Clinton's tour overshadowed by US-European tentions
கிளின்ரனின் விஜயம் அமெரிக்க-ஐரோப்பிய முரண்பாடுகளால்
சூழப்பட்டுள்ளது.
By Chris Marsden
2 June 2000
Use
this version to print
ஜனாதிபதி கிளின்ரனின் போர்த்துக்கல், ஜேர்மனி,
ரஷ்யா, உக்ரெயின் இற்கான இராஜாங்க விஜயமானது 2001 இல்
அவரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரான இறுதி விஜயமாக
இருக்கலாம். இது அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும்
இடையேயான அதிகரித்து வரும் முரண்பாடுகளின் பின்னணியில் மேற்கொள்ளப்படுகின்றது.
நீண்டகால வர்த்தக முரண்பாடுகள் தீர்க்கப்படுவதற்கான
அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. அமெரிக்காவை பொறுத்தவரையில்
ஓமோன் ஊட்டப்பட்ட இறைச்சி, வாழைப்பழம், பரம்பரை
அலகுகள் மாற்றப்பட்ட தானியங்கள் என்பன பிரச்சனைக்குரியதாக
இருப்பதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் விமானசத்தம் தொடர்பான
புதிய சட்டம் அமெரிக்கத் தயாரிப்பாளர்களை அவமரியாதைப்படுத்துவதாக
கூறப்படுகின்றது.
ஐரோப்பா அமெரிக்காவிற்கு சாதகமான
உலக வர்த்தக அமைப்பின் ஆதிக்கத்தை அலட்சியம் செய்வதுடன்,
அமெரிக்க ஓமோன் ஊட்டப்பட்ட மாட்டிறைச்சி, வாழைப்பழம்
போன்றவற்றின் இறக்குமதியை தடைசெய்ய அல்லது கட்டுப்படுத்த
முயல்கின்றது. அமெரிக்கா உலக வர்த்தக அமைப்பின் அதிகாரத்தை
வெற்றிபெற்றபின்னர் கடந்தவருடம் ஐரோப்பிய நிறுவனங்கள் மீதான
300 மில்லியன்$ புதிய, சம்பந்தமற்ற தடையை விதிக்க தேர்ந்தெடுத்த
திட்டங்கள் தொடர்பாக ஐரோப்பிய அதிகாரிகள் ஆத்திரமுற்றுள்ளனர்.
பிரெஞ்சு பத்திரிகையான Liberation
அமெரிக்கா "ஐரோப்பாவின் காதுக்குள் துப்பாக்கியை வைத்துள்ளதாக"
குற்றம் சாட்டியுள்ளது.
ஐரோப்பிய விமான கூட்டமைப்பு புதிய A3xx
விசேட ஜம்போ-ஜெட் இற்கான
ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலீட்டினை ஒரு நியாயமற்ற நிதி உதவியெனக்
கூறி உலக வர்த்தக அமைப்பில் இன்னுமொரு குற்றச்சாட்டை
கொண்டுவரப்போவதாக அமெரிக்கா பயமுறுத்துகின்றது.
அமெரிக்காவின் சட்டமொன்றினூடாக வெளிநாடுகளிலுள்ள
நிறுவனங்களான "வெளிநாட்டு விற்பனை கூட்டுதாபனங்களை"
உருவாக்கியுள்ள அமெரிக்க ஏற்றுமதியாளர்களான Microsoft,
Ford, Exxon Mobil போன்றவை கடந்தவருடம்
4 பில்லியன்$ வரிமீறல்களை செய்துள்ளதாகவும், இது உலக வர்த்தக
அமைப்பின் எதிர் மானிய கொள்கையை மீறுகின்றது என்ற குற்றத்தை
ஐரோப்பா வெற்றிகரமாக முன்கொண்டுவந்துள்ளது. உலக வர்த்தக
அமைப்பின் இக்கட்டளையை அமெரிக்கா அலட்சியப்படுத்தி அதன்
வரி-மீறல் அமைப்பை ஒருசில பூசிமெழுகும் மாற்றங்களுடன் வைத்திருக்க
முன்மொழிந்துள்ளது.
உலக வர்த்தக அமைப்பின் கட்டளையின் கீழ்
ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை பிரயோகிக்குமானால் ஐரோப்பிய
ஒன்றியத்தின் ஏற்றுமதி திட்டங்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை
செய்யப்போவதாக வாஷிங்டன் மே மாதம் 29ம் திகதி பயமுறுத்தியது.
