Human Genome Project: First scientific milestone of the
twenty-first century
மனித உயிரணுத்திட்டம் 21ம் நூற்றாண்டின் முதலாவது
முக்கிய விஞ்ஞான நிகழ்வு
By Chris Talbot
11 July 2000
Use
this version to print
மனித உயிரணுவின் வரைவானது
விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு முக்கியமான நிகழ்வாகும். 500 பக்கங்கள்
அடங்கிய 200 தொலைபேசி விபரப்புத்தகங்களின் அளவினை ஒத்த 3.1
பில்லியன் DNA சோடிகளினது
மரபணு குறியீடுகளின் வடிவம் [Genetic
code]தற்போது படவரைவு வடிவில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் இன்னும் ஒருசில இடைவெளிகளே இருப்பதுடன் இவ் மனித உயிரணுத்திட்டம்
மூன்று ஆண்டுகளில் முழுமையாக பூர்த்தி அடைந்துவிடும்.
இந்ததிட்டம் 21ம் நூற்றாண்டில் மனிதசமுதாயத்தின்
பாரிய முன்னேற்றத்தை முன்னறிவித்துள்ளதுடன், புற்றுநோய் உட்பட
பரந்தளவிலான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு மூலகாரணமான
விளக்கத்தை வழங்கும். இது மனிதக்கலங்களின் சிக்கலான இயக்கத்தை
விளங்கிக்கொள்வதற்கு ஒரு முக்கிய படியாக இருப்பதுடன் இரசாயனத்திற்கும்
உயிரியலுக்குமிடையிலான, சேதன அணுக்களுக்கும் உயிரின் அமைப்புக்கும்
இடையிலான தொடர்புகளை விடுவிக்கும் விஞ்ஞான கண்டுபிடிப்புக்களின்
ஒரு பகுதியுமாகும்.
ஆதி உயிரினங்களிலிருந்து கூர்ப்படைந்த உலகின் மிக
அபிவிருத்தியடைந்த உயிரினமான கோமோசப்பியன்ஸ் என அழைக்கப்படும்
மனிதஇனத்தினை வரைபடரீதியாக உறுதிப்படுத்தும் இவ்அபிவிருத்தியானது
மனித இனம் ஒரேமாதிரியான உயிரியல் தொழிற்பாட்டை கொண்டிருப்பதை
காட்டுகின்றது. இது உலகத்தில் மனிதனின் நிலை தொடர்பான தெளிவற்ற
மதவாத கருத்துக்களை நிராகரிப்பதில் மிகவும் முக்கியமானதாகும்.
எமது ஒவ்வொரு உயிர்கலங்களிலிலும் உள்ள 23 மரபணுக்களின்[choromosomes]
99% ஆன தொகுப்பின் வரைபானது எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியானதாகும்.
இவ் மரபணு வரைவில் எந்தவொரு முக்கிய இனரீதியான வித்தியாசங்கள்
கண்டுபிடிக்கப்படவில்லை. உண்மையில் 97% ஆன "Junk"
என பெயரிடப்பட்டுள்ள உயிரணு, கலங்களின்[Cells]
தொழிற்பாட்டில் எவ்வித செயற்பாட்டையும் கொண்டிருப்பதாக
இதுவரை தெரியவில்லை. 3% ஆன உயிரணுக்களே 100,000 மனிதமரபணுக்களின்
[சரியான எண்ணிக்கை இதுவரை தெளிவாகவில்லை] உருவாக்கத்தை
தீர்மானிக்கும் தன்மையை கொண்டிருப்பதுடன், இதுவரை 38,000
மரபணுக்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ் மரபணுக்களின்
வரிசைக்கிரமமானது ஒருகலம் தனது இயக்கத்திற்கு புரதஅணுக்களால்
[Protein molecules]
கட்டப்பட்டிருப்பதற்கான பிரதி ஒன்றை வழங்குகின்றது. சில மரபணுக்கள்
ஏனைய மரபணுக்களை இயங்கவைப்பதுடன், இயங்காமலும் செய்கின்றன.
மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட உயிரினங்களில்
கோலிபக்டீரியா, ஈஸ்ட், வுரூட் பிளை, நெமரோட் புழு [
Bacterium e coli, Yeast, Fruit fly, Nematode worm ]
என்பன அடங்கும். எலி, பூனை போன்ற ஏனைய உயிரினங்களின் மரபணுக்களை
வரையும் முயற்சி நடைபெற்று கொண்டிருக்கின்றது. எளிய உயிரினங்களின்
மரபணுக்கள் எவ்வாறு தொழிற்படுகின்றது என்பதை விளங்கிக்கொள்வது
மனித மரபணுக்களை கண்டுபிடிப்பதற்கு விஞ்ஞானிகளுக்கு உதவியாக
இருக்கும். உதாரணமாக எமது மரபணுக்களின் 15% ஆனவை e
coli மரபணுக்களையும், 30% ஆனவை Yeast
இன் மரபணுவை போன்றும் இருக்கின்றது.
எமது கூர்ப்பு பரம்பரையியல் 75% ஆன எமது மரபணுக்கள் எலியினதை
ஒத்ததாக இருப்பதுடன், 98,4% மனிதக்குரங்குகளினதை ஒத்ததாக
இருப்பதாகவும் உறுதிப்படுத்துகின்றது.
இந்த முன்னேற்றத்தினை சாதகமாக்கியதற்கு முக்கியமாக
தொழிநுட்பத்தின் பாரிய அபிவருத்தியும் சர்வதேச கூட்டுழைப்பும்
முக்கியபங்கு வகித்துள்ளன.
கணணியால் கட்டுப்படுத்தப்படும் இயந்திரங்கள்
DNA இனது
வரிசைக்கிரமத்தினை கண்டுகொள்ள உதவியதுடன் அதிஉயர் கணணிகள்
பாரிய அளவிலான தகவல்களை பெறுவதற்கு பாவிக்கப்பட்டதும்,
முழு உயிரியல் துறையினதும் அதிகரித்துவரும் திட்டங்களின் முக்கிய
காரணமுமாகும்.
கடந்த 10 வருடங்களில் மரபணுவின் வரைவு
தொடர்பான ஆய்வுகளில் விஞ்ஞானிகளின் குழுக்களுக்கு இடையேயான
சர்வதேச கூட்டுழைப்பு காரணமாகியது. இதில் Francis
Collins ஆல் தலைமை தாங்கப்பட்ட
பொதுநிதியால் ஆதரவளிக்கப்படும் அமெரிக்காவின் சுகாதரத்திற்கான
தேசிய அமைப்பான Human Genome
Research Institute உட்பட பலபல்கலைக்கழக
குழுக்களும் ஈடுபட்டிருந்தன. இங்கிலாந்தில் John
Sulston ஆல் தலைமை தாங்கப்படும்,
ஏழ்மைக்கும் நல்வரவுக்குமான நிதியத்தினால் உதவியளிக்கப்படும்
Cambridge இல்
உள்ள Sanger Centre இனால்
ஆராய்ச்சி செய்யப்பட்டது. ஜேர்மனியையும் யப்பானையும்
சேர்ந்த பல்கலைக்கழக ஆய்வாளர்களும் இதற்கு பங்களித்துள்ளனர்.
தொலைத்தொடர்பு சாதனங்கள் கூறுவது
போலல்லாது, Craig Venter க்கு
சொந்தமான Celera Genomics 1988இலேயே
இத்துறையினுள் புகுந்ததுடன், நாளாந்தம் வலைத்தளத்தில் ஒழுங்காக
பிரசுரிக்கப்பட்ட வெளிப்படையான வேலையில் கூடுதலாக தங்கியுள்ள
இவர்கள் பொதுப்பணத்தில் நிதியுதவி செய்யப்பட்ட குழுக்களை
வென்று
3 வருடங்களில் வரிசைப்படுத்தலை முடித்துவிடலாம்
என கூறுகின்றது. Craig Venter இன்
முறை தொடர்பாக விஞ்ஞானிகள் மனவருத்தமடைந்துள்ளனர்.
