியப்பட்டே ஆக வேண்டியபழைய சொத்துடைமை உறவுகளின் கட்டுக்கோப்பினுள் இருத்தி வைத்து அடைத்திடவே விரும்புகிறது. இவை இரண்டில் எது அதன் விருப்பமாயினும், இவ்வகைப்பட்ட சோசலிசம் ஒருங்கே பிற்போக்கானதும் கற்பனாவாதத்தன்மையானதுமே ஆகும்." என மார்க்ஸ் எழுதுகின்றார்.

அவை எழுதப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட போதும் பேராசிரியர் சோசுடோவ்ஸ்கியின் முக்கிய வழிமுறைகளையும் கண்ணோட்டத்தினையும் இந்த வரிகளில் அடங்கியுள்ளதை விடவும்தெளிவான, சுருக்கமான விளக்க முடியாது.