வருடத்திற்கு இருமுறைநிகழும் அமெரிக்க, ஐரோப்பிய
அரசதலைவர்களின் சந்திப்பில் இப்பிரச்சனைகள் தொடர்பான
உத்தியோகபூர்வ கலந்துரையாடல்கள் லிஸ்பொன்[Lisbon]
நகரின் Queluz
மாளிகையில் மே மாதம் 31ம் திகதி இடம்பெற்றன. இக் கூட்டத்திற்க்கு
முன்னர் கூட அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான Sandy
Berger "இப்பிரச்சனைகள் தொடர்பாக
எவ்வித உடன்பாடுகளும் அடைய முடியுமென நான் எதிர்பார்க்கவில்லை"
என கூறியிருந்தார்.
உண்மையில் கிளின்ரனும் ஐரோப்பிய ஒன்றியத்தின்
தலைவர்களும் வர்த்தக விடயங்கள் தொடர்பாகவோ அல்லது
பாதுகாப்பு தொடர்பாகவோ எந்தவொரு உடன்பாட்டினையும்
அடையவில்லை. ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவரான Romano
Prodi இம்மாநாட்டில் புத்திசாலித்தனமாக
காட்டமுயன்று "எவ்வித முன்னேற்றமும் காணப்படாத
போதும், இருபகுதியினரும் முரண்பாடுகளை உலக வர்த்தக
அமைப்பின் ஊடாக தீர்த்துள்ளனர்" என கூறியுள்ளார்.
தீர்த்துக்கொள்ளமுடியாது போல்தோன்றும்
இவ்வர்த்தக முரண்பாடுகள் உலகநிதியியல் தொடர்பு சாதனங்களின்
முக்கிய கவனத்தை எழுப்பியுள்ளன. இங்கிலாந்தின் Financial
Times பத்திரிகை" உலக வர்த்தக
அமைப்பின் தோற்றம் வர்த்தக முரண்பாடுகளை அதிகார
அரசியலால் தீர்க்காது சட்டத்தீர்மானங்களால் தீர்க்கும் புதிய
காலகட்டத்திற்கான பிரகடனமென கருதப்பட்டது. அதற்கு பதிலாக
இரண்டு பெரிய வர்த்தக நாடுகள் தமது பிரச்சனைகளை தீவிரமாக்க
இவ்அமைப்பை பாவிப்பதுடன் எந்தவொரு பக்கமும் இணங்கிப்போவதற்கான
அறிகுறிகளையும் காட்டவில்லை" எனகுறிப்பிட்டுள்ளது.
"உலக கூட்டிணைவு என்ற வாயடிப்புகள் இருந்தபோதும்,
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான
பொருளாதார உறவுகள் அதிகரித்தளவில் ஸ்திரமற்றிருப்பதை காணக்கூடியதாக
இருப்பதே உண்மையாக உள்ளது. ஒரு தொகை வர்த்தக முரண்பாடுகளைத்
தீர்ப்பதில் தோல்வியடைவது ஐயுறவுவாத நிலைமைக்கு இட்டுச்செல்வதுடன்,
சுதந்திர வர்த்தகத்தின் வளர்ச்சியும் அபாயத்திற்கு உள்ளாகின்றது"
என பி.பி.சி வலைப்பின்னல் [BBC
Online] தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும்
இடையேயான வருடாந்தம் 450 பில்லியன்$ பெறுமதியான பாரியளவு
அதிகரித்துவரும் வர்த்தகத்திற்கும் இடையே வேறுபட்ட
பொருளாதார முரண்பாடுகளின் முக்கிய அதிகரிப்பை ஒரு பரந்த
அரசியல் அடித்தளத்தில் நோக்குவதனூடவே விளங்கிக்கொள்ளமுடியும்.
கிளின்ரன் போர்த்துக்கலில் "ஐரோப்பிய
கண்டமானது, வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதவாறு
ஐக்கியமாக, சுதந்திரமாக, அமைதியாக இருப்பதாகவும், எங்களது
அத்லாந்திக்குக்கு இடையேயான உறவு பலப்படுத்தபட வேண்டுமெனவும்"
வலியுறுத்தினார். ஜேர்மனியில்
உலக சமாதானத்திற்கும், ஐரோப்பிய ஐக்கியத்திற்குமான அவரது
பங்களிப்பிற்காக Charlemange பரிசு
கிடைத்தது.
