Amnesty International
charges NATO with war crimes
நேட்டோவுக்கு எதிராக அம்னாஸ்டி இன்டர்நாஷனல்
யுத்தக் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது
By Julie Hyland
19 June 2000
Use
this version to print
மனித உரிமை அமைப்பான அம்னாஸ்டி
இன்டர்நாஷனல் (AI
சர்வதேச மன்னிப்புச் சபை) கடந்த ஆண்டு யூகோஸ்லாவியாவுக்கு
எதிராக இடம்பெற்ற குண்டு வீச்சு நடவடிக்கைகளின் போது
நேட்டோ (NATO)
கூட்டு, யுத்தக் குற்றங்களை இழைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
"மறைமுக சேதமா" அல்லது சட்டவிரோத கொலைகளா?
கூட்டுப் படைகளின் இராணுவ நடவடிக்கைகளின் போது யுத்த சட்டங்கள்
மீறப்பட்டன" என்ற தலைப்பிலான இந்த அம்னாஸ்டி இன்டர்நாஷனலின்
அறிக்கை, நேட்டோ யூகோஸ்லாவிய சிவிலியன்களைக் கொன்றதன்
மூலம் யுத்தம் தொடர்பாக அனைத்துலக விதிமுறைகளை மீறியுள்ளதாக
கூறி நிறைவு பெறுகின்றது. அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ
நடவடிக்கைகள் நீண்டதூர ஏவுகணைகளையும், கிளஸ்டர் வெடிகுண்டுகளையும்,
யுரேனிய ஆயுதங்களையும் கொண்டிருந்தது.
அம்னாஸ்டி இன்டர்நாஷனலின் இந்த பத்திரம்
நேட்டோ குண்டுவீச்சுகள் இடம் பெற்ற ஒரு ஆண்டின் பின்னர்,
ஜூன் 7ம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. 78 நாட்கள் இடம்பெற்ற
இந்த யுத்தப் பிரச்சாரங்களின் போது நேட்டோவின் எதிர்த்
தாக்குதல் விமானங்கள் யூகோஸ்லாவிய சமஷ்டி குடியரசுக்கு
எதிராக 38000க்கும் அதிகமான தடவைகள் சஞ்சரித்துள்ளன. நேட்டோ
இந்த நடவடிக்கைகளின் போது இறந்தவர்களின் உத்தியோகபூர்வமான
மதிப்பீடுகளை வெளியிடாத போதிலும் சேர்பியன் அரசாங்கத்தின்
விபரங்களின்படி இதில் 400-600 யூகோஸ்லாவிய சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நியூயோா்க்கை தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமைகள்
கண்காணிப்பு (Human Rights Watch)
என்ற அமைப்பு இதில் 527 சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது.
விமானச் சண்டையின் போது எந்த ஒரு நேட்டோ படையினரும்
கொல்லப்படவில்லை.
அம்னாஸ்டி இன்டர்நாஷனல் இதை விபரிக்கையில்
யுத்த சட்டவிதிகள் -குறிப்பாக அந்தஸ்துகள்I
-(Protocol
I) (1977ல் இருந்து) 1949ன் ஜெனீவா
உடன்படிக்கை வரை- சிவிலியன்கள் அல்லது சிவிலியன் உடமைகள் மீதான
நேரடி தாக்குதல்களை தடை செய்கின்றது. அத்தோடு இராணுவ
சிவிலியன் இலக்குகளாக இனங்காணப்பட முடியாதவற்றின் மீதான
தாக்குதல்களையும் தடை செய்கின்றது. பின்னையது நியாயமான
இராணுவ இலக்குகளை இலக்காகக் கொண்டதாக இருந்தாலும்
கூட, அவை சிவிலியன்கள் மீது ஒரு விகிதாசாரமற்ற தாக்கத்தை ஏற்படுத்தினாலும்
கூட அவை சட்டவிரோதமானது.
இந்த அடிப்படையில் அம்னாஸ்டி இன்டர்நாஷனல்
நேட்டோ நடாத்திய பல தாக்குதல்களை- ஏப்பிரல் 23ல் பெல்கிரேட்டில்
உள்ள சேர்பியன் ஒலிபரப்பு நிலையத்தின் மீதும் ஏப்பிரல் 13க்கும்
மே 30க்கும் இடையே கிரெடெலிகா லூனானே, வார்வரின் பாலங்கள்
மீதும் நடாத்திய குண்டு வீச்சுகள் உட்பட- ஆராய்ந்து பார்த்தது.