நோபல் பரிசு பெற்றவரும் DNAஐ
கூட்டாக கண்டுபிடித்தவருமான James
Watson, Celera Genomics இனரை ஒழுங்கற்றவர்கள்
எனவும் Craig Venter இன்
முறையை "விஞ்ஞானம் அல்ல" எனவும் கூறியுள்ளார்.
"நாங்கள் போராட வேண்டும் என்பது தொடர்பாக வருத்தம்
தெரிவித்ததுடன் இது இலகுவானது அல்ல" எனவும், Venter
இடமிருந்து போட்டி இருந்த போதும்
இது இத்திட்டத்தை ஒருவருடம் மட்டுமே முன்கொண்டு வந்துள்ளதாக
Sulston தெரிவித்தார்.
இந்தப்பின்னனியிலேயே மரபணுவரைபின் பூர்த்தி
தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் தேர்ந்தெடுத்த
வார்த்தைகள் முக்கியமானவை. மரபணுத்தொகுப்பானது "கடவுள்
உருவாக்கிய உயிரின் மொழி எனவும் இது கடவுளின் மிகத்தூய
பரிசு" எனவும் பயமும் ஆச்சரியமும் தூண்ட அவர் குறிப்பிட்டார்.
அரசியல் நோக்கத்தையும் நிர்வாகத்தையும்
அதிகரித்துவரும் வகையில் ஆழுமை செலுத்தும் மதவாத வலதுசாரிபிரிவினரின்
அழுத்தங்களையே கிளின்டன் பிரதிபலிக்கின்றார். விஞ்ஞான அபிவருத்தி
பொருள்முதல்வாத நோக்கை சக்திவாய்ந்த முறையில் நிரூபிப்பதை
எதிர்நோக்கையிலும், அடிப்படைவாதிகளின் தந்திரமான உருவாக்க
கொள்கைகளை[Creationist theory]மறுக்கையிலும்
கிளின்டன் கடவுளுக்கு நன்றிகூற தேர்ந்தெடுத்துள்ளார்.
அவரது கருத்துக்கள் தற்போதைய முதலாளித்துவவாதிகளின்
அரசியல், அறிவியல் பிற்போக்குத்தனத்தை சுருக்கமாக எடுத்துக்காட்டுகின்றது.
இது முன்னைய ஜனாதிபதியான Thomas
Jefferson தனது பதவிக்காலத்தை விஞ்ஞான
கண்டுபிடிப்புக்களை ஊக்குவிப்பதற்கும் புதிதாக உருவாக்கப்பட்ட
குடியரசின் பிரஜைகள் முதன்முதலாக சுதந்திரத்தை உணர்ந்து
கொள்வதற்கு கல்வி அறிவூட்ட பயன்படுத்தியதற்கு முற்றுமுழுதாக
எதிரானதாகும்.
நிறுவனங்களின் தலையீடு
மரபணு ஆராய்ச்சியில் நிறுவனங்களின் வியாபார
நலன்கள் எந்தளவிற்கு பலப்பரீட்சை செய்யப்படுகின்றது என்பது
உண்மையில் பிரச்சனைக்குரிய விடயமாகும். ஒருதொகை புதிய
நவீன தொழில்நுட்ப நிறுவனங்கள் மில்லியன் கணக்கான டொலரினை
முதலீடாக பெற்றுள்ளன. Venter இன்
Celera Genomics மட்டும்
உயிரணுத்திட்டத்தில் ஈடுபட்டிருக்கையில் Human
Genome Sciences , Incyte Genomics, Millennium Pharmaceuticals போன்றவை
தமது பரம்பரை அலகுகள் தொடர்பான தகவல்களை பாரிய
மருந்து தயாரிக்கும் நிறுவனங்களான SmithKline,
Novartis, Glaxo, AstraZeneca போன்றவற்றிற்கு
விற்கமுயல்கின்றன.