ஆனால் ஐரோப்பிய முதலாளித்துவம் ஒன்றிணைய
முயற்சிப்பது அமெரிக்க போட்டியாளனுக்கு எதிராக தவிர்க்கமுடியாதபடி
ஐரோப்பிய சக்திகளை பலப்படுத்தும் நோக்கத்திலாகும். இது
வர்த்தகத் துறையில் மட்டும் கிடையாது.
நிதியியல் துறையில், கடந்த ஜனவரியில் யூரோ [EURO]
உருவாக்கப்பட்டது. உலக பொருளாதாரத்தினுள் டொலரின் ஆதிக்கத்திற்கு
எதிரான முதலாவது முக்கிய சவாலாகும். யூரோ உருவாக்கப்பட்ட
பின்னர் உலகின் இரண்டு மிக முக்கிய பொருளாதாரங்களான அமெரிக்காவும்
ஐரோப்பிய ஒன்றியமும் போட்டியிடுவது மட்டுமல்லாது ஒன்றிலிருந்து
ஒன்று விலகிப்போகும் அபாயம் எழுந்துள்ளது.
யூரோ டொலருக்கு எதிராக மோசமாக பெறுமதியை
இழந்துள்ளதுடன் தனது பெறுமதி 30% ஐயும் இழந்துள்ளது. மூலதனம்
என்ற வகையில் யூரோ வோல்ஸ்ரீட்டின் எழுச்சி, உயர்ந்த அமெரிக்க
வட்டிவீதம், குறிப்பிட்டளவு உயர்ந்த அமெரிக்காவின் உற்பத்தி வீதம்
போன்றவற்றால் கூடியளவு வருமானத்தை பெற்றிருக்க வேண்டும்.
அமெரிக்க ஆய்வாளர்கள் ஐரோப்பிய அரசுகள் தங்களது
பொருளாதாரத்தை போதியளவு மறுசீரமைப்பு செய்ய தவறியதால்
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டுமென கூறுகின்றனர்.
யூரோ கலைந்து விடுமோ என்ற பயம் கூட எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு ஜேர்மன் பிரதமர் சுரோடர் [Gerhard
Schroeder] ஐரோப்பிய பொருளாதாரம்
பலமாக உள்ளதாகவும் நாணயத்தின் வெளிப்பெறுமதி அதன் பலத்துடன்
இணைந்துள்ளன எனவும், எங்களது ஏற்றுமதியை நோக்கினால்
அது சந்தோசத்தை அளிப்பதாகவே இருக்கின்றது எனக்கூறியுள்ளார்.
யூரோ பிராந்தியத்தின் 17% மொத்த உள்ளூர் உற்பத்தி ஏற்றுமதியை
நோக்காக கொண்டதெனவும், ஜேர்மன் ஏற்றுமதியின் அரைப்பகுதி
யூரோ பிராந்தியத்திற்கு வெளியே செல்கின்றது. அமெரிக்காவிற்கான
ஜேர்மன் ஏற்றுமதியின் பெறுமதி பெப்பிரவரியில் 40% ஆல் அதிகரித்துள்ளது.
ஆனால் அங்கு விற்கப்பட்ட ஜேர்மன் கார்களின் விலைகள் 25% ஆல்
வீழ்ச்சியடைந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பாவின் 60 பில்லியன்$
வர்த்தக நிலுவையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவின் பாரிய 350 பில்லியன்$
வெளிநாட்டுக்கணக்கு பற்றாக்குறையை (1999) சுட்டிக்காட்டியது.
