World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Bribes, pleas and uproar as Sri Lankan parliament debates new constitution

இலங்கையின் புதிய அரசியல் அமைப்பு மீதான பாராளுமன்ற விவாதத்தில் லஞ்சமும், கெஞ்சலும் கூச்சலும்

By Nanda Wickremasinghe
8 August 2000

Use this version to print

கடந்த திங்கள் ஜனாதிபதி குமாரதுங்க அதிகாரத்தை பரவலாக்கும் தீர்வுப் பொதியை பாராளுமன்ற விவாதத்திற்கு முன்வைத்த வேளையில் கட்சி தாவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம், ஆளும் பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும்படி மாஜி சோசலிஸ்டுக்களின் அவஸ்த்தை நிறைந்த கெஞ்சல்கள் மற்றும் பொதுவான கூச்சல்கள் என்பன குறிப்பிடத் தக்கவையாக அமைந்திருந்தன

அரசியல் சீர்திருத்தத்தில், தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டின் வடக்கு- கிழக்கு பிரதேசங்களுக்கு அதிகாரத்தை பரவலாக்குவதன் மூலம், தமிழீழ விடுதலைப் புலிகளை ஓரம்கட்டி, நாட்டின் 17 வருடகால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என ஆளும் பொதுஜன முன்னணி நம்பிக்கை கொண்டுள்ளது.

அடுத்த 36 மணித்தியாலத்தில் இரண்டு சக்திகளுக்கும் இடையில் நாடக பாணியிலான மாற்றங்கள் இடம்பெறாவிட்டால், புதன்கிழமை வாக்கெடுப்பில் பொதுஜன முன்னணிக்கு அவசியமான தொகையை பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் என்பது தெளிவு.

இந்த அரசியல் அமைப்பு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிராந்தியத்துக்கு 10 வருட இடைக்கால நிர்வாக சபையை அமைக்கும் திட்டத்தை முன்வைத்திருப்பதாலும், தற்போதுள்ள விகிதாசார தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாலும் குமாரதுங்காவின் ஆட்சிக்காலம் முடிவடையும் வரை நிறைவேற்று ஜனாதிபதி முறையை தன் வசம் வைத்திருப்பதாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் அமைப்பை கண்டனம் செய்ததோடு பாராளுமன்றத்தில் இருந்தும் வெளிநடப்புச் செய்தார்.

அரசியல் சீர்திருத்தத்தை நிறைவேற்ற, 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 150 வாக்குகளை அரசாங்கம் வெற்றிபெற வேண்டும். தற்போது அது முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் குழுக்களின் உறுப்பினர்கள், அதே போல் கடந்த சில மாதங்களில் ஐக்கிய தேசியக் கட்சியில் (UNP) இருந்து மாறிய உறுப்பினர்களின் ஆதரவோடு 124 வாக்குகளையே கொண்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின் 8 உறுப்பினர்களின் வாக்குகளையும் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பை அது கொண்டுள்ளது. ஆனாலும் மேலும் 18 வாக்குகள் அவசியமாகியுள்ளது.

யூ.என்.பி. தீர்வுப் பொதியை எதிர்ப்பதாக விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ள போதிலும், கட்சி மாறுபவர்களின் தொகையை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக பெரும் முயற்சி எடுக்கவேண்டியுள்ளது. இவர்களுக்கு பணம், வாகனம் மற்றும் வீடும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இது 60 மில்லியன் ரூபாய் (750,000 டாலர்) வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக யூ.என்.பி. குற்றம் சாட்டியுள்ளது.

ஒரு யூ.என்.பி. உறுப்பினர் பொதுஜன முன்னணிக்கு மாறிய போது எதிர்க் கட்சி வரிசையில் இருந்து எழுந்த கேள்வி: "உங்களுக்கு எத்தனை மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது?" என்பதே.

லஞ்சம் கொடுத்தலும் தூண்டுதல்களும் வெளியில் தொடருகின்ற அதேவேளை, அரசாங்கத்தின் அதிகாரப் பரவலாக்கல் பொதிக்கு ஆதரவு வழங்குமாறு விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் பற்றி வீரக்கோன் யூ.என்.பி. உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்து பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை, அரசாங்கத்தின் நம்பிக்கையீனத்தை எடுத்துக் காட்டியது.