இது இப்படியான பொதுவான போக்குகளின்
ஒருமுக்கிய வெளிப்பாடு மட்டுமே. பொது நிதியுதவி வழங்கப்பட்ட
ஆராய்ச்சிகள் பறிக்கப்பட்டு தனியார்பிரிவினரால் செய்யப்படும்
ஆராய்ச்சிகளும் அபிவருத்திகளும் அதிகரிக்கின்றன. 1960 களில் 50%
ஆக இருந்த அமெரிக்காவின் அரசு நிதியுதவி வழங்கப்பட்ட ஆராய்ச்சிகளும்
அபிவருத்திகளும் தற்போது 16% ஆக குறைந்துள்ளதாக ஒருகணிப்பீடு
தெரிவிக்கின்றது.
இவ்விடயம் மனிதமரபணுத்திட்டத்தில் அவதானிக்கக்கூடியதாக
இருந்தது. Celera Genomics உம்
அதனைசார்ந்த Pfizer, Pharmacia,
Novartis போன்றவை இந்தவருடம்
900 மில்லியன் டொலர் பெறுமதியான முதலீட்டை செய்திருக்கையில்
அமெரிக்க பொதுநிறுவனமான தேசியமரபணு ஆராய்ச்சி நிலையம்
260 வேறுபட்ட நிதியுதவிகளூடாக 112.5 மில்லியன் டொலரை மட்டுமே
பெற்றுள்ளது.
தனியார் நிதியின் பாரிய தலையீடானது
சுகாதாரசேவைகளின் செலவை அதிகரிக்க செய்வதையே
விளைவாக கொண்டுள்ளது. நாடுகடந்த மருத்துவ நிறுவனங்கள்
மரபணு ஆராய்ச்சியினூடாக மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள
முன்னேற்றங்களை பாவித்து ஏற்கனவே உள்ள தமது பாரிய இலாபங்களை
இன்னும் அதிகரிக்க முயல்கின்றன. இது இந்த நலன்களை பெற்றுக்கொண்டு
தமது வாழ்க்கையை நீடித்துக்கொள்ளக்கூடிய வசதிபடைத்த
சிறுபான்மையினருக்கும், அதிகரித்துவரும் சுகாதாரசேவை செலவுகளை
செலுத்தமுடியாத பாரிய பெரும்பான்மையினரான உழைக்கும்
மக்களுக்குமிடையே சமூகப்பிளவை அதிகரித்துள்ளது. இது அரச
சுகாதாரசேவை உள்ள நாடுகளில் மிகவும் செலவுகூடிய சிகிச்சைமுறைகளை
கூடியளவில் கட்டுப்படுத்தவும் செய்கின்றது.
அண்மைய உலக சுகாதார அமைப்பின் உலகச்சுகாதார
அறிக்கை 2000 இல் "சராசரி
சிறந்த உடல்நலத்தினை அனுபவிக்கும் நாடுகளில் கூட சமூக
பொருளாதார வர்க்கங்களுடன் உறுதியாக இணைந்து வாழ்க்கையின்
எதிர்பார்ப்பின் சமத்துவமின்மைகள் மறையாதுள்ளது". எயிட்ஸ்
க்கு எதிராக பாவிக்கப்படும் எதிர்ப்பு மருந்துகளின் செலவின் எண்ணிக்கையை
கொண்டு பார்க்கையில் உலக உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்கள்
பாரியளவில் இலாபம் அடைந்துள்ளமை ஒரு அண்மைய உதாரணமாகும்.