அமெரிக்கா பலமான டொலரின் மூலம் பணவீக்கத்தை கட்டுப்பாட்டில்
வைத்திருப்பதால் அது தனது பணத்தை பெறுமதி இழக்க செய்யும்
எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கத் தயங்குகின்றது. ஆனால்
அதனது வெளிநாட்டுப் பற்றாக்குறையானது முதலீட்டாளர்களை
நம்பிக்கை இழக்க செய்வதுடன், மூலதன உட்பாய்ச்சலின் வறட்சி
டொலரின் வீழ்ச்சியை நோக்கி இட்டுச்செல்லும். டொலர்-யூரோ
முரண்பாடு தொடர்பாக சர்வதேச முதலீட்டாளரான George
Soros கருத்து தெரிவிக்கையில் "உலகின்
அடுத்த பொருளாதார நெருக்கடி உலகின் பெரிய நாடுகளுக்கிடையேயான
உறவுகளாலேயே உருவாக்கப்படும் போல் தெரிவதுடன், அது
1997 இல் ஆசிய நெருக்கடியின் பரிமாணத்தை ஒத்ததாக இருக்காது"
எனவும் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையே
கூரிய வெளிநாட்டு அரசியல் முரண்பாடுகள் தோன்றியுள்ளது. முக்கியமாக
கொசவோவின் நேட்டோ யுத்தத்தில் முக்கியமாக தனது அடக்கும்
இராணுவ முதன்மைநிலை காரணமாக அமெரிக்காவால் மீண்டுமொரு
தடவை ஐரோப்பாவின் அரசியல் நிகழ்ச்சி நிரலை உத்தரவிடக்கூடியதாக
இருந்தது. இவ்யுத்தத்தை அடுத்து ஐரோப்பிய சக்திகள் பிராந்திய
இராணுவ, பாதுகாப்பு அமைப்புக்களை அபிவிருத்தி செய்யும்
ஆரம்ப முயற்சிகளை எடுத்துள்ளன. இதன் மூலம் வாஷிங்டனில் தங்கியிருப்பதை
குறைக்க முயல்கின்றன.
கிளின்டனின் விஜயம் ஆரம்பித்த நாளன்று பிரான்சு
ஜனாதிபதி சிறாக் [Jacques Chirac] ஐரோப்பிய
ஒன்றியத்தின் கெல்சிங்கி [Helsinki] மாநாட்டில்
கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடித்தளத்தில் நேட்டோவிலிருந்து
சுதந்திரமான ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பொன்றை
உருவாக்கும் பிரச்சனைக்குரிய முயற்சிக்கு அழைப்பு விட்டார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பிற்கான அமைப்பான மேற்கு
ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றக் கூட்டத்தில் அவர்
பேசுகையில் மத்தியதரைக்கடலின் வடபகுதியை காவல்காப்பதற்கு
ஐரோப்பிய ஒன்றியத்தின் துரித நடவடிக்கைப் படையை உருவாக்கவும்
அழைப்பு விட்டார்.
சிறாக், 2003 ஆம் ஆண்டளவில் 60,000 பேரைக்கொண்ட
ஐரோப்பிய படைகளை உருவாக்குவதற்கான திட்டங்களை
முன்கொண்டுவர வேண்டுமென ஐரோப்பாவிற்கு அழைப்பு விட்டார்.
இத்துடன் அமெரிக்காவிலிருந்து சுயாதீனமாக ஐரோப்பிய சற்றிலைட்
[Satellite] அமைப்பையும்
புலனாய்வு வலைப்பின்னலையும் உருவாக்கும் கூட்டமைப்பு
ஒன்றை உருவாக்கவும் அழைப்பு விட்டார்.
சிறாக், தனது மேற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின்
உரையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சிமுறை தலைமையை இக்கோடைகாலத்தில்
பிரான்சு பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஊகத்தில் அமெரிக்காவில்
புதிய தேசிய ஏவுகணை பாதுகாப்புத்திட்டத்தை (NMD)
விமர்சித்தார். கிளின்டன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக
Star wars ll என
புனைபெயரால் அழைக்கப்படும் 1972 இல் ஐரோப்பாவை உள்ளடக்காது
ரஷ்யாவுடன் செய்து கொண்ட Anty-Ballistic
Missile Treaty இல் சிறுமாற்றம் செய்ய
முயல்கின்றார். பிரான்சு, ஜேர்மன் உட்பட ஏனைய ஐரோப்பிய
நாடுகள் இது மீண்டும் ஒரு ஆயுதப்போட்டிக்கு இட்டுச்செல்லும்
எனவும் நேட்டோவின் ஒருமைப்பாட்டை அபாயத்திற்குள்ளாக்குகின்றது
எனவும் எச்சரித்துள்ளன.
ஐரோப்பாவின் முக்கிய பத்திரிகைகளில் கூடுதலானவை
அமெரிக்காவிற்கு சவால் விடுவதன் தேவையை வலியுறுத்தி ஐரோப்பிய
சக்திகளின் சுதந்திர பொருளாதாரத்தையும் இராணுவ நலன்களையும்
வலியுறுத்தின. பிரான்சின் Le Monde என்ற
பத்திரிகை "ஐரோப்பாவின் ஆழுமையை வலியுறுத்துவதானது அமெரிக்காவின்
ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்புத் திட்டத்துடன் முரண்பாட்டிற்கு
போவது போலாகும்". சிறாக் மீண்டும் குறிப்பிட்டது இது
வாஷிங்டனுக்கும் மொஸ்கோவிற்கும் மட்டும் தொடர்பானதல்ல.
