George W. Bush: the candidate as IPO
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோர்ஜ். டபிள்யூ.
புஷ்: முதலீட்டாளர்கள் கொள்வனவு பங்குமுதலின் (IPO)
வேட்பாளர்
By Barry Grey
8 August 2000
Use
this version to print
ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ் குடியரசுக்
கட்சி உச்சி மகாநாட்டுக்கு கவணினால் (கெட்டப்போல்) எய்யப்பட்டு,
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஒரு
நல்ல வாய்ப்பினைக் கொண்டுள்ளார். அமெரிக்க அரசியலின்
பாரம்பரிய அந்தஸ்துகளை நோக்குமிடத்து இது ஒரு குறிப்பிடத்தக்க
அபிவிருத்தியாகும். அரசாங்க அதிகாரம் நிறைந்த எந்த ஒரு பதவிக்கும்
பொறுக்கி எடுக்கப்படக் கூடிய ஒருவராக அதுவும் உலகில்
ஒரு பெரிதும் சிக்கலானதும் சாத்தியமான ஸ்திரமின்மையும் கொண்ட
நாட்டின் அரச தலைவராக அவரது சாதனைகள் எதுவும் அவரை
காட்டிக்கொள்வதாக இல்லை.
இவர் முதல் நான்கு தசாப்தங்களிலான தனது
வாழ்க்கையை எல்லா விதத்திலும் குறிக்கோள் இல்லாது செலவிட்ட
ஒரு மனிதன் ஆவார். இவர் வியட்நாம் யுத்தத்தை எதிர்க்கவில்லை.
ஆனால் பல வசதி வாய்ப்புக்கள் படைத்த இளைஞர்களைப்
போல தனது குடும்ப உறவுகளைக் கொண்டு படைக்கு ஆள்திரட்டும்
இந்த விதியை தவிர்த்துக் கொண்டவர். டெக்சாஸ் எண்ணெய்க்
கைத்தொழிலில் ஏற்பட்ட பல தோல்விகளின் பின்னரும் காங்கிரசில்
ஒரு ஆசனத்தை வெற்றி கொள்ளும் முயற்சி தோல்வி கண்டு
போன பின்னரும் அவர் குடும்ப சகாக்களின் ஒரு முயற்சி காரணமாக
ஒரு தொழில்சார் "பேஸ்போல்" (Baseball)
விளையாட்டு கோஷ்டியின் ஒரு துனைச்
சொந்தக்காரராகியதன் மூலம் ஒரு கோடீஸ்வரரானார்.
ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ் அரசியலில் இறங்கும் ஒரு
பெரும் முயற்சியில் மீண்டும் ஈடுபட்டார். ஏனெனில் அவர் வாழ்க்கையில்
வேறு எதைத்தான் செய்வது என அறியாது போனார். 1994ல் தனது
பெற்றோர்களின் அறிவுரைக்கு மாறாக அவர் டெக்சாஸ் மாநில
ஆளுனர் (Governer) பதவிக்கு
போட்டியிட்டு, வெற்றி பெற்றார். தற்சமயம் 5 1/2 வருடகாலம்
ஆளுனராகப் பதவி வகித்ததன் பின்னர் தேசிய அரசியலில் அடியோடு
அனுபவமே இல்லாமலும் உலக விவகாரம் பற்றி குறைந்தளவு
அறிவு தன்னும் இல்லாமலும் ஆங்கிலத்தைச் சரியாகப் பேசவோ
எழுதவோ தெரியாமலும் அவர் வெள்ளை மாளிகை வாயிலில் நின்று
கொண்டுள்ளார்.
இந்த உறவுகள் காரணமாகவும் குடியரசுக் கட்சியின்
தலையிடாக் கொள்கைப் பரிகாரத்துக்கான சமூக நிலையத்துக்கு
உகந்தவராகியுள்ள ஜோர்ஜ்.டபிள்யு.புஷ்சின் முதிர்ச்சி பருவத்தில்
பெரும் பகுதி, அரசியலில் எந்த ஒரு சிறப்பான அக்கறையையும்
காட்டிக் கொண்டது கிடையாது. அவர் நீண்ட அரசியல் உறவுகள்
கொண்ட ஒரு குடும்பத்தில் வாழ்க்கையைக் கழித்துள்ளார்.