அம்னாஸ்டி இன்டர்நஷனல் 16 மக்களை
கொன்ற சேர்பியன் றேடியோ தொலைக்காட்சி தலைமையகத்தின்
மீதான குண்டுவீச்சை சிறப்பாகச் சுட்டிக் காட்டுகின்றது. இது
"ஒரு சிவிலியன் இலக்கு மீது வேண்டுமென்றே நடாத்தப்பட்ட
ஒரு தாக்குதல் எனவும் ஆதலால் அது ஒரு யுத்தக் குற்றமாகும்"
எனவும் இந்த அறிக்கை அப்பட்டமாகக் குறிப்பிடுகின்றது.
அவ்வாறே ஏப்பிரல் 12ம் திகதி ஒரு பயணிகள் புகையிரதம்
ஜீடெலிக்கா புகையிரத பாதை பாலத்தை தாண்டிச் செல்கையில்
அமெரிக்க விமானப் படையின் குண்டு வீச்சு விமானங்கள் இரண்டு
தனித்தனி தாக்குதல்களில்- லூனானோ பாலம் மீது மே 01ம் திகதியும்
வாவரின் பாலம் மீது மே 30ம் திகதியும்- ஈடுபட்டன. அம்னாஸ்டி
இன்டர்நாஷனல் அறிக்கையின்படி "நேட்டோ படைகள் தாம்
சிவிலியன்களை தாக்கியுள்ளது தெரிய வந்த நிலையிலும் தாக்குதல்களை
நிறுத்தத் தவறிவிட்டன".
ஏப்பிரல் 14ம் திகதி டியகோவிக்காவிலும் மே 13ம்
திகதி கொரிகாவிலும் அகதிகள் பாதுகாப்பு நிலைகள் மீது நேட்டோ
நடாத்திய தாக்குதல்களையும் அம்னாஸ்டி இன்டர்நாஷனல் ஆய்வு
செய்துள்ளது. டியகோவிக்காவில் நேட்டோ விமானங்கள் இரண்டு
மணித்தியாலங்களாக நடாத்திய பட்டப் பகல் குண்டு வீச்சு தாக்குதலில்
கொசோவோ அல்பேனியர்கள் அகதிகள் நிலைகளில் இருந்த 73
மக்கள் கொல்லப்பட்டனர். கொரிக்காவில் நேட்டோ ஒரு
அகதிகள் முகாம் மீது 10 குண்டுகளை பொழிந்துள்ளது. இதனால்
80 மக்கள் கொல்லப்பட்டதோடு 60 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவங்களில் யூகோஸ்லாவிய இராணுவம் அகதிகளை
"மனிதக் கேடயங்களாகப்" பயன்படுத்தியதாக நேட்டோ
குறிப்பிட்டு வந்த போதிலும் அம்னாஸ்டி இன்டர்நஷனல் "மனித
உயிரிழப்புகளை குறைக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
எடுக்கப்படாததையும்" கண்டுள்ளது.
அத்தோடு இந்த அறிக்கை " நேட்டோவோ
அல்லது அதன் அங்கத்துவ நாடுகளோ இச்சம்பவங்கள் பற்றி
எதுவிதமான ஒழுங்குமுறையான நடவடிக்கைகளையும் நடாத்தியதாக
தெரியவில்லை" என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது. பெல்கிரேட்டில்
உள்ள சீனத் தூதரகத்தின் மீதான தாக்குதல் விடயத்தைத் தவிர இத்தகைய
சம்பவங்களுக்கு பொறுப்பான எவருக்கும் எதிராக எந்தவிதமான
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த அறிக்கை, நேட்டோ அங்கத்துவ நாடுகளிடம்
மனித உரிமைகள் தொடர்பாக "பாரதூரமான அத்துமீறல்களுக்குப்
பொறுப்பாக சந்தேகிக்கப்படும் தமது நாட்டவர்களை நீதியின்
முன் நிறுத்துமாறு" அழைப்பு விடுத்துள்ளது. முன்னைய
யூகோஸ்லாவியாவின் அனைத்துலக கிரிமினல் மன்றம் (ICTY)
நேட்டோவின் யுத்தக் குற்றச்சாட்டுகள்
பற்றி விசாரணை செய்ய வேண்டும் எனவும் அம்னாஸ்டி இன்டர்நாஷனல்
குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறெனினும் அம்னாஸ்டி இன்டர்நாஷனல் இந்த
அறிக்கையை வெளியிடுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் இந்த
ஐ.சீ.ரீ.வை. (ICTY) நேட்டோவின்
யுத்த நடவடிக்கைகள் தொடர்பாக எதுவிதமான கிறிமினல் விசாரணையும்
இடம் பெறாது என அறிவித்தது. ஜூன் 2ம் திகதி கார்னா டெல்
பொன்டே (Carl Del Ponte)
நேட்டோவின் குண்டு வீச்சு நடவடிக்கைகள் மீதான விசாரணைகளை
ஆரம்பிப்பதற்கான எந்தவொரு அடிப்படையும் கிடையாது என
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையிடம் தெரிவித்தார்.
