Concorde-- it's history and tragedy
கொன்கோர்ட்-- அதன் வரலாறும், பயங்கர
முடிவும்
By David Walsh
28 July 2000
Use
this version to print
செவ்வாய்க்கிழமை பாரிஸ்
நகரத்திற்க்கு வெளியே எயர்
பிரான்சின் கொன்கோர்ட் விமான விபத்தானது உலகம் முழுவதும்
உள்ள மக்களின் கவனத்தை கவர்ந்தது. ஒளிபரப்பப்பட்ட இப்பயங்கர
முடிவினை அவதானித்தவர்கள் உதவிசெய்யமுடியாதவர்களாக உணர்ந்ததுடன்,
முதலாவதாக பயணம் செய்தவர்களின் கவலைக்குரிய தலைவிதி
தொடர்பாக மட்டுமல்லாது, இப்படியான நிகழ்வுகளினால்
பாதிக்கப்பட்ட Gonesse இன்
அருகாமையில் புகைந்துகொண்டிருந்த விமான சிதைவுகளின்
அருகாமையில் நின்ற உழைக்கும் மக்களினதும், உள்ளூர்வாசிகளின்
பாதிக்கப்பட்ட மனித உணர்வுகள் மீதான தாக்கம் குறித்தும்
நினைத்தனர். அது ஒர் தண்டனைக்குரியதும் மிகைப்படுத்தப்படாத
காட்சியாகும்.
கொன்கோர்ட் தொலைக்காட்சிகளிலும் பத்திரிகை
தலையங்களிலும் ஊடுருவிய விதமானது, இப்படியான கவலைக்குரிய
நிலைமைகளின் கீழ் இவ்விமானம் உருவாகிய விதம் தொடர்பாகவும்,
அன்றிலிருந்து உலகம் எந்தளவிற்கு மாறியுள்ளதென்பதையும் கவனத்திற்கு
எடுத்துக்கொள்ள தூண்டிவிடுகின்றது. யூலை 25 விபத்துடன் தொடர்புள்ள
ஓரளவு அதிர்ச்சியும், பயங்கரமும் இவ் ஜெட்டின் உருவாக்கத்துடனும்,
வரலாற்றில் இதன் இடத்துடனும் இணைந்துள்ளது.
சுப்பர் சொனிக் ஆகாயப்பயணத்தின் தோற்றத்திற்கான
சாதகமான திகதிகள் 1950 களின் இறுதியிலும் 1960 களின் ஆரம்பத்திலும்
குறிக்கப்பட்டன. அத்துடன் இது அமெரிக்க, சோவியத் வான்வெளித்
திட்டங்களின் அபிவிருத்திகளுக்கு சமாந்தரமானது. பிரித்தானிய
வடிவமைப்பாளரான Sir Archibale
Cox சோவியத் யூனியனின் ஸ்புட்னிக்மி விண்கலம்
ஏவப்பட்டு இரண்டு வருடங்களின் பின்னரும், NASA
அமெரிக்க அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒருவருடத்தின் பின்னரும்
1959 இல் தனது துண்டுக்கடதாசிகளில் கொன்கோர்ட் இன் கட்டுமான
தன்மைகள் குறித்து வரைந்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை
குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா போன்றவை
சுப்பர்சொனிக் விமானத்தை அபிவிருத்தி செய்வதில் ஆரம்பத்திலிருந்து
அக்கறை கொண்டிருந்தன. ஆனால் அதிக செலவு காரணமாக British
Aerospace, France Aerospatiale இணைந்து
1961 இல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தின. பாரிய விமானத்
தயாரிப்பாளரான Boeing அரசாங்க
ஆதரவுடன் அமெரிக்க சுப்பர்சொனிக் போக்குவரத்து தொடர்பான
ஆய்வுகளை இதேவேளையில் ஆரம்பித்தது. இவ் அமெரிக்க திட்டமானது
பலத்துடன் நடைமுறைப்படுத்த முயன்றதாக ஒருபோதும் தெரியவில்லை.