ஆனால் அவர் அந்த அனுபவத்தில் இருந்து எதையும் உள்ளீர்த்துக்
கொண்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாக இல்லை.
அவர் ஏதேனும் படிப்பினைகளைப் பெற்றிருப்பாரானால்
அவை சரியான உறவுகள், தொடர்புகள் மூலம் செல்வத்தையும்
அதிகாரத்தையும் கொணர முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயேயாகும்.
அவரின் வெற்றியின் அடிப்படை என்ன? சிலரின் கருத்துப்படி அவர் ஒரு
நல்ல புன்னகையைக் கொண்டுள்ளார்; அவர் அதிகார வர்க்க
வட்டாரங்களில் வசதியான முறையில் நடமாடக் கூடியவராக உள்ளார்.
அவர் டெக்சாஸ் மாநில ஆளுனராக இருந்த போது சமூக முரண்பாடுகளை
எதிர் கொண்டது போல், அவை மோசடி சுலோகங்கள் மூலம்
பூசி மெழுகப்பட முடியும் என்ற முடிவுக்கும் வந்தார்.
ஜோர்ஜ் புஷ்சின் குடியரசுக் கட்சி நியமனத்தின் பிரச்சாரத்தின்
ஆரம்பக் கட்டத்தில் எங்கும் வியாபித்திருந்த அவரின்
மோசடியான புன்னகை, சில பிரச்சினைகளை ஏற்படுத்தியதில் ஒரு
முக்கியத்துவம் இருந்து கொண்டுள்ளது. ஒருவரின் வாழ்க்கைப்
பயணத்தில் குணநலமும் உளவியலும் ஒருவரின் வெளிவாரி முகபாவனைகளில்
தனது தடயத்தை பதித்துச் செல்வதுண்டு. மேலும் அவர் தான்
ஆபத்தில் மாட்டிக் கொண்ட போது ஏனையவர்களைக் கொண்டு
தன்னை பிணையில் விடுவிக்கச் செய்துள்ளார்.
வாசிக்கும் பழக்கம் இல்லாதவரும் எதுவிதமான
புத்திஜீவி இரசனை இல்லாதவருமான ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ், அமெரிக்கன்
சமுதாயத்தின் சுவையற்றதும் ஊழல்மிக்கதும், வேஷம் நிறைந்ததுமான
அனைத்தையும் பளிச்சிட வைக்கும் கண்ணாடி.
புஷ்சை பெரும் அடி ஆழத்தில் இருந்து ஒரு
சாதாரணமானவராக இனங்கண்டுள்ள ஒரே சாதனம் உலக
சோசலிச வலைத் தளம் (WSWS)
மட்டும் அன்று. நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை குடியரசுக் கட்சி
வேட்பாளரைப் பற்றிய ஒரு குறிப்படத் தக்க சித்திரத்தில் கூறுவதாவது:
"திரு.புஷ் ஏறக்குறைய ஒரு திடீர் வேட்பாளர். ஒரு அகம்பாவமும்
மகிழ்ச்சியும் நிறைந்த பேர்வழி. தனது வாழ்க்கையில் பெரும்
பகுதியை அலைந்து திரிந்து செலவிட்டவரும் 5 1/2 வருடங்களுக்கு
முன்னர் அவர் முதலாவது அரசியல் பதவியை பொறுப்பேற்பதற்கு
முன்னர் ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு பெரிதும் அறிமுகமற்ற
பேர்வழியுமாக விளங்கினார். இருப்பினும் அவர் இப்போது தேர்தலில்
முன்னணியில் நிற்பதோடு, தேர்தலில் வெற்றி பெறுமிடத்து கடந்த
ஒரு நூற்றாண்டின் அரசாங்க சேவையில் இருந்த ஒல்லியான ஜனாதிபதிகளில்
ஒருவராகவும் விளங்குவார்.