ஒருவருட எய்ட்ஸ் மருத்துவத்திற்கான உலகவிலை 10,000-15,000 டொலராக
இருக்கின்றது. இந்த மருந்தின் ஆரம்ப வடிவம் உற்பத்திசெய்யப்படும்
பிரேசிலில் அதன் விலை 1000 டொலர் மட்டுமே.
எதிர்கால அபிவருத்திகள்
கூடுதலான விஞ்ஞானிகள் மனிதக்கலத்தினை விளங்கிக்கொள்ளும்
ஆய்வுகள் இன்னும் ஆரம்பநிலையிலேயே உள்ளதாக வலியுறுத்துகின்றனர்.
மனித உடல் 75 ரில்லியனுக்கு மேற்பட்ட கலங்களால் உருவாக்கப்பட்டுள்ளதுடன்,
இது மரபணுக்களால் கட்டுப்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான
புரதங்களின் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள இயக்கத்தை கொண்ட
பாரிய சிக்கலான இரசாயன தொழிற்சாலை போன்றது. நோய்களுக்கு
காரணமான புரதங்களின் இயக்கத்தை விளங்கிக்கொள்வதும்,
அடையாளம் கண்டுகொள்வதும் இன்னும் ஆராய்வின் ஆரம்ப நிலையிலேயே
உள்ளது.
ஒரு தனிமரபணுவின் பிழையான இயக்கத்தினால்
உருவாகும் நோய்களான cystic
fibrosis, haemophilia போன்றவை மிக
அரிதானவையாகும். ஒரு மரபணு ஒரு பிழையான இயக்கத்திற்கு
காரணம் என ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தானது ஒரு மோசமான
தீவிர இலகுவாக்கலாகும். கூடுதலான நோய்களுக்கு மரபணுக்கள்,
புரதங்கள், கலங்களுக்கிடையேயான சிக்கலான உள்ளியக்கத்தை
விளங்கிக்கொள்ள தேவையாக உள்ளதுடன், இதேபோல் பரந்த
சுற்றுச்சூழல் காரணிகளையும் விளங்கிக்கொள்ள வேண்டியுள்ளது.
இவ்வருட ஆரம்பத்தில் பாரிசில் உள்ள நோயாளி
குழந்தை ஒன்றிற்கான நெக்கர் வைத்தியசாலையில் ஒரு அபூர்வ
பரம்பரை நோயான SCID க்கு
ஒரு தனி மரபணுவில் ஏற்படும் மாற்றம் காரணமாக இருப்பது
தொடர்பாக ஆராயப்பட்டது. இந்நோயினால் 11 மாத ஆண்குழந்தை
மரணத்தை எதிர்நோக்கியது. இந்நோய் மனித உடலிலுள்ள நோய்எதிர்ப்பு
கட்டமைப்பின் இயக்கத்தை நிறுத்துகின்றது. அக்குழந்தையின் உயிர்
மரபணு மருத்துவம் என அழைக்கப்படும் முறையினால் அக்குழந்தையின
எலும்பு மச்சைகளிலுள்ள பாதிக்கப்பட்ட மரபணுக்களை திடகாத்திரமான
மரபணுக்களால் மாற்றியதன் மூலம் காப்பாற்றப்பட்டது. இதிலிருந்து
இவ்வைத்திய முறையால் மேலும் மூன்று குழந்தைகளுக்கு வெற்றிகரமாக
பிரயோகிக்கப்பட்டதாக தெரிகின்றது. இவ் மரபணு மருத்துவ முறையானது
மூன்று வித்தியாசமான புற்றுநோய் எதிர்ப்பு வைத்தியத்திற்கு
பரிசோதிக்கப்படுவதுடன், cystic
fibrosis, haemophilia தொடர்பாகவும்
இம்முறை அணுகப்படுகின்றது.