தொலைத்தொடர்பு சாதனங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு,
ஏனைய எதிர்ப்புகாளாலும் இத்திட்டம் கைவிடப்பட்டாதாக குறிப்பிடுகின்றன.
இவை காரணமாக இருந்திருந்தாலும் கூட அரசாங்கமும் வர்த்தகப்பிரிவினரும்
இவ்அமெரிக்க சுப்பர்சொனிக் போக்குவரத்து திட்டத்தை இலாபம்
தரக்கூடியதாகவும் வர்த்தக ரீதியாக சாத்தியமானதாக இருக்குமெனக்கண்டிருந்தால்
இப்பிரச்சனைகளை தீர்த்துக்கொள்வது கடினமானதென்பது நம்பக்கூடியது
ஒன்றல்ல.
பிரித்தானிய, பிரான்ஸ் அரசாங்கங்கள் தமது பாரிய
தகமை காரணமாகவும் அல்லது விமானத்தொழிற்துறைக்கு
அரசாங்க உதவி வழங்க விரும்பியதாலும் கொன்கோர்ட் என
பின்னர் அறியப்பட்ட விமானம் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவும்
சோவியத்யூனியனும் வான்வெளிக்கு மனிதர்களை அனுப்பியபோது இவ்விருநாடுகளும்
குறிப்பிட்த்தக்களவு போட்டியை எடுத்துக்காட்டி ஆகக்குறைந்தது
மற்றெல்லோரையும் விட வானத்தில் மனிதனை வேகமாக வீச
முடியுமென எடுத்துக்காட்ட விரும்பினர்.சந்திரனில் முதலாவது
அமெரிக்கர் கால் வைப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர்
1969 மார்ச் மாதம் கொன்கோர்ட் தனது முதலாவது பரீட்சார்த்த
பயணத்தை மேற்கொண்டது [1973 ம் ஆண்டு Le
Bourget விமான நிலையத்தில் நிகழ்ந்த
விமானக்காட்சியின் போது தனது TU
-144 விமானம் மோதுதலுக்கு உள்ளான
பின்னர் சோவியத் யூனியன் தனது சுப்பர்சொனிக் விமானத் திட்டத்தை
கைவிட்டது].
வான்வெளிப் போட்டியும் சுப்பர்சொனிக் வர்த்தக
ஜெட் அபிவருத்திக்கான முயற்சியும் குளிர்யுத்த காலத்துடனும்,
ஐரோப்பிய-அமெரிக்க, ஏனைய அரசியல் போட்டிகளுடனும் வெளிப்படையாக
இணைந்திருப்பதுடன் இதைவிட முக்கியமான பெறுபேறுகளையும் உள்ளடக்கியுள்ளது.
அக்காலத்தில் இது ஆச்சரியப்படத்தக்க வெற்றியாக பரவலாக
உணரப்பட்டதுடன் முன்னொருபோதும் இல்லாத வேகத்திலும்
உயரத்திலும் மனிதத் தன்மைகளை உயர்த்துவதொன்றாகவும், எவ்வாறாயினும்
இது மனிதனின் நிலைமைகளுக்கான பங்களிப்பாக இருக்குமெனவும்,
இது தவர்க்கமுடியாதபடி முன்னேற்றத்தை கொண்டுவரும் எனவும்
எவ்வளவிற்கு இது நிச்சயம் இல்லாததாக நோக்கப்பட்டாலும்
அவர்களை தூண்டுவதாக இருந்தது. இக்காலகட்டம் இன்று மக்கள்
ஒரு நகரத்திலிருந்து மற்ற நகரத்திற்கு போவதைப்போல் சந்திரனுக்கான
ஆகாயப்போக்குவரத்து தொடர்புகள் உட்பட சகலவிதமான
எதிர்கால நோக்கங்களாலும் தூண்டப்பட்டிருந்தது. இந்த நம்பிக்கை
தற்போது கூடுதலாக புதுமையானதாகவே தோன்றுகின்றது.
