Economic nationalitism sets the tone for IMF protests
in Washington
வாஷிங்டன் சர்வதேச நாணய நிதியத்திற்குஎதிரான
ஆர்ப்பாட்டங்களில் பொருளாதார தேசியவாதத்தின் குரல் ஒலிக்கின்றது.
By Jerry White
3 May 2000
Use
this version to print
ஏப்ரல் 16-17 இல்
உலக நீதிக்காக அணிதிரள்என்பதன் கீழ் வாஷிங்டனில் நடந்த ஆர்ப்பாட்டம்,சிலமாதங்களுக்கு
முன்னர் சியாற்றிலில் எழுந்தஎதிர்ப்பியக்கம் ஒரு அரசியல் ஸ்தம்பிதநிலையைஅடைந்துள்ளதை
எடுத்துக்காட்டியுள்ளது.சியாற்றில் எதிர்ப்பியக்கத்தின்போது தெளிவானஅதன்
மட்டுப்படுத்தப்பட்ட அரசியல்வாஷிங்டனில் மாணவர்களுக்கும்,
சுற்றுசூழல்பாதுகாப்பு குழுக்களுக்கும், பொருளாதாரதேசியவாதத்தை
முன்மொழியும் அமெரிக்கவர்த்தகத் தட்டினருக்கும், AFL-CIO
தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்க்கும் இடையேயான பகிரங்க கூட்டின்
மூலம்தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டது.
உலக வர்த்தக அமைப்பிற்கு எதிரானசியாற்றில்
எதிர்ப்பியக்கத்தில் AFL-CIO
இன் அரசியல் ஆழுமை மிககுறைவாகவேஇருந்தது. ஏனெனில்
"பூகோளமயமாக்கலுக்கு"எதிராக பொதுவான எதிர்ப்பில்
தேசியவாதம்தெளிவாக மட்டுப்படுத்தப்பட்டே இருந்தது.அங்கு
பாரிய நாடுகடந்த கூட்டு நிறுவனங்களின்உலகப்
பொருளாதாரத்தின் மீதானகட்டுப்பாட்டின் மீதும், வேலைகள்,
வாழ்க்கைத்தரம், வேலைநிலைமைகள், ஜனநாயகஉரிமைகள் மீதான
அதன் தாக்கம் குறித்தும்தீர்மானகரமான உண்மையான எதிர்ப்புஇருந்தது.
இது சியாற்றிலின் பலஆயிரக்கணக்கானதொழிற்சங்கவாதிகளிலும்
ஏனைய தொழிலாளிகளிடமும், வீதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட
அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்தஆயிரக்கணக்கான
இளைஞர்கள் மத்தியிலும்பிரதிபலித்தது.
இவ்வகையான முதலாளித்துவஎதிர்ப்புத் தன்மைகள்
கடந்த மாதம்வாஷிங்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில்மிகக்
குறைவாகவே வெளிக்காட்டப்பட்டிருந்தன. ஏப்ரல் 16 பிரதான
ஊர்வலத்தின் மேடை AFL-CIO
இன் அதிகாரிகளாலும்,ஜனநாயக கட்சி அரசியல் வாதிகளாலும்,தாராளவாத
சிந்தனைகூடத்தின் பேச்சாளர்களாலும், மாணவா் அமைப்புகளாலும்,சுற்றுசூழல்
பாதுகாப்பு குழுக்களாலும்ஆழுமை செலுத்தப்பட்டிருந்தது. இவ்ஊர்வலம்
தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்குஅதன் பங்காளிகளிகளில் ஒருவரான
பசுமைவாதகட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான Ralph
Nader போன்றோரின் ஆதரவுடன்தமது
பாதுகாப்புவாத அரசியலுக்கு[அமெரிக்க பொருளாதாரத்தை
பாதுகாக்கும்] மக்கள்கூட்டு உடைபோர்த்தும் சந்தர்ப்பமாகியுள்ளது.