திரு. புஷ்சின் விதிவிலக்கான நெழிவுசுழிவுகள், முரண்பாடுகளைக்
கொண்ட தட்டினரால் சல்லடைப் போடப்பட்ட ஒத்தடம்
ஆகவும் விளங்குவதைக் குறிக்கின்றது. இது அவரைக் குடியரசுக்
கட்சியின் குருட்டுத் திகதியாக வருணிப்பதற்கு மேலதிகமானது. ஆனால்
அவரது நம்பிக்கைகள், தலைமைப் பாணி -அவர் எந்த வகையறாவைச்
சேர்ந்த தலைவராக விளங்குவார்- ஆகிய பெருமளவிலான விடயங்கள்
இன்னமும் மூடு மந்திரமாகவே உள்ளன".
நூலாசிரியர்கள், தொழில்சார் முதலாளித்துவ பத்திரிகையாளர்கள்
நாட்டின் ஒரு பதவிக்கு முக்கியமாக ஒரு அரசியல் ஈடுபாடு இல்லாத
பேர்வழியில் தள்ளப்பட்டுள்ள முரண்பாடுகள் சம்பந்தமாகவே
அடிக்கடி திரும்பத் தள்ளப்பட்டுள்ளனர். 1990களின் ஆரம்ப காலத்தில்
ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ்சின் தகப்பனாரின் ஜனாதிபதி பேச்சாளராக
விளங்கிய மார்ளின் பிட்ஸ் வோட்டரின் பின்வரும் வருணனையை அவர்கள்
மேற்கோளாகக் காட்டுகின்றனர்:
ஜோர்ஜ்.டபிள்யூ ஏறக்குறைய அரசியலில் அல்லது
கொள்கையில் ஒரு போதும் ஆர்வம் காட்டியதே கிடையாது.
உண்மையில் நாம் கொள்கையைப் பற்றி எப்போதாவது பேசிக்
கொண்டதாக எனக்கு ஞாபகம் இல்லை... ஜோர்ஜ்.டபிள்யூ.
ஜனாதிபதி பதவியையும் குடும்பத்தையும் அந்த விதத்தில் அரசியல்
சூன்யமாகவே அணுகி வந்தார். அவர் (டெக்சாஸ்) ஆளுனராக
போட்டியிட்டதைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்."
அந்தக் கட்டுரை மேலும் தொடர்ந்து
கூறுவதாவது: "1978ல் அவர் காங்கிரசுக்கு போட்டியிட்டுத்
தோல்வி கண்ட சமயம் நண்பர்கள், அவர் ஆழமான சித்தாந்த
திடநம்பிக்கையினால் ஊக்குவிக்கப்படவில்லை. ஆனால் ஒரு காங்கிரஸ்
அங்கத்தவராக இருப்பது குளிர்ச்சியானதாக விளங்கும் என நினைத்தார்.
"வயது முதிர்ச்சி அடைந்த நிலையில் வெளிச்சத்துக்கு
வரவும் உங்களின் ஜோக்குகளுக்கு பெரும் சிரிப்புகளைத் திரட்டவும்
சிறந்த வழி, அரசியலில் வெற்றி காண்பதே. திரு.புஷ் அரசியல் நம்பிக்கைகள்
இல்லாமலும், அதை அனுபவித்து ரசிப்பதாலும், அதில் வல்லவராக
இருப்பதாலும் அவர் நோக்கி தள்ளப்பட்டார் போல் தெரிகின்றது."
இதைத் தொடர்ந்து இந்தப் புளிப்பான பார்வை
வெளிப்படுகின்றது: "திரு.புஷ் விடாப்பிடியான முறையில் புத்திஜீவி எதிர்ப்பாளர்.
