World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Putin's "Chernobyl": The tragedy of the Russian submarine disaster in the BarentsSea

புட்டினின் "செர்நோபைல்": பாரன்ட்ஸ் கடலில் ரஷ்ய நீர்மூழ்கியின் அழிவின் பயங்கரவிபத்து

By VladimirVolkov and Julia Dänenberg
23 August 2000

Use this version to print

கடந்த ஒரு வாரமாக பாரன்ட்ஸ் கடலில் ருஷ்ய நீர்மூழ்கியான "Kursk" இன் பயங்கரவிபத்து நீடித்தது. இக்காலகட்டத்தில் உலகம் முழுவதுமுள்ள மக்கள் ஜனாதிபதி புட்டின் தலைமையிலான ரஷ்ய அரசியல்வாதிகளினதும், இராணுவத்தினதும் நம்பமுடியாதளவிலான தகுதியற்ற, முதுகெலும்பற்ற, மூர்க்கத்தனமான, பாசாங்குத்தனத்தை காணக்கூடியதாக இருந்தது.

அவர்களது நடவடிக்கை அல்லது நடவடிக்கையேதும் எடுக்காதது ஒரு குற்றச்செயலை எல்லையிட்டுக் காட்டுகின்றது. 100 மீற்றர் ஆழத்தில் கடலின் படுக்கையில் மூழ்கிக்கிடந்த "Kursk" இனுள் 113 கடற்படையினர் மெதுவாகவும் மூச்சுத்திணறி இறந்துகொண்டிருக்கையில், நாளுக்கு நாள் அவர்களது உயிரை காப்பாற்ற கிடைத்த சந்தர்ப்பங்களை ஒன்று மாறி ஒன்று கைகழுவி போகவிட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த பயங்கரத்திற்கான உறுதியான காரணங்களை தெளிவுபடுத்துவது முக்கியம் என்பது ஒரு இரண்டாந்தரமான பிரச்சனையாகும். எது முக்கியமானதாக இருந்திருக்குமெனில் அப்படையினரை காப்பாற்றுவதற்கான சகல சந்தர்ப்பங்களையும் முற்றுமுழுதாக பாவித்திருப்பதாகும். ஆனால் இது செய்யப்படவில்லை. சில சாத்தியக்கூறுகள் முயற்சி செய்து பார்க்கப்படக்கூட இல்லை. நிமிடக்கணக்கில் எண்ணப்பட்ட பெறுமதி வாய்ந்த நேரம் எந்வொரு நம்பிக்கையுமற்று கழிக்கப்பட்டது.

இது ஏன் நிகழ்ந்தது? இந்த பாரிய விபத்து சம்பந்தமான தகவல்கள் ரஷ்ய, சர்வதேச செய்தியாளர்களுக்கு ஏன் உடனடியாக வழங்கப்படவில்லை, ஏன் நாட்கள் கடத்தப்பட்டன? ஏன் பாதுகாப்பு அமைச்சரான Igor Sergejew , கடல்படைத் தளபதியான Admiral Wladimir Kurojedow அல்லது பிரதி பிரதமரான I.Klebanow ஆகியோரும் மற்றைய முக்கிய இராணுவத் தலைவர்களும் அரசாங்கமும் இப்பயங்கர விபத்தின் அளவை ரஷ்ய, உலக மக்களிடமிருந்து மூடி மறைக்க பெருமளவில் முயன்றனர்?.

ஏன் காப்பாற்றும் நடவடிக்கைகள் மூன்று நாட்களின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது? இக் கடற்படையினரை தமது சொந்த முறைகளினால் காப்பாற்றுவது தோல்வியடைந்து, வேறு எந்த வழியும் இல்லாதிருந்தபோது வெளிநாட்டு உதவிகள் ஏற்கனவே வழங்கத்தயாராக இருந்தபோதும் ஏன் கடைசி நிமிடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது?.

ஏன் இறுதியாக ஜனாதிபதி புட்டின் மெளனத்தால் மூழ்கடிக்கப்பட்டு, இவ்விபத்து நடந்த இடத்திற்கு செல்லாமல் தனது விடுமுறையை கருங்கடல் பிரதேசத்தில் கழித்துக்கொண்டிருந்தார்?.

இக் கேள்விகளுக்கான பதில்கள் இந்நிகழ்வுகளின் போக்குகளில் தாமாகவே வழங்கப்பட்டது. ரஷ்யாவின் அதிகாரத்தட்டு பிரஷ்னெவ் இன் காலத்திலிருந்தே தமது மனநிலையிலும், பண்பு[குண] நிலையிலும் எந்தவொரு மாற்றமும் அடையாது இருப்பதை எடுத்துக்காட்டியது. அன்றுபோல் இன்றும் மனிதனின் உயிர்கள் தொடர்பான அக்கறை அவர்களுக்கு இறுதியானதே.