அவ்வாறே நேட்டோ செயலாளர் நாயகமான
ஜோர்ஜ் றொபேட்சன் அம்னாஸ்டி இன்டர்நாஷனலின் குற்றச்
சாட்டுகளை "ஆதாரமற்றதும் விஷமத்தனமானதும்"
என கண்டித்ததோடு அத்தகைய எந்தவித விசாரணையும் இடம்பெறுவதை
நிராகரித்துள்ளனர். இந்த யுத்தத்தின் போது நேட்டோவின் முக்கிய
பேச்சாளராக விளங்கிய யமி ஷியா சகல இலக்குகளும் அனைத்துலக
சட்டங்களுக்கு அமைய கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக
தெரிவித்தார். ஆனால் அம்னாஸ்டி இன்டர்நாஷனல் ஷியாவின்
கோரிக்கையை நிராகரித்துள்ளது. சிவிலியன் உயிர்கள் வேண்டுமென்றே
ஆபத்துக்கு உள்ளாக்கப்பட்டதற்கு சேர்பியன் ஒலிபரப்பு நிலையங்கள்
மீது இடம் பெற்ற குண்டு வீச்சு ஒரு தெளிவான அத்தாட்சி எனச்
சுட்டிக்காட்டியுள்ளது.
நேட்டோ இராணுவ நடவடிக்கைகளை ஆய்வு
செய்வதில்லை என்ற ஐ.சீ.ரீ.வை. (ICTY)
யின் தீர்மானம் தொடர்பாக கருத்து
வெளியிட்ட அம்னாஸ்டி இன்டர்நாஷனல், இது ஐ.சீ.ரீ.வை. மீளாய்வு
கமிட்டியின் பக்கச் சார்பான பண்பை தெளிவுபடுத்தியுள்ளது என்றுள்ளது.
நேட்டோவுக்கு எதிராக சுமத்தப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு
பதிலளிக்கையில் நேட்டோ "அதற்கு எதிரான திட்டவட்டமான
நிகழ்வுகள் பற்றி கருத்து தெரிவிக்க தவறிவிட்டது" எனத் தெரிவித்துள்ளது.
ஜூன் 7ம் திகதிய அம்னாஸ்டி இன்டர்நாஷனல் அறிக்கையில் அதனால்
இனங்காணப்பட்ட ஐந்து நிகழ்வுகள் அடங்கும்.
நேட்டோவை பற்றி ஏன் ஒரு குற்றப் புலனாய்வு
இடம்பெறக் கூடாது என்பதை ஆவணப்படுத்தும் ஐ.சீ.ரீ.வை.
மீளாய்வு கமிட்டியின் 45 பக்கங்களைக் கொண்ட அறிக்கையானது
"இந்த குண்டு வீச்சினை நெறிப்படுத்திய அல்லது நடைமுறைப்படுத்தியதில்
சம்பந்தப்பட்டவர்களுடன் பேசியதில்லை" என்பதையும் அம்பலமாக்கியுள்ளது.
இருப்பினும் இது மீளாய்வு செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில்
குண்டு வீச்சு சம்பவத்துடன் தொடர்பாக ஒரு ஆழமான புலனாய்வோ
அல்லது திட்டவட்டமான சம்பவங்கள் தொடர்பான புலனாய்வோ
நியாயப்படுத்தப்படவில்லை என்றே கமிட்டி கருதுகின்றது. எல்லா
விடயங்களிலும் ஒன்றில் சட்டம் போதுமான அளவு தெளிவாக இல்லை
அல்லது உயர்மட்ட குற்றவாளிகளுக்கு அல்லது கீழ்மட்ட குற்றவாளிகளுக்கு
எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்குப் போதுமான சாட்சியங்களை
திரட்டிக் கொள்வதற்கு- குறிப்பாக பாரதூரமான குற்றங்களில்
-புலனாய்வு சாத்தியமாக இல்லை" எனத் தெரிவித்துள்ளது.
நேட்டோவுக்கு அல்லது அதன் அதிகாரிகளுக்கு
எதிராக சாட்சியங்களை திரட்டுவதில் எதிர்பார்க்கப்பட்ட பிரச்சினைகள்
என்ன என்பதை மீளாய்வு கமிட்டியின் அறிக்கை விளக்கவில்லை என
அம்னாஸ்டி இன்டர்நாஷனல் சுட்டிக்காட்டியுள்ளது.