"சட்டபூர்வ" ஊர்வலத்திற்குமாற்றீடாக
சிவில் ஒழுங்கிற்கு கட்டுப்படாதஇரண்டாவது ஆர்ப்பாட்டமொன்றுசர்வதேச
நாணய நிதிய, உலக வங்கி கூட்டங்களுக்கு அண்மையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.ஆனால்
சியாற்றிலில் நடந்தது போன்றஎதிர்ப்புகளை சமாளிப்பதற்கு பயிற்றப்பட்டநூற்றுக்கணக்கான
பொலிசார், சமஷ்டிஅதிகாரிகள், தேசிய பாதுகாப்பு படையினர்ஊர்வலம்
ஆரம்பமாகும் முன்னரேஅதனை கலைத்தனர். இறுதியில் அவர்களதுஆரம்ப
நோக்கமான சா்வதேசநாணய நிதியத்தையும் உலக வங்கியையும்மூடுவது
என்பதை அடையமுடியாது,நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள்
தாமாகவே பொலிசாரால் கைதுசெய்யப்பட இணங்கினர்.
அரசியல் அடித்தளத்தில்கூறினால் வீதி ஆர்ப்பாட்டங்களை
ஒழுங்குசெய்த குழுக்கள் அராஜகவாதம்,நுகர்வு எதிர்ப்பு,
தொழில் நுட்ப வளர்ச்சிக்குஎதிர்ப்பு போன்றவற்றின் கூட்டினால்தீவிரமாக
ஆழுமை செலுத்தப்பட்டிருந்தனர்.வெளிப்படையான வித்தியாசங்கள்
இவ்இரு ஆர்ப்பாட்டங்களுக்கிடையே இருந்தபோதும், இரண்டினதும்
அடிப்படை முன்நோக்குபொருளாதார பூகோளமயமாக்கல்போக்கினை
இப்போக்கு கட்டுப்படாத சர்வதேச நாணயநிதிய, உலகவங்கி
போன்றமுதலாளித்துவ அமைப்புகளுடன் இணைத்துபார்ப்பதுடன் கட்டுப்பட்டுள்ளதாகும்.
AFL-CIO, Nader
போன்றோர்பொருளாதார வாழ்வு பூகோளமயமாக்ப்படுவதற்கு
எதிராக தேசியவாத அடித்தளத்தில்தேசிய அரசை புகழ்வதுடன்
அமெரிக்கஅரசினை பலப்படுத்த வேண்டுமென்றுகோரிக்கை விடுகின்றனர்.
இதேமாதிரியானதேசியவாத கருத்துக்கள் இன்னும் தீவிரபற்றுதலுடன்
வீதி ஆர்ப்பாட்டங்களிலும் ஆழுமை செலுத்தியிருந்தது. எந்தவொரு
ஆர்ப்பாட்டமும் தங்களதுவாழ்க்கை தரத்தையும், ஜனநாயகஉரிமைகளையும்
பாதுகாக்க முயன்றுபோராடும் உலகம் முழுவதுமுள்ள மக்களுக்குஒரு
முன்னோக்கினை வழங்க முடியாதிருந்தது.
ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்தோர்,அமெரிக்கா
முழுவதிலுமிருந்து ஒழுங்குபடுத்தியிருந்தபோதும் 10,000 பேர் மட்டுமே
கலந்துகொண்டனர். பங்குபற்றியோரில் பெரும்பான்மையானோர்
மத்தியதர வர்க்க இளைஞர்கள். சிலதொழிலாளர்களே கலந்து
கொண்டனர். AFL-CIO தன்னை
இணைத்துக்கொண்டிருந்தபோதும் தொழிற்சங்கவாதிகளின் முக்கியபிரிவினரை
காணமுடியவில்லை. வாஷிங்டனில்உள்ள கணிசமான சிறுபான்மை,
குடியேற்றவாசிகள் உட்பட பெரும்பான்மை தொழிலாளர்களுக்கும்
இளைஞர்களுக்கும் தலைநகரின் பெரும்பகுதிபொலிசாரால்
தடைசெய்யப்பட்டதால்உருவாகிய இடைஞ்சலை தவிர இவ் ஆர்ப்பாட்டமானது
ஒரு அதிசயப் பொருளாகவேதோன்றியது.