ஒரு அரசியல் தத்துவம் பற்றி சிந்தித்ததற்கான ஒரு அற்ப சொற்ப
சாட்சியமும் கிடையாது. பல விவகாரங்களில் விசிறிக் கொள்கின்றார்.
நிறைவேற்றுக் குழு சுருக்க அறிக்கைகளை வாசிப்பதிலான பிரியத்தையிட்டு
அடிக்கடி பகிடிவிடுகின்றார். நீண்ட அறிக்கைகளை தட்டிக்கொண்டே
போகின்றார். இவை எல்லாம் அவர் சரியாக ஒரு வெறும் சிலேட்
மட்டுமல்லாது, சார்பு ரீதியில் புரிந்து கொள்ள முடியாதவராகவும்
இருக்கின்றார் என்பதைக் காட்டுகின்றது."
ஜோர்ஜ்.டிபிள்யூவின் சகோதரரும் புளோரிடா
ஆளுனருமான ஜெப் புஷ் குடியரசுக் கட்சி மகாநாட்டில் ஒரு
தொலைக்காட்டசி சேவைக்கு பேட்டி அளிக்கையில், ஒரு ஆண்டுக்கு
முன்னர் எனது சகோதரன் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக
வருவார் என நம்பவில்லை எனத் தெரிவித்தார்.
ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ்சை அடையாளம் காணச் செய்யும்
ஒரே விடயம் அவரது குடும்பப் பெயரே. அரசியல் பரம்பரை,
அமெரிக்க அரசியலில் ஒரு நீண்டகாலப் பாத்திரத்தை வகித்துள்ளது.
அதற்கு தள்ளுபடி வழங்கும் இடத்தில் கூட இளைய புஷ் திடீரென
பிரசித்தி பெற்றது, ஒரு அசாதாரணமான அபிவிருத்தியாகும். இன்றைய
சூழலில் புஷ்சின் பெயர் ஜோர்ஜ். டபிள்யூவை அரசியல் அரங்கில்
பெரிதும் விற்பனையாகக் கூடிய பண்டமாக்கியுள்ளது.
சந்தைப்படுத்தும் மூலோபாயம் "இரக்கமுள்ள
பழமைவாதிகள்" என்ற சுலோகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் புஷ்சின் வாழ்க்கை வரலாற்றில் ஒன்றில் கல்லூரிக்
களியாட்டக்காரனாகவோ அல்லது டெக்சாஸ் வர்த்தகராகவோ
அல்லது ஆளுனராகவோ எந்தவிதத்திலான இறக்கமும் இருந்ததாக
குறிப்பிடுவதாய் இல்லை. நாம் நன்கு அறிந்தது போல் புஷ், டெக்சாஸ்
மாநில மாளிகையில் இருந்த போது, 130க்கும் அதிகமான மரண
தண்டனைகளுக்கு தலைமை தாங்கியுள்ளார். அவர் கூட்டுத்தாபனங்களுக்கும்,
செல்வந்தர்களுக்கும் வரிச்சலுகைகள் வழங்கி வரும் அனுதாபத்தைக்
காட்டிக் கொண்டார். சூழல் பாதுகாப்பு விதிகளை தளர்த்தினார்.
ஆனால் ஏழைகளின் பரிதாப நிலையைப் போக்கும் எந்த ஒரு
நடவடிக்கையையும் எதிர்த்தார். "இரக்கமுள்ள பழமைவாதம்"
அவரின் சொந்த வலதுசாரிக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள்
அழுது வடிக்கும் கண்ணீரில் கொதித்துப் பறக்கின்றது.