"புத்திஜீவி சொத்தின் உரிமைகள்"
கணனிகளைப்பாவிப்பதன் மூலம் மரபணுத்தொகுப்பை
கண்டுபிடித்த்தனால் பெற்ற அறிவை பயன்படுத்தி ஒருகுறிப்பிட்ட
பரம்பரை அலகின் வரிசையை உருவாக்கும் புரதத்தினை முன்கூட்டியே
அறிவதன் மூலம் மருந்துவக்ைகள், நோய்களை கண்டுபிடிக்கும்
பரிசோதனைகள் வெற்றிகரமாக இருக்குமென மருந்து உற்பத்தி
செய்யும் நிறுவனங்கள் நம்புகின்றன. இது இன்னும் கூடியளவு ஊகத்திற்குரிய
வேலையாக இருக்கின்ற போதும் மில்லியன் கணக்கான டொலர்கள்
முதலீடு செய்யப்படுவதையும் தூண்டியுள்ளதுடன், உயிரியல் தொழில்நுட்ப
நிறுவனங்கள் பரம்பரை அலகுகளை கண்டுபிடிப்பதுடன் அவர்களுடைய
திறமையின் மூலம் மரபணுக்கள் எவ்வாறு இயங்குகின்றன என அறிய
முயல்கின்றனர்.
Celera Genomics மரபணு
தொடர்பாக அறிந்தவற்றை அதன் வாடிக்கையாளர்களுக்கு
வருடம் 5-15 மில்லியன் டொலருக்கு விற்கின்றது. Incyte
Genomics 500 முழுபரம்பரை அலகுகளின்
வடிவத்தினை பெற்றுள்ளதுடன் மேலும் கிட்டத்தட்ட 7,000 ற்கு
அதிகமானவற்றிற்கு விண்ணப்பித்துள்ளது. Human
Genome Sciences 100 பரம்பரை அலகுகளின்
வடிவத்தை பெற்றுள்ளதுடன் இன்னும் 7,500 ற்கு விண்ணப்பித்துள்ளது.
எல்லாமாக தனியார் நிறுவனங்கள் தமக்கிடையே கிட்டத்தட்ட
1,500 வடிவங்களை பெற்றுக்கொண்டுள்ளன.
இந்த வருட மார்ச் மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி
பில்கிளின்டனும் பிரித்தானிய பிரதமர் ரொனிபிளேயரும் பரம்பரை
அலகுகள் சம்பந்தமான அடிப்படை தகவல்களை எல்லோரும்
பெற்றுக்கொள்ள வேண்டுமென ஒரு அறிவற்ற அறிக்கையை வெளியிட்டனர்.
இதனை தொடர்ந்து உயிரியல் தொழில்நுட்ப பங்குகளின் பெறுமதி
20% ற்கு அதிகமான அளவில் பாரிய வீழ்ச்சி கண்டது. இவ்வீழ்ச்சி Venter
இன் தனியார் Celera
Genomics உம் Collins
ஆல் தலைமைதாங்கப்படும் பொது
நிதியுதவி பெற்ற குழுவும் ஒன்றிணைந்து மரபணு தொடர்பான
வரைபை பூர்த்தி செய்யவிருப்பதாக அறிவித்ததை தொடர்ந்தே
நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது. கிளின்டன் நிர்வாகமும் மரபணு
வடிவம் தொடர்பான தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதும்
இவ்விலை வீழ்ச்சிக்கு காரணமாகியது. ஆரம்ப தகவல்கள் அனைத்தும்
வெளிப்படையாக பெற்றுக்கொள்ளப்பட முடியுமானால் "புதிய
மரபணுவை அடித்தளமாக கொண்ட மருத்துவப்பொருட்களின்"
வடிவங்கள் முற்றுமுழுதாக பெற்றுக்கொள்ள முடியும். இதன் கருத்து
என்னவெனில் மரபணு அட்டவணையின் வரைபுகள் பரவலாக்கப்படுவதுடன்
அவற்றின் இயக்கம் மேலும் முன்சென்று உயிரியல் தொழில்நுட்ப
நிறுவனங்களின் இலாபங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும்.