கிளின்டனாலும் அமெரிக்கமுதலாளித்துவத்தின் பலம்மிக்க
பிரிவினராலும்முன்மொழியப்பட்ட வர்த்தக சட்டவாக்குலுக்கு
எதிராக தமக்கு ஆதரவினை திரட்டிக்கொள்ளஇவ் ஊர்வலத்தினை
பயன்படுத்த தொழிற்சங்கஅதிகாரிகள் முடிவெடுத்த பின்னரே
AFL-CIO ஏப்ரல் 16-17 ஆர்ப்பாட்டங்களுக்குஆதரவாக
பிந்தி கையெழுத்திட்டது. AFL-CIO வினர்
ஆபிரிக்க நாடுகளுக்கானவரிக்குறைப்பிற்கு எதிராகவும், சீனாவுடனானவர்த்தக
சுமுகமாக்கலுக்கு எதிராகவும்,வடஅமெரிக்க சுதந்திர வர்த்தக
உடன்படிக்கை [NAFTA]
போன்ற வர்த்தகஉடன்படிக்க்ைகளுக்கு எதிராகவும் பிரச்சாரத்தினை
பரப்பிவருகின்றனர். இத்தொழிற்சங்கஅதிகாரத்துவம் நெசவு, உருக்கு
போன்றஅமெரிக்க கைத்தொழிலின் பின்தங்கிய பிரிவினருடன்இணைந்து
பூகோளமயமான உற்பத்தியுடன்தம்மை தகவமைத்து கொள்ளமுடியாதுவெளிநாட்டு
போட்டிக்கு எதிராக வரிப்பாதுகாப்பினை தேடுகின்றனர்.
இது தேசியவாதத்தினைஅடித்தளமாக கொண்ட
வலதுசாரிபிரச்சாரமாகும். கடந்த வருடங்களில் AFL-CIO
இனர் John
Sweeney இன் தலைமையின் கீழ் தமது தேசியவாதநோக்கத்திற்கு
மாற்றுவேடமணிய முயன்றனர்.தமது பொருளாதார பாதுகாப்புவாதகொள்கையை
முக்கியமாக மூன்றாம்உலகநாடுகளின் தொழிலாளர்களின் வேலைநிலைமைகளையும்,
உரிமைகளையும் பாதுகாக்கும்முற்போக்கான பிரச்சாரம்
எனபுகழ்ந்துரைத்தனர்.
இக்கருத்தானது AFL-CIO
வினரின் அமெரிக்காவிலும், சர்வதேசரீதியாகவும்
நடைமுறையில் எவ்வாறு தொழிற்படுகின்றனர் என்பதை புறநிலைரீதியாக
கருத்திற்கெடுக்கையில் இல்லாதொழிகின்றது. இத்தொழிலாளர்அமைப்பு
நீண்டகாலமாக படுபிற்போக்கானசக்திகளான CIA,
அமெரிக்கஅரச திணைக்களத்துடன்
இணைந்து அமெரிக்கஏகாதிபத்தியத்திற்கு எதிரான உலக மக்களின்புரட்சிகர,
சுயாதீனமான போராட்டங்களைதோற்கடித்தது. ஆபிரிக்கா,
ஆசியா, இலத்தீன்அமெரிக்காவின் ஊழலுக்கும், ஆழும் வர்க்கத்துடன்
கூட்டுறவிற்கும் பேர்போன தொழிற்சங்கங்களுடன் கூடி இணைந்துள்ளது.
அமெரிக்காவினுள் AFL-CIO
வினது பங்கு தொழிலாளர் அமைப்புஎன்பதைவிட
தொழிலாளர் ஒப்பந்தக்காரராகவும், நிர்வாகங்களின் கையாட்களாகவுமேஇயங்குகின்றது.
அதனது தொழிற்சங்கங்கள்அனைத்தும் வேலைநிறுத்த ஆயுதத்தைகைவிட்டுவிட்டன.
வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடப்படுமானால் அவை தொழிற்சங்கதலைமையினால்
உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு, காட்டிக்கொடுக்கப்படுகின்றன.அமெரிக்க
வரலாற்றில் என்றுமில்லாதளவிலானவால்ஸ்ரீட் பங்குகளினதும்,
நிறுவனங்களினதும்இலாப அதிகரிப்பின் மத்தியிலும் தொழிலாளர்களின்வாழ்க்கைத்தரம்
பாரியளவில் அழிக்கப்படுவதை AFL-CIO
பார்க்க மறுக்கின்றது.