இத்தகைய ஒரு அற்பத்தனமான பேர்வழி அமெரிக்கன்
அரசியல் மையத்துக்காகத் துடிப்பது ஏன்? அவரது வேட்பாளர்
அந்தஸ்த்து அமெரிக்காவில் உள்ள விவகாரங்களின் நிலைமையை அம்பலப்படுத்துவதும்
என்ன? ஒரு மட்டத்தில் புஷ்சினது நன்கு நிர்ணயம் செய்யப்படாத
அரசியல் முன்னோக்கு அவரை கம்பனி உரிமையாளர்களிடையே
மிகவும் கவர்ச்சியான முன்னணி ஆளாகக் காட்டலாம். இவையே
இவரது வேட்புரிமையை ஊக்குவிக்கின்றன. அத்தகைய மேலோட்டமான
ஒரு மனிதனை மிகவும் சாதுரியமாகக் கையாள முடியும். ஆனால்
மிகவும் அடிப்படையான மட்டத்தில் ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ்சின் எழுச்சியானது
அமெரிக்கன் சமூகத்திலும் அரசியலிலும் உள்ள புறநிலைப் போக்குகளைப்
பிரதிபலிக்க வேண்டும்.
அமெரிக்க வெள்ளை மாளிகையைக் கைப்பற்றிக்
கொண்டு இருந்தவர்கள் எப்போதுமே சிறப்புத் தகுதி வாய்ந்த
மக்களாகக் கருதப்பட்டவர்கள் என்பது அல்ல. ஆனால் குறிப்பாக
செல்வங்களும் தகாத நடவடிக்கைகளும் நிறைந்த காலப்பகுதிகளுள்
-1920பதுகளும் 20ம் நூற்றாண்டின் இறுதி இரண்டு தசாப்தங்களும்-
ஒரு மாபெரும் நெருக்கடியை நோக்கி அதிகரித்த அளவிலான
முரண்பாடுகள் வளர்ச்சி கண்டு வரும் காலப் பகுதிகளிலும்- உள்நாட்டுக்கு
யுத்தத்துக்கு முந்திய 1850பது போன்ற தசாப்தத்திலும்- ஜனாதிபதி
பதவி இரண்டாம் தரமானவர்களாலேயே ஆக்கிரமித்துக் கொள்ளப்பட்டது.
ஒரு புறத்தில் குறிப்பாக நெருக்கடிக் காலப்பகுதிகளில்
அமெரிக்க ஆளும் வர்க்கம் வெள்ளை மாளிகையில் ஆட்சிபுரிய
அபூர்வமான பண்புகள் கொண்ட மனிதர்களைத் தேடிப்பிடிக்க
முடிந்த காலமும் இருந்தது. ஒவ்வொரு ஜனாதிபதியிடமும் உள்நாட்டிலும்,
வெளிநாட்டிலும் அமெரிக்க முதலாளித்துவத்தின் அடிப்படை நலன்களைக்
காக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் சிலர்
அரசியல் மூலதனத்தினை நீண்டகால அரசியல் அனுபவம், அனைத்துலக
விவகாரங்களிலான ஒரு நிஜமான அறிவு, கல்வி அறிவு அல்லது பேச்சுவன்மை
மூலமே ஈட்டிக் கொள்ள முடிந்தது. ஏனையோர் ஒன்றில் யுத்தம்
அல்லது சமாதானம் மூலமான தனிப்பட்ட கடும் சோதனைகளுக்கு
உள்ளாகினர். இது அவர்களின் பணியை இறுக்கமாக்கியதோடு அமெரிக்க
முதலாளித்துவ விவகாரங்களை மேற்பார்வை செய்யும் பணிக்கு
அவர்களைத் தயார் செய்தது.
தியோடர் ரூஸ்வெல்டை (Theodore
Roosewelt) ஒருவர் ஒரு அரசியல்வாதியும்
யுத்த மாவீரனாகவும் கருதுகின்றனர். இவர் அமெரிக்காவை ஒரு
ஏகாதிபத்தியச் சக்தியாக தோன்றச் செய்வதில் வெற்றி கண்டார்.
இலாப அமைப்பு நீண்டகாலம் நின்று பிடிப்பதற்கு ட்ரஸ்டுகளின் (Trusts)
அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவது அவசியம் என இவர் இனங்கண்டார்.
