Print Version|Feedback
பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி - PES
மேர்க்கெல்-மக்ரோன் இணைப்பு வேண்டாம்!
சோசலிசத்திற்கான ஐரோப்பிய தொழிலாளர்களின் ஐக்கியத்திற்கு போராடுவோம்!
ஜேர்மன் தேர்தலின் சர்வதேச முக்கியத்துவம் குறித்து பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி பாரிசில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.
பேர்லினில் அங்கேலா மேர்க்கெலின் தலைமையின் கீழ் ஒரு “பெரும் கூட்டணி” உருவாக்க முயலும் அரசியல் கட்சிகளுடன் மக்ரோன் நெருங்கி இணைந்து செயல்படுகின்றார். இந்த மேர்க்கெல்-மக்ரோன் இணைப்பு, ஐரோப்பாவெங்கிலும் 1917 அக்டோபர் புரட்சிக்கும் 1945 இல் நாஜிசத்தின் மீதான வெற்றிக்கும் பிந்தைய காலத்தில் தொழிலாள வர்க்கத்தால் வென்றெடுக்கப்பட்டிருந்த சமூக தேட்டங்கள் அனைத்தின் மீதும் ஐரோப்பாவெங்கிலும் தொடுக்கப்படுகின்ற ஒரு பரந்த தாக்குதலின் பகுதியாகும். ஐரோப்பாவில் நாஜி ஆட்சியின் வீழ்ச்சிக்கு பின்னர் மிகவும் வலதுசாரி ஆட்சியினை திணிக்க முயல்கின்றனர். இந்த அச்சு, ஒரு ஏகாதிபத்திய கூட்டில் ஜேர்மனியினை மீண்டும் இராணுவமயமாக்குவது, பிரான்சில் அனைவருக்குமான இராணுவ பயிற்சி, அணுவாயுத “அதிரடிப் படையை“ அபிவிருத்தி செய்வது மற்றும் சமூக தேட்டங்களை அழித்தொழிப்பதை அடித்தளமாக கொண்டிருக்கும்.
இந்த அபகீர்த்தி நிறைந்த வேலைத்திட்டம் சட்டவிரோதமானதாகும். எழுபது வீதமான பிரான்சின் மக்கள் தொழில் சட்டங்களை அழிப்பதனை நிராகரிப்பதுடன் ஜேர்மனியில் முப்பது வீதமானோர் மட்டுமே ஒரு பெரும் கூட்டணியினை ஆதரிக்கின்றனர். ஜேர்மன் உலோக தொழிலாளர்கள் பாரிய வேலைநிறுத்தங்களில் ஈடுபடுகையில் சம்பள வெட்டுக்கள், சமூக உரிமைகளை அழித்தல் மற்றும் ஒய்வூதியம், சமூக பாதுகாப்பு மீதான தாக்குதல்களினால் பிரான்சில் கோபம் அதிகளவில் வளர்ச்சி அடைகின்றது. நாம் இந்த போராட்டங்களை ஐக்கியப்படுத்தி, அதை போருக்கும், சிக்கன நடவடிக்கை திட்டங்களுக்கும் எதிரான ஒரு ஐரோப்பிய சோசலிச புரட்சிகர இயக்கத்திற்கான அடித்தளமாக்க வேண்டும்.
புதிய தேர்த்தலுக்கும், பிரெஞ்சு-ஜேர்மன் இரகசிய உடன்படிக்கைகளை பகிரங்கப்படுத்தவும் அழைப்புவிடும் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் தோழர்களை பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி வரவேற்கின்றது. இராணுவ வாதத்திற்கும், சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிரான போராட்டத்தில் தொழிலாளர்கள் அதிகாரத்தினை கைப்பற்றுவதற்கு, ஒரு சோசலிச முன்னோக்குடன், ஐரோப்பிய சமூக ஜனநாயக வாதிகளுடனும் அவர்களது அரசியல் மற்றும் தொழிற்சங்க சுற்றுவட்டங்களுடனும் உடைத்துக் கொள்வது அவசியமாகின்றது. இந்த முன்னோக்கினை பிரெஞ்சு, ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியினர் கலந்துரையாடுவர்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பங்கேற்க தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், போர் எதிர்ப்பாளர்கள், ஜனநாயக உரிமைக்காக போராடுபவர்கள் அத்தோடு எமது வாசகர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் அழைக்கின்றோம்.
பொதுக்கூட்டம்
காலம்: ஞாயிறு, 25. 02. 2018, பிற்பகல் 3 மணி
இடம்: Auberge de Jeunesse HI Yves Robert
20 esplanade Nathalie Sarraute
75018 Paris
Metro: La chapelle (2), Marx Dormoy (12), Riquet (7)
Auto Bus: 35, 60, 65
தொடர்புகளுக்கு : 06 05 83 22 29