அம்னாஸ்டி இன்டர்நஷனல், ஐ.சி.ரீ.வை. மீளாய்வுக்
கமிட்டியின் இறுதி அறிக்கையை கவனமாக மீளாய்வு செய்ய வாக்குறுதி
அளித்துள்ளதோடு அதன் கணிப்புகளை பின்னர் ஒரு திகதியில் விரவாக
ஆராயவும் வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால் தற்சமயம் சில ஆரம்ப
கருத்துக்களை வெளியிட்டுள்ளது. மீளாய்வு கமிட்டி தனது சிபார்சுகளில்
பொதுவாக வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் "பாரம்பரிய
தாக்குதல் இலக்கு வகையறாவாக" கணிக்கப்படவில்லை
என்றும் இது குறிப்பிடுகின்றது." "பிரச்சார நோக்கங்களுக்காக
மட்டுமே அதன் சட்டபூர்வமான தன்மை கேள்விக்கிடமானதாகும்"
எனக் கூறி நேட்டோ றேடியோ தொலைக்காட்சி நிலையங்கள்
(RTS) மீதான
தாக்குதலை நியாயப்படுத்தப் பார்க்கின்றது."
எவ்வாறெனினும் இந்த மீளாய்வுக் கமிட்டி வெகுஜனத்
தொடர்பு சாதனங்கள் (இராணுவ) "கட்டளை கட்டுப்பாடு
செய்தி தொடர்புகள்" ஒரு பாதகமாக இருந்தாலும் அது
"யுத்த குற்றங்களை இழைக்க தூண்டினாலும்" அல்லது
ஒரு யுத்த வெறியினை ஆட்சியில் வைத்திருக்கும் நரம்பு மண்டலமாக
இருந்தாலும் அதன் மூலம் யுத்த நடவடிக்கைகள் தூண்டினாலும்"
ஒரு நியாயமான இராணுவ இலக்காகக் கணிக்கப்பட முடியும்
எனக் கூறுகின்றது. இந்த அடிப்படையில் இந்த மீளாய்வு கமிட்டி,
ஒலிபரப்பு சாதனங்களை நேட்டோ தாக்கியதன் "ஆரம்ப
இலக்கு" "சேர்பியன் இராணுவ தலைமையகத்தையும்
அதன் கட்டுப்பாட்டையும் நரம்பு மண்டலத்தையும் மிலோசெவிக்கை
ஆட்சியில் கொண்டுள்ள இயந்திரங்களையும்" முடமாக்குவதே
என முடிவுரையில் கூறுகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால் RTS
ஒரு நியாயமான இராணுவ இலக்காக
விளங்கியது.
எவ்வாறெனினும் பெப்பிரவரி 14ம் திகதி (2000) பிரசெல்சில்
உள்ள நேட்டோ அதிகாரிகளுடன் அம்னாஸ்டி இன்டர்நாஷனல்
நடாத்திய ஒரு கூட்டத்தில் நேட்டோ, ஒலிபரப்பு சாதனங்கள்
தாக்கப்பட்டதற்கு காரணம், அது ஒரு "பிரச்சார கருவியாகவும்;
இராணுவ நடவடிக்கைகளுக்கு நேரடி ஆதரவு வழங்கும் பிரச்சாரமாகவும்
விளங்கியதுமே" என வலியுறுத்துவதாக அம்னாஸ்டி இன்டர்நாஷனல்
சுட்டிக் காட்டியுள்ளது.
நேட்டோவினாலும் யூகோஸ்லாவிய அனைத்துலக
கிறிமினல் மன்றத்தில் (ICTY)
உள்ள அதன் ஆதரவாளர்களாலும் யூகோஸ்லாவியாவுக்கு எதிரான
விமானத் தாக்குதல்களை நியாயப்படுத்த முன்னெடுக்கப்பட்ட
வாதங்கள், பெரும் வல்லரசுகள் தாம் விரும்பும் எந்த ஒரு
நாட்டின் மீது இராணுவத் தாக்குதல் நடாத்துவதையும் சிவிலியன்
இலக்குகளை தவிடுபொடியாக்குவதையும் நாட்டின்
பொருளாதார அமைப்பை நாசமாக்குவதையும் தாம் நினைத்த
மாத்திரத்தில் செய்ய முயற்சிப்பதை நியாயப்படுத்துவதாகும்.
இனச் சுத்திகரிப்புக்களதும் அல்லது மனித உரிமை மீறல்களதும்
பேரில் ஏற்பட்ட ஒரு "மனித நேய" வெளிப்பாடாக ஆக்கிரமிப்பை
காட்டுவதே அரசாங்கத்தினதும் வெகுஜனத் தொடர்புச் சாதனங்களதும்
பிரச்சாரத்தினது அவசியமாக விளங்கியது.
|