வீரக்கோன் லங்கா சமசமாஜக் கட்சியின் (LSSP) தலைவர். இலங்கையின் பெரும் தொழிலாளர் வர்க்கக் கட்சியாக இருந்த லங்கா சமசமாஜக் கட்சி, 1964ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (தற்போதைய பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கு தலைமை வகிக்கும் கட்சி) கூட்டரசாங்கத்தில் நுழைந்ததன் மூலம் தொழிலாள வர்க்கத்தையும் சோசலிசத்தையும் விட்டோடியது.

இந்தக் காட்டிக் கொடுப்பில் ஈடுபட்டதன் மூலம் இரண்டு முக்கிய முதலாளித்துவக் கட்சிகளின் சோவினிசக் கொள்கைகளுக்கு எதிராக தமிழ் மக்களைப் பாதுகாக்கும் தனது கடமையில் இருந்து ல.ச.ச.க. தவறியது.

அமைதியான கலந்துரையாடல்களின் மூலம், சில பிரேரணைகள் தொடர்பாக இணக்கத்துக்கு வந்ததை நினைவூட்டிய வீரக்கோன் யூ.என்.பி. உறுப்பினர்கள் இந்த உத்தேச அரசியல் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்ளாவிடில் அதற்கான திட்டங்களை முன்வைக்குமாறு பரிதாபமான முறையில் கேட்டுக்கொண்டார்.

ஆனால் எதிர்க் கட்சியினரின் கூச்சல் கேள்விகளுக்கு மத்தியில் அமைச்சரின் பேச்சை செவிமடுப்பது கடினமாகியது.

வீரக்கோனின் அவஸ்த்தை நிலை அவரது அமைச்சரவை அங்கத்தவரும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவருமான இந்திக குணவர்தனவோடு மட்டுமே பொருந்தியது. உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தியில் இருந்து தேசிய-அரசு வளர்ச்சி கண்டதாக மார்க்ஸ் கூறியதாக தெரிவித்த குணவர்தன, இலங்கை அரசை கட்டிக் காக்கும் பொதுஜன முன்னணியின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். அவர் ஸ்ராலினிசத்தின் சிடுமூஞ்சித்தனத்தின் இலட்சணங்களை வெளிக்காட்டிக் கொண்டார்.

அவர் குறிப்பிட்டதாவது, "யூ.என்.பி.யை பொதுஜன முன்னணிக்கு ஆதரவு வழங்குமாறு நெருக்குவது தொழிலாளர் வர்க்கத்தின் கடமையாகும்."- "உழைக்கும் மக்களுக்கு நாடு இல்லை" ஆகையால் அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள ஒடுக்கப்படும் மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதே விஞ்ஞான சோசலிசத்தின் ஸ்தாபகர்களின் கோட்பாடாகும்.

அதேவேளை சிங்கள சோவினிச அமைப்புகள் பாராளுமன்றத்துக்கு வெளியில் தங்கள் சக்திகளை அணிதிரட்ட ஏற்பாடு செய்திருந்தன. பல தசாப்தங்களாக தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ள பெளத்த பிக்குகள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது கடைசி கருத்தை வெளியிடுவதன் மூலம் அரசியல் யாப்புக்கு வாக்களிப்பவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் மரண வீட்டுக்கு தாம் சமூகம் தரப்போவதில்லை என குறிப்பிட்டிருந்தனர்.

யூ.என்.பி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), இன்னும் ஒரு டசின் சிங்கள இனவாத குழுக்களின் தலவைர்கள் இணைந்து கூட்டம் நடாத்தியதோடு அவர்கள் தொடர்ந்தும் குமாரதுங்கவின் தீர்வுப் பொதிக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக அறிவித்தனர்.

அரசாங்கம் பாராளுமன்ற வளவில் பல்லாயிரக் கணக்கான பொலிசை ஈடுபடுத்தியிருந்ததோடு ஆயுதப் படைகளையும் உஜார் நிலையில் வைத்திருந்தது.