சீனாவிலும், மற்றைய நாடுகளிலும் உள்ளநிலைமைகளுக்கான
தமது எதிர்ப்பைதெரிவிக்கையில் அமெரிக்காவினுள் பாரியளவில்அதிகரித்துவரும்
சுரண்டல் நிலையங்கள்,சிறுவர் உழைப்பு, சிறைகளுள் வேலைவாங்குதல்,அடிமைத்
தொழில்கள் போன்றவற்றைஎதிர்க்க எதுவும் செய்யவில்லை.
மாறாகஜனநாயக்கட்சிக்கான ஆதரவு மூலம்தொழிலாள வர்க்கத்தின்
சுயாதீன அரசியல்அணிதிரளலை தடைசெய்வதற்காக தனதுவளங்களையும்,
ஆழுமையையும் AFL-CIO பிரயோகிக்கின்றது.
AFL-CIO அதிகாரத்துவம்
தொழிலாள வர்க்கத்தின்மோசமான வலதுசாரி எதிராளிகளுடன்இணந்துள்ளது.
வாகன, உருக்கு தொழிற்சங்கங்கள் யப்பானிய எதிர்ப்பு தேசியவாதத்தைமுன்வைத்த
"அமெரிக்க பொருட்களைவாங்கு" என்ற 1980 பிரசாரத்தின்
போதுதென்கரோலினாவின் நெசவாலை உடைமையாளரும்,
தொழிறசங்க எதிராளியுமான ரொஜர்மில்லிக்கனின் "அமெரிக்க
கைத்திறமையால்பெருமைப்படு" என்ற பிரசாரத்துடன்இணைந்து
கொண்டனர். குடியரசுகட்சியின்வலதுசாரிப் பிரிவின் நீண்டநாள்
ஆதரவாளரானமில்லிக்கனுடனான [Milliken]
இந்தஉறவு NAFTA,GATT, அண்மைக்காலசீனவுடனான
வர்த்தகத்துக்கு எதிரானபிரசாரம் வரை தொடர்ந்தது.
தொழிற்சங்கஅதிகாரத்துவத்தின் ஒரு பிரிவு [முக்கியமாக Teamsters]
மில்லிக்கனால் நிதியுதவி வழங்கப்படும்சீர்திருத்தக் கட்சியின்
Patrick Buchanan க்கு ஆதரவளிக்கின்றது.
ஏப்பிரல்16 இன் வாஷிங்டன் ஊர்வலத்தின் போதுசில
மாணவர், சூழல்பாதுகாப்புக் குழுக்கள் AFL-CIO
இன் "உலகநீதிக்கான பிரச்சாரம்"என்பதன்
மூலம் அதன் வலதுசாரித் தன்மையைமூடிமறைக்க முயன்றனர். சிலபேச்சாளர்கள்முதலாளித்துவத்தையும்,
பூகோளமயமானகூட்டுறவுகளையும் நிராகரித்தபோதும்,சோசலிச
எதிர்ப்பிற்கு பேர்போன AFL-CIO செயலாளரான
RichardTrunka ஐயும்,
உருக்குத் தொழிலாளர்களின்தலைவரான
George Becker ஐயும்புகழ்ந்துரைத்தனர்.
இத்தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் அரசியலின் உள்ளடக்கத்தினை
ஒரு சில நாட்களுக்கு முன்னர் காணக்கூடியதாக இருந்தது. ஏப்பிரல்
12ம் திகதி வாஷிங்டனில் AFL-CIO வினாலும்,
Teamsters தொழிற்சங்கத்தாலும்
சீனாவுடனானவர்த்தகத்தை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கு
எதிராக இரண்டு ஊர்வலங்கள் ஒழுங்குசெய்யப்பட்டது. Teamsters
தொழிற்சங்க தலைவரான James
Hoffa, Buchanan க்கு மேடையமைத்து
கொடுத்தார்.அவரது கருத்துக்கள் ஆசிய எதிர்ப்பு இனவாதத்தையும்
"கம்யூனிச" சீனாவிற்கு எதிரான மோசமானபிதற்றல்களையும்
உள்ளடக்கி இருந்தது. James Hoffa கலந்துகொண்ட
AFL-CIO
இன் ஊர்வலத்தில் உருக்குத் தொழிலாளர்களின்தலைவரான
George Becker சீனாவைமிகமோசமான
வார்த்தைகளால் தூற்றினார்.