இது பல பிரச்சனைகளுக்கூடாக உருவாக்கப்பட்ட
மூலோபாய சமநிலையை உடைப்பதுடன், உலகின் ஆயுதப்போட்டியை
மீண்டும் புதுப்பித்து விடும்" என குறிப்பிட்டுள்ளது.
ஜேர்மனியின் பழமைவாத பத்திரிகையான Die
Welt ஓரளவு ஒழிவு மறைவு இல்லாதது.
"ஐரோப்பா நீண்டகாலத்திற்கு இளைய பங்காளியாக இருக்காது"
என்ற தலையங்கத்தின் கீழ் லிஸ்பொன் ஐரோப்பிய ஒன்றிய-அமெரிக்க
மாநாட்டிற்கு ஐரோப்பியர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் வந்தனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக பொருளாதார ரீதியாக இப்பழையகண்டம்
புதியதை எடுக்கத்தயாராக இருக்கின்றது என பெருமைப் பட்டுக்கொண்டது.
இப்பத்திரிகை தொடர்ந்தும் "அமெரிக்காவின்
கட்டளையிடும் காலம் முடிவடைந்து விட்டது என்பதுதான் 15
ஐரோப்பிய அரசுகளின் தலைவர்களினது தலைகளில் ஆதிக்கம்
செலுத்திய கருத்தாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைக்குழுவும்
இதே மாதிரியான கருத்தையே கூறுகின்றது. பிரான்சு ஜனாதிபதி சிறாக்
கூறியது போல் நாங்கள் பொருளாதார ரீதியாக அமெரிக்காவைப்போல்
பலமாகவே இருக்கின்றோம்". என எழுதியுள்ளது.
"ஜேர்மன்-அமெரிக்க உறவு ஜேர்மன் கொள்கையில்
பலபத்தாண்டுகளாக முக்கிய அடிக்கல்லாக இருந்தது. இது
குளிர்யுத்தகால முடிவுடன் மாற்றமடைந்துள்ளது. மேற்கத்தைய
கூட்டினை எவ்வகையில் என்றாலும் வைத்திருக்கவேண்டும் என்ற
வெளிஅழுத்தம் இல்லாமல் போய்விட்டது. இதேவேளை 1990 இன்
ஆரம்பத்திலிருந்து பரந்தளவான இரண்டு பக்கத்து கேள்விக்குமுரிய
முரண்பாடுகள் ஐரோப்பிய-அமெரிக்க வடிவத்தை நீண்டகாலத்திற்கு
முன்னரே அடைந்துவிட்டது என்ற அளவிற்கு ஐரோப்பிய ஒன்றிணைவுப்போக்கு
தீவிரமயப்படுத்திவிட்டது" எனவும் குறிப்பிட்டுள்ளது.
கிளின்ரனின் விஜயத்தில் ஐக்கியத்திற்கும், நல்லுறவிற்குமான
சம்பிரதாயமான அறிக்கைகள் வெளிவந்தாலும் அமெரிக்காவிற்கும்
ஐரோப்பாவிற்குமான பொருளாதார, அரசியல் சச்சரவுகளும்,
ஏன் இராணுவ முரண்பாடுகளும் அதிகரிப்பதையே அனைத்தும் எடுத்துக்காட்டுகின்றன.
ஏற்கனவே ஆபிரிக்காவிற்கான வெளிநாட்டு கொள்கை தொடர்பான
பகிரங்க முரண்பாடுகளும், கொசவோவில் உள்ள நேட்டோ
படைகளின் செலவு, ஆள்பங்கீட்டை யார் பகிர்ந்து கொள்வது
என்பது போன்ற பரஸ்பர குற்றச்சாட்டுகளும் உள்ளன. அமெரிக்காவிற்கும்
ஐரோப்பாவிற்கும் இடையேயான ஏனைய பிரச்சனைக்குரிய
விடயங்கள் கியூபா, லிபியா, ஈராக் மீதான அமெரிக்காவின்
பொருளாதார தடையை உடைக்கும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா
கட்டுப்பாடுகளை விதிப்பது போன்றவையாகும்.
|