விஞ்ஞானபூர்வமான அறிவு சுதந்திரமாக
பரவுவதை தடுப்பதற்கான எதிர்பார்த்திராத இவ்நடவடிக்கை
கடந்த 10 வருடங்களாக மனித மரபணு தொடர்பான ஆராய்ச்சி
செய்துவரும் அரச நிதியுதவி வழங்கப்பட்ட குழுவினரை ஆத்திரமடைய
செய்துள்ளது. Venter
இத்திட்டத்தில் ஒருபங்களித்துள்ளதாக Watson
அதிருப்தியுடன் ஏற்றுக்கொண்டுள்ள
போதும் "மரபணுவரைவிற்கு நான் அவர்களின் பங்கை வெறுக்கின்றேன்"
எனக்கூறியுள்ளார் John Sulston சோசலிச
நிலைப்பாட்டிலிருந்து மரபணுக்களின் வரைபை தான் எதிர்ப்பதாக
கூறியுள்ளார். "பூகோளரீதியான முதலாளித்துவம் உலகத்தை
பலாத்காரம் செய்கின்றது, அது எங்களையும் பலாத்காரம் செய்கின்றது.
மனித மரபணு தொடர்பான முழுக்கட்டுப்பாட்டையும் அது பெற்றுவிடுமானால்
உண்மையில் இதுவொரு தீய செய்தியாகும். இதனால் நாங்கள்
இதற்கு எதிராக கட்டாயம் போராடவேண்டும். நான் நினைக்கின்றேன்
எமது அடிப்பதைத்தகவல்களும், எமது மென்பொருட்களும்
சுதந்திரமாகவும் எல்லோராலும் அணுகப்பட்டு அதை பூர்த்திசெய்வும்,
அதிலிருந்து உற்பத்திசெய்யக்கூடியதாகவும் கட்டாயமாக இருக்கவேண்டும்"
என பிரித்தானிய கார்டியன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
Sulston போன்ற விஞ்ஞானிகள்
இவைதொடர்பாக சுயேச்சையாக கண்டுபிடிப்பது தொடர்பான
முயற்சியையும், முக்கிய உயிரியல் தகவல்களை எல்லோரும்
சொந்தமாக்கி கொள்ளவேண்டுமெனக்கூறி எதிர்ப்பது புகழத்தக்கது.
தற்போதைய அளவில் நிறுவனங்களின் தலையீடுகள் தொடருமானால்
அது தவிர்க்கமுடியாதபடி சகல விஞ்ஞான ஆய்வுகளினதும் குரல்வளையை
நசிப்பதாகவே முடியும். விஞ்ஞானத்தின் சுதந்திரமான அபிவிருத்தியும்
அதனுடன் கூடிய சமுதாயத்தின் உற்பத்தி உள்ளடக்கமும் தகவல்களை
எந்தவித தடையுமில்லாமல் பெற்றுக்கொள்வது இல்லாமல்
சாத்தியமற்றது. கணக்கிடமுடியாத தனியார் நிறுவனங்களின்
ஆழுமையும், இவ்வறிவியலை தங்கள் சொந்த இலாபத்தின் நோக்கத்தில்
தனியார்மயமாக்க முயல்வது முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளப்படமுடியாது.
நவீன உற்பத்தி உருவாக்கிய பாரிய விஞ்ஞான
தொழில்நுட்ப வளங்கள் மிகசிறுபான்மையான வசதிபடைத்த தனநபர்களின்
க்ைகளிலிருந்து விடுவிக்கப்படவேண்டும். அவை பொதுக்கட்டுப்பாட்டின்
கீழ் கொண்டுவரப்படுவதன் மூலம் மரபணுத்திட்டம் உறுதிவழங்கும்
மருத்துவ முன்னேற்றங்கள் சமத்துவமாக எல்லோருக்கும் கிடைக்ககூடியதாக
இருக்கும்.
|