"Kursk" இன் பயங்கர விபத்து புதிய தலைமுறை கிரெம்ளின் அரசியல்வாதிகளின் முகமூடியை தெளிவாக கிழித்தெறிந்துள்ளது. இது இந்த மனிதர்கள் பிரச்சனைகளை சுயாதீனமாக கையாள்வதற்கும், அதற்கேற்றவாறு நடவடிக்கைகள் எடுப்பதற்கும் தகைமையற்று இருக்கின்றார்கள் என்பதைதெளிவாக எடுத்துக்காட்டியது. இந்நிகழ்வின் முக்கியத்துவம் தொடர்பாக அவர்களால் ஒரு மதிப்பீடு கூட முன்வைக்க முடியாமல்போனது.

அரசியல் தலைவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் வரலாற்று நிகழ்வுகள் உள்ளன. "Kursk" இன் விபத்தும் இப்படியான ஒரு நிகழ்வாகும். இது வழமையாக இயங்கும் அல்லது அதிகாரத்துவ ரீதியில் ஆட்சி செலுத்துவதற்கும் மேலான ஒன்றை வேண்டி நின்றது. இந்தப் பரிசோதனையில் ரஷ்யாவின் முக்கிய அரசியல்வாதிகளும் இராணுவத்தினரும், எல்லாவற்றிற்கும் மேலாக பிரதம தளபதியுமான புட்டினும் தோல்வியடைந்தனர்.

இராணுவப் பதக்கங்களுடனோ அல்லது பதக்கங்கள் அற்ற எண்ணுக்கணக்கற்ற அதிகாரிகள் தங்களது நாளாந்த நோக்கை அடைவதையும், "இப்படி ஒன்று நிகழ்ந்திருக்காதா" என்ற கொள்கையின் கீழுமே இதனை கையாண்டனர். அவர்கள் உறுதியான அமைப்பின் கட்டளைகளும் அரசின் ஆணைகளும் ஆழுமை செலுத்தும் அதிகாரத்துவ சுபாவத்திற்கு அடிபணிந்து சரியாகவும் நிதானமாகவும் இயங்குவதே வெற்றிக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில் சிக்கலான யதார்த்தத்திலும் பார்க்க அவர்களது அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதோ அல்லது அவர்களது இராணுவ அமைப்பிற்கு தப்பு அபிப்பிராயம் ஏற்படாமல் இருப்பதுதான் முக்கியமானது என நம்புகின்றனர்.

ரஷ்ய இராணுவம் செயலற்ற, ஊழல், களவுகளால் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றது என்பது நீண்ட நாட்களாகவே ஒரு இரகசியம் அல்ல. அண்மைக்காலம்வரை இவ் இராணுவம் இயலாமை அற்று இருந்தபோதும் கூட ஓரளவிற்கு இயங்கக்கூடிய அமைப்பாகவும், அதற்கான பலமும் இருந்ததாக தோற்றமளித்தது.

ஆனால் தற்போது அது அப்பாடியான நிலையில் இல்லை என்பது வெளிப்படையாகியுள்ளது. தொழில்நுட்பம் விரைவில் முதுமையடைந்து கொண்டு செல்கின்றது. ஆகக்கூடியது அவசர தேவைகளுக்காக திருத்தப்படுகின்றது. எழுத்துக் கணக்கில் உள்ள முழு தளபாடங்களும் நீண்டகாலத்திற்கு முன்னரே செயலிழந்துவிட்டன அல்லது ஊழல்மிக்க இராணுவத்தால் தனிப்பட்ட ரீதியில் விற்கப்பட்டு விட்டது. இம் முழுக் கடற்படையும் "Kursk" ஐ நோக்கி சுழியோடிச் செல்லக்கூடிய சுழியோடிகளை நாடுமுழுவதிலிருந்தும் கண்டுபிடிக்கப்பட முடியாமல் போனதன் மூலம் இதனை நிரூபித்தது. முழு இராணுவத் தலைமையும் களவிலும் ஊழலிலும் மூழ்கியிருக்கையில் பெரும்பான்மையான சாதாரண இராணுதவத்தினரும் கடற்படையினரும் தமது கடமைகளில் எந்தவித அர்த்தத்தையும் காணததுடன் முற்றுமுழுதாக சீரழிந்து போயுள்ளனர்.