சுரண்டல் நிலையங்களுக்கு எதிரான ஐக்கியமாணவர்களின்
பிரதிநிதியான Roopa Gona
ஏப்பிரல் 16 முக்கிய ஊர்வலத்தில் தொழிற்சங்கங்களை புகழ்ந்தது
மட்டுமல்லாது, ஒரு கிழமைக்குமுன்னர் சீன எதிர்ப்பு ஊர்வலத்திலும்
உரையாற்றினார் என்பது குறிப்பிடப்படவேண்டியது ஒன்றாகும்.அக்கிழமை
நூற்றுக்கணக்கான மாணவர்கள்உருக்குத்தொழிற்சங்கவாதிகளுடன்
ஒன்றுகூடிஉள்ளூர் அமைப்புகளை கட்டுவது தொடர்பாக கலந்துரையாடினர்.
அரசியல் சந்தர்ப்பவசத்தினாலோ அல்லது அரசியல் அப்பாவித்தனத்தினாலோ
தூண்டப்பட்ட இம்மாணவர்கள்அமெரிக்க அரசியலின் மிகப்பிற்போக்கானபிரிவினருடன்
தம்மை இணைத்து கொண்டுள்ளனர்.
வீதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்
வாஷிங்டன் ஏப்ரல் 16 ஊர்வலத்தின் பிற்போக்கான,
நிர்மாணிக்கப்பட்ட ஊர்வலத்தினால் இளைஞர்கள் பின்தள்ளப்பட்டதை
விளங்கிக்கொள்வதுசுலபமானது. அவர்களது எல்லாவகைநாடகமாடலினாலும்
AFL-CIO இன்
அரசியலுக்கு எதிரான சாதகமானமாற்றீடு ஒன்றை வழங்கமுடியவில்லை.மேலும்
அவர்களால் பரந்துபட்டஉழைக்கும் மக்களின் முக்கிய கவனத்தைஈர்க்க
எதையும் வழங்கமுடியவில்லை.
இவ்எதிர்ப்பு ஊர்வலம் Direct
Action Network என்ற Earth
First!, the Ruckus Society, the Peoples GlobalAction போன்றவற்றாலும்,
ஏனையநுகர்வு எதிர்ப்பு, தொழில்நுட்ப எதிர்ப்புகுழுக்களாலும்
ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.இவர்கள் பூகோளமயமாக்கலுக்குஎதிராக
பொருளாதார வாழ்க்கையில்தேசிய சந்தையும், தேசிய அரசும்
முக்கியபங்குவகித்த அமெரிக்க முதலாளித்துவத்தின்ஆரம்ப காலத்தை
சிறந்ததாக முன்வைக்கின்றனர்.
இவர்களில் எவரும் ஏன் பூகோளமயமாக்கல்
நடைபெற்றது என்பதை கேட்கவில்லை.இப்போக்கினை அவர்கள்
தற்செயலானதாகவோ அல்லது கூட்டிணைந்த சதியானதாகவேநோக்குகின்றனர்.
உண்மையில் பூகோளமயமாக்கலானது மூச்சுத்திணறவைக்கும்
தேசியசந்தையின் பிடிக்குள் இருந்துவிடுவித்து, பூகோளரீதியானஅளவில்
அபிவிருத்தியடைய உற்பத்திச்சக்திகள்முயலும் ஒரு சக்திவாய்ந்த
புறநிலையானபோக்காகும். இப்போக்கானது உற்பத்திசக்திகளின்
ஒவ்வொரு வரலாற்று அபிவிருத்தியைபோலவே மனிதசமுதாயத்தின்
பாரியளவிலானவாழ்க்கை, கலாச்சார முன்னேற்றத்திற்கானஉள்ளடக்கத்தை
கொண்டுள்ளது.