வூட்ரோ வில்சன் வெள்ளை மாளிகையில் இடம் பிடித்துக் கொண்டு
அமெரிக்காவை முதலாம் உலக யுத்தத்துக்கு இட்டுச் செல்லுவதற்கு
முன்னர் ஒரு பேர்போன அரசியலமைப்பு நிபுணராக விளங்கினார்.
1933ல் ஆட்சிக்கு வருமுன்னர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் நியூயோர்க்
மாநில அரசியலிலும் தேசிய அரசியலிலும் பாரிசவாதத்துடன் கூடிய
அவரது போராட்டத்தின் நீதி நலன்களிலும் பல வருட கால அனுபவம்
கொண்டிருந்தார். இரண்டாம் உலக யுத்த காலத்தில் வெளிக்காட்டிக்
கொண்டது போல் ஐசனோவர் அமைப்பு நடவடிக்கைகளில்
ஒரு மேதையாகவும் பிற்காலத்தில் அவர் மாறியது போல் கோல்ப்
விளையாட்டை நேசிக்கும் ஒரு தேனியை விட ஒரு பெரிதும் முக்கியமான
ஒரு பேர்வழியாக விளங்கினார். கென்னடி கூட ஜனாதிபதியாக வருவதற்கு
முன்னர் யுத்தத்தை மீண்டும் ஆரம்பிக்கும் மாவீரனாகவும் காங்கிரசில்
14 வருடகாலம் இருந்ததாகவும் ஜம்பம் அடித்துக் கொண்டார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட கியூபன் ஏவுகணை நெருக்கடி (Cuban
Missile Crisis) பதிவு நாடாக்கள் அம்பலமாக்கியது
போன்று, கென்னடி அசாதாரணமான திறமை படைத்த ஒரு
அரசியல்வாதி.
ஜனாதிபதி பதவிக்கு அறிவும் அனுபவமும் ஒரு
நிலைமையை நுணுக்கமாகவும் சிக்கலான நிலைமையிலும் உள்ளீர்த்துக்
கொள்ளும் வல்லமையும் கணிசமான முக்கியத்துவம் வாய்ந்த
விடயங்களாகும். அரசின் உச்சியில் அறியாமையும் அனுபவமின்மையும்
குறுகிய பார்வையும் இருப்பதானது மறுபுறத்தில் அமெரிக்கன்
ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமல்லாது உலகத்துக்கே பெரும்
ஆபத்துக்களை கொணரும்.
புஷ் இரண்டு சமாந்தரமான போக்குகளினை
-பழைய அரசியல் பிரமுகர்களின் சீரழிவையும் செல்வந்தர்கள்,
வசதிவாய்ப்புகள் கொண்டவர்களிடையே ஒரு புதியதும் ஆழமானதுமான
பிற்போக்கு மூலகம் எழுச்சி காண்பதையும்- ஊடறுத்துச் செல்வதை
பிரதிநிதித்துவம் செய்கின்றார்.
கடந்த இரண்டு தசாப்தங்களும் அமெரிக்காவில்
மட்டுமன்றி அனைத்துலக ரீதியில் முதலாளித்துவக் கட்சிகளும்
அரசியல்வாதிகளும் ஒரு குறிப்பிடத்தக்க வீழ்ச்சி கண்டதை தரிசித்துள்ளது.
இந்த இரண்டு தசாப்தங்களும் பிரமாண்டமான சமூக மாற்றங்களைக்
கொண்டிருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக சமூக சமத்துவமின்மையின்
வளர்ச்சியையும் பொருளாதார ஏணியின் உச்சியில் இருந்து கொண்டுள்ள
ஒரு சிறிய தட்டினர் பிரமாண்டமான செல்வங்களை ஈட்டியதையும்
குறித்து நின்றது. வசதிவாய்ப்புக்கள் படைத்த பிரமுகர்களுக்கும்
வெகுஜனங்களுக்கும் இடையேயான இடைவெளி வளர்ச்சி கண்டதால்
முதலாளித்துவக் கட்சிகளின் சமூக அடிப்படை குறுகிப் போயிற்று.