இவ் இராணுவம் சமுதாயத்திலிருந்து ஊடுருவிச்செல்ல முடியாத மதிலால் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. இதற்கு மாறாக சமுதாயத்தின் பலபிரச்சனைகள் முக்கியமாக கூர்மையடைந்த வடிவத்தில் வெளிப்படுவதை இராணுவத்தில் காணக்கூடியதாக உள்ளது. "Kursk" இன் விபத்துடன் தொடர்புபட்ட முறையில் வெளிப்படையான இத் துக்ககரமான தகமையற்ற தன்மை ரஷ்ய இராணுவத்தின் வீழ்ச்சிக்கும் நெருக்கடிக்குமான சாட்சியம் மட்டுமல்ல. இது சோவியத்யூனியனின் அழிவிலிருந்து வெளிவந்த இவ் அரசாங்கத்தின் அரசியல், சமூக வங்குரோத்தின் வெளிப்பாடாகும்.

ஒரு வருடத்திற்கு முன்னர் பலவீனமான, மட்டுப்படுத்தப்பட்ட சுயதிருப்தியுடைய ஜனாதிபதியான ஜெல்ட்சினுக்கு பதிலாக ஒரு பலமான அரசியல்வாதி முன்வந்துள்ளதாக தோற்றமளித்தது. புட்டின் ஒரு அவதானமாக உருவமைக்கப்பட்ட பிரதியாகவும், பலம்வாய்ந்த, சுயாதீனமான, உலகின் பிரச்சனைகளை தெரிந்து கொண்ட ஆழ்ந்த பாதாளத்தில் வீழ்ந்துள்ள நாட்டை மீட்பவராக தோற்றமளித்தார்.

இந்த தோற்றம் நிகழ்வுகளுடன் ஒருபோதும் ஒத்துப்போகவில்லை. நீலக்கண்களை உடைய இந்த மனிதன் அதிகாரத்துவ, பொலிஸ் இன் மத்தியாக தோற்றமளித்தாரே தவிர எந்தவொரு அரசியல் பின்னணியையும் கொண்டிருக்கவில்லை. புட்டின் ஒரு தற்செயலான பிரதிநிதி. அவரது அதிஷ்டம் எதிர்பாராது அதிகாரத்திற்கு கொண்டுவந்தது. ஆரம்பத்தில் அவர் தனது அதிஷ்டத்தில் அவநம்பிக்கை கொண்டிருந்தபோதும் பதவிக்கு ஏற்றமாதிரி விரைவில் தன்னை உருவாக்கி கொண்டார். அவர் தன்னை நெப்போலியன் பொனபாட்டை, யூலியஸ் சீசர், மாபெரும் பீற்றரை போல் அல்லது ஒரு "நவீன" வடிவமான ஸ்ராலினைபோல் பிரதிநிதித்திவப்படுத்த முயன்றார். அவரது பரந்த அறிவின்மை புத்திசாலித்தனமாகக் காட்டப்பட்டது, தெளிவான சிந்தனையற்றதன்மை ஆழ்ந்த அறிவாக காட்டப்பட்டது.

ஆரம்பத்தில் அவர் மக்களின் சைகைகளை பிரதிபலித்தார். ஜெல்ட்சின் தானாக பதவி விலகியதை அடுத்த புதுவருட இரவன்று எதிர்பாராத விதமாக செச்சேனியாவிலுள்ள இராணுவத் தளமோன்றில் தோன்றி சிறிய உரைநிகழ்த்தினார். "ரஷ்ய ஜனநாயகத்தின் தந்தை" எனப்படும் Anatoli Sobtschaks திடீர்மரணத்தை அடுத்து புட்டின் மரணச்சடங்குகளில் கலந்து கொண்டு தொலைக்காட்சி கமராக்களின் முன்னர் ஒரு சில துளி கண்ணீரை சிந்தினார்.

"Kursk" மூழ்கியபோது புட்டின் காட்டிய உணர்வு மரத்த தன்மையானது பெப்ரவரி மாதம் காட்டிய இப்போலியான உணர்விற்கு மாறானதாகும். இவ்விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களும், மில்லியன் கணக்கான ரஷ்யகளும், முழு உலகமும் இப்பரிதாபகரமான நிகழ்வை அதிர்ச்சியுடன் அவதானிக்கையில் புட்டின் ஒரு சில நாட்களின் பின்னர் நிலமை மோசமாக இருப்பதாகவும் கடற்படையினரை காப்பாற்ற சகல முயற்சிகளும் எடுக்கப்படும் எனவும் கூறினார். அவர் விபத்து நடந்த இடத்திற்கு ஓரு தடவையாவது செல்லாததுடன் "ஒவ்வொன்றும் அதனதன் இடத்தில் இருக்கவேண்டும்" என அதனை நியாயப்படுத்தினார்.

