French workers occupy chemical plant
பிரெஞ்சு தொழிலாளர்கள் இராசாயன
தொழிற்சாலையை ஆக்கிரமித்தனர்.
By Guy LeBlanc
20 July 2000
Use
this version to print
பிரான்ஸ் ஆடன்சில்
(Ardennes) 8000 போ்களைக்கொண்ட
பெல்ஜியத்துக்கு அருகில் அமைந்த நகரமான கிவ்வேயில்
(Givet) கலடெக்ஸ்
(Callatex)
இராசாயன தொழிற்சாலை மீதான 153 தொழிலாளர்களின் ஆக்கிரமிப்பானது,
புதன் இரவில் இருந்து வியாழன் வரை நிகழ்ந்த
அரசாங்கத்துடனான உடன்படிக்கை தொழிலாளர்களின் ஒரே
ஏகமனதான வாக்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன்
இன்று முடிவக்கும் வந்தது.
யூலை 5 இல் தொடங்கிய ஆக்கிரமிப்பானது, நீதிபதியால்
அது திவால் அடைந்துவிட்டது என பிரகடனப்படுத்தப்பட்டு,
கலைக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு வளங்கப்படும்
நஷ்ட உத்தரவாதத்திற்கான பணமும் மற்றும் சாதரணமாக ஒரு
தொழிற்சாலை மூடப்பட்டால் அரசால் வளங்கப்படும் நஷ்ட
ஈட்டிற்கான தொகையும் அவர்களுக்கு கிடையாது
என்பதையே நீதிபதியின் அறிவிப்பானது குறிக்கிறது.
ஆக்கிரமிப்பின் தொடக்கத்தின்போது தொழிலாளர்கள்
அங்கு இருந்த 46 தொன் எடை கொண்ட கார்போன், கந்தகம்
இராசயனப் பொருள்களின் மூலம்
தொழிற்சாலையை எரித்துவிடப்போவதாக மிரட்டியிருந்தார்கள்.
இந்த இரசாயன மூலகம் உடுப்பு தயாரிக்கும் போது செயற்கைப்பட்டாக
பாவிக்கப்படுகின்றது.
யூலை17 திங்கள் அன்று, ஆர்டன் பிராந்திய
நிர்வாகத் துறையின் புதிய தலைவரான ஐோன் க்ளோட்
வாசே (Jean Claude Vacher)
உடனான சந்திப்பைத் தொடா்ந்து கோபமடைந்த
தொழிலாளர்கள், சிகப்பு நிறமான சல்பூரிக் அமிலத்தை (sulfuric
acid) மேஸ் (Meuse)
ஆற்றின் நீருக்குள் ஊற்றிவிட்டனர். இந்த ஆறு வட பிரான்சில் இருந்து
ஊற்றெடுத்து பெல்ஜியம் மற்றும் ஒல்லாந்து ஊடாக ஓடுகிறது. 1991
ல் இருந்து Rhone-Poulenc
நிறுவனத்தின் உரிமையாளர்கள் தமது
நஷ்ட உத்தரவாதத்திற்கான பணத்தை அதிகரிக்கும்படி அரசாங்கத்தை
நிர்பந்திக்க, தொழிலாளர்கள் பிரெஞ்சு அரசாங்கத்திற்கும்,
Rhone-Poulenc நிறுவனத்திற்கும்
அழுத்தம் கொடுக்கும் முகமாக தம்மைச் சுற்றி பரந்த
மக்களின் கவனத்தை ஈர்க்க முயற்சித்தார்கள்.
தொழிலாளர்கள் தற்போதைய தங்கள் சம்பளத்தில்
ஏதும் குறையாமல் தொடர்ந்து 24 மாதத்திற்கு தரும்படியும்
மற்றும் நஷ்ட உத்தரவாதத்திற்கான பணமாக 150,000 பிராங்குகள்
(கிட்டத்தட்ட 30,000 டாலர்) தரும்படியும் கேட்டுக்கொண்டார்கள்.
அவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை தேடிக்கொண்டாலும்
ஒருதடவை நஷ்ட உத்தரவாதத்திற்கான பணமாக 50,000 இருந்து
60,000 வரை பெற்றுக்கொண்டாலும் சட்டப்படி அவர்களது
மாதாந்தம் வருமானத்திற்கு மேலாக 2,500 பிராங் அதிகமாக
கொடுத்திருக்கிறோம் என Vacher
குறிப்பிட்டார். இறுதியாக தொழிலாளர்களுக்கு
80,000 பிராங்குகளே கிடைத்தது. தொழிலாளர்கள் பிரதிநிதிகளை
யூலை மாதம் 19 திகதி புதன் கிழமை மீண்டும் சந்திப்பதற்கு Vacher
எதிர்பார்த்து இருந்தார்.
பிரெஞ்சு ஆர்டன் பகுதியின் பொருளாதார நிலைமையின்
சீரழிவினால் தொழிலாளர்களின் நிலைமை பீடிக்கப்பட்டுள்ளதுடன் மற்றும்
ஐரோப்பிய தொழிற்துறையின் மறு ஒழங்கமைப்பு காரணமாக அங்கு
வேலையின்மை விகிதம் 22 வீதமாக இருக்கிறது. Callatex
தொழிலாளர்களில் பலர்
தோ்ச்சியற்று இருப்பதால் இன்னோரு வேலையை
தேடியெடுப்பது என்பது அவர்களுக்கு கடினமானதாகும்.
தொழிலாளர்களின் நடவடிக்கைகளை பிரெஞ்சு
அரசியல் வாதிகள் கண்டனம் செய்தார்கள்.
"நிலைமைகள் என்ன தான் கடினமாக
இருந்தாலும் மேஸ் ஆற்றின் நீருக்குள் அமிலத்தை ஊற்றி விட்டதன்
மூலம் அந்த ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் பிரெஞ்சு, பெல்ஜியம்,
ஒல்லாந்து மக்களை தொழிலாளர்கள் பணயக் கைதியாக்குவது
ஏற்றுக்கொள்ள முடியாது" என
உள்நாட்டு அமைச்சரான Jean-Pierre
Chevènement பிரகடனம் செய்திருந்தார்.
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான Robert
Hue, Callatex தொழிலாளர்களின் வெறுப்பை
எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது ஆனால் "பொதுஜன
அபிப்பிராயத்தில் இருந்து அந்நியப்படுத்தாது இருக்கும்படி"
தொழிலாளர்களை கேட்டுக்கொள்கிறோம் என பிரகடனம் செய்திருந்தார்.
"இந்த மாதிரியான நடவடிக்கைகள்
ஒருவரை அதிா்ச்சி அடைய வைப்பதுடன், சமுக முரண்பாடுகளை
கவலைக்கிடமான முறையில் முன்னணிக்கு
கொண்டுவரும்" என
பச்சைக் கட்சியின் தேசியச் பேச்சாளா் Denis
Baupin பிரகடனம் செய்திருந்தார்.
Callatex தொழிலாளர்கள்
ஒரு வருடங்களுக்கு மேலாக தொழிற்சாலை முடப்படும் நிபந்தனைககள்
பற்றி சமரசம் செய்ய முயன்று வந்தனர். "தொழிற்சாலையில்
நிலைமை வெடிப்பிற்கு இடமானதாக இருந்துவருகிறது"
என்ற தனது எச்சரிக்கையை அரசாங்கம்
செவிமடுக்கவில்லை என CGT தலைவரான
Christian Larose பிரகடனம் செய்திருந்தார்.
"முரண்பாடு
இன்னொரு திருப்பத்தை எடுத்துள்ளது ஏனெனில், பெல்ஜியம்
மற்றும் ஒல்லாந்தும் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வைக்காணும்
படி அழுத்தம் கொடுத்திருப்பதுடன் பாரீசிடம் சில கேள்விகளையும்
கேட்டுள்ளது."
என அவர் மேலும் தெரிவித்தார்.
|