அமெரிக்க முதலாளித்துவத்தின் இரு பெரும் கட்சிகளான குடியரசுக்
கட்சியும் ஜனநாயகக் கட்சியும் பொதுமக்களில் இருந்து
அதிகரித்த அளவில் துண்டிக்கப்பட்டுப் போய்விட்டன.
இதன் விளைவாக ஒரு அரசியல் தலைவருக்கு
முன்பு அவசியப்பட்டதாக இருந்த அடிப்படை திறமைகள் கூட -கூட்டுக்களை
அமைக்கும் திறமையும் சனத்தொகையின் பரந்த தட்டினருடன்
சேர்ந்து செயற்படுவதும்- மதிப்பிறக்கம் செய்யப்பட்டுப்
போயிற்று. இன்று அரசியல்வாதிகள் ஒரு குறுகிய வட்டத்தினாலேயே
தெரிவு செய்யப்பட்டு அரிதாக சந்தைப்படுத்தப்படுகின்றனர்.
ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ் ஒரு நல்ல உதாரணம்.
அமெரிக்க மக்களில் மிகப் பெரும்பான்மையினர்
அப்படி ஒருவர் இருப்பதாக அறிந்து கொள்வதற்கு முன்னரே புஷ்
குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தைப் பெற்றுவிட்டார்.
இதே சமயம் ஆளும் பிரமுகர்களிடையேயும்
கணிசமான அளவு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. நீண்டு வந்த பங்குமுதல்
சந்தைச் செழிப்பின் பெறுபேறாகவும் தடையற்ற ஊகத்தின் ஒரு
பொது சூழல் காரணமாகவும் செல்வந்தர்களும் சமீபத்தில்
செல்வம் ஈட்டிய அதிகாரம் படைத்தவர்களும் வீக்கம் கண்டனர்.
இவர்கள் எந்த ஒரு சொத்துக்களையும் கொண்ட வர்த்தகங்களை
கட்டியெழுப்பாமலே குறுகிய காலத்தில் திகைப்புக்கிடமான அளவில்
செல்வங்களை ஈட்டினர்.
ஒரு நிறுவனத்தைக் கட்டியெழுப்பும் போராட்டத்துக்கும்
பாதகமான காலப்பகுதிகளில் தாக்கிப்பிடிப்பதற்குமான
சோதனைகளுக்கு உள்ளாகாமல் பங்குகளின் பெறுமான அதிகரிப்போடு
செல்வத்தினைக் குவித்தனர். கோடானு கோடி டாலர்கள் வோல்
ஸ்ரீட்டில் (பங்குமுதல் சந்தை) குவிந்தது. இத்தகைய பேர்வழிகளுக்கு
பாரம்பரியங்கள் கிடையாது. தங்களின் உடனடி நலன்களுக்கு அப்பாற்பட்ட
பார்வையும் கிடையாது.
இதை எப்படிச் சாதித்தோம் என்பதைத் தன்னும்
சரியாக தெரியாமல் பிரமாண்டமான அதிஸ்டங்களை ஈட்டியோர்
கொஞ்ச நஞ்சம் அல்ல. தமது துறையிலான வரையறுக்கப்பட்ட
செயற்பாடுகளுக்கு அப்பால் வர்த்தகத்துக்கான ஒரு திறமை;
கணனி திட்டமிடலுக்கான ஆற்றல் அல்லது ஒரு சாதுரியமான கருத்தை
அபிவிருத்தி செய்யும் சக்தி இல்லாமலும் கூட பணத்தைச் சம்பாதித்துக்
கொள்கின்றனர்.
இருந்த போதிலும் அத்தகையவர்கள் தமது செல்வத்தின்
புண்ணியத்தினால் அரசியல் அரங்கில் ஒரு முக்கியமான விளையாட்டு
வீரர்களாக முடிந்தது. ஆனால் அத்தோடு இந்த அரங்கிலும்
கூட அவர்களின் நடவடிக்கைகள் குறுகிய கால நலன்களாலும் அமெரிக்க
முதலாளித்துவத்தின் நலன்களைப் பற்றிய பெரிதும் தூரதிருஷ்டி கொண்ட
பரந்த விளக்கமின்மையாலும் வழிநடாத்தப்பட்டது.