எவ்வாறாயினும் பூகோள தொழில்நுட்ப,
பொருளாதாரமுன்னேற்றங்கள் முதலாளித்துவ எல்லைகளுக்குள்
அடங்கியிருக்கும் வரை அவை போட்டிதேசிய அரசுகளுக்கிடையிலான
இலாபத்திற்கானபோட்டியின் கீழ்ப்படுத்தப்பட்டிருக்கும்.இவ்
முக்கியமான முற்போக்கான போக்குதனது பிற்போக்கான வெளிப்பாட்டினையேகொண்டிருக்கும்.
முதலாளித்துவத்தின்கீழ் பொருளாதார வாழ்வின் பூகோளமயமாக்கல்
உலக மக்களின் பெரும்பாலானோருக்குமோசமான ஏழ்மையையும்,
சுரண்டலையுமேவழங்கும்.
இருபதாம் நூற்றாண்டுமுன்வைத்த பாரிய வரலாற்றுக்
கடமையைஇருபத்தியோராம் நூற்றாண்டில் தீர்த்துவைக்கப்படவேண்டும்.
அதாவது மனிதசமுதாயத்தின் உற்பத்தி சக்திகளை முதலாளித்துவத்தின்
காலாவதியாகிப்போன சொத்துடமைஉறவுகளிலிருந்து விடுவித்தலாகும்.
ஆனால்வாஷிங்டனில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தமாணவர்
அமைப்புகளும், சுற்றாடல்பாதுகாப்பு குழுக்களும் பூகோளமயமாக்கலை
அவை சிறைப்பட்டிருக்கும் முதலாளித்துவசமூக உறவுகளுடன் ஒப்பிடுகின்றனர்.
இந்த அடிப்படையான குழப்பம் தவிர்க்கமுடியாதவாறு
அரசியல் ஐயுறவுவாதமுடிவுகளுக்கு இட்டுச்செல்கின்றது.
அதுபூகோளமயமாக்கலால் தீவிரமயமாக்கப்பட்ட நெருக்கடிகளின்
முக்கிய புரட்சிக உள்ளடக்கத்தை மேலோட்டமாக நோக்கியதாகும்.இதற்கு
மேலாக இப்படியானதொருநோக்கு இந்நெருக்கடியை புரட்சிகரமாகவும்
முற்போக்காகவும், தீர்க்கக் கூடியஒரேயொரு சமூக சக்தியான
தொழிலாளவர்க்கம் இருக்கின்றது என்பதை நிராகரிப்பதாகும்.
பூகோளமயமாக்கலின் "மறு பக்கத்தில்"இதன்
மூலமாக சர்வதேச தொழிலாளவர்க்கம் பாரியளவில் பலமடைந்துள்ளது.அமெரிக்காவினுள்ளும்,
சர்வதேச ரீதியாகவும்தொழிலாள வர்க்கம் எண்ணிக்கை ரீதியாகபாரியளவில்
அதிகரித்துள்ளது. இலத்தீன் அமெரிக்காவிலும், ஆபிரிக்காவிலும், ஆசியாவிலும்
நாட்டுப்புறத்திலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் தொழிற்சாலைகளுக்கு
வந்துள்ளதுடன், முன்னேறிய நாடுகளில்முன்னர் மத்தியதர வர்க்கத்தினர்
எனஅழைக்கப்பட்டவர்கள் தற்போது தொழிலாள வர்க்க
மயமாக்கப்பட்டுள்ளனர்.
மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை எழுதியகாலத்திலிருந்து
தற்போதுதான் முன்னொருபோதும் இல்லாதவாறு சமுதாயம்
இருபெரிய வர்க்கங்களுக்கு இடையே, அதாவதுமுதலாளித்துவ வர்க்கத்திற்கும்,
தமதுஉழைப்பினை மட்டும் உயிர்வாழ்வத்ற்குநம்பியிருக்கும்
சமுதாயத்தின் பெரும்பான்மையான தொழிலாள வர்க்கத்திற்க்கும்
இடையேபிரிவடைந்தமை மிக தெளிவாகவுள்ளது
இதற்கு மேலாக வேலைநீக்கத்திற்க்கும்,வீழ்ச்சியடையும்
வாழ்க்கை தரத்திற்க்கும்,ஜனநாயக உரிமைகள், சமூகநலன்கள்மீதானதும்
தாக்குதல்களுக்கும் எதிராகசர்வதேச தொழிலாளவர்க்கம்
எதிர்நோக்கும் போராட்டத்தின் பொதுத்தன்மைமார்க்ஸின் கூற்றான
உலகத் தொழிலாளரேஒன்றிணையுங்கள் என்பதை யதார்த்தமாக்குவதற்கான
முன்நிபந்தனைகளை உருவாக்கியுள்ளது.