இப்படியான நிலைப்பாட்டிற்கான காரணம் எங்குள்ளது? பெப்ரவரியில் ஜனாதிபதியாக முன்னர் தான் விரும்பப்படுவோராக காட்டமுயன்றதும், தற்போது அதற்கான தேவையில்லாதபோது தனது உண்மையான தன்மையை காட்டுவது போல் தெரிகின்றது.

புட்டினின் தனிப்பட்ட நோக்கங்களை மட்டும் வைத்து கட்டாயமாக இதனை விளங்கப்படுத்த முடியாது. இப்பிரச்சனை மிகவும் ஆழமானது. ரஷ்ய அரசியலை தமது கைகளில் கட்டுப்படுத்துவோரின் தனித்துவமான அளவிற்கும் புத்திஜீவித்தனத்திற்கும், தகைமைக்கும் அவர்கள் தங்கியுள்ள சமுதாய அடித்தளத்திற்கும், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்தட்டினரின் நலன்களுக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது.

இம் மனிதர்களின் இயலாமை, மூர்க்கத்தனம், தகுதியற்ற தன்மை என்பன இறுதியில் இவர்களின் புறநிலையான சமூக அரசியல், வரலாற்றின் பங்கின் பாத்திரத்துடன் இணைந்ததாகும். இவர்கள் புதிய ரஷ்ய முதலாளித்துவத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் தவறாக பிறந்த குறைந்த வாழ்க்கை காலமுடையதன் உயிர்வாழும் பிரதிநிதித்துவமாகும். மக்களுக்கு எதிராக இவர்களின் அக்கறையின்மை, பண்பாடற்றதன்மை, இரக்கமற்றதன்மை, முரட்டுத்தன்மை என்பன "புதிய ரஷ்ய முதலாளித்துவத்தின்" சொத்துக்களாகும். இது புட்டினாலும், அவரைச் சூழவுள்ளவர்களாலும் சமுதாய வாழ்வின் மேல்மட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

1986ம் ஆண்டு செர்நோபைல் அணு ஆலைவிபத்து நிகழ்ந்தபோது கோர்பச்சேவ் தலைமையிலான சோவியத் அதிகாரத்துவம் இப்பாரிய அழிவை முற்றுமுழுதாக மூடிமறைக்க முயன்றது. அதனை மறைக்கமுடியாமல் போனதன் விளைவால் அதனை வெளியே கொண்டுவர நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

புட்டின் இம்முறை எவ்வாறு நடந்துகொண்டார்? அதே மாதிரியே தான். தெளிவாகக் கூறினால் முதலாவதாக அரசின் கெளரவம் [மரியாதை] பின்னர் மக்கள் என்ற அதே கொள்கையின்படியே நடந்துகொண்டார். இதன் அர்த்தம் என்னவெனில் கடந்த 15 வருடங்களாக ஆட்சி செலுத்துவோரின் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவுமில்லை. "அரசின் நிலைப்பாட்டில் இருந்து பார்க்கையில்" சாதாரண குடிமக்களின் வாழ்க்கைக்கு உண்மையான முக்கியத்துவம் எதுவுமில்லை.

"Kursk" இனுள் அகப்பட்டுள்ளவர்களுக்கு விரைவான, சக்திவாய்ந்த உதவி தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் அது கிடைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட அளவில் ரஷ்யாவின் மக்கள் அனைவரும் இக் கடற்படையினரின் நிலையிலேயே உள்ளனர். அவர்கள் கஸ்ட்டப்படுகிறார்கள். ஒரு முட்டுச்சந்தியிலிருந்து வெளிவர முயன்று உதவியை எதிர்பார்க்கின்றனர். அரசாங்கம் முற்றான கையாலாகாத நிலையில் பொறுத்திருக்குமாறு கூறி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க பயந்த நிலையில் உள்ளது.

மொஸ்கோவில் குண்டுவெடித்து 12 பேர் பலியானதை அடுத்து நிகழ்ந்த "Kursk" இன் பாரிய விபத்தானது வெறுமனே ஒரு மனிதப்பேரழிவல்ல. இது பத்து வருட முதலாளித்துவ புனருத்தானத்தினூடாக பூத்துக்குலுங்கும் என்ற கட்டுக்கதைகளுக்கு ஒர் பாரிய அடியாகும். இந்த விபத்து மக்களின் உணர்மையின் மீது ஆழ்ந்த தாக்கத்தைவிட்டுச் செல்லும். அவர்கள் கசப்பான பாடங்களை எடுத்துக்கொள்வதுடன் அரசியல் உள்ளடக்கத்தையும் பெற்றுக்கொள்ளவேண்டும். இது இல்லாமல் நாட்டினை முற்போக்கான பாதையில் இட்டுச்செல்வது சாத்தியமற்றது.