1976 ஜனவரியில் கொன்கோர்ட் முதல் தடவையாக
வர்த்தக பயணத்தை மேற்கொண்டபோதே உலகம் குறிப்பிட்டளவு
மாற்றத்திற்கு உள்ளாகிவிட்டது. அமெரிக்க சுப்பர்சொனிக் விமானத்திட்டம்
கைவிடப்பட்டிருந்தது [1971 மார்ச்சில் காங்கிரஸ் இதற்கான
அரச மானியத்தை இல்லாது செய்தது] இத்துடன் அப்பலோ சந்திரன்
திட்டமும் [1972 டிசம்பர் அப்பலோ 17 இன் பின்னர்] கைவிடப்பட்டது.
இவை வியட்னாம் யுத்தத்தினால் அதிகரித்த வரவுசெலவுத்திட்ட
நெருக்கடிக்கு பலியாகின. 1973-1794 எண்ணெய் விலையேற்றம் பாரியளவு
எரிபொருள் தேவையான விமானத்தின் எதிர்காலத்தின் மீதும் ஒருதாக்கத்தை
கொண்டிருந்தது.
அமெரிக்காவின் மனநிலை மாற்றமடைந்திருந்தது.
நிக்சனின் ஜனாதிபதித்துவத்தின் கீழ் அதன் ஊழலை தீர்க்கமுடியாமல்
பதவி விலகியதும் பரந்தளவு அவநம்பிக்கையையும் சிடுமூஞ்சித்தனத்தையும்
உருவாக்கியமையானது, ஆரம்பகாலத்திலேயே நம்பிக்கையீனத்தை
ஏற்படுத்திவிட்டது.
British Airways உம்
Air France உம் கால்நூற்றாண்டு காலமாக
தமது கொன்கோர்ட் விமானத்தை நடைமுறைப்படுத்தி வந்திருந்தாலும்
இவ்விமானத் திட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட "நொண்டிவாத்துத்"
தன்மை இருக்கின்றது. தற்போதுள்ள 12 கொன்கோர்ட் விமானங்களே
பாவைனையிலுள்ள ஒரேயொரு சுப்பர்சொனிக் வர்த்தக ஜெட்களாகும்.
1980 இலிருந்து கொன்கோர்ட் உற்பத்தி செய்யப்படாததுடன்
எஞ்சியுள்ள சில விமானங்கள் தற்போது பறக்கும் விமானங்களுக்கு
உதிரிப்பாகங்களை பெற்றுக்கொள்வதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
ஒருவருடத்தின் முன்னர் Boeing
நிறுவனம் உம் NASA
வும் புதியவகை 'hypersonic
transport' அபிவிருத்தி செய்வதை நிறுத்தியுள்ளன.
Boeing
விமானங்கள் இலாபகரமாக இருப்பதற்காக 300 பேர் பயணம்
செய்யக்கூடிய பாரிய விமானங்களை உற்பத்திசெய்ய விரும்புகின்றது.
ஆனால் விமானத்தை பெரிதாகச் செய்ய முயல்வது பாரமற்றதாகவும்,
குறைந்த எரிபொருள் பாவனையுள்ளதாக செய்வதுடனும் முரண்படுகின்றது.
நிபுணர்களின் கருத்தின்படி ஒரு புதிய வடிவத்தினை அபிவிருத்திசெய்ய
பூகோளரீதியான முதலீட்டளவாக 10 பில்லியன் டொலா் செலவாகுமெனவும்,
தற்போதைய நிலைமைகளில் இது பெரும்பாலும் சாத்தியமற்றது
எனவும் கூறுகின்றனர். இந்நிலமைகளின் கீழ் உலகத்தில் எந்த ஓரிடத்திலும்
தற்போது சுப்பர்சொனிக் அபிவிருத்திசெய்யும் திட்டமும் இல்லை.
பிரான்சும் பிரித்தானியாவும் கொன்கோர்ட்டை
அது இலாபம் வழங்குவதால் மட்டும் சேவையில் ஈடுபடுத்தவில்லை,
மாறாக இது பிரித்தானியாவுக்கும், கூடுதலாக பிரான்சுக்கு ஒரு
தேசிய புகழாக நோக்கப்படுகின்றது. இது தொடர்பாக ஒரு பத்திரிகை
குறிப்பு பின்வருமாறு குறிப்பிடுகின்றது "F-4590
விமானத்தின் அழிவானது பிரான்சைப் பொறுத்தவரையில் ஒரு விமான
விபத்தைவிட மேலானதொன்றாகும். இது ஒரு அடையாளத்தின்
முடிவாகும். கொன்கோர்ட் பிரான்சில் கருத்தரித்தது. 1969ம் ஆண்டு
மார்ச் 2ம் திகதி Toulouse இல்
முதல் பரீட்சாா்த்த பயணம் ஜெனரால் டு கோல் (General
de Gaulle) அரசாங்கத்தின் இறுதிக்காலங்களில்
நிகழ்ந்ததுடன், இது அந்நாட்டின் நவீன, தொழில்நுட்பத்திற்கான
எதிர்காலத்தினை பிரதிநிதித்துவப்படுத்துவதாக நோக்கப்பட்டது.
பரீட்சாா்த்த விமானியான André
Turcat ஒரு தேசிய தலைவரானார்".
பிரான்ஸ் ஜனாதிபதி Valery Giscard
d'Estaing 1970 முதலாவது கொன்கோர்ட்
பயணத்தினை தனது முன்னைய காலனிகளில் ஒன்றான கினியா [Guinea]
விற்கு குறிப்பிடத்தக்க எக்காளத்துடன்
வரலாற்று நிகழ்வாக நோக்கினார்.
எவ்வாறு இருந்தபோதிலும் கொன்கோர்ட்டையோ
அல்லது "சுப்பர்சொனிக் கருத்துக்களையோ உயிருடன்
பாதுகாத்துக்கொள்ளளும் முயற்சிகள் இன்று பயனற்றதாக தெரிகின்றது.
தொழில்நுட்பம் இதனைத்தொடர்வதற்கான தகமைகளை
கொண்டிருப்பினும் ஜெட்டின் உண்மையான உருவாக்கமானது
ஒரு ஆடம்பரமான அடையாளம் என்பதற்கும் மேலானதாகும்.
பிரித்தானிய பிரான்ஸ் அரசாங்கங்கள் மீழப்பெறமுடியாத பில்லியன்
கணக்கான டொலர் அரச நிதியுதவியுடன் இது உருவாக்கப்பட்டிருந்த
போதும் குறிப்பிடத்தக்களவு மக்கள் பயணம் செய்வதற்கு
உதவியளிப்பதானதாக மாறியது. ஒரு குறிப்பிடக்கூடிய விமானம்
என்ற வகையிலும் மனித சமுதாயத்தின் வெற்றி என கம்பீரமாக
தோன்றினாலும் கொன்கோர்ட் என்ற வகையில் இந்த விமானம்
மக்களின் வாழ்க்கையில் சிறிய அர்த்தமுள்ள தாக்கத்தையே நிரூபித்தது.
மாறாக இது தனது சொந்த வழியில் வசதிபடைத்த ஒரு சிறிய தட்டினருக்கும்
ஏனையோரையும் பிளவுபடுத்தும் சமூக பிளவினை நினைவூட்டும்
ஒன்றாகவே கொன்கோர்ட் மாறியது.
கடந்த 20 வருடங்காளாக கொன்கோர்ட்
சேவையில் ஈடுபட்டிருந்த போதும் நீண்டகாலத்திற்கு முன்னரே
அது தனது தேவையை இழந்துவிட்டது என ஒருவர் கூறலாம். அதனை
பாதுகாத்துக்கொள்ள தேவையான ஆய்வுகளுக்கான சர்வதேச
கூட்டுழைப்பும் அபிவிருத்தியும் அடங்கிய தொழில்நுட்பமும் அதற்கான
சமூக சிறப்பியல்புகளும் ஒன்றிணைந்து வரவில்லை. காலத்தின் ஓட்டத்துடன்
இவற்றிற்கிடையிலான பிளவு அதிகரித்ததுடன் பொருளாதாரத்திற்கான
அரசு தலையீடு பின்தள்ளப்பட்டதுடன் சந்தையின் உடனடி நோக்கங்கள்
புதிய அடையாளமாக போற்றிப்புகழப்பட்டது. கொன்கோர்ட்
ஒரு கலைத்துறையின் வடிவமாகவே உயிர் பிழைத்தது. இந்த விமானத்தில்
அடிக்கடி பயணம் செய்த வசீகரமான தட்டை சேர்ந்த உயர்
அதிகாரிகள், தூரப்பிரயாணங்களை சந்தோசத்திற்காக மேற்கொள்பவர்கள்,
நடிகர்கள் போன்றோரைத்தவிர கொன்கோர்ட் தற்போதும்
இயக்கத்திலுள்ளது என்பதை தெரிந்துகொள்ளாதவர்களை மன்னித்துவிடலாம்.
தற்போதைய இப்பயங்கர விபத்தானது மிகவும்
கண்கூடான நிகழ்வாகும். விமானம் தீப்பிளம்புகளுக்குளான பயங்கரக்காட்சிகள்
மிகவும் கவலைக்குரியதும் வருந்தத்தக்கதும், ஏனெனில்
கூடியளவு பாதிக்கப்பட்டோர் இதனை "அவர்களின் வாழ்க்கைக்கான
பயணம்" என நினத்திருந்தனர். சிலர் வசதிபடைத்தோர், ஆனால்
பலவருடங்காளாக இதற்காக சேமித்த இளைப்பாறிய தபால் உத்தியோகத்தர்களான
கணவன் மனைவி போன்றோரும் இதில் அடங்குவர். Air
France உம்
British Airways உம் அதிகரித்தளவில் திரும்பியுள்ள
விமானங்களில் பயணிகளை நிரப்பும் முறையான வாடகைக்கு அமர்த்தும்
இவ்விமானத்தில் பயணம் செய்த துர்அதிஷ்டவசமான பயணிகள் வழமையான
கட்டணத்தைவிட அரைப்பகுதியே செலுத்தியதாக கூறப்படுகின்றது.
ஒருவர் தொலைக்காட்சியின் ஆழுமைக்குட்பட்டிருப்பின்,
நாங்கள் அனைவரும் பயணிகளே என்பதற்கான இன்னுமொரு ஆதாரம்
என குற்றம் கூறுபவர்கள் கூறலாம். தொலைத்தொடர்பு சாதனங்களும்
மிகக்கீழ்த்தரமான உணர்வுகளை நோக்கி அழைப்புவிடுவது பற்றி
கூறத்தேவையில்லை ஆனால் உண்மையில் இப்பயங்கரமானது கீழ்மட்டமான
நோக்கங்களை நோக்கி அணுகப்படமுடியாதது. மக்கள் உண்மையாகவே
வாழ்க்கை பறிக்கப்பட்டதாலும், குடும்பங்கள் கைவிடப்பட்டதாலும்
கவலை கொண்டுள்ளனர்.
Associated Press நிருபர்
அண்மையில் நின்ற ஒருவரை பேட்டி கண்டதை பின்வருமாறு குறிப்பிடுகின்றது
"Jean-Claude Ramathon Air France இன்
கொன்கோட்டின் பிளம்புகளுக்குள் அகப்பட்ட கோதுமை வயல்களுக்கு
மத்தியிலுள்ள சிறிய விடுதியிலுள்ளோரை காப்பாற்ற ஓடினார். இந்நிகழ்ச்சியினை
ஒருமணித்தியாலத்திற்கு பின்னர் கூறும்போதும் கூட அவரின் கைகள்
நடுங்கிக்கொண்டிருந்தன. 'நாங்கள் ஓடிச்சென்று விடுதிக்கு இரண்டு
மீற்றர் தூரத்தை அண்மித்ததுடன் புகைகாரணமாக அருகாமையில்
செல்ல முடியவில்லை' என Ramathon
செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். அவர்
39 வயதுடைய சாதாரண தொழிலாளி ஆனால் தன்னைப்பற்றி கூடுதலாக
எதையும் தெரிவிக்க விரும்பவில்லை".
Gonesse இல் வசிப்பவர்களும்
விமானி தொடர்பாக, நகரத்தின் மத்தியில் விமானம் சிக்கிக்கொள்ளாமல்
தவிர்த்து நூற்றுக்கணக்கான மக்களின் உயிர்களை பாதுகாத்ததாக
நம்புகின்றனர். "விமானிக்கு என்ன நடக்கின்றது என்பது தெரிந்திருக்கின்றது.
Gonesse இன்
மக்களைப் பாதுகாத்த விமானியாவார்" என ஷெல் எரிபொருள்
நிலையத்தின் நிர்வாகியான Madam
Turpin தெரிவித்தார்.
இப்பயங்கரம் மக்களின் சிறந்த தன்மைகளை வெளிக்கொண்டு
வந்துள்ளது. அதேசமயம் மனிதர்கள் மனிதர்களாகவே இயங்குகின்றார்களே
தவிர பொருளாதாரக்கூட்டுக்களாக அல்ல. தண்டனைக்குள்ளான
பயணிகளுடன் ஒரு கூட்டுணர்வு உருவாகியுள்ளது, எங்களில் பலரும்
விமானத்தில் பயணம் செய்கின்றோம். அங்கு ஒரு பொதுவான ஆழ்ந்த
துயரம் உள்ளது. ஒருமனநிலை பரந்த வெளிப்பாட்டை மிகவும்
அரிதாகவே கண்டுகொள்கின்றது. மனித உணர்வு தனது வெளிப்பாட்டை
கண்டுகொள்ளும் சந்தர்ப்பம் இதுதான்.
எங்களுக்கு வாழ்க்கை மீண்டும் வழமைக்கு
திரும்புவதுடன் காட்சிகள் மறைந்து போகின்றன. விமானங்கள்
எமது தலைக்கு மேல் பறக்கின்றன ஒருவரும் அது தொடர்பாக
சிந்திப்பதில்லை. ஒருகணத்தில் மற்றவர்களின் மனித உணர்மையை வெளிப்படுத்தும்
தன்மை நாளாந்த வாழ்வில் ஒரு சாதாரண நிகழ்வாக எவ்வாறு
மாறமுடியும்? நாங்கள் எங்களுக்கு இப்பயங்கரத்தில் இறந்த
113 மக்களின் இறப்பைவிட சமூக நிலைமைகளின் சீரழிவினால் உருவாகும்
பயங்கரமான விபத்துக்களால் அல்லாது நாளாந்தம் தடுத்து
நிறுத்தக்கூடிய நிலைமைகளான பட்டினி, நோய், யுத்தம், கொலைகளால்
இந்தியாவிலும், பிலிப்பைன்ஸிலும், இந்தோனேசியாவிலும் இறக்கும்
ஆயிரக்கணக்கானோரின் தலைவிதியை ஞாபகப்படுத்த வேண்டும்.
ஏனையோர் மீதான கவனமும் அடிப்படையாக
மனித உணர்வுகளை விளங்கிக்கொள்வதற்கான தேவையும் பரவலாக்கப்படவேண்டியுள்ளது.
இத்துடன் மனிதசமுதாயத்தின் துன்பங்களுக்கான அடிப்படைக் காரணங்களை
விஞ்ஞான பூர்வமாக உள்நோக்குவதால் இந்நிலைமை உயர்மட்டத்திற்கு
கொண்டுவரப்படவேண்டும். இது மனித உணர்மையின் ஓர் உண்மையான
பாய்ச்சலை பிரதிநிதித்துவப்படுத்தும். இப்படியாக நம்புவது
மிகைப்படுத்தப்பட்ட ஒன்றா?.
|