Earth First! போன்ற
ஆர்ப்பாட்டங்களைஒழுங்கு செய்த அமைப்புக்களை கடந்தஇரண்டு
தசாப்தங்களாக நிகழ்ந்தபாரிய மாற்றங்கள் பயமுறுத்தியுள்ளதுடன்,சீரழிவிற்கும்
உள்ளாக்கியுள்ளது. சமுதாயத்தைமுற்போக்கான, மனிதாபிமான
ரீதியாகஅபிவிருத்திசெய்ய எந்தவொரு அடித்தளமும்இல்லாது, அவர்கள்
தொழில்நுட்பத்திற்கும்,விஞ்ஞானத்திற்கும், நவீன சமுதாயத்திற்கும்எதிராக
திரும்பி, நகரங்களின் மத்தியில் வாழும்"சிறுபான்மை நுகர்வோரை"
பாரியளவினராககாட்டி இவர்கள் இயற்கை வளங்களைவிழுங்குவோரென
கூறுகின்றன.
இக் குழுக்கள்மல்தூசியனிச [Malthusianism]
வாத பிற்போக்கான கருத்தினை அடித்தளமாக
கொண்டுசனத்தொகை அதிகரிப்புத்தான் மனிதனின்பிரச்சனைகளுக்கு
காரணமென்கின்றன.இப் படுபிற்போக்கான நோக்கு தனதுஉற்பத்திசக்திகளின்
அபிவிருத்தியினால் இயற்கையையும், தனது சுற்றுசூழலையும் தனது
தேவைகளுக்குஏற்ப மனிதனால் மறுசீரமைக்க முடியும்என்பதை
நிராகரிக்கின்றது.
இக்குழுக்களில்பல உலக வங்கியாலும், சர்வதேச
நாணயநிதியத்தாலும் அணைகள் கட்டுதல், மின்சாரஉற்பத்தி திட்டம்,
ஏனைய பொருளாதாரஅபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியுதவிகளைகுறைகூறுகின்றன.
அவர்களது எதிர்காலம்ஆதிகால வாழ்க்கை முறைக்கு செல்வதாகும்.மூன்றாம்
மண்டல நாடுகளுக்கான வலைப்பின்னலின் தலைவரான Martin
Kohr இன்படி"
மூன்றாம் உலக நாடுகளின் தொழில்நுட்ப,கலாச்சார
அறிவுடமைகளானவிவசாயம், கைத்தொழில்,
இருப்பிடம்,மருத்துவம், நீர், வடிகால் அமைப்பு போன்றவற்றை
மீண்டும் கண்டுபிடித்தலாகும்".
1980இல் எதியோப்பியாவை பட்டினி தாக்கியபோது
Earth First! இன்
இணை ஸ்தாபகரான Dave Formen ஒரு
விமர்சனத்தில் "இயற்கையேதனது சமநிலையை தேடிக்கொள்ளவிடுவதே
சிறந்ததாகும் எனவும், நீங்கள்என்னை பாசிசவாதி என கூறினாலும்
நான்மனிதனிலும் பார்க்க கரடிகளையும், மழைக்காடுகளையும்,
திமிலங்களையுமே விரும்புகின்றேன்"என்றார்.
Dave Formen உம், Wiscosin
இன் ஜனநாயக்கட்சி சென்ற்றரான Gaylord
Nelson உம்,
Sierra Clubஇன் ஒரு பிரிவினரும் ஏனைய
சில சூழல் பாதுகாப்புவாதிகளும் நாட்டின் இயற்கை வழங்கள்ஏற்கனவே
பாரமேறியுள்ளதால் அமெரிக்காவிற்கான குடிவரவினை
கடிவாளமிடுமாறுகோருகின்றனர்.