புஷ் பெரிதும் அத்தகைய சக்திகளின் ஒரு பேச்சாளர்
ஆவார். அவர் அரசியல் பாரம்பரியங்களை கொண்ட ஒரு குடும்பத்தைச்
சேர்ந்தவராக இருந்தாலும் அவரின் நடவடிக்கைகள் ஊகங்கள்
நிறைந்த ஒரு செழிப்பு காலப்பகுதியில் ஆளும் பிரமுகர்களுடன் சேர்ந்து
கொண்ட ஒரு சமூகத் தட்டின் அனுபவங்களோடு பெரிதும்
தொடர்புபட்டுள்ளது. கடந்த வாரம் பிலடெல்பியாவில் கூடிய
பேராசையும் வசதியும் படைத்தவர்கள் புஷ்சினால் ஈர்க்கப்பட்டனர்.
ஏனெனில் மாநாட்டுக்கு வருகை தந்தவர்கள் டெக்சாஸ்
ஆளுனரில் தமது சொந்த பிரதிபலிப்புக்களை காண முனைந்தனர்.
ஆனால் அமெரிக்க வரலாறு எடுத்துக் காட்டுவது
போல் -பிரசித்தி பெற்ற பழமொழி கூறுவது போல்- கோழிகள் வீட்டுக்கு
வருவது தங்குவதற்கு என்பது போல்- எப்போதும் ஒரு காலம்
வருகின்றது. அமெரிக்கன் சமுதாயத்தை பீடித்துக் கொண்டுள்ள
சமூக முரண்பாடுகள் உடனடியாகவோ அல்லது தாமதித்தோ
ஒருவரின் முகத்தில் வெடித்துச் சிதறுவதுடன் முடிவின்றி ஒருவர்
விளையாட முடியாது.
'இன்டர்நெட்' (இணையம்) பங்குமுதல் சந்தையின்
சமீபகால வீழ்ச்சி ஏற்கனவே சுட்டிக் காட்டிக் கொண்டுள்ளது
போல் 'டொட் கொம்'
(dot.com) மின்
வீக்கம் காணச் செய்யப்பட்ட பங்கு முதல் பெறுமதிகளின்
அதிசயங்கள் பிரச்சினைக்கு உரியதாகிவிட்டன. வர்த்தக நிறுவனங்கள்
தமது பங்கு முதலின் விலையை நியாயப்படுத்தும் விதத்தில் ஒரு இலாபத்தை
ஈட்டுமாறு வேண்டப்பட்டுள்ளன. பங்குப் பெறுமதிகள் வீழ்ச்சியடைந்து
செல்வதோடு நேற்றைய சந்தையின் நட்சத்திரங்கள் இன்றைய
வங்குரோத்துக்காரர்கள் ஆகின்றனர்.
இதற்கு நிகரான ஒரு தலைவிதி ஜோர்ஜ்.டிபிள்யூ.புஷ்
போன்றவர்களின் வீங்க வைக்கப்பட்ட அரசியல் உற்பத்திப்
பொருட்களுக்கும் ஏற்பட உள்ளது. அவர் அடுத்த ஜனாதிபதியாக
வருகின்றாரோ இல்லையோ எனபதை பொறுந்திருந்தே பார்க்கவேண்டும்.
பூகோளத்தில் சமூக ரீதியில் குமுறி எரியக் கூடிய ஒரு நாட்டின்
விவகாரங்களை கொண்டு நடாத்த ஒரு பெரும் முதலாளித்துவக்
கட்சிகளில் ஒன்றால் இத்தகைய மனிதன் போட்டியில் நிறுத்தப்பட்டுள்ளமை,
அமெரிக்காவின் அரசியல் நெருக்கடியின் ஆழத்தை எடுத்துக் காட்டுகின்றது.
|