வாஷிங்டனில் கூடியவர்களின்இடது வாயடிப்புகளின்
மத்தியிலும் அவர்களதுஅரசியல் சம்பிரதாயபூர்வமானதாகும்.இது
எவ்வகையிலும் முதலாளித்துவத்திற்குஎதிரானதல்ல. இதனால்
தான் கிளின்டன்நிர்வாகத்தினரும், உலகவங்கியினதும், சர்வதேசநாணய
நிதியத்தினதும் உத்தியோகத்தர்களாலும்ஆர்ப்பாட்டக்காரர்களின்
முன்வைத்தகோரிக்கைகள் பலவற்றை ஏற்றுக்கொள்வதில்பிரச்சனை
இருக்கவில்லை.
உலக வங்கியினதும்,சர்வதேச நாணய நிதியத்தினதும்
கூட்டம்ஏப்ரல் 17ம் திகதி நடைபெற்றுக்கொண்டிருந்தவேளையில்
வெளியே ஆர்ப்பாட்டங்கள்நடக்கையில் அமெரிக்க திறைசேரி செயலாளரான
Lawrence Summers "
மனிதனின்அபிவிருத்தியை சக்திவாயந்தமுறையில்
உயர்த்த உதவியளிக்க உலகம்சரியாகவும், கூடியளவு கோரிக்கைகளைமுன்வைக்கின்றது"
என கூறினார். சர்வதேசநாணய நிதியத்தினது அலுவலகர்கள் ஏழ்மைக்குஎதிராகவும்,
மூன்றாம் உலக நாடுகளின்கடனை குறைப்பதற்கும், எய்ட்ஸ்
பரவுதலுக்குஎதிராகவும் கவனமெடுப்பதாக கூறினர்.
உண்மையில் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குசெய்தவர்களின்
கோரிக்கைகளுக்கும்அமெரிக்க நாடுகடந்த நிறுவனங்களின்சார்பில்
கிளின்டன் நிர்வாகம் நடைமுறைப்படுத்தும் வர்த்தக கொள்கைகளுக்கும்
இடையேஒருமைப்பாடு இருக்கின்றது. உலக வர்த்தகஉடன்பாடுகளுக்கும்
வேலை, சுற்றாடல்நிலைமைகளுக்கும் உள்ள ஒவ்வாமையைகிளின்டன்
தேர்ந்தெடுக்க காரணம் வெளிநாட்டுபோட்டியாளருக்கு
எதிராக அமெரிக்காவின்வர்த்தக நலன்களை பாதுகாக்கவாகும்.
உலகவங்கியும், சர்வதேச நாணய நிதியமும்,உலக
வர்த்தக அமைப்பும் பெரும்பான்மையான உலக மக்களின் நலன்களுக்கு
எதிராகஉலக முதலாளித்துவத்தின் நலன்களைபாதுகாக்கின்றது.
"சுதந்திர வர்த்தகம்"என அவர்கள் அழைப்பது உலகப்
பொருளாதாரத்தை ஆழுமை செலுத்தும் நாடுகடந்தநிறுவனங்களும்,
நிதி அமைப்புக்களும் தொழிலாளவர்க்கத்தை சுரண்டுவதை
தீவிரமாக்கும்கசப்பான உண்மையை நாசூக்காககூறுவதாகும்.
இவ் அமைப்புகளால்உருவாக்கப்பட்ட வர்த்தக உடன்படிக்கைகள்
மனித சமுதாயத்தின் நலன்களின் பேரில்செய்யப்பட்டவையல்ல.
ஆனால் AFL-CIO "சுதந்திர
வர்த்தகம்", அதாவதுபாதுகாப்பு வாதத்திற்கு அழைப்புவிடுவதுபின்னோக்கி
செல்வதாகும். பூகோளமூலதனத்திற்கான பதில், தேசிய அரசுகளின்ஆழுமையை
புனருத்தானம் செய்தல்ல.மாறாக உலக சோசலிசத்திற்கும்,
சர்வதேசதொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்குமாகபோராட
தொழிலாள வர்க்கத்தின்சுயாதீன அரசியல் கட்சியை கட்டியெழுப்